ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால தோசைக்கல்

3 posters

Go down

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால தோசைக்கல் Empty வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால தோசைக்கல்

Post by சிவா Wed Jul 19, 2023 8:00 pm

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால தோசைக்கல் E2467b40-25f1-11ee-95a0-91289ab8ccad

விருதுநகர் மாவட்டம் #வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில் நடைபெறும் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளில் பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்து வருகின்றன. இங்கு கிடைக்கும் பொருட்களின் அடிப்படையில் இப்பகுதியில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் கலைநயத்துடன் வாழ்ந்தது தெரியவந்துள்ளது.

மேலும் இங்கு கிடைக்கும் அகழாய்வு பொருட்களால் வெம்பக்கோட்டையில் வணிகம் நடந்ததற்கான சான்றும் கிடைத்துள்ளது.

குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட வெம்பக்கோட்டை


விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து தெற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் வைப்பாற்றின் இடது கரையில் அமைந்துள்ளது வெம்பக்கோட்டை.

இது சேதுபதி, பாண்டி சேதுபதி ஆகிய குறுநில மன்னர்கள் ஆட்சி செய்த பகுதி ஆகும்.

அந்த காலத்தில் அமைக்கப்பட்ட எண்கோண சந்தியா மண்டபம் மற்றும் வற்றாத நாழிக்கிணறு, 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், பழங்கால மண்டபங்கள் இன்றும் நினைவுச் சின்னங்களாக கரையில் உள்ளன.

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் ஆற்றின் கரையோர பகுதிகளில் #தொல்லியல் #அகழாய்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணி, பாசிமணி, சுடுமண் பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டன. இரண்டாம் கட்ட அகழாய்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் கடந்த வாரம் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் ஆன சுடுமண் பானை ஓடுகள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அகல் விளக்குகளும் அதனைத் தொடர்ந்து, ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டன.

மேலும், சுடு மண்ணால் செய்யப்பட்ட தோசைக் கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது அக்கால மக்கள் கூட்டமாக வாழ்ந்து வந்ததையும், அப்போது அவர்கள் தோசை சுடுவதற்காக சுடுமண்ணால் ஆன தோசைக்கல்லை பயன்படுத்தியதைக் காட்டுவதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால தோசைக்கல் Af98d2e0-25e9-11ee-941e-23d1e9ab75fa

கீழடிக்கும் வெம்பகோட்டை க்கும் என்ன தொடர்பு?


இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் மற்றும் பானை ஓடுகள் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டுவந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும், இப்பொருட்கள், வைப்பாற்றங்கரையில் இருந்து தூத்துக்குடி கடல் வழியாக வணிகம் நடந்ததற்கான சான்றாக உள்ளன.

கீழடியில் தொழிற்சாலை இருந்ததற்கு சான்றுகள் கிடைத்துள்ளதை போல் வெம்பக்கோட்டையில் தொழிற்சாலை செயல்பட்டதற்கான சான்று உள்ளது. எனவே வெம்பக்கோட்டை ஒரு வணிக தளமாக செயல்பட்டுவந்தது என தெரிய வருகிறது.

அகழாய்வில் 3,254 தொல்பொருட்கள் கண்டெடுப்பு


வெம்பக்கோட்டையில் நடைபெறும் இரண்டாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள், அவை பயன்படுத்தப்பட்ட காலத்தில் மனிதர்கள் இங்கு வணிகம் செய்ததற்கான சான்றாக உள்ளன என கூறுகிறார் வெம்பக்கோட்டை அகழாய்வுப் பணிகளின் இயக்குனர் பாஸ்கர். இது குறித்து விரிவாக பேசிய அவர், வைப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ள 25 ஏக்கர் மேட்டுப்பகுதியில் தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், இந்த நிலத்தின் மேற்பரப்பில் முதல் கட்ட அகழாய்வில் சுடுமண் பொம்மைகள், சங்கு வளையல்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன என்றும் கூறினார். மேலும், இப்பகுதியில் தொடர்ந்து அகழாய்வு செய்ய திட்டமிட்டு இந்த இடத்தை தொல்லியல் மேடாக உறுதி செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் 16 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு 3,254 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால தோசைக்கல் B23e7010-25ec-11ee-941e-23d1e9ab75fa

"வெம்பக்கோட்டை யில் நடைபெற்ற முதலாவது அகழாய்வு மற்றும் தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது அகழாய்வு பணிகளின் போது கிடைத்த பொருட்களைக் கொண்டு பார்த்தால், சங்கு வளையல் செய்யக்கூடிய தொழிற்சாலைகள் இங்கு செயல்பட்டது தெரிய வருகிறது.

சுடுமண்ணால் ஆன அனைத்து விதமான அலங்கார பொருட்கள், உருவ பொம்மைகள் கிடைக்கின்றன. இங்கு கிடைப்பது போல் பல அகழாய்வு தளங்களில் பொருட்கள் கிடைத்தாலும் இங்கு கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் சுடுமண் பொருட்களாக உள்ளன.

குறிப்பாக சூது பவள மணிகள், யானை தந்தங்களால் ஆன பதக்கங்கள் வெம்பக்கோட்டையில் அதிக அளவு கிடைத்துள்ளன.

தமிழகத்தில் நடைபெற்று வரும் அகழாய்வுத் தலங்களில் மக்கள் வாழ்விடப் பகுதிகளில் சங்கு வளையல்கள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கின்றன. ஆனால் வெம்பக்கோட்டையில் கிடைக்கும் சங்கு வளையல்கள், அலங்கரிக்கப்பட்டவையாக இருப்பதோடு, வண்ணம் பூசப்பட்டவையாகவும் இருக்கின்றன. இது போன்ற வளையல்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்திருப்பது வெம்பக்கோட்டை பகுதியில் வணிகம் நடந்ததற்கான சான்றாக உள்ளது," என்றார் பாஸ்கர்.

அகழாய்வில் கிடைத்த சுடுமண் திமிலுடன் கூடிய காளைகள்


தொடர்ந்து பேசிய வெம்பக்கோட்டை அகழாய்வு இயக்குநர் பாஸ்கர், சுடுமண் முத்திரைகள் என அனைத்தையும் பார்க்கும்போது வைப்பாறு கரையில் இருந்து தூத்துக்குடி கடல் வழியாக வணிகம் நடந்ததற்கான சான்று கிடைத்துள்ளது என்றும், வெம்பக்கோட்டையில் கிடைக்கக்கூடிய சுடுமண் காளைகள் அனைத்தும் திமில் உள்ள காளைகளாக கிடைக்கின்றன என்றும், ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் திமில் உள்ள காளைகள் அதிக எண்ணிக்கையில் இல்லை என்பதால் இவை முக்கியத்துவம் பெற்றுள்ளன என்றும் தெரிவித்தார்.

"வெம்பக்கோட்டையில் கிடைக்கும் சங்கு வளையல்கள், கண்ணாடி பொருட்கள் அனைத்தும் கலைநயத்துடன் கிடைக்கப் பெறுவதால் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கலை நயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது தெரிய வருகிறது.

கீழடியை பொறுத்த அளவில் தொழிற்சாலை இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் வெம்பக்கோட்டையில் கிடைக்கும் பொருட்களும் இப்பகுதியில் தொழிற்சாலை இருந்ததற்கான ஆதாரங்கள் என்றே கருதப்படுகிறது.

கீழடியில் கிடைத்த குறியீடுகள் மற்றும் எழுத்துக்கள், முதிர்ச்சியடைந்த நிலையில் கிடைத்துள்ளன. ஆனால் வெம்பக்கோட்டையில் இதுவரை நடத்தப்பட்ட அகழாய்வில் குறியீடுகள் எதுவும் கிடைக்கவில்லை.

கீழடியில் கிடைக்கப்பெற்ற செங்கற்களை போன்ற செங்கற்கள் இப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் கிடைக்கின்றன. ஆனால் கீழடியில் காணப்படுவது போல் பழங்கால சுவர்கள், கட்டிடங்கள் எதுவும் இதுவரை வெம்பக்கோட்டையில் கிடைக்கவில்லை.

வெம்பக்கோட்டையில் கிடைக்கும் சுவர்கள் அனைத்தும் இடிந்த நிலையில் மட்டுமே கிடைக்கின்றன. இருப்பினும் தொடர்ந்து அகழாய்வு செய்தால் இப்பகுதியில் நல்ல நிலையில் உள்ள கட்டிடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது" என்கிறார் பாஸ்கர்.

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால தோசைக்கல் 14278d30-25ec-11ee-941e-23d1e9ab75fa

தோசை கல், எலும்புகள் கண்டெடுப்பு


வெம்பக்கோட்டை அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கடந்தாண்டு நடைபெற்ற அகழ்வாய்வின்போது ஒரே ஒரு தங்க ஆபரணம் மட்டும் கிடைத்தது என்றும், ஆனால் தற்போது நடைபெற்று வரும் அகழாய்வில் மூன்று தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன என்றும் கூறுகிறார்.

அதில் ஒன்று தங்க தகடு, மற்றொன்று தங்க ஆபரணம் செய்யும் போது தொடக்கநிலையில் உள்ள தங்கம் என்று தெரியவந்துள்ளது. அந்த தங்கத்தை ஆய்வு செய்த போது அது மிகவும் பழமையான தங்கம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தங்கம், பெண்களுக்கு அணிவிக்கப்படும் ஒரு வகை தாலியாக இருக்கலாம், ஏனெனில் அதில் தாலிக்கான அமைப்பு உள்ளது. சூது பவள மணிகள், காசுகள் கிடைப்பதன் மூலம் வெம்பக்கோட்டையில் வணிகத்தளம் இருந்ததற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால தோசைக்கல் C9202260-25ec-11ee-941e-23d1e9ab75fa

இதற்கிடையே, இரண்டு நாட்களுக்கு முன்பு சுடுமண்ணால் ஆன தோசை கல் ஒன்று கிடைத்துள்ளது. தமிழகத்தில் நடைபெற கூடிய அகழ்வாய்வு மேடைகளில் சுடுமண் பானை, தட்டு உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தாலும் வெம்பக்கோட்டை யில் கிடைத்துள்ள இந்த சுடுமண் தோசைக்கல் கைப்பிடியுடன் ஒரு முழு அமைப்பில் உள்ளது.

எனவே இங்கு வசித்த மக்கள் இந்த தோசை கல்லை உணவு சமைக்க பயன்படுத்தி இருக்கலாம் என்பதால் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் சில எலும்புகளும் கிடைத்துள்ளன. அவை மனிதர்களின் எலும்புகளா, அல்லது மிருகங்களின் எலும்புகளா எனக்கண்டறியும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என பாஸ்கர் கூறினார்.

மேலும், தொடர்ந்து வெம்பக்கோட்டையில் கிடைக்கும் பொருட்களின் அடிப்படையில் இது ஒரு வாணிபத் தலமாக இருந்திருக்கும் என்பது உறுதியாகிறது என்கிறார் வெம்பகோட்டை அகழாய்வு இயக்குநர் பாஸ்கரன்.

பிபிசி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால தோசைக்கல் Empty Re: வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால தோசைக்கல்

Post by Dr.S.Soundarapandian Fri Aug 04, 2023 10:16 am

வைப்பாற்றங்கரை நாகரிகம் - இத் தலைப்பில் இனி ஆய்வுகள் பெருகவேண்டும்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால தோசைக்கல் Empty Re: வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால தோசைக்கல்

Post by T.N.Balasubramanian Fri Aug 04, 2023 8:30 pm

அந்த காலத்திலேயே தோசைக்கல் இருந்தது என்பதற்கு சரியான ஆதாரம் இதுதான்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால தோசைக்கல் Empty Re: வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால தோசைக்கல்

Post by சிவா Sat Aug 05, 2023 10:22 pm

Dr.S.Soundarapandian wrote:வைப்பாற்றங்கரை நாகரிகம் - இத் தலைப்பில் இனி ஆய்வுகள் பெருகவேண்டும்!

சூப்பருங்க சூப்பருங்க


வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால தோசைக்கல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால தோசைக்கல் Empty Re: வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால தோசைக்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum