ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:28 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 12:04 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

Top posting users this week
ayyasamy ram
உன் சமையலறையில்  Poll_c10உன் சமையலறையில்  Poll_m10உன் சமையலறையில்  Poll_c10 
heezulia
உன் சமையலறையில்  Poll_c10உன் சமையலறையில்  Poll_m10உன் சமையலறையில்  Poll_c10 
cordiac
உன் சமையலறையில்  Poll_c10உன் சமையலறையில்  Poll_m10உன் சமையலறையில்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் சமையலறையில்

Go down

உன் சமையலறையில்  Empty உன் சமையலறையில்

Post by Anthony raj Fri Sep 15, 2023 3:55 pm

ஒரு நாள்...
டி வி யில் தினப்பலனைக் கேக்கலைன்னு நினைக்கிறேன்..

என் இல்லத்தரசியிடம் "ஏண்டி ...எப்ப பாத்தாலும் சமைக்கிறேன், சமைக்கிறேன்கிறியே.. சமையல் என்ன பெரிய வேலையா?" ன்னு கேட்டுட்டேன்..

நாக்கிலே சனி..

'யோவ்.....'

'என்னம்மா பொசுக்குன்னு யோவ்..னு கூப்பிடறே.'

"கேட்டுக்கையா..
நாங்களே காய்கறி வாங்கி வரனும், அதை பிரிச்சு எடுத்து வைக்கனும்,
நாங்களே காய்கறி வெட்டிக்கனும்,
நாங்களே சமைக்கனும்,
நாங்களே பரிமாறனும்,
நாங்களே எடுத்து வச்சு க்ளீன் பண்ணி பாத்திரமும் அலம்பி வைக்கனும்..

இதுக்கிடையில பேனா காணோம், துண்டை காணோம், Pan கார்டு எங்கன்னு அடிக்கடி கூப்பிட வேண்டியது..

அடுப்படியிலேயே இருந்தா ஹோட்டல்ல கல்யாணத்துல சமைக்குறவன் அடுப்புல பாத்திரத்தை வச்சிட்டு தம்மடிக்க வெளியில் போய்வரான்.
நீ என்னமோ அடுப்படியிலேயே நின்னுக்கிட்டு நகர மாட்டேங்குறியேன்னு லொள்ளு பேசவேண்டியது...

நீங்க கேட்டதை எடுத்துக்குடுக்க வெளியே வரும்போது பால் பொங்கி வழிஞ்சா கவனம் எங்க இருக்குன்னு கேட்டு இம்சிக்க வேண்டியது..."

" என்னம்மா நான் சாதாரணமாத்தானே கேட்டேன் இதுக்கு போயி கோச்சுக்கிறியே..."

"யோவ் இன்னங்கேளுய்யா.. சமைக்குறது பெரிய விஷயமே இல்லதான்.

ஆனா,

தினமும் சமைக்கணும்.
தினத்துக்கு மூணு வேளையும் சமைக்கணும்..

வருஷம் ஃபுல்லா சமைக்கணும்...
சமைக்கணும்,...
நேத்து சமைச்சதையே இன்னிக்கு சமைக்கக்கூடாது...

இன்னிக்கு சமைச்சதை நாளைக்கு சமைக்கக்கூடாது,

புதுசா சமைக்கும்போது ருசியா சமைக்கணும்...

உப்பு, உரைப்பு கூடிடக்கூடாது...

பெரியவங்களுக்கும் குழந்தைகளுக்கும் சோறு குழைவா இருக்கணும்,
மத்தவங்களுக்கு சோறு ஒண்ணோடு ஒண்ணு ஒட்டக்கூடாது..

சமைக்கும் காய்கறிகள் தானியங்கள் யாரோட உடலுக்கும் ஒத்துக்காததாகவோ இல்ல பிடிக்காததாவோ இருந்தால் வேற சமைக்கணும்.

இருக்குறதை வச்சு சமைக்கணும்,..

வேஸ்ட் பண்ணாம சமைக்கணும்..

பண்டிகை, பிறந்த நாள் , கல்யாண நாள்ன்னா ஸ்பெஷலா சமைக்கணும்..

அக்கம் பக்கத்துல கொடுக்கும் பண்டம் நல்லா இருந்தால் அதை கத்துக்கிட்டு சமைக்கணும்...

சமைக்கும்போது சமையல்கட்டில் மட்டும் கவனம் இல்லாம... குழந்தைங்க கூப்பிட்டாங்களா?!
காய்கறிக்காரங்க குரல் கொடுத்தாங்களா?!
டிவியில் சீரியல்ன்னு வீட்டின் எல்லா பாகத்துலயும் கவனம் வைக்கணும்..

இப்ப சமைக்குறது மட்டுமில்லாம நாளைக்கு தேவையான தயிர் உரைக்கு ஊத்துறது, மாவு ஆட்டுதல்ன்னு செய்யணும்..

ஒரு மாசத்துக்கு தேவையான சாம்பார் பொடி, இட்லிப்பொடி, ரசப்பொடி அரைச்சு வச்சுக்கனும்...

பட்டாணி, பச்சைப்பயறு, கொண்டைக்கடலைலாம் பூச்சி அரிக்காம இருக்க வெயிலில் கொட்டி வாரணும்..

ஒரு வருசத்துக்கு தேவையான வத்தல், வடாம் ஊறுகாய் வத்தல் செய்யணும்..

எது இருக்கு, எது இல்லைன்னு கவனம் வச்சுக்கணும்,

தூசு, எண்ணெய் பிசுக்குலாம் இல்லாம அடிக்கடி துடைக்கணும்,,
எறும்பு, கரப்பான் பூச்சி அண்டாம மருந்தடிக்கணும்...

உப்பை திறந்து வச்சா தண்ணி விட்டுப்போகும்,
ஊறுகாயை மூடிவச்சா பூசனம் பூத்துடும்..

சர்க்கரையில் எறும்பு வராம இருக்க கிராம்பு போட்டு வைக்கனும்.

இப்படி ஒவ்வொண்ணுத்தையும் பாதுகாக்கணும்.

குழம்பு கரண்டியால் பால் எடுத்தா பால் கெட்டுப்போகும்..

அதனால் தனித்தனி கரண்டி பராமரிக்கணும்..
சில அடாவடிக வீட்டில் இருந்தால் தனக்குன்னு தனி தட்டு, டம்ப்ளர் கேட்கும்..

சமைக்கணும், சாப்பிடணும், சாப்பிட்டதை கழுவணும், கழுவும்போதே அடுத்த வேளைக்கு யோசிச்சு ரெடியாகணும்,

இரவு படுக்கும்போது நாளைக்கு இதையே மீண்டும் தொடங்கனுமேன்னு மலைப்பா வரும்..
ஆனா, நாளைக்கு விடியும், நாளைக்கும் பசிக்கும். நாளைக்கும் சமைக்கணும்..

வீட்டில் எத்தனை பேர் இருக்காங்களோ அத்தனை பேருக்கும் சமைக்கணும்.. அவங்களுக்கு சமைக்குறதுக்காகவே இருக்கோம்ன்னு நினைப்பு வரும்.

வக்கணையா தின்னுக்கிட்டே உப்பில்லை, உரைப்பில்லன்னு குறை சொன்னா கோவம் வருமா வராதா..?

சாப்பிட்ட தட்டைக்கூட சிங்கில் கொண்டு போய் போடாத ஆட்கள் வீட்டில் இருந்தால் வெறுப்படிக்கும்.

ஹோட்டலில்ல, கல்யாணத்துல சமைக்கும் ஆட்களை கூப்பிட்டு பாராட்டும் ஆட்கள் எத்தனைபேர் வீட்டில் தனக்காக சமைக்கும் பெண்களை கூப்பிட்டு பாராட்டி இருக்கீங்க?!

காய்ச்சலில் படுத்து கிடந்தால்கூட சாம்பார் வச்சு அப்பளம் மட்டும் பொறிச்சுடு போதும்ன்னு சொல்வீங்களே தவிர, நான் சமைக்குறேன்னு யாரும் சொல்ல மாட்டாங்க.

இதையே தன் வாழ்நாள் முழுதும் சமைக்குறதுக்காகவே அவ பிறந்திருக்கான்னு அவள் சுமையையே சுகமாக்கி திணிச்சு வச்சிட்டு சமைக்குறது கஷ்டமான்னு அடிக்கடி கேள்வி வேற!...

இத்தனை நாள் இதுலாம் தெரியாம சமையல் ஈசின்னு நினைச்சுட்டு இருந்தேன். மன்னிச்சுடு தாயி..

இனிமே யாராவது வீட்டில் சும்மா தானே இருக்கேன்னு கேப்பீங்க???

படித்ததில் பிடித்தது ஐ லவ் யூ
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum