ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜி 20 மாநாடு 2023

2 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஜி 20 மாநாடு 2023 - Page 2 Empty ஜி 20 மாநாடு 2023

Post by சிவா Thu Sep 07, 2023 8:16 pm

First topic message reminder :

ஜி 20 மாநாடு 2023 - Page 2 SjfPM7c

ஜி-20 என்றால் என்ன, அது ஏன் உருவாக்கப்பட்டது?


‘ஜி-20’ என்ற பெயரிலிருந்தே தெளிவாகத் தெரிவதுபோல, இது 20 நாடுகளின் குழுவாகும்.

1999-ம் ஆண்டு ஆசியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அனைத்து நாடுகளின் நிதி அமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் ஒன்றிணைந்து உலகப் பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து விவாதிக்கக்கூடிய ஒரு மன்றத்தை உருவாக்க நினைத்தனர்.

அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2007-இல், பொருளாதார மந்தநிலையின் நிழல் உலகம் முழுவதும் பரவியது. அத்தகைய சூழ்நிலையில், நிதியமைச்சர்கள் மட்டத்தில் இருந்த ஜி-20 குழு மேம்படுத்தப்பட்டு, அது நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கியக் குழுவாக மாற்றப்பட்டது.

அனைத்து நாடுகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள்.

இந்த வகையில், ஜி-20 அமைப்பின் முதல் கூட்டம், 2008ல், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்தது. இதுவரை மொத்தம் 17 கூட்டங்கள் நடந்துள்ளன. இதன் 18வது கூட்டத்தைதான் இந்தியா நடத்த உள்ளது.

இந்தக் குழுவின் கவனம் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகளை விவாதிப்பதாக இருந்தாலும், காலப்போக்கில் அதன் நோக்கம் விரிவடைந்து, நிலையான வளர்ச்சி, சுகாதாரம், விவசாயம், எரிசக்தி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் ஊழல் எதிர்ப்பு போன்ற விஷயங்களும் இதில் சேர்க்கப்பட்டன.

ஜி-20 குழுவின் அதிகாரம் என்ன?


இக்குழுவில் இடம் பெற்றுள்ள நாடுகளின் பெயர்களைப் பார்த்தாலே இந்தக் குழுவின் பலம் என்னவென்று நமக்குத் தெரியும்.

ஜி-20 குழுவில் அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சௌதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து ஆகிய 19 நாடுகள் உள்ளன. இவற்றோடு ஐரோப்பிய ஒன்றியம் இந்தக் குழுவில் 20வது உறுப்பினராக உள்ளது.

இது தவிர, ஒவ்வொரு ஆண்டும் இக்குழுவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நாடு சில நாடுகளையும் அமைப்புகளையும் விருந்தினர்களாக அழைக்கிறது.

இந்த முறை தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, வங்கதேசம், எகிப்து, மொரிஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின், மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஜி-20 குழுவின் உறுப்பு நாடுகள், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதமும், உலக வர்த்தகத்தில் 75 சதவீதமும், உலக மக்கள் தொகையில் 2/3 பங்கையும் அதன் உறுப்பு நாடுகள் கொண்டிருப்பதில் இருந்து இதன் வலிமையை நாம் மதிப்பிட முடியும்.

இவ்வாறான நிலையில் இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

ஜி-20 எவ்வாறு செயல்படுகிறது?


எந்த நாடு ஜி-20யின் தலைவர் பதவியில் இருக்கிறதோ, அந்த ஆண்டில் அந்நாடு ஜி-20 கூட்டங்களை ஏற்பாடு செய்கிறது.

ஜி-20 இரண்டு தடங்களில் செயல்படுகிறது.

ஒன்று அனைத்து நாடுகளின் நிதி அமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் இணைந்து செயல்படும் நிதித் தடம் – Finance Track.

இரண்டாவது ஷெர்பா டிராக் – Sherpa Track. இதில் உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் இடம்பெறுவர். இதில் விவசாயம், ஊழல் எதிர்ப்பு, காலநிலை, டிஜிட்டல் வர்த்தகம், கல்வி, வேலைவாய்ப்பு, ஆற்றல், சுற்றுச்சூழல், ஆரோக்கியம், சுற்றுலா, வர்த்தகம், மற்றும் முதலீடு ஆகியவை பற்றி விவாதிக்கப்படும்.

ஜி20 தலைவர் பதவியை ஒரு நாடு எப்படிப் பெறும்?


இது Troika எனப்படும் குழுவால் தீர்மானிக்கப்படுகிறது. இது உறுப்பினர் நாடுகளின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்கால ஜனாதிபதிகளை உள்ளடக்கியது.

ஜி20 மாநாட்டால் இந்தியாவுக்கு என்ன பயன்?


ஜி-20 நாடுகள் உலகின் 85% ஜி.டி.பி.யையும், 75% சர்வதேச் வர்த்தகத்தையும், 70% உலக மக்கள்தொகையையும் உள்ளடக்கியது, இத்தகைய ஒரு மாநாடு இந்தியாவில் நடப்பது, இந்தியாவிலிருக்கும் தொழில்நுட்ப முன்னேற்றம், உட்கட்டமைப்பு, மற்றும் திறன்மிக்க மனிதவளம் ஆகியவற்றை இந்தச் சர்வதேச நாடுகள் அறிந்துகொள்ள ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு.

“இது இரண்டு முக்கிய வழிகளில் இந்தியாவுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஒன்று, இது இந்தியாவின் பலத்தையும், இந்தியா அடைந்திருக்கும் முன்னேற்றத்தையும் உலக நாடுகள் அறிந்துகொள்ள ஒரு சிறந்த வழியாக இருக்கும். இரண்டாவது, இந்தியாவின் நேர்மறையான பிம்பத்தை வலுப்படுத்தும்,”.

ஜி20 மாநாட்டால் சர்வதேச அரசியலில் இந்தியா பயன் பெறுமா?


இந்த மாநாடு தொடர்பாக இதுவரை ஜி-20 நாடுகள் பங்குபெற்ற 18 அமைச்சரவைக் கூட்டங்கள், 80 செயல் குழு கூட்டங்கள், 33 எங்கேஜ்மென்ட் குழு கூட்டங்கள் என இந்தியாவின் 56 வெவ்வேறு இடங்களில் பல கூட்டங்களும் சந்திப்புகளும் நடைபெற்றது.

“இதற்காக சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்களோடு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பல வழிகளில் தொடர்பில் இருந்திருப்பார்கள். இது இந்தியா மீதான சர்வதேசப் பார்வையை அதிகப்படுத்தும். மேலும் வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, வெளிநாடுகளில் தொழில் துவங்குதல் ஆகியவற்றுக்கு இது உதவும்,”.

கடந்த ஒரு வருடமாக தனது ஜி-20 தலைமைப் பொறுப்பை இந்தியா சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டது, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் இக்குழுவின் தலைமைப் பொறுப்பில் இருப்பது மிகப்பெரிய வாய்ப்பு.

“அரசியல் ரீதியாக உலக நாடுகள் பிளவுபட்டுக் கிடக்கையில், இதுபோன்ற ஒரு தலைமைப் பொறுப்பின் மூலம், உலக நாடுகளும், இந்தியாவின் அண்டை நாடுகளும் இந்தியப் பிரதமரும் நிதியமைச்சரும் பேசுவதைக் கூர்ந்து கவனிப்பார்கள். இந்த அதிகாரம் இந்தியாவிடம் இருப்பது அரசியல் சர்வதேச அரசியல் ரீதியாகவும் நமக்குப் பயனுள்ளதாக இருக்கும்,”.

இது பல நாடுகள் ஒன்றாகக் கூடும் மாநடாக இருப்பினும், இரு நாடுகள் தனித்தனியே தங்களுக்குள் என்ன மாதிரியான விவாதங்களை முன்னெடுக்கின்றன என்பதைப் பொறுத்தே தனிப்பட்ட நாடுகளுக்கான அடைவுகள் இருக்கும்.

“உதாரணமாக இந்தியா, அமெரிக்காவுடனும் மற்ற நாடுகளுடனும் தனிப்பட்ட முறையில் என்ன பேசுகிறது என்பதைப் பொறுத்து இந்தியாவுக்கான அடைவுகள் இருக்கும்,”.

அதேபோல், மூன்றாம் உலக நாடுகள், தீவு நாடுகள், மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் ஆகியவற்றின் சர்வதேசக் குரலாக இந்தியா இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக இருகிறது. இதற்குச் சான்றாக, “ஜி-20 தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா ஜி-20 கூட்டமைப்பில் இல்லாத நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கும் அதிகாரம் பெற்றது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, வங்கடேசம், எகிப்து, நைஜீரியா போன்ற நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருக்கிறது,”.

BRICS கூட்டமைப்பு விரிவாக்கப்பட்டது போலவே, ஜி-20 கூட்டமைப்பும் விரிவாக்கப்படவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

“முன்னர் ஜி-20 கூட்டமைப்பின் உறுப்பினர் நாடுகள் தங்களுக்குள் உலகப் பொருளாதாரத்தின் 90%-த்தை வைத்திருந்தனர். ஆனால் இப்போது அது 75%-ஆகக் குறைந்திருக்கிறது. இதனால், ஜி-20 கூட்டமைப்பின் பொருளாதார அதிகாரத்தை மேம்படுத்த, பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுவரும் நாடுகளைச் சேர்க்க வெண்டும் என்ற பார்வையும் இருக்கிறது,”.

உதாரணத்திற்கு, போலாந்து, நைஜீரியா, தாய்லாந்து, ஆகிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ந்து வருகிறது, அந்நாடுகளை ஏன் ஜி-20 கூட்டமைப்பில் சேர்க்கக்கூடாது என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.


Last edited by சிவா on Thu Sep 07, 2023 8:28 pm; edited 1 time in total


ஜி 20 மாநாடு 2023 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஜி 20 மாநாடு 2023 - Page 2 Empty Re: ஜி 20 மாநாடு 2023

Post by சிவா Fri Sep 08, 2023 9:46 pm

ஜி20 புறப்பட்ட அதிபருக்கு கொரோனா உறுதி! – பயணம் ரத்து


இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டிற்கு புறப்பட்ட ஸ்பெயின் அதிபருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஜி20 உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு தலைமை தாங்கி அந்நாட்டில் நடத்தி வருகிறது. அவ்வாறாக இந்த ஆண்டு ஜி20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. நாளையும் நாளை மறுநாளும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் இம்மாநாட்டில் பல நாட்டு தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக இன்றே சில நாட்டு தலைவர்கள் இந்தியா புறப்பட்டுள்ளனர்.

அவ்வாறாக ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ் இந்தியாவிற்கு புறப்பட இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது மருத்துவ சோதனையில் தெரிய வந்துள்ளது. இதனால் டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவருக்கு பதிலாக துணை அதிபர் நடியோ கெல்வினோ, பொருளாதார மந்திரி, வெளியுறவு துறை மந்திரி ஆகியோர் ஸ்பெயின் நாட்டின் பிரதிநிதிகளாக ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என ஸ்பெயின் அதிபர் தெரிவித்துள்ளார்.


ஜி 20 மாநாடு 2023 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜி 20 மாநாடு 2023 - Page 2 Empty Re: ஜி 20 மாநாடு 2023

Post by சிவா Fri Sep 08, 2023 9:51 pm

அமெரிக்க அதிபர் பைடனுக்கு இரவு விருந்து அளிக்கும் மோடி: முக்கிய விஷயங்கள் குறித்துப் பேச்சு


ஜி20 தலைவர்களின் உச்சி மாநாடு செப்.9-10 தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்கள் டெல்லி வர உள்ளனர். ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இன்று இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள தனது லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் இரவு 7.30 மணியளவில் விருந்து அளித்து உபசரிக்கிறார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்ற மூன்று மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபராக பைடனின் முதல் இந்தியா வருகை இதுவாகும். கடைசியாக 2020 பிப்ரவரியில் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவார்.

மோடி அமெரிக்கா சென்ற போது பைடன் மற்றும் அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோர் வெள்ளை மாளிகையில் அவருக்கு விருந்து அளித்து உபசரித்த நிலையில் இது ஒரு பரஸ்பர நிகழ்வாகும் என வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் இன்று சந்திப்பின் போது இருவரும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். அணுசக்தி, பாதுகாப்பு, விசா, தூதரகங்கள், ரஷ்யா-உக்ரைன் போர், ஜி20 உள்ளிட்ட இருதரப்பு பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

உச்சிமாநாட்டில் அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துடன் ஒரு கூட்டு அறிக்கைக்கு அமெரிக்கா காட்டும் நெகிழ்வுத் தன்மையைப் பொறுத்தது. உக்ரைன் மோதலில் அமெரிக்கா தலைமையிலான G7 குழுவும், ரஷ்யா-சீனா கூட்டமைப்பும் முரண்பட்டுள்ளன.

ஜோ பைடன் இன்று மாலை டெல்லி வந்தடைவார். இரண்டு நாள் மாநாட்டை முடித்து விட்டு அவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வியட்நாம் செல்கிறார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோருடன் இன்று வெள்ளிக்கிழமை தனித்தனியாக இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.


ஜி 20 மாநாடு 2023 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜி 20 மாநாடு 2023 - Page 2 Empty Re: ஜி 20 மாநாடு 2023

Post by சிவா Sat Sep 09, 2023 5:38 pm

சர்வதேச நிதி அமைப்புகளை சீரமைக்க ஒப்புதல்



சர்வதேச நிதி அமைப்புகளை சீரமைக்க ஜி20 கூட்டமைப்பின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜி20 மாநாடு தீர்மானம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் பேசியதாவது, தீர்மானம் குறித்து தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், சர்வதேச நிதி அமைப்புகளின் நம்பகமான நிலைத்தன்மை, ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

உலகளாவிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் யாரும் பின்ங்கியிருக்கக்கூடாது. இந்தியா தலைமையின் கீழ் ஆப்பிரிக்க யூனியன் ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பினரானது திருப்தி அளிக்கிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்தை பகிர்ந்து கொள்வோம் என்பதே ஜி20 கூட்டமைப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் அளிக்கும் தகவல் எனக் குறிப்பிட்டார்.


ஜி 20 மாநாடு 2023 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜி 20 மாநாடு 2023 - Page 2 Empty Re: ஜி 20 மாநாடு 2023

Post by சிவா Sat Sep 09, 2023 5:39 pm

ஜி20 கூட்டறிக்கை: உறுப்பு நாடுகள் ஒப்புதல்



ஜி20 மாநாட்டுக்கான கூட்டறிக்கைக்கு உறுப்பு நாடுகள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளன. இதனைத் தொடர்ந்து விரைவில் கூட்டறிக்கை வெளியிடப்படவுள்ளது.

உக்ரைன் - ரஷியா போர் விவகாரம் தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படுவதில் இழுபறி நீடித்த நிலையில், கூட்டறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டறிக்கை வெளியாக உதவிய அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.


ஜி 20 மாநாடு 2023 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜி 20 மாநாடு 2023 - Page 2 Empty Re: ஜி 20 மாநாடு 2023

Post by சிவா Sat Sep 09, 2023 5:50 pm

ஜி20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம்: ஜி20 மாநாட்டில் பிரதமர் துவக்க உரை



ஜி20 நாடுகள் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றினார்.

டில்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் துவங்கிய ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றியதாவது: மாநாட்டிற்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மாநாட்டின் நடவடிக்கைகள் துவங்குவதற்கு முன்னர், மொராக்கோவில் நிகழ்ந்த பூமகம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வோம். இந்த கடினமான நேரத்தில் மொராக்கோவிற்கு உதவ இந்தியா தயாராக உள்ளது. இந்த துயரமான காலத்தில் ஒட்டுமொத்த உலகமும் மொராக்காவை ஆதரிக்கிறது.

கோவிட்டிற்கு பிந்தைய உலகம் நம்பிக்கை பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. போர் அதனை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. பழமையான பிரச்னைகளுக்கு விடை தேடும் காலங்களில் நாம் வாழ்கிறோம்.

மனிதநேய அணுகுமுறையுடன் நமது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். அனைவரின் ஆதரவு; அனைவரின் வளர்ச்சி; அனைவரின் நம்பிக்கை; அனைவரின் முயற்சி என்ற கொள்கை உலகத்தை வழிநடத்தும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை உலகளவில் எடுத்து செல்ல வேண்டும்.

ஜி20 மாநாட்டிற்கு இந்தியாவின் தலைமை, அனைவரின் ஆதரவு என்பதன் அடையாளமாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மாறி உள்ளது. இந்தியா முழுவதும் 200 நகரங்களில் ஜி20 மாநாடுகள் நடந்தன.இந்த 21ம் நூற்றாண்டு, உலகிற்கு புதிய பாதையை காட்டுவதற்கான முக்கியமான நேரம்.

புதிய சவால்கள், நம்மிடம் புதிய தீர்வை எதிர்பார்க்கின்றன. இதனால், நமது கடமைகளை, மனிதநேய அணுகுமுறையுடன் நிறைவேற்ற வேண்டும். ஜி20 நாடுகள் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.


ஜி 20 மாநாடு 2023 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜி 20 மாநாடு 2023 - Page 2 Empty Re: ஜி 20 மாநாடு 2023

Post by சிவா Sat Sep 09, 2023 5:51 pm


ஜி 20 மாநாடு 2023 - Page 2 Tamil_News_large_342726420230909134359

பெயர் பலகையில் "பாரத்"


மாநாட்டு அரங்கில் பிரதமர் மோடி முன் வைக்கப்பட்டிருந்த பலகையில் நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதில் ‛பாரத்' என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் உரையை துவக்கும் போதும், நாட்டின் பெயரை ‛பாரத்' எனவே குறிப்பிட்டார்.


ஜி 20 மாநாடு 2023 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜி 20 மாநாடு 2023 - Page 2 Empty Re: ஜி 20 மாநாடு 2023

Post by சிவா Sun Sep 10, 2023 1:50 pm


டெல்லி ஜி20 மாநாடு: உலகத் தலைவர்கள் முதல்நாளில் பேசியது என்ன?


புதுடெல்லியில் செப்.9 முதல் 10ஆம் தேதிவரை ஜி20 மாநாடு நடைபெறுகிறது.

உக்ரைனில் நடந்த போருக்காக ரஷ்யாவைக் கண்டிப்பதைத் தவிர்த்த G20 நாடுகளின் குழு சனிக்கிழமையன்று ஒரு உச்சிமாநாட்டில் ஒருமித்தப் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது.

உக்ரைனில் நடந்த போரில் குழு ஆழமாக பிளவுபட்டுள்ளதால் ஒருமித்த கருத்து ஆச்சரியமாக இருந்தது, மேற்கத்திய நாடுகள் முன்னதாக தலைவர்களின் பிரகடனத்தில் ரஷ்யாவைக் கடுமையாகக் கண்டிக்க வலியுறுத்தின.

மற்ற நாடுகள் பரந்த பொருளாதார பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரின.

பொருளாதாரங்கள் மற்றும் நிதிச் சந்தைகள் (Economy)


சமமான வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் மேக்ரோ பொருளாதாரம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மை குறித்து விவாதிக்கப்பட்டது.

கிரிப்டோ-சொத்துக்கள், செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல், மேற்பார்வை குறித்து பரிந்துரைக்கப்பட்டது.

பருவநிலை மாற்றம் (Climate Change)


தேசிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப, தடையற்ற நிலக்கரி மின்சாரத்தை படிப்படியாக குறைப்பதற்கான முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டும் எனக் கோரப்பட்டது.

மேலும், வளரும் நாடுகள் குறைந்த கார்பன்/உமிழ்வுகளுக்கு தங்கள் மாற்றத்தை ஆதரிப்பதற்காக குறைந்த செலவில் நிதியுதவியை எளிதாக்கும் வகையில் செயல்படும் என உறுதியளிக்கப்பட்டது.

2030க்குள் தேசிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப, தற்போதுள்ள இலக்குகள் மற்றும் கொள்கைகள் மூலம் உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை மூன்று மடங்காக உயர்த்துவதற்கான முயற்சிகளைத் தொடரவும் ஊக்குவிக்கப்பட்டது.

உலகளாவிய கடன் பாதிப்புகள் (Debt)


வளரும் நாடுகளில் கடன் பாதிப்புகளை அவசரமாகவும் திறம்படவும் நிவர்த்தி செய்ய கோரப்பட்டது.

எத்தியோப்பியாவிற்கான கடன் பிரச்னையை தீர்க்க கோரப்பட்டது.

ஆரோக்கியம் (Health)


உலகளாவிய சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த உறுதியுடன் இருங்கள் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

பலதரப்பு மேம்பாட்டு வங்கிகளுடன் (MDBs) இணைந்து, சுகாதார அமைப்புகளின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்த வேண்டும் எனவும், காலநிலை-எதிர்ப்பு மற்றும் குறைந்த கார்பன் சுகாதார அமைப்புகளின் வளர்ச்சியை ஆதரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.


ஜி 20 மாநாடு 2023 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜி 20 மாநாடு 2023 - Page 2 Empty Re: ஜி 20 மாநாடு 2023

Post by சிவா Sun Sep 10, 2023 1:54 pm


மோடி- பைடன் சந்திப்பு: ஐ.எஸ்.எஸ் முதல் அணுசக்தி உலைகள் வரை முக்கிய ஒத்துழைப்புகள் பற்றி பேச்சு



ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ-பைடன் உடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செப்.8) இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். 3 மாதங்களுக்கு முன் மோடி அமெரிக்கா சென்ற போது இருவரும் சில முக்கிய துறை ஒப்புதங்கள் குறித்து ஆலோசித்த நிலையில் நேற்றைய சந்திப்பு அதிலிருந்து ஒரு படி முன்னேறி உள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் வெள்ளியன்று இரு நாடுகளும் விண்வெளி தொடர்பான வர்த்தகத்தில் அதிக ஒத்துழைப்புக்கான பணிக்குழுவை நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தன.

வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் ஜோ பிடன் இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து, ஜி 20 உச்சிமாநாட்டின் பக்கவாட்டில், அணுசக்தி துறையில் குறிப்பாக அடுத்த தலைமுறை சிறிய மட்டு உலை தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் இரு நாடுகளும் நெருக்கமான ஒத்துழைப்பு குறித்து பேசினர்.

சர்வதேச விண்வெளி நிலைய ஒப்பந்தம்

இந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடியின் அமெரிக்க அரசு பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு அறிக்கையில் விண்வெளி ஒத்துழைப்பு மிக முக்கியமான பகுதியாக அமைந்தது.

அப்போது, ​​கிரக ஆய்வுக்கான அமெரிக்கா தலைமையிலான ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் இந்தியாவும் இணையும் என்றும், இரு நாடுகளின் விண்வெளி நிறுவனங்களான இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து 2024-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் என்றும் இரு நாடுகளும் அறிவித்திருந்தன.

வெள்ளியன்று அவர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து கூட்டு அறிக்கை அந்த உறுதிமொழிகளை மீண்டும் வலியுறுத்தியது மற்றும் இன்னும் கொஞ்சம் முன்னேறியது.

"விண்வெளி ஒத்துழைப்பின் அனைத்துத் துறைகளிலும் புதிய எல்லைகளை அடைவதற்கான ஒரு போக்கை நிர்ணயித்துள்ள தலைவர்கள், தற்போதுள்ள இந்தியா-அமெரிக்க சிவில் விண்வெளி கூட்டுப் பணிக்குழுவின் கீழ் வணிக விண்வெளி ஒத்துழைப்புக்கான பணிக்குழுவை நிறுவுவதற்கான முயற்சிகளை வரவேற்றனர்" என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் கிரக பாதுகாப்பில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளன.

சிறுகோள் கண்டறிதல் மற்றும் மைனர் பிளானட் சென்டர் மூலம் கண்காணிப்பதில் இந்தியாவின் பங்கேற்பு உட்பட, விண்கற்கள் மற்றும் பூமிக்கு அருகில் உள்ள பொருட்களின் தாக்கத்திலிருந்து பூமி மற்றும் விண்வெளி சொத்துக்களை பாதுகாக்க, கிரக பாதுகாப்பு தொடர்பான ஒருங்கிணைப்பை அதிகரிக்க இந்தியாவும் அமெரிக்காவும் உத்தேசித்துள்ளன என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் சந்திரயான்-3 வெற்றி மற்றும் ஆதித்யா எல்.1 திட்டத்திற்கு பைடன் வாழ்த்துக் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அடுத்த ஆண்டு நாசா-இஸ்ரோ கூட்டு மனித விண்வெளிப் பயணம் குறித்த விவாதங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் கூறினார்.

அணுசக்தி பக்கத்தில், இரு நாடுகளும் காலநிலை மாற்றக் கருத்தாய்வு காரணமாக தூய்மையான எரிசக்தி ஆதாரங்களுக்கு மாற்றத்தை தீவிரப்படுத்த அணுசக்தியை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தின. இரு தலைவர்களும் "அணுசக்தியில் இந்தியா-அமெரிக்க ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு இரு தரப்பிலும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையே தீவிர ஆலோசனைகளை வரவேற்றனர், இதில் அடுத்த தலைமுறை சிறிய மட்டு உலை தொழில்நுட்பங்களை கூட்டு முறையில் உருவாக்குவது உட்பட இருநாடுகளும் ஒத்துழைப்பு செய்ய உள்ளனர் ".

அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியா உறுப்பினராக இருப்பதற்கான தனது ஆதரவை அமெரிக்கா மீண்டும் உறுதிப்படுத்தியது, மேலும் இந்த இலக்கை அடைய மற்றவர்களுடன் தொடர்ந்து பேசுவதாகக் கூறியது.


ஜி 20 மாநாடு 2023 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஜி 20 மாநாடு 2023 - Page 2 Empty Re: ஜி 20 மாநாடு 2023

Post by T.N.Balasubramanian Sun Sep 10, 2023 5:45 pm

தமிழக முதல்வர் அமெரிக்க அதிபரை சந்தித்தார்.பேசினார். தினமலர் செய்தி.

என்ன பேசி இருப்பார்கள்.?


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜி 20 மாநாடு 2023 - Page 2 Empty Re: ஜி 20 மாநாடு 2023

Post by சிவா Sun Sep 10, 2023 5:50 pm

T.N.Balasubramanian wrote:தமிழக முதல்வர் அமெரிக்க அதிபரை சந்தித்தார்.பேசினார். தினமலர் செய்தி.

என்ன பேசி இருப்பார்கள்.?


அங்குள்ள அதிகாரிகளிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக் கொள்கிறேன் எனக் கேட்டதால் அங்கு செல்ல அனுமதித்துள்ளார்கள்.

அதைக் காண்பித்தால் இங்குள்ள உபிக்கள் அடுத்த உலக அரசியலை நிர்ணயிக்கும் சக்தி எங்கள் தலைவர் ஸ்டாலினுக்குத்தான் உள்ளது என புளகாங்கிதம் அடைவார்கள் என்பது தலைமைக்கு தெரியும்.

அதனால் தான் அந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.


ஜி 20 மாநாடு 2023 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜி 20 மாநாடு 2023 - Page 2 Empty Re: ஜி 20 மாநாடு 2023

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum