ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

7 பானங்கள் --நீர் சத்து குறைபாட்டை தீர்க்க -------

3 posters

Go down

7 பானங்கள் --நீர் சத்து குறைபாட்டை   தீர்க்க -------  Empty 7 பானங்கள் --நீர் சத்து குறைபாட்டை தீர்க்க -------

Post by T.N.Balasubramanian Fri Jul 07, 2023 6:49 pm

7 பானங்கள் --நீர் சத்து குறைபாட்டை தீர்க்க -------

: நீர்ச்சத்து என்பது உடலுக்கு மிகவும் முக்கியம். நம்முடைய உடலில் 70 சதவீதத்துக்கும் மேல் நீரால் ஆனது. உடலின் தோல் முதல் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றின் செயல்பாடுகளுக்கும் தண்ணீர் மிக அவசியம். அதனால் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். இதற்கு நாள் முழுக்க நிறைய தண்ணீர் மட்டுமே குடித்துக் கொண்டிருக்கவும் முடியாது. அதனால் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த சில பானங்களை குடிப்பது உடலின் நீர்ச்சத்து குறைபாடு தீர்க்க உதவி செய்யும். வாங்க... அந்த எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த பானங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இந்த 7 பானங்கள் குடிச்சா உடம்புல எந்த காலத்துக்கும் நீர்ச்சத்து குறைபாடே வராதாம்...
உடலில் உள்ள தண்ணீர் குறையக் குறைய நீர்ச்சத்து குறைபாடு உண்டாகும். அதனால் உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்துக் கொண்டால் மட்டும் தான் உடலில் சிறுநீரகம், கல்லீரல், குடல் உள்ளிட்ட எல்லா உறுப்புகளும் முறையாக சீராகச் செயல்பட்டு கழிவுகளை முறையாக வெளியேற்றும். உடல் எடையைக் குறைப்பது முதல் சிறுநீரக செயல்பாடுகள் மற்றும் இதய ஆரோக்கியம் வரையிலும் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க நீர்ச்சத்து மிக அவசியம்.
​எலக்ட்ரோலைட்டுகள் என்றால் என்ன
நம்முடைய உடலில் உள்ள திரவங்களோடு நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் உள்ள சில கனிமங்கள் சேரும்போது ஒருவித மின்சார உற்பத்தி நடக்கும். அது நம்முடைய உடலுக்கு உடனடியாக ஆற்றலைக் கொடுக்கும். அப்படி உடனடி ஆற்றலைக் கொடுக்க உதவும் கனிமங்களை தான் எலக்ட்ரோலைட்டுகள் என்று குறிப்பிடுவோம்.

சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், குளோரைடு மற்றும் பாஸ்பேட் ஆகியவை முதன்மை எலக்ட்ரோலைட் கனிமங்கள் என்று சொல்லப்படுகின்றன.

இந்த தாதுக்கள் உடலின் திரவ சமநிலையை பராமரிப்பதிலும், நரம்பு மற்றும் தசை செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதிலும், உடலின் செயல்பாடுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால் உடலுக்கு எப்போதும் எலக்ட்ரோலைட்டுகள் கொ்ண்ட திரவ உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. அப்படி எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த சில பானங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

​எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த நீர்ச்சத்து கொண்ட பானங்கள் (hydrating drinks with electrolytes)இளநீர் - தேங்காய் தண்ணீர் (coconut water)
இளநீரில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சோடியம் போன்ற அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகள் அதிகமாக இருக்கின்றன. இது உடலுக்கு உடனடியாகப் புத்துணர்ச்சியைக் கொடுக்கக்கூடிய பானமாகும்.

மேலும் இளநீரில் கலோரி அளவும் குறைவு. அதனால் உடலை அதிக நீரேற்றத்துடன் வைத்திருக்கவும் உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கவும் உதவும்.

சர்க்கரை சேர்க்கப்பட்ட அல்லது நார்ச்சத்துக்கள் நீக்கப்பட்ட ஜூஸ்களை விட இளநீர் மிகச்சிறந்த பானமாக இருக்கும். உடலின் நீர்ச்சத்தையும் தக்க வைக்கும்.

​வாட்டர் மெலன் ஜூஸ் (watermelon juice)
தர்பூசணி வெறும் கோடை காலத்துக்கான பழம் மட்டுமல்ல, நீர்ச்சத்துக்கள் நிறைந்ததும் கூட. கிட்டதட்ட தர்பூசணியில் 80 சதவீதத்துக்கும் மேல் நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. வாட்டர் மெலன் ஜூஸ் என்றதும் அதை அரைத்து வடிகட்டி சாறு எடுக்கக் கூடாது பழங்களை அரைத்து அப்படியே சதையுடன் நார்ச்சத்துடன் குடிக்க வேண்டும்.

இதிலுள்ள பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் சி உள்ளிட்ட எலக்ட்ரோலைட்டுகளுடன் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் இருப்பதால் இது ப்ரீ - ரேடிக்கல்ஸ்களை எதிர்த்துப் போராடுகிறது.

​எலுமிச்சை ஜூஸ் (lemonade drink)
குடித்தவுடன் அந்த கிளாஸை கீழே வைப்பதற்குள் உடலுக்குள் உடனடியான ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் பானம் என்றால் அது எலுமிச்சை ஜூஸ் என்று சொல்லலாம். உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டைத் தவிர்க்கவும் அதேசமயம் வைட்டமின் சி உள்ளிட்ட நோயெதிர்ப்பு வைட்டமின்களைப் பெறவும் மிகச்சிறந்த தேர்வாக இந்த எலுமிச்சை சாறு இருக்கும்.

ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் சுவையான, புத்துணர்வான ஒரு எலக்ட்ரோலைட் பானம் தயார்.

ஆரஞ்சு ஜூஸ் (orange juice)
ஆரஞ்சு பழத்தில் அதிகமாக வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதோடு உடலுக்கு உனடியான எனர்ஜியைக் கொடுக்கக் கூடிய எலக்ட்ரோலைட்டுகளைக் கொண்டிருக்கிறது.

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஆரஞ்சு பழத்தைப் பிழிந்து அதில் ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து 4 புதினா இலைகளைக் கிள்ளிப் போட்டு குடித்துப் பாருங்கள். உடலுக்குள் புதிதாக மின்சாரம் பாய்ந்தது போல இருக்கும்.

​வெள்ளரிக்காய் சேர்த்த பானம் (cucumber infused water)
நாம் வழக்கமாகக் குடிக்கும் சாதாரண நீரில் வெள்ளரிக்காயை ஊறவிட்டு குடிப்பது தண்ணீரின் சுவையைக் கூட்டுவதோடு அதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உடலுக்கு சிறந்த எலக்ட்ரோலைட்டுகளாகச் செயல்படும்.

ஒரு வாட்டர் ஜக்கில் வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிறு துண்டு இஞ்சியையும் துருவி சேர்த்து 15 புதினா இலைகளையும் போட்டு வைத்து விடுங்கள்.

இந்த தண்ணீரை தாகம் எடுக்கும்போதெல்லாம் குடித்து வர நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமலும் இருக்கும். தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். உடலும் டீடாக்ஸ் ஆகும்.

​கற்றாழை ஜூஸ் (aloe vera juice)
கற்றாழையில் புண்கள் மற்றும் வீக்கங்களை ஆற்றும் ஹீலிங் பண்புகள் அதிகமாக இருக்கின்றன. அதோடு நிறைய எலக்ட்ரோலைட் பண்புகளும் நிறைந்து இருக்கின்றன.
கற்றாழையில் வைட்டமின்கள், மினரல்னள், அமினோ அமிலங்கள் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. இவை ஒட்டுமொத்த ஜீரண மண்டலத்தையும் அமைதிப்படுத்துவதோடு உடலின் நீர்ச்சத்து குறைபாட்டை சரிசெய்யும்.

​ஹெர்பல் டீ (herbal tea for re hydration)
நிறைய மூலிகைகள் சேர்த்து தயாரிக்கப்படும் ஹெர்பல் டீ உடலுக்கு எனர்ஜியைக் கொடுப்பதோடு மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கச் செய்யும்.

செம்பருத்தி பூ, வெற்றிலை, துளசி, ரோஸ்மேரி, புதினா போன்ற ஃபிரஷ்ஷான மூலிகைகளுடன் சுக்கு, மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை, அதிமதுரம், சித்தரத்தை, திப்பிலி போன்ற உங்களுக்கு கிடைக்கிற மூலிகைகளை சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால் உடலின் நீர்ச்சத்து குறைபாட்டைத் தீர்த்து நீர்ச்சத்துடன் வைத்திருக்கச் செய்யும்.

நன்றி மணிமேகலை /சமயம்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

7 பானங்கள் --நீர் சத்து குறைபாட்டை   தீர்க்க -------  Empty Re: 7 பானங்கள் --நீர் சத்து குறைபாட்டை தீர்க்க -------

Post by T.N.Balasubramanian Fri Jul 07, 2023 6:51 pm

எக்காலத்திற்கும் உகந்த பானங்கள்.

அருந்துவோம் அமைதி பெறுவோம்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

7 பானங்கள் --நீர் சத்து குறைபாட்டை   தீர்க்க -------  Empty Re: 7 பானங்கள் --நீர் சத்து குறைபாட்டை தீர்க்க -------

Post by சிவா Sat Jul 08, 2023 6:18 am

எலக்ட்ரோலைட் பற்றி அறிந்து கொண்டேன்...

நன்றி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

7 பானங்கள் --நீர் சத்து குறைபாட்டை   தீர்க்க -------  Empty Re: 7 பானங்கள் --நீர் சத்து குறைபாட்டை தீர்க்க -------

Post by Dr.S.Soundarapandian Sat Jul 08, 2023 12:33 pm

7 பானங்கள் --நீர் சத்து குறைபாட்டை   தீர்க்க -------  1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

7 பானங்கள் --நீர் சத்து குறைபாட்டை   தீர்க்க -------  Empty Re: 7 பானங்கள் --நீர் சத்து குறைபாட்டை தீர்க்க -------

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum