புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_m10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10 
56 Posts - 73%
heezulia
இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_m10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_m10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_m10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_m10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10 
221 Posts - 75%
heezulia
இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_m10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_m10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_m10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10 
8 Posts - 3%
prajai
இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_m10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_m10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_m10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_m10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_m10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_m10இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 28, 2023 6:59 pm

இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள் Galler11

ஆளும் பா.ஜ.,வால் கதாநாயகனாகவும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற எதிர்க்கட்சிகளால் வில்லனாகவும் சித்தரிக்கப்படும் சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள், இன்று கொண்டாடப்படுகிறது.

புதிய பார்லிமென்ட் கட்டடம் திறப்பு விழா இன்று நடப்பதால், வழக்கத்தை விட இந்த ஆண்டு, சாவர்க்கரின் பிறந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியிருக்கிறது.

கடந்த 1883 மே 28-ல், மகாராஷ்டிராவில் பிறந்த சாவர்க்கர், 11 வயதிலேயே, 'வானர சேனை' என்ற அமைப்பை ஏற்படுத்தி, சிறுவர்கள் இணைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியவர். புனேவில் கல்லுாரியில் படிக்கும்போது, அவரது பேச்சுகள், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மாணவர்களை கொந்தளிக்க வைத்தது. இதனால், அவர் கல்லுாரியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஆனாலும் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று, 'பாரிஸ்டர்' படிக்க லண்டன் சென்றார். அங்கே தான் அவர் பெரும் தலைவராக உருவெடுக்கிறார்.
லண்டனில் அவர் தங்கியிருந்த, 'இந்தியா ஹவுஸ்' இல்லத்தையே, சுதந்திர போராட்ட களமாக்கினார். லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவர்களை ஒருங்கிணைத்து, 'இந்திய சுதந்திர இயக்கம்' என்ற ரகசிய இயக்கத்தை நடத்தினார்.

இந்தியா ஹவுஸில் பயிற்சி பெற்றவர்கள், லண்டனிலும், இந்தியாவிலும் பிரிட்டிஷ் அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதன் பின்னணியில் சாவர்க்கர் இருப்பதை தெரிந்து கொண்ட ஆங்கிலேய அரசு, அவரை கைது செய்து, கப்பலில் இந்தியா அழைத்து வந்தது. வரும் வழியில், பிரான்ஸ் நாட்டின் மார்ஸ் துறைமுகத்தில் கப்பல் நின்றது. அப்போது கழிப்பறை ஜன்னலை உடைத்து, கடலில் குதித்த சாவர்க்கர், கடலில் நீந்தி கரையை அடைந்தார்.

பிரான்ஸ் காவல் துறையிடம், 'நான் இந்திய அரசியல் தலைவர். எனக்கு அடைக்கலம் வேண்டும்' என்றும் ஆங்கிலத்தில் உரக்க குரல் கொடுத்தார். ஆனால், பிரான்ஸ் போலீசாருக்கு ஆங்கிலம் தெரியாததால், 'திருடன்' எனக் கூறி, அவரை மீண்டும் பிரிட்டிஷ் கப்பலுக்கு கொண்டு சென்றனர்.

கப்பலில் இருந்து சாவர்க்கர் தப்ப முயன்றது, சினிமாவையும் மிஞ்சக்கூடிய சாகசம் நிறைந்தது. ஜன்னல் வழியாக குதிப்பதற்காக, பல நாட்களாக உணவை குறைத்து மெலிந்திருந்தார். ஜன்னல் கண்ணாடிகள் குத்தி ரத்தம் வழிந்தோடியபோதும், உப்பு நீரில் கடும் வலியை தாங்கிக் கொண்டு, 15 நிமிடங்கள் நீந்தினார்.

இப்படி அவர் சாகசம் செய்தும் பலன் கிடைக்காததால், 50 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டார். 12 ஆண்டுகள், அந்தமான் சிறையில், சங்கிலியால் பிணைக்கப்பட்டு, செக்கிழுக்க வைக்கப்பட்டு, பல கொடுமைகளை அனுபவித்தார்.

சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்ட சாவர்க்கர், ஹிந்துத்துவ அரசியல் சித்தாந்தத்தை முதன்முதலில் முன்வைத்தவர். 1857-ல் நடந்த முதல் இந்திய சுதந்திர போராட்டத்தை, 'சிப்பாய் கலகம்' எனக் கூறி, பிரிட்டிஷ் அரசு மறைக்க முயன்றது.

இதை விரிவாக ஆய்வு செய்து, 'இந்திய சுதந்திர போராட்டம் 1857' என்ற நுாலை சாவர்க்கர் எழுதினார். இந்நுால், இளைஞர்களிடம் சுதந்திரத் தீயை பற்ற வைத்தது. பகத்சிங் போன்றவர்களுக்கும் இந்நுால் உத்வேகம் அளித்தது.

சாவர்க்கரை கதாநாயகனாக பா.ஜ., கொண்டாடி வருகிறது. ஆனால், அந்தமான் சிறையில் இருந்து வெளியே வருவதற்காக, மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார் எனக் கூறி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., போன்ற எதிர்க்கட்சிகள் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றன.

மற்ற தலைவர்களைப் போல சாவர்க்கர், வசதிகள் நிறைந்த சிறையில் அடைக்கப்படவில்லை. மாறாக சங்கிலியால் கட்டப்பட்டு, செக்கிழுக்க வைக்கப்பட்டார்.

அந்தமான் சிறையில் இருந்து விடுதலையான பின்னும் சாவர்க்கர், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தை கைவிடவில்லை என்பதை, அவரை கொண்டாடுபவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஹிந்துத்துவத்தை, அரசியல் சித்தாந்தமாக முன்வைத்தவர், ஹிந்துக்கள் ஒற்றுமை வலியுறுத்தியவர் என்பதாலேயே, சாவர்க்கரின் தியாகத்தை மறைத்து, அவரை வில்லனாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சித்தரிப்பதாக, பா.ஜ., குற்றம்சாட்டி வருகிறது.

ஆதரவாக இருந்தாலும், எதிர்ப்பாக இருந்தாலும் சாவர்க்கரை பற்றிய குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. மறைந்து 60 ஆண்டுகள் ஆனாலும், இன்றும் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக இருக்கிறார் சாவர்க்கர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 28, 2023 8:20 pm

வெளி உலகுக்குத் தெரியாமல் நாட்டு மக்களுக்காக தன்னையும் தன் சொத்து சுகங்களையும் விட்டொழித்த தியாகச் செம்மல்களில் ஒருவர் வீர்சாவர்கர் !

இவர் தங்கியிருந்த அந்தமான் சிறையின் பெயர் "காலாபாணி"!

வீர்சாவர்கரும் அவர் சகோதரரும் அந்தமான் செல்லுலார் சிறையில் அடுத்த அடுத்த அறையில் தங்கியிருந்தார்கள். ஆனால் ஒருமுறை கூட இவர்களை சந்திக்க கொடூரமான பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதிக்கவில்லை.

இவர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு...!

வழக்கு ஒன்றிற்காக சாவர்க்கரை லண்டனில் வைத்து விசாரிக்காமல் உடனடியாக இந்தியாவிற்கு அனுப்பி அங்கே வைத்து விசாரிக்க இங்கிலாந்து அரசாங்கம் முடிவு செய்தது.

இதற்கு காரணம் இருந்தது. சாவர்க்கர் இங்கிலாந்தில் மட்டும் அல்லாமல், அடிக்கடி ஜெர்மன், பிரான்ஸ் சென்று அங்குள்ள இந்திய புரட்சியாளர்களுடனும் தொடர்பு ஏற்படுத்தி இருந்தார். மேலும் இங்கிலாந்து நாட்டு ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய அயர்லாந்து விடுதலை வீரர்களுடனும் அவர் அதிக நெருக்கம் கொண்டிருந்தார். அந்த அயர்லாந்து வீரர்கள் எப்படியேனும் சாவர்க்கரை லண்டன் போலீசாரிடமிருந்து விடுவிக்க பல வகைகளிலும் முயன்று வந்தனர். அதற்க்கு பயந்து இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரிக்க முடிவு செய்தனர்

நம் நாட்டு நிலையை பார்த்தீர்களா... ? ஒரு இந்திய போராட்ட வீரனை அவர்கள் நாட்டில் வைத்து விசாரிக்க தைரியம் இல்லை. அந்த வீரனின் சொந்த நாட்டில் வைத்து விசாரித்தால் தப்பு வராதாம். அப்படியானால் எந்த அளவு அன்றைய இந்திய தலைவர்கள் மேல் நம்பிக்கை (நிச்சயமாக சாவர்கருக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் என்று) ஆங்கிலேயர்களுக்கு இருந்திருந்தால் இவ்வளவு தைரியமாக இங்கேயே அழைத்துவந்து விசாரிப்பார்கள்..?

எனவே 01-07-1910 அன்று எஸ்.எஸ்.மோரியா என்ற கப்பலில் சாவர்க்கரை ஏற்றி இந்தியாவிற்கு இங்கிலாந்து அரசாங்கம் அனுப்பி வைத்தது. அந்தக் கப்பலை எங்கும் நிறுத்தாமல் இந்தியா சென்று விட வேண்டும் என்பதே இங்கிலாந்து அரசின் திட்டம்.

ஆனால் இந்தியா சென்று விசாரணைக்குள் சிக்கி வீணாக உயிரை விட சாவர்க்கருக்கு விருப்பமில்லை.

அதனால் சிறையில் இருந்தபடியே வ.வே.சு.ஐயருடன் ஒரு திட்டம் தீட்டியிருந்தார். அதன்படி எப்படியும் எஸ்.எஸ். மோரியா என்ற அந்தக் கப்பல் பிரான்ஸ் நாட்டின் மர்சேல்ஸ் துறைமுகத்துக்கு வெளியே நின்று தான் தீரவேண்டும். ஏனென்றால் எண்ணெய் நிரப்பிதான் ஆகவேண்டும்.

அப்போது கப்பலில் இருந்து கடலில் குதித்து நீந்தி சாவர்க்கர் பிரான்ஸ் நாட்டுக் கரையை அடைந்து விட வேண்டும். மர்சேல்ஸ் கடற்கரை சாலையில் காருடன் வ.வே.சு.ஐயர் (மேடம் காமா அம்மையாருடன்) காத்திருந்து சாவர்க்கரை அழைத்துச் சென்று விட வேண்டும்.

திட்டமிட்டபடியே எல்லாம் நடந்தது. ஒன்றைத் தவிர.

1-7-1910 இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்ட எஸ்.எஸ்.மோரியா கப்பல் சாவர்க்கர் எதிர்பார்த்தபடியே 7-7-1910 அன்று இரவு வேளையில் பிரான்ஸ் நாட்டின் மர்சேல்ஸ் துறைமுகத்துக்குச் சற்று தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. கப்பலில் ஏற்பட்ட சிறு பழுதைச் சரி செய்யவும் எண்ணெய் நிரப்பவுமே கப்பல் நிறுத்தப்பட்டது.

அதிகாலையில் ஸ்காட்லாந்து யார்ட் அதிகாரி அனுமதி பெற்று கப்பலின் கழிவறைக்குள் சென்ற சாவர்க்கர், கழிவறையில்இருந்த குறுகிய வட்டமான சாளரத்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு கடலில் குதித்து விட்டார். கண்ணாடித் துண்டுகள் கிழித்து அவரது உடலெங்கும் குருதி வடிய கரையை நோக்கி நீந்தத் தொடங்கினார். அவர் கடலில் குதித்து நீந்துவதைக் கண்டு கொண்ட லண்டன் போலீசார், அவரைச் சுடத் தொடங்கினர்.

சாவர்க்கர் தலையை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் கடலுக்குள்ளேயே நீந்தி கரையை நெருங்கி விட்டார். லண்டன் போலீசார், ஒரு படகை கப்பலிலிருந்து கடலுக்குள் இறக்கி அதில் ஏறி அவரைத் துரத்தினர். அதற்குள் சாவர்க்கர், கரையேறி சாலையில் ஓடத் தொடங்கினார். அவரைப் படகில் துரத்தி வந்த லண்டன் போலீசாரும், கரையேறி, திருடன் திருடன் என்று கத்திக் கொண்டே அவரைத் துரத்திக் கொண்டு ஓடினார்கள். குருதியும் கடல் நீரும் சொட்டச் சொட்ட ஓடிய சாவர்க்கரை அவருக்கு எதிரே வந்த ஒரு பிரெஞ்சு போலீஸ்காரன், அவரை திருடன் என்று கருதி தடுத்து நிறுத்தி விட்டான்.

நான் பிரெஞ்சு எல்லைக்குட்பட்ட கடல் நீரில் குதித்தேன் என்றார். நான் திருடன் அல்ல. , நான் ஒரு அகதி.. இந்திய விடுதலைக்குப் போராடும் இந்திய அரசியல்வாதி. தஞ்சம் கேட்டு பிரான்ஸ் நாடு வந்திருக்கிறேன் என்னை உனது பிரான்ஸ் நாட்டு அரசின் அனுமதி இன்றி லண்டன் போலீசாரிடம் ஒப்படைப்பது சட்டப்படி தவறு” என்னை கைது செய்யுங்கள், உங்கள் மாஜிஸ்ட்ரேட் முன் கொண்டு நிறுத்துங்கள் என்று தனக்குத் தெரிந்த அரைகுறை பிரஞ்சுமொழியில் அவனிடம் வாதாடினார். அதை விளங்கிக் கொள்ளாத அந்தப் பிரெஞ்சு போலீஸ்காரன் சாவர்க்கரை லண்டன் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டான்.

திட்டமிட்டபடி காருடன் வந்து காத்திருந்த வ.வே..சு.ஐயரும், காமா அம்மையாரும் சாவர்க்கரை லண்டன் போலீசார் மீண்டும் கப்பலுக்கு அழைத்துச் சென்ற காட்சியை அவர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. வேதனை மீறி இருவரும் விம்மி அழத் தொடங்கி விட்டார்கள். அம்மையார் ஒரு படி மேலே போய் அலறி துடித்து விட்டார். அவரை சமாதான படுத்திய அய்யர் விரைவிலேயே வேதனையையும், விம்மலையும் அடக்கிக் கொண்டு அடுத்த கட்ட செயலில் இறங்கினார்கள்.

பிரெஞ்சு மண்ணில் கால் வைத்து விட்ட சாவர்க்கரை லண்டன் போலீசார் கைது செய்தது " சர்வதேச நியதிக்குப் புறம்பான அநீதி " என்று ஒவ்வொரு பத்திரிகையாக ஏறி, இறங்கி பத்திரிகைகள் வாயிலாக உலகறிய அம்பலப்படுத்தினார்கள். அடுத்த நாள் பிரெஞ்சு பத்திரிகையில் இந்த செய்தி முழுக்க பரவியது.

வீர சாவர்க்கரை பிரான்ஸ் போலீஸ் பிடித்து இங்கிலாந்து போலீசிடம் ஒப்படைத்ததற்கு உலக அளவில் மன்னிப்பு கேட்டு பிரான்ஸ் பிரதமர் பிரியான்ட் தன்னுடைய அமைச்சர்களுடன் ராஜினாமா செய்தாரே அது தனி வரலாறு..!

சர்வதேச அரங்கில் அன்று பிரிட்டனுக்கு இருந்த செல்வாக்கு காரணமாக தீர்ப்பு பிரிட்டனுக்குச் சாதகமாக அமைந்தது. சாவர்க்கர் லண்டன் போலீசாரால் இந்தியா கொண்டு செல்லப் பட்டார்.

இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு இந்திய நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு இரட்டை ஆயுள் தண்டணை, அதாவது 50 ஆண்டுகால சிறைவாசம் பெறுகிறார். இவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை அடைந்த ஒரே இந்திய தலைவர்.

அந்தமான் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் போதே ஒரு துயர வரலாறு துவங்கிவிடுகிறது.

கப்பலின் அடித்தளத்தில் வெளிச்சமோ காற்றோ போதிய உணவோ இல்லாமல் ஆடு,மாடுகளை விட கேவலமாக அடைத்து அந்தமானுக்கு அழைத்துச் செல்லும் அந்தக் கூட்டத்தில் பெரும்பான்மை கடும் குற்றங்கள் புரிந்த கிரிமினல்கள். இவரைப்போல அரசியல் கைதிகளை அந்தமானுக்கு அனுப்பும் வழக்கம் அப்போது ஆரம்பித்திருக்கவில்லை.

இவர் அனுபவித்த துன்பங்கள் சொல்லி மாளாது. அந்தமான் சிறையில் அவர் அனுபவித்த கொடுமைகள் பல. பெயர் தெரியாத பூச்சிகளும், பாத்திராத புழுக்களும் நிறைந்த சிறை சாலை, இரண்டு நாள், முன்று நாள் தண்ணீர் வராமை, குளிக்க விடாதது, காலை கடன் முடிக்க விடாமை, சாப்பாடு கிடைக்காமல் செய்தது, எழுதுவதற்கு தாள்கள் கூட கிடைக்காத சிறைச் சாலையில் இருந்து கொண்டு கல்லினால் சுவற்றில் அவர் ஒரு காவியத்தை எழுதி முடித்தார். இப்படியாக 11 ஆண்டுகள் ஓடி விட்டது , மிகவும் சோர்ந்து விட்டார் , நோயினால் அவதிபட ஆரம்பித்து விட்டார் ,

சர்வர்கார் உடல் நலம் மிகவும் பாதிக்கபட்டது ,அவர் அந்தமான் சிறையில் இறந்தால் இந்தியாவில் கலவரம் வந்து விடும் என்று நினைத்த வெள்ளைக்காரன் அவர் மன்னிப்பு கடிதம் எழுதியது போல் காட்டி அவரை விடுதலை செய்தான்..!

11 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு உடல்நிலை காரணமாக விடுதலை செய்யப்பட்டார்... சிறையிலிருந்து விடுபட்ட பின்பும் பல புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டார் .

கடைசியில் தனது 82 வது வயதில் நீதிமன்ற அனுமதி பெற்று 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து பச்சைத் தண்ணீர் கூட அருந்தாமல் தன்னுடை ய உயிரைப் போக்கிக் கொண்டார் சாவர்க்கர்..!

காந்தியின் கொலை மட்டும் நிகழாமல் இருந்திருந்தால் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் நிஜ ஹீரோக்களின் வரலாறு பாரத தேசமெங்கும் விதைக்கப்பட்டிருக்கும்.

இந்திய வரலாற்றின் பக்கங்கள் வந்தேறிகளான ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு எழுதப்பட்டதால் அந்த வந்தேறிகளின் பினாமிகளாக இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி நம் நாட்டின் தொன்மையான வரலாற்றையும் நம்முடைய பண்பாட்டையும் விடுதலைப்போரில் கத்தியுடன் புத்தியுடன் களத்தில் நின்றவர்களை அடையாளப் படுத்தாமல் அசிங்கபடுத்திக் கொண்டிருந்தது.

இந்திய வரலாற்றில் 1857 வருடத்தை தேடிப்பாருங்கள். அது ஒரு சிப்பாய்க் கலகம் என்ற பெயரிலேயே இந்திய அளவிலும், இங்கிலாந்து அளவிலும் பதியபட்டிருக்கும். ஆனால் அது தான் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் எழுச்சி என்று மிக விரிவான ஆதாரங்களுடன் ஒரு நூலாக முதன் முதலில் எழுதியவர் வீர சாவர்க்கரே. இந்நூல் 1907 ஆம் ஆண்டு வெளிவந்த பிறகு தான் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மக்கள் முழு ஈடுபாட்டுடன் திரும்ப ஆரம்பித்தனர்.

வீர்சாவர்கரின் பிறந்த நாளான இன்று அதாவது 2023 ஆம் வருடம் நமது பிரதமர் மோதிஜி புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்து சாவர்க்கரை மக்கள் மனதில் முழுமையாக பதியச் செய்துள்ளார்.
♥♥♥

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 29, 2023 9:35 pm

அடிமை படுத்தியவர்கள் எவ்வளவு மோசமாக நடந்துகொண்டார்கள்.

சில புல்லுருவிகள் காரணம்.

அவர்களின் வழித்தோன்றல்கள் இன்றும் நிறைந்திருக்கின்றார்கள்

பணத்திற்காக எதையும் இந்த கும்பல்களும் அவர்களின் அடிப்பொடிகளும்.

இந்தியர்களே !விழித்தெழுங்கள்.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக