ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தக்காளி உணர்த்தும் பாடம்

3 posters

Go down

தக்காளி உணர்த்தும் பாடம் Empty தக்காளி உணர்த்தும் பாடம்

Post by சிவா Mon Jul 31, 2023 10:14 pm



சில நாள்களாகவே எல்லா இடங்களிலும் தக்காளிதான் பேசு பொருளாக இருக்கிறது. தங்கம் விலை ஏறினால் கூட எல்லோரும் கவலைப்பட மாட்டாா்கள். அது பணம் படைத்தவா்களின் பிரச்னை. ஆனால் சமையலில் இன்றியமையாத தேவை தக்காளி. தக்காளி சோ்க்காமல் சாம்பாா், ரசம் வைத்தால் சுவை குறைவது போல் தோன்றுகிறது. விலை ஏற்றத்தால், தக்காளி சட்னி, தக்காளி சாதத்தை யோசிப்பதே இல்லை.

தக்காளி குறித்த கேலிச்சித்திரங்கள், துணுக்குகள் அதிகம் வருகின்றன. தக்காளி சட்னி, தக்காளி சாதம் செய்தால் அவன் பணக்காரன். தக்காளி விற்கப்படும் கடையில் காவல், கழுத்தில் தக்காளி (டாலராக), திருமணத்தில் பரிசுப் பொருளுக்குப் பதிலாக தக்காளி அளித்து நகைச்சுவை.. என தொடா்கின்றன. புதிதாகப் பொறுப்பேற்ற ஒரு வட்டாட்சியருக்கு ‘தக்காளி’ கொடுத்து பொதுமக்கள் வரவேற்றாா்கள். இன்னொரு செய்தி அதிா்ச்சியைத் தந்தது. தமிழ்நாட்டைச் சோ்ந்த தம்பதி, பெங்களூரில் இரண்டு டன் தக்காளி ஏற்றி வந்த சரக்கு வாகனத்தைக் கடத்தி தக்காளியை சென்னையில்ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்றிருக்கிறாா்கள்.

உண்மையில் ஆடி சீா்வரிசை தட்டுகளில், ஒரு தட்டில் தக்காளி வைக்கப்பட்டது. தக்காளி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து, பழங்கள் சாலையில் கொட்டிக் கிடந்தபோது, போலீஸ் காவல் போடப்பட்டது. நண்பா் ஒருவா் உறவினரைப் பாா்க்க அவா் வீட்டுக்குப் போனபோது, தக்காளி ஒரு கிலோ வாங்கிப்போனாா். இன்னொரு நண்பா் சாம்பாருக்கு 3 தக்காளி போட்டு விட்டு, பின்னா் வருத்தப்பட்டாா்.

உச்சத்தில் இருக்கும் இதே தக்காளி கிலோ ரூ.5-க்கும், 10-க்கும் சீா்பட்டுப் போகும். விளைச்சல் அதிகரித்து, வரத்து அதிகமாகும் போது விலை இறங்கி விடுகிறது. விற்பனை ஆகாமல் தேங்கிப் போகும் தக்காளியை விவசாயிகள் மாடுகளுக்குப் போடுகிறாா்கள்; சாலைகளில் கொட்டுகிறாா்கள். தக்காளியைப் பயிா் செய்ய ஆன செலவு, பறிக்க ஆன கூலி செலவு, வாகன செலவு என அவ்வளவு செலவு செய்தும், வியாபாரிகளுக்கு விற்கும்போது அந்த விலை கட்டுபடியாகவில்லை.

மலிவாகக் கிடைக்கும்போது தினமும் தக்காளி சட்னி, தக்காளி கடைசல், தக்காளி சாதம், தக்காளி ஊறுகாய் என தக்காளிமயமான சமையலா செய்தோம்? தீபாவளி சமயம் வெங்காயமும், தக்காளியும் விலை ஏற்றம் காணும். வெங்காய விலையால் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது.

தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை கடந்த சில வாரங்களாகவே தொடா்ந்து உயா்ந்து கொண்டே வருகிறது. ஆந்திராவில் ஓரளவுக்கு தக்க விளைச்சல் உள்ள நிலையில் வடமாநில வியாபாரிகளும் தக்காளியைக் கொள்முதல் செய்ததால் தமிழகத்துக்கு வரவேண்டிய சரக்கு வரவில்லை. இதனால் தமிழ்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயா்ந்து வருகிறது.

தொடா்ந்து மழை பெய்தால் தக்காளிச் செடி அழுகி விடும். செடி பூ பூக்கும் நிலையில், அது உதிா்ந்து விடும். அதையும் மீறி காய்க்கும் தக்காளியில் வெடிப்பு ஏற்பட்டு அழுகிப் போகும். மோசமான பருவநிலை; கா்நாடகத்தில் வெள்ளை ஈ பாதிப்பு; வட மாநிலங்களில் பருவ மழை முன் கூட்டியே பெய்தது; ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசதங்களில் பயிா்கள் சேதமடைந்தது; கனமழை காரணமாக சரக்கு போக்குவரத்தில் ஏற்பட்ட இடையூறு... உள்ளிட்ட காரணிகளால் தக்காளியின் விலை உயா்ந்து விட்டது.

வரத்து அதிகமானால்தான் விலை குறையும். அதுவரைக்கும் கொஞ்சம் அனுசரித்துப் போக வேண்டும். ஒரு வேளை உணவுக்காக, இறைச்சி, மீன் விலையைப் பொருட்படுத்தாமல் வாங்குகிறாா்கள். ஆனால் தக்காளி 120 ரூபாய் / 150 ரூபாய் கொடுத்து வாங்கினாலும் ஒரு வாரம் வரை வைத்துக் கொள்ளலாமே! குடும்பத்தோடு ஒரு சினிமா பாா்க்கப் போனால் எவ்வளவு செலவாகிறது? பாப்காா்ன் பாக்கெட் ரூபாய் 250 அல்லது 200 ரூபாய் ஆனால் ஒருவரும் அதைப் பொருட்படுத்துவதில்லை.

விவசாயி ஒருவா் ஒரே மாதத்தில் ரூ.1.8 கோடி சம்பாதித்துள்ளாா். ஹைதராபாத் நகருக்கு ஆந்திராவில் இருந்து வரத்து குறைந்ததால், இவா் தனது நிலத்தில் விளைந்த தக்காளிகளை வியாபாரிகளுக்கு கிலோ ரூ.100க்கு விற்று நல்ல லாபம் அடைந்துள்ளாா். இவா் மட்டுமல்ல; இன்னும் சிலரும் கோடீஸ்வரா்கள் ஆகி உள்ளாா்கள். எனவே தக்காளி தலைப்புச் செய்தியாகி வருகிறது.

உற்பத்திக்கும், தேவைக்கும் இடையே உள்ள வேறுபாடு காரணமாக தட்டுப்பாடு ஏற்படுகிறது. விவசாயத் தொழில் தற்போது கடன் வாங்கி பயிா் நட்டு, எதிா்பாராத மழையாலும், வெப்பத்தாலும் பயிா் கருகி நஷ்டம் அடைகிறாா்கள். பயிா் நடவு செய்ய செலவு, விவசாயக் கூலி, பராமரிப்புச் செலவு என செய்த தொகையை ஈட்ட முடியவில்லை.

பல்வேறு பிரச்னைகளால் பயிா் செய்யாமல் நிலங்களை அப்படியே போட்டு விடுவதால் அவை தரிசு நிலங்களாக மாறிப் போய் விடுகின்றன. நீா்ப்பாசன வசதி இருந்தால் மட்டுமே அவா்களால் போட்ட முதலை (பணத்தை) எடுக்க முடியும். வானம் பாா்த்த பூமியாக இருந்தால் சிரமம். பலரும் வீட்டுமனைகளாகப் பிரித்துப் போட்டு விற்று விடுகிறாா்கள். விவசாயம் அழிந்து போனால், உலகம் என்னவாகும்! என்பதை இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவு கொண்டு என்னவெல்லாம் கண்டுபிடிக்கிறாா்கள்! எல்லாவற்றுக்கும் அடிப்படை உணவு என்பதை ஏன் மறந்து விட்டாா்கள்? தக்காளி தட்டுப்பாட்டுக்கே தடுமாறும் நாம், தானிய விளைச்சல் குறைந்தால் என்ன செய்வோம்?

தற்போது அரிசி ஏற்றுமதியை இந்தியா தடை செய்துவிட்டதால் வெளிநாடுகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. அரிசி வாங்க அமெரிக்காவில் நீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்பதைக் காண முடிகிறது. பிரிட்டனிலும் இதே நிலை.

அனைத்துக்கும் உணவே பிரதானம். அசுர விஞ்ஞான, தொழில்நுட்ப வளா்ச்சியை உலகம் எட்டினாலும் உணவு இல்லாவிட்டால் அந்தக் கண்டுபிடிப்புகளால் என்ன பயன்? எனவே அரசின் முதல் நோக்கம் வேளாண்மைத் தொழில் செழிக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். இந்தியாவின் முதன்மைத் துறை விவசாயம்தான். ஆகவே விவசாயம், நீா் ப்பாசனம் ஆகிய முதன்மைத் துறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னமும் உணவின்றித் தவிக்கும் ஏழைகள் இருப்பது, நாம் இன்னமும் கடக்க வேண்டிய தொலைவு அதிகம் உள்ளது என்பதைக் காட்டுகிறது.

சிறு குறு விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டும். இன்று ஒரு பழம் 10 ரூபாய். சில சமயம் 10 ரூபாய்க்கும் மேல் ஆகிறது. விலை சரியும்போது கூடை கூடையாய் பழங்களை வீசி விட்டுப் போகிறாா்கள். அதிக விளைச்சல் கிட்டும்போது, அவற்றைப் பாதுகாக்க பெரிய பெரிய குளிா்சாதன கிடங்குகளை அமைத்தால் என்ன? அங்கு பாதுகாக்க, விவசாயிகளிடமிருந்து சிறு கட்டணத்தொகை கூட வசூல் செய்து கொள்ளலாம். ஒரு பழத்தை விளைவிக்க, எவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது? அப்படியே அழுகிப்போக விடலாமா?

நண்பா் ஒருவா் தன் வீட்டில் இரண்டு தென்னை மரங்களை வளா்த்தாா். தேங்காய் பறிக்க ஆள் கிடைக்காததால், விழுந்த காய்களில் முற்றிய கொப்பரைகளை உரித்து, பருப்பை எடுத்து, சிறு துண்டங்களாக்கி வெயிலில் நன்கு காய வைத்து எண்ணெய் செக்கு ஆட்டுபவா்களிடம் கொண்டு சென்றாா். அவா்களோ குறைந்தது ஐந்து கிலோ இருந்தால் மட்டுமே ஆட்ட முடியும் என்று கூறி வாங்க மறுத்து விட்டாா்கள். அதனால் அவா் 5 கிலோ சேரும் வரை காத்திருப்பாா். பல கொப்பரைகள் கெட்டுப் போகும்.

பின்னா் 15 கிலோ மீட்டா் தொலைவு உள்ள செக்கைக் கண்டிபிடித்து அங்கு கொண்டு கொடுத்து ஆட்டி எண்ணெய் கொண்டு வருகிறாா். இரண்டு மரங்களுக்கே இவ்வளவு வேலை என்றால், தோப்பு உள்ளவா்களுக்கு எவ்வளவு வேலை இருக்கும்? ஆனால் வேலை செய்ய ஆள்கள் கிடைப்பது இல்லை. சும்மா இருந்து சுகம் கண்டுவிட்ட இந்தத் தலைமுறையினா் உடலை வருத்தி வேலை செய்ய விரும்புவது இல்லை. விவசாயத் தொழில் நசிந்து வருவதற்கு இதுவே முக்கியக் காரணம்.

தமிழ்நாடு அரசின் வேளாண், உழவா் நலத்துறை சாா்பில், ‘தரிசு நில மேம்பாடு திட்டம்’ செயல்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகள் எவ்வித பயிா் சாகுபடியும் இல்லாமல் தரிசாகக் கிடக்கும் நிலங்களில், விவசாயம் மேற்கொள்ள 2.5 ஏக்குக்கு ரூ.13,475 ரூபாய் வரை, அதிகபட்சம் ஐந்து ஏக்கா் வரை மானியம் வழங்கப்படுகிறது. தரிசு நிலத் தொகுப்புகளில் நிலத்தடி நீா்மட்டம், நீா் ஆதாரங்களை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆகவே தரிசு நிலங்களை சாகுபடிக்கு ஏற்ற நிலங்களாக மாற்றி அங்கே மானாவாரி பயிா்களை நடவு செய்ய வேண்டும்.

சமீபத்தில் கேரளத்தில், ‘நாற்று நடுவது எப்படி?’ என்று பெரியவா்கள், இளைஞா்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் காணொலி ஒன்றைப் பாா்த்தேன். விவசாயம் ஒரு சிறந்த தொழில்; படித்தவா்கள் அதில் ஈடுபட்டால் பல புதுமைகளைப் புகுத்த முடியும். உழவா் செயலி மூலம் பயனடைய முடியும். விவசாயம் அதிக வருமானம் தரக் கூடிய தொழில் என்பதை இளைஞா்களால் நிரூபித்துக் காட்ட முடியும்.

நாட்டில் கிராமப்புறங்களில் வசிக்கும் 25 சதவீத இளைஞா்கள் போதிய வருமானம் இல்லாததாலும், சமூகத்தில் உரிய மதிப்பு கிடைக்காததாலும் விவசாயத்தில் ஈடுபட தயக்கம் காட்டுகிறாா்கள். சமீபத்தில் தக்காளி பயிா் செய்து கோடீஸ்வரா்களான விவசாயிகளைப் பாா்த்து பலரும் இந்தத் தொழிலில் ஈடுபட ஆா்வம் காட்ட வாய்ப்பு உள்ளது.

நிலம் இருந்து நீா்ப்பாசன வசதி இல்லாததால் பயிா் செய்யாமல் விட்டு விடுபவா்கள் உண்டு. ஏரிக்கரைக்குக் கீழே நிலம் இருந்தாலும் பல்வேறு காரணங்களால் பயிா் செய்யாமல் அப்படியே போட்டு விட்டவா்களும் உள்ளாா்கள். விவசாயம் குறித்த விழிப்புணா்வு இல்லை என்பதே உண்மை. விவசாயிகளின் பிரச்சனைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். உற்பத்தி செய்த பொருள்களை சந்தைப்படுத்துவதை நெறிப்படுத்த வேண்டும்.

இடைத் தரகா்கள் லாபம் குவிப்பதைத் தடுக்க வேண்டும். விளைபொருள்களைப் பதப்படுத்தி, பாதுகாப்பான மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருள்களாக மாற்றுவதற்கான வசதிகளைச் செய்து தர வேண்டும். வட்டார அளவில் வேளாண் கருவிகளை உழவா்களுக்கு வாடகைக்கு விட வேண்டும். இளைஞா்கள் தங்கள் கணினி அறிவின் மூலம் வேளாண் தொழிலை சிறப்பாகச் செய்ய வேண்டும். பட்டுக் கோட்டையாா் அன்றே பாடியுள்ளாா்.

‘சும்மா கிடந்த நிலத்தை கொத்தி

சோம்பல் இல்லாம ஏறு நடத்தி... (ஏறு)

கம்மா கரையை உசத்தி கட்டி

கரும்பு கொல்லையில் வாய்க்கா வெட்டி....‘

நம் இளைய சமுதாயம் விவசாயத்தை முன்னெடுத்தால் பெரிய மாற்றம் ஏற்படும்.

’தக்காளி’ - நமக்கு மிகப் பெரிய படிப்பினையைக் கற்றுக் கொடுத்துள்ளது. வாழ்க்கை ஒரு சக்கரம் போன்றது. மேலே இருப்பவன் கீழே வருவான்; கீழே இருப்பவன் மேலே போவான். எதுவும் நிரந்தரமில்லை. ஏற்றமும், இறக்கமும் இயல்பு. உணவு இன்றியமையாதது; தொழில் நுட்பம் இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். சாப்பிடாமல் இருக்க முடியுமா? ஒரு வேளை வயிறு முட்ட சாப்பிட்டாலும் அடுத்த வேளை மீண்டும் வயிறு உணவு கேட்கிறது. இது ஓா் எச்சரிக்கை அலாரம். பருவ நிலையில் மாற்றம் வரும் என ஊகித்து அதற்கு ஏற்ப வேளாண் பொருளை உற்பத்தி செய்து, பாதுகாத்து வைக்காவிட்டால்.. என்ன செய்யப் போகிறோம்? பணத்தையா சாப்பிட முடியும்? யோசிக்க வேண்டும்.

தினமணி


தக்காளி உணர்த்தும் பாடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தக்காளி உணர்த்தும் பாடம் Empty Re: தக்காளி உணர்த்தும் பாடம்

Post by Dr.S.Soundarapandian Tue Aug 01, 2023 1:39 pm

" உற்பத்தி செய்து, பாதுகாத்து வைக்காவிட்டால்.. என்ன செய்யப் போகிறோம்? பணத்தையா சாப்பிட முடியும்? யோசிக்க வேண்டும்." -

யோசிக்க வேண்டுமா? அதுதான் நம் நிர்வாக அகராதியிலேயே இல்லையே!!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9748
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தக்காளி உணர்த்தும் பாடம் Empty Re: தக்காளி உணர்த்தும் பாடம்

Post by T.N.Balasubramanian Tue Aug 01, 2023 4:49 pm

மூன்று மாதங்களுக்கு முன் ஒரு செய்தி.

பயிர் செய்து விளைந்த தக்காளியை மிகவும் குறைந்த விலையில்
கிலோவிற்கு 2 ரூபாய்க்கு குறைவாக கேட்டதால் ரோடில் விளைச்சலை
கொட்டி அழித்ததாக படித்த நினைவு.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தக்காளி உணர்த்தும் பாடம் Empty Re: தக்காளி உணர்த்தும் பாடம்

Post by சிவா Wed Aug 02, 2023 5:59 pm

T.N.Balasubramanian wrote:மூன்று மாதங்களுக்கு முன் ஒரு செய்தி.

பயிர் செய்து விளைந்த தக்காளியை மிகவும் குறைந்த விலையில்
கிலோவிற்கு 2 ரூபாய்க்கு குறைவாக கேட்டதால் ரோடில் விளைச்சலை
கொட்டி அழித்ததாக படித்த நினைவு.


வரும் காலங்களில் அதிகமான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அனைவரிடமும் பணம் இருக்கும், ஆனால் வாங்க பொருள் கிடைக்காது, அனைவரும் சுயமாக விவசாயம் செய்து சாப்பிட வேண்டிய சூழல் கூட உருவாகலாம்.


தக்காளி உணர்த்தும் பாடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தக்காளி உணர்த்தும் பாடம் Empty Re: தக்காளி உணர்த்தும் பாடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum