ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலிஸ்தானும் கனடாவும் - இந்தியா கொந்தளிப்பதன் பின்னணி என்ன?

2 posters

Go down

காலிஸ்தானும் கனடாவும் - இந்தியா கொந்தளிப்பதன் பின்னணி என்ன? Empty காலிஸ்தானும் கனடாவும் - இந்தியா கொந்தளிப்பதன் பின்னணி என்ன?

Post by சிவா Thu Sep 28, 2023 4:21 pm



குளிர் தேசமான கனடாவுக்கும் இந்தியாவுக்குமான உறவில் அனல் தகிக்கிறது. கடந்த ஜூன் 18-ம் தேதி கனடாவின் சர்ரே பகுதியில் இருக்கும் ஒரு குருத்வாராவின் பார்க்கிங் பகுதியில் வைத்து ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். முகமூடி அணிந்த இரண்டு பேர் வந்து அவரைச் சுட்டுக் கொன்றார்கள். ‘குருத்வாராவில் சமயப்பணி செய்தவர் அவர்' என்கிறது கனடா. ‘எங்களால் தேடப்படும் தீவிரவாதி' என்கிறது இந்தியா. ‘‘கனடா குடியுரிமை பெற்றவரான நிஜ்ஜாரை கனடாவுக்குள் வைத்து இந்திய உளவுத்துறை ஏஜென்ட்கள் சுட்டுக்கொன்றார்கள். இது கனடாவின் இறையாண்மையில் தலையிடுவதாகும்'' என்று கனடா நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

இந்தச் செயலில் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டி, கனடாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணிபுரிந்த அதிகாரி ஒருவரை வெளியேற்றியது கனடா. இதற்கு பதிலடியாக டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரி ஒருவரை இந்தியா வெளியேற்றியது. இதைத் தொடர்ந்து, கனடா நாட்டினருக்கு விசா தருவதை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இணையான ஒரு தராசில் வைத்து, ‘தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடு' என்று கனடாவைக் கண்டித்திருக்கிறது இந்தியா. மேற்கத்திய உலகத்தைச் சேர்ந்த ஒரு நாட்டுடன் இப்படி இந்தியா மோதுவது இதுவே முதல் முறை.

என்ன பிரச்னை? ஏன் இவ்வளவு உக்கிரம்?


;கனடாவுக்கும் இந்தியாவுக்கும் கடந்த 50 ஆண்டுகளாகவே இணக்கமான உறவு இருந்ததில்லை. காரணம், காலிஸ்தான். பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு தலையெடுத்து தனிநாடு கேட்டு ஆயுதப் போராட்டத்தில் இறங்கியபோது, வெளிநாடுகளில் இருந்த சீக்கிய அமைப்புகள் பல அவர்களுக்கு ஆதரவளித்தன. இந்தியாவுக்கு வெளியே சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் நாடு, கனடா. அதனால் இயல்பாகவே அங்கிருந்து நிறைய மறைமுக உதவிகள் வந்தன. மற்ற நாடுகளிலிருந்து வந்த உதவிகளைக் கத்தரிக்க முடிந்ததுபோல, கனடாவை இந்தியாவால் செய்ய முடியவில்லை. கருத்து சுதந்திரத்தைக் காரணம் காட்டி, அந்த நடவடிக்கைகளை கனடா ஆதரித்தது. ‘கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் தனி ஈழத்துக்காகக் குரல் கொடுப்பதுபோல, உய்குர் முஸ்லிம்கள் சீனாவை எதிர்த்துப் போராடுவது போல, சீக்கியர்களுக்கும் காலிஸ்தான் பற்றிப் பேச உரிமை உண்டு' என்றது. இந்த உரசலால் கடந்த 1973-க்கும் 2015-க்கும் இடையே இந்தியப் பிரதமர் யாரும் கனடாவுக்கு விருந்தினராகச் சென்றதில்லை. (இடையில் ஒருமுறை ஜி20 மாநாட்டுக்காக மன்மோகன் சிங் சென்றார்!) காலிஸ்தானி தலைவரான தல்விந்தர் சிங் பார்மர் என்பவரை நாடு கடத்தித் தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கேட்டபோது, கனடா மறுத்தது. மூன்றே ஆண்டுகளில் டொரன்டோவிலிருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் குண்டுவைத்து 329 பேரைக் கொன்றனர் காலிஸ்தான் பயங்கரவாதிகள். இந்த சதிச்செயலுக்கு மாஸ்டர் மைண்ட், அந்த பார்மர்தான்.

இதன்பிறகு காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை கனடா தடை செய்தது என்றாலும், உறவு இன்னும் மோசமானது. பஞ்சாப்பில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு ஒடுக்கப்பட்ட பிறகு, அவர்கள் வேறு வேறு பெயர்களில் இயங்க ஆரம்பித்தார்கள். இவற்றில் பப்பர் கல்சா இன்டர்நேஷனல், காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ் என்ற இரண்டு அமைப்புகளை இந்தியா மிக ஆபத்தாகப் பார்க்கிறது. வெளிநாடுகளில் செயல்படும் Sikhs for Justice என்ற அமைப்பு இவர்களுக்கு உதவுவதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது.

அமெரிக்கா, கனடா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், நேபாளம், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்று பல நாடுகளில் இருந்துகொண்டு இந்த இரண்டு அமைப்பினரும் செயல்படுகிறார்கள். பஞ்சாப்பில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கு இவர்கள் அனுப்பும் உதவிகள் பாகிஸ்தான் வழியே எல்லை தாண்டி வருவதாக சந்தேகிக்கிறது இந்தியா.  

பப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்பு கடந்த 1978-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ இதன் பின்னால் இருக்கிறது. இதன் ஆரம்பக்காலத் தலைவர்களாக இருந்த பலரும் பஞ்சாப் காவல் துறையால் என்கௌன்டரில் கொல்லப்பட்டுவிட, இப்போது லாகூரில் இருந்தபடி வாத்வா சிங் என்பவர் இதை நடத்திக்கொண்டிருக்கிறார்.

இதிலிருந்து பிரிந்ததுதான் காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ். இந்த அமைப்பைக் குறிவைத்து நடத்தப்படும் வேட்டைகள்தான் இன்று இந்தியா - கனடா உறவை இந்த மட்டத்தில் கொண்டுவந்து விட்டிருக்கிறது. கடந்த 2011-ம் ஆண்டு ஜகத் சிங் தாரா என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு இது. பஞ்சாப் முதல்வராக இருந்த பியாந்த் சிங் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் இவர். சிறையிலிருந்து தப்பிச் சென்று இந்த அமைப்பை ஆரம்பித்தார் அவர். தாய்லாந்தில் பதுங்கியிருந்த அவரை இந்தியா கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்தது. அதன்பின் இந்த அமைப்புக்குத் தலைமையேற்றவர்தான், ஜூன் மாதம் கனடாவில் கொல்லப்பட்ட நிஜ்ஜார்.

நிஜ்ஜார் கொலைக்குப் பிறகு இந்த அமைப்புக்குக் கனடாவில் இருந்தபடி சுகா டுன்கே, அர்ஷ் தலா என்ற இருவர் இணைந்து உயிர் கொடுக்க முயன்றனர். இவர்களில் டுன்கே கடந்த செப்டம்பர் 20-ம் தேதி கனடாவின் வின்னிபெக் என்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அர்ஷ் தலா எந்த நேரமும் கொல்லப்படலாம். இந்தக் கொலைகளின் பின்னணியில் இந்திய உளவு அமைப்பான ‘ரா’ இருப்பதாக சீக்கிய அமைப்புகள் சில குற்றம் சாட்டுகின்றன.

இந்தியாவில் தீவிரவாதிகள் என்று அறிவிக்கப்பட்ட 43 பேரின் பட்டியலை கனடாவிடம் மத்திய அரசு கொடுத்து, அவர்களை நாடுகடத்துமாறு கேட்டது. அந்தப் பட்டியலில் நிஜ்ஜார் பெயரும் இருந்தது. இவ்வளவு பிரச்னைகள் இருந்தும் வெளிப்படையாக இந்தியாவுடன் இந்த விவகாரத்தில் ஜஸ்டின் ட்ரூடோ ஏன் மோதுகிறார்?

ட்ரூடோவின் லிபரல் கட்சி அங்கு இப்போது பெரும்பான்மை பலம் இல்லாமல்தான் ஆட்சி செய்கிறது. New Democratic Party என்ற கட்சியின் ஆதரவில்தான் ஆட்சி நீடிக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர், ஜக்மீத் சிங். கனடாவின் பெரிய கட்சி ஒன்றுக்குத் தலைவரான முதல் சீக்கியர். இந்திய நாடாளுமன்றத்தைவிட கனடா நாடாளுமன்றத்தில் அதிக சீக்கிய எம்.பி-க்கள் இருக்கிறார்கள். சுமார் 25 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் அளவுக்கு வலிமையாக இருக்கிறார்கள். விரைவில் கனடாவில் தேர்தல் வர இருக்கிறது. ட்ரூடோவின் லிபரல் கட்சிக்குச் செல்வாக்கு மங்கியிருக்கிறது. ‘‘அந்தச் செல்வாக்கைத் தூக்கி நிறுத்தவே இப்படி அரசியல் ஆட்டம் ஆடுகிறார்'' என்கின்றன கனடா எதிர்க்கட்சிகள்.

பாகிஸ்தானில் போய் ஒசாமா பின்லேடனைக் கொன்ற அமெரிக்கா, இராக்கில் ட்ரோன் தாக்குதல் நடத்தி ஈரான் படைத்தளபதியைக் கொன்ற அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தி அல்கொய்தா தலைவர் அல் ஜவாஹிரியைக் கொன்ற அமெரிக்கா, இந்த விஷயத்தில் இந்தியாவைக் கண்டிப்பதுதான் வேடிக்கை.

இந்தியர்களின் கனவு தேசம்!


கனடாவுக்கும் இந்தியாவுக்கும் ராஜாங்கரீதியாக உரசல்கள் இருந்தாலும், இந்தியர்கள் குடியேறவும், வேலை பார்க்கவும், படிக்கவும் செல்லும் கனவு தேசமாகவே கனடா இருக்கிறது. இரு நாட்டுத் தலைவர்களின் ஈகோ மோதலால் இந்தியர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகள் பாதிக்கப்படும்.

அதை உணர்த்தும் சில புள்ளிவிவரங்கள்:

வெளிநாடுவாழ் இந்தியர்களில் 5.26% பேர் கனடாவில் இருக்கிறார்கள். கனடாவில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை, 16,89,055. இவர்களில் பஞ்சாபிகளும் தமிழர்களுமே அதிகம். பஞ்சாபிகள் நூறாண்டுக்கும் மேலாக கனடாவில் வசிக்கிறார்கள்.

இந்திய மாணவர்கள் உயர்கல்விக்காகச் செல்லும் விருப்ப தேசமாகவும் கனடா இருக்கிறது. வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்களில் ஏழில் ஒருவர் கனடாவில் இருக்கிறார். கடந்த 2022-ம் ஆண்டு கனடாவில் படிக்கப் போன இந்தியர்கள் எண்ணிக்கை, 1,83,310.

கனடாவில் நிரந்தரக் குடியுரிமை கேட்பவர்களிலும் இந்தியர்களே அதிகம். கடந்த 2020 ஜனவரி முதல் 2023 ஜூலை வரை கனடா குடியுரிமைக்காக விண்ணப்பித்த இந்தியர்கள் 4.6 லட்சம் பேர். இதே காலகட்டத்தில் கனடாவில் பணிபுரிய வொர்க் பர்மிட் கேட்டு விண்ணப்பித்தவர்களிலும் இந்தியர்களே அதிகம். கிட்டத்தட்ட 5.4 லட்சம் பேர். மேற்படிப்பு வாய்ப்பு கேட்டவர்களிலும் இந்தியர்களே அதிகம். அந்த எண்ணிக்கை, 8.7 லட்சம்.

கனடாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் பணமும் அதிகம். கடந்த 2021-ம் ஆண்டில் கனடாவில் பணிபுரியும் இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பிய தொகை, ரூ. 31,581 கோடி.

கனடா பென்ஷன் ஃபண்ட்கள் இந்தியப் பங்குச்சந்தையில் சுமார் ரூ. 4,57,298 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளன.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையில் கனடா நான்காம் இடத்தில் உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு 3,51,859 பேர் வந்தார்கள். கொரோனாவுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது.  

ஐந்து கண்கள் கூட்டணி!


ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் உளவுத்துறைக்குப் பங்கு இருக்கிறது' என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதற்குப் பின்னணியில் இருப்பது எது? வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், அமெரிக்க அரசு வழங்கிய உளவுத்தகவலை ஆதாரமாக வைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. ‘ஆதாரம் கொடு' என்று இந்தியா கேட்டாலும் இந்த ஆதாரங்களை கனடா தரத் தயங்குவதற்குக் காரணம் சட்டச் சிக்கல்கள்தான்!

இதில் அமெரிக்கா எங்கே இருந்து வந்தது? அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய ஐந்து நாடுகளும் ‘Five Eyes Alliance' என்ற கூட்டணி வைத்துள்ளன. உளவுத் தகவல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதற்காக இந்தக் கூட்டணி. சீனா உலகெங்கும் தன் கரங்களை நீளச் செய்திருக்கும் இன்றைய சூழலில், இந்தக் கூட்டணியின் உளவுப்பணி இன்னும் வேகமெடுத்துள்ளது. அப்படித்தான் நிஜ்ஜார் கொலை தொடர்பான ஆதாரம் அமெரிக்காவிடம் சிக்கியிருக்கலாம் என்கிறார்கள். கொலை நடந்தபிறகு நிகழ்ந்த உரையாடல்களையே ஆதாரமாகத் திரட்டியுள்ளதாகச் சொல்கிறார்கள். ‘‘இது தொடர்பாக சிக்னல் இன்டலிஜென்ஸ், ஹ்யூமன் இன்டலிஜென்ஸ் இரண்டுமே கிடைத்துள்ளன'' என்று கனடா அரசுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. ‘புகையும் துப்பாக்கி போன்ற ஆதாரம் அது' என்று கனடா தரப்பு சொல்வதை வைத்துப் பார்த்தால், தூதரக அதிகாரிகள் போனில் பேசியதை ஒட்டுக்கேட்டுப் பதிவு செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

அமெரிக்க மற்றும் கனடா உளவுத்துறைகள் Stingray phone tracker போன்ற உயர்ரக ஒட்டுக் கேட்கும் கருவிகளைப் பயன்படுத்துகின்றன. தற்காலிக செல்போன் டவர் போல செயல்பட்டு, ஒரு போனை முழுக்கக் கண்காணித்துத் தகவல் திரட்டும் வல்லமை பெற்றவை இந்தக் கருவிகள்.

;வெளிநாட்டுத் தூதரகங்களில் பணிபுரிவோரைக் கண்காணிப்பதோ, அவர்களை உளவு பார்ப்பதோ, அவர்களின் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதோ, சர்வதேச விதிகளின்படி குற்றம். எனவே, ஆதாரங்களை வெளியிட்டால், ஒட்டுக் கேட்ட தவற்றுக்கு அமெரிக்காவும் கனடாவும் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

விகடன்


காலிஸ்தானும் கனடாவும் - இந்தியா கொந்தளிப்பதன் பின்னணி என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காலிஸ்தானும் கனடாவும் - இந்தியா கொந்தளிப்பதன் பின்னணி என்ன? Empty Re: காலிஸ்தானும் கனடாவும் - இந்தியா கொந்தளிப்பதன் பின்னணி என்ன?

Post by சிவா Thu Sep 28, 2023 4:44 pm

ஐநா அவையில் கனடா பெயரை குறிப்பிடாமல் இந்தியாவினை சீண்டியது, இந்தியாவின் ஜெய்சங்கரோ பெயரை குறிப்பிட்டு கனடிய தேசம் ஏன் காலிஸ்தான் கும்பல் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டபின் கனடாவிடம் பதில் இல்லை

இப்போது கனடாவே இது இந்திய சதி அல்ல, எங்கள் இந்திய உறவை கெடுக்க பாகிஸ்தான் செய்த சதி என பல்டி அடிக்கின்றது

'இந்தியாவுக்கு நன்மை தரும் விஷயங்களை நான் செய்வேனா? அதுவும் காலிஸ்தான் தலைவனை கொல்வேனா? நான் இருக்கும் நிலையில் டிக்கெட் வாங்க கூட காசு இல்லையே.

எங்கள் நாட்டுக்குள்ளே வந்து கொல்கின்றார்கள்,நாங்கள் யாரிடம் சொல்ல முடியும்?" என தலையில் அடித்து அழுகின்றது பாகிஸ்தான்.

செய்த பாவத்திலெலலம் தப்பிய பாகிஸ்தான் இப்போது செய்யாத பாவத்துக்கு மாட்டிகொண்டது.

கனடாவுக்கு நேரமே சரியில்லை...

கனடாவில் இரண்டாம் உலகப்போர் காலத்து ஜெர்மானிய ஆசாமி 99 வயதில் உண்டு, இவர் மேல் சர்ச்சையும் உண்டு, யூதருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டவர் என்பது அந்த வாதம்.

அன்னார் ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவுக்கு எதிராக போராடியவர் அல்லவா? அதனால் அன்றே ரஷ்யாவினை எதிர்த்த தீரர் என கனடிய பாராளுமன்றம் அவரை சபைக்கு அழைத்து கொண்டாடியது.

விடுமா இஸ்ரேல்?

ஒரு கொலைகாரனை கொண்டாடுவாயோ, தகுமோ என சீற கனடிய பிரதமர் தடுமாறி இப்போது சாஷ்டாங்கமாக மன்னிப்பு கேட்டுகொண்டிருக்கின்றார்
அவரின் தோற்றம் இந்தியாவின் ராகுல் போல் ஆகிவிட்டது, பெரும் அவமானத்தில் சிக்கிவிட்டார் மனிதர்.

மோடி ஆரம்பத்தில் இருந்தே கனடாவினை ஒதுக்கிவைத்தார் ஏன் என்றால் அதன் காரணம் இப்போதுதான் உலகுக்கே புரிகின்றது, உலகம் மோடி பக்கமே சாய்கின்றது.


காலிஸ்தானும் கனடாவும் - இந்தியா கொந்தளிப்பதன் பின்னணி என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian and krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

காலிஸ்தானும் கனடாவும் - இந்தியா கொந்தளிப்பதன் பின்னணி என்ன? Empty Re: காலிஸ்தானும் கனடாவும் - இந்தியா கொந்தளிப்பதன் பின்னணி என்ன?

Post by T.N.Balasubramanian Thu Sep 28, 2023 9:10 pm

விழிப்பூட்டும் தகவல்கள். நன்றி.

@சிவா


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காலிஸ்தானும் கனடாவும் - இந்தியா கொந்தளிப்பதன் பின்னணி என்ன? Empty Re: காலிஸ்தானும் கனடாவும் - இந்தியா கொந்தளிப்பதன் பின்னணி என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum