புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_lcapஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_voting_barஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_rcap 
32 Posts - 82%
heezulia
அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_lcapஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_voting_barஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_rcap 
5 Posts - 13%
viyasan
அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_lcapஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_voting_barஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_lcapஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_voting_barஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_lcapஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_voting_barஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_rcap 
209 Posts - 41%
heezulia
அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_lcapஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_voting_barஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_lcapஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_voting_barஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_lcapஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_voting_barஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_lcapஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_voting_barஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_lcapஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_voting_barஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_lcapஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_voting_barஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_lcapஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_voting_barஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_lcapஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_voting_barஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_lcapஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_voting_barஅதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 26 Sep 2023 - 23:00


அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் 2moAwGS

அதிமுக பாஜக கூட்டணி முறிந்துவிட்டது இனி கூட்டணி இல்லை என அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது.

இது உக்ரைன் ரஷ்ய போரை நிறுத்தாது, இந்திய பங்கு சந்தைகளை பாதிக்காது, சீன எல்லையில் பரபரப்பை உண்டு செய்யாது அப்படியே அகில இந்திய தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தாது.

1967ல் இருந்து ஏகபட்ட கூட்டணிகளை கண்ட தமிழகம் இது, ஆளாளுக்கு கூட்டணிகளை மாற்றிகொண்டே இருப்பார்கள்.

பிராமண எதிர்ப்பை காட்டிய திமுக ராஜாஜியோடு கூட்டு சேர்ந்தது, இந்திராவும் கருணாநிதியும்  கூட்டணி அமைத்தார்கள், இந்திரா எம்ஜிஆர், ராஜிவ் ஜெயலலிதா, வாஜ்பாய் கருணாநிதி பின் சோனியா கருணாநிதி என எவ்வளவோ கூட்டணிகள் கண்ட தமிழகம் இது.

அதனால் இதெல்லாம் வழமை ஆச்சரியபட ஒன்றுமில்லை.

பொதுவாக கூட்டணிகள் அமையும் போது கால சூழலை அவசியம் காணவேண்டும், அதுதான் கூட்டணிகளின் பலனை நிர்ணயிக்கும்.

முன்பு வலுவான தேசிய தலமை வலுவான கட்சி தலமை டெல்லியில் இல்லா காலங்களில், தமிழக எம்பிக்கள் பலம் ஆட்சி அமைக்க அவசியம் என ஒரு காலம் இருந்த காலங்களில் இந்த கூட்டணிகள் முக்கியத்துவம் பெற்றன‌.

இப்போது அப்படி அல்ல, இன்றைய பெரும் சக்தி பாஜகவுக்கு தமிழக எம்பிக்கள் அதாவது திமுக, அதிமுக எம்பிக்கள் அவசியமே இல்லை எனும் வகையில் அவர்கள் பெரும் பலமாக நிற்கின்றார்கள்.

இப்போது அதிமுக வேண்டாம் என சொல்லும் நிலையில் பாஜகதான் பலமாக இருக்கின்றது, ஆனால் அதிமுக வாயால் சொல்ல வைத்துவிட்டார்கள்.

இதனால் யாருக்கு லாபம் என்றால் அது பின்னர்தான் தெரியும் முதல் நஷ்ட கணக்கு திமுகவிற்கு, அதுதான் இங்கே சரியான கணக்கு.

சுமார் 20 ஆண்டுகாலம் காங்கிரஸோடு வலுவான கூட்டணி வைத்த கட்சி திமுக, அதோடு கம்யூனிஸ்டுகள் உதிரி கட்சிகள் என அதன் பலம் அதிகம்.

மிக முக்கியமாக கடந்த  சில ஆண்டுகளாக சிறுபான்மை வாக்குகளை தனியே அள்ளி சென்ற கட்சி திமுக‌.

இப்போது அதற்குத்தான்  வெடி விழுந்திருக்கின்றது.

எப்போதுமே காங்கிரஸின் விருப்பமான கட்சி அதிமுகதான், திமுக அளவு இந்து வெறுப்பு தேசிய வெறுப்பு இல்லா கட்சி அது, இன்னொன்று கொஞ்சம் சம்பாதிக்கவும் விடுவார்கள் பெரிய கடிவாளமெல்லாம் இடமாட்டார்கள்.

இப்போது வேறுவழியில்லாமலே காங்கிரசும் இதர கட்சிகளும் பெரும் அவமானத்துகிடையில் திமுகவில் நீடிக்கின்றன, உதயநிதி சபரீசன் என பல கோஷ்டிகள், செந்தில்பாலாஜி விவகாரம் என அவை எல்லாம் பெரு ம் கடுப்பில் இருக்கின்றன‌.

இதுகாலம் பாஜக இருந்ததால் அதிமுக பக்கம் அவை தாவ முடியவில்லை அந்த விலங்கு இப்போது உடைந்திருக்கின்றது.

அப்படியே சிறுபான்மை கோஷ்டிகளுக்கும் திமுக முழு விருப்பம் அல்ல, திமுகவினரின் ஊழல்,சுரண்டல், அடாவடி லீலைகள் அப்படி.

இதனால் இனி அவைகளும் கணகளை திருப்பும்.

இப்படி பல விதங்களில் திமுக பலமிழக்கும், கூட்டணி இழப்பு சிறுபான்மை வாக்கு இழப்பு என பலத்த சேதம் அங்கே விழும்.

இப்படி இருபக்கமும் வாக்குகளை பிரிக்கும் போது பாஜகவுக்கு சில அனுகூலங்களை கொடுக்கும்.

காங்கிரஸ் பலவீனபட்டிருந்தாலும் அதற்கு ஒரு குறிப்பிடதக்க வாக்குவங்கி இன்றும் தமிழகத்தில் உண்டு, திமுக காங்கிரஸ் இல்லாத காலங்களில் பெருவெற்றி எதையும் பெற்றதில்லை என்பது வரலாறு.

காங்கிரஸ் என்ன முடிவெடுக்கும் என்பது தெரியவில்லை, ஆனால் இது அரசியல் காங்கிரசுக்கும் அதன் கட்சி முக்கியம் வளர்ச்சியும் நிலைப்பும் முக்கியம்.

அங்கும் அனுபவம் வாய்ந்தவர்கள் உண்டு, கிடைத்த வாய்ப்பில் பழைய அதிமுக காங்கிரஸ் உறவை மிக இறுக்கமாக்க அவர்கள் முயற்சிக்கலாம்.

காங்கிரஸுக்கு அதிமுகதான் விருப்ப கட்சி, அதன் கடந்தகால தரவுகள்படி நீண்டகால கூட்டணி அதுதான், ஜெயாவுக்கும் சோனியாவுக்கும் முறுகல் வந்த காலங்களில்தான் திமுக பக்கம் வந்தார்கள் மற்றபடி திமுக அவர்களின் மனமார்ந்த கூட்டணி அல்ல‌

இதனால் திமுக இனி கொஞ்சம் நெருக்கடிக்குள்ளாகும். காங்கிரஸ் நகர்ந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக கூட்டணிக்கு மதிமுக, சிறுத்தை, கமலஹாசனார் செல்ல வாய்ப்பு உண்டு.

அதிமுக வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கின்றது, ஒரு வெற்றியினை காட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள், பாஜகவும் இல்லா இடத்தில் பழிசொல்லவும் யாருமில்லை, இனி வெல்லாவிட்டால் கட்சி எழமுடியாதவாறு சரிந்தே விடும்.

இதனால் சீட்டுக்களை அள்ளி கொடுப்பார்கள், பெரும் கூட்டணி அமைப்பார்கள் எல்லா பலமும் காட்டுவார்கள் அது இயல்பு.

பாஜகவினை பொறுத்த்வரை அது புன்னகைக்கின்றது, அவர்களின் பெரும் எதிரி காங்கிரஸ், அந்த அகில இந்திய கூட்டணியில் இருந்து திமுகவினை விலக்குவது அவர்களுக்கு  வெற்றி.

தேசிய அளவில் காங்கிரஸை பலவீனபடுத்துவதில் வெற்றியினை நெருங்கிவிட்டார்கள்.

இனி பாஜக தமிழகத்தில் சில நாட்கள் அமைதிகாக்கும், பசும்பொன் தேவரை பற்றி அண்ணாமலை பேசியதெல்லாம் மிக திட்டமிட்டபட்ட துல்லியமான அரசியல்.

எல்லாம் கணித்து சரியாக அரசியல் செய்துவிட்டார், இனி சில கூட்டணிகளை அமைத்தால் பொதும் தெற்கே அதிமுக வரவே முடியாது, பாஜகவுக்கு ஒரு பலம் கிடைக்கும்.

ஆக எப்படிபார்த்தாலும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் பெரும் காரியத்தை பாஜக செய்திருக்கின்றது.

இதனாலே திமுக தரப்பு பெரும் மவுனத்தில் இருக்கின்றது, பாஜக இல்லாத அதிமுக பக்கம் செல்லும் தன் கூட்டணிகளை தடுப்பது எளிதாக அவர்களுக்கு இராது.

இப்போதைக்கு பாஜகவுக்கு அனுகூலம், திமுகவுக்கு கொஞ்சம் பதற்றம், அதிமுகவுக்கு வாழ்வா சாவா போராட்டம் என்பதை தாண்டி எதுவும் சொல்லமுடியாது, சில நாட்கள் கழிந்து தேர்ந்தல் நெருங்க நெருங்க காட்சிகள் மாறும்.

அதுவரை தமிழக ஊடகங்கள், யூ டியூபர்களுக்கு பொழுது போகும், ஏதாவது பேசி சிரித்து பரபரப்பு என சம்பாதிப்பார்கள் அதை தாண்டி ஒன்றும் நடக்காது.

ஆனால் அண்ணாமலை என்பவரின் கரங்களை, வார்த்த வீச்சுக்களை இனி அதிமுக பகிரங்கமாக எதிர்கொள்ள வேண்டும் , சில அதிமுக பிம்பங்கள் சுக்குநூறாக உடைக்கபடலாம்
மத்தியில் பலம் கொண்ட அரசு பாஜக என்பதால் பழனிச்சாமிக்கு  ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு நிலைவருமா என்பதை இப்போதே சொல்லமுடியாது ஆனால் வாய்ப்பு உண்டு அதுதான் அரசியல்.

ஆக சில விஷயங்களை காலம்தான் சொல்லவேண்டும் என்றாலும் இப்பொது தெரியும் விஷயம் இதுதான்.

இனி சிறுபான்மை வாக்குகள் சிதறும், அதுவும் பாஜகவுக்கு அனுகூலம்.

திமுக கூட்டணி அசையும், திமுகவின் பலம் குறையும் அதுவும் பாஜ்கவுக்கே சாதகம்.

இதுவரை காணாத பல அதிரடி காட்சிகளை தமிழக மாகாணம் இனி காணும், இதுகாலம் கட்டமைக்கபட்ட பொய்பிம்பமெல்லாம் இனி சிதறும்.

சுமார் 50 ஆண்டுகள் இருந்த ஒரு சமநிலை தமிழகத்தில் உடைகின்றது, முதன் முறையாக உடைகின்றது, எப்போதுமே ஒரு சமநிலை உடையும் போது கட்சிகளும் உடைவது இயல்பு, அதனால் எக்கட்சி உடையும் யார் யாரோடு சேரும் என்பதையும் எதிர்பார்க்கலாம்.

புதிய திருப்பத்துக்குள் தமிழக அரசியல் திரும்புகின்றது, நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற அளவில் காட்சிள் நடக்கின்றன‌.

திமுக, அதிமுக, காங்கிரஸ் என எல்லாருமே குழம்பி நிற்கும் நேரம், பாஜக தன் ஜல்லிகட்டு காளையின் மூங்கணாங்கயிற்றை அவிழ்த்து கட்டவிழ்த்து களத்தில் இறக்க தயாராகின்றது.

மறைக்க ஒன்றுமில்லை, பகிரங்கமாகவே சொல்லலாம். திமுக அதிமுக இரண்டுமே சிறுபான்மையினர் பிடியில் உள்ள கட்சிகள், அவர்களின் நலனுக்காக அவர்களால் மிரட்டி ஒடுக்கி நடத்தபடும் கட்சிகள்.

எம்ஜிஆர் காலத்துக்கு பின் ஜெயா அப்படித்தான் சிக்கினார், அவரால் அவர்களை மீறமுடியவில்லை அதனாலே பாஜகவினை ஒதுக்கிவைத்தார்.

கருணாநிதி சிறுபான்மையினரை ஒருமாதிரி கையாண்டார், இப்போது ஸ்டாலினால் அவர்களை மீற முடியவில்லை அது பல இடங்களில் தெரிகின்றது.

ஆக திமுக அதிமுக என அவர்கள் போட்ட முகமூடி கிழியும் நேரமிது, பாஜகவுக்கு மிகபெரிய சாதகமான விஷயம் இதுதான், இனி அவர்கள் அடித்து ஆடமுடியும், தங்களுக்கு வராத சிறுபான்மை வாக்குகள் பிரிந்துபோகும் என்பதில் அவர்கள் உற்சாகமாக ஆடுவார்கள்.

இனி வரும் காலங்கலில் இந்திய தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது, உலககொப்பை கிரிக்கெட் நடக்கும் போது ஓரமாக ஒரு கூட்டம் விளையாடுவதை போல அகில இந்திய தேர்தல் பரபரப்பில் இங்கே தனி ஜல்லிகட்டே நடக்கும்,  அங்கே பாஜகவின் கைதான் ஓங்கி இருக்கும், காலம் அவர்களுக்குத்தான் அந்த வாய்ப்பை கொடுக்கும்.

#பிரம்ம_ரிஷியார்



அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 26 Sep 2023 - 23:11


பாஜக கூட்டணி முறிவுக்கு அதிருப்தி தெரிவிக்கும் அதிமுகவின் சில தலைவர்கள்.. உடைகிறதா கட்சி?


பாஜகவுடன் இனி கூட்டணியில்லை என நேற்று அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து அதிமுகவின் தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார் என்பதையும் பார்த்தோம்.

ஆனால் அதிமுகவில் உள்ள சில சீனியர் தலைவர்கள் இந்த முடிவு அதிருப்தியை அளித்துள்ளதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் உள்ள மூன்று சீனியர் தலைவர்கள் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவை விரும்பவில்லை என்றும் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது

எனவே இந்த அதிருப்தி தலைவர்களை வைத்து அதிமுகவை உடைக்க பாஜக முயற்சி செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 26 Sep 2023 - 23:17


அதிமுக விலகியதால் மெகா கூட்டணியை அமைக்கிறதா பாஜக?


அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் 1VhTTKo

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியிலும் பாஜக இல்லை என்றும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அதிமுக மற்றும் திமுக இல்லாத மெகா கூட்டணியை அமைக்க தமிழக பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பாஜக தலைமையில் அமைய இருக்கும் புதிய கூட்டணியில் தேமுதிக, பாமக, கொங்கு மக்கள் தேச கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம், பசும்பொன் தேசிய கழகம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது போக போக தான் தெரியும்.



அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 26 Sep 2023 - 23:20



ஒரு நேர்மையான மனிதனை கட்சிக்கு தலைவராக்கியதால் ..

தங்களால் வருங்காலத்தில் ஏதும் ஊழல் செய்ய முடியாமல் போய்விடுமோ என அச்சம் கொள்ளும் சொந்த கட்சிக்காரா்கள் ஒரு பக்கம் !!

ஏற்கனவே செய்த ஊழலை இவர் அம்பலப்படுத்த தயங்கமாட்டார் என்ற பயத்தில் கூட்டணி கட்சிக்காரா்கள் ஒரு பக்கம்!!

இன்னாருபுறம் தமிழகத்தை முழுவதும் சுரண்டமுடியாமல் தவிக்கும் எதிா்கட்சிகள்..!

இந்த மூவருக்கும் இடையில்.. தனிமனித ஒழுக்கத்திலும், பொது வாழ்விலும், ஒரு நேர்மையான திமிரான மனிதனாய் திகழ்வதே சிறப்புதான்!

அந்த திமிரான மனிதரை ஆதரிப்பதும் ஒரு கர்வம் தான்.!

அரசியலை புரிந்த சிலர் வைக்கும் வாதம்!

அண்ணாமலையின் நேர்மை மீதெல்லாம் எங்களுக்கு சந்தேகமில்லை!. அவர் பணியாற்றிய துறையில் அவர் நேர்மையாளராக விளங்கி இருக்கலாம்.
ஆனால் , அரசியல் என வரும்போது அவர் சிலவற்றை புரிந்துக்கொள்ள வேண்டும். அரசியல் இலக்கணமே வேறு. சிலவற்றை அவர் கட்டாயமாக மாற்றிக்கொள்ள வேண்டும். அரசியலில் நேர்மையை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெறுவது கடினம் என்கிறார்கள்.

இதே வாசகத்தை தூக்கிக் கொண்டுதான் மூத்த அமைச்சர்கள் என்ற அடையாளத்தோடு சில ?! கரைப்படியா கரங்களுக்குச் சொந்தக்காரர்கள் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்கள்.

டெல்லி தலைமை அவ்வளவு சீக்கிரம் இவர்கள் கோரிக்கைக்கு செவிச்சாய்க்காது. மாறாக அரசியல் கணக்கு, அரசியல் சாணக்கியத்தனம் என ஏதாவது ஒரு புள்ளியில் இவர்கள் கோரிக்கையை ஏற்று டெல்லி பாஜக தலைமை முடிவெடுக்குமானால் தமிழகத்தில் பாஜக ஆட்சி என்பது கேள்விக்குறியாகும் !.

அண்ணாமலை பக்கம் இளைஞர்கள் செல்வதற்கு காரணமே. அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, சமரசம் இல்லாத கொள்கைபிடிப்பு ஆகியவைதான்.

இதை யாருக்காகவும் அண்ணாமலை கைவிடுவதாகவும் தெரியவில்லை!

இந்த அண்ணாமலையை தேடிவந்திருக்கும் இளைஞர்களும் அவரை கைவிடுவதாகவும் இல்லை.

அரசியலின் முக்கியமான காலக்கட்டத்தில் அண்ணாமலை!

அந்த அண்ணாமலை துணையிருக்க. இந்த அண்ணாமலையின் அரசியல் வாழ்வில் என்றும் ஏறுமுகமே!

கடைசியாக ஒரு உண்மை!!

இந்த அண்ணாமலை எனும் சிற்பத்தை செதுக்கிக் கொண்டிருப்பதே திரு மோடிஜி எனும் ஒப்பற்ற தலைவனும், இந்திய அரசியலின் சாணக்கியன் திரு அமித்ஷா அவர்களும் தான் .




அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 27 Sep 2023 - 21:21


முற்றுப்புள்ளி வைத்த அதிமுக; பேரமைதி காக்கும் பாஜக


அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் Vikatan%2F2023-09%2F887ff410-0d3d-456a-9932-f58c21b4b5f4%2F6504371cc9960.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

பா.ஜ.க மாநிலத் தலைவராக அண்ணாமலை வந்த பிறகு, அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே உறவு சுமுகமாக இல்லை. அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் ஒரே கூட்டணியில் இருந்தாலும், இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும் அவ்வப்போது காரசாரமாக வார்த்தைப்போரில் ஈடுபட்டே வந்தனர்.

ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், பா.ஜ.க-வுக்கு எதிராக என்ன விமர்சனம் வைத்தாலும், பாய்ந்து சென்று பதிலடி கொடுப்பவராகவே அண்ணாமலை இருந்துவந்தார். ஆனால், பா.ஜ.க-வுடன் கூட்டணியை `முறித்து'க் கொள்வதென்று அ.தி.மு.க அறிவித்த பிறகு, அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் அது பற்றிக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் சொல்லவில்லை. `அ.தி.மு.க-வுக்கு எதிராகக் கருத்து எதுவும் தெரிவிக்க வேண்டாம்’ என்று பா.ஜ.க நிர்வாகிகளை அந்தக் கட்சியின் மேலிடம் அறிவுறுத்தியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பா.ஜ.க-வுடன் 1998-ம் ஆண்டு அ.தி.மு.க கூட்டணி வைத்தது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது ஏற்பட்ட அந்தக் கூட்டணி, ஓராண்டுக் காலம் நீடித்தது. அதன் பிறகு, 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், மீண்டும் பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணிவைத்தது. அந்தத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டதைத் தொடர்ந்து, இனிமேல் பா.ஜ.க-வுடன் கூட்டணியே கிடையாது என்று ஜெயலலிதா அறிவித்தார். அதன் பிறகு, அவர் உயிருடன் இருந்த காலம்வரை பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைக்கவே இல்லை. 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது, பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்தார் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க பெரும் வெற்றியைப் பெற்றது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் கூட்டணி சேர்ந்தன. அதில், 39 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க வெற்றிபெற்றது. தமிழ்நாட்டில் பா.ஜ.க ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை. ஆனாலும், இந்தக் கூட்டணி 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது. இதிலும் இந்தக் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கவில்லை. அதன் பிறகு பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

அதன் பிறகு அ.தி.மு.க., பா.ஜ.க இடையே சுமுகமான உறவு இல்லை. இரு தரப்பினருக்கும் அடிக்கடி வார்த்தைப்போர் நடைபெற்றது. ஜெயலலிதா குறித்து அண்ணாமலை விமர்சித்ததற்கு அ.தி.மு.க கடும் எதிர்வினையாற்றியது. அண்ணாமலையுடன்தான் உறவு சரியில்லையே தவிர, பா.ஜ.க-வின் டெல்லி மேலிடத்திடம் அ.தி.மு.க தலைமை நெருக்கமாகவே இருந்துவந்தது. அதில், சமீபத்தில் விரிசல் ஏற்பட்டது. நாடாளுமன்றத் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையே அதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

அண்ணா குறித்தும் அண்ணாமலை பேசிய சர்ச்சைப் பேச்சை ஒரு காரணமாக முன்வைத்து, கூட்டணியிலிருந்து விலகுவதாக அ.தி.மு.க அறிவித்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்லாமல், 2026-ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்திருக்கிறார்கள்.

கூட்டணி முறிவு குறித்து தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்கள் வெளிப்படையாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘கட்சி மேலிடம்தான் பதில் சொல்லும்’ என்று கழன்றுகொண்டார்.

ஆனால், இந்தப் பிரிவு தற்காலிகமானதுதான் என்கிறரீதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் தமிழ்நாட்டு கட்சிகளின் தலைவர்கள் கூறிவருகிறார்கள். இது உண்மையாகக்கூட இருக்கலாம் என்று கூறும் அரசியல் பார்வையாளர்கள், பா.ஜ.க நிர்வாகிகள் மௌனம் காப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.

இந்த நிலையில், அடுத்த எட்டு மாதங்களில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறியிருக்கிறார் தமிழ்நாடு பா.ஜ.க-வின் மேலிடப் பார்வையாளராக இருந்த சி.டி.ரவி. இந்தக் காலகட்டத்தில் எடப்பாடி பழனிசாமியைச் சமாதானப்படுத்தி, கூட்டணி தொடருவதற்கான முயற்சியில் பா.ஜ.க தலைமை ஈடுபடும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.



அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக