ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
தேசத்திருமகனார்-அழகுமுத்துக்கோனார் Poll_c10தேசத்திருமகனார்-அழகுமுத்துக்கோனார் Poll_m10தேசத்திருமகனார்-அழகுமுத்துக்கோனார் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசத்திருமகனார்-அழகுமுத்துக்கோனார்

Go down

தேசத்திருமகனார்-அழகுமுத்துக்கோனார் Empty தேசத்திருமகனார்-அழகுமுத்துக்கோனார்

Post by Jodha akbar Wed Aug 02, 2023 11:51 pm

தேசத்திருமகன் வீர அழகுமுத்துக்கோன்

தேசத்திருமகனார்-அழகுமுத்துக்கோனார் N4hSjTk

தேசத்திருமகனார்-அழகுமுத்துக்கோனார் 9ItGswA

அடிமைப்படுத்த நினைத்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தியை எதிர்த்து வீர முழக்கமிட்ட கட்டாலங்குலத்துச் சிங்கம் வீர அழகுமுத்துக்கோனார் வரலாற்றை எம் தமிழ் மண்ணில் எடுத்துச்சொல்ல கடைமைப்பட்டுள்ளோம்.

தேசத்திருமகனார்-அழகுமுத்துக்கோனார் ChytkRa

தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தை ஆட்சி செய்த ஜமீன்தார் குடும்பத்தில் யாதவர் மரபில் ஜுலை 11ம்நாள் 1710 ஆம் ஆண்டு பிறந்த நெல்லை சிங்கம் என கருதப்பட்ட மாமன்னர் அழகுமுத்துக்கோனார் 1725 முதல் 1750 வரை ஆட்சி செய்தார்.இவருக்கும் இராணி அழகுமுத்தம்மாள் ஆகிய இணையருக்கு பிறந்த அழகுமுத்து சகோதரர்கள் எனப்படும் இவர்கள் மூத்த சகோதரர் வீர அழகுமுத்துக்கோனார் எனவும் இளைய சகோதரர் சின்ன அழகுமுத்து கோனார் எனவும் அழைக்கப்பட்டனர்.கட்டாலங்குலத்தில் கிருஷ்ண கோத்திரம் கோபால வம்சத்தில் 1728 ஜனவரி 23 ஆம் நாள் வீர அழகுமுத்துக்கோனும் 1729 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் நாள் சின்ன அழகுமுத்து கோனும் பிறந்தனர்.

தேசத்திருமகனார்-அழகுமுத்துக்கோனார் Tm5C9g8


1750 ஆம் ஆண்டில் ராமநாதபுரம் சேதுபதிக்கு ஆதரவாக போரிட்ட நெல்லை சிங்கம் மாமன்னர் அழகுமுத்துக்கோன், ஜூலை 09ம் நாள் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது மூத்த மகனான வீர அழகுமுத்துக்கோன் 1750ல் கட்டாலங்குளம் மன்னராக முடி சூடினார்.இவரது தம்பி சின்ன அழகுமுத்து கோன் இவரது அரசவையின் நிருவாகப் பொறுப்பை ஏற்று நடத்தினார்.தங்கள் நாட்டில் ஆங்கிலேயர்கள் வணிகம் செய்வதை விரும்பாத சின்னழகுமுத்துக்கோனுக்கு ஆங்கிலேயர்கள் மீது அதிக வெறுப்புணர்வு இருந்தது. எட்டயபுரம் மன்னரிடம் நட்பு கொண்டிருந்ததால் ஜெகவீரராம எட்டப்பர் வேண்டுகோளுக்கு இணங்க அழகுமுத்து சகோதரர்கள், எட்டையபுரம் பாளையத்திற்கு ஆதரவாக 1752முதல் 1755 வரை தலைமை தாங்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டனர்.
தேசத்திருமகனார்-அழகுமுத்துக்கோனார் WJAmpVH

1750 ஆம் ஆண்டு எட்டையபுரத்திலும் அதனை சுற்றியுள்ள பாளையங்களில் வரி வசூலிக்க, ஆங்கிலேயத் தளபதி அலெக்சாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் (கான்சாகிப்) வந்தனர்.ஆனால் அவர்கள் வந்த எட்டயபுரமே முதல் எதிர்ப்பாக அமைந்தது.ஆங்கிலேயருக்கு எதிராக ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்தார் பெரிய அழகுமுத்து கோன்.ஆலோசனைக்கூட்டத்தில் பெரிய அழகுமுத்து, சின்ன அழகுமுத்து,ஜெகவீரராம எட்டப்பர்,குருமலைத்துறை ஆகியோர் உடனிருந்தனர்.இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்த கூடாது என முடிவு செய்யப்பட்டது.எட்டயபுரம் மன்னரால் அழகுமுத்து கோனின் படை வீரர்கள் குடியேற வசதியாக கட்டாளங்குளம் அதை சுற்றியுள்ள கிராமங்கள் வழங்கபட்டது. ஆங்கிலேயர்களை எதிர்க்கத்துணிந்த வீர அழகுமுத்து ஆங்கிலேய அரசுக்கு பதில் கடிதம் வாயிலாக,வியாபாரம் செய்ய வந்த கும்பினியர்களுக்கு வரி வசூல் செய்யும் உரிமை ஏது?வரி வசூலிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தால், கும்பினியர்களின் தலைகள் கட்டாலங்குளம் மண்ணில் உருளும், என்று மிரட்டல் விடுத்தார். கோபமடைந்த ஆங்கிலேய அரசு 1750 மார்ச் மாதம் ஆங்கிலேய படையை எட்டயபுரம் பாளையத்திற்கு அனுப்பியது.ஆங்கிலேயர்களுக்கும் எட்டையபுரம் பாளையத்திற்கு ஆதரவாக போரிட்ட அழகுமுத்து சகோதரர்களுக்கும் போர் மூண்டது.எண்ணற்ற வீரர்களை உடைய எட்டயபுரம் பாளையம் இப்போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி கண்டது.இதுவே வரலாற்றில் நடந்த முதல் ஆங்கிலேயருக்கு எதிரான போர் ஆகும்.இதனைத்தொடர்ந்து அழகுமுத்து சகோதரர்கள், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மக்களிடையே விடுதலை உணர்வை ஏற்படச் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பல இடங்களில் பிரிட்டிஷ் அரசுக்கும் பாளையக்காரர்களுக்கும் இடையே கிளர்ச்சி ஏற்பட்டது.கி.பி 1752ல் அழகுமுத்து சகோதரர்களுக்கும் யூசுப் கானுக்கும் நடந்த கழுகுமலைப் போர்களத்தில் பல ஆங்கில வீரர்கள் கொல்லப்பட்டனர். அவ்வப்போது ஆங்கில வீரர்களிடம் பீரங்கி படை வந்து சேராதது பின்னடவை ஏற்படுத்தியது.
தேசத்திருமகனார்-அழகுமுத்துக்கோனார் RqrWLzK

ஆங்கிலேயரை எதிர்ப்பதற்காக பாளையக்காரர்களை ஒன்று திரட்டும் நோக்கத்துடன் பூலித்தேவன் என்ற வீரர் அழகுமுத்து சகோதரர்களின் உதவியை நாடினார்.எட்டையபரம் மன்னர் இதனை விரும்பவில்லை எனவே பூலித்தேவனுக்கு உதவ மறுத்துவிட்டார்.ஆனால் தன் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் சேர்வைக்கோனார் ராமநாதபுரம் சேதுபதிக்கு ஆதரவாக போரிட்டது போலவே அழகுமுத்து சகோதரர்கள், பூலித்தேவனுக்கு ஆதரவாக போரிட ஒப்புக்கொண்டனர்.இதனை நாட்டுப்புற பாடல்களினால் நாம் அறிய முடிகிறது. இதனையடுத்து பூலித்தேவன் படையுடன் திருவிதாங்கூர் படையையும் சேர்த்துக்கொண்டு அழகுமுத்துக்கோனின் படை கர்னல் எரோன் கெரான் படைக்கு எதிராக போரிட்டு வெற்றி கண்டது.
தேசத்திருமகனார்-அழகுமுத்துக்கோனார் PsoFpCo

ஆனால் இந்த ஒற்றுமையானது வெகுநாள் நீடிக்கவில்லை.ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையக்காரர்கள் ஒன்றினைய மறுத்துவிட்டனர்.முதன்முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார், வீர அழகுமுத்துக்கோன்.கி.பி 1754 ஆம் ஆண்டு நடந்த செட்டிக்குறிச்சி என்னும் இடத்தில் நடந்த போரின் விளைவாக ஆங்கிலேய அரசின் கடுமையான கோபத்திற்கு ஆளான அழகுமுத்து சகோதரர்கள் 1755ல் மீண்டும் ஒரு கடுமையான போரை சந்திக்க நேர்ந்தது.இப்போரில் பெருமாள் கோவில் உள்ளே இருக்கும் சிலையை தகர்க்க வந்த ஆங்கிலேய படையை எதிர்த்து போரிடும் போது சின்ன அழகுமுத்து கோனார் சுடப்பட்டு கி.பி 1755 ஏப்ரல் 07 ஆம் நாள் பெருமாள் கோவில் முன்பு மரணம் அடைந்தார்.இதனைக் கண்ட பெரிய அழகுமுத்துவும் அவரது வீரர்களும் கடுமையாக ஆங்கிலேயர்களை தாக்கினர்.தொடர்ந்து நடந்த போரின் தாக்கத்தால் ஆங்கிலேய படை போரில் பின்வாங்கியது.இதனையடுத்து 1757 ல் கான்சாகிப் படை, தன்னுடன் பீரங்கி படையையும் சேர்த்துக்கொண்டு பெத்தநாயக்கனூர் மீது போர் அறிவிப்பு செய்தது.
தேசத்திருமகனார்-அழகுமுத்துக்கோனார் ZUQog9x

வீர அழகுமுத்து கோன், மன்னரையும், மக்களையும் பாதுகாப்பாக இருக்க வைத்து, பல இடங்களில் அலைந்து தனது படையில் மொத்தம் 766 வீரர்களை சேர்த்தார்.மன்னர் படையில் சேர்ந்த மக்களை அழகுமுத்து கோன், பெத்தநாயக்கனுார் கோட்டையில் இரவு தங்கிமறுநாள் மாவேலியோடை அழைத்து செல்ல நினைத்து இரவு துாங்கினர்.ஆனால் தந்திரமாக செயல்பட்ட யூசுப் கான் அன்று இரவே எட்டையபுரத்தை முற்றுகையிட்டார்.தனது பலமிக்க பெரும் படையை பெத்தநாயக்கனுார்கோட்டையை தாக்கி பல பேரை கொன்று குவித்தார். இந்த தாக்குதலால் நிலை குலையாத அழகுமுத்து கோன், துணிந்து கான்சாகிப்பை எதிர்த்து போரிட்டார். இதை சேர்வைக்காரர் சண்டை கும்மி என்ற பாடல் சொல்கிறது.

கட்ட மிகுந்திடம்கட்டாலங்குளம்அழகு முத்து சேருவைகாரன்அவன் கோட்டை பெத்தஊரிலும் தானுமேகொற்றவன் காக்கவேசண்டை செய்தான்வீராதி வீரரும்சூராதிசூரரும்.
வெங்கலகைகளைதானிழந்தார்மன்னாதி மன்னரைமார் காத்து நின்றமுத்து மாணிக்க சேர்வையும்மாய்ந்து விட்டார்பரிமேல் ஏறிரண கள மேவியபச்சைமால் சேர்வையும் மாண்டுவிட்டான்.

..என்ற இப்பாடல் அழகாக சொல்கிறது.
தேசத்திருமகனார்-அழகுமுத்துக்கோனார் QQCHjaH

பெரிய அழகுமுத்துவும் அவரது தளபதிகளும் கடுமையாக போரிட்டனர்.அழகுமுத்துக்கோனின் குதிரை சுடப்பட்டு அவரது வலது கால் சுடப்பட்டது இருப்பினும் 3மணி நேரம் போர் தொடர்ந்தது.பல வீரர்கள் மரணம் அடைந்ததையடுத்து மீதி இருந்த 248 வீரர்களால் போரினை சமாளிக்க முடியவில்லை. அழகுமுத்துக் கோன், மற்றும் தங்களை எதிர்த்தவர்களையும் கைது செய்தார் கான்சாகிப்.ஆங்கிலேய அரசை எதிர்த்ததற்காக மன்னன் படையில் உள்ளவர்களின் வலது கைகள் துண்டிக்கப்பட்டன.

அழகுமுத்து கோன் மற்றும் அவரது ஆறு தளபதிகளையும் நடுக்காட்டுச்சீமை என்ற இடத்திற்கு கொண்டு சென்றுபீரங்கியின் வாயில் அனைவரையும் இரும்பு சங்கிலியால் பீரங்கியின் வாயிலில் மார்பு பொருந்தும்படி கட்டி வைத்து மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தப்பட்டனர்.மன்னிப்பு கேட்க மறுத்து கர்ஜனை செய்த அழகுமுத்துகோனை கண்டு வியப்படைந்தார் கான்சாகிப்.

பீரங்கி வாயிலில் அழகுமுத்துக்கோன் கர்ஜித்த கடைசி முழக்கம்....
கிருஷ்ண பரமாத்மாவே!என் பாரத தாயே! தமிழ் மக்களுக்காக புரட்சி செய்தேன்.எம் தமிழ்மண்ணின் உரிமைக்காக போர்தொடுத்தேன்.தமிழ்மண்ணுக்காக மடிகிறேன்.தமிழனின் தன்மானங்காத்திட கலங்காது படையெடுத்து கடல்வழி சென்று இலங்காபுரியை வென்று கோட்டிமன்னரைக்காத்து ஆரிய சக்கரவர்த்தியை வெற்றி கண்ட தமிழ் மன்னன் அழகப்பக்கோன் வழிவந்த சேர்வைமகன் அழகுமுத்து இன்று பீரங்கி வாயிலில் நிற்கிறான்.அன்று அரவானை பலிகொடுத்து பாரத போர் தொடங்கியது இன்று அழகுமுத்துவையும் அவனது வீரர்களையும் பலிகொடுத்து விடுதலை தொடங்குகிறது.இன்று தென்கோடியில் ஆத்தங்கரைக்கோட்டையில் தமிழனால் தொடங்குகின்ற விடுதலை முழக்கம் அகண்ட பாரதம் முழுவதும் ஒலிக்கட்டும்.இன்று தமிழர்களால் ஏற்றிய எழுச்சிக்கொடி நாளை விடுதலை கொடியாய் பட்டொளி வீசி பறக்கட்டும்.இன்று ஒரு அழகுமுத்து நாளை...நூற்றுக்கணக்கான அழகுமுத்து வருவார்கள்.......‌என்று கூறிய அழகுமுத்து சேர்வைக்கு இறுதியாக ஒரு வாய்ப்பு அளித்தும் மன்னிப்பு கேட்க மறுத்த அழகுமுத்து கோன் மற்றும் அவரது ஆறு தளபதிகளையும் பீரங்கியால் சுட்டனர்.உடல் துண்டு துண்டாக சிதறியது. நடுக்காட்டு பீரங்கி மேட்டிலிருந்த கல்வெட்டு இந்நிகழ்வை எடுத்துரைக்கிறது.

1757ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி நடந்த இந்நிகழ்வே இந்திய விடுதலை வரலாற்றில் நடந்த முதல் மிகப்பெரிய படுகொலையாகும்
இப்போர் முடிந்த பிறகு கட்டாலங்குளம் அரசவையும் அழகுமுத்துக்கோன் கட்டிய கோட்டையும் ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டது.தற்பொழுது அவர் வாழ்ந்த வீடு மட்டுமே எஞ்சியுள்ளது.
தேசத்திருமகனார்-அழகுமுத்துக்கோனார் TBluXvQ

1757 ல் அழகுமுத்து கோன் நடத்திய இந்த விடுதலை போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற முதல் விடுதலைப் போராகும். பீரங்கியின் முன்பு இரும்பு சங்கிலியால் கட்டபட்ட நிலையில் மன்னிப்பு கேட்டு வரி செலுத்தினால் உயிர்பிச்சை இடுவதாக கூறிய யூசுப்கானிடம் கடைசிவரை மண்டியிடாமல் பீரங்கிமுன் சிரித்தபடி உயிரைவிட்டார் பெரிய அழகுமுத்து என்ற வீர அழகுமுத்துக்கோன்.கி.பி 1757 நவம்பர் 18 ல் நடந்த இந்த நிகழ்வே இந்தியாவின் முதல் பீரங்கி படுகொலை ஆகும். பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்க மாவீரர் வீரஅழகுமுத்து கோன்.பொழுது போனபிறகு போர்செய்வது தமிழர் மரபு அல்ல அதை தெரிந்துகொண்டு நடு இரவில் தாக்கி கைது செய்தார் யூசுப்கான் எனும் மருதநாயகம்.
தேசத்திருமகனார்-அழகுமுத்துக்கோனார் 2JC26sh

#அழகுமுத்து
#அழகுமுத்துசகோதரர்கள்
#அழகுமுத்திருவர்
#தந்தைஅழகுமுத்துக்கோன்
#வீரழகுமுத்து
#சின்னழகுமுத்துக்கோன்
#மருதநாயகம்
#யூசுப்கான்
#கான்சாஹிப்
#இராமநாதபுரம்சேதுபதி
#பூலித்தேவன்
#இந்தியவிடுதலைவீரர்கள்
#முதல்விடுதலை
#கட்டாலங்குலம்
#தேசத்திருமகன்
Jodha akbar
Jodha akbar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 25/06/2023

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum