புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_m10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10 
63 Posts - 40%
heezulia
நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_m10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_m10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_m10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_m10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_m10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_m10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_m10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10 
314 Posts - 50%
heezulia
நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_m10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_m10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_m10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_m10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10 
21 Posts - 3%
prajai
நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_m10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_m10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_m10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_m10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_m10நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 07, 2023 9:50 pm

நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் UJxLk6C

புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டால், அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும்.

ஆனால் 1970 களில் இருந்து, புற்றுநோயிலிருந்து பிழைத்து உயிர்வாழும் விகிதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் ஆரம்பக் கால நோயறிதல்.

உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை.

பிரச்னை என்னவென்றால், பல சமயங்களில், மருத்துவரைத் தொந்தரவு செய்ய விரும்பாததாலும், அதற்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்காததாலும், நாம் ஆரம்பகால நோயறிதலுக்கு முக்கியமான சில அறிகுறிகளை புறக்கணிக்கிறோம்.

Cancer Research UK என்ற அமைப்பு நடத்திய ஆய்வின்படி, இங்கிலாந்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சில சமயங்களில் புற்றுநோயின் இருப்பைக் குறிக்கும் அறிகுறிகளில் ஒன்றை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் இவர்களில் 2% பேர் மட்டுமே தாம் இந்த நோயால் பாதிக்கப்படுவோம் என்று நினைத்தார்கள். மேலும் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தச் சமிக்ஞைகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டனர்.

இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட லண்டனில் இருக்கும் யுனிவர்சிட்டி காலேஜைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் கத்ரீனா விட்டேக்கர், மக்கள் தங்கள் உடல்நிலையைப் பற்றிக் காரணமில்லாமல் கவலைப்படக் கூடாது என்கிறார். “ஆனால் நிறைய மக்கள் மருத்துவரிடம் செல்ல வெட்கப்படுகிறார்கள். அவர்கள் நேரத்தை வீணடிக்கப் போகிறோம் என்றோ, சுகாதார அமைப்பின் வளங்களை வீணடிக்கப் போகிறோம் என்றோ நினைக்கிறார்கள்,” என்கிறார்.

மேலும் பேசிய அவர், "உங்களுக்கு மறைந்து போகாத அறிகுறிகள் இருந்தால், குறிப்பாக புற்றுநோய்க்கான அறிகுறிகளாகக் கருதப்படுபவை இருந்தால், நீங்கள் அவற்றைப் புறக்கணிக்கக்கூடாது, மருத்துவரிடம் சென்று உதவி பெற வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் அறிவுரைப்படி, புற்றுநோயின் இந்த 10 அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்கக்கூடாது.

1. காரணமில்லாத உடல் எடை இழப்பு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் ஒரு கட்டத்தில் உடல் எடையை இழக்கின்றனர்.

எந்தக் காரணமும் இல்லாமல் உடல் எடை 5 கிலோ அல்லது அதற்கு மேற்பட்டு குறைந்தால், அது புற்றுநோயின் முதல் அறிகுறியாக இருக்கலாம்.

கணையம், வயிறு, உணவுக்குழாய் அல்லது நுரையீரல் புற்றுநோய்களால் இது அடிக்கடி நிகழ்கிறது.

2. அடிக்கடி காய்ச்சல்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காய்ச்சல் வருவது மிகவும் பொதுவானது. புற்றுநோய் தொடங்கிய இடத்திலிருந்து பரவ ஆரம்பித்தப் பிறகு இது அடிக்கடி நிகழ்கிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் காய்ச்சலை அனுபவிப்பார்கள். புற்றுநோய் அல்லது அதன் சிகிச்சைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிப்பதால் இது நிகழ்கிறது.

பொதுவாக, காய்ச்சல், ரத்தப் புற்றுநோய் (leukemia) அல்லது நிணநீர்க்குழியப் புற்றுநோய் (lymphoma) போன்ற புற்றுநோய்களில் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

3. தீவிரமான உடல் சோர்வு

ஓய்வெடுத்தாலும் தீராத தீவிரமான உடல் சோர்வும் ஒரு அறிகுறி.

புற்றுநோய் பரவும்போது இது ஒரு முக்கியமான அறிகுறியாக இருக்கலாம்.

லுகேமியா போன்ற சில புற்றுநோய்களில், முதலில் சோர்வு ஏற்படலாம்.

சில பெருங்குடல் அல்லது வயிற்றுப் புற்றுநோய்கள் வெளிப்படையாகத் தெரியாத இரத்த இழப்பை ஏற்படுத்தும். அதனாலும் உடல் சோர்வு ஏற்படலாம்.

4. தோலில் ஏற்படும் மாற்றங்கள்

தோல் புற்றுநோய்களுடன், வேறு சில புற்றுநோய்களும் வெளிப்படையாகத் தெரியும் தோல் மாற்றங்களை ஏற்படுத்தும்.

இதற்கான அறிகுறிகள்:

சருமம் கருமையாகுதல் (hyperpigmentation)

தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல் (jaundice)

தோல் சிவத்தல் (erythema), அரிப்பு (pruritus)

அதிகப்படியான முடி வளர்ச்சி

5. மலம் அல்லது சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் மாற்றங்கள்

மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு அல்லது உங்கள் மலத்தின் அளவு நீண்ட காலமாக மாறுவது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

மறுபுறம், சிறுநீர் கழிக்கும் போது வலி, சிறுநீரில் இரத்தம் அல்லது சிறுநீர்ப்பை செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் (அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சிறுநீர் கழிப்பது போன்றவை) சிறுநீர்ப்பை அல்லது புரோஸ்டேட் புற்றுநோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

6. ஆறாத காயங்கள்

மச்சங்கள் — குறிப்பாக வளரும், வலி ஏற்படுத்தும், அல்லது இரத்தம் கசியும் மச்ச்சங்கள் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம் என்பது பலருக்கும் தெரியும்.

ஆனால் நான்கு வாரங்களுக்கு மேல் குணமடையாத சிறிய காயங்கள் குறித்தும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

ஆறாத வாய்ப் புண் வாய்ப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

நீண்ட காலமாக ஆறாத வாயில் ஏற்படும் எந்த மாற்றமும் உடனடியாக ஒரு மருத்துவர் அல்லது பல் மருத்துவரால் பரிசோதிக்கப்பட வேண்டும்.

ஆண்குறி அல்லது பெண்ணுறுப்பில் ஏற்படும் புண்கள், தொற்று அல்லது ஆரம்ப நிலை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இவையும் ஒரு மருத்துவரால் பரிசோதிக்கப்பட வேண்டும்.

7. இரத்தப்போக்கு

புற்றுநோயுடன் ஆரம்ப அல்லது மேம்பட்ட நிலைகளில் அசாதாரண இரத்தப்போக்கு ஏற்படலாம்.

இருமும் போது இரத்தம் வருவது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

மறுபுறம், மலத்தில் இரத்தம் தோன்றினால் (இது மிகவும் கருமையான நிறத்தில் இருக்கலாம்) அது பெருங்குடல் புற்றுநோய் அல்லது மலக்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

கர்ப்பப்பையின் உட்பரப்பின் புற்றுநோயால், கருப்பையிலிருந்து அசாதாரண ரத்தப்போக்கு ஏற்படலாம்.

மேலும், சிறுநீரில் இரத்தம் வருவது சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

முலைக் காம்பிலிருந்து இரத்தம் தோய்ந்த கசிவு வெளிவருவது மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

8. உடலில் தடிப்பு அல்லது கட்டிகள்

பல புற்றுநோய்களை தோலில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் உணர முடியும்.

இந்தப் புற்றுநோய்கள் முக்கியமாக மார்பகங்கள், விரை, நிணநீர் கணுக்கள் (சுரப்பிகள்) மற்றும் உடலின் மென்மையான திசுக்களில் ஏற்படுகின்றன.

தடிப்பு அல்லது கடினமாக்குதல் புற்றுநோயின் ஆரம்ப அல்லது மேம்பட்ட நிலையின் அறிகுறியாக இருக்கலாம்.

9. விழுங்குவதில் சிரமம்

தொடர்ந்து அஜீரணம் அல்லது விழுங்குவதில் சிரமம் இருந்தால் அது உணவுக்குழாய், வயிறு அல்லது குரல்வளை (தொண்டை) புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

இருப்பினும், இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான அறிகுறிகளைப் போலவே, அவை பெரும்பாலும் புற்றுநோயைத் தவிர வேறு காரணங்களாலும் ஏற்படுகின்றன.

10. தொடர் இருமல் அல்லது தொண்டை கரகரப்பு

தொடர் இருமல் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

மூன்று வாரங்களுக்கு மேல் இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.

தொண்டை கரகரப்பு குரல்வளை அல்லது தைராய்டு சுரப்பிப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக