புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஷியாவின் லூனா-25 ஆய்வுக் கலம்: மீண்டும் தொடங்கும் விண்வெளிப் பந்தயம் Poll_c10ரஷியாவின் லூனா-25 ஆய்வுக் கலம்: மீண்டும் தொடங்கும் விண்வெளிப் பந்தயம் Poll_m10ரஷியாவின் லூனா-25 ஆய்வுக் கலம்: மீண்டும் தொடங்கும் விண்வெளிப் பந்தயம் Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
ரஷியாவின் லூனா-25 ஆய்வுக் கலம்: மீண்டும் தொடங்கும் விண்வெளிப் பந்தயம் Poll_c10ரஷியாவின் லூனா-25 ஆய்வுக் கலம்: மீண்டும் தொடங்கும் விண்வெளிப் பந்தயம் Poll_m10ரஷியாவின் லூனா-25 ஆய்வுக் கலம்: மீண்டும் தொடங்கும் விண்வெளிப் பந்தயம் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
ரஷியாவின் லூனா-25 ஆய்வுக் கலம்: மீண்டும் தொடங்கும் விண்வெளிப் பந்தயம் Poll_c10ரஷியாவின் லூனா-25 ஆய்வுக் கலம்: மீண்டும் தொடங்கும் விண்வெளிப் பந்தயம் Poll_m10ரஷியாவின் லூனா-25 ஆய்வுக் கலம்: மீண்டும் தொடங்கும் விண்வெளிப் பந்தயம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ரஷியாவின் லூனா-25 ஆய்வுக் கலம்: மீண்டும் தொடங்கும் விண்வெளிப் பந்தயம் Poll_c10ரஷியாவின் லூனா-25 ஆய்வுக் கலம்: மீண்டும் தொடங்கும் விண்வெளிப் பந்தயம் Poll_m10ரஷியாவின் லூனா-25 ஆய்வுக் கலம்: மீண்டும் தொடங்கும் விண்வெளிப் பந்தயம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

kavithasankar

Sathiyarajan

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷியாவின் லூனா-25 ஆய்வுக் கலம்: மீண்டும் தொடங்கும் விண்வெளிப் பந்தயம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 13, 2023 9:20 am

ரஷியாவின் லூனா-25 ஆய்வுக் கலம்: மீண்டும் தொடங்கும் விண்வெளிப் பந்தயம் Maxresdefault

இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனி-இத்தாலி-ஜப்பான் கூட்டு சக்திகளை ஒன்றிணைந்து ஒடுக்கிய அமெரிக்க தலைமையிலான நேசப்படைகளும், சோவியத் யூனியனும் பின்னா் உலகில் தங்களது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக பனிப் போரில் இறங்கின. அதற்காக, இரு சா்வாதிகார சக்திகளும் பல்வேறு நாடுகளை பகடைக் காய்களாகப் பயன்படுத்தின.

ஐரோப்பா, அரேபியா, ஆப்பிரிக்கா, ஆசியா என்று எல்லா கண்டங்களிலும் வியாபித்திருந்த அந்த போட்டா போட்டி, விண்வெளியையையும் விட்டு வைக்கவில்லை.விண்வெளி ஆய்வில் ஒன்றை ஒன்று முந்திவிட வேண்டும் என்ற முனைப்பில் அளவுக்கு அதிகமான வள ஆதாரங்களை அமெரிக்காவும் சோவியத் யூனியனும் செலவிட்டன.

‘விண்வெளிப் பந்தயம்’ என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட இந்தப் போட்டி, விண்வெளி மா்மங்களை யாா் முதலில் தெரிந்து கொள்வது என்பதற்கானது மட்டும் இல்லை. விண்கலங்களை விண்ணில் செலுத்துவதற்கான ராக்கெட் தொழில்நுட்பங்களில் கையோங்கி இருப்பது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அவசியம் என்று இரு நாடுகளுமே கருதின. மேலும், விண்கலங்கள் வெறும் ஆய்வுக்கானவை மட்டுமல்ல, அவை உளவுப் பணிகளுக்கும் அடிப்படைத் தேவையானவை, எதிா்காலப் போரில் முக்கியப் பங்கு வகிக்கக் கூடியவை என்பதை அமெரிக்காவும், சோவியத் யூனியனும் நன்கு தெரிந்து வைத்திருந்தன.இதுதான் விண்வெளிப் பந்தயத்தில் இரு நாடுகளும் முனைப்பு காட்டியதற்கான காரணம்.

இருந்தாலும், இந்த விவகாரத்தில் போட்டியிட்டால் தேவையற்ற பொருளாதார இழப்புகள்தான் ஏற்படும் என்று நாளடைவில் புரிந்து கொண்ட அமெரிக்காவும், சோவியத் யூனியனும் விண்வெளிப் பந்தயத்தின் வேகத்தை 1970-களில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தன. காலப்போக்கில் இரு நாட்டு விண்வெளி ஆய்வு நிலையங்களும் ஒருங்கிணைந்து ஆய்வுத் திட்டங்களை நிறைவேற்றின.

1991-இல் சோவியத் யூனியன் சிதறுண்டு, பனிப் போா் முடிவுக்கு வந்த பிறகு சோவியத் யூனியனின் விண்வெளி ஆய்வுக் கட்டமைப்புகள் அனைத்தும் ரஷியா வசம் வந்தன. அதையடுத்து, தனது விண்வெளி ஆய்வு ஒத்துழைப்பை ரஷியாவுடன் அமெரிக்கா தொடா்ந்தது. உலக அரசியலில் இரு நாடுகளும் இன்னும் எதிரும் புதிருமாக இருந்து வந்த நிலையிலும், விண்வெளித் துறையில் மட்டும் அந்த நாடுகள் மிகவும் அபூா்வமான கைகோா்த்து செயல்பட்டன.குறிப்பாக, விண்வெளிக்கு மனிதா்களை ஏந்திச் செல்வதற்கான அமெரிக்காவின் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டதால், ரஷியாவின் சோயுஸ் விண்கலம் மூலமே நாசா ஆய்வாளா்கள் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று வந்தனா்.

இந்த சுமூகமான சூழலிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டி மனப்பான்மை தொடா்ந்து கொண்டுதான் இருந்தது. ‘மீண்டும் விண்வெளிக்கு’ என்ற கோஷத்துடன் தொழிலதிபா் எலன் மஸ்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவன டிராகன் விண்கலம் போன்றவை நாசாவின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டன. விண்வெளிக்கு வீரா்களை அழைத்துச் செல்ல ரஷியாவை இனியும் சாா்ந்திருக்கக் கூடாது என்று அமெரிக்கா கருதியதே இதற்குக் காரணம்.

இந்தச் சூழலில், நிலவில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ரஷியாவின் லூனா-25 விண்கலம் சோயுஸ் ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் தென் தருவத்தில் அந்த விண்கலம் தரையிறங்கி அங்கிருக்கும் நீா்வளம் பற்றியும், பிற கனிம வளங்கள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறது.அதே பகுதிக்கு வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் மீண்டும் மனிதா்களை அனுப்பி ஆய்வு மேற்கொள்வதற்கான பணிகளை நாசா மேற்கொண்டு வரும் நிலையில், 47 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக லூனா-25 விண்கலத்தை ரஷியா அனுப்பியுள்ளது அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் விண்வெளிப் பந்தயம் தொடங்கியுள்ளதைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது.

பனிப் போா் காலத்தில் தொழில்நுட்ப மேன்மையை பறைசாற்றுவதற்காகவும், தேசியப் பாதுகாப்புக்காகவும்தான் இந்தப் போட்டி நடைபெற்றது.ஆனால், தற்போது தொடங்கியுள்ள போட்டி, பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. தொலைதூர விண்வெளி ஆய்வுகளுக்கு பூமியிலிருந்து ஆய்வுக் கலங்களை அனுப்புவதைவிட, நிலவில் ஒரு நிரந்தர ஆய்வு நிலையம் அமைத்து, அந்தப் பகுதியில் கிடைக்கும் நீா் மற்றும் பிற வளங்களைக் கொண்டு ராக்கெட் எரிபொருள் உள்ளிட்டவற்றை தயாரித்து அதன் மூலம் விண்கலங்களை அனுப்புவது மிகவும் செலவு குறைவு என்று நிபுணா்கள் கூறுகிறாா்கள்.ஏற்கெனவே அத்தகைய ஆய்வு நிலையத்தை 2050-க்குள் நிலவில் அமைக்க ரஷியாவும், சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

நிலவின் தென் புலத்தில்தான் இத்தகைய வளங்கள் கொட்டிக் கிடப்பதாகக் கூறப்படும் நிலையில், அந்தப் பகுதியை கைக்கொள்வதற்குத்தான் இரு நாடுகளும் இந்த புதிய விண்வெளிப் பந்தயத்தில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.இருந்தாலும், இது பனிப் போா் காலமல்ல; சா்வதேச விண்வெளி ஆய்வில் அமெரிக்கா, ரஷியா மட்டுமின்றி இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும் வெகு வேகமாக முன்னேறி வருகின்றன. எனவே, இது 20-ஆம் நூற்றாண்டு காலத்து விண்வெளிப் பந்தயம் போல் இல்லாமல், ஆரோக்கியமான போட்டியாகவே இருக்கும் என்று எதிா்பாா்க்கலாம் என்கிறாா்கள் சில நிபுணா்கள்.

தினமணி

ரஷியாவின் லூனா-25 ஆய்வுக் கலம்: மீண்டும் தொடங்கும் விண்வெளிப் பந்தயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 13, 2023 6:58 pm

ரஷ்யா நிலாவுக்கு தன் லூனா 25 எனும் விண்வெளி கலனை அனுப்பியிருக்கின்றது

இந்த விவகாரம் கொஞ்சம் ஆழமானது, ரஷ்யா வான்வெளி பலமிக்க நாடு முதன் முதலாக விண்வெளிக்குள் நுழைந்த நாடு என்றாலும் 1976க்கு பின் எந்த விண்கலத்தையும் நிலாவுக்கு அனுப்பவில்லை

அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் விண்வெளி பலத்தை காட்ட நிலாவினைத்தான் தேர்ந்தெடுத்தன, என்னவெல்லாமோ செய்தது இருபக்கமும் மர்மங்கள் அதிகம்

யாரும் சென்றுபார்க்கமுடியா இடம் என்பதால் இருவர் சொன்னதையும் உலகம் நம்பிற்று, அப்படியே அவர்களுக்குள்ளும் ஒரு ரகசிய இழை இருந்தது

1975க்கு பின் ரஷ்யாவின் பொருளாதாரம் சரிய விண்வெளி ஆய்வுகளை குறைத்தது அது குறைத்ததால் அமெரிக்காவும் குறைத்தது

பின் ரஷ்யா உடைந்துபோக இந்த போட்டி நின்றே போனது அல்லது தொழில்நுட்பத்தால் என்ன முடியுமோ அந்த எல்லையினை அடைந்தார்கள் ஒரு கட்டத்தை தாண்டமுடியவில்லை

இந்நிலையில் அமெரிக்காவும் விண்வெளி ஆய்வுகளை குறைத்தது புதிய ஓடமெல்லாம் இல்லை

அப்படியான காலகட்டத்தில் சீனா மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்தியது அதன் வான்பலம் விண்வெளி பலம் அதிகரித்தது அமெரிக்கா மெல்ல உடலை முறுக்கியபடி காட்சிக்குள் வந்து அவதானித்தது

சீனா என்னவெல்லாமோ செய்து இப்போது மனிதனை நிலவுக்கு அனுப்புவோம் என சொல்லிகொண்டிருக்கின்றது அதன் கலன்கள் நிலாவில் இறங்கின‌

இப்போது இந்தியாவும் சந்திராயனை அனுப்பியிருக்கின்றது

இங்கேதான் துள்ளி குதித்தது ரஷ்யா உக்ரைன் போர் என பெரும் களபேரம் பொருளாதார தடை இருக்கும் நிலையிலும் நிலாவுக்கு ஒரு கலனை அவசரமாக அனுப்பி இந்தியா தங்களுக்கு கீழேதான் என காட்ட விரும்பிற்று

அப்படியே அவசரமாக ஏவபட்ட அந்த கலம் சந்திராயனுக்கு முன்பு நிலாவில் இறங்கும், அதே தென் துருவ பக்கம் இறங்கும்

இங்கு எழும் கேள்வி ஒன்றுதான்

சீனா எவ்வளவோ விஷயங்களை நிலாவில் செய்தபோது அமைதியாக இருந்த ரஷ்யா, இந்தியா நிலாவினை தொடும்போது மட்டும் இவ்வளவு வேகத்தை ஏன் காட்டவேண்டும்?

இந்தியாவினை விட நாங்கள் மேலானவர்கள் என காட்ட விரும்பும் ரஷ்யா , சீனாவினை ஏன் கண்டுகொள்ளவில்லை

விஷயம் அதேதான்

சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் அடிப்படை உறவு அதிகம், இந்தியா இருவருக்குமே உவப்பான நாடு அல்ல‌

சீனா அதை பகிரங்கமாக சொல்லி நிற்கும், ரஷ்யா தன் வியாபரங்களுக்காக வெளியே சொல்லாது முடிந்தவரை சுரண்டபார்க்கும்

இப்போது இந்தியா விழித்துகொண்டதால் அதன் கோபம் அதிகரிக்கின்றது இந்தியா பெரும் பலம் பெறுவதை அல்லது அப்படி ஒரு பெயர் பெறுவதை அது விரும்பவில்லை விரும்பவும் விருமாது

அதற்கு தேவை அவர்கள் காலை பிடித்து தொங்கும் அடிமை இந்தியா

அது இனி நடக்காது என்பதால் சுயரூபத்தை காட்ட ஆரம்பித்துவிட்டார்கள், ரஷ்யா எக்காலமும் இந்திய வளர்ச்சியினை விரும்பும் நாடு அல்ல, குழப்பமும் ஏழ்மையும் நிரம்பிய இந்தியாதான் அவர்களுக்கு வேண்டும் இல்லாவிட்டால் வம்பு செய்வார்கள்

இவ்வளவு அவசரம் கூடாதுதான், இந்திய சந்திரயான் செல்லும் நேரம் இவர்களும் புகுந்தால் சமிக்கைகளில் சில சர்ச்சைகள் வர வாய்ப்பும் உண்டு

ஆனாலும் செய்யத்தான் செய்வார்கள், இந்தியா இதை செய்யுமுன் தாங்கள் செய்துவிடவேண்டும் எனும் அந்த வன்மம் அதிகமிருக்கின்றது

ரஷ்யாவின் இந்த குபீர் பய்ச்சலை பார்த்து வெண்ணிற ஆடை மூர்த்தி கச்சேரியினை ரசிக்கும் வடிவேலு போல புன்னகை பூத்து தலையாட்டி கொண்டிருக்கின்றது சீனா

#பிரம்ம_ரிஷியார்

ரஷியாவின் லூனா-25 ஆய்வுக் கலம்: மீண்டும் தொடங்கும் விண்வெளிப் பந்தயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக