Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
cordiac | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளி பாத்திரம், நகைகளைப் பராமரிப்பது எப்படி?
Page 1 of 1
வெள்ளி பாத்திரம், நகைகளைப் பராமரிப்பது எப்படி?
வெள்ளி பிரகாசமாக இருப்பதை விட பளபளப்பாக இருந்தால்தான் அழகு. ஆனால் அதற்கு அதை சீரான முறையில் துடைத்து பராமரிக்க வேண்டும். பாத்திர வடிவில் இருந்தாலும் சரி, வெள்ளி நகையாக இருந்தாலும் சரி பாதுகாக்கும் முறையும் சுத்தப்படுத்தும் வழிமுறையும் ஒன்றுதான். அதனைப் பற்றி பார்ப்போம்!
பூஜை அறையில் ஏற்றி வைக்கும் அம்மன் விளக்கு, குத்துவிளக்கு போன்றவற்றில் இருக்கும் எண்ணையை முதலில் பஞ்சு போட்டு துடைத்துவிட்டு, அதன் பிறகு சோப்பு பவுடர் போட்டு கழுவி ஈரம் போக சுத்தமான தண்ணீரில் நன்கு துடைத்து எடுத்து வைக்க வேண்டும். வெள்ளிப் பாத்திரங்களை கழுவதற்கு தனியாக பவுடர்களும் இப்போது கிடைக்கின்றன.
பொதுவாக வெள்ளி நகைகளை வாங்கும் போது ஒரு ரோஸ் நிற பேப்பரில் சுற்றித் தருவார்கள். அந்த பேப்பரில் சுற்றி பத்திரமாக மரப்பெட்டியில் வைத்தால் புது மெருகு குறையாமல் இருக்கும். நியூஸ் பேப்பர் அல்லாத மற்ற பேப்பர்கள் பிரவுன் பேப்பர்களில் கூட சுற்றி வைக்கலாம்.
வெள்ளி பாத்திரங்கள் பொலிவிழாக்காமல் இருக்க வேண்டுமானால் கண்டிப்பாக இரும்பு பீரோவில் வைக்கக்கூடாது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் மற்றும் பித்தளை பாத்திரங்களுடன் கலந்து வைக்கவும் கூடாது.
வெல்வெட் துணி அல்லது நல்ல வெள்ளை காட்டன் துணிகளை இரண்டாக மடித்து அதன் மேல் வெள்ளி நகைகளை வைத்தால் நகைகள் புதிது போல் இருக்கும்.
பழங்கால மரப்பெட்டி இருந்தால் அதற்குள் வெள்ளி பாத்திரங்களை பத்திரப்படுத்தி வைக்கலாம். மர பீரோவில் வைப்பதும் நல்லதே.
வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைத்தால் அவை கறுத்து போவதை தவிர்க்கலாம். வெள்ளி நகைகள் வைக்கும் பெட்டியில் ஒரு சாக்பீஸ் போட்டு வைத்தால் நகைகள் கறுக்காமல் இருக்கும்.
வெள்ளிப் பாத்திரங்களை காற்றுப்படாமல் பிளாஸ்டிக் கவர்களுக்குள் போட்டு கட்டி வைத்தால் புதிது போல் இருக்கும்.
வெள்ளித்தட்டு, டம்ளர், கிண்ணம் போன்றவற்றில் மிஞ்சி இருக்கும் உணவுத் துணுக்குகள், பால் கறை போன்ற வற்றை நீக்கிய பிறகு தண்ணீர் விட்டு கழுவ வேண்டும்.
சிலருக்கு மட்டும் எவ்வளவு புதிதாக வெள்ளி கொலுசு வாங்கிப் போட்டாலும் சில நாட்களில் கறுத்து போய்விடும். அது நகையை அணிந்திருப்பவரின் உடல் சூட்டை பொருத்தது. சிலருக்கு இயல்பாகவே உடல் வெப்பம் அதிகமாக இருக்கும். அவர்கள் அணியும் வெள்ளி ஆபரணங்கள் இதனால் கறுக்கும். குளிக்கும் போது வெள்ளி நகைகளையும் குளிப்பாட்டினால் அவை கறுக்காது.
வெள்ளி நகைகளில் கடுமையான அழுக்கு ஏறி கறுத்துப் போயிருந்தால் பூந்திக்கொட்டை ஊறவைத்த நீரில் கழுவலாம்.
தயிர், எலுமிச்சம் பழம் போன்றவையும் கூட வெள்ளி ஆபரணங்களில் இருக்கும் அழுக்கை சுத்தமாக நீக்கும். ஆனால் இப்படி அடிக்கடி செய்யக்கூடாது. அவற்றில் உள்ள அமிலம் வேதிவினைபுரிந்து வெள்ளியைக் கரைக்கக் கூடும்.
வெள்ளி ஆபரணங்கள் மீது உருளைக்கிழங்கின் தோலை ஈரமாக தேய்த்து சுத்தமான தண்ணீரில் கழுவினால் அவற்றின் கறுமை காணாமல் போகும். இதே போல விபூதியை லேசாக ஈரமாக்கி வெள்ளி சாமான்கள் மீது தேய்த்து சில நிமிடங்கள் கழித்துக் கழுவினால், அவை கறுத்துப்போய் இருப்பதை மாற்றலாம்.
கொதிக்கும் தண்ணீரில் அரை டீஸ்பூன் சமையல் சோடா, அலுமினிய பாயில் பேப்பர்களை போடவும். இதில் கறுத்த வெள்ளி பாத்திரங்களை போட்டு ஐந்து நிமிடங்களுக்குப் பின் எடுத்தால் பாத்திரங்கள் பளபளவென இருக்கும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு டிடர்ஜென்ட் தூள் கலந்து அதில் வெள்ளி நகைகளை ஊற வைத்து சுத்தம் செய்தால் நகைகள் பளபளக்கும்.
வெள்ளி நகைகளில் சிறிதளவு பற்பசை தேய்த்து சிறிது நேரம் ஊறிய பின் பிரஷ்ஷால் தேய்த்து கழுவினால் பளபளவென்று இருக்கும்.
சிறிது தண்ணீரில் ஷாம்பு போட்டு கரைத்து அதை வெள்ளி நகைகள் மீது பூசி தேய்த்து சுத்தமான தண்ணீரில் நன்கு அலசி, ஈரம் போகத் துடைத்தால் பளபளவென்று மின்னும்.
புளித்த தயிரில் வெள்ளி பாத்திரங்களையும் வெள்ளி நகைகளையும் அரை மணி நேரம் ஊற வைத்துவிட்டு அதன் பின் துலக்கினால் அவை புதிது போல் இருக்கும்.
இந்திராணி தங்கவேல்
Similar topics
» குக்கர் பராமரிப்பது எப்படி?
» கால்களை பராமரிப்பது எப்படி?
» கைகளை பராமரிப்பது எப்படி?
» டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது?
» அழகான போன்சாய் மரங்கள் பராமரிப்பது சுலபம்!
» கால்களை பராமரிப்பது எப்படி?
» கைகளை பராமரிப்பது எப்படி?
» டூவீலரை மழைக்காலத்தில் எப்படி பராமரிப்பது?
» அழகான போன்சாய் மரங்கள் பராமரிப்பது சுலபம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|