புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை Poll_c10பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை Poll_m10பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை Poll_c10 
30 Posts - 50%
heezulia
பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை Poll_c10பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை Poll_m10பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை Poll_c10பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை Poll_m10பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை Poll_c10பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை Poll_m10பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை Poll_c10 
72 Posts - 57%
heezulia
பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை Poll_c10பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை Poll_m10பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை Poll_c10பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை Poll_m10பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை Poll_c10பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை Poll_m10பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 31, 2023 7:54 pm



வழக்குகள், தீர்ப்புகளில் பெண்களுக்கு எதிரான சொல்லாடல்களைப் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தியதோடு, இது தொடர்பான கையேட்டை வெளியிட்டது. சொல்லாடல்களை மாற்றிவிடுவதன் மூலம், பாலின சமத்துவம் நிகழாது. பாலின சமத்துவம் குறித்த சமூகக் கண்ணோட்டம் தேவைப்படுகிறது.

மொழி மனிதனுடன் நேரடித் தொடர்பில் உள்ளதால், அந்தந்த சமூகத்தின் சாயல்களை அது பிரதிபலிக்கிறது; சமூகக் கட்டமைப்பில் ஒரு பிரதானப் பங்கை வகிக்கிறது. தமிழில் ஆண்பால், பெண்பால், பலர் பால், ஒன்றன் பால், பலவின் பால் என ஐந்து பால் வகையிலான வேறுபாடுகள் உள்ளன.

மிகவும் வலிமையான, உயர்வான பொருள்களைக் குறிக்க ஆண்பாலையும், வலிமையற்றதைக் குறிக்க பெண்பாலையும் பயன்படுத்துதலை பல்வேறு மொழிகளிலும் காணலாம். தமிழின் வட்டார வழக்குகளில் பெண்பாலை அஃறிணையாகக் குறிப்பிடுவதை மிகச் சாதாரணமாகக் கடந்து செல்கிறோம். எல்லா மொழிகளிலுமான இலக்கியங்கள் பாலின ரீதியில் பெண்களுக்கு எதிரான சொற்களையும், சிந்தனைகளையுமே முன்னிறுத்துகிறது. அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு போன்றவை பெண்களுக்கான விதிகள் என்பதிலிருந்து, சமூகத்தில் பெண் என்பவள் தனியாக இருக்க முடியாது என்கிற பழைமைவாத சிந்தனையை முன்வைக்கும் இதிகாசங்கள் வரை இலக்கிய வெளி, ஆண் மைய வாதத்துடனே செயல்பட்டு வந்திருக்கிறது. அதிலும் ஆங்காங்கே ஆண்டாள் போன்ற பெண் குரல்கள் எழுந்தன.

மொழியில் பாலின இடைவெளி!


அனைத்து வகையான அதிகாரங்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாலின விதிமுறைகளை வரையறுத்து வடிவமைக்கப்பட்டுள்ளன. பெண்களின் மீது திணிக்கப்பட்ட கற்பு, ஆண்களின் தனிச் சொத்துரிமையையும், ரத்த வழியையும் நிலைநிறுத்த உதவியது. கற்புக்கரசி, வாழாவெட்டி, வைப்பாட்டி, விதவை, மலடி, முதிர்கன்னி, தாசி, வேசி, காமக்கிழத்தி போன்ற பெண்களைக் குறிக்கும் சொற்களுக்கு நிகராக, ஆண்களைக் குறிக்கும் சொற்கள் இல்லை.

பாலின சமத்துவக் கோட்பாடுகளையும், பெண்களுக்கான உரிமைகளுக்காகவும் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு இயக்கங்கள் உலகம் முழுவதும் குரல் எழுப்பி வந்துள்ளன. மொழியில் பாலின சிக்கல்களைக் களைய நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படுகிறது. அம்மாற்றம் மொழியில் மட்டும் தனியாக நிகழாது; சமூக மாற்றத்துடன் இணைந்தே நிகழும். பெண்ணிய மற்றும் பொதுவுடமை சிந்தனாவாதிகள் தொடர்ச்சியாக பாலின சமத்துவத்துக்காக குரலெழுப்பி வருகின்றனர். பழைமைவாத சொற்களுக்கும் கருத்துகளுக்கும் எதிராகப் பெண்களும் முற்போக்காளர்களும் எழுப்பிய குரலின் விளைவாக, உச்ச நீதிமன்றம் பாலின பழைமைவாத சொற்களுக்கு எதிராக ஒரு கையேட்டைக் கொண்டுவந்துள்ளது.

உச்ச நீதிமன்றம் அறிமுகம் செய்த கையேடு


பாலின அடிப்படையிலான சொற்கள் (ஆண்கள் தவிர்த்த பிற பாலினங்களுக்கு எதிரான) நீதிமன்றத்திலும் பத்திரிகைகளிலும், புத்தகங்களிலும் மிகச் சாதரணமாக புழக்கத்தில் உள்ளன. நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் இப்பழமை வாதத்திலிருந்து வெளிவர உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கோரிக்கை வைத்துள்ளார்.

பெண்கள் ஒரே மாதியான குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்பதோ, பாலின ரீதியில் பெண்கள் அணுகப்பட வேண்டியவர்கள் என்பதோ, பாலுறவை மையமாக வைத்து பெண்களை மதிப்பிடுவதும் பாலின ரீதியிலான பழைமைவாதம் என அக்கையேடு குறிப்பிடுகிறது.

மேலும், இப்பாகுபாடுகளைக் களைய பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில், சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் முன்னிலைப்படுத்துதல், பழைமைவாத சொற்கள் சரியற்றவை என்கிற விவாதத்துடன் பொதுவான சொற்களைக் கண்டறிதல் மற்றும் பழைமைவாதத்துக்கு எதிரான இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை முன்னிலைப்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் பாலின சமத்துவத்தை வளர்த்தெடுக்க, இக்கையேடு வழிவகை செய்கிறது. அதாவது, ஏழைகள் குற்றம் செய்வார்கள் என்கிற பொதுப்புத்தியுடன் அவர்களை நீதிபதிகள் அணுகினால், நீதியின் தன்மை இங்கு கேள்விக்குறியாகும் என்னும் உதாரணத்தை இக்கையேடு முன்வைக்கிறது.

பெண்களுக்கு எதிரான பழைமைவாதக் கருத்துகள்


பெண்களுடைய உடை பிறரைத் தூண்டும் விதத்தில் அமைகிறது என்பதால், ஆண் பெண்ணைத் தொடுகிறான் என்னும் பழைமைவாதத்தை சுட்டிக் காட்டி, ஒரு பெண் உடையணிவது அவருக்காக மட்டுமே அன்றி, ஆண் அவரைத் தொட வேண்டும் என எவ்விதமான அழைப்பையும் கொடுப்பதற்காக அல்ல. ஒரு பெண் குடிப்பதும் புகைப்பதும் அவர் பாலுறவுக்காகக் கொடுக்கும் அழைப்பு அல்ல; மாறாக ஒரு பெண் குடிப்பது என்பது ஆண் குடிப்பது போன்ற பொதுத்தன்மை உடையது. அது எவ்வகையிலும் ஆண்களுக்காகக் கொடுக்கும் அழைப்பல்ல.

பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட ஒரு பெண், அழுகையுடனோ, மன அழுத்தத்திலோ இருக்க வேண்டும்; அப்படியில்லையெனில் அப்பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படவில்லை எனும் சிந்தனை பழைமைவாதம். ஆதிக்கசாதியைச் சார்ந்த ஆண், ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்க மாட்டான் என்பதும், பாலியல் தொழிலாளிகளையும் திருநங்கைகளையும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்க முடியாது என்பதும், ஆண்களால் பாலியல் ஆசைகளை அடக்க முடியாது என்பதும் பழைமைவாதம். இப்படியாகப் பெண்களுக்கெதிரான பழைமைவாதக் கருத்துகள் சிலவற்றைப் பட்டியலிட்டு அதை எப்படி அணுக வேண்டும் என விவரித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

ரஞ்சன் கோகாய் வழக்கு உணர்த்துவது என்ன?


2017-ல் கேரள உயர் நீதிமன்றம் 24 வயதுடைய பெண் தனியாக தன் திருமணம் குறித்து முடிவெடுக்க முடியாது என வழங்கப்பட்ட தீர்ப்பை பாலின பழமைத்துவம் வாய்ந்தது என்கிறது உச்ச நீதிமன்றம். இப்படி, பாலின பழமைத்துவத்திற்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை முன்வைக்கும் அக்கையேட்டில், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டில், உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் அவரது பதவிக் காலத்தில் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்ட பொழுது, தனது வங்கி இருப்பில், வெறும் 6.8 லட்சம் மட்டுமே இருப்பதால், தன் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்க முடியாததுனாலே பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்றதுடன், நீதித்துறையின் மீதான சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்றார். மேலும், நீதிமன்ற அலுவலகத்தை செயலிழக்க வைக்க, இதற்குப் பின்னால் ஒரு பெரும் சக்தி செயல்படுகிறது என்றார்.

இறுதிவரை அந்தப் பெரும் சக்தி யாரென அவர் வெளியே சொல்லவில்லை. தனது வழக்குக்கு தானே நீதிபதியாக இருக்க முடியாது எனும் இயற்கை நீதிக்கு மாறாக, முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை அவரே விசாரித்தார். ``பாலியல் வன்முறை அல்லது பாலியல் வன்புணர்வில் பெண்கள் பொய்க்குற்றச்சாட்டுகளைக் கூறுவார்கள்” என்பது ஒரு பழைமைவாதம் என உச்ச நீதிமன்ற பாலியல் பழைமைத்துவத்துக்கு எதிரான கையேட்டில் 20-ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றமே பாலின பழைமைத்துவத்திலிருந்து விடுபடவில்லை என்பதே நீதிபதி ரஞ்சன் கோகாய் வழக்கு காட்டுகிறது.

மருத்துவர் புரூனோ திருமண வழக்கு


உச்ச நீதிமன்றத்தின் பாலின பழைமைத்துவம் வாய்ந்த மற்றொரு வழக்கு இது. மனுதாரரான மருத்துவர் புரூனோ 2005-ம் ஆண்டு, மருத்துவர் அமலியைத் திருமணம் புரிந்துகொண்டார். திருமணமாகிய சில மாதங்களில், குழந்தை இல்லை என்பதற்காக அமலியைத் தொடர்ச்சியாக சித்திரவதை செய்து வந்ததுடன், குழந்தை வேண்டி பூஜை நடத்தியும், கோமியம் குடிக்கச் சொல்லியும் வற்புறுத்தியுள்ளார்.

முதல் குழந்தைக்குப் பின், இரண்டாவது குழந்தை பெற்று கொள்ளச் சொல்லி, சித்தரவதைகள் நிகழ்ந்துள்ளன. அமலியின் மரணத்துக்கு சில தினங்கள் முன்பு, 27.10.2014 அன்று, தன் உதட்டிலும் கண்களிலும் இருந்த காயங்கள், புரூனோவின் தாக்குதல் என அமலி தன் அக்காவிடம் பகிர்ந்துள்ளார். தொடர் சித்திரவதைகளின் காரணமாக அவர் 5.11.2014 அன்று மர்மமான முறையில் மரணமடைந்தார். பாத்ரூம் குழாயில், துப்பாட்டாவால் தூக்குமாட்டிக்கொண்டார் என்பதே மனுதாரரின் வாக்குமூலம்.

மருத்துவர் அமலி இறந்தபொழுது, எக்டோபிக் பிரக்னன்சி என்னும் தவறான இடத்தே கருத்தரித்ததால், கருக்கலைப்பு ஆகி, அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு இறந்தார் என்ற செய்தி, பத்திரிகைகளிலும், மருத்துவர் புரூனோவின் நண்பர்கள் மூலமுமாக இணையத்திலும் வெளிவந்தது. இப்பொய் செய்தியை பரப்பியவர் யாரென விசாரிக்கத் தவறியது நீதிமன்றம். அமலியை உடற்கூறாய்வு செய்த மருத்துவரின் கூற்றுப்படி, அமலியின் கழுத்திலும் உதட்டிலும், கை மூட்டிலும், மண்டையிலும், இடது காலிலும் காயங்கள் இருந்தன.

மேலும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நியூரோ சர்ஜினாக இருந்த புரூனோ, மருத்துவர் அமலியின் உடற்கூறாய்வின்போது உடனிருந்தது சந்தேகத்துக்குரியது. மருத்துவர் அமலியின் மரணத்தில், மனுதாரருக்கு எந்தப் பங்கும் இல்லை; மனநலன் பாதிக்கப்பட்டதால் நிகழ்ந்த தற்கொலை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி புரூனோவை விடுதலை செய்துள்ளது. தூக்கு மாட்டி, மூச்சுத்திணறி அமலி இறந்தார் என்றால், உடற்கூறாய்வு அறிக்கையில் இருக்கும் மற்ற காயக்களுக்கான பதிலை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் விவாதிக்கத் தவறிவிட்டது.

சொல்லாடல்கள் மாறுவதால் பாலின சமத்துவம் நிகழுமா?


அமலி மனநலன் பாதிக்கப்படவர் என்பதே மனுதாரரான புரூனோவின் வாதம். பைபோலார், ஹாலுசினேஷன் உட்பட பல மனநலப் பிரச்னைகளை சந்தித்து, மருத்துவம் பார்த்ததாகச் சொல்லும் மனுதாரர், அதற்கென எந்த ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. எவ்வித ஆதாரங்களுமின்றி, உச்ச நீதிமன்றம் எப்படி மருத்துவர் அமலியை பை போலர் நோயாளியாக்கியது? இது ஒருவகையில் பாலின பழைமைவாதம் அல்லவா?

பெரும்பாலான ஆண்கள், பெண்களை மனநலன் பாதிக்கப் பட்டவர்கள் எனச் சொல்லியே நீதிமன்றத்தை நாடுகின்றனர் என்று மருத்துவர் அமலி வழக்கின் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது மகிளா நீதிமன்றம். சொல்லாடல்களை மாற்றி விடுவதன் மூலம், பாலின சமத்துவம் நிகழாது. பாலின சமத்துவம் குறித்த சமூகக் கண்ணோட்டம் தேவை. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பாலின சமத்துவம் குறித்த கல்வி தேவை.

உச்ச நீதிமன்றத்தின் பாலியல் பழைமைத்துவத்துக்கு எதிரான கையேட்டுக்குப் பின்பு, இனி நீதிமன்றங்களிலும், பத்திரிகைச் செய்திகளிலும் பெண்களை பாலின ரீதியில் இழிவுபடுத்தும் சொற்களைக் கொண்டு பயன்படுத்த மாட்டார்கள் என்பதை பெண்கள் உறுதிபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும். பாலின சமத்துவம் வெறும் ஏட்டில் மட்டும் இல்லாமல், சமூக நடைமுறைகளிலும் பெண்கள் மீதான பழைமைவாதங்கள் கட்டுடைக்கப்பட்டு, சமூக மாற்றம் நிகழ பெண்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

விகடன்




பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 31, 2023 7:56 pm

புதிய வார்த்தைகளை வெளியிட்ட உச்ச நீதிமன்றம்


40 வார்த்தைகளுக்கு பதில், புதிய வார்த்தைகள் அடங்கிய கையேடு புத்தகத்தை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் வெளியிட்டுள்ளார்.

அதனை வெளியிட்டுப் பேசிய சந்திரசூட், `கடந்த கால தீர்ப்புகளில் பெண்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட சில வார்த்தைகள் முறையற்றவை. கோர்ட் தீர்ப்பை விமர்சிக்கும் நோக்கத்தில் இந்த கையேடு வெளியிடப்படவில்லை. ஒரே மாதிரியான வார்த்தைகள் எவ்வாறு கவனக்குறைவாக கையாளப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டவே இந்தக் கையேடு வெளியிடப்படுகிறது’ என்று குறிப்பிட்டார்.

மேலும், `நீதிபதிகள் சட்டபூர்வமாக சரியான தீர்ப்புகளை வெளியிட்டாலும், அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் தனி நபர்களின் கண்ணியம், நற்பண்புகள், சுயத்தை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்து விடுகிறது’ என்றும் குறிப்பிட்டார்.

புதிய கையேட்டின்படி பெண்களைக் குறிப்பிடும் வார்த்தைகள் சிலவற்றிற்கு வேறு வார்த்தைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி ’தவறிழைத்த பெண்’, ’முறை தவறிய பெண்’களை பொதுவான வார்த்தையாக பெண் என்றே குறிப்பிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

`விபச்சாரி’ என்ற வார்த்தைக்கு பதிலாக பாலியல் தொழிலாளி என்றும், `கள்ள உறவில் ஈடுபட்ட பெண்’ என்பதை `திருமணத்திற்கு வெளியே உடலுறவில் ஈடுபட்ட பெண்’ என்றும், `தகாத உறவு’ என்பதை திருமணத்தை மீறிய உறவு என்றும் அழைக்க வேண்டும். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைகளை கடத்தப்பட்ட குழந்தை என்றும், வல்லுறவை ’பலாத்காரம்’ என்றும் குறிப்பிடவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

`ஈவ் டீசிங்’ என்பதை தெரு பாலியல் துன்புறுத்தல் என்றும், `ஹவுஸ்வொயிஃப்’ என்பதை `ஹோம் மேக்கர்’ என்றும், ’முதிர்கன்னி’ என்பதை `திருமணாகாதவர்' என்றும், `சோம்பேறி’ என்பதை வேலை இல்லாதவர் என்றும், திருமணமாகாமல் தாயானவரை தாய் என்றே அழைக்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வார்த்தைகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.



பெண்களை இழிவுபடுத்தும் சொற்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக