ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

Top posting users this week
ayyasamy ram
இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோருக்கும் தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கும் நீரிழிவு நோய் உள்ளது   Poll_c10இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோருக்கும் தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கும் நீரிழிவு நோய் உள்ளது   Poll_m10இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோருக்கும் தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கும் நீரிழிவு நோய் உள்ளது   Poll_c10 
heezulia
இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோருக்கும் தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கும் நீரிழிவு நோய் உள்ளது   Poll_c10இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோருக்கும் தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கும் நீரிழிவு நோய் உள்ளது   Poll_m10இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோருக்கும் தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கும் நீரிழிவு நோய் உள்ளது   Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோருக்கும் தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கும் நீரிழிவு நோய் உள்ளது

3 posters

Go down

இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோருக்கும் தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கும் நீரிழிவு நோய் உள்ளது   Empty இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோருக்கும் தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கும் நீரிழிவு நோய் உள்ளது

Post by சிவா Sun Jun 11, 2023 12:06 am

இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோருக்கும் தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கும் நீரிழிவு நோய் உள்ளது   100882227


இந்திய அளவில் நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களின் தாக்கம் அதிகரித்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோரும் தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கு அதிகமானோரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கடந்த வியாழனன்று வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு குறித்து மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஆய்வு குறித்த விரிவான அறிக்கை INdia DIABetes [INDIAB] Study என்ற பெயரில் மிகப் பிரபலமான மருத்துவ இதழான தி லான்செட் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 20 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள 1,13,043 நபர்களிடம் 18 ஆக்டோபர் 2008 முதல் 17 டிசம்பர் 2020 வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் இருந்து 33,537 பேரும், கிராமப்புறங்களில் இருந்து 79,506 பேரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர். இந்த ஆய்வு ஐந்து கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில் தெரிய வந்த அதிர்ச்சித் தகவல்கள்

உயர் ரத்த அழுத்தத்தைப் பொறுத்த வரையில் இந்தியாவில் 35.5 சதவீத பேருக்கு (31.5 கோடி) அந்தப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பஞ்சாபில் அதிகபட்சமாக 51.8 சதவீத பேரும், குறைந்தபட்சமாக மேகாலயாவில் 24.3 சதவீத பேரும் உயர் ரத்த அழுத்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

உடல் பருமன் நோயால் தேசிய அளவில் 28.6 சதவீதத்தினர் (25.4 கோடி) பாதிக்கப்படுவதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக புதுச்சேரியில் 53.3 சதவீதத்தினரும், ஜார்கண்ட் மாநிலத்தில் 11.6 சதவீதத்தினர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய அளவில் 39.5 சதவீதம் (35.1 கோடி) நபர்களுக்கு அடி வயிற்றில் உடல் பருமன் பிரச்னை இருப்பது தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக புதுச்சேரி மாநிலத்தில் 61.2 சதவீதத்தினருக்கும் குறைந்தபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 18.4 சதவீதத்தினருக்கும் இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயைப் பொறுத்தவரையில் தேசிய அளவில் நோய் பரவல் 11.4 சதவீதமாக உள்ளது. இதில் அதிகபட்சமாக கோவா மாநிலத்தில் 26.4 சதவீதம் பேரும் குறைந்தபட்சமாக உத்தர பிரதேசத்தில் 4.8 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 15.3 சதவீதம் பேர் நீரிழிவு நோய் பாதிப்புக்கு முந்தைய நிலையில் (Pre diabetes) இருப்பது இந்த ஆய்வில் தெரிய வந்த நிலையில். அதிகபட்சமாக சிக்கிம் மாநிலத்தில் 31.3 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக மிசோரம் மாநிலத்தில் 6.8 சதவீதம் பேரும் நீரிழிவுக்கு நோய் பாதிப்புக்கு முந்தைய நிலை நிலையில் உள்ளனர்.

தமிழகத்தின் நிலை என்ன?

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோரின் அளவு 14.4 சதவீதமாக உள்ளது.

நகர்ப்புறங்களில் நீரிழிவு நோய் ஏற்படும் விகிதம் 10 சதவீதத்திற்கு அதிகமாகவும், கிராமப்புறங்களில் 7.5 முதல் 9.9 சதவீதம் வரையும் உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்புக்கு முந்தைய நிலையில் இருப்பவர்களின் சதவீதம் 10 முதல் 14.9 வரை உள்ளது. நகர்ப்புறங்களில் இது 10 முதல் 14.9 வரையும், கிராமப்புறங்களில் இது 5 முதல் 9.9 சதவீதம் வரையும் உள்ளது.

குறிப்பாக, கிராமப்புறங்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. எனினும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை கிராமப்புறங்களில்தான் அதிகமாக உள்ளது.

"இந்தியாவில் எந்தளவுக்கு தொற்றா நோய்களின் சுமை இருக்கிறது என்பதைக் கண்டறிவதற்காக இந்த ஆய்வைத் தொடங்கினோம்," என்று கூறுகிறார், இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரும் டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் நிர்வாக இயக்குநரும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் (MDRF) தலைவருமான மருத்துவர் ஆர்.எம்.அஞ்சனா.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "முதலில் வட இந்தியாவில் ஒரு மாநிலம், தென்னிந்தியாவில் ஒரு மாநிலம் என நாங்கள் முன்மொழிவை சமர்ப்பித்தோம். எனினும், முழுமையாக ஆய்வை மேற்கொள்ளும்படி ஐசிஎம்ஆர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் நகர்ப்புறங்களில் 1200 பேர் கிராமப்புறங்களில் 2800 பேர் என 4000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டோம். இதில், இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு நோயாலும் 13 கோடியே 60 லட்சம் பேர் நீரிழிவுக்கு முந்தைய நிலையாலும் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது," என்று கூறினார்.

நீரிழிவுக்கு முந்தைய நிலை கிராமப்புறங்களில் அதிகமாக இருப்பது ஆபத்தா?

"ப்ரீ-டயாபெட்டிஸ் பாதிப்பைப் பொறுத்தவரை கிராமப்புறங்களிலும் நகர்ப்புற மக்கள்தொகைக்குச் சமமாக இருக்கிறது," எனக் கூறுகிறார் மருத்துவர் அஞ்சனா.

"ப்ரீ-டயாபட்டிஸ் உள்ள மக்களில் 60 சதவீதம் பேர் நீரிழிவு நோயாளிகளாக மாற வாய்ப்பு உண்டு. இந்தியாவில் 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களில்தான் உள்ளனர். அப்படியிருக்கும்போது, கிராமப்புறங்களில் ப்ரீ-டயாபட்டிஸில் இருந்து டயாபட்டிஸுக்கு மாறுவோரின் எண்ணிக்கை 1 சதவீதம் அதிகரித்தாலும், பல கோடி பேர் டயாபட்டிஸ் பாதிக்கப்பட்டவர்களாக மாற வாய்ப்பு உள்ளது.

எனவே, கிராமப்புறங்களில் இதைத் தடுப்பதற்கு நாம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த எண்ணிக்கை உயராமல் தடுக்க முடியும்," என்கிறார் மருத்துவர் அஞ்சனா.

உணவு பழக்கம், உடற்பயிற்சி, மன அழுத்தத்தை குறைப்பது மூலம் இதைச் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

"நமது உணவுப்பழகத்தில் 11 சதவீதம்தான் புரோட்டின் சாப்பிடுகிறோம். இதை 20 சதவீதமாக உயர்த்த வேண்டும். 3 சதவீதமாக உள்ள ஃபைபரை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும். உடலுக்கு உழைப்பு கொடுக்க வேண்டும்.

பொதுவாகவே தொற்றா நோய்கள் 50 வயதுக்கு மேல்தான் வரும். ஆனால், நமக்கு 20 வயதிலேயே வருகிறது. ஆரோக்கியமாக இருக்க வேண்டிய வயதில் நோய் வந்தால் அது எப்படி சரியாக இருக்கும். எனவே, ஆரோக்கியமாக வாழ்வதற்கு செய்ய வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்," என அஞ்சனா கூறுகிறார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீரிழிவு பாதித்தோர் எண்ணிக்கையைவிட நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாக அஞ்சனா தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் "நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அளவு 14.4 சதவீதமாக உள்ளது. நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பவர்களின் அளவு 10 சதவீதமாக உள்ளது. சுகாதாரத்தில் முன்னேறிய மாநிலமாக இருப்பதாலும் மக்களிடம் விழிப்புணர்வு இருப்பதாலும் பிரீ டயாபட்டிஸ் குறைவாக உள்ளது. நம்முடைய மாநிலம் நிலைத்தன்மையை அடைந்து வருகிறது," என்கிறார் மருத்துவர் அஞ்சனா.

'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் நன்கு பயனளிக்கிறது

"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு, தனியார் இரு தரப்பிலுமே மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. அதனால், நோய்களை முன்னரே கண்டறிந்து சிகிச்சையளிப்பது சிறப்பாக உள்ளது," என்கிறார் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் மு.அகிலன்.

இந்த ஆய்வறிக்கை தொடர்பாகவும் தமிழ்நாட்டில் நோய்களைக் கண்டறிய எடுக்கப்பட்டு வரும் முன்னெடுப்புகள் குறித்தும் மருத்துவர் அகிலனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "மக்களைத் தேடி மருத்துவம் என்ற சிறப்பான திட்டத்தை தமிழ்நாடு முன்னெடுத்து வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு சப்-சென்டருக்கு ஓர் ஊழியரை நியமித்து அவர்களுக்கு குளூக்கோமீட்டர், பிபி பரிசோதனை செய்யும் கருவி போன்றவற்றை வழங்குகிறோம். இதைக் கண்காணிப்பதற்கு ஒரு செவிலியர் என ஒரு குழு உருவாகிவிடுகிறது. அவர்கள் தினமும்18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 20 முதல் 50 பேர் வரை பரிசோதனை செய்கின்றனர்," எனக் கூறுகிறார்.

அப்படி பரிசோதனை மேற்கொள்ளும்போது ஒருவருக்கு ப்ரீ-டயாபெட்டிஸ் இருந்தால், "ஆரம்ப சுகாதார மையத்திற்குப் பரிந்துரை செய்யப்படுகிறது. அவ்வாறு வருவோரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது, என்னென்ன உடற்பயிற்சிகளைச் செய்வது என்பன போன்ற பரிந்துரைகளை வழங்குகிறார்கள்."

அந்தப் பரிந்துரைகளைச் சரியாகப் பின்பற்றினால், நீரிழிவு நோயாளி ஆகாமல் தப்பித்துவிடலாம் எனக் கூறுகிறார் மருத்துவர் அகிலன்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவை எளிய மக்களைச் சென்றடைவதாகக் கூறும் அவர், "ப்ரீ-டயாபெட்டீஸ் என்று மட்டும் இல்லாமல், உயர் ரத்த அழுத்தம், வாய் புற்றுநோய் போன்றவை இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்கின்றனர். இதனால் நோய்களை முன்னரே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது எளிதாக இருக்கிறது," என்கிறார்.

பிபிசி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோருக்கும் தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கும் நீரிழிவு நோய் உள்ளது   Empty Re: இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோருக்கும் தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கும் நீரிழிவு நோய் உள்ளது

Post by Dr.S.Soundarapandian Sun Jun 11, 2023 12:48 pm

இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோருக்கும் தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கும் நீரிழிவு நோய் உள்ளது   1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோருக்கும் தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கும் நீரிழிவு நோய் உள்ளது   Empty Re: இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோருக்கும் தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கும் நீரிழிவு நோய் உள்ளது

Post by T.N.Balasubramanian Sun Jun 11, 2023 6:26 pm

உணவு முறைகளை,
உடற்பயிற்சிகளை,
நீர் இழிவு செய்தால்
நீரிழிவு உனை போற்றியே
உன்னை தஞ்சமடையும்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோருக்கும் தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கும் நீரிழிவு நோய் உள்ளது   Empty Re: இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோருக்கும் தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கும் நீரிழிவு நோய் உள்ளது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum