ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை  - Page 2 Empty அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Post by சிவா Mon Jul 17, 2023 7:23 pm

First topic message reminder :

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை இயக்குநரக அதிகாரிகள் துணை ராணுவப் படையினரின் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல, விழுப்புரம் சண்முகபுரம் காலனி பகுதியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றானர். அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்.பி-யுமான கௌதம சிகாமணி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இது மட்டுமல்லாமல் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி சூர்யா கல்லூரியில் சோதனை நடைபெற்று வருகிறது.

அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அலுவலகங்களில் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு அரசியல் நோக்கத்துக்காக அமலாக்கத்துறையைப் பயனபடுத்தி சோதனை நடத்தி மிரட்டுவதாக மல்லிகார்ஜுன கார்கே, அரவிந்த் கெஜ்ரிவால், கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியளர்களிடம் பேசினார். அப்போது மு.க. ஸ்டாலின் கூறியதாவது: “பா.ஜ.க ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஏற்கனவே பாட்னாவில் கூட்டத்தை கூட்டி முடிவுகளை எடுத்தோம். தொடர்ந்து கர்நாடகாவில் இன்றும் நாளையும் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் 24 கட்சிகள் பங்கேற்கின்றன.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூட்டம் நடத்துவதால் பா.ஜ.க ஆட்சிக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அமலாக்கத்துறையை சோதனை செய்ய அனுப்புகின்றனர். ஏற்கனவே வட மாநிலங்களில் இந்த பணிகளை செய்து கொண்டிருந்தனர். தற்போது தமிழ்நாட்டிலும் செய்து கொண்டிருகின்றனர் இதற்கு தி.மு.க கவலைப்படவில்லை.

இன்று பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பொய்யாக போடப்பட்ட வழக்கு.

கடந்த 10 ஆண்டு காலம் அ.தி.மு.க-தான் ஆட்சியில் இருந்தது. அப்போது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சமீபத்தில் 2 வழக்குகளில் இருந்து பொன்முடி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சட்ட ரீதியாக அவர் இந்த வழக்கை சந்திப்பார். வரும் தேர்தலில் இதற்கெல்லாம் மக்கள் சரியான பதிலை வழங்குவர். ஏற்கனவே ஆளுநர் எங்களுக்காக தேர்தல் பிரச்சாரத்தை செய்துகொண்டிருக்கிறார். தற்போது அமலாக்கத்துறை அவருடன் சேர்ந்து கொண்டது. எனவே எங்களுக்கு தேர்தல் வேலை சுலபமாக இருக்கும், இந்த கூட்டம் மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சியை அகற்றுவதற்கான கூட்டம். தற்போது ஒட்டுமொத்த நாட்டையும் அச்சுறுத்தி வருகிறது பா.ஜ.கதான்” என்று அவர் கூறினார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சென்னையில் உள்ள வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். ஜூலை 17, திங்கள்கிழமை தி.மு.க அமைச்சரின் விழுப்புரம் இல்லத்தில் சோதனை நடத்துகிறார்கள். பெங்களூரில் ஜூலை 17 மற்றும் 18-ம் தேதிகளில் நடைபெறவிருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு முன்னதாகவே இந்த சோதனைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டார். “முக்கியமான எதிர்க்கட்சி கூட்டத்திற்கு சற்று முன்பு தமிழக கல்வி அமைச்சர் டாக்டர் பொன்முடிக்கு எதிரான அமலாகத்துறை இயக்குநரக ரெய்டுகளை நாங்கள் கண்டிக்கிறோம்” என்று மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதே போல ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவால், “அமலாக்கத்துறையைக் கொண்டு அனைவரையும் மிரட்ட நினைக்கிறார்கள்; அமலாக்கத்துறை மூலம் இந்திய நாட்டினை கட்டுப்படுத்தவோ பயமுறுத்தவோ முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை  - Page 2 Empty Re: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Post by சிவா Tue Jul 18, 2023 7:36 pm

ரூ.42 கோடி சொத்துகள் முடக்கம்! ரூ.81.7 லட்சம் பறிமுதல்! அமலாக்கத் துறை



அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு, அலுவலகம், கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.81.7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ரூ. 42 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

பொன்முடி மற்றும் அவரின் மகனிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு அமலாக்கத் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் விழுப்புரம் வானூர் அருகே செம்மண் குவாரி ஏலத்தில் அமைச்சர் பொன்முடி தனது உறவினருக்கு உரிமம் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தில் செம்மண் குவாரி முறைகேடு தொடா்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பொன்முடி, கெளதம சிகாமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் திங்கள்கிழமை காலை ஒரே நேரத்தில் அமலாக்கத் துறை சோதனை செய்தனா்.

சுமார் 13 மணிநேரம் நடைபெற்ற சோதனைக்குப் பிறகு அமலாக்கத் துறையினர் விசாரணைக்காக பொன்முடியை அழைத்துச்சென்றனர். சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பொருள்கள், ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 5 மண்நேரம் விசாரணை நடைபெற்றது.

விழுப்புரத்தில் நடைபெற்றுவந்த சோதனை இன்று நிறைவடைந்த நிலையில், பொன்முடிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாலையும் சென்னை அமலாக்கத் துறை அலுவலகத்தில் பொன்முடி மற்றும் அவரிம் மகன் கெளதம சிகாமணியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைக்குப் பிறகு சோதனையின்போது கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள் குறித்து அமலாக்கத் துறை அறிவித்துள்ளது. ரூ.81.7 லட்சம் பணம், ரூ. 13 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டுப் பணம் (பவுண்ட்) கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் ரூ.41.9 கோடி மதிப்புள்ள நிலையான வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum