ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்?

2 posters

Go down

அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Empty அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்?

Post by சிவா Mon Jun 05, 2023 1:06 pm

அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? TN-stalin-amul-aavin-amit-shah-milk

உணவுப் பொருள்கள் அரசியலாவது இந்தியாவில் வழக்கமான நிகழ்வுதான். ஆனால், பாமரர்களும் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருளான பாலை வைத்து அரசியல் செய்யும் நிலை இன்று ஏற்பட்டுவிட்டது. ஆம், ஆவினா? அமுலா? ஆதிக்கம் செலுத்தப் போவது யார் என்ற ரீதியில் எழுந்துள்ள போட்டி அரசியல் சண்டையை மூட்டியுள்ளது.

பால் உற்பத்தியில் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நிறுவனம் கோலோச்சி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஆவின் முதலிடத்தில் இருக்கும் ஏகபோக நிறுவனமாகும்.

இதற்கு இதுவரையில் போட்டி இருந்ததில்லை. இந்நிறுவனத்துடன் போட்டியிட வந்த, தொடர்ந்து போட்டியில் இருக்கும் தனியார் நிறுவனங்கள் அதை வீழ்த்த முடியவில்லை. வலுவான கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், பால் உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்பு போன்றவையே இதற்குக் காரணமாகும்.

தமிழகத்தில் ஆவின் கொள்முதல்:தமிழ்நாட்டில் தினமும் 1.5 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆவின் கூட்டுறவு இணையத்தின் கீழ் இயங்கி வரும் 9,673 பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள 4.5 லட்சம் உறுப்பினர்களிடம் இருந்து தினமும் 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் 70 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கின்றன. ஆவின் லிட்டருக்கு ரூ.32, தனியார் நிறுவனங்கள் ரூ. 34-35 வரை கொள்முதல் செய்கின்றன.

ஆவின் என்னதான் சிறப்பாகச் செயல்பட்டாலும் அதில் தமிழக அரசின் தலையீடு, பால் விற்பனை விலை, கொள்முதல் விலை நிா்ணயத்தில் செய்யப்படும் அரசியல், இனிப்புகள் விற்பனையில் ஏற்படும் குளறுபடிகள், இழப்புகள் இன்ன பிற காரணங்களால் ஆவின் தலைநிமிர முடியாமல் தள்ளாடுவது எதாா்த்தமான உண்மை. எனவேதான் என்னதான் விற்பனை அதிகரித்தாலும், நஷ்டமும், நலிவும் ஆவினில் தொடர்கதையாக உள்ளது.

கொள்முதல் விலை குறைவால் தனியார் பால் உற்பத்தி நிறுவனங்களிடம் ஏற்கெனவே அணி மாறிவிட்ட பால் உற்பத்தியாளர்களை தங்கள் பக்கம் இழுக்க ஆவினால் முடியவில்லை.

இந்தச் சூழ்நிலையில்தான் கடோத்கஜன் போன்று கால் பதித்துள்ளது இந்தியாவின் முதலிட பால் உற்பத்தி நிறுவனமான அமுல். இந்த நிறுவனத்தின் வளர்ச்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் 1957-இல் ‘ஆனந்த் மில்க் யூனியன் லிட்’ (அமுல்) என்ற பெயரில் தொடங்கப்பட்டு, இந்தியாவின் பால் மனிதரும், வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவருமான வர்கீஸ் குரியனின் விழிகாட்டுதலில் சிறப்பாக இயக்கப்பட்டு இன்று இந்தியாவின் முன்னணி கூட்டுறவு பால் சங்கமாக மாறியுள்ளது.

கிட்டத்தட்ட 66 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டஇந்த நிறுவனம் இன்று இந்தியாவின் முதலிட பால் நிறுவனமாகவும், உலகில் அதிக

அளவில் #பால் உற்பத்தி செய்யும் 8-ஆவது நிறுவனமாகவும் உள்ளது.

அமுல் தன் வளர்ச்சியை தென் மாநிலங்களில் அதிகப்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகளை எப்போதோ தொடங்கி விட்டது. இதன் முதல் களம் கா்நாடக மாநிலமாக அமைந்தது. அங்கு ஆவினைப் போன்று அரசு நிறுவனமாகச் செயல்படும் நந்தினியுடன் மோதியது அமுல்.

அதுதான் கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் அரசியல் பேசுபொருளாக மாறியது. பிரசார களத்திலும் நந்தினியும், அமுலும் நாளும் மோதின. அது சட்டப்பேரவைத் தோ்தலின் முடிவைத் தீா்மானிக்கும் மக்களின் தீா்ப்பை அசைக்கும் ஒரு சக்தியாக இருந்தது என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைதான்.

அங்கே ஆட்சிமாற்றம் ஏற்பட்டு விட்டது. அடுத்தது தமிழகத்தில் அமுல் எந்த நோக்கத்தில் தன் வர்த்தக வியூகத்தை வலுப்படுத்தியுள்ளது என்பதை இனிவரும் நாள்கள் வெட்டவெளிச்சமாக்கிவிடும்.

அதன் முதல் காட்சிதான் #அமுல் நிறுவனத்துக்கு எதிராக மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம். இதுவரை மக்களுக்கு அமுலின் போட்டி பற்றி தெரியவராத விஷயம், அனைவருக்கும் தெரியும்படி ஆகிவிட்டது.

என்ன நடக்கிறது என்று மக்கள் வினவத் தொடங்கிவிட்டனர். அதாவது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5,000 லிட்டர் பாலை அமுல் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. இது ஆவினுக்கு வரவேண்டிய பால் கொள்முதல் என்பதால், அமுலின் கொள்முதலை நிறுத்த வேண்டும் என்பது முதல்வரின் வாதம்.

ஒரு கூட்டுறவு நிறுவனம், மற்றொரு நிறுவனத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் கொள்முதல் செய்யக் கூடாது என்றும் முதல்வர் தன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளாா்.

ஏற்கெனவே ஆவின் தினமும் 45 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்த நிலையில், தற்போது 28 லட்சம் லிட்டராகக் குறைந்துவிட்டது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 35 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்வதாக ஆவின் நிா்வாகம் தெரிவிக்கிறது.

அமுலின் அசுர வேகம் ஆவினை அமுக்கிவிடும் என்ற அச்ச உணா்வு மற்றும் அரசியல் கட்சிகள் சிலவற்றின் எச்சரிக்கை அறிக்கை போன்றவை ஆவின் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் போா்க்குரல் எழுப்ப வேண்டிய நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பால்வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ், ஆவினில் பல்வேறு நிா்வாக சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆவின் பால் கொள்முதல் திறனை 70 லட்சம் லிட்டராக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மற்ற நிறுவனங்களை கண்டு அச்சப்பட தேவையில்லை. அனைத்தையும் எதிா்கொள்வோம் என்றாா் அவர்.

அமைச்சா் அவ்வாறு கூறினாலும் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்றால் பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளாா்.

அவர் மேலும் கூறியது:

#ஆவின் நிா்வாகத்தில் உள்ள நிா்வாகச் சீா்கேடுகளே இந்தப் பிரச்னைகளுக்கு காரணம். ஆவினில் தேவையற்ற செலவினங்கள் மிகப் பெரிய நிதியிழப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, பல ஒன்றியங்களில் 90 நாள்களைக் கடந்தும் வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்படக் கூடிய பால் உற்பத்தியாளர்கள் அமுல் நிறுவனத்தை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது.

இந்தப் பிரச்னைகளைக் களைய ஆவினில் கொள்முதலை அதிகரிப்பதுடன், தனியாருக்கு இணையாக விற்பனையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

27 ஒன்றியங்களாக இருக்கும் ஆவின் நிா்வாகத்தை, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு நான்கு மண்டலங்களாகப் பிரிக்க வேண்டும். அதன் மூலம் நிா்வாகச் செலவுகளைக் குறைக்கலாம் என்றாா் அவர்.

இந்தப் பிரச்னையில் இனி தீா்வு அரசின் கையில்தான் உள்ளது. போக்குவரத்துக் கழகங்கள்போல் தொடர் நஷ்டத்தைச் சந்தித்து சரிவு நிலைக்குச் சென்றுவிடாமல் தடுக்க ஆவினை இப்போதே வலுப்படுத்தி சீா்படுத்த ஆக்கபூா்வமான நடவடிக்கைகளை எடுக்க தொலைநோக்கு திட்டம் தேவை. பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் ஆக்கபூா்வ நடவடிக்கைகளும் தேவை.

இவற்றையெல்லாம் செய்தால் அமுல் நிறுவனத்தின் வருகையைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை.

தினமணி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Empty Re: அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்?

Post by T.N.Balasubramanian Mon Jun 05, 2023 6:37 pm

பால் விற்பனையாளர்கள் எவரும் பணக்காரர்கள் இல்லை.
அவர்கள் உழைப்பு/மாடுகளின் பராமரிப்பு போன்ற பல செலவினங்கள்
பால் விற்பனையாளர்கள் தலையில்தான்.
அவர்கள் வேண்டுவதெல்லாம் கொடுக்கின்ற பாலுக்கு தக்க நேரத்தில் பணம்.

அதில் தாறுமாறான செயல்கள் வெளிவரும்போது யார் கறாராக பணம் தருகிறார்களோ
அவர்கள் வசம்தான் விற்பனை செய்வர்.

நம் அரசியல்வாதிகள் எவரும் ஆவின் பால் வாங்குகிறார்களா என தெரியவில்லை.
பெரிய பங்களா -தோட்டம் --ஆசைக்கேற்ப அவசியத்திற்கேற்ப பசு/எருமை மாடுகள்.
சுத்தமான கலப்படமில்லா பால் .

மக்களை பற்றியோ..தரத்தை பற்றியோ கவலை படுகிறார்களா? தெரியவில்லை.
விலையை குறைத்து தரத்தை குறைத்து அரசியல் எல்லா காலங்களிலும் நடக்கின்றது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum