ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிமென்சியா - முதுமையில் ஏற்படும் ஞாபகமறதி

2 posters

Go down

டிமென்சியா - முதுமையில் ஏற்படும் ஞாபகமறதி Empty டிமென்சியா - முதுமையில் ஏற்படும் ஞாபகமறதி

Post by சிவா Tue Oct 03, 2023 4:38 pm

டிமென்சியா - முதுமையில் ஏற்படும் ஞாபகமறதி Dementia-definition2

மறதி சார்ந்த நோய்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:-

1. சாதாரண மறதி, 2. டிமென்சியா என்னும் மறதி நோய் 3. அல்ஸைமர் டிமென்சியா


டிமென்சியா என்னும் மறதி நோய் ஒருவருக்கு மறதியிருந்தால் அதை மட்டும் வைத்துக்கொண்டு அவருக்கு டிமென்சியா என்று கூறிவிட முடியாது. மறதியுடன் கீழே குறிப்பிட்டுள்ள தொல்லைகளில் குறைந்த பட்சம் ஒன்று அல்லது இரண்டு பாதிப்புகள் இருக்க வேண்டும்.

சரியாக பேச இயலாமை: உச்சரிப்பு தெளிவாக இருக்காது. சரியான வார்த்தையை சரியான இடத்தில் உபயோகப்படுத்த மாட்டார். உதாரணம்: பழனிக்குப் போவதை மலையிலுள்ள முருகன் போயிலுக்குப் போகவேண்டும் என்பார்.

தினமும் செய்யக்கூடிய வேலையை செய்யத் தெரியாமல் தவிப்பது. உதாரணம்: தட்டில் பரிமாறிய உணவைச் சாப்பிடு என்று சொன்ன பிறகுதான் சாப்பிடுவார்.

தெரிந்த நபர்கள் அல்லது பொருள்களின் பெயர்களை நினைவில் கொண்டு வர முடியாத நிலை. உதாரணம்: உறவினர்களின் பெயர் மற்றும் பேனா, சாவி, கடியாரம் போன்றவற்றைச் சொல்லத் தெரியாமல் தவிப்பார்.

டி

மென்சியா நோயின் அறிகுறிகள்


இந்நோயானது, சுமார் 70-75 வயது கடந்த முதியவர் களுக்கே அதிகம் வர வாய்ப்புண்டு. ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுடைய அறிவுத்திறன் முதலில் வீழ்ச்சி அடைகிறது.

கவனக்குறைவால் எதையும் மனத்தில் பதியவைக்க முடிவ தில்லை. முக்கியமாக அண்மைக் கால நினைவுகள் (recent memory) பாதிக்கப்பட்டு மறதி உண்டாகிறது. ஏதாவது ஒன்றைக் கூறினால், அதில் கவனம் செல்லாததால், அதை நினைவில் பதிய வைத்துக்கொள்ள முடிவதில்லை. யார் வந்தனர்? யார் போயினர்? நேற்று என்ன நடந்தது? என்பதுகூட அவர்களது நினைவில் இருப்ப தில்லை. ஆனால், கடந்த கால நினைவுகள் (past Memory) நிலைத்திருக்கும். அதனால் அதைப் பற்றியே பேசிக்கொண்டும், நினைத்துக் கொண்டும் வாழ்ந்து வருவார்கள்.

முதுமையில் ஏற்படும் ஞாபக மறதிக்கும் டிமென்சியாவினால் ஏற்படும் ஞாபக மறதிக்கும் உள்ள வித்தியாசங்கள்.

முதுமையில் ஏற்படும் ஞாபகமறதி


மூளையிலுள்ள நரம்பு செல்கள் மெதுவாகச் செயல்படுவதால் ஏற்படுகிறது (Slowing of Neural Processes).

தமக்கு ஞாபக மறதி உள்ளதாகக் கவலை அடைந்து, அவரே டாக்டரிடம் செல்வார்.

ஒரு பொருளைத் தவறாகச் சொன்னாலும், அதை எடுத்துக் கூறினால், அவர் அதைப் புரிந்து திருத்திக் கொள்வார் (உ.ம்) பேனாவைக் கத்தி என்பார். அது தவறு, இது எழுதுவதற்கு உபயோகப்படுத்தக்கூடிய பொருள் என்று சொன்னால் புரிந்து, ‘ஆம் அது பேனாதான். நான் தவறாக கத்தி என்று சொல்லிவிட்டேன்’ என்று தன்னைத் திருத்திக் கொள்வார்.

MMSE Test - மனநோயைக் கண்டறியும் பரிசோதனை, MRI மற்றும் PET Brain Scan - ஆகிய பரிசோதனைகளில் மாற்றம் ஏதும் இருக்காது.

டிமென்சியா


மூளையிலுள்ள இரசாயனப் பொருட்கள் குறைவதாலும் திசுக்கள் அழிவதாலும் ஏற்படுதல்.

தமக்கு ஞாபக மறதி ஏதுமில்லை என்று அவராகவே டாக்டரிடம் செல்ல மாட்டார். ஆகையால், அவரைக் குடும்பத்தினர்கள்தான் டாக்டரிடம் அழைத்து வருவார்கள்.

பேனாவை கத்தி என்று உறுதிபடக் கூறுவார். எவ்வளவு எடுத்துக் கூறினாலும் தன்னைத் திருத்திக் கொள்ள மாட்டார்.

MMSE Test MRI மற்றும் PET Brain Scan இப்பரிசோதனையில் மாற்றம் இருக்கும்.

டிமென்சியாவிற்கான காரணங்கள்


காரணமின்றி வரும் டிமென்சியா அல்ஸைமர் நோய் (Alzheimer’s Disease) : இன்னமும் இந்நோய்க்கான காரணம் கண்டறியப்படவில்லை. டிமென்சியா நோயாளிகளில் சுமார் 70 சதவிதம் பேர் அல்ஸைமர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நோய்க்கான காரணம் தெரியப்படாததால், அதற்கு தக்க சிகிச்சையுமில்லை.

காரணங்களால் வரும் டிமென்சியா


ஒரு சில காரணங்களால், சுமார் 30 சதவிகிதம் பேருக்கு டிமென்சியா வர வாய்ப்புண்டு.

மூளையில் இரத்தக் கசிவோ அல்லது இரத்த ஓட்டம் தடைபட்டாலோ, பக்கவாதம் போன்ற தொல்லைகள் ஏற்படலாம். பக்கவாதம் ஏற்பட்டு சில மாதங்கள் கழித்து அவர்களுக்கு டிமென்சியா வர வாய்ப்புண்டு. (Vascular Dementia)

மூளையில் தோன்றும் சாதாரண, மற்றும் புற்றுநோய் கட்டிகளினாலும் டிமென்சியா வரலாம். தலையில் இலேசாக அடிப்பட்டாலும் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு அது கட்டியாக உறைந்துவிடும்.
இது நாளடைவில் டிமென்சியாவாக வெளிப்படும்.

தைராய்ட் குறைவாகச் சுரப்பதினாலும் டிமென்சியா வர வாய்ப்புண்டு

வைட்டமின் பி1 மற்றும் பி12 இரத்தத்தில் குறைந்தால் டிமென்சியா வரலாம்.

உதறுவாதம் உள்ளவர்களுக்கு பல வருடங்கள் கழித்து டிமென்சியா (18 - 40%) ஏற்படலாம்.

நாள்பட்ட மனச்சோர்வு உள்ளவர்கட்கும் டிமென்சியா வரலாம்.

தூக்க மாத்திரை, மனநோய்க்குக் கொடுக்கும் மாத்திரைகளை அதிக நாள் சாப்பிடுவதினாலும் டிமென் சியா வரலாம். இதை ஓரளவுக்கு சிகிச்சையளித்து நினை வாற்றலை பழைய நிலைக்குக் கொண்டு வர முடியும்.

பரிசோதனைகள்:


முழுமையான உடல் பரிசோதனைக்குப் பின்பு @நாயாளியின் நினைவாற்றலை உளவியல் நிபுணர் உதவியுடன் (Psychologist) கீழ்க்கண்ட பரிசோதனையின் மூலம் அறியப்படும்.

மறதியை அறிய உதவும் பரிசோதனை (Mini Mental Status Examination Test): ஒருவர் எந்தளவுக்கு ஒரு செய்தியை உள் வாங்குகிறார், பின்பு அதை பதிய வைத்துக்கொள்கிறார். அதன்பின் எந்த அளவுக்கு ஞாபகப்படுத்தி, வெளிக்கொண்டு வருகிறார் என்பதையெல்லாம் அறிய இந்தப் பரிசோதனை உதவும்.

இரத்தப் பரிசோதனை மற்றும் மூளை ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் ஒருவருக்கு இந்நோய் இருப்பதை சுமார் 80% உறுதி செய்திட முடியும்.

சிகிச்சை முறைகள்


டிமென்சியாவுடன் மனச் சோர்வும் இருந்தால், மனச்சோர்வுக்குண்டான மாத்திரையைக் கொடுத்தால் மறதி குறைய வாய்ப்புண்டு.

மதுவை நிறுத்தினால் நினைவாற்றல் திரும்பும்.

தைராய்ட் குறைவாக சுரப்பவருக்குத் தைராய்ட் மாத்திரை மூலம் நல்ல குணம் கிடைக்கும்.

வைட்டமின் பி12 குறைவாக இருந்தால் ஊசி மருந்துகள் மூலம் மறதி நோயை குணப்படுத்த முடியும்.

மூளையில் ஏதேனும் கட்டி இருப்பின், அதை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினால் மறதி நோய் குணமாகலாம்.

அல்ஸைமர் டிமென்சியா


முதுமையில் மறதி ஏற்படுவது என்பது சாதாரண நிகழ்வுதான். என்றாலும் அது தீவிரமடையும்போது டிமென்சியா என்னும் நோயாக மாறலாம். இந்த நோய் 1906-ம் ஆண்டு ஜெர்மனியின் மனோதத்துவப் பேராசிரியர், டாக்டர் அலோசிஸ் அல்சமையர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

முதுமையைத் தாக்கும் இந்தக் கொடிய நோய்க்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை. இது பாரம்பரியமாகவும் வர வாய்ப்புள்ளது. முக்கியமாக 60 வயதுக்குள் இந்நோய் ஒருவரைத் தாக்கியிருந்தால் அவருடைய முன்னோர் யாருக்கேனும் இந் நோய் இருந்திருக்கலாம் அல்லது இளம் வயதில் அவருக்குத் தலையில் காயம் ஏதாவது ஏற்பட்டிருக்கலாம்.

டிமென்சியா நோய் எவரையும் தாக்கலாம். ஏழை - பணக்காரன், படித்தவன் - படிக்காதவன், ஆண்- பெண் என்று பேதமின்றி வயதானவர்களை இது தாக்கும். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரெனால்டு ரீகன், பிரபல குத்துச் சண்டை வீரர் முகமது அலி போன்றோரும் டிமென்சியா நோயாளிகளே.

அல்ஸைமர் டிமென்சியாவின் அறிகுறிகள்:-


டிமென்சியாவின் அறிகுறிகள் தாமதமாக வெளிப்படுவதால் அதை எளிதில் கண்டுகொள்ள முடிவதில்லை. இந்நோயால் பாதிக்கப்பட்டவருக்கு நடை, உடை, பாவனைகள் மற்றும் பேச்சில் சிறு சிறு மாற்றங்கள் வெளிப்படும். இதை, கூட இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கண்டுபிடித்து, இவருக்கு மறதி நோய் இருக்குமோ என்று சந்தேகப்பட்டு, அவரை டாக்டரிடம் அழைத்துச் செல்லும்போதுதான் டிமென்சியா பாதிப்புள்ளதா என தெரியவே வரும்.

டிமென்சியாவின் பத்து அறிகுறிகள்


1. மறதி - இந்நோயின் முதல் அறிகுறி, மறதியில்தான் ஆரம்பமாகிறது. இவரது மறதிக்கு ஒரு தனித்தன்மை உண்டு. முக்கியமாக அண்மைக்கால நினைவுகள் (Recent memory) பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் கடந்த கால நினைவுகள் மட்டும் (Past memory) நிலைத்திருக்கும்.

2. ஒரு பொருளை எங்கோ வைத்து விட்டு வேறு எங்கோ தேடுவது.

3. நடை, உடை, பாவனைகளில் மாற்றம்.

4. பழகிய வேலைகள் செய்வதில் தடுமாற்றம்.

5. இடம், காலம் அறிவதில் சிரமம். உதாரணம்: டாக்டரின் கிளினிக்கை ஹோட்டல் என்பார். காலை - மாலை கால வித்தியாசம் தெரியாது.

6. பேசுவதில் சிரமம்.

7. முடிவெடுப்பதில் சிரமம்.

8. பகுத்தறியும் தன்மை குறைதல். உதாரணம்: இட்லியை பூரி என்பார். அதைத் தவறு என்று சொன்னாலும் திருத்திக் கொள்ளமாட்டார்.

9. அடிக்கடி மாறுபடும் மனோநிலை.

10. எதையும் ஆரம்பிக்கும்போது தயக்க நிலை.

இந்நோயின் தன்மையானது தீவிரமடைய அடைய, அன்றாட வேலைகள் பாதிக்கப்படும். அதாவது அவர் குளிப்பதற்கும், உடை உடுத்துவதற்கும், சாப்பிடுவதற்குமே மற்றவர் உதவி தேவைப்படும்.

சுருக்கமாகச் சொன்னால் மனதளவில் இறந்து, உடல் அளவில் வாழும் மனிதராக இருப்பார். இறுதியாக, உட்கொள்ளும் உணவும் குறைந்து உடல் இளைக்க ஆரம்பித்துவிடும். நடமாட்டம் குறைந்து, படுக்கைப் புண், நெஞ்சில் சளி போன்ற தொல்லைகள் ஏற்படும். டிமென்சியா ஆரம்பித்ததிலிருந்து சுமார் 7 - 10 ஆண்டுகளுக்குள் அவருடைய இறுதிப் பயணம் நடந்துவிடும்.

நோயை எப்படிக் கண்டறிவது?


டாக்டர், டிமென்சியா நோயாளியை முழுமையாகப் பரிசோதனை செய்து, இது அல்ஸைமர் டிமென்சியாவா அல்லது வேறு காரணங்களால் வரும் டிமென்சியாவா என்று கண்டறிய

Mini Mental Status Examination, இரத்தப் பரிசோதனை, C.T. Scan, MRI Scan மற்றும் PET Brain Scan ஆகியவற்றை செய்வார்.

சிகிச்சை முறை


இந்நோயைப் பூரணமாகக் குணப்படுத்த கூடிய மருந்துகள் இன்னமும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் அதன் வீரியத்தைக் குறைக்க சில மருந்துகள் உள்ளன. இந்த மருந்துகள் நரம்பு மண்டலங்களை (neuro protectives) பாதுகாக்கும் தன்மை கொண்டவை. இவற்றின் மூலம் சிகிச்சை அளித்துப் பார்க்கலாம்.

வைட்டமின் E, C போன்ற மாத்திரைகள் (antioxidants) .

வைட்டமின் B6, B12 மற்றும் ஃபோலிக் ஆசிட் போன்ற மாத்திரைகள் இரத்தத்திலுள்ள ஓமோசிஸ்டின் அளவைக் குறைத்து ஞாபகச் சக்தியை அதிகரிக்கும்.

இரத்தத்திலுள்ள கொழுப்புச் சத்தை குறைக்கக் கூடிய மாத்திரைகளும் சிறிது பயன் தரலாம்.

Ginkgobiloba என்ற தாவர சிகிச்சையும் ஒரு சிலருக்குப் பயன் அளிக்கும்.

மாத்திரைகள் உட்கொள்வதால் ஆரம்ப நிலையிலுள்ள டிமென்சியா நோயாளிகளுக்கு மறதியில் சற்று முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால், ஒரு சில பின்னடைவுகளும் ஏற்படலாம். எந்த மாத்திரையும் டாக்டரின் பரிந்துரையின் பேரில் சரியான விகிதத்தில் சரியான நேரத்துக்கு உட்கொள்ள வேண்டியது அவசியம்.

நினைவாற்றலை அதிகரிக்க


உடல் பருமன் இருப்பின், எடையைக் குறைப்பது மிகவும் அவசியம்.

மனிதனுக்கு சுமார் 5 - 8 மணி நேரம் தூக்கம் அவசியம். இதை குறையாமல் பார்த்துக்கொள்ளவும்.

உடற்பயிற்சி: அமெரிக்காவில் பிட்ஸ்பர்க்கில் ஓர் ஆய்வு செய்யப்பட்டது. 300 பேருக்கு தினசரி 6 மைல் தூரம் நடைப்பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் நடைப்பயிற்சி செய்பவர்களைவிட நடைப்பயிற்சி செய்யாதவர்களின் மூளையானது விரைவில் சுருங்கி விடுகிறது எனத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து நரம்பியல் ஆய்வாளர் கிர்க் எரிக்சன் கூறியதாவது: முதியவர்களுக்கு உடற்பயிற்சி, நடைபயிற்சி அளிப்பதால் அல்ஸைமர் மறதி நோய், டிமென்சியா ஆகியவைத் தடுக்கப்படுகின்றன. ஆகையால் தினமும் மூன்று அல்லது ஐந்து கிலோமீட்டர் தூரம் அல்லது 45 நிமிடம் - ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி மிக அவசியம்.

கால முறைப்படி மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டு நோயிருப்பின் அதற்குத் தக்க சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணம்: நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம்.

ஒரு சில மாத்திரைகளாலும் மறதி ஏற்படலாம். டாக்டரின் ஆலோசனை பெற்று அதிகப்படியான மாத்திரைகளைக் குறைக்கவோ அல்லது நிறுத்தவோ முற்படலாம்.

அதிக மது, புகை மறதியைக் கொடுக்கும். அவற்றைக் குறைப்பது அல்லது நிறுத்துவது நல்லது.

முதுமையின் எதிரி தனிமை. எப்பாடுபட்டேனும் தனிமையைத் தவிர்க்க வேண்டும். உதாரணம்: ஏதாவது பொழுதுபோக்கு சங்கத்தில் உறுப்பினர் ஆவது மற்றும் நண்பர்கள் அல்லது உறவினர் வீட்டுக்குச் செல்வது, சமூக சேவை செய்வது.

மூளையை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணம்: தோட்டக்கலை, ஆன்மிகத்தில் ஈடுபடுவது, வளர்ப்புப் பிராணிகளுடன் விளையாடி மகிழ்வது.

தியானம் : தினமும் குறைந்தது 15-20 நிமிடங்களாவது தியானப் பயிற்சி செய்து வர வேண்டும். ‘உறங்கிக் கிடக்கும் மூளையிலுள்ள திசுக்களை உசுப்பி விடும் சக்தி தியானத்துக்கு உண்டு’ என்று பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். பி.ராமமூர்த்தி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிராணாயாமம் செய்வதால் நினைவாற்றலைச் சீராக வைத்துக்கொள்ள முடியும்.

தினமும் மூளையைத் தூண்டக்கூடிய செயல் ஒன்றை தவறாமல் செய்ய வேண்டும்.

உதாரணம்:


- காலையில் திருக்குறள் ஒன்றைப் படித்துவிட்டு, அதை இரவில் ஞாபகப்படுத்திப் பார்க்கலாம்.

- ஒரு தாளில் பத்து பொருட்களின் பெயரை எழுதிவிட்டு சில மணி நேரம் கழித்து அவற்றை நினைவுப் படுத்திப் பார்க்கலாம்.

- தினமும் சிறிது நேரம் கம்ப்யூட்டரை உபயோகித்தால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.

- சுடோகு, செஸ், கேரம், குறுக்கெழுத்துப் புதிர், வினாடி வினா போன்ற மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய விளையாட்டுகளில் ஈடுபடலாம்.

மூளைக்கேற்ற சத்துணவு


பசலைக் கீரை, ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், வெங்காயம், மீன், காஃபி, கிரீன் டீ, லவங்கம், பட்டை, முட்டையின் மஞ்சள் கரு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ராஜ்மா, உலர் திராட்சை, முளைக்கட்டிய கோதுமை மற்றும் வல்லாரைக் கீரை.

இந்த உணவுகளில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை தினசரி நாம் உண்ணும் உணவில் இருக்குமாறு பார்த்துக் கொண்டால், எதிர்பார்த்த பலன் நிச்சயம்!

மங்கையர் மலர்


டிமென்சியா - முதுமையில் ஏற்படும் ஞாபகமறதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

டிமென்சியா - முதுமையில் ஏற்படும் ஞாபகமறதி Empty Re: டிமென்சியா - முதுமையில் ஏற்படும் ஞாபகமறதி

Post by T.N.Balasubramanian Tue Oct 03, 2023 8:34 pm

மறந்து போவதற்கு முன்

நல்லதோர் பதிவு எனக்கூறிவிடுகிறேன், சிவா !


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum