புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
101 Posts - 69%
heezulia
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
27 Posts - 18%
mohamed nizamudeen
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
6 Posts - 4%
prajai
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
1 Post - 1%
sram_1977
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
155 Posts - 75%
heezulia
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
9 Posts - 4%
prajai
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
1 Post - 0%
nahoor
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 07, 2023 3:43 pm

ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  F8UUreu

ஐபிஎஸ் அதிகாரி டூ ஆளுநர் - யார் இந்த ஆர்.என்.ரவி?


பீகார் மாநிலம் பாட்னாவை பூர்விகமாக கொண்ட ஆர்என் ரவியின் முழுப் பெயர் ரவீந்திர நாராயண் ரவி ஆகும். பீகாரில் பிறந்திருந்தாலும் ஆர்என் ரவி 1976ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆவார். கேரளாவிலும் பிறகு பிற மாநிலங்களிலும் காவல் துறையில் உயர் பொறுப்புகளை வகித்த ஆர்என் ரவி, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயிலும் பணிபுரிந்துள்ளார்.

இது தவிர மத்திய அரசின் உளவுப்பிரிவான IB-யிலும் பணியாற்றிய ஆர்என் ரவி, காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்ட அனுபவம் கொண்டவர். 2012ஆம் ஆண்டு காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்ற ஆர்.என்.ரவி, பின்னர் பிரதமர் அலுவலகத்தில் உளவுப் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2018ஆம் ஆண்டு தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி அடுத்த ஆண்டே நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு 2 ஆண்டுகள் ஆளுநராக இருந்த ஆர்என் ரவி தற்போது தமிழகத்திற்கு ஆளுநராகியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  Barrab10

கடந்த ஆட்சி வரை தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலையில் பஞ்சமில்லா லஞ்ச லாவண்ய ஊழல் ஆட்சியில் திளைத்திருந்தனர் என்பதை அனைவரும் அறிவர்.

அதே கனவுடன் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து மீண்டும் ஆட்சிக்கு வந்தது தற்பொழுது உள்ள திராவிட மாடல்? அரசு.

ஆட்சிக்கு வந்ததும் யாரையோ திருப்திப் படுத்த வேண்டிய நிர்பந்த நிலையில் ஈஷா யோகா அறக்கட்டளையை தவிடுபொடி ஆக்க வேண்டும் எனக் கிளம்பினார்கள். அதற்கு பதிலடி டெல்லியில் இருந்து கிடைத்ததும் ஈஷாவை விட்டுவிட்டு ஓடினார்கள்.

அடுத்து வழக்கம் போல் இந்து அழிப்பு பணியே பிரதான பணி என இதுவரை நூற்றுக்கணக்கான கோயில்களை இடித்து தரைமட்டமாக்கி ஆணவத்தின் உச்சியில் நின்று கொக்கரிக்கிறது திராவிட மாடல் அரசு.

இவற்றையெல்லாம் வெற்றிகரமாக சாதித்த ஊழலின் ஊற்றுக்கண்ணான திமுக அரசுக்கு ஊழல் செய்ய இடையூறாக இரண்டு முன்னாள் ஐ‌பி‌எஸ் அதிகாரிகள் வந்து இப்படி முட்டுக்கட்டை போடுவார்கள் என கனவிலும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஒருவர் அண்ணாமலை ஐ‌பி‌எஸ் மற்றொருவர் ஆர்.என்.ரவி ஐ‌பி‌எஸ்.

ஒருவர் ஊழல் செய்ய திட்டமிடும் பொழுதே இதில் ஊழல் செய்ய திட்டமிடுகிறார்கள் என அறிவித்து விடுகிறார். மற்றொருவர் இதுவரை செய்த ஊழல்களையெல்லாம் எப்படி செய்தார்கள் என அறிவிக்கிறார்.

மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போன்ற இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்ட திராவிட மடல் அரசு, தனது மீடியா சக்தி, தனது அல்லக்கை அரசியல் தலைவர்களின் கண்டன அறிக்கைகள், அவ்வப்பொழுது நேரடியாகவும் இவர்களுடன் மோதிப்பார்க்கிறது. இதுவரை தோல்விகளே எஞ்சியுள்ளது திராவிட மாடல் அரசுக்கு....

ஆர்.என்.ரவி திமுகவிற்கு எதிராக அதிகம் பேசிய பேச்சின் மூலப்பொருள்.

நீட்
மும்மொழித் திட்டம்
புதிய கல்விக் கொள்கை
சனாதனம்
கால்டுவெல்
திராவிடம்
மசோதா நிலுவை

தற்போழுது முதலமைச்சர் குடும்பமே நேரடியாக ஆளுனருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த காரணமான ஆளுநரின் பேச்சு ஸ்டெர்லைட் போராட்டம்.

இறுதியாக (இன்று) திமுக ஆளுனருக்கு எதிராக எடுத்துள்ள வாசகம் "ஆளுநர் பதவி, அவசியமில்லாத பதவி"

இதுவரை ஆளுனருக்கும் திமுகவினருக்கும் என்ன பிரச்சனை, இனிமேல் வரப்போகும் அரசியல் யுத்தம் என அனைத்தையும் செய்தித் தொகுப்புகளாக இங்கு பார்ப்போம்.

அதற்கு முன் அவரது பேச்சுக்களின் சுருக்கத்தை ஒரு பார்வையிடுவோம்.


போராட்டம்:


* ``வெளிநாடுகளிலிருந்து தொண்டு நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நிதி வருகிறது. அந்த நிதிகள் உரிய வகையில் பயன்படுத்தப்படாமல், நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உலக அளவில் வேகமாக வளர்ந்துவரும் நம் நாட்டின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பல நாடுகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றன.

* தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையானது நாட்டின் 40% காப்பர் தேவையைப் பூர்த்தி செய்துவந்தது. நாட்டின் வளர்ச்சிக்கு காப்பர் எந்த அளவுக்கு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு மக்களை தூண்டிவிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்துவிட்டனர்.

* கூடங்குளம் அணுமின் நிலையம் கொண்டு வரும்போது போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கும் வெளிநாட்டு நிதிகளே காரணம்.

*விழிஞ்சம் துறைமுகம் கொண்டுவரக் கூடாது என்ற எதிர்ப்புக்குப் பின்னாலும் வெளிநாட்டு நிதிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

*வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு ரூ.250 கோடி வரை வெளிநாட்டு நிதி நம் நாட்டுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

* `அக்னிபத்' திட்டம் புரட்சிகரமான திட்டம். அக்னிபத் திட்டத்தை தவறான வழிகாட்டுதலில், தவறாகப் புரிந்துகொண்டு நாட்டின் பல்வேறு பகுதி இளைஞர்கள் எதிர்த்து வருகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலர் செயல்பட்டுவருகிறார்கள். அவர்களின் சதித் திட்டத்தை முறியடிப்போம்.”

திராவிடம்:


* ``பாரதத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்த, புவியியல் வெளிப்பாடான திராவிடத்தை இன அடையாளமாக ஆங்கிலேயர்கள் மாற்றினர்.

* ஆங்கிலேயர்கள்தான் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு, விந்திய மலைக்கு வடக்கே இருப்பவர்களை வடஇந்தியர்கள் என்றும் தென்பக்கம் இருப்பர்களை திராவிடர்கள் என்றும் பிரித்து அடையாளப்படுத்திவிட்டனர். திராவிடன் என்ற வார்த்தையை முதன் முதலில் அடையாளப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள்தான்!

* சில பிராந்தியங்கள் மட்டும் முன்னேறுவது சரியல்ல. அது 'டார்வினியன் மாடல்!' சில புத்திகூர்மையுள்ளவர்கள் எல்லாப் பலன்களையும் எடுத்துக்கொண்டு மற்றவர்களை விட்டுவிடுகிறார்கள். பிரதமர் மோடியின் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மாடல்தான் எல்லா அடிப்படைத் தேவைகளையும் எல்லோருக்கும் பாகுபாடின்றி அளிக்கிறது!

* நாம் அனைவரும் மாநிலரீதியாக சிந்திக்காமல், இந்தியா என்ற உணர்வுடன் சிந்தித்து செயல்பட வேண்டும். மாநில அளவிலான வளர்ச்சி சமமான வளர்ச்சியை உருவாக்காது. மாநில அளவிலான வளர்ச்சி நம் நாட்டுக்கு சரியானதாக இருக்காது. அதனால் ஏற்றத்தாழ்வு உண்டாகும்.

* அதிகாரத்துக்காக மொழியின் அடிப்படையிலும் சாதியின் அடிப்படையிலும் இங்குள்ள கட்சியினர் அரசியல் செய்கின்றனர்; நாட்டு மக்களின் பார்வையைக் குறுக்கிவிட்டனர். தற்போது, திராவிடம் என்றால் தமிழகம் மட்டும் என்று பேசப்பட்டுவருகிறது. ஆனால், தேசியகீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு மட்டுமல்ல. தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களை உள்ளடக்கியது!

* நீட் வருவதற்கு முன்பிருந்த நிலையைவிட நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப்படிப்பு சேர்க்கை அதிகரித்திருக்கிறது. நீட் விலக்கு மசோதா கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிரானது, தமிழக சட்டப்பேரவை இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

* மற்ற மாநில மாணவர்களைப்போல நம்முடைய தமிழக மாணவர்களும் பிற இந்திய மொழிகளைக் கற்க வழிசெய்ய வேண்டும், அதை மறுப்பது சரியல்ல!”

தமிழ்நாடு:


*``ஆளுநர் கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நிறுத்திவைக்கப்படும் மசோதாக்களை குறிப்பிடுவதற்கு வார்த்தை அலங்காரத்துக்காகவே நாகரிகமாக நிறுத்தி வைப்பு என்கிறோம். நிறுத்தி வைத்தாலே அது நிராகரிக்கப்பட்டதாகத்தான் பொருள்.

*சட்டமசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றினால் மட்டும் சட்டமாகாது. சட்டசபை ஓர் அங்கம் மட்டும்தான். சட்டசபை ஓர் அங்கமாக இருப்பதால்தான் ஆளுநருக்குப் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

* தமிழகத்தில் பட்டியலின மக்களைத் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை நிலவுகிறது. இன்னும் பல இடங்களில், பல பள்ளிகள், கோயில்களில் பட்டியலின மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகின்றனர்.

*கோவையில் நடந்தது மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல். இந்தப் பயங்கரவாத சதித்திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. கோவை குண்டுவெடிப்பு நிகழ்ந்து நான்கு நாள்கள் கழித்துதான் தமிழக அரசு என்.ஐ.ஏ-வுக்கு வழக்கை ஒப்படைத்திருக்கிறது. இந்த காலதாமதம் ஏன்?

*கோயம்புத்தூர் பயங்கரவாதத்துக்குப் பெயர் போன இடம்!

* பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, மிகவும் ஆபத்தான இயக்கம். மனித உரிமைகள், மறுவாழ்வு, மாணவர் சங்கம் எனப் பல முகமூடிகளை அணிந்துகொண்டு அது செயல்பட்டுவருகிறது. இந்தியாவைச் சிதைப்பதுதான் அவர்களின் நோக்கம். ஆப்கானிஸ்தான், இராக், சிரியா ஆகிய நாடுகளில் சண்டையிடுவதற்கு இந்த அமைப்பு ஆட்களை அனுப்பிவைத்திருக்கிறது. இது மிகவும் அச்சுறுத்தலான ஒரு பிரச்னை. இது குறித்து மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

*பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புக்கு இது போன்ற வெளிநாடுகளில் இருந்தே நிதி வருகிறது.

*துப்பாக்கியைப் பயன்படுத்துவோருக்கு துப்பாக்கியால்தான் பதில் சொல்ல வேண்டும்.”

திருக்குறள்:


*``மதபோதகரான ஜி.யு.போப் திருக்குறளிலுள்ள ஆன்மிக சிந்தனைகளை, பக்தி கண்ணோட்டத்தை நீக்கி பெரிய அவமதிப்பைச் செய்திருக்கிறார். மிஷனரியாக இந்தியாவுக்கு வந்த ஜி.யூ.போப்பின் உள்நோக்கம் கொண்ட திருக்குறள் மொழிபெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம்போல இருக்கிறது.

*திருக்குறளை இப்போது ஏதோ வாழ்வியல் நெறிகள் என்பதுபோல் மட்டும் குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கின்றனர். ஆனால், அது ஓர் இதிகாசம். அதில் நித்திய ஆன்மிகத்தின் ஆன்மா இருக்கிறது.

*முதல் திருக்குறளிலுள்ள ஆதி பகவன் என்ற வார்த்தை ரிக் வேதத்திலிருந்து பெறப்பட்டது. அது இந்திய ஆன்மிகத்தின் மையப்புள்ளி. திருவள்ளுவர் ஓர் ஆன்மிகவாதி!”

சனாதனம்:


*``சனாதன தர்மம்தான் நம் பாரதத்தை உருவாக்கியது; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அரசியலமைப்புச் சட்டம், சனாதன தர்மத்தில் கூறப்பட்டிருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றி கூறுகிறோம். சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது.

*ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் இந்த நாடு உருவானது.

*`சனாதன தர்மம்’ என்பது விரிவானது. அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அனைத்தையும் உள்ளடக்கிய 'தர்மம்' என்று அழைக்கப்படும் பிரபஞ்ச சட்டத்தால் அனைவரும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பதாகும். இது சம்ஸ்கிருதத்தில் மட்டுமல்ல, நமது பண்டைய தமிழ்ப் பாடலான கணியன் பூங்குன்றனாரின் புறநானூறில்கூட `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரிகளில் காணப்படுகிறது.

*இந்தியா ராணுவம் மற்றும் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவதைப்போல ஆன்மிகத்திலும் வளர்வது முக்கியம். ஆன்மிகத்தில் வளர சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும். இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மிகத்தின்மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும்.

*இந்தியாவை மதச்சார்பற்ற நாடு எனச் சொல்கின்றனர். எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல! உலகின் மற்ற நாடுகளைப்போல இந்தியாவும் ஒரு மதத்தைச் சார்ந்திருக்கிறது.

*நமது தேசிய வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவது நான்கு முக்கிய மேற்கத்திய சித்தாந்தங்கள். அவை இறையியல், டார்வீனிய கோட்பாடு, காரல் மார்க்ஸ் கோட்பாடு, ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாடு ஆகியவை.

*காரல் மார்க்ஸின் கோட்பாடு என்பது, இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமிடையே நிரந்தர மோதல்களைக்கொண்டது. அந்தக் கோட்பாட்டின்படி, 'இல்லாதவர்கள்' மேலோங்க வேண்டும். இந்த யோசனை வைரஸாகப் பரவுகிறது. இந்த மாதிரியானது வெவ்வேறு பிரிவுகளுக்கிடையேயும், அதற்குள்ளும் பிளவுகளை உருவாக்கியது. இது சமூகத்தில் நிரந்தர மோதலைத் தூண்டியது.

*நம் நாட்டில் பல படித்தவர்கள், எதற்கெடுத்தாலும் மேற்கத்திய சிந்தனைவாதிகள், தத்துவவாதிகள் போன்றோரை மேற்கோள்காட்டிப் பேசுகிறார்கள். "மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்துவது" என்ற ஜனநாயகம் பற்றிப் பேசும்போது ஆபிரகாம் லிங்கனை மேற்கோள் காட்டுவார்கள். ஆனால், அதே நபர் பெண்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. அதை மறந்துவிடுகிறார்கள். ஆனால், அடிமை முறையை ஒழித்ததற்காக லிங்கனைப் புகழ்கிறார்கள். இவையெல்லாம் பதிவுசெய்யப்பட்ட வரலாறு. இது நம் மனதில் ஆழமாக வேரூன்றிய காலனித்துவ சிந்தனையேயன்றி வேறில்லை.”

புதிய கல்வி கொள்கை:


* ``மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது பாரதிதாசனும், பாரதியாரும் கனவு கண்ட புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கம் கொண்ட புரட்சிகர ஆவணம்.

*ஒரு பிராந்திய, புவியியல் அமைப்பு சார்ந்த பிரதேச உள்ளுணர்வுடன் கல்விக் கொள்கையை அணுகியிருக்கிறோம். இதுவரை நாம் தேசத்தைப் பார்த்த பார்வை சரியாக இல்லை; தற்போது இருக்கும் கல்வி முறையைப் பற்றி நாம் ஒரு மீள்பார்வை செய்ய வேண்டும்.

* புதிய கல்விக் கொள்கையை அரசியல்ரீதியாகப் பார்க்கக் கூடாது. நம் கலாசாரம், பாரம்பர்யம், வரலாறு ஆகியவை பல அரசுகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. மறைக்கப்பட்ட அந்த வரலாற்றைப் புதிய தேசிய கல்விக் கொள்கையால் மீட்டெடுக்க முடியும். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல முடியும்.

* புதிய தேசியக் கல்விக் கொள்கை என்னவென்று இங்குள்ள அரசியல் தலைவர்கள் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இங்கு யாரும் அதை முழுமையாகப் படிக்கவில்லை. அமைச்சர் பொன்முடியிடம் நான் வைக்கும் கோரிக்கை இதுதான். தயவுசெய்து தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்!”


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 07, 2023 4:05 pm

நாட்டின் உண்மையான வரலாற்றை அழித்துவிட்டனர்


சென்னை மாகாணத்துடன் இணைந்ததால் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று மகிழ்ச்சியான நாள். சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவை ஒருங்கிணைக்க பாடுபட்டார். நம்முடைய கலாசாரமும், வரலாறும் வெளிநாட்டவர்கள் சொல்லித்தான் நமக்கு தெரிகிறது. மேற்கத்திய வரலாற்று ஆய்வாளர்கள் நம் நாட்டின் உண்மையான வரலாற்றை அழித்துவிட்டு, மேற்கத்திய கண்ணோட்டத்தோடு வரலாற்றை கூறியிருக்கின்றனர்.

நம் நாட்டின் ஆன்மிகத்தை அழிக்கும் வகையிலும், கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையிலும் வரலாற்றை எழுதியிருக்கின்றனர். பசுவை வணங்குகிறார்கள், குரங்கை வணங்குகிறார்கள் என நம்மை கீழ்த்தரமாக எழுதியிருக்கின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. கடந்த சில நாள்களுக்கு முன்பு கவர்னர் மாளிகையில் நடந்த பயிற்சி முகாமில் பாரதம் குறித்து அறிந்துகொள்ளும் பயிற்சி அளிக்கப்பட்டது. பாரதம் குறித்த பயிற்சி என்றதும் மாணவர்கள் கேலியாகச் சிரித்தனர். உணவு இடைவேளையின்போது பாரதம் பற்றி இவ்வளவு வரலாற்றுத் தகவல்கள் இருக்கிறதா என ஆச்சர்யப்பட்டனர். மாலையில் பயிற்சி முகாமை மேலும் ஒரு நாள் நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

1947-ல் சுதந்திரம் கிடைத்த சமயத்தில் கொண்டாட்டங்கள் நடந்தன. காந்தி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளாமல் ஓரமாக இருந்தார், அதுபற்றி அவரிடம் கேட்டதற்கு `ஆங்கிலேயரின் தோற்றம்தான் இங்கிருந்து சென்றிருக்கிறது. ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற பிளவுபடுத்தும் சிந்தனைகள் மாற பல ஆண்டுகள் ஆகும் என்பதால் அதைப்பற்றி கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன்' என்று கூறினார். பாரதம் என்றால் ஆன்மிகம், கலாசாரம் நிறைந்த பன்முகத்தன்மை கொண்ட நாடு. அதை புரிந்துகொள்ள இன்னும் நிறைய நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தவறான வரலாற்று கண்ணோட்டம் இந்தியாவில் இன்னும் இருக்கிறது. அதற்கு இதுபோன்ற அமைப்புகள் முன்வந்து விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்த வேண்டும். இன்னும் நம் நாட்டின் உண்மையான வரலாறு குறித்த ஆய்வுகள் நடத்த வேண்டும்.

நம் நாட்டுக்கு வெளிநாட்டவர்கள் வருவதற்கு முன்பு இந்தியா உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் முதல் இடத்தில் இருந்தது. உலக பொருளாதாரத்தில் 30 சதவிகித பொருளாதாரம் நம் நாட்டில்தான் இருந்தது. பிரென்ச், டச்சு, போர்த்துகீசியர்கள், பிரிட்டீஷ்காரர்கள் உள்ளிட்டோர் 150 ஆண்டுகளாக கம்பெனி நடத்தி இங்கிருந்து பொருளாதாரத்தை கொள்ளையடித்து கொண்டுபோய்விட்டனர். இதற்கு முன்பு பலரும் நம்மை ஆண்டார்கள், ஆனால் மேற்கத்தியர்கள் வந்த பிறகுதான் நம் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டது. நம் வரலாறு மாற்றி எழுதப்பட்டது, கலாசாரம் தவறாக பரப்பப்பட்டது. ஜாலியன்வாலாபாக் படுகொலை உள்ளிட்ட இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்த சமயத்தில் காமராஜர் அதை கண்டித்து இயக்கம் நடத்தினார். அந்த படுகொலையின் வேதனையை உணர்ந்துதான் அவர் போராட்டம் நடத்தினார். நம் நாட்டுக்கு ஒரு பாதிப்பு வந்தால் அனைவரும் ஒன்றிணைந்து நிற்கிறார்கள்.

உலகம் இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது. அதனால்தான் 2047 என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவை அனைத்து துறைகளிலும் முன்னேற்ற பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார். இந்தியா பொருளாதாரம், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பெரும் வளர்ச்சியை நோக்கி போய்கொண்டிருக்கிறது. இதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியம். வேற்றுமையில் ஒற்றுமைதான் நம் நாட்டின் பலம். ஆனால் வேற்றுமையை மேற்கத்தியர்கள் பிரிவினையாக சித்திரித்துவிட்டனர். இந்தியா என்ற குடும்பத்தில் நாம் அனைவரும் ஓர் அங்கம். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்கள், மாணவர்களின் பங்கு மிக அதிகமாக உள்ளது. அவர்கள் எதிர்கால இந்தியாவை கட்டமைப்பார்கள் என நம்புகிறேன்

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 07, 2023 4:07 pm

துப்பாக்கிக்கு துப்பாக்கியால் பதிலடி


தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களுடனும், நிரபராதிகளைக் கொல்பவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. துப்பாக்கியால்தான் அவர்களை எதிர்கொள்ள வேண்டும். ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு தாக்குதலில் இறந்த 300 பேரில் 200 பேர் பயங்கரவாதிகள்.

நாட்டுக்குள் இருக்கும் பிரிவினைவாத இயக்கங்களுக்கு எதிராக துப்பாக்கி ஏந்திப் போராட வேண்டும். தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயல்படுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய அவசியமில்லை. துப்பாக்கி ஏந்துபவர்களைத் துப்பாக்கியைக் கொண்டுதான் எதிர்கொள்ள வேண்டும். துப்பாக்கியைப் போட்டுவிட்டு சரணடைய வருபவர்களிடம் மட்டுமே பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ள வேண்டும். வன்முறையை எதிர்கொள்வதில் துளியும் சகிப்புத்தன்மை தேவை இல்லை.

அண்டை நாடுகள் நமக்கு நட்பு நாடுகளா அல்லது எதிரி நாடுகளா என்பதை உறுதி செய்வதில் தெளிவு வேண்டும். வெறும் 10 தீவிரவாதிகள் நம் நாட்டையே மிரளவைத்துக்கொண்டிருந்தனர். மும்பைத் தாக்குதல் நடந்து ஒன்பது மாதங்களில் அப்போதைய இந்திய பிரதமரும், பாகிஸ்தான் பிரதமரும் கூட்டு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டனர். அதில் இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளுமே தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவை என்று கூறப்பட்டிருந்தது. இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்... பாகிஸ்தான் நமக்கு நண்பரா, எதிரியா என்பதைத் தீர்மானித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கோவா ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, "மாவோயிஸ்டுகள் உள்ளிட்டவர்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக விடும் சவால்களைக் கண்டும் காணாததுபோல நடிக்க முடியாது. அரசியலமைப்பைவிட மதம் உயர்ந்தது என வாதிடுபவர்கள் உண்டு. நாங்கள் இந்த நட்டை ஏற்றுக்கொள்ள மாட்டோம், இறையாண்மையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுபவர்கள் உண்டு. அவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவற்றையெல்லாம் கடந்து தர்மத்தின் அடிப்படையில், நாட்டின் மகத்தான கலாசாரத்தை அனுசரித்து நம்மால் முன்னேற முடியும்

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 07, 2023 4:09 pm

திருவள்ளுவர் ஆன்மிகவாதி; ஜி.யூ.போப் மிஷனரி


திருவள்ளுவர் உள் ஒளி மிக்க ஆன்மீகவாதி. அவரது திருக்குறளின் முதல் குறளே ஆதிபகவன் பற்றி எழுதியிருக்கிறார். இந்த உலத்தை ஆதிபகவன்தான் படைத்தார். அதைத்தான் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் திருக்குறளை மொழிபெயர்த்த ஜி.யு.போப் அதில் உள்ள ஆன்மிக சிந்தனைகளை நீக்கிவிட்டார். மிஷனரியாக இந்தியாவிற்கு வந்த ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம் போல இருக்கிறது

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 07, 2023 4:12 pm

நம் தேச வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது காரல் மார்க்ஸ் சிந்தனை


பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் ஒருங்கிணைந்த மனிதநேயம் என்பது சனாதன ஆன்மிகத்தின் சமகால விளக்கமாகும். இது ஒவ்வோர் இந்தியரின் இதயத்திலும் ஆன்மாவிலும் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. இன்று நம் நாடு முன்னேறும்போது, தீன்தயாள் உபாத்யாயாவின் ஒருங்கிணைந்த மனிதநேயம் வெளிப்படுகிறது.

‘சனாதன தர்மம்’ என்பது விரிவானது. அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அனைத்தையும் உள்ளடக்கிய 'தர்மம்' என்று அழைக்கப்படும் பிரபஞ்ச சட்டத்தால் அனைவரும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பதாகும். இது சம்ஸ்கிருதத்தில் மட்டுமல்ல, நமது பண்டைய தமிழ்ப் பாடலான கணியன் பூங்குன்றனாரின் புறநானூறில்கூட `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரிகளில் காணப்படுகிறது.

‘தர்மம்’ என்ற சொல்லை ‘மதம்’ என்பதன் ஆங்கிலப் பொருளாகத் தவறாகப் புரிந்துகொண்டு, தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் மாபெரும் தவற்றைச் செய்துவிட்டோம். நாம் அனைவரும் கடைப்பிடிக்கவேண்டிய பிரபஞ்சத்தின் நித்திய சட்டம், தர்மம்.

பிரிட்டிஷ் ஆட்சி, பாரதத்தின் சமூகம், கலாசாரம் மற்றும் நாகரிகத்தின் அழிவை ஏற்படுத்தியது. சுதந்திரத்துக்குப் பிறகு, நம் நாட்டின் ஆன்மாவுக்குத் தக்கபடி நம் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், நாம் பாதை தொலைத்து அதே காலனித்துவ மனப்பான்மையைத் தொடர்ந்தோம். மேலும், நமது கொள்கைகள் மேற்கத்திய கருத்துகள் மற்றும் சித்தாந்தங்களை நோக்கியே பெரிதும் இருந்தன. பசி, படிப்பறிவற்ற, நோயாளிகள், ஏழைகள் எனப் பலர் நம்மிடையே இருந்தது, பிரச்னைகளை மேலும் தீவிரப்படுத்தியது. அது பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை விளைவித்தது. மிகவும் வளர்ந்த மாநிலங்களில்கூட, நமது தமிழ்நாடு உட்பட, மாநிலத்துக்குள்ளாகவே சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன.

நமது தேசிய வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவது நான்கு முக்கிய மேற்கத்திய சித்தாந்தங்கள். அவை இறையியல், டார்வீனிய கோட்பாடு, காரல் மார்க்ஸ் கோட்பாடு, ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாடு ஆகியவை.

வாழ்க்கையைப் பற்றிய மானுட மையக் கண்ணோட்டத்தை நம்பும் இறையியலில் மனிதர்கள் படைப்பின் மையமாக இருக்கின்றனர். மீதமுள்ள படைப்புகள் மனிதன் இன்புற்று அனுபவிக்கவே என கூறின. இயற்கை வளங்களைப் பொறுப்பற்ற முறையில் சுரண்டுதல், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே முரண்பட்ட நிலையை உருவாக்குதல், காலநிலை நெருக்கடியை விளைவித்தல் போன்றவை அவை.

மறுபுறம் பாரதிய தர்ஷன் என்பது, நாம் அனைவரும் படைப்பின் ஒரு பகுதியே என்றும், நாம் மனிதர்களாக இருந்தாலும், விலங்குகளாக இருந்தாலும், பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டிருக்கிறோம் என்று நம்புவது அல்லது நாம் அனைவரும் ஒரே தாய் பூமியின் குழந்தைகள் எனக் கருதுவதாகும்.

`வல்லோன் வாழ்வான்’ என்ற டார்வீனியக் கோட்பாட்டில் பலவீனமானவர்களுக்கு இருப்பதற்கான உரிமை இல்லை என்றும், வலிமையானவர்கள் மட்டுமே முன்னேறுவார்கள் என்றும் குறிப்பிட்டார். சரியோ, தவறோ என்ற உணர்வு இல்லாத காட்டாட்சி போன்றது அது. ஆனால், ‘பாரதிய தரிசனம்’ என்பது கருணையுடன் கூட்டாக உயிர்கள் வாழ்வதை நம்பியது.

காரல் மார்க்ஸின் கோட்பாடு என்பது, இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே நிரந்தர மோதல்ளைக்கொண்டது. அந்தக் கோட்பாட்டின்படி, 'இல்லாதவர்கள்' மேலோங்க வேண்டும். இந்த யோசனை வைரஸாகப் பரவுகிறது. இந்த மாதிரியானது வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையேயும், அதற்குள்ளும் பிளவுகளை உருவாக்கியது. இது சமூகத்தில் நிரந்தர மோதலைத் தூண்டியது.

ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாட்டில், அவர், ஒரு தனிநபர், ஒரு சமூகம், ஓர் அரசு ஆகியவற்றுக்கு இடையேயான தோற்றம் மற்றும் உறவை ஓர் `ஒப்பந்தமாக’ பார்த்தார். இது தனிநபரை முதன்மைப் பங்குதாரராகக் கருதுகிறது. கூட்டு, மாநிலங்கள் மற்றும் சமூகத்தைவிட, தனிநபரின் மேலாதிக்கத்தை அது ஆதரிக்கிறது. ஆறு பார்வைத்திறன் குறைபாடுடையவர்கள் கேட்ட ஒரு யானைக் கதைபோல, எல்லோரும் அதன் ஒரு பகுதியை மட்டுமே பார்த்தார்கள், யாரும் மொத்தமாகப் பார்க்கவில்லை.

நம் நாட்டில் பல படித்தவர்கள், எதற்கெடுத்தாலும் மேற்கத்திய சிந்தனைவாதிகள், தத்துவவாதிகள் போன்றோரை மேற்கோள்காட்டிப் பேசுகிறார்கள். மேற்கோள்காட்ட இந்த நாட்டிலிருந்து ஒருவர்கூட இல்லை எனக் கருதுகிறார்கள். "மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்துவது" என்ற ஜனநாயகம் பற்றிப் பேசும்போது ஆபிரகாம் லிங்கனை மேற்கோள் காட்டுவார்கள். ஆனால், அதே நபர் பெண்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. அதை மறந்துவிடுகிறார்கள். ஆனால், அடிமை முறையை ஒழித்ததற்காக லிங்கனைப் புகழ்கிறார்கள். இவையெல்லாம் பதிவுசெய்யப்பட்ட வரலாறு. இது நம் மனதில் ஆழமாக வேரூன்றிய காலனித்துவ சிந்தனையேயன்றி வேறில்லை.

இன்று, இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது. மேலும் ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாம் இருப்போம். மேலும், 2047-ம் ஆண்டில், உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறுவோம். முழு உலகமும் இந்தியாவின் நம்பகத்தன்மை வாய்ந்த கதையையும் வளர்ச்சியையும் பார்க்கிறது. இந்தியாவை உலகளாவிய மீட்சியின் இயங்கு சக்தியாகப் பார்க்கிறது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, உலகம் மந்தநிலை போன்ற சூழ்நிலையில் இருந்தது. ஆனால், இந்தியாவால் மட்டுமே வளர்ச்சிப் பயணத்தில் செல்ல முடிந்தது. உலக வல்லரசுகள் தடுப்பூசிகளை உற்பத்தி செய்தபோது, ​​அவை அந்த நிலைமையைக்கூட பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பாகப் பார்த்தன. ஆனால் இந்தியா, தனது சொந்தத் தடுப்பூசிகளை உருவாக்கி, அவற்றைக் கிட்டத்தட்ட 150 நாடுகளுக்கு இலவசமாக வழங்கியது. இந்தியாவின் தடுப்பூசிகள் இன்னும் உலகிலேயே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

இன்று, நாம் கருணை குணத்தோடு முழுமையாக மீண்டுவருகிறோம். இந்த மாற்றம் ஏற்படக் காரணம், நாம் நமது நாட்டைப் பார்க்கும்விதம் மாறியிருக்கிறது. முன்பெல்லாம் நாம் இந்த நாட்டை மேற்கத்திய கண்ணோட்டத்தில் பார்த்தோம். ஆனால் தொலைநோக்கு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேசியத் தலைமையின் கீழ், இன்று நம் நாட்டை ‘பாரதிய’ கண்ணோட்டத்தில் ஒரே குடும்பமாகப் பார்க்கிறோம். இதன் விளைவாக, நாம் அற்புதமான முடிவை எட்டுகிறோம்.

தூய்மையான எரிசக்தித்துறையில் சாதிக்கிறோம். மகளிர் சக்தி, கட்டுமானத்துறை வசதிகளை உருவாக்குகிறோம். விரிவான மற்றும் துணிச்சலான அணுகுமுறை அற்புதமான விளைவுக்கு வழிவகுக்கிறது. நாட்டின் பிரச்னையைத் துண்டு துண்டாக அல்லாமல், ஒட்டுமொத்தமாகப் பார்த்ததால்தான் இதை நாம் சாதித்தோம். தேசியத் தலைமை அழைப்பு விடுக்கும்போது, அது பாரதத்தின் ஆன்மாவைத் தொடுகிறது, ஒட்டுமொத்த தேசமும் நம்பிக்கை வைக்கிறது.

130 கோடி மக்களின் படைப்பு மற்றும் கூட்டு ஆற்றலுடன், இந்த ‘அமிர்த காலத்தில்’ தேசம் தனது இலக்கை நோக்கிப் பயணிக்கிறது. முன்னதாக, ஆளுகை மாடல் என்பது பிறரது அனுசரணையை அடிப்படையாகக்கொண்டிருந்தது. நம் மக்கள் கண்ணியத்துடன் வளரும்போதுதான் நமது பாரதம் வளரும், உலகம் பாதுகாப்பாக இருக்கும். அது இப்போது உறுதிப்படுத்தப்படுகிறது.

இளம் அறிஞர்கள் படிக்கவும், ஆராய்ச்சி செய்யவும், புத்தகங்கள், கட்டுரைகள், தலையங்கக் கட்டுரைகள் எழுதவும் முன்வர வேண்டும். நமது அறிவுசார் இடத்தை சிந்தனைக்கு உரமிட்டு காலனித்துவ மனப்பான்மையிலிருந்து வெளி வந்து, நாம் யார் என்பதைப் புரிந்துகொள்ளவும், ஆராயவும் புதிய சிந்தனைகளைத் தூண்டிவிடவும் வேண்டும்

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 07, 2023 4:14 pm

இந்தியா ரிஷிகளாலும், உபநிடதங்களாலும் உருவானது; தமிழ்நாடு ஆன்மிகம் நிறைந்த இடம்


விருதுநகர் மாவட்டம் எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களைத் தந்த மண். விடுதலைப் போராட்ட வீரம் நிறைந்த மண் மட்டுமல்லாது, சிறந்த ஆன்மிகத் தலங்கள் நிறைந்த மண்ணாகவும் விருதுநகர் மாவட்டம் விளங்குகிறது. இத்தகைய ஆன்மிக பூமியில் வாழும் மக்களை நான் மனம் திறந்து பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். இதைத்தான் `வேதம் நிறைந்த தமிழ்நாடு, வீரம் செறிந்த தமிழ்நாடு' என பாரதியார் தன் பாடலில் குறிப்பிட்டிருக்கிறார். கல்லூரியின் 50-வது ஆண்டு பொன்விழா என்பது நாம் கடந்து வந்த பாதையும், இனி கடக்கப் போகும் எதிர்காலப் பாதையும் நினைத்துப் பார்க்கக்கூடிய இடமாகும். விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுக்கால நேரத்தில் நமது நாடும், சமூகமும் பலதரப்பட்ட முகங்களாக மாறியிருக்கின்றன. நாட்டில் வளர்ச்சிக்குப் பல்வேறு காரணிகள் உந்துதலாக இருந்திருக்கின்றன.

அந்த வகையில் விவசாயம் மட்டும் தனியே நம் நாட்டின் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்க முடியாது. தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் விவசாயத்தோடு சேர்ந்து தகவல் தொழில்நுட்பமும் நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்துக்கும் முக்கிய பங்காற்றுகிறது. தகவல் தொழில்நுட்பத்துறையில் நம்நாடு ஆகப்பெரும் முன்னேற்றங்களை அடைந்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சிறந்த தொழில்நுட்பங்களை நமது விஞ்ஞானிகள் வடிவமைத்திருக்கின்றனர். இன்று உலகிலேயே மிகவும் அதிக அளவில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நாடாக இந்தியா திகழ்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக செல்போன் தரவு தகவல்கள் வழங்குவதில் ஒட்டுமொத்த உலகில், இந்தியாவின் பங்களிப்பு வெறும் இரண்டு சதவிகிதமாக இருந்தது. ஆனால், இன்று அந்த மதிப்பு 24 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது.

'இந்தியா ரிஷிகளாலும், உபநிடதங்களாலும் உருவானது; தமிழ்நாடு ஆன்மிகம் நிறைந்த இடம்' - ஆளுநர் ரவி
கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு வீழ்ந்துவிட்ட பொருளாதாரத்தைச் சரிசெய்ய பல நாடுகளும் முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றன. ஆனால் நமது நாடு, வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து கட்டமைப்பதில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. அந்த வகையில் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கியக் காரணியாக இந்தியா பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாது அறிவியல் தொழில்நுட்பத்துறையிலும் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிதாகத் தொழில் ஆரம்பிப்பது, புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதே சமயம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத கண்டுபிடிப்புகளையும் இந்தியா உருவாக்குகிறது. நமது நாட்டின் வளர்ச்சி இளைஞர்களிடம் இருக்கிறது. நாட்டின் அசுரத்தனமான வளர்ச்சிக்கு இளைஞர்களின் அறிவும் ஆற்றலும் முக்கிய பங்காற்றுகிறது என்பதை மறுக்க முடியாது.

கடந்த காலங்களில் வெளியுறவுக் கொள்கை, கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதி, கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் இந்தியா போதுமான தன்னிறைவு நிலையை அடையாமல் இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அரசாங்கம் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. தொடர்ச்சியாக நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் நிலையையும் உயர்த்துவதற்காகத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திவருகிறது. வீடு இல்லாதவர்களுக்கு வீடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களைச் சேமிப்பது, புதிய தொழில் உருவாக்குதல், சுகாதாரம், கல்வி, தண்ணீர் என அனைத்து வசதிகளையும் அரசு திறம்பட செய்துவருகிறது. அதே வேளையில் வளர்ச்சிக்கு ஏற்றவாறு பிரச்னைகளும் பெருகி வருவதைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. பிரச்னைகளைக் கையாளும் விதம் மற்றும் அவற்றை அடிப்படையிலிருந்து சரி செய்வதில் இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் செயல்படுகிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அவர்களின் ஆளுமை வசதிக்காக இந்தியாவை மொழி, இனம், மக்கள், நிலப்பரப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பலவேறு மாகாணங்களாகப் பிரித்தனர். நாம் கடந்து வந்த பாதையை கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்தியாவை உருவாக்கியது எந்த ராஜாவும், மகாராஜாவும் அல்ல. ஐரோப்பா கண்டங்களிலுள்ள நாடுகளை மட்டுமே அரச வழித்தோன்றல்கள் உருவாக்கியதாக வரலாறுகள் உண்டு. ஆனால் இந்தியா, அரசர்கள் உருவாக்கிய நாடு என எந்த வரலாறும் கிடையாது. இந்தியா ரிஷிகளாலும், வேத உபநிடதங்களாலும் உருவான நாடு.

வேதங்கள் உருவாவதற்கு முன்பிருந்தே இந்தியா ஆன்மிக நாடாக திகழ்ந்து வந்திருக்கிறது. ஏன் தமிழ்நாடுகூட ஆன்மிகம் நிறைந்த நாடுதான். எடுத்துக்காட்டாக நாயன்மார்கள், ஆழ்வார்கள், சங்கம் வளர்த்தவர்கள், பண்டிதர்கள் என பலதரப்பட்ட நபர்களையும் கொண்டதுதான் தமிழ்நாடு. இதுதான் பாரதம். பாரதத்தில் 'பா' என்பது ஆன்மிக ஒளி, 'ரத்' என்பது ஒளிவட்டமாகும். இதுதான் நம்மை மேன்மக்களாக வழிநடத்தி வருகிறது. நாட்டின் நான்கு திசைகளிலும் பரவி நம்மை கலாசாரத்திலும் பண்பாட்டிலும் அறிவிலும் வளர்ச்சியிலும் சிறந்தவர்களாக வெளிக்காட்டுவதற்கு உதவுகிறது.

1956-ம் ஆண்டுக்கு முன்னதாக நமது நாட்டில் புலம்பெயர்ந்தவர்கள் என்று எந்த அடையாளமும் கிடையாது. அனைவரும் ஒரு தாய் மக்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலைதான் இருந்தது. இந்தியாவிலுள்ள காசியில்கூட 40,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்கள் ஒருநாளும் தங்களைப் புலப்பெயர்ந்தவர்கள் என்று கூறியது கிடையாது. உண்மையில் புலம்பெயர்ந்தவர்கள் தாங்கள் போய்ச் சேர்ந்த நிலத்தின் வளர்ச்சிக்காக உழைப்பைக் கொடுக்கின்றனர். அங்குள்ள மக்களுக்கு ஆதரவு தருகின்றனர். உள்ளூர் வளர்ச்சியை ஏற்படுத்துகின்றனர். மக்களை அரவணைக்கின்றனர். புலம்பெயர்ந்தவர்கள் என்ற சொல்லை ஏற்படுத்தி நமக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது பிரிட்டிஷார்தான். அருவருக்கத்தக்க அந்தச் சொல்லை சிலர் பிடித்துக்கொண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காகவும் அவர்களின் நயவஞ்சகப் பேச்சை நம்பியும் மக்களுக்குள் பிரிவினைவாதத்தை வளர்த்து அதில் கிடைத்த பலனுக்காக மயங்கிக் கிடந்தனர். இதனால் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்த நம்முடைய போராட்டம் பல சமயங்களில் பலவீனமடைந்தது.

உலகளவில் இந்தியாவின் வளர்ச்சி பொருளாதார உயர்வு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு `ஜி20' மாநாட்டை தலைமை தாங்கும் பொறுப்பு இந்தியாவிடம் வந்து சேர்ந்திருக்கிறது. இதன் மூலமாக ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கொள்கையே இந்தியா முன்வைக்க விரும்புகிறது. நாட்டின் வேகமான வளர்ச்சிக்குப் பெண் சக்தியும் முக்கிய பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. கடந்த கால புள்ளி விவரங்களின் படி ஆயிரம் ஆண்களுக்கு 956 பெண்கள் என்ற நிலையை இருந்து வந்தது. ஆனால் அரசு, பெண் குழந்தைகளை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள், பெண் குழந்தைகளைப் பேணி காப்பதற்கான அறிவிப்புகள் மூலம் பெண்கள் கல்வி, முன்னேற்றம் ஆகியவை மேம்படுத்தப்பட்டு தற்போது இந்தியாவில் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது. தற்போது திருத்தியமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஆண்களைவிட குறைந்தபட்சம் 15,000 பெண் வாக்காளர்கள் அதிகமாக இருப்பதைக் காணலாம்.

அது மட்டுமல்ல, பெண்கள் என்றால் குறிப்பிட்ட சில வேலைகளுக்கு மட்டுமே பொருத்தமாக இருப்பார்கள் என்ற நிலையையும் உடைத்தெறிந்து, இன்று பாதுகாப்புத்துறையில் ஜெட் ரக போர் விமானங்கள் மற்றும் உயர் பொறுப்புகளுக்கும் வந்து மெய்சிலிர்க்க வைக்கின்றனர். அதுமட்டுமல்லாது தற்போது நவீன யுகத்தில் கணினி வழியாக நடைபெறும் தகவல் தொழில்நுட்பத் திருட்டுக்கு எதிரான போரிலும் பெண்களின் பங்கு முக்கியப் பங்காற்றுகிறது.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 07, 2023 4:16 pm

பிரதமர், பாரதத்தின் கண்ணோட்டத்தில் நமது மக்களையும் நிலத்தையும் காண்கிறார்


2047-ம் ஆண்டுக்குள் பாரதத்தின் மறுமலர்ச்சிக்கு 'ஒரே பாரதம், உன்னத பாரதத்தை' மீட்டெடுக்க வேண்டியது அவசியம். நமது ரிஷிகள், முனிவர்கள், யோகிகளால் உருவாக்கப்பட்ட கலாசார, நாகரிக பரிணாம வளர்ச்சியாகத்தான் பாரதம் இருக்கிறது.

மாமல்லபுரத்தின் பல்லவ மன்னன், அறிவைத் தேடி நாலந்தாவுக்குச் சென்று போதிதர்மனாக மாறி, பெளத்த மதத்தை சீனாவுக்குக் கொண்டுசென்றது பாரதத்தின் ஒருமைப்பாட்டை குறிப்பிடுகிறது. மேலும், அங்கே ஷாலின் மடங்களை நிறுவி, குங் ஃபூவை சீனாவுக்கு அறிமுகப்படுத்தினார். சிட்டகாங்க் பகுதி அந்தக் காலத்தில் பௌத்த ஆய்வு மையமாகத் திகழ்ந்தது. ராமேஸ்வரம் வந்து காஞ்சிபுரத்தில் தங்கி, பிறகு அங்கிருந்து காசி சென்ற அசாம் மகரிஷி சங்கர் தேவ், பல சத்திரங்களை நிறுவியவர்.

சமுதாயம் ஒன்றாக இருந்ததால், மன்னர்கள், ஆட்சியாளர்களைப் பற்றி கவலைப்படாமல் அவர்கள் இந்தப் பெரிய நிலத்தைக் கடந்துசென்றனர்.

ஒரே பாரதத்தின் உணர்வையும் ஆன்மாவையும் பிரதிபலிக்கும் சமூக ஆதரவுடன் செயல்பட்ட அறநிலைய மானியங்கள், அந்த நிலத்தில் வாழும் சமூகத்தால் பராமரிக்கப்பட்டன. நமது பண்டிகைகள் (சங்கராந்தி, பொங்கல், பிஹு, லோஹ்ரி போன்றவை), நடனங்கள், நாட்டுப்புற பாடல்கள், கதைகள் அனைத்தும் இந்த ஒற்றுமையைப் பிரதிபலிக்கின்றன. கன்னியாகுமரியாக இருந்தாலும் சரி, காம்ரூப் ஆக இருந்தாலும் சரி, பூமி அன்னைக்கு மக்கள் மரியாதை செய்யும் வழக்கத்தை ஒரே மாதிரியாகவே கொண்டிருந்தார்கள்.

ஒரு மரத்தில் இரண்டு இலைகள் ஒரே மாதிரி இருக்காது. ஒரு மரத்தை அதன் இலைகள் வழியாகப் பார்த்தால், வேறுபாடுகள் மட்டுமே தோன்றும். ஆனால், மரத்தை ஓர் இயற்கை மூலமாகப் பார்த்தால், புற அளவில் தோன்றும் வேறுபாடுகளின் அளவு குறையும். உலகளாவிய ஒருமைப்பாட்டின் நமது சனாதன அத்யதம் மனிதர்களை மட்டுமல்ல, விலங்குகள், உயிரற்ற பொருள்களையும் உள்ளடக்கியது. நமது புற வேறுபாடுகளுடன், நாம் ஒற்றுமையாக இணைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், அத்தகைய கண்ணோட்டம் மேற்கு நாடுகளில் இல்லை.

அங்கே ராஜ்ஜியங்கள் வலுவான அரசர்களால் உருவாக்கப்பட்டன. அவர்கள் பிரதேசங்களைக் கைப்பற்றி, இணைத்து பேரரசுகளை ஒருங்கிணைத்தனர். 1757-ம் ஆண்டு பெங்காலைக் கைப்பற்றிய பிறகு பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள், இந்தப் பெரிய நிலத்தை துண்டு துண்டாக்கத் தொடங்கினர். 'இன்னர் லைன் பெர்மிட்' போன்ற விதிகள் மூலம் இந்தியாவின் வட கிழக்கை பாரதத்தின் மற்ற பகுதிகளிலிருந்து துண்டித்தனர். தவறான கதைகளைப் புனைந்து, அவர்கள் மக்களைப் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தினர். அது நம் மக்களை உள்நாட்டிலேயே அந்நியர்களாக ஆக்கியது.

பாதிரியார் கிளார்க் போன்ற மிஷனரிகள் நற்செய்தியை ஊக்குவிக்கவும், காலனித்துவ ஆட்சியை நிலைநிறுத்தவும் வந்தாலும், அவர்கள் ஒரு முழுமையான கலாசார, நாகரிக தொடர்பை ஏற்படுத்தவில்லை. வடகிழக்கை மேலும் துண்டாடினார்கள். மாறுபாடுகளை வேறுபாடுகளாகக் காட்ட மானுடவியல் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. நமது அரசியலமைப்பு விதி ஒன்று கூட பாரதம் என்றே இந்தியாவை அறிமுகப்படுத்துகிறது. ஆங்கிலேயர்கள் சென்ற பிறகும் நாம் தவறுகளைத் திருத்தவில்லை.

இந்தப் பெரிய நிலத்தைப் புவியியல் ரீதியாகவும், நமது பன்முகத்தன்மையை வேறுபாடுகளாகவும் தொடர்ந்து பார்த்தோம். துரதிருஷ்டவசமாக, அரசியல் எல்லைகள், கலாசார தொடர்ச்சியை 'மோசமாக' பாதித்தன. இன்று, ஒரு பிராந்தியத்தின் கலாசாரம் மாநிலத்தின் கலாசாரமாக மாறியிருக்கிறது. இது பாரதத்தின் ஒருமைப்பாட்டுக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கலாசாரம் என்பது ஒரு சமூகத்தின் தன்மை, அரசியல் எல்லைகள், நிர்வாக நோக்கங்களுக்காக மட்டுமே.

பாரதம் மாநிலங்களைவிட மிகவும் முன்னதாக வந்தது. இதன் விளைவாக, மாநிலங்களுக்குள்ளும் கூட பல மோதல்கள் தோன்றின. நாம் நமது பன்முகத்தன்மையை வேறுபாடுகளாகப் பார்த்தோம். நமது தேசம் இயற்கையாகவே அமைந்த ஒருமையாகும். இது ஒப்பந்த அடிப்படையிலான அமெரிக்காவின் கூட்டாட்சி முறையைப்போல கிடையாது. நமது மாநிலங்கள் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டவை. ஆனால், அதன் அடிநாதத்தில் பாரதம் மற்றும் அதன் ஆன்மா புதைந்து கிடக்கிறது. பிரதமர் பாரதத்தின் கண்ணோட்டத்தில் நமது மக்களையும் நிலத்தையும் காண்கிறார். இன்று, நம் நாட்டைப் பற்றிய நமது பார்வை மாறிவிட்டது.

இந்த நிலத்தை ஒரே குடும்பமாகப் பார்க்கிறோம். எல்லோரும் அதில் அங்கம் வகிக்கும் ஓர் உறுப்பினராகவும், அவர்கள் ஒவ்வொருவரின் பிரச்னையை முழு குடும்பத்தின் பிரச்னையாகவும் கருதுகிறோம். இன்று, பிரச்னைகளுக்கு விரிவான வகையில் தீர்வு காணப்படுகிறது. கல்வி, சுகாதார வசதிகள், உள்கட்டமைப்பு, குடிநீர், சமையல் எரிவாயு, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்றடைகின்றன. அந்தச் செல்பாடுகள் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கின்றன. அனைவரும் வளரும்போதுதான் நமது தேசம் வளரும்.

நம் தேசம் அமிர்த காலகட்டத்தில் இருக்கிறது, இந்தத் தேசத்தைத் தகுதியான இடத்துக்குக் கொண்டுசெல்லும் கடமை அனைத்து குடிமக்களுக்கும் இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சிறந்து விளங்கும்போதுதான் உன்னத பாரதத்தை அடைய முடியும். இளைஞர்கள் சவால்களைத் துணிந்து எதிர்கொண்டு தோல்வியைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டாம். தோல்வி என்பது நமது கற்றலின் ஒரு பகுதி. நமது தோல்விகளால் நாம் தோற்கடிக்கப்படும் வரை அந்தத் தோல்வியே இறுதியானது அல்ல

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 08, 2023 1:20 am

போராட்டத்துக்கு நிதி: 'ஆளுநர் பேசியதில் என்ன தவறு?' - ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் பேட்டி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை முடக்கத்தில் வெளிநாட்டு சதி இருக்கிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். அவரது பேச்சு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராளிகள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் இன்று தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினர். துளசி அறக்கட்டளையைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் பேசும்போது "நாங்கள் 20 ஆண்டுகளாக சொல்லி வருவதைத் தான் ஆளுநர் இப்போது சொல்லி இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பி., ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம் இதே கருத்தை சொல்லி இருக்கிறது.

தூத்துக்குடியை சேர்ந்த ஒரு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளருக்கு வெளிநாட்டு நிறுவனத்துடன் தொடர்பு இருப்பதாகவும் சொல்லி இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் வெளிநாட்டைச் சேர்ந்த அதர் மீடியா என்கிற நிறுவனத்தை சேர்ந்த ஒரு குழுவினர் தூத்துக்குடி வந்துள்ளனர். அவர்கள் இங்கு உள்ள ஆலைக்கு எதிரான போராளிகளைச் சந்தித்து பேசி இருக்கிறார்கள். அப்போது பெரிய அளவிலான பண பேரம் நடந்துள்ளது. அதற்கு பிறகு தான் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் சூடு பிடித்தது. கடைசியில் துப்பாக்கிச் சூட்டில் போராட்டம் முடிந்தது.

நாங்கள் இருபது ஆண்டுகளாகச் சொல்லி வருவதை ஆளுநர் இப்போது சொல்லி இருக்கிறார். எனவே தூத்துக்குடி வளர்ச்சிக்கு துணையாக இருந்த ஆலையை மூடக் காரணமாக இருந்த போராளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 13, 2023 9:34 pm

இங்கே இந்தியை திணிக்க முடியாது; சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமையான மொழி’: ஆளுனர் ஆர்.என் ரவி

கிண்டி ராஜ்பவன் தர்பார் ஹாலில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. ஆளுநர் #ஆர்_என்_ரவி தலைமையில், பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவ மாணவியருடன் ‘தமிழ்நாடு தர்ஷன்’ எனும் தலைப்பில் நடந்த கலந்துரையாடல் ஆகும்.

இதற்கு பனாரஸ் பல்கலைக்கழகத்திலிருந்து 18 மாணவ – மாணவியர் மற்றும் இரண்டு பேராசிரியர்கள் தமிழ்நாடு வந்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் பேசிய ஆளுநர், “இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசார தலைநகராக தமிழ்நாட்டிற்கு 3,500 ஆண்டுகள் வரலாற்றை கொண்டுள்ளது. இந்தி மொழியைவிட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ராஜ்பவன் சார்பில் அவர்களுக்கு தமிழ் தரிசனம் நிகழ்ச்சி பாரம்பரியமாக இனி நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

2047 ஆம் ஆண்டு இந்தியா முழுமையான வளர்ச்சி அடைந்த நாடாகவும், உலகிற்கு தலைமை ஏற்கும் நாடாகவும் விளங்கும் என்றும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் இளங்கலை பயிலும் மாணவர்கள் நிச்சயம் உயர்க்கல்வியை தமிழில் பயில வேண்டும் என்றும் மாணவர்களிடம் அவர் வேண்டுகோள் வைத்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 05, 2023 10:16 am

கடந்தவாரம் தமிழக ஆளுநரும் முதல்வரும் ஒருசேர டெல்லி சென்றார்கள், ஆளுநர் உள்துறை அமைச்சரை சந்தித்ததாக செய்திகள் வந்தன, முதல்வர் குடியரசு தலைவரை சந்தித்ததாக படங்கள் வந்தன‌

இதற்கு பின் ஆளுநரின் அதிரடி தொடங்கியது, ஏற்கனவே தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இருக்கும் முறுகல் இதனால் கொதிநிலையினை எட்டியிருக்கின்றது

சில வருமானவரி சோதனைகளுக்கு பின் ஆளுநர் "டைம்ஸ் ஆப் இந்தியா" இதழுக்கு கொடுத்த பேட்டிதான் இப்போது திமுகவினரை 100 டிகிரிக்கு கொதிக்க வைத்திருக்கின்றது

"திராவிட மாடல் காலாவதியானது" என தொடங்கி தமிழக அரசின் பல குழப்பங்களை அவர் தன் பேட்டியில் சொல்லியிருக்கின்றார், தமிழக ஊடகங்களில் அவை மறைக்கபட்டாலும் இந்தியா முழுக்க பரவிவிட்டது

திமுக கடும் கொந்தளிப்பில் பேச தொடங்கியிருக்கின்றது, ஆனால் இம்முறை அவர்களின் கூட்டணி ஏதும் வாய்திறக்கவில்லை என்பது கவனிக்கதக்கது

திமுகவின் கூட்டணிகளெல்லாம் தனித்து விலகி நிற்பது போல் நிற்கின்றன, திமுக களத்தில் ராவணனை போல தனியே நிற்கின்றது

ஆளுநர் தேர்ந்த ராஜதந்திரி, சில விஷயங்களை திமுகவினர் வாயாலே சொல்ல வைக்கும் நுணுக்கத்தில் அடிக்கடி ஆடுவார், அப்படி வெற்றியும் பெறுவார்

கவனியுங்கள் இதே ஆளுநர் முன்பு தமிழ்நாட்டை தமிழகம் என சொன்னார் உடனே உபிக்கள் பொங்கினர்

இப்போது "திராவிட மாடல்" என்பது பிரிவினைவாதம், இது ஒரே நாடு என சொல்லிவிட்டார்

உடனே உபிக்கள் வழக்கம் போல , இது ஒரே நாடு அல்ல இது சோழநாடு பாண்டியநாடு என்றிருந்த நாடு அதனால் ஒரே நாடு என கவர்னர் சொன்னதை ஏற்க முடியாது என பொங்கிவிட்டன‌

கவர்னர் புன்னகைப்பது இங்குதான்

முதலாவது கவர்னர் சொன்னபடி உபிக்கள் பிரிவினைவாதிகள்தான், ஒரே இந்தியாவினை அவர்கள் ஏற்கவில்லை

இரண்டாவது சோழநாடு, பாண்டியநாடு என்ற தேசங்கள் இருந்ததே தவிர திராவிட நாடு, தமிழ்நாடு என்றோரு பகுதிகளே இல்லை

இதனை உபிக்களே ஒப்புகொள்ளுபடி, அவர்கள் வாயாலே சொல்லும்படி செய்துவிட்டார் ஆளுநர்

ஆக இனி சோழமாடல், பாண்டிய மாடல், சேர மாடல் என்றுதான் உபிக்கள் சொல்ல வேண்டும் ஏனென்றால் திராவிட நாடோ தமிழ்நாடோ வரலாற்றில் இல்லை என்பதை அவர்கள்தான் இப்போது சொல்கின்றார்கள், அவர்களை சரியாக சொல்ல வைத்திருக்கின்றார் ஆளுநர்

#பிரம்ம_ரிஷியார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக