ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது விற்பனை, ஊழல், கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் - அண்ணாமலை

Go down

மது விற்பனை, ஊழல், கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் - அண்ணாமலை  Empty மது விற்பனை, ஊழல், கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் - அண்ணாமலை

Post by சிவா Tue Aug 08, 2023 7:21 pm

மது விற்பனை, ஊழல், கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் - அண்ணாமலை  Tamil_News_large_3396822

திருப்பரங்குன்றம்,:''மது விற்பனையில், ஊழல் புரிவதில், கடன் வாங்குவதில் மட்டுமே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது,'' என, திருப்பரங்குன்றம் தொகுதியில் நடந்த 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ் சாட்டினார்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், திருநகர் இரண்டாவது பஸ் ஸ்டாப்பில் அண்ணாமலைக்கு மாவட்ட தலைவர் சசிகுமார் உட்பட பா.ஜ.,வினர் வரவேற்பு அளித்தனர்.

பதினாறு கால் மண்டபம் அருகே அண்ணாமலை பேசியதாவது:

தமிழகத்தில், விசைத்தறி நெசவாளர்களுக்கு தி.மு.க.,வினர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கடன் வாங்குவதில், தமிழகத்தை முதலிடத்திற்கு முன்னேற்றியுள்ளனர்.

'மது விற்பனையில் கிடைக்கும் வருமானம், தொழு நோயாளி கையில் இருக்கும் வெண்ணை' என, அண்ணாதுரை கூறினார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் மது வருமானத்தை வைத்து ஆட்சி செய்ய வேண்டும் என்கிறார்.

கிளி ஜோசியம் பார்த்தால், கிளி கூட அவ்வப்போது பேசும். ஆனால், அமைச்சர் தியாகராஜன் பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது. ஒரே ஒரு உண்மையை தியாகராஜன் பேசியதற்காக, அவருக்கு கிடைத்த பரிசு இலாகா மாற்றம்.

79 கோடி பெண்கள்


கடந்த, 2014ல், 24 கோடி பெண்களே வங்கி கணக்கு வைத்திருந்தனர். மோடி ஆட்சிக்கு வந்த பின், 79 கோடி பெண்கள் வங்கி கணக்கு வைத்துஉள்ளனர்.

கடந்த, 2014ல் 11 சதவீத பள்ளிகளில் மட்டுமே பெண்களுக்கு தனி கழிப்பிடங்கள் இருந்தன. தற்போது, 100 சதவீத பள்ளிகளில் தனி கழிப்பறையை பிரதமர் ஏற்படுத்தியுள்ளார்.

ரபேல் விமானத்தில் பயணிக்கும் அளவுக்கு பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்துள்ளது. அதை நடைமுறைப்படுத்த பிரதமர் மோடி தேவைப்பட்டு இருக்கிறார்.

எம்.பி.,க்களால் பயனில்லை


விருதுநகர் தொகுதி எம்.பி., மாணிக்கம் தாகூர் டில்லியில் தான் இருப்பார். அவரும், மதுரை எம்.பி.,யும் தொகுதி மக்கள் நன்மைக்காக லோக்சபாவில் எதுவுமே பேசவில்லை. அவர்களால் எந்த பிரயோஜனமும் மக்களுக்கு இல்லை.

கேரள முதல்வர், காங்., தலைவர் ராகுலை, 'ஜோக்கர்' என்கிறார். ஆனால், தமிழக கம்யூ., கட்சியினர் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில், இரண்டு எம்.பி.,க்களும் வாயை திறக்கவில்லை.

இவர்களைவிட பெரிய டுபாக்கூர் முதல்வர் ஸ்டாலின். காவிரியில் இருந்து ஜூலையில் தமிழகத்திற்கு 32 டி.எம்.சி, தண்ணீர் கிடைக்க வேண்டும் என, சொல்லி இருந்தோம்.

முதல்வர் ஸ்டாலின் பெங்களூரு சென்ற போது இதுகுறித்து கேட்க வில்லை. அப்போது விட்டு விட்டு, இப்போது காவிரி தண்ணீர் பிரச்னையை தீர்க்க, பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார்.

இந்தியாவில், 10 ஆண்டுகள், 2ஜி வழக்கில் ஈடுபட்டவர்கள், தனி நாடு வேண்டும் என கேட்டவர்கள், ஊழல் செய்தவர்கள் எதிர்க்கட்சி கூட்டணியினர். இந்த கூட்டணி இந்தியாவை சூறையாடிய கூட்டணி.

இவ்வாறு அவர் பேசினார்.

மோடி பெயரில் அர்ச்சனை

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்ய வந்தார். மூலஸ்தானத்தில் சுவாமி தரிசனம் செய்த அண்ணாமலை, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் நட்டா மற்றும் பாரத மக்களுக்காக அர்ச்சனை செய்யும்படி கூறினார். அண்ணாமலை கொண்டு வந்திருந்த சிறிய வேல் ஒன்றை மூலவர் பாதத்தில் வைத்து கொடுக்கும்படி கூறினார். அதன்படி சிவாச்சாரியார்கள் பூஜை செய்து கொடுத்தனர்.

வாள் பரிசு

அண்ணாமலை நடந்து வரும்போது தொண்டர்கள், சிறுவர்கள் அணிவித்த சால்வை, மாலைகளை அவர்களிடமே திரும்ப கொடுத்து வாழ்த்து கூறி நடந்தார். பா.ஜ., மேற்கு மண்டல தலைவர் மருதுபாண்டியின் தங்கை பபிதா, பா.ஜ.,வில் தன்னை இணைத்துக் கொள்வதாக அண்ணாமலையை சந்தித்து அவருக்கு, 3 அடி வாள் பரிசளித்தார். சுப்பிரமணியசாமி கோவில் வாசலில் அண்ணாமலைக்கு மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் செங்கோல் பரிசுஅளிக்கப்பட்டது.


மது விற்பனை, ஊழல், கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் - அண்ணாமலை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum