புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_m10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10 
29 Posts - 60%
heezulia
செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_m10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_m10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_m10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_m10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10 
194 Posts - 73%
heezulia
செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_m10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_m10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_m10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10 
8 Posts - 3%
prajai
செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_m10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_m10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_m10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_m10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_m10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10 
2 Posts - 1%
sram_1977
செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_m10செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 29, 2023 9:47 pm

செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா? Rice10

அதிகரிக்கும் ரத்தசோகை, சத்துக் குறைபாட்டுக்குத் தீர்வாக மத்திய அரசு கொண்டு வந்திருப்பதுதான் செறிவூட்டப்பட்ட அரிசி.

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி பற்றி அவ்வப்போது புகார்கள் வருவது வழக்கம்தான். ‘தரமில்லை', ‘கறுப்பாக இருக்கிறது', ‘வண்டுகள் ஊர்கின்றன', ‘வாடை வருகிறது' என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. இப்போது வந்திருக்கிற புகார், பகீர் ரகம். ‘செறிவூட்டப்பட்ட அரிசி' என்ற பெயரில் வழங்கப்படும் செயற்கை அரிசி பற்றியது.

அதென்ன செறிவூட்டப்பட்ட அரிசி?


தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 38% பேருக்கு வயதுக்கேற்ற உயரம் இல்லை. 35.7% பேர் எடை குறைந்தவர்களாக உள்ளனர். 15-49 வயதுடைய ஆண்களில் நான்கில் ஒருவரும் அதே வயதுள்ள பெண்களில் பாதிக்கு மேற்பட்டோரும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கினருக்கும் மேல் ரத்தசோகை பாதிப்பு உள்ளது.

மாதவிடாய் மற்றும் மகப்பேறு காலங்களில் பெண்களுக்கு இயற்கையாகவே ரத்தம் வெளியேறுவதால் பெண்களிடையே ரத்தசோகை அதிகமாக இருக்கிறது. ரத்தசோகைக்கு முக்கியக் காரணம், இரும்புச்சத்து, வைட்டமின் பி12, வைட்டமின் ஏ குறைபாடு.

அதிகரிக்கும் ரத்தசோகை, சத்துக் குறைபாட்டுக்குத் தீர்வாக மத்திய அரசு கொண்டு வந்திருப்பதுதான் செறிவூட்டப்பட்ட அரிசி. வழக்கமாக சத்துக்குறைபாடு கண்டறியப்பட்டால் மருத்துவர்கள் மருந்து, மாத்திரைகள் தருவார்கள் அல்லவா? அந்த ரசாயனங்களை அரிசியில் கலந்தால் அதுதான் செறிவூட்டப்பட்ட அரிசி.

முன்பு உப்பு... இப்போது அரிசி!


சாதாரண அரிசியை அரைத்து அதில் அந்தப் பொடிகளைக் கலந்து மீண்டும் அரிசி வடிவுக்கு மாற்றிவிடுவார்கள். இதை சாதாரண அரிசியில் 100-க்கு 1 என்ற கணக்கில் கலந்துவிடுவார்கள். உலகெங்கும், இந்தச் செறிவூட்டுதல் நடைமுறையில் இருக்கிறது. பெரும்பாலான நாடுகளில் விதைகளிலேயே செறிவூட்டி விடுவார்கள். இந்தியாவில் செறிவூட்டும் திட்டம் 1999-ல் அறிமுகமானது. அயோடின் குறைபாட்டால் பல ஆரோக்கியப் பிரச்னைகள் ஏற்படுவதாகப் புள்ளி விவரங்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து அயோடின் கலந்து செறிவூட்டிய உப்பை மட்டுமே விற்கவேண்டும் என சட்டம் கொண்டு வரப்பட்டது. இன்றைய தேதிக்கு அயோடின் சேர்க்காத உப்பை விற்பது தண்டனைக்குரிய குற்றம். கடலோர மக்களின் வாழ்வாதாரமாக இருந்த உப்பு இப்போது குறிப்பிட்ட சில நிறுவனங்களின் உடைமை ஆகிவிட்டது.

இப்போது அரிசி. ரத்தசோகையைக் கட்டுப்படுத்த அரிசியில் இரும்புச் சத்தைக் கலந்து வழங்க அரசு முடிவெடுத்தது. இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா உரையில், இதை அதிகாரபூர்வமாக அறிவித்தார் பிரதமர் மோடி. ‘2024-ம் ஆண்டுக்குள் செறிவூட்டப்பட்ட அரிசி பொது விநியோகத் திட்டம் மூலம் மக்களுக்கு வழங்கப்படும். சத்துணவுத் திட்டம், அங்கன்வாடிகளில் இந்த அரிசியே பயன்படுத்தப்படும்’ என அறிவிக்கப்பட்டது.

செறிவூட்டப்பட்ட அரிசி
செறிவூட்டப்பட்ட அரிசி
FSSAI எனப்படும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் இதற்கென பல விதிமுறைகளை உருவாக்கியிருக்கிறது. அவற்றில் எண்ணெய், பால், கோதுமை மாவு, மைதா, அரிசி ஆகிய பொருள்களைச் செறிவூட்டுவதற்கான வழிமுறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. செறிவூட்டப்பட்ட உப்பும் பாலும் ஏற்கெனவே சந்தைக்கு வந்துவிட்டன. இப்போது அரிசி வந்துள்ளது.

என்ன சேர்க்கிறார்கள்?


அரிசியில் இரும்புச் சத்துக்காக, 1 கிலோவுக்கு 28 மி.கி. முதல் 42.5 மி.கி. என்ற அளவில் Ferric pyrophosphate அல்லது, 14 மி.கி. முதல் 21.25 மி.கி வரை Sodium Feredetate போன்ற ரசாயனங்களைச் சேர்க்கலாம். ஃபோலிக் ஆசிட் 75 முதல் 125 மைக்ரோ கிராம் வரை சேர்க்கலாம். வைட்டமின் பி 12 சத்துக்காக cyanocobalamin அல்லது Hydroxocobalamin என்ற ரசாயனத்தை 0.75 மைக்ரோ கிராம் முதல் 1.25 மைக்ரோ கிராம் வரை சேர்க்கலாம் என்று இந்தச் சட்டம் வரையறுக்கிறது.

இந்தியா முழுவதும் 112 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டது. தமிழகத்தில் திருச்சி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது. சாதாரண ரேஷன் அரிசியில் செறிவூட்டப்பட்ட அரிசி சேர்க்கப்பட்டதால் ‘பிளாஸ்டிக் அரிசியைக் கலந்து விற்கிறார்கள்' என்று வதந்தி கிளம்பியது. நிறைய இடங்களில் ரேஷன்கடை ஊழியர்களுக்கும் மக்களுக்கும் பிரச்னை எழுந்தது. இந்தச் சோதனையில் கிடைத்த முடிவுகளை வெளியிடாமல் அடுத்த கட்டமாக இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தினார்கள். தமிழகத்தில் திருச்சியைத் தொடர்ந்து விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துவிட்டது.

மிகப்பெரும் வணிகம்!


ஒவ்வொரு மாதமும் அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட அட்டைகளுக்கு (18,63,730 அட்டைகள்) 57,437 டன் அரிசியும், முன்னுரிமை குடும்ப அட்டைகளுக்கு (96,00,503 அட்டைகள்) 1.36 லட்சம் டன் அரிசியும் வழங்கப்படும். தற்போது இவர்களுக்கு மட்டும் சாதாரண அரிசியோடு செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து விநியோகிக்கப்படுகிறது. ஜூன் 16-ம் தேதி நிலவரப்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் 2,34,378 மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து மருந்துகள், செயற்கையான சத்துகள் சேர்க்கப்பட்ட உணவுப்பொருள்கள் சந்தையில் நிறைய இருக்கின்றன. தேவைப்படுவோருக்கு மருத்துவர்கள் அவற்றைப் பரிந்துரைப்பார்கள். ஒவ்வொருவரின் உடலும் தனித்தன்மையானது. அவரவர் வாழ்க்கைமுறை, உணவு, சூழலுக்கு ஏற்றவாறு தேவைப்படும் சத்துகளின் அளவு மாறுபடும். இரும்புச்சத்து தேவைப்படாதவர்கள் இந்த அரிசியைச் சாப்பிடுவது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி அரசுகள் எந்தவிதத் தெளிவையும் உருவாக்காமல் இதை நடைமுறைப்படுத்திவிட்டன.

ஏன் இந்த அவசரம்? ‘‘எல்லாம் வணிகம்தான்...’’ என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

‘‘கிட்டத்தட்ட ரூ. 3,000 கோடி வணிகம் இதன் பின்னால் இருக்கிறது. இந்த ரசாயனப் பொடிகளை ஒரு டச்சுக் கம்பெனி தயாரிக்கிறது. அந்த நிறுவனத்தோடு இந்தியாவின் நான்கு நிறுவனங்கள் கைகோத்துள்ளன. இந்த நிறுவனங்கள், உப்புச் சந்தையைக் கைப்பற்றியதைப் போல அரிசியையும் கைப்பற்ற நினைக்கின்றன. மத்திய அரசு அதற்குத் துணைபோயிருக்கிறது.

அரிசியில் செயற்கையான ரசாயனப் பொடிகளைச் சேர்த்தே சத்தை அதிகரிக்கிறார்கள். இந்தச் செயற்கை மருந்துகள் எல்லோருக்கும் தேவையா என்பது முக்கியமான கேள்வி. ஒரு மருந்தைத் தயாரித்தால் 30 ஆண்டுகள் அதை சோதனை செய்தபிறகே மக்களுக்குத் தருவார்கள். உணவாகவே அதை வழங்கும்போது இன்னும் தீவிரமாக ஆய்வு செய்திருக்க வேண்டும்.

செறிவூட்டப்படும் உணவுப்பொருள்களில் ‘People with Thalassemia may take it under medical supervision, and persons with sickle cell anemia are advised not to consume iron-fortified food products' என்று கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் சட்டம் சொல்கிறது.

இந்தியாவில் ஒவ்வோராண்டும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தலசீமியா குறைபாட்டோடு பிறக்கின்றன. லட்சக்கணக்கானோர் அந்தக் குறைபாட்டோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எத்தனை லட்சம் பேருக்கு தலசீமியா இருக்கிறது, அவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்று அரசிடம் புள்ளிவிவரங்களே இல்லை. ‘சிக்கிள் செல் அனீமியா' என்பது மிகவும் கொடூரமான குறைபாடு. ரேஷன் அரிசியை மட்டுமே நம்பியிருக்கிற குடும்பங்களில் எத்தனை பேருக்கு இந்த பாதிப்புகள் இருக்கின்றன என்று தெரியாது. கிட்டத்தட்ட இந்த அரிசி ஒரு சத்து மாத்திரை மாதிரி. சத்து தேவைப்படாதவர்கள் ஏன் மாத்திரை சாப்பிட வேண்டும்?’’ என்று கேள்வியெழுப்புகிறார் அவர்.

குடோன்களில் வசதியில்லை


ரேஷன் கடைகளில் இந்த அரிசியை வாங்கும் மக்கள் தண்ணீர் ஊற்றிக் களையும்போது மிதப்பதாகக் கூறி ரேஷன் கடைக்கே மீண்டும் கொண்டு வருகிறார்கள். சோறு வடிக்கும்போது சாதாரண அரிசி ஒருமாதிரியும், செறிவூட்டப்பட்ட அரிசி ஒருமாதிரியும் வேகுவதாகவும் கூறுகிறார்கள்.

பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து, ‘‘மொத்த அரிசி வணிகத்தையும் பெரு நிறுவனங்கள் கையில் தருவதற்கான முன்னெடுப்புதான் இது’’ என்கிறார்.

‘‘ரசாயனங்களால் செறிவூட்டப்படும் அரிசியை முறையாகப் பாதுகாக்க நம் ரேஷன் கடைகளிலோ, குடோன்களிலோ எந்த வசதியும் இல்லை. அந்த அரிசியை தகுந்த தட்பவெப்பத்தில் பராமரிக்கப்படாவிட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கும் சரியான தெளிவில்லை. செறிவூட்டம் செய்து உணவுப்பொருள் விநியோகம் செய்யப்பட்ட நாடுகளில் அதனால் பெரிய பலன் கிடைத்ததாக எந்த ஆதாரமும் இல்லை. Cochrane போன்ற மருத்துவ ஆய்விதழ்கள், ‘செறிவூட்டப்பட்ட அரிசியால் பெரிய பயனில்லை’ என்று எழுதியிருக்கின்றன.

பைலட் புரோகிராம் என்றால், குறிப்பிட்ட காலத்துக்கு அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அதன் சாதக பாதகங்களை ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும். எதுவுமே செய்யாமல் ‘பைலட் புரோகிராம் வெற்றி' என்று அறிவித்து நாடு முழுவதும் விநியோகிக்கத் தொடங்கிவிட்டனர்.

தலசீமியா, சிக்கிள் செல் அனீமியா மட்டுமன்றி, டிபி, மலேரியா நோயாளிகளுக்கும் இரும்புச்சத்து அதிகரிப்பது பாதிப்பை உருவாக்கும். பழங்குடிகள் மத்தியில் தலசீமியா நோய் அதிகமிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. பெருமளவு பழங்குடிகள் வாழும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியைத்தான் 95% மக்கள் சாப்பிடுகிறார்கள். அவர்களைப் பற்றி உணவுப் பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு அமைப்போ சுகாதாரத்துறையோ வாய் திறக்க மறுக்கின்றன. தமிழக அரசு கேள்வியே எழுப்பாமல் இதை ஏற்றுக்கொண்டதும் சந்தேகத்தை எழுப்புகிறது’’ என்கிறார் அனந்து.

இந்த அரிசியால் ஒரு பயனுமில்லை


தமிழக பொது விநியோகத்திட்ட அதிகாரிகளிடம் பேசினால், ‘‘தமிழகத்தில் தலசீமியா பாதிப்பு குறைவு. பாதிப்பு இருக்குமிடங்களில் கவனமாக விநியோகிக்குமாறு ரேஷன் கடைகளுக்குத் தெரிவித்திருக்கிறோம். மற்றபடி இதனால் எந்த பாதிப்பும் இல்லை’’ என்கிறார்கள்.

குழந்தைகள் சிறப்பு நிபுணர் மருத்துவர் ஆர்.செல்வனிடம் பேசினேன். ‘‘இந்தியாவில் 60% குழந்தைகளும் 50% முதல் 60% இளம் தாய்மார்களும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி இவர்களுக்கு உண்மையிலேயே அவசியமானது. ஆனால் சராசரியாக 50% பேருக்கு இது தேவையில்லை. அவர்களுக்கு நிச்சயம் பாதிப்புகள் ஏற்படும். இரும்புச்சத்தைப் பொறுத்தவரை அளவு குறைவாகக் கிடைத்தால் பிரச்னையில்லை. தேவைக்கு மேல் கிடைத்தால் நிறைய எதிர்விளைவுகள் ஏற்படும். குறிப்பாக குடலில் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.

இன்னொரு அடிப்படையான விஷயத்தையும் பார்க்க வேண்டும். மருத்துவர்கள் இரும்புச் சத்து டானிக்கையோ மாத்திரைகளையோ பரிந்துரைக்கும்போது, சாப்பாட்டுக்கு முன் அல்லது சாப்பிட்டு 2 மணி நேரத்துக்குப் பிறகு சாப்பிடச் சொல்வார்கள். காரணம், இரும்புச் சத்தை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டால் உடலோடு சேரும் அளவு மிகக்குறைவாகவே இருக்கும். இரைப்பை சிறிது காலியாக இருக்கவேண்டும். அரிசியிலேயே இரும்புச் சத்தை செறிவூட்டி வழங்கினால் அதை உடல் கிரகிக்க முடியாது என்பதுதான் உண்மை. அதனால் இந்த அரிசியால் பாதிப்பு ஏற்படுமா, ஏற்படாதா என்ற கேள்விக்கு முன், இந்த அரிசியால் இரும்புச் சத்து உடலில் சேருமா, சேராதா என்று பார்க்கவேண்டும்.

100 சாதாரண அரிசிக்கு 1 செறிவூட்டிய அரிசி என்ற கணக்கில் சேர்க்கப்படுவதாகச் சொல்கிறார்கள். இது சரியாகச் சேர்க்கப்படுகிறதா, சாப்பிடுபவர்களுக்கு உரிய பயன் கிடைத்திருக்கிறதா என்பதையெல்லாம் ஒரு பைலட் ஆய்வு செய்ய வேண்டும். பத்து மாதங்கள் அப்படி ஆய்வு செய்ததாகச் சொன்னார்கள். அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஆர்.டி.ஐ-யில் பலர் கேட்டும் இதுவரை அரசு வழங்கவில்லை.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருந்துகளாகவும் மாத்திரைகளாகவும் சொட்டு மருந்தாகவும் இரும்புச்சத்து வழங்கப்பட்டுதான் வருகிறது. ஆனாலும் ரத்தசோகையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. காரணம், ரத்தசோகைக்கு வெறும் இரும்புச்சத்துக் குறைபாடு மட்டுமே காரணமில்லை. குடற்புழுத் தாக்கம், நாள்பட்ட நோய்கள், உரிய புரதம் கிடைக்காதவர்களைத்தான் ரத்தசோகை அதிகம் தாக்குகிறது.

வெளிநாடுகளில் செய்த சோதனை முடிவுகளை வைத்தே இந்தத் திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். அரிசியில் தொடங்கி படிப்படியாக மற்ற உணவுப்பொருள்களிலும் மாற்றத்தைத் தொடங்கிவிடுவார்களோ என்ற அச்சம் வருகிறது. 50% பேருக்குத் தேவையான மருந்தை 100% பேருக்குத் தருகிறோம். அதுவும் தேவை உள்ளோருக்கு சரியாகக் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. எதிலுமே தெளிவில்லாமல் மிகப்பெரிய தொகையைச் செலவு செய்கிறோம்...’’ என்று வருந்துகிறார் செல்வன்.

இரும்புச்சத்து நிறைந்த ஏராளமான தானியங்கள் இங்கே விளைகின்றன. உண்மையிலேயே மக்களுக்கு சத்துள்ள உணவுப்பொருள்களைத் தரவேண்டும் என்று அரசு நினைத்தால் அந்த உணவுப்பொருள்களை நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கலாம். அதன் பலன் விவசாயிகளுக்கும் கிடைக்கும். ஏன் பன்னாட்டு நிறுவனம் தரும் ரசாயனப்பொடியை நம்பியிருக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய கேள்வி!

விகடன்


T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jun 30, 2023 12:11 pm

”உண்மையிலேயே மக்களுக்கு சத்துள்ள உணவுப்பொருள்களைத் தரவேண்டும் என்று அரசு நினைத்தால் அந்த உணவுப்பொருள்களை நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கலாம். அதன் பலன் விவசாயிகளுக்கும் கிடைக்கும். ஏன் பன்னாட்டு நிறுவனம் தரும் ரசாயனப்பொடியை நம்பியிருக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய கேள்வி!”

“ஏன் இந்த அவசரம்? ‘‘எல்லாம் வணிகம்தான்...’’ என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

‘‘கிட்டத்தட்ட ரூ. 3,000 கோடி வணிகம் இதன் பின்னால் இருக்கிறது.”

- மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் , தங்கள் சொந்த வருமானத்தைப் பற்றி மட்டும் கவலைப்படும் நம்மவர்களை என்னவென்று சொல்வது? எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun Sep 10, 2023 1:46 am

மிகவும் வருத்தம் அளிக்கிறது. எங்கும் இரசாயண கலவை

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 10, 2023 5:33 pm

அரசியல்வாதிகள் கவுன்சிலர் /எம் எல் எ /மந்திரி /எம் பி யாராக இருந்தாலும்
அவர்களது பெரிய வீட்டில் பசுமாடு எருமை மாடுகள் இருக்கும்.--சுத்தமான பால் கிடைக்கும்.
மக்களை பற்றி கவலை இல்லை. ரசாயனம் கலந்த அரசு அல்லது பண்ணை முதலாளிகள்
தரும் பாலைதான் பாமர மக்கள் குடிக்கவேண்டும்.

நிலத்திலிருந்து வந்த நெல்லை ஓரிரு வருடம் கழித்து உபயோகிப்பார்கள்.
மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசிதான்.

மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
தேர்தல் சமயத்தில் கிடைக்கும் பிச்சையை பெற்றுக்கொண்டு
ஒரே நாளில் அனுபவித்து மீதி 364 நாட்களும் கஷ்டப்படும் மக்கள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun Sep 10, 2023 9:08 pm

T.N.Balasubramanian wrote:அரசியல்வாதிகள் கவுன்சிலர் /எம் எல் எ /மந்திரி /எம் பி யாராக இருந்தாலும்
அவர்களது பெரிய வீட்டில் பசுமாடு எருமை மாடுகள் இருக்கும்.--சுத்தமான பால் கிடைக்கும்.
மக்களை பற்றி கவலை இல்லை. ரசாயனம் கலந்த அரசு அல்லது பண்ணை முதலாளிகள்
தரும் பாலைதான் பாமர மக்கள் குடிக்கவேண்டும்.

நிலத்திலிருந்து வந்த நெல்லை ஓரிரு வருடம் கழித்து உபயோகிப்பார்கள்.
மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசிதான்.

மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
தேர்தல் சமயத்தில் கிடைக்கும் பிச்சையை பெற்றுக்கொண்டு
ஒரே நாளில் அனுபவித்து மீதி 364 நாட்களும் கஷ்டப்படும் மக்கள்.
மேற்கோள் செய்த பதிவு: undefined
உண்மை அய்யா, இவ்வளவு கோடி பேருக்கு எப்படி சுத்தமான பால் கொடுப்பது? இத்தனை கோடி பேருக்கு எப்படி சுத்தமான எண்ணை கொடுப்பது.., சுத்தமான காற்று குடிநீர்?

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக