புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரானை எரித்த நபரை இஸ்லாமிய நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும் - ஈரானிய மதத் தலைவர் அயதுல்லா கொமேனி  Poll_c10குரானை எரித்த நபரை இஸ்லாமிய நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும் - ஈரானிய மதத் தலைவர் அயதுல்லா கொமேனி  Poll_m10குரானை எரித்த நபரை இஸ்லாமிய நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும் - ஈரானிய மதத் தலைவர் அயதுல்லா கொமேனி  Poll_c10 
42 Posts - 63%
heezulia
குரானை எரித்த நபரை இஸ்லாமிய நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும் - ஈரானிய மதத் தலைவர் அயதுல்லா கொமேனி  Poll_c10குரானை எரித்த நபரை இஸ்லாமிய நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும் - ஈரானிய மதத் தலைவர் அயதுல்லா கொமேனி  Poll_m10குரானை எரித்த நபரை இஸ்லாமிய நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும் - ஈரானிய மதத் தலைவர் அயதுல்லா கொமேனி  Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
குரானை எரித்த நபரை இஸ்லாமிய நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும் - ஈரானிய மதத் தலைவர் அயதுல்லா கொமேனி  Poll_c10குரானை எரித்த நபரை இஸ்லாமிய நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும் - ஈரானிய மதத் தலைவர் அயதுல்லா கொமேனி  Poll_m10குரானை எரித்த நபரை இஸ்லாமிய நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும் - ஈரானிய மதத் தலைவர் அயதுல்லா கொமேனி  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
குரானை எரித்த நபரை இஸ்லாமிய நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும் - ஈரானிய மதத் தலைவர் அயதுல்லா கொமேனி  Poll_c10குரானை எரித்த நபரை இஸ்லாமிய நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும் - ஈரானிய மதத் தலைவர் அயதுல்லா கொமேனி  Poll_m10குரானை எரித்த நபரை இஸ்லாமிய நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும் - ஈரானிய மதத் தலைவர் அயதுல்லா கொமேனி  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரானை எரித்த நபரை இஸ்லாமிய நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும் - ஈரானிய மதத் தலைவர் அயதுல்லா கொமேனி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 22, 2023 7:14 pm

குரானை எரித்த நபரை இஸ்லாமிய நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும் - ஈரானிய மதத் தலைவர் அயதுல்லா கொமேனி  66066929_1006

சுவீடன் நாட்டில் இஸ்லாமியர்களின் புனிதநூலான குரான் எரிக்கப்பட்ட விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது. எரித்த நபரை இஸ்லாமிய நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஈரானிய மதத் தலைவர் அயதுல்லா கொமேனி கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று சனிக்கிழமை அவர் கூறியதாக, ஈரான் அரசு ஊடகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.ஈராக்கில் இருந்து சுவீடனுக்கு தஞ்சம் புகுந்த நபர் ஒருவர், கடந்த மாதம் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் மையப் பகுதியில் உள்ள மசூதி அருகில், குரான் நூலின் சில பக்கங்களைக் கிழித்தும் எரித்தும் தன் அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை தனி நபர் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கு முழுமையான உரிமை உள்ளது என்பதால், அங்கு இது பெரிதாகப் பேசப்படவில்லை.

பிரான்ஸ் உட்பட சில நாடுகளில் இஸ்லாமியப் பெண்கள் முகத்திரை அணிவது அதிகரித்துள்ள போதும், அவர்களைப் பொறுத்தவரை அது தனி நபர் உடைச் சுதந்திரம் என்கிற அளவில் கடந்துபோய் விடுகின்றனர். ஆளும் அரசாங்கங்கள், அதிபர், பிரதமர் குறித்தெல்லாம் அங்கு கேலிசெய்யும் கார்டூன்கள் வெகு பிரபலம் என்பது தெரிந்ததே. இதே பிரான்ஸ் நாட்டில் இஸ்லாமிய மதம் தொடர்பாகவும் சில விமர்சன கார்டூன்கள் வெளியாகி, பெரும் பிரச்னை ஆனதும் நினைவிருக்கலாம்.

சில ஆண்டுகளாக இப்படியான விவகாரம் எதுவும் இல்லாமல், அமைதியாக இருந்த நிலையில், குரான் எரிப்பு சம்பவம், மத்திய கிழக்கு நாடுகளில் எதிர்ப்பை உண்டாக்கி விட்டது.

ஈராக்கில் நேற்று முன் தினம் தலைநகர் பாக்தாத்தில் சுவீடன் தூதரகம் முன்பாக பெரும் போராட்டம் நடத்தப்பட்டதுடன், உள்ளே புகுந்த போராட்டக்காரர்கள் தீவைப்பிலும் ஈடுபட்டனர். அதையடுத்து ஈராக் இராணுவமும் போலீசும் இணைந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்த போதும், பிரச்னையின் தீவிரம் குறையவில்லை.

பாக்தாத்தில் சுவீடன் தூதரகம் தீயிடப்பட்டதற்கு, உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், இந்தோனேசியா, ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளும் இதில் அடக்கம்.இந்த நிலையில், சுவீடன் தூதர் மத்தியாஸ் லெண்ட்சை அழைத்த ஈரான் வெளியுறவு அமைச்சகம், சுவீடன் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. அதைக் கேட்டுக்கொண்ட மத்தியாசும், தங்கள் அரசிடம் ஈரானின் உணர்வை எடுத்துரைப்பதாகத் தெரிவித்தார்.

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல, முன்னர் குரானை எரித்த மொம்மிகா என்கிற அந்த நபர், மேலும் பிரச்னையை வளர்த்துவிட்டார். ஸ்டால்க்ஹோமில் உள்ள ஈராக் தூதரகம் முன்பாக மேலும் ஒரு குரான் புத்தகத்தின் மீதும் ஈராக் கொடி மீதும் ஏறிநின்று அவமரியாதை செய்தார்.

இரண்டாவது முறையாகவும் குரானை அவமதித்ததாகக் கொதித்த ஈராக் அரசு, சுவீடன் தூதரை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டது.

ஈரான் தரப்பிலோ, அங்குள்ள சுவீடன் தூதர பணி ஓய்வு பெறும் நிலையில், அடுத்த தூதரை ஏற்க முடியாது என நேற்று அறிவித்தது. குரான் எரிப்பில் சுவீடன் அரசு உரிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்; இல்லாவிட்டால் சுவீடன் தூதரை ஏற்றுக்கொள்ள முடியாது என ஈரான் அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து, ஈரானிய அரச- மதத் தலைவரான அயதுல்லா கொமேனி எச்சரிக்கையை விடுத்துள்ளார். குரானை அவமதிப்பது எவ்வளவு கடுமையான குற்றம் என்பதை இஸ்லாமிய அறிஞர்கள் அறிவார்கள் என்றும் சம்பந்தப்பட்ட நபரை இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையில் உள்ள நாடுகளிடம் ஒப்படைப்பது சுவீடன் அரசின் கடமை என்றும் கொமேனி கூறியிருக்கிறார்.

ஈரானின் மதத் தலைவராக மட்டும் அல்லாமல், உலக அளவில் இஸ்லாமியர்களால் பெருமளவில் மதிக்கப்படும் கொமேனியின் இந்தக் கருத்து, கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 22, 2023 7:29 pm

குரானை எரிப்பதா? - பாக்தாத்தில் சுவீடன் தூதரகத்தில் தீ வைப்பு



சுவீடனில் குரானை எரித்ததைக் கண்டித்து, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தின் மீது தீ வைப்பு, தாக்குதல் முயற்சி நடந்துள்ளது.

கடந்த மாதம் 28ஆம் தேதி அன்று சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மையப் பகுதியில் உள்ள மசூதி அருகில், ஈராக்கிய அகதி ஒருவர் குரானைக் கொளுத்தினார். சல்வான் மொமிக்கா என்கிற 37 வயது இளைஞர் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக்கிலிருந்து புலம்பெயர்ந்து சுவீடனில் வசித்து வருகிறார். உலகம் முழுவதும் முஸ்லிம்கள் ஈகைத் திருநாளைக் கொண்டாடிக்கொண்டு இருக்க, அதே நாளில் இந்த நபர், குரானின் சில பக்கங்களைக் கிழித்து எறிந்ததுடன், அவற்றைத் தீயிட்டும் கொளுத்தினார். அப்போது, அது பல நாடுகளிலும் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் உருவாக்கியது.

இஸ்லாமிய அரசுகள் உள்ள துருக்கி, மொராக்கோ, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, எகிப்து, ஈராக், ஜோர்டான், குவைத், ஏமன், சிரியா, பாலஸ்தீனம், கத்தார் ஆகிய நாடுகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தன.

வழக்கம்போல, இதிலும் தலையிட்டு கருத்துத் தெரிவித்த அமெரிக்க அரசு, கருத்து சுதந்திரத்தை ஆதரிப்பதாகவும் இஸ்லாமியர்களின் மத நம்பிக்கை, சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் கூறியது.

சுவீடன் விவகாரத்தால் தொடர் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், மத்திய பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகம் முன்பாக, இன்று வியாழன் காலையில் பெரும் திரள் போராட்டம் தொடங்கியது. தூதரகத்தின் சுவரைத் தாண்டி உள்ளே சென்ற போராட்டக்காரர்கள் தீவைப்பிலும் ஈடுபட்டனர்.இவர்கள் அனைவரும் ஈராக்கின் சியா முஸ்லிம்கள் பிரிவின் அரசியல், மதவாதத் தலைவரான முக்டாடா அல் சத்தரின் படங்களை ஏந்தியிருந்தனர் என்று அல்ஜசீரா தெரிவிக்கிறது.

இதேசமயம், சுவீடன் தூதரகப் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அரசுரீதியான பாதுகாப்பை வழங்க ஈராக்கிய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட சுவீடன் அரசு, தாக்குதலுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.ஈராக்கிய அரசும் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

நடந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றும் தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து சட்டப்படி தண்டிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என்றும் ஈராக் அரசு தெரிவித்திருக்கிறது.சத்தரின் ஆதரவாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக அதில் பங்கேற்றவர்கள் அல்ஜசீரா ஊடகத்திடம் தெரிவித்தனர். எங்களின் அன்புக்கும் விசுவாசத்துக்கும் உரிய குரானை எரிப்பதைச் சகிக்கமுடியாமல்தான் நாங்கள் இதில் ஈடுபட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 23, 2023 10:26 am

வெறுப்பு அரசியல் என்பது எங்குமே கூடாது !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 23, 2023 6:11 pm

Dr.S.Soundarapandian wrote:வெறுப்பு அரசியல் என்பது எங்குமே கூடாது !


மக்களை மதம் ஜாதி எனப் பிரித்து அரசாள்வது உலகம் முழுதும் புற்று நோயாகப் பரவிக்கிடக்கிறது.



குரானை எரித்த நபரை இஸ்லாமிய நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும் - ஈரானிய மதத் தலைவர் அயதுல்லா கொமேனி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக