புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_lcapமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_voting_barமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_lcapமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_voting_barமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_lcapமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_voting_barமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_lcapமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_voting_barமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_lcapமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_voting_barமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_rcap 
10 Posts - 4%
prajai
மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_lcapமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_voting_barமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_lcapமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_voting_barமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_lcapமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_voting_barமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_lcapமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_voting_barமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_lcapமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_voting_barமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_lcapமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_voting_barமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_lcapமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_voting_barமணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 20, 2023 5:56 pm

மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  101975076

மணிப்பூரில் குக்கி- சொமி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்கள், நிர்வாணப்படுத்தப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் கலவரம் தொடங்கியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. சுமார் 2 மாதங்களுக்கு முன்பாக இந்த சம்பவம் நடைபெற்றும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த வீடியோ பார்க்கும் யாரையும் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தும். இந்நிலையில் இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மணிப்பூர் முதலமைச்சர் என் பிரேன் சிங்கை அழைத்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில் , மே 4ம் தேதி மணிபூரின் தவுபல் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட காரணங்களுக்காக 2 மாதங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இது தொடர்பாக மணிப்பூர் காவல் கண்காணிப்பாளர் கே மேகசந்திரா சிங் கூறுகையில், “ சமந்தபட்ட குற்றவாளிகளை கைது செய்ய மாநில காவல்துறை முழு முயற்சி எடுத்து வருகிறது” என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் மெய்தி சமூகத்தினர் அதிகமாக இருக்கும் பகுதியில் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் இந்த சம்பவம் தொடர்பாக கங்கோபி மாவட்டத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் அளித்த உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. சம்பவம் நடந்த தவுபல் மாவட்ட காவல் நிலையத்திற்கு இந்த புகார் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த புகாரில், “ இந்த வீடியோவில் 2 பெண்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் 3 பெண்கள் மற்றும் கிராமத்தில் இருந்த 5 பேர் மற்றும் இளம் பெண்ணின் குடும்பத்தினர் இருவர் இருந்துள்ளனர். 800 முதல் 1000 ஆண்கள் கும்பலாக அப்பகுதிக்கு வந்து, வீடுகளை தாக்கி, தீ வைத்துள்ளனர். இவர்கள் கையில் ஏ.கே ரைபில்ஸ் மற்றும் பல்வேறு ஆயுதங்களை வைத்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் காவல்துறையினரால் காப்பாற்றப்பட்டு, காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழியில், மீண்டும் இந்த கும்பல் காவல்துறையினர் வாகனத்தை மறித்து இவர்களை இழுத்துச் சென்றுள்ளது. இளம் பெண்ணின் தந்தை சம்பவ இடத்திலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். 20 வயது, 40 வயது, 50 வயது மதிப்புள்ள 3 பெண்கள், நிர்வாணப்படுத்தப்பட்டனர். இளம் பெண், அனைவரின் முன்னால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். தங்கைக்கு உதவி செய்ய முயற்சித்த சகோதரரும், கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த மூன்று பெண்களும், தேங்க்னோவ்பல் மாவட்டம் வழியாக தப்பிச் சென்று, தற்போது நிவாரண முகாமில் உள்ளனர்.

இது தொடர்பாக ராகுல் காந்தி பதிவிட்ட ட்விட்டில் “ பிரதமர் மவுனம் மற்றும் செயலற்ற தன்மைதான் இதுபோன்ற மோசமான நிகழ்வுக்கு கொண்டு சென்றுள்ளது. இந்தியா என்ற சிந்தனை மணிப்பூரில் தாக்கப்படும் போது இந்தியா அமைதியாக இருக்காது. மணிப்பூர் மக்களுடன் நாங்கள் நிற்கிறோம். முன்னோக்கிச் செல்ல அமைதி மட்டுமே ஒரே வழி” என்று பதிவிட்டுள்ளார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 20, 2023 5:57 pm

‘மணிப்பூரின் மகள்களுக்கு நடைபெற்றது மன்னிக்க முடியாதது. குற்றவாளிகளை விட்டுவைக்கப் போவதில்லை’: பிரதமர் மோடி



’மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நடைபெற்ற கொடுமை மன்னிக்க முடியாதது. குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை விட மாட்டோம்’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் குக்கி- சொமி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்கள், நிர்வாணப்படுத்தப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் கலவரம் தொடங்கியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. சுமார் 2 மாதங்களுக்கு முன்பாக இந்த சம்பவம் நடைபெற்றும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில் “ இன்று உங்கள் முன்பு, ஜனநாயகத்தின் கோவிலுக்கு முன்னால் நிற்கிறேன். எனது மனம் முழுவதும் வலியில் நிறைந்துள்ளது. கோவத்தில் நிறைந்துள்ளது. மணிப்பூரில் நடந்த சம்பவம் நாகரீகமான எந்த சமூகத்திற்கும் வெட்கக்கேடு. ஒட்டுமொத்த நாடும் அவமானத்தில் மூழ்கி உள்ளது. 140 கோடி மக்களும் அமானத்தில் மூழ்கி உள்ளனர்.

எல்லா மாநிலத்தின் முதல்வர்களும் சட்ட ஒழுங்கை கூடுதலாக பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை காப்பாற்ற கண்டிப்பான நடவடிக்கை தேவை.

அது ராஜஸ்தானாக இருந்தாலும் சரி, சட்டீஸ்கராக இருந்தாலும் சரி, மணிப்பூராக இருந்தாலும் சரி அல்லது நாட்டின் எந்த பகுதியாக இருந்தாலும் சரி சட்ட ஒழுங்கும், மரியாதையாக பெண்களை நடத்துவதும் அரசியலுக்கு அப்பாட்பட்டு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

நாட்டு மக்களுக்கு நான் ஒன்றை உறுதியாக சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன், குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம். மணிப்பூரின் மகள்களுக்கு நடைபெற்றது மனிக்க முடியாத குற்றம்.

மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. ” மணிப்பூரில் நடைப்பெற்ற சம்பவம் தொடர்பான வீடியோ ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க நேரம் தருவதாகவும், அப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் உச்சநீதிமன்றம் நேரடியாக தலையிடும் என்று தெரிவித்துள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 20, 2023 5:58 pm

‘அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் தலையிடுவோம்’ : மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்



மணிப்பூரில் குக்கி- மெய்டி பழங்குடியின சமூகத்தினரிடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை நீடித்து வருகிறது.

மணிப்பூர் கலவர பூமியாக உள்ளது. இந்த கலவரத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அங்கு மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில் பெண்களை நிர்வாணப்படுத்து இழுத்துச் சென்ற சம்பவம் அமைந்துள்ளது. கடந்த மே மாதம் 4-ம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விவகாரம் நேற்று தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சி தலைவர் மணிப்பூர் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர், தொடர்ந்து உச்ச நீதிமன்றமும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இன்று (ஜூலை 20) மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோரை நேரடியாக அழைத்து மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக தங்களின் ஆழ்ந்த கவலையை தெரிவித்தது. அதோடு இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு சிறிது அவகாசம் தருவதாகவும், நடவடிக்கை எடுக்க தவறினால் நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வழக்கு விசாரணையின் தொடக்கத்தில் வெங்கடரமணி மற்றும் மேத்தா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிமன்றம் கூறியது.

விசாரணை தொடங்கியவுடன், தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், “மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நேர்ந்த கொடுமை, நேற்று வெளியான வீடியோக்களால் நாங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். நீதிமன்றமாக எங்களின் மிக ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்த விரும்புகிறோம்.

அரசாங்கம் உண்மையில் இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. பாலின வன்முறையைத் தூண்டும் வகுப்புவாத கலவரத்தில் பெண்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது ஆழமாகவும், ஆழமாகவும், கவலையளிப்பதாகவும், நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் உள்ளது என்று தலைமை நீதிபதி கூறினார்.

தொடர்ந்து மத்திய அரசு வழக்கறிஞர் எஸ்.ஜி. மேத்தா கூறுகையில், “இந்தச் சம்பவத்தில் அரசும் தீவிரமாக அக்கறை கொண்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று அவர் கூறினார். வீடியோ வெளியானதும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான உடனடி நடவடிக்கையை அரசு தொடங்கியுள்ளதாகவும், அதன் முடிவு நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து, மணிப்பூர் வன்முறை தொடர்பாக குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், வீடியோ விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும் வழக்கு விசாரணையை ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை, கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதில் முக்கிய குற்றவாளியாக கருத்தப்படும் ஹேராதாஸ் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 20, 2023 5:59 pm

‘போலீசாரால் அந்த கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டோம்’: பாதிக்கப்பட்ட இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு



மணிப்பூர் வன்முறை நாளுக்குநாள் மோசமாகி வரும் நிலையில், இரண்டு குக்கி-ஜோமி பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து, பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர், அவர்கள் ‘போலீசாரால் அந்த கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டதாக” பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களில், ஒருவருக்கு 20 வயது மற்றும் மற்றொருவருக்கு 40 வயது ஆகும். மே 18 அன்று தாக்கல் செய்யப்பட்ட போலீஸ் புகாரில், பாதிக்கப்பட்ட இளம் பெண் “பகல் நேரத்தில் கொடூரமான அந்த கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டதாக” குற்றம் சாட்டியுள்ளனர்.

அந்த புகாரில், காங்போக்பி மாவட்டத்தில் உள்ள தங்கள் கிராமத்தை ஒரு கும்பல் தாக்கிய பின்னர், அவர்கள் தஞ்சம் அடைய காட்டிற்கு தப்பிச் சென்றதாகவும், பின்னர் தௌபல் போலீசாரால் தங்களை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், ஆனால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளனர். போலீசாருடன் சென்ற அவர்களை வழிமறித்த அந்த கும்பல் காவல் நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் போலீசாரிடம் இருந்து அவர்களை கைப்பற்றியதாகவும் கூறியுள்ளார்.

தனது கணவரின் வீட்டின் தொலைபேசியில் இருந்து தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய அந்த இளம் பெண், “எங்கள் கிராமத்தைத் தாக்கும் கும்பலுடன் போலீசார் இருந்தனர். வீட்டுக்கு அருகிலிருந்து எங்களைக் கூட்டிக்கொண்டுபோய், கிராமத்திலிருந்து சிறிது தூரத்திற்கு அழைத்துச் சென்று, கும்பலுடன் எங்களை சாலையில் விட்டுச் சென்றது போலீஸ். நாங்கள் போலீசாரால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டோம்.” என்று குற்றம் சாட்டினார்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகாரில், அவர்களில் ஐந்து பேர் ஒன்றாக இருந்ததாகக் கூறியுள்ளனர்: வீடியோவில் காணப்பட்ட இரண்டு பெண்கள், 50 வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண்மணியும் கழற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இளம் பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் அந்த கும்பலால் கொல்லப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

“எல்லா ஆண்களும் கொல்லப்பட்ட பிறகு, கும்பல் அவர்கள் செய்ததைச் செய்த பிறகு, நாங்கள் அங்கேயே விடப்பட்டோம், நாங்கள் தப்பித்தோம்,” என்று கூறினார். எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்த சம்பவத்தை பதிவு செய்யும் வீடியோ இருப்பது தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தெரியாது என்றும் அவர் கூறினார்.

“மணிப்பூரில் இணைய வசதி இல்லை, எங்களுக்குத் தெரியாது,” என்றும், அந்த கும்பலில் “அதிகமான” ஆண்கள் இருந்தபோதிலும், அவர்களில் ஒரு சிலரை தன்னால் அடையாளம் காண முடிந்தது. அதில் ஒருவன் தனது சகோதரனின் நண்பன் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்திய சம்பவம் தொடர்பாக ஒருவரைக் கைது செய்துள்ளதை அரசு உறுதிப்படுத்தியது. மேலும் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக இன்று வியாழக்கிழமை பிற்பகல் போலீசார் தெரிவித்தனர்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 20, 2023 6:01 pm

மணிப்பூர் சர்ச்சை வீடியோவை அகற்ற வேண்டும் : சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை



மணிப்பூர் மாநிலத்தில் குக்கி-ஜோமி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த வீடியோவை அகற்றுமாறு ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. அரசின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், இந்த வீடியோவைப் பகிர்ந்த சில ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளன.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பெரும் கலவரம் வெடித்து வரும் நிலையில், மக்கள் அனைவரும் தங்களது இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ஆதரவின்றி தவித்து வருகின்றனர். இந்த கலவரங்கள் குறித்து அவ்வப்போது பத்திரிக்கைகளில் மற்றும் இணையதளங்களில் வெளியாகி வரும் தகவல்கள் மற்ற மாநில மக்களுக்கும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மணிப்பூர் மாநிலத்தில் குக்கி-ஜோமி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை ஆண்களின் கும்பல் நிர்வாணமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே மணிப்பூரில் பெரும் கலவரம் வெடித்து வரும் நிலையில், இந்த வீடியோ வைரலாகி வருவதால் மேலும் கலவரம் அதிகரிக்கும் என்று அச்சுறுத்தல் உருவானது. இதனால் இந்த வீடியோவை அகற்றுமாறு ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை ஏற்கனவே அச்சுறுத்தலில் இருக்கும் நிலையில், இந்த வீடியோ மேலும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் என்பதால் அதனை அகற்ற வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டதை தொடர்ந்து சமூகவலைதளங்களின் சார்பில் இந்த வீடியோவை அகற்ற சில இணைப்புகள் பகிரப்பட்டுள்ளன,” என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

#WATCH | Manipur CM N Biren Singh speaks on the viral video, says, "We saw the video and I felt so bad, it's a crime against humanity. I immediately ordered the police to arrest the culprits and the state govt will try to ensure capital punishment for the accused. Every human… pic.twitter.com/02y8knvMD4

— ANI (@ANI) July 20, 2023

தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000ன் பிரிவு 69 (A) இன் கீழ் சமூக ஊடக நிறுவனங்களுக்கு பகிரப்பட்ட பதிவுகளை அகற்றுவதற்கான உத்தரவுகளை வழங்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. இந்த வைரல் வீடியோவில் உள்ள சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்தது, மேலும் காங்போக்பி மாவட்டத்தில் மே 18 அன்று இந்த நடந்த இந்த சம்பவம் குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஏகே ரைபிள்கள், எஸ்எல்ஆர், இன்சாஸ், 303 ரைபிள்கள் போன்ற அதிநவீன ஆயுதங்களை ஏந்திய 800-1,000 பேர் கொண்ட கும்பல் மே 3-ம் தேதி பிற்பகலில் தங்கள் கிராமத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, கிராமத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் என ஐந்து பேர் காட்டை நோக்கி ஓடிவிட்டனர். பின்னர் அவர்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வரும் வழியில், காவல் நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து அவர்கள் கடத்தப்பட்டதாக என்று பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மணிப்பூரின் நிலைமை குறித்து பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தனது இதயம் “வலி மற்றும் கோபத்தால்” நிறைந்திருப்பதாகக் கூறியுள்ளார். “மணிப்பூரில் வெளிச்சத்திற்கு வந்துள்ள சம்பவம் எந்த நாகரீக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடான சம்பவம். நான் வேதனையாலும் கோபத்தாலும் நிறைந்துள்ளேன். மணிப்பூரின் சம்பவம் சமூகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது. மணிப்பூரின் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்கவே முடியாது, குற்றவாளிகள் தப்ப மாட்டார்கள்,” என்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

My hearts go out to the two women who were subjected to a deeply disrespectful and inhumane act, as shown in the distressing video that surfaced yesterday. After taking a Suo-moto cognisance of the incident immediately after the video surfaced, the Manipur Police swung to action…

— N.Biren Singh (@NBirenSingh) July 20, 2023

இதனிடையே இணையத்தில் வெளியான வீடியோ தொடர்பான வழக்கில், மாநில காவல்துறை ஒருவரை கைது செய்துள்ளதாக மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் கூறினார். மேலும் “வீடியோ வெளியான உடனேயே இந்த சம்பவம் குறித்து தானாக முன்வந்து அறிந்த பிறகு, மணிப்பூர் காவல்துறை நடவடிக்கை எடுத்து இன்று காலை ஒருவரை கைது செய்தது,” என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“தற்போது ஒரு முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து குற்றவாளிகளுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம், நம் சமூகத்தில் இதுபோன்ற கொடூரமான செயல்களுக்கு முற்றிலும் இடமில்லை என்பதை தெரியப்படுத்துங்கள், ”என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 20, 2023 8:21 pm

Code:
மணிப்பூரில் குக்கி- சொமி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்கள், நிர்வாணப்படுத்தப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் கலவரம் தொடங்கியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. சுமார் 2 மாதங்களுக்கு முன்பாக இந்த சம்பவம் நடைபெற்றும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

மணிப்பூர் அரசு மௌனம் காப்பது ஏன் ?
மாநில அரசு கண் மூடி இருப்பதேன்? மாநில போலீஸ் செயலற்று உள்ளதா?
ஆளுநர் என்ன செய்கிறார்?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 21, 2023 9:33 am

“மே 4ம் தேதி மணிபூரின் தவுபல் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது”-
எப்போ நடந்த கொடுமை இப்போது தெரிய வருகிறது! நல்ல நிர்வாகம் !




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 21, 2023 3:37 pm

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை: குற்றவாளியின் வீட்டை தீ வைத்து எரித்த சொந்த கிராம பெண்கள்



மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் குக்கி-ஜோமி பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் 2 மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது. இந்த மோதல் சம்பவத்தால் இதுவரை 100-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இரண்டு குக்கி-ஜோமி பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோவுக்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது. இந்த வீடியோவை கண்ட மனித உரிமை ஆணையமும், உச்ச நீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கிடையில், 2 இளம் பெண்களுக்கு கொடூரம் இழைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மற்ற குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய மாநில காவல்துறை முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இளம் பெண்களை நிர்வாணமாக்கிய கொடூர செயலை செய்ததில் முக்கிய குற்றவாளியான மெய்தி இனத்தை சேர்ந்த ஹுயர்ம் ஹெரோடாஸ் (32) என்பவரின் வீட்டை சொந்த கிராம மக்களே அடித்து நொறுக்கினர். ஹேராதாசின் செயல் ஒட்டுமொத்த மெய்தி இன மக்களுக்கே அவமானத்தை தேடி தந்ததாக கூறி, அவரது வீட்டை பெண்கள் அடித்து நொறுக்கியதுடன், தீயிட்டு கொளுத்தினர்.

“மெய்தேயி அல்லது பிற சமூகங்களாக இருந்தாலும், ஒரு பெண்ணாக, ஒரு பெண்ணின் கண்ணியத்தை சீர்குலைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படிப்பட்டவர் நம் சமூகத்தில் இருக்க அனுமதிக்க முடியாது. இது முழு மெய்தே சமூகத்திற்கும் அவமானம், ”என்று மீரா பைபி அமைப்பு தலைவர் கூறினார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 22, 2023 12:42 pm

"இது முழு மெய்தே சமூகத்திற்கும் அவமானம்," - சோகம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 23, 2023 8:08 pm

மணிப்பூரில் 2 இளம்பெண்கள் கற்பழிப்பு, கொலை தொடர்பாக மற்றொரு எப்.ஐ.ஆர்; விசாரணை என்ன நிலையில் இருக்கிறது?



இரண்டு மணிப்பூரி பெண்களின் ஆடைகளை அவிழ்த்து அணிவகுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, இரண்டு குக்கி-ஜோமி பெண்களைக் கடத்தி, கற்பழித்து கொலை செய்ததாகக் கூறப்படும் மற்றொரு வழக்கில்- அதே காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை.

இந்த வழக்கிலும், எஃப்.ஐ.ஆர், இம்பாலின் கிழக்கில் உள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு மாற்றப்பட ஒரு மாதத்திற்கு மேல் ஆனது. இப்போது, ​​​​இரண்டு மாதங்களுக்கும் மேலாக, புகாரைப் பதிவு செய்த குடும்பத்தினர் விசாரணையில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டதா என்பது தங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தன. விசாரணையின் நிலை குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் ராஜீவ் சிங் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இம்பால் கிழக்கு காவல் கண்காணிப்பாளர் சிவகாந்தா அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு பதிலளிக்கவில்லை.

எந்தவொரு காவல் நிலையத்திலும், குற்றம், அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்டு நடந்ததா என்பதைப் பொருட்படுத்தாமல் பூஜ்ஜிய எஃப்ஐஆர் பதிவு செய்யப்படலாம்.

(அதிகார வரம்பினால் கட்டுப்படுத்தப்பட்ட எஃப்.ஐ.ஆர் போலல்லாமல், குறிப்பிட்ட காவல் நிலையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட குற்றம் நடந்ததா என்பதைப் பொருட்படுத்தாமல், எந்த காவல் நிலையத்திலும் பூஜ்ஜிய எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடியும். எஃப்ஐஆர்களுக்கு வரிசை எண்கள் ஒதுக்கப்பட்டாலும், பூஜ்ஜிய எஃப்ஐஆர்களுக்கு ‘0’ எண் ஒதுக்கப்படும்.)

மணிப்பூரில், வன்முறையின் போது குடும்பங்கள் இடம்பெயர்ந்ததால் அல்லது அவர்களது உறவினர்கள் வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளில் காயமடைந்ததால் அல்லது கொல்லப்பட்டதால் இதுபோன்ற பல FIRகள் பதிவு செய்யப்பட்டன.

மே 16 அன்று, 21 மற்றும் 24 வயதுடைய இரண்டு இளம் குக்கி-ஜோமி பெண்களின் மரணம் தொடர்பாக அவர்களின் சொந்த மாவட்டமான காங்போக்பியில் உள்ள சைகுல் காவல் நிலையத்தில், பூஜ்ஜிய எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

இளம் பெண்ணின் தாயின் புகாரின் அடிப்படையில், கொலை, கற்பழிப்பு மற்றும் கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது..

இம்பாலில் கிழக்கில் கார் கழுவும் இடத்தில் பணிபுரிந்த இரண்டு இளம் பெண்கள், மே 5 ஆம் தேதி, சில அடையாளம் தெரியாத நபர்களால் கற்பழிப்பு மற்றும் கொடூரமான சித்திரவதைக்குப் பிறகு, அவர்களது வாடகை வீட்டில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர், அவர்கள் 100- 200 பேர் வரை இருக்கலாம், என்று புகாரில் தாய் கூறியிருந்தார்.

இந்த எஃப்ஐஆர் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள பொரோம்பட் காவல் நிலையத்திற்கு ஜூன் 13ஆம் தேதி மட்டுமே மாற்றப்பட்டது.

வெள்ளிக்கிழமை பேசிய 21 வயது இளம்பெண்ணின் உறவினர் ஒருவர், மே 5 ஆம் தேதிக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இரண்டு உடல்களின் புகைப்படங்களை போலீசார் அவர்களுக்கு அனுப்பியதாகவும், குடும்பத்தினர் அவர்களை அடையாளம் கண்டதாகவும் கூறினார்.

“எங்களுக்கு பிரேத பரிசோதனை அறிக்கை கூட வரவில்லை,” என்று உறவினர் கூறினார்.

வைரல் வீடியோவின் சம்பவத்துடன், ஜூன் 12 அன்று இரண்டு சமூக ஆர்வலர்கள் மற்றும் வட அமெரிக்க மணிப்பூர் பழங்குடியினர் சங்கம், தேசிய மகளிர் ஆணையத்தில் அளித்த புகாரில் இந்த குறிப்பிட்ட வழக்கும் அடங்கும்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், இம்பாலில் ஒரே கார் கழுவும் கடையில் வேலை செய்தனர், அவர்கள் நகரத்தில் ஒரு வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.

கடந்த மாதம் அவர்களது குடும்பத்தினருடன் பேசியபோது, ​​​​பல உடல்கள் ஏன் மருத்துவமனை சவக்கிடங்கில் உரிமை கோரப்படாமல் உள்ளன என்பதைப் பற்றி செய்தி வெளியிட்டது.

அப்போது, ​​21 வயதான இளம்பெண்ணின் தாய், மே 5 ஆம் தேதி மாலை தனது மகளுக்கு போன் செய்தபோது, ​​அழைப்பை எடுத்த ஒரு பெண் மணிப்பூரி மொழியில் பேசி மிரட்டினார். மீண்டும் அழைக்க முயன்றபோது, ​​போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது, என்றார்…

வெள்ளிக்கிழமை அன்று, மாலை என்ன நடந்தது என்பது குறித்த பெரும்பாலான தகவல்கள், சக ஊழியர் நாகா மூலம் கிடைத்ததாக உறவினர் கூறினார். இந்த இரண்டு பெண்களுடன் அவரும் ஒன்றாக தங்கியிருந்தார்.

‘அங்கு வந்த ஒரு கும்பல், இங்கு இரண்டு குக்கிப் பெண்கள் இருப்பது எங்களுக்குத் தெரியும், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை சொல்லுமாறு மிரட்டியுள்ளனர். பயத்தில், அங்கு தங்கியிருந்த மற்றொரு நபர் அவர்களின் அறையை நோக்கி காட்டி உள்ளார்.

அவர்களை பிடித்து வெளியே இழுத்து சென்றனர். அந்த பெண்களை கொடுமைப்படுத்தி, அவர்களின் வாயில் துணியைப் போட்டு, ஒரு ஹாலுக்குள் இழுத்துச் சென்று கதவைப் பூட்டினர்.

இரவு 7.10 மணி வரை உள்ளே இருந்தனர். அவர்கள் சென்ற பிறகு, மற்றவர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது, ​​இரண்டு பெண்களும் உயிருடன் இல்லை. என் உறவினரின் நீளமான முடியும் வெட்டப்பட்டது, என்று அவர் குற்றம் சாட்டினார்.

சைகுல் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், வைரலான வீடியோ மற்றும் குறிப்பிட்ட இந்த இரண்டு நிகழ்வுகளிலும்- வயர்லெஸ் மூலம் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அன்றே தகவல் தெரிவிக்கப்பட்டது, ஆனால் மாநிலத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக வழக்குகள் மிகவும் தாமதமாக மாற்றப்பட்டன.

சூழ்நிலை காரணமாக, மற்ற சமூகத்தினரின் பகுதிகளுக்கு போலீசார் கூட பாதுகாப்பாக செல்ல முடியவில்லை. அதனால்தான் எங்கள் காவல் நிலையத்தில் இருந்து பணியாளர்கள் பள்ளத்தாக்குக்குச் செல்ல முடியவில்லை, அவர்களின் பணியாளர்கள் இங்கு வர முடியவில்லை, என்று அந்த அதிகாரி கூறினார்.



மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக