ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை  Empty அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Post by சிவா Mon Jul 17, 2023 7:23 pm

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை இயக்குநரக அதிகாரிகள் துணை ராணுவப் படையினரின் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல, விழுப்புரம் சண்முகபுரம் காலனி பகுதியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றானர். அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்.பி-யுமான கௌதம சிகாமணி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இது மட்டுமல்லாமல் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி சூர்யா கல்லூரியில் சோதனை நடைபெற்று வருகிறது.

அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அலுவலகங்களில் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு அரசியல் நோக்கத்துக்காக அமலாக்கத்துறையைப் பயனபடுத்தி சோதனை நடத்தி மிரட்டுவதாக மல்லிகார்ஜுன கார்கே, அரவிந்த் கெஜ்ரிவால், கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியளர்களிடம் பேசினார். அப்போது மு.க. ஸ்டாலின் கூறியதாவது: “பா.ஜ.க ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஏற்கனவே பாட்னாவில் கூட்டத்தை கூட்டி முடிவுகளை எடுத்தோம். தொடர்ந்து கர்நாடகாவில் இன்றும் நாளையும் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் 24 கட்சிகள் பங்கேற்கின்றன.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூட்டம் நடத்துவதால் பா.ஜ.க ஆட்சிக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அமலாக்கத்துறையை சோதனை செய்ய அனுப்புகின்றனர். ஏற்கனவே வட மாநிலங்களில் இந்த பணிகளை செய்து கொண்டிருந்தனர். தற்போது தமிழ்நாட்டிலும் செய்து கொண்டிருகின்றனர் இதற்கு தி.மு.க கவலைப்படவில்லை.

இன்று பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பொய்யாக போடப்பட்ட வழக்கு.

கடந்த 10 ஆண்டு காலம் அ.தி.மு.க-தான் ஆட்சியில் இருந்தது. அப்போது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சமீபத்தில் 2 வழக்குகளில் இருந்து பொன்முடி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சட்ட ரீதியாக அவர் இந்த வழக்கை சந்திப்பார். வரும் தேர்தலில் இதற்கெல்லாம் மக்கள் சரியான பதிலை வழங்குவர். ஏற்கனவே ஆளுநர் எங்களுக்காக தேர்தல் பிரச்சாரத்தை செய்துகொண்டிருக்கிறார். தற்போது அமலாக்கத்துறை அவருடன் சேர்ந்து கொண்டது. எனவே எங்களுக்கு தேர்தல் வேலை சுலபமாக இருக்கும், இந்த கூட்டம் மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சியை அகற்றுவதற்கான கூட்டம். தற்போது ஒட்டுமொத்த நாட்டையும் அச்சுறுத்தி வருகிறது பா.ஜ.கதான்” என்று அவர் கூறினார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சென்னையில் உள்ள வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். ஜூலை 17, திங்கள்கிழமை தி.மு.க அமைச்சரின் விழுப்புரம் இல்லத்தில் சோதனை நடத்துகிறார்கள். பெங்களூரில் ஜூலை 17 மற்றும் 18-ம் தேதிகளில் நடைபெறவிருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு முன்னதாகவே இந்த சோதனைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டார். “முக்கியமான எதிர்க்கட்சி கூட்டத்திற்கு சற்று முன்பு தமிழக கல்வி அமைச்சர் டாக்டர் பொன்முடிக்கு எதிரான அமலாகத்துறை இயக்குநரக ரெய்டுகளை நாங்கள் கண்டிக்கிறோம்” என்று மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதே போல ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவால், “அமலாக்கத்துறையைக் கொண்டு அனைவரையும் மிரட்ட நினைக்கிறார்கள்; அமலாக்கத்துறை மூலம் இந்திய நாட்டினை கட்டுப்படுத்தவோ பயமுறுத்தவோ முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை  Empty Re: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Post by சிவா Mon Jul 17, 2023 7:30 pm

பொன்முடி வீட்டின் லாக்கரை திறக்க முடியவில்லை: விழிபிதுங்கும் அதிகாரிகள்



சென்னை, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர்.

சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அதிகாலை 7 மணிக்கே அதிகாரிகள் வந்துவிட்டனர். அவர்கள் தொடர்ந்து சோதனை நடத்தினார்கள்.

அப்போது அவர்களுடன் பாதுகாப்பு படையினரும் வந்திருந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் திமுகவினர் குவிந்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில் பொன்முடி வீட்டில் உள்ள பீரோ திறக்கப்பட்டது. எனினும் லாக்கரை திறக்க முடியவில்லை. போலீசார் சாவி தயாரிக்கும் நபர் ஒருவரை அழைத்து வந்தனர்.

அதுவும் பயன் அளிக்கவில்லை. அவர் ஊடகங்களிடம் பேசுகையில், 2 பீரோ உள்ளது. சாவி போட்டு திறந்துள்ளோம். ஆனால், லாக்கரை திறக்க முடியவில்லை” என்றார்.

இந்த நிலையில் அமலாக்கத்துறையினர் லாக்கரை உடைத்து அதில் உள்ள பொருள்களை சோதனை செய்யக் கூடும் எனத் தெரிகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை  Empty Re: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Post by சிவா Mon Jul 17, 2023 8:01 pm

அமைச்சர் பொன்முடி இல்லத்தில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு கரன்சி? பரபரப்பு தகவல்



அமைச்சர் பொன்முடி வீட்டில் கட்டு கட்டாக வெளிநாட்டு கரன்சி சிக்கியதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் பொன்முடி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

பொன்முடி மகன் வீட்டிலும் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் 70 லட்சம் அளவுக்கு கணக்கில் காட்டப்படாத இந்திய கரன்சியும் 10 லட்ச ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு கரன்சியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாகத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்து உள்ளது.

இதுகுறித்து அமலாக்கத்துறை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில முக்கிய ஆவணங்கள் பொன்முடி வீட்டில் சிக்கியதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை  Empty Re: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Post by சிவா Mon Jul 17, 2023 8:01 pm

பொன்முடி வீட்டை அடுத்து தனியார் மருத்துவமனையில் அமலாக்கத் துறையினர் சோதனை



அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் இரு தொடர்பாக சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது

ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை செய்த பின்னர் அவரை கைது செய்தனர் என்பது தெரிந்ததே. இன்று அவர் தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த நிலையில் மற்றொரு அமைச்சரான பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் வங்கி அதிகாரிகள் அழைக்கப்பட்டு பண பரிவர்த்தனை குறித்து விசாரணை செய்யப்பட்டது

அது மட்டும் இன்றி பொன்முடியின் வீட்டிற்கு இந்தியன் வங்கியின் நகை மதிப்பீட்டாளர்கள் இரண்டு பேர் வருகை தந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் அமலாக்கத்துறையினர் பொன்முடி விவகாரம் குறித்து சோதனை செய்து வருவதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை  Empty Re: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Post by சிவா Mon Jul 17, 2023 8:02 pm

அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை.. அன்றே சொன்னார் அண்ணாமலை..!



அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் கடந்த மாதமே பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அண்ணாமலை தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜூன் 19ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் கடந்த 2006 - 2011 திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி முறைகேடுகள் செய்து 28 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி இருந்தார் என்றும் இது குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்

இந்த விவகாரத்தில் அமைச்சர் பொன்முடியை முதல்வர் பதவி நீக்க செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார். இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருக்கு தொடர்பான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதே வழக்கில் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை  Empty Re: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Post by சிவா Mon Jul 17, 2023 8:17 pm

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை  Ponmudi_enforcement_directorate_raid_edi.jpg?w=640&dpr=1

விசாரணைக்காக பொன்முடியை அழைத்துச் செல்லும் அமலாக்கத் துறை


உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக அமலாக்கத் துறையினர் அழைத்துச்சென்றுள்ளனர்.

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு, அலுவலகம், கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை  Empty Re: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Post by சிவா Mon Jul 17, 2023 9:26 pm

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பொன்முடிக்கு எதிரான வழக்கு என்ன?



தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் திங்கள்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்.பி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு காரணம் என்ன என்று அமலாக்கத்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இந்நிலையில், பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கான காரணம் மற்றும் வழக்கின் பின்னணி என்ன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

அமைச்சர் பொன்முடியின் வீடு, அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனை பி.எம்.எல்.ஏ சட்டத்தின் கீழ் நடப்பதாக கூறப்படுகிறது. கருப்பு பணத்தை வெள்ளையாக்கியதன் கீழ் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி பொன்முடி மகன் கௌதம சிகாமணி வெளிநாட்டில் செய்த முதலீடு ஒன்றுதான் நித சோதனைக்கு காரணம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கௌதம சிகாமணி ஆர்.பி.ஐ-யின் ஒப்புதல் இன்றி இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில் முதலீடு செய்துள்ளார். அங்கே இருக்கும் பி.டி எக்செல் மெகிண்டோ என்னும் நிறுவனத்தில் கடந்த 2008-ல் முதலீடு செய்துள்ளார். இவர் சுமார் 1 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு பங்குகளை வாங்கியதாக கூறப்படுகிறது. இதில் கருப்பு பணத்தை அவர் வெள்ளையாக்கியதாக அமலாக்கத்துறை சந்தேகப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் அடிப்படையில்தான் ரெய்டு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தில் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் விதமாக 55 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அவர் முதலீடு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அப்போது அமைச்சராக இருந்த பொன்முடிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் கீழ் ரெய்டு நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் பொன்முடி அண்மையில், 2 முக்கிய வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

தற்போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி, 1996 – 2001 ஆண்டுகளில் தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் முறைகேடாக நிலம் வாங்கியதாக கூறப்பட்டது. தன்னுடைய மாமியார் சரஸ்வதி பெயரில் போலி ஆவணங்களைத் தயார் செய்து நிலம் வாங்கியதாக கூறப்பட்டது. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில், அரசுக்குச் சொந்த 3,630 சதுர அடி நிலத்தைப் பதிவுசெய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சமீபத்தில் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பொன் முடி விடுதலை செய்யப்பட்டார்.

அதேபோல், 13-5-1996 முதல் 31-3-2002 வரையிலான கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2006-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லாததால் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று பொன்முடி விடுதலை செய்யப்பட்டார்.

அதே போல, தற்போது உயர் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி 2006 முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில் தி.மு.க ஆட்சியில், உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த அதே நேரத்தில், கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறையையும் கவனித்து வந்தார். அப்போது, அவரது மகன் கௌதம சிகாமணி, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் தனது சொந்த பட்டா நிலத்தில் உள்ள செம்மண்ணை அள்ளுவதற்கு அரசின் அனுமதி கோரி விண்ணப்பித்தார்.

அமைச்சர் பொன்முடி கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறையை கவனித்து வந்ததால், அவருடைய மகன் கௌதம சிகாமணி, அந்தப் பகுதியில் செம்மண் எடுக்க 2007 பிப்ரவரியில் விண்ணப்பித்திருந்த நிலையில், அதற்கான அனுமதி 2007 மே மாதத்தில், மிக குறுகிய காலக்கட்டத்துக்குள் அனுமதி வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

கௌதம சிகாமணிக்கு செம்மண் அள்ளுவதற்கு அனுமதி வாங்கியபோதே, அவருடன் சேர்ந்து, அவருடைய உறவினர்களான ராஜ மகேந்திரன் மற்றும் ஜெயச்சந்திரன் ஆகிய இருவரும் அனுமதி பெற்றனர்.

இதைத்தொடர்ந்து, ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் செம்மண் எடுத்ததாக பொன்முடி, அவருடைய மகன் கௌதம சிகாமணி, ராஜமகேந்திரன், லோகநாதன், சதானந்தன், கோதகுமார், ஜெயச் சந்திரன், கோபிநாத் ஆகிய 8 பேர் மீது 2012-ம் ஆண்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி செம்மண் குவாரியில் மணல் அள்ளப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம் வழக்கில் இருந்து அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து கீழமை நீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேடிக்கொள்ள உத்தரவிட்டது. அப்போது, கௌதம சிகாமணி உள்ளிட்டோர் தரப்பில், வழக்கை விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்தில் விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம், அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கின் விசாரணையை வேலூர் மாவட்டத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. அதே நேரத்தில், விழுப்புரத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும், அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த ஜூன் 19-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, செம்மண் குவாரியில் மணல் அள்ள அளிக்கப்பட்டஅனுமதியை மீறி, 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரி செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். மேலும், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின்படி, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி, கௌதம சிகாமணியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்தப் பின்னணியில்தான், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீடு, அலுவலகம் அவர் தொடர்புடைய இடங்கள் மற்றும் கௌதம சிகாமணி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை  Empty Re: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Post by சிவா Tue Jul 18, 2023 6:39 pm

72 வயது பொன்முடியை விடிய விடிய விசாரிப்பதா? தி.மு.க எதிர்ப்பு: இன்று மீண்டும் ஆஜராக இ.டி சம்மன்



அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் சரவணன் கூறுகையில் ’அமலாக்கத்துறை அலுவலகமா சித்திரவதை கூடமாக எனத் தெரியவில்லை ’ என்று விமர்சித்துள்ளார்.

நள்ளிரவு 3.30 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தின் முன்பாக திமுக வழக்கறிஞர் சரவணன் பேட்டியளித்தார். ” காலை 10 முதல் இரவு 3.30 மணி வரை வைத்திருந்து விசாரணை என்று சொல்லி சித்திரவதை செய்கின்றனர். அவருக்கு வயது 72 . ஏற்கனவே அவரின் உடல் நிலையில் சில பிரச்சனைகள் இருக்கிறது. அமலாக்கத்துறை மனிதாபிமானமற்ற செயலை செய்கிறது. வெளியே காத்திருந்த நமக்கே சோர்வாக இருக்கிறது. அவருக்கு இந்த விசாரணை எப்படி ஒரு மன உளச்சலை கொடுத்திருக்கும். 2007 நடந்த வழக்கிறகு 2023-ல் விசாரணை செய்கிறது அமலாக்கத்துறை. அப்படியென்றால், விசாரணையை காலையில் வைத்திருக்கலாம். ஏன் அவசரமாக விசாரிக்க வேண்டும். அமலாக்கத்துறை அலுவலகமா சித்திரவதை கூடமாக என்று தெரியவில்லை. திமுக அமைச்சர்களின் 20 வருடங்களுக்கு முன்பாக உள்ள வழக்குகள்தான் கண்களுக்கு தெரிகிறதா? 10 வருடங்களாக அதிமுக ஆட்சியில் செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளது.

விசாரணையை முடித்துவிட்டு பொன்முடி தற்போது சென்றிருக்கிறார். மீண்டும் இன்று மாலை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆளுநரை தொடர்ந்து விமர்சித்து வந்ததால்தான் ;பொன்முடிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. துணை வேந்தர் நியமனம், புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு என்று பல்வேறு விதத்தில் அவர் ஆளுநரை எதிர்த்து வந்தார். ஆளுநர் ஒரு வாரம் டெல்லிக்கு சென்றுள்ளார். அடுத்த வாரம் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை வந்து நிற்கிறது. 2007 நடந்த வழக்கிற்கு தற்போது எப்படி ஆதாரம் தேட முடியும். அப்படி தேடினாலும் கிடைக்குமா?

அமலாக்கத்துறை கேட்ட எல்லா கேள்விகளுக்கும், பொன்முடி பதிலளித்தார். அமலாகத்துறையிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. விசாரணையின்போது வெளிப்படும் உண்மைகளை அமலாக்கத்துறை இதுவரை சமர்பிக்கவில்லை. இதனால் கூடிய விரைவில் மக்கள் அவர்களைப் பற்றி தெரிந்துகொள்வார்கள். வட நாட்டு ஊடங்களில்தான் பொய்யான தகவல் பரவும். தற்போது தமிழகத்திலும் இது அதிகரித்துள்ளது. அமலாக்கத்துறை பரிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட்டால், அப்போது வந்து கேளுங்கள், அதற்கு பதிலளிப்பேன்.

2024ம் தேர்தலுக்காக, இப்படிபட்ட ஒரு மிரட்டலை நடத்த முயற்சி செய்கிறார்கள். சட்டரீதியாக இந்த வழக்கை சந்திப்போம்” என்று அவர் கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை  Empty Re: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Post by சிவா Tue Jul 18, 2023 6:42 pm

2-வது நாள் விசாரணை: டாக்டர்- வக்கீலுடன் இ.டி அலுவலகம் வந்த பொன்முடி



அமலாக்கத்துறை விசாரணைக்கு 2 ஆவது நாளாக வந்த தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மருத்துவர் மற்றும் வழக்கறிஞருடன் ஆஜரானார்.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று (ஜூலை 17) அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சென்னை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் திங்கள்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்.பி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். பொன்முடி வீடு, அலுவலகம் மற்றும் அவருக்குச் சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது.

அமலாக்கத்துறையின் சோதனை பி.எம்.எல்.ஏ சட்டத்தின் கீழ் நடப்பதாக கூறப்பட்டது. பொன்முடி மகன் கௌதம சிகாமணி வெளிநாட்டில் செய்த முதலீடு தான் இந்த சோதனைக்கு காரணம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னர், 13 மணி நேர சோதனைக்கு பின் அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். பொன்முடியை அவரது வீட்டில் இருந்து அமலாக்கத் துறையினர் நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

அமைச்சர் பொன்முடியிடம் இரவு 8 மணிக்கு தொடங்கிய விசாரணை விடியற்காலை 3 மணிக்கு முடிவடைந்தது. விசாரணைக்குப் பிறகு அமைச்சர் பொன்முடியை கூறியதை அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவுச் செய்துக் கொண்டனர். பின்னர் விசாரணை முடிந்ததையடுத்து பொன்முடி தனது வீட்டுக்குச் சென்றார்.

இதனைத்தொடர்ந்து இன்று (ஜூலை 18) மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி இன்று இரண்டாவது நாளாக பொன்முடி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அமைச்சர் பொன்முடியின் மருத்துவர் மற்றும் வழக்கறிஞர்கள் உடன் வந்துள்ளனர். பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி.யும் விசாரணைக்கு ஆஜரானார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை  Empty Re: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Post by T.N.Balasubramanian Tue Jul 18, 2023 7:10 pm

ஒண்ணுமே புரியலை உலகத்திலே,
மர்மமா இருக்குது
என்னமோ நடக்குது -------------!


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை  Empty Re: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum