புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_m10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10 
56 Posts - 73%
heezulia
நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_m10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_m10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_m10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_m10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10 
221 Posts - 75%
heezulia
நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_m10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_m10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_m10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10 
8 Posts - 3%
prajai
நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_m10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_m10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_m10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_m10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_m10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
nahoor
நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_m10நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிஜங்களின் தரிசனம் - சிறுகதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 29, 2023 7:55 pm

காலை 7 மணிக்கு அலைபேசி அழைக்கும் ஒலி கேட்டது. அடுப்பை அணைத்துவிட்டு போய் எடுத்துப் பார்த்தேன். அம்மாதான் கூப்பிடு கிறாள்.

`இந்த‌ நேரத்தில் எதற்குக் கூப்பிடுகிறாள்... எப்போதும் 10 மணிக்கு மேல்தானே கூப்பிடுவாள்?’

``என்னம்மா... காலையிலயே கூப்புடற?” என்றேன்.

``ரங்கு மாமா போயிட்டாருடி...’’

``என்னாச்சுமா நல்லாத்தானே இருந்தாரு. எங்கேயோ ஹோம்ல தங்கிட்டு‌ ஏதோ வேலை பார்த்துக்கிட்டு இருக்கறதா சகுந்தலா அத்தை போன தடவ வந்தப்ப சொன்னாங்கன்னு சொல்லிட்டு இருந்த..?!’’

``ஆமாம்... அங்கதான்... சாயங்காலம் ஏதோ பூச்செடிக்கு தண்ணி பாய்ச்சிக்கிட்டு இருந் தாராம். அப்படியே மயக்கமா விழுந்துட்டா ராம். அங்க இருக்கற ஆஸ்பத்திரிலயே சேர்த் துட்டு வீட்டுக்கு தகவல் சொல்லி இருக்காங்க. ரங்கு மாமா பையன் விக்னேஷ்தான் போய் பார்த்துருக்கான். கண்ணே தெறக்கலையாம். நேத்தி ராவு உசுரு போயிருச்சு. விக்னோஷோட வீட்டுக்குதான் கொண்டு வந்துருக்காங்க. 11 மணிக்கு தகனமாம்...’’ அம்மா மூச்சு விடாமல் பேசி நிறுத்தினாள்.</p>.<p>``நான் ஒன்பது மணிக்கு பாப்பாவை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு வந்திடறேன்.’’

``மாப்பிள்ளை..?’’

``அவருக்கு மீட்டிங் இருக்கு... சீக்கிரம் கிளம்பிடுவார். சண்டே வேணா போயி விசாரிக்கச் சொல்லிக்கிறேன்.’’

``சரி... நானும் அப்பாவும் கெளம்புறோம். நீ மெதுவா வா...’’

போனை வைத்தேன்... `பாவம்.. சகுந்தலா அத்தை...’ என்று நினைத்துக்கொண்டேன்.

சகுந்தலா

உறவு முறையில் அத்தை இல்லை. என் அம்மா திருமணம் முடிந்து கோவை வந்தபோது பக்கத்து வீட்டில் சகுந்தலா அத்தையும், ரங்கு மாமாவும் குடி யிருந்தனர். அப்போதுதான் அவர்களுக்கும் கல்யாணமாகி ஒரு வருடம் ஆகி இருந்தது. அப்புறமென்ன... என் அம்மா விசா லாட்சியும், சகுந்தலா அத்தையும் நகமும் சதையுமான சிநேகிதிகள் ஆகிவிட்டார்கள். வைக்கும் குழம் பில் இருந்து குழம்பிய மனசு வரை எல்லாமே பகிர்ந்துகொள்ளும் தோழமை. ஆனால், ஆண்கள் இரு வரும் அப்படி கலக்கவில்லை. இருவர் உத்தியோகமும் வேறு என்பதோடு, ரங்கு மாமா  மன தளவில் `எப்போது கக்கும்...’ என்று தெரியாத எரிமலைக் குழம்பு போல இருந்ததும் ஒரு காரணம்.

ரங்கு மாமா ஆறடிக்கும் குறையாத ஆகிருதி. காத ளவு வழியும் கிருதாவும், பெரிய மீசையுமாக கொஞ்சம் கடினமான தோற்றத்துடன்தான் இருப்பார். அத்தையோ மெல்லிய தேகத்துடன் எந்நேரமும் சிரிக்கும் உதடுகளுடன் இருப்பாள்.தோற்றத்தில் மட்டும் அல்ல குணமும் கடூரமானதுதான் ரங்கு மாமாவுக்கு. பல நாள்களில் அவர் வாயிலிருந்து வழியும் எரிமலைக் குழம்பு அத்தை மேல் கொட்டும். துடிதுடிக்க வைக்கும். பெரும்பாலும் இதெல்லாம் இரவில் நடக்கும். ஒற்றைச் சுவர் என்பதால் புரிந்து பல நாள், புரியாமல் சில நாள் கேட்கும். ஆனாலும், அடுத்த நாள் அத்தை வெளியே வரும்போது, முகச்சிவப்பும், கன்னத்தின் ரேகைகளும் உப்பிய முகமுமாக இருந்தாலும் முகத்தின் புன்னகை மட்டும் மாறாது.</p>.<p>நானும்,‌ சகுந்தலா அத்தையின் மகன் விக்னேஷும் ஒரே பள்ளியில் படித்தாலும், வேறு வகுப்பு என்பது மட்டும் காரணமல்ல... ரங்கு மாமாவின் தோற்றம் என்னை நெருங்க விடாமல் செய்தது என் றால், அவரின் சச்சரவுகளும், கெட்ட வசவுகளும் விக் னேஷை ஒருவிதமான தாழ்வுமனப்பான்மை யில் தள்ளியிருந்தது. இதனால் அவர்கள் வீட்டில் அத்தையிடம் மட்டுமே ஒட்டினாலும் `இப்படிக்கூடவா முதுகெலும்பு இல்லாம கெடப்பாங்க ரெண்டு பேரும்’ என்று இருவரையுமே மனதுக்குள் நோகுவேன்.

அன்றொருநாள் பள்ளி விட்டு வரும்போது எப்போதும் இல்லாமல் அம்மா பதற்றத்துடன் வாயிலில் நின்று எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அத்தை வீட்டில் இரவு கேட்கும் சத்தம் அன்று மாலையிலேயே கேட் டது. ஆனால், வித்தியாசமாக விக்னேஷின் சத்தம். ``போய்யா வெளியே... இனிமே உனக்கும் எங்களுக்கும் சங்காத்தமே இல்ல. அப்பான்னு சொல்லிக்கிட்டு வந்து நின்ன... நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரி யாது..?!’’ - கத்தியபடி ரங்கு மாமாவோட கையைப் பிடித்து தரதரன்னு வெளியே விட்டுட்டு `தடால்’ என்று கதவை மூடினான். தெருவே பார்க்க அசிங்கமாகப் போனாலும், முதல்தடவையா எதிர்ப்பு வந்ததாலோ என்னவோ ரங்கு மாமா எதுவும் பேசாமல் அப்படியே மௌனமாக நடந்தார்.</p>.<p>அப்படி எப்பவும் இல்லாத அளவுக்கு, அன்னிக்கு மட்டும் விக்னேஷ் ஏன் ருத்ர தாண்டவம் ஆடினான்னு எங்கம்மாகிட்ட பல தடவை கேட்டும் மழுப்பிட்டா. ஆனா, அன்னிக்கு இரவே ரங்கு மாமா எப்பவும் போல சகஜமா வீட்டுக்கு வந்தார். ஆனா‌, அவர்கள் கதவைத் திறக்கவே இல்லை. அதுக்கப்புறம் பல தடவை வந்தவர். விக்னேஷ் பள்ளிக்குப் போனப்புறம்கூட, அத்தையும் உள்ளே விடவே இல்லை. `அவரு உள்ளே வந் தாருன்னா நான் போயிருவேன்’னு விக்னேஷ் மிரட்டி வச்சிருந்ததா அம்மா சொன்னா.

இந்தச் சம்பவம் நடக்கறப்பவே நாங்க வேற எடத்துல நிலம் வாங்கி வீடு கட்டிக்கிட்டு இருந்தோம். நான் ப்ளஸ் டூ முடிக்கவே, அங்கிருந்து நாங்க மாறி வந்துட்டோம். அதுக்கப் புறம் நேர்ல அதிகமா பார்த்துக்க முடியலைன் னாலும், அலைபேசித் தொடர்புல இருந்தோம். என்னோட திருமணத்துக்கு அத்தையும் விக்னேஷும் வந்து என்னைப் புகுந்த வீட்டுக்கு அனுப்பும் வரை உதவியாக இருந்தாங்க. ஆனா, எங்களால் தான் விக்னேஷ் கல்யாணத்துக்கு போக முடியல. அவன் தன்னோட வேலை செய்த கவிதாங்கற பெண்ணையே திருமணம் பண்ணிக்கிட்டு சின்னதா வீட்லயே விருந்து வச்சிட்டான்.

அதுக்கப்புறம் அவங்க அவங்க தினசரியில ஓடுனதுல எப்பவாவது அத்தையப் பத்தி விசா ரிக்கறதோட சரி. நல்லவேளையா கவிதா, அத்தைக்கு இணக்கமான மருமகளாகவே இருந்தாள்.</p>.<p>நான் போய்ச் சேரும்போதே

எடுப்பதற்கு உண்டான சடங்குகள் தொடங்கியிருந்தாங்க. விக்னேஷ் மௌனமாக சடங்குகளை செய்துகொண்டிருந்தான். கடைசியாக எல்லாச் சடங்குகளையும் முடித்துவிட்டு அத்தையை வெளியே கூட்டி வந்தார்கள். தலை குனிந்திருந்ததால் முகத்தின் வெளிப் பாடுகள் புரியவில்லை. கோடி போடும் சடங்குகள் தொடங்கியது. அத்தையின் புகுந்த வீடு, பிறந்த வீடு சார்பாகக் கொண்டு வந்த சேலைகளைப் போர்த்தினார்கள். அப்போது கூட, திரைப்படத்தில் வருவது போல், `நிறுத் துங்கள்’ என்று விக்னேஷ் சத்தம் போடுவானோ என்று காத்திருந்தேன். ஊஹூம்... ஆங்காங்கே சில விசும்பல்கள் தவிர அமைதி யாகவே நடந்து அத்தையையும் உள்ளே கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள்.

இருக்கும்போது மனிதர்களுடன் கலக்காவிட்டாலும், இறந்த பிறகு உறவு ஜனம், விக்னேஷின் அலுவலக ஆட்கள் என்று ஏகப்பட்ட கூட்டத்துடன் மலர் படுக்கையில் போனார் ரங்கு மாமா. அந்தப் பக்கமாக எடுத்துக்கொண்டு போனார்களோ என்னவோ காக்கைக் கூட்டமாக கலைந்தது ஜனக் கூட்டம். உறவு ஜனங்கள் பத்து பேர் தேறுவார்கள். அத்தையின் அறைக்குள் போகலா மென்று போனவளைத் தடுத்து நிறுத்தினாள் அம்மா. அவர்கள் வழக்கப்படி தாலி கழட்டும் சடங்கு உள்ளே நடக்கிறது என் றும், அவர்கள் வெளியே வந்த வுடன் போகலாம் என்றாள்.

கொஞ்ச நேரம் கழித்து, உள்ளே இருந்து இரு வெள்ளை உடுத்திய வயதானவர்கள் வெளியே வர, அம்மா என் கைப்பிடித்து, ``தாலியைக் கழற்றி பாலில் போட்டு இருப்பாங்க. அத்தையைப்  பாக்கறதுக்கு முன்னாடி அதைத் தொட்டுக் கும்பிட்டு, பக்கத்திலேயே விபூதி குங்குமம் வச்சிருப் பாங்க. அத எடுத்து தாலி மேல் போட்டுரு’’ என்றாள்.</p>.<p>சொன்னபடியே செய்துவிட்டு, அத்தை யிடம் போனேன். பாழ்நெற்றியும், போர்த்திய சேலையுமாக இருந்தவளைப் பார்க்க அழுகை பொங்கி வந்தாலும்... ``எதுக்கு அழற... எல்லாம் சரியாப் போயிடும்’’ என்று தோள் தட்டி அத்தை ஆறுதல் கூறவே, சமாதானம் ஆனா லும், அதிக நேரம் அங்கு உட்கார முடியாமல் விக்னேஷின் மனைவி கவிதாவைத் தேடிக் கொண்டு போனேன்.

அடுத்தடுத்த வேலையில் அவளும் அங் கிருந்த பெண்களும் ஈடுபட்டு இருந்தார்கள். கவிதா என்னுடன் சிறிது நேரம் பேசிவிட்டு வேலைகளில் ஆழ்ந்துவிடவே, என்ன செய்வது என்று தெரியாமல், மீண்டும் அத்தை இருந்த அறைக்கே வந்தேன். வெளியே இருந்த அறை யில் அப்போது அத்தையை உட்கார வைத்து இருந்தார்கள். மருந்துக்குக்கூட சுற்றிலும் ஒரு மனிதர் இல்லை. மெதுவாக நடந்து அந்த அறையை நெருங்கியவளின் காதில் கேட்டது என் அம்மாவின் குரல் கொஞ்சம் அழுகை யோடு.</p>.<p>``என்ன சகுந்தலா இது..? நான் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றதுக்கென்ன... இருக் கறப்ப வெச்சு வாழ்ந்துட்டாரு. இப்ப அவருக் காக இந்தக் கோலத்தப் போட்டுக்கலைன்னு ஆரு அழுதா..?’’

அம்மாவின் பொரிதலுக்கு கொஞ்ச நேரம் பதிலே இல்லை. பிறகு மெதுவாக வந்தது. கொஞ்சம் கிசுகிசுப்பாக... ``விசா... நீ அப்படியா நெனைக்கிற... நான் அப்படி நெனைக்கல. தாலிங்கறது ஒரு மரபு... அடையாளங்கறது என்னோட கருத்து. என்னிக்கு அத என் கழுத்துல அவரு கட்டினாரோ அன்னிக்கே என்னோட மரியாத, அவர் மரியாத எல்லாத் துக்கும் அவருதான் பொறுப்பாளின்னுதான் மூணு முடிச்சப் போட்டு ஏத்துக்கிட்டாரு. அத அவரு‌ மதிக்கலன்னாலும் நான் மதிச்சேன். எப்படி அத எங்கழுத்துல கட்டறப்ப பெரியவங்க கடவுள வேண்டிகிட்டு ஆசீர்வாதமா கட்டிக்கிட்டேனோ... அது கொஞ்சங்கூட குறையாம இதுவரைக்கும் நடந்துகிட்டு, காப்பாத்திட்டு வந்திருக்கேன். யாரு கட்டுனாங்களோ அது அவங்களோட போகணும்றது சம்பிராதயம். அதையும் மீறக் கூடாதுன்னுதான் இன்னிக்கும் நடந்துகிட் டேன். அதனால அவரு மேல வருத்தம் வந்ததே ஒழிய கோபம் வரல. ஆனா, விக்னேஷுக்கு அப்படி இல்ல...’’</p>.<p>``பின்ன... எத்தன நாளுதான் அந்தப் புள்ள பொறுக்கும்? நின்னா சந்தேகம்... உக்கார்ந்தா சந்தேகம்... அன்னிக்கு எனக்கு ஆதரவாக பேசினான்கறதுக்காக... `உன்னயும் வச்சுக் கிட்டு இருக்கானா..?!’ன்னு நாக்குல பல்லு படாம கேட்டாரு அந்தப் பிள்ளய. அந்தப் பேச்சக் கேட்ட எனக்கே அவர வெட்டலாம்னு கோபம் வந்தப்ப... அவனுக்கு வராதாக்கும்...’’ அம்மாவின் படபடத்த குரலைக் கேட்ட எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ரங்கு மாமாவை மனதுக்குள் நிறுத்தி `ச்சீ...’ என்றேன்.

``ஆமா விசா... அவனோட கோபத்த மதிச்ச துனாலதான் கடைசி வரைக்கும் அவர நான் உள்ள விடல. இவரு இறந்துட்டாருன்னு அவன் வந்து சொன்னதுமே... `டேய் விக்னேஷா... நாம விரும்பி வர்றதில்லடா சில தெல்லாம்... பிறப்பு, இறப்பு, புருஷன், பொண் டாட்டி, புள்ளைங்க, மத்த உறவுகள் இதெல் லாம் கடவுளாப் பார்த்துக் குடுக்கறது. இந்தப் பிறவில இதுதான்னு தீர்மானம் பண்ணி அனுப்பிச்சது. இருக்கறவரைக்கும் எப்படியோ, எல்லாம் முடிஞ்சு போறப்ப வர்றப்ப அனுப் பின தூய ஒளியான ஆன்மாவத்தான் அதே போல எடுத்துக்கிட்டு போறாரு. அப்படி அது போறப்ப அதுக்குண்டான மரியாதைய சடங்கு சம்பிராயத்தை நல்லபடியா செஞ்சு அனுப்பிவைக்கணும்...’ நான் சொன்னது அவனுக்குப் புரிஞ்சுதா, இல்ல இதுவரைக்கும் நம்மகிட்ட எதுவுமே கேக்காத அம்மா சொல் றேன்னு செஞ்சானோ... எப்படியோ எல்லாம் முடிஞ்சது. ஆனா, விக்னேஷை நெனச்சாதான் ரொம்ப வேதனயா இருக்கு. கல்லக் கட்டி இழுக்காறப்புடி இன்னும் எத்தன நாளு அந்த வார்த்தைய சொமந்துகிட்டே திரியப் போறானோ..?! போனவங்கள கொஞ்ச கொஞ்சமா மறக்குற மாதிரி, அவங்க சொன்ன தையும் மறந்துடணும் அவன்...” என்றவளின் குரல் தழுதழுத்தது.

கேட்டுக்கொண்டிருந்த என் கண்களில் நீர் துளிர்த்தது. இத்தனை நாளாகத் தோன்றாத மூன்றாவது கோணம் அத்தையின் வாய் வழியாக தலைக்குள் புகுந்து மனசில் தைத்தது. அப்படியே உள்ளே நுழைந்து, அத்தையைக் கட்டிக்கொண்டு சரிந்தேன்.

- விஜி முருகநாதன்




நிஜங்களின் தரிசனம் - சிறுகதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

நிஜங்களின் தரிசனம் - சிறுகதை 3838410834 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக