புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_c10சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_m10சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_c10 
366 Posts - 49%
heezulia
சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_c10சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_m10சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_c10சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_m10சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_c10சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_m10சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_c10சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_m10சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_c10 
25 Posts - 3%
prajai
சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_c10சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_m10சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_c10சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_m10சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_c10சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_m10சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_c10சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_m10சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_c10சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_m10சூர்ப்பனகை - சூர்ப்பனகை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூர்ப்பனகை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 12, 2023 9:48 pm

சூர்ப்பனகை - சூர்ப்பனகை Maxresdefault

ராமாயண இதிகாசத்தில் கைகேயி, மந்திரை பாத்திரங்களுக்கு அடுத்து எதிர்மறை பாத்திரமாகப் பார்க்கப்படுபவள் சூர்ப்பனகை. இவள் ராவணனின் இளைய சகோதரியாக மட்டுமே அதிகம் அறியப்படுகிறாள். ராட்சத வம்சத்தை சேர்ந்தவள் என்பதால் சூர்ப்பனகையை விகாரத் தோற்றம் உடையவளாகவும் துர்க்குணம் நிறைந்தவளாகவும் நம் மனம் சித்தரித்துக் கொள்வதுண்டு. ஆனால் உண்மையில் சூர்ப்பனகை அழகானவள். பிறக்கும் போதே அவள் தன் தாய் கேசி (கைகாசி என்றும் பெயர் உண்டு) மற்றும் பாட்டி தாடகை ஆகியவர்களை அழகில் விஞ்சியிருந்தாளாம். அவள் கண்களின் அழகுக்காக மீனாட்சி என்றும் அழைக்கப்பட்டாள்.

கம்ப ராமாயணத்தில் ராமனின் வாயிலாக அவள் அழகு இவ்வாறு வருணிக்கப்படுகிறது

செங் கயல்போல் கரு நெடுங் கண்,

தே மரு தாமரை உறையும்

நங்கை இவர் என நெருநல்

நடந்தவரோ நாம்? என்ன

பொருள்: சிவந்த கயல் மீன் போன்று பிறழும் கரிய நீண்ட கண்கள் கொண்டவள். தேன் ஊறும் தாமரை வாசம் செய்யும் திருமகள் லட்சுமி இவளே என்று ராமன் இயம்புகிறான்.

(கம்பராமாயணம் ஆரணிய காண்டத்தில் 117-வது  பாடலில் குறிப்பிடப்படுகிறது.)

மேலும் கம்பர் சூர்ப்பனகையின் நடையை

பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,

செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,

அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்

வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்

என்று வருணிக்கிறார்.

சூர்ப்பனகை நடந்து வருகிறாள். அவளுடைய பாதம் பஞ்சு போன்று மென்மையானதாம். எந்த அளவுக்கு மென்மையானது என்றால் கொடியின் தளிர் அவள் பாதத்தைப் பார்த்தால் வருத்தப்படுமாம். ஏன்? அடடா, இவள் பாதம் இவ்வளவு மென்மையாகவும் பளிச்சென்றும் ஒளி வீசுவதாகவும் இருக்கிறதே. நாம் அப்படி மென்மையாகவும் பளிச்சென்றும் இல்லையே என்று தளிர்கள் வருந்துமாம். அத்தனை மென்மையான பளிச்சென்ற பாதங்களை உடையவள் சூர்ப்பனகை.

அது மட்டுமா? இன்னும் சொல்கிறார் கம்பர்.

செக்கச் சிவந்த தாமரை மலர் போன்று இருக்கிறதாம் அவள் பாதம். அப்படிப்பட்ட பாதங்களால் அடியெடுத்து வைத்து நடந்து வருகிறாள். எப்படி நடக்கிறாள்? ணங் ணங் என்று பூமி அதிர்வது போல நடக்கவில்லை. சீராக அடி வைத்து, மெல்லிய அடிகள் வைத்து, மயில்போல, அன்னம் போல மென்மையாக நடக்கிறாள். அப்படி அவள் நடக்கும்போது, மின்னுகின்ற வஞ்சிக்கொடி போல அழகாய் காட்சியளித்தாளாம். இப்படி எல்லாம் அவள் மென்மையாக அன்னம் போல நடந்து வந்தாலும் அவள் எண்ணத்தில் ராமனை மயக்கும் வஞ்சம் இருந்ததால் ‘வஞ்ச மகள் வந்தாள்’ என்று அவள் மனத்துள் ஆடும் எண்ணத்தையும் கண்முன் கொண்டு வருகிறார் கம்பர்.

சரி. இந்த வஞ்ச எண்ணம் இத்தனை மென்மையான, அழகான நற்குலத்தில் பிறந்த பெண்ணுக்கு ஏன் வந்தது? சூர்பனகையின் வரலாற்றை ஆராய்ந்தால் இதற்கான மூல காரணம் நமக்கு பிடிபடும்.



#சூர்ப்பனகை ராவணின் சகோதரி, ராம லஷ்மணர் மேல் ஈர்ப்பு கொண்டு அவர்களால் அவமானப்படுத்தப்பட்டவள். லஷ்மணனால் மூக்கறுபட்டவள் (முலைகளும் அறுபட்டவள், நாகரீகம் கருதி மூக்கும் காதும் என்று மட்டும் சொல்வதாகவும் கருத்து உண்டு). அதற்கு பழி வாங்க சீதையின் அழகை தன் தமையனிடம் கூறி அவன் மோகத்தைத் தூண்டிவிட்டு, அவளை கவர்ந்து வர காரணியாக இருந்தவள். இதுவே சூர்ப்பனகை என்றவுடன் நம் மனதில் தோன்றும் பிம்பம்.

இதற்கும் மேல் சூர்பனகை குறிந்து கூற வேறு ஏதேனும் உள்ளதா என்றால், ஆம் கண்டிப்பாக உள்ளது. ராவணனனும் அவனது உடன் பிறப்புகளும் பாதி பிராமண குலத்தையும், பாதி அசுர குலத்தையும் சேர்ந்தவர்கள்.. இவர்கள் தந்தையின் பெயர் விஷ்ராவா ரிஷி,  தாய் கேசி (எ) கைகாசி அசுர குலத்தை சேர்ந்தவர்.

ராவணனின் தந்தைக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் பெயர் வாரவர்னினி. இவர்களின் ஒரே மகன் தான் செல்வத்துக்கு கடவுளான குபேரன். விஷ்ராவாவின் இரண்டாவது மனைவியான கைகாசிக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷனன் மற்றும் சூர்பனகை என நான்கு பிள்ளைகள் உண்டு. குபேரனும் ராவணனும் ஒரு தந்தைக்குப் பிறந்த சகோதரர்கள் தான். சூர்பனகை ராவணனுக்கு பிரியமான தங்கை. குடும்பத்தின் ஒரே பெண் பிள்ளை அல்லவா. அதனால் அவனுக்கு அவள் மேல் பிரியம் அதிகம். தன் தங்கையை சிறந்த வீரனுக்கு மணம் முடிக்க எண்ணினான். கால்கை நாட்டின் பலம் வாய்ந்த அசுரக் கூட்டத்தின் சேனாதிபதியும் சிறந்த வீரனுமான வித்யுத்ஜின்னுக்கு மணம் செய்து வைத்தான்.

சூர்ப்பனகை தன் கணவன் வித்யுத்ஜின் மேல் அளவற்ற காதலும் அன்பும் கொண்டிருந்தாள். அவர்களது இல்லறம் இனிதே போய்க் கொண்டிருந்த வேளையில் ராவணனுக்கு தன் பலத்தின் மீதும் சிவ பக்தியின் மீதும் மிகுந்த செறுக்கு ஏற்பட்டது. தன்னைவிட உலகில் சிறந்தவன் வேறு இல்லை என்ற இறுமாப்பு கொண்டான். தான் ஈரேழு உலகையும் ஆளப் பிறந்தவன் என்றும் தன் ஒருவனுக்கு மட்டுமே அந்தத் தகுதி இருக்கிறது என்றும் அவனுக்கு அகந்தை உண்டாயிற்று. உலகை வெல்லும் நோக்கத்தோடு போரில் ஈடுபட்டு பல நாடுகளைக் கைப்பற்றினான் ராவணன்.

உலகையே ஆளும் ஆசை வந்துவிட்ட பின் கால்கை நாட்டை மட்டும் விட்டுவிட முடியுமா? தங்கையாவது பாசமாவது. உலகாளும் வெறியின் முன் அவன் கண்ணுக்கு தங்கையின் வாழ்வும், தான் அடைய நினைப்பது அவள் புகுந்த வீடு என்பதும், போர் புரியப் போவது தன் சொந்த மைத்துனனும் செல்லத் தங்கையின் ஆருயிர்க் கணவனுமான வித்யுத்ஜித்துடன் என்பதும் தெரியவில்லை. உலகுக்கெல்லாம் நான் ஒருவனே சக்ரவர்த்தி எனும் மமதை அவன் கண்களை மறைத்துவிட்டது.

கால்கை நாட்டுடன் போர் புரிந்தான். அப்போரில் தன் தங்கை கணவனான வித்யுத்ஜித்தினை சூழ்ச்சி செய்து வதம் செய்தான். தன் பாசமிகு அண்ணன் அவன் ஆசைப்படி அவனே தேர்வு செய்து மணமுடித்து வைத்த தன் கணவனை அவன் கையாலேயே கொன்றதைக் கண்டு பித்துப் பிடித்தவள் போலானாள் சூர்பனகை. எதற்கு இப்படிச் செய்தாய் என்று பலவாறு புலம்பி அழுதாள். எதற்கும் அசரவில்லை அவள் தமையன்.

கணவனின் சடலம் முன் கண்கள் சிவக்க சபதமேற்றாள். ‘என் கணவனை சூழ்ச்சி செய்து நீ கொன்றது போல் உன்னையும் சூழ்ச்சி செய்தாவது கொல்லுவேன்’ என்று சூளுரைத்தாள். அதன் விளைவாகவே ராவண வதத்துக்கு தன்னைக் கருவியாக்கிக் கொண்டாள் சூர்ப்பனகை.

ராவணனுக்கு தான் செய்த தவறு உறைக்கவில்லை மாறாக அப்போதைக்கு அவள் துயருக்கு மாற்று செய்யும் வழியை ஆராய்ந்தான். அவளை கரதூஷணர்கள் என்ற அரக்கர்கள் வாழும் பஞ்சவடி பகுதிக்கு அனுப்பி வைத்தான். எல்லா வசதிகளையும் அவளுக்கு செய்து கொடுத்தான். அப்போதைக்கு சமாதானம் ஆனது போல் இருந்தாலும் தன் தமையன் கையாலேயே வெட்டுண்டு இறந்த கணவனின் இறப்பு அவள் இதயத்தில் என்றும் ஆறா ரணமாக கொதித்துக் கொண்டிருந்தது. தக்க சமயத்துக்காக காந்திருந்தாள் சூர்ப்பனகை.

காத்திருந்தது வீண் போகாமல், பஞ்சவடிக்கு ராம லஷ்மணர் சீதையுடன் வர, ராமனைக் கண்ட சூர்ப்பனகைக்கு ராமனால் தான் தன் சகோதரனை அழிக்க முடியும் என்று தோன்றியது. இருவருக்கும் எவ்விதமான தொடர்பை ஏற்படுத்தி பகைமை உண்டாக்க முடியும் என்று யோசித்தாள். அதன் காரணமாகவே ராமன் பால் தான் மையல் கொண்டவள் போல் சென்றாள். ராமர் தன் விருப்பத்தை நிறைவேற்ற முடியாது என்பதை சாத்வீகமாகக் கூறி மறுத்ததால், பகைமை கொள்ளும் மனம் ராமனுக்கு இல்லையே என்று ஆதங்கப்பட்டாள்.

அடுத்து கடமையே கண்ணும் கருத்துமாக முகத்தில் எப்போதும் கோபம் தீச்சுடர் போல ஒளிர்ந்து கொண்டிருக்கும் லஷ்மணனை தன்னுடைய அடுத்த இலக்காக்கி நகர்ந்தாள். அவள் நினைத்தபடியே அவளுடைய நடத்தை லஷ்மணனை கோபம் கொள்ளச் செய்தது. அவனது சினம் அவள் காது மூக்கு மற்றும் முலைகளை அறுத்தெறியும் எல்லை வரை சென்றது. இங்கு நாம் ஒன்றை சிந்திந்துப் பார்க்க வேண்டும். ஒரு பெண் தன் அழகு அவயங்களைத் தொலைத்து முக லஷணம் பறி கொடுத்து, தன் பெண்மைக்கே களங்கம் ஏற்படுத்திக் கொண்டாவது தன் சொந்த சகோதரனை பழிவாங்குவது அவசியமாகிறதா?

இத்தனைக்கும் பின்னால் இருப்பதும் அன்புதான். வஞ்சிக்கப்பட்ட அவள் மன ரணம் தான். இவன் தான் வேண்டும் என அடம் செய்து அவள் தன் கணவன் வித்யுத்ஜித்தை மணக்கவில்லை. தேர்வு அவள் தமையன் ராவணனுடையது. தங்கையின் நல்வாழ்க்கைக்கு அவன் சரியான தேர்வு என பாசமும் கடமையும் கொண்டு பல விதத்திலும் சீர் தூக்கிப் பார்த்து முடிவு செய்தவன் ராவணனே. அவன் தேர்வை முழுமனதாக ஏற்று வித்யுத்ஜித்தை மணந்தாள் சூர்ப்பனகை. அண்ணன் சொல்லியதற்காக தலையாட்டி கடனே என வாழாமல் தன் கணவனை மனப்பூர்வமாக நேசித்தாள். ஈருடல் ஓர் உயிராகவே வாழ்ந்தாள்.

அப்படிப்பட்ட அருமையான தன் காதல் வாழ்க்கைக்கு வித்திட்ட அண்ணனே தன் கணவனைக் கொல்வான் என அவள் கனவிலும் நினைக்கவில்லை.  தான் வளர்த்த கிடையை தானே வெட்டுவது போல, வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்தவனே அதை சிதைத்தும் போட்டதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. சுத்த வீரனான ராவணன் இன்னொரு வீரனான தன் கணவன் வித்யுத்ஜித்தை நேரடியாக போரில் சாய்க்காமல் சூழ்ச்சி செய்து கொன்றதை அவள் மனம் ஏற்கவில்லை. அக்கோபத்தின், நிராசையின், ஆதங்கத்தின் வெளிப்பாடே அவளை எதை இழந்தேனும் ராவண வதம் நடக்க வேண்டும் என்ற இலக்கில் குறியாக இருக்க வைத்தது.

ராமன் தன் அண்ணனைக் கொல்வான் என்ற உள்ளுணர்வு அவளுக்கு இருந்தாலும் அதையும் சோதித்து அறிய விரும்பினாள். பஞ்சவடியில் இருந்த தனது மற்ற சகோதரர்களிடம் தனக்கு நேர்ந்த அவமானத்தைக் கூறினாள். அவளது தோற்றத்தைக் கண்டு கொதித்து எழுந்த அரக்க சகோதரர்கள் பெரும் படையுடன் ராம லஷ்மணரை எதிர்த்தனர். ராம லஷ்மணர் அத்தனைப் படைகளையும் தூசி ஊதுவது போல் வெட்டிச் சாய்த்ததைக் கண்டு அவள் பெரும் நம்பிக்கைக் கொண்டாள். ராமனே ராவணனை அழிக்க சரியான நபர் என்று உறுதியுடன் எண்ணி, தன் அடுத்த திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள இலங்கைக்குச் சென்றாள்.

பஞ்சவடியில் நடந்தவற்றை சிறிது மாற்றி ராவணனுக்கு ஏற்றார் போல் சொன்னாள். தன் அவமானத்தை விட சீதையின் அழகை நீளமாக வருணித்து, அவள் ராமனிடம் இருப்பதைக் காட்டிலும் உன்னுடன் இருப்பது தான் சிறப்பு என்பது போல அவன் மனதில் மோகத்தைத் தூண்டினாள். அவள் நன்கு அறிவாள் ராவணன் பெண்களிடம் பலவீனம் உள்ளவன் என்று. குபேரனின் மகன் நளகுபேரனுக்கு மணம் பேசியிருந்த ரம்பையையே கவர்ந்து வந்தவன் தானே. தன் சகோதரனின் மருமகளாக வேண்டியவள் தனக்கும் மருமகள் என்ற உறவு முறையை மறந்து ரம்பையை தூக்கி வந்தவன். இதுவும் அவளுக்கு நன்றாக நினைவிருந்தது. தன்னை கவர்ந்து வந்த கோபத்தில் ரம்பை ராவணனுக்கு ‘விருப்பம் இல்லாத பெண்ணை நீ தொட்டால் உன் தலை வெடித்துச் சாவாய்’ என்று சாபமிட்டாள்.

சீதையை கவர்ந்து வந்தால் தன் மனைவியைக் காப்பாற்ற #ராமன் போர் புரிந்து ராவணனை அழித்து அவளை மீட்டுச் செல்வான். அதே சமயம் கற்புக்கரசி சீதையை கவர்ந்து வந்து அவளை அடைய பலவந்தப்படுத்தினால் ரம்பையின் சாபப்படி ராவணனே தலை வெடித்துச் செத்து விடுவான். எது எப்படி நடந்தாலும் ராவணனின் மரணம் உறுதி என்ற கணக்கைப் போட்டே காய் நகர்த்தினாள் சூர்pபனகை.

அவள் நினைத்தபடியே ராமனின் மூலம் ராவண வதம் நிகழ்ந்தது. நீண்ட நெடிய காத்திருத்தலுக்குப் பின் தன் சபதத்தை ராமன் மூலமாக நிறைவேற்றிக் கொண்டாள் சூர்ப்பனகை. அதற்குப் பின் ராவணன் ஆட்சி புரிந்த இலங்கையில் இருக்க விரும்பவில்லை. தன் சகோதரன் விபீஷணனின் ஆட்சியிலும் அவளுக்கு இருக்கப் பிடிக்கவில்லை. போர் முடிந்ததும் ராம லஷ்மணரை வணங்கி விடை பெற்று கண்காணாத இடத்துக்குச் சென்று தன் இறுதி காலத்தைக் கழித்தாள் சூர்ப்பனகை.  

சூர்ப்பனகை அன்பானவள், மென்மையானவள். சகோதர ரூபத்தில் விதி அவள் மகிழ்ச்சியான வாழ்வில் சூறாவளியை ஏற்படுத்திவிட்டது.  சமயமும் சந்தர்ப்பமும் அவளை எதிர்நிலையில் நிற்கவைத்துவிட்டது. சூர்பனகையின் பதிபக்தியும், தன் வாழ்வை நாசமாக்கியதால் பழி தீர்த்த மன உறுதியும் அதற்காக அவள் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட களங்கமும், எப்பெண்ணும் இழக்க தயாராகாதவற்றை தன் இலக்குக்காக இழந்ததும், அவளின் மதியூகமும் கவனிக்கப்பட வேண்டியவை.

#ராவணன் வதம் நடக்க வேண்டும் என்ற விதிக்கு காரணியாக இருந்தவளே சூர்ப்பனகைதான். அவள் தன்னையொத்த பெண்ணான சீதையின் துயரை நினைக்காமல் தனது பழிவாங்குதல் நோக்கு ஒன்றே பெரிதாக நினைத்தமையால், எதிர்மறை குணசித்திரமாகவே இன்றளவும் அறியப்படுகிறாள் சூர்ப்பனகை. நல்லவை, தீயவை சேர்ந்து தானே மனிதர்கள்! தீமையெனும் மலரினைச் சூடியவர்களை காலம் தோறும் தவறான முன்னுதாரணமாகவே அறியப்படுகிறார்கள் என்பதற்கு சூர்ப்பனகை சிறந்த எடுக்காட்டு எனலாம்.



சூர்ப்பனகை - சூர்ப்பனகை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian and கண்ணன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

srinivasanb
srinivasanb
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 19/08/2014

Postsrinivasanb Mon Aug 28, 2023 8:02 pm

சூர்ப்பனகை பற்றி ஒரு தெளிவான பார்வையை பார்க்க முடிந்தது. மேலோட்டமாக பார்க்கும் ஒரு பெண்மையை, ஏன் அப்படி? எதனால்? எவ்வாறு? என்ற பல புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தது இப்பதிவு. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். மேலும் இது போன்ற இலக்கியங்களில் மறைந்துள்ள சிறிய பார்த்திரங்களை அறிமுகப்படுத்துங்கள். இலக்கிய உலகில் பயணிக்க தயாராக உள்ளோம்.
srinivasanb
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் srinivasanb

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 29, 2023 9:48 pm

அரிய பலவிஷயங்களை அறிய தந்ததற்கு நன்றி நன்றி.

@சிவா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 29, 2023 9:48 pm

அரிய பலவிஷயங்களை அறிய தந்ததற்கு நன்றி நன்றி.

@சிவா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக