ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கையர் திலகம் - 68 வது வருடத்தை நிறைவு செய்யும் திரைப்படம்

Go down

மங்கையர் திலகம் - 68 வது வருடத்தை நிறைவு செய்யும் திரைப்படம் Empty மங்கையர் திலகம் - 68 வது வருடத்தை நிறைவு செய்யும் திரைப்படம்

Post by ayyasamy ram Sat Aug 26, 2023 5:22 pm

மங்கையர் திலகம் - 68 வது வருடத்தை நிறைவு செய்யும் திரைப்படம் Main-qimg-fddc3ead9c364ef4ea46140718abf0ff
-

1928 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வலம்புரியில் சோமநாதன்
பிறந்தார். தமிழ் மரபியக்கங்களுடன், ஆங்கிலமும் கற்றுத் தேர்ந்தவர்
திருமகள் பத்திரிகையில் வேலைக்கு சேர்ந்தார்.

அப்போது கண்ணதாசன் அப்பத்திரிகையின் பொறுப்பை கவனித்து
வந்தார். கண்ணதாசன் அளித்த ஊக்கத்தில் பத்திரிகையில் வலம்புரி
சோமநாதன் எழுதத் தொடங்கினார். சக்தி, சண்டமாருதம், முல்லை
போன்ற அந்தக்கால பத்திரிகைகளில் வலம்புரி சோமநாதனின்
படைப்புகள் வெளிவந்தன.
ஏவிஎம் நிறுவனத்தின் கதை இலாகா மூலம் சினிமாவில் நுழைந்தார்.

1950 இல் பானுமதி நடித்த நகைச்சுவை திரைப்படம் மணமகள் தேவைக்கு
வலம்புரி சோமநாதன் வசனம் எழுதினார். படம் வெற்றி பெறவே
தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்தன. படத்தயாரிப்பு, இயக்கம் என அவரது
திறமைகள் கிளைவிரிக்க ஆரம்பித்தது. ஐம்பதுகளில் தமிழின் முன்னணி
வசனகர்த்தாவாக திகழ்ந்த வலம்புரி சோமநாதனின் குறிப்பிடத்தகுந்த
படங்களில் ஒன்று மங்கையர் திலகம்.

சிவாஜி நடிக்கும் படங்களில் அவரைத்தாண்டி ஒருவர் நடிப்பில்
ஜொலிப்பது என்பது அரிது. எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா என சில ஆண்
நடிகர்கள் சிவாஜியை பல இடங்களில் தாண்டி பிரகாசித்திருக்கிறார்கள்.
பெண் நடிகர்களில் அப்படியொரு அதிசயம் அபூர்வமாக மங்கையர் திலகம்
படத்தில் நடந்தது. அதற்கு காரணம் கதை.

மங்கையர் திலகம் படம், மராத்தியின் புகழ்பெற்ற இயக்குனர் சாந்தாராம்
கோவிந்த் அதவலே 1953 இல் இயக்கிய திரைப்படத்தின் தழுவலாக
உருவானது. மராத்திப் படத்தின் கதையை தமிழுக்கேற்ப சதாசிவம் பிரம்மம்
எழுத, வசனத்தை வலம்புரி சோமநாதன் எழுதினார்.

அவருக்கு உதவிபுரிந்த ஜி.ராமகிருஷ்ணன், டி.நாகலிங்கம் ஆகியோரது
பெயர்களும் படத்தின் டைட்டிலில் இடம்பெற்றது.

மங்கையர் திலகத்தில் எஸ்.வி.சுப்பையாவும், சிவாஜியும் அண்ணன்
தம்பிகள். அண்ணன் பெயர் கருணாகரன், தம்பி வாசுதேவன். தாய்,
தந்தை இல்லாத குறை தம்பிக்குத் தெரியாத வகையில் அவனை
வளர்த்து வருவார் கருணாகரன்.

சிறுவன் வாசுதேவனாக மாஸ்டர் பாஜி நடித்திருந்தான். அண்ணன்
என்னத்தான் அன்போடு வளர்த்தாலும் வாசுதேவனுக்கு அம்மாவின்
அன்பும், அரவணைப்பும் இல்லாத ஏக்கம் எப்போதும் வாட்டியபடியே
இருந்தது.
தம்பி வற்புறுத்தி அண்ணனை திருமணம் செய்ய வைப்பான். அண்ணி
வடிவில் ஓர் அன்னை கிடைக்கலாம் என்ற நப்பாசை.

அவன் எதிர்பார்த்தது போல் அண்ணன் கருணாகரன் திருமணம் செய்த
சுலோசனா குணத்தில் ஒரு மங்கையர் திலகம். வாசுதேவனை சொந்த
மகனைப் போலவே பார்த்துக் கொண்டாள். சுலோசனாவின் பிரசவத்தின்
போது குழந்தை இறந்துவிடும். இனிமேல் குழந்தை பிறக்க வழியில்லை
என்பார் மருத்துவர். எனக்கு இந்த ஒரு குழந்தை போதும் என்று
வாசுதேவனை முத்தமிடுவாள் சுலோசனா.

வாசுதேவன் வளர்ந்த பிறகு பிரபாவை திருமணம் செய்து கொள்வான்.
பிரபா சுலோசனாவுக்கு நேர் எதிர்குணம். அவளது அப்பா ஒரு பிள்ளைப்
பூச்சி. நாட்டாமை செய்வது அவளது அம்மா. அதையே புகுந்தவீட்டிலும்
கடைபிடிக்க, அமைதியான குளத்தில் கல் எறிந்தது போலாகிவிடும்.

சுலோசனாவின் அமைதி பிரபாவின் அலட்டல்கள் அந்தக் குடும்பத்தைப்
பிரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.. பிரபா ஒரு குழந்தைக்கு தாயாக,
அந்தக் குழந்தையை தன் குழந்தை போல் பார்த்துக் கொள்வாள்
சுலோசனா.

அது பிரபாவுக்குப் பிடிக்காது. இந்த முரண் இறுதியில் என்னானது?
சுலோசனாவின் குணத்தையும், தியாகத்தையும் பிரபா புரிந்து
கொண்டாளா என்பது கதை.

இதில் சுலோசனாவாக பத்மினி நடித்தார். படத்தின் கதை அவரைச்
சுற்றியது என்பதால் அதிகபட்ச உழைப்பை கொட்டி நடித்திருந்தார்.
படத்தின் முக்கிய தூணாக அவரது நடிப்பு இருந்ததை
மறுப்பதற்கில்லை.

அம்மா, மற்றும் தங்கையின் கொட்டத்தை அடக்க, தனது தோழியுடன்
சேர்ந்து அடங்காபிடாரி நாடகம் போடும் கே.ஏ.தங்கவேலுவின் பாத்திரம்
மங்கையர் திலகத்தின் கலகலப்பான பகுதி. வலம்புரி சோமநான்

அந்தக்காலகட்ட எதுகை மோனை வசனங்களை தவிர்த்து இயல்பான
வசனங்களால் மங்கையர் திலகத்தை மகத்தான இடத்துக்கு
நகர்த்தியிருந்தார்.

பெரியவர் எல்.வி.பிரசாத்தின் இயக்கம், பி.எல்.ராயின் ஒளிப்பதிவு,
என்.எம்.சங்கரின் எடிட்டிங், எஸ்.தட்சிணாமூர்த்தியின் இசை ஆகியவை
ஒத்திசைந்து நல்லதொரு கலானுபவத்தை தந்தன.

குடும்பப் படங்கள் அருகிவிட்டன, இப்போதெல்லாம் கதையம்சமுள்ள
படங்களை பார்க்க முடியவில்லை என்பவர்கள் மங்கையர் திலகத்தைப்
பார்க்கலாம். 1955 ஆகஸ்ட் 26 இதே நாளில் வெளியான மங்கையர் திலகம்
இன்று 68 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
-
நன்றி- நியூஸ் 18
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum