புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_m10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10 
115 Posts - 42%
heezulia
கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_m10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10 
89 Posts - 32%
Dr.S.Soundarapandian
கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_m10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10 
40 Posts - 15%
T.N.Balasubramanian
கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_m10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10 
9 Posts - 3%
mohamed nizamudeen
கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_m10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10 
7 Posts - 3%
sugumaran
கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_m10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_m10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_m10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_m10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_m10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_m10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10 
366 Posts - 49%
heezulia
கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_m10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_m10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_m10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_m10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10 
25 Posts - 3%
prajai
கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_m10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_m10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_m10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_m10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_m10கள்ளச்சாராயம் - கள்ளச் சாராய மரணங்கள்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளச் சாராய மரணங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 15, 2023 8:03 pm

கள்ளச்சாராய பலி 12 ஆக உயர்வு


விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மே 13, 14-ஆம் தேதிகளில் அனுமதிக்கப்பட்டனா். கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 11 பேர் பலியாகியிருந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எக்கியார்குப்பத்தைப் சேர்ந்த ஆபிரஹாம் (47) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 15, 2023 8:04 pm

விழுப்புரம் மருத்துவமனையில் ஸ்டாலின் ஆய்வு; அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு



விழுப்புரத்தில் கள்ளச் சாராயம் குடித்து 12 பேர் உயிரிழந்த நிலையில், முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் கூட்டரங்கில் ஆலோசனை நடத்தினார்.

சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த மீனவ கிராமமான செட்டியார் குப்பத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கள்ளச் சாராயம் குடித்தனர். அவர்களில் 3 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில், மற்ற 20 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதே போல, செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டம், பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க தவறிய, மேல்மருவத்தூர் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவிஆய்வாளர் ரமேஷ் ஆகிய 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.

இதைத் தொடர்து, கள்ளச் சாராயம் மரணம் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். செங்கல்பட்டு எஸ்.பி. பிரதீப் பணியிட மாற்றம் செய்து முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், விழுப்புரம் மதுவிலக்கு டி.எஸ்.பி பழனி, செங்கல்பட்டு டி.எஸ்.பி துரைபாண்டி இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், செட்டியார் குப்பத்தில் நிகழ்ந்த கள்ளச் சாராய இறப்புகள் தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், இச்சம்பவம் தொடர்பாக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கூட்ட அரங்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு சம்பவங்கள் தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே செட்டியார் குப்பத்தில் நிகழ்ந்த கள்ளச் சாராய இறப்புகள் தொடர்பாக இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், இச்சம்பவம் தொடர்பாக நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாவட்ட காவல்துறையும் அதன் ஒரு முக்கிய அங்கமான மதுவிலக்கு அமலாக்க பிரிவும் கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதில் எவ்விதமான சமரசத்திற்கும் இடம் அளிக்க கூடாது என்றும் கடுமையாக எச்சரித்தார்.

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களில் இந்த பிரிவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எத்தனால் போன்ற ரசாயனங்களைத் தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றை மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றும் காவலர்கள் தீவிர கவனத்துடனும் அக்கறையுடனும் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படாத காவலர்கள் மீது உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிகழ்ந்த இந்த துயரமான சம்பவங்களுக்கு காரணமான குற்றவாளிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம், நிர்வாக ரீதியாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். இந்தப் பிரச்சனையின் மூல காரணங்களை கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழித்திடுவதற்கு ஏதுவாகவும், தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய சில மூலப்பொருட்கள் கள்ளச் சாராயம் தயாரிக்கப்படும் நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுவதை முழுமையாக தடுத்திடும் நோக்கத்துடனும், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடந்த கள்ளச்சாராய சம்பவம் குறித்த வழக்குகளின் விசாரணை CBCID-க்கு மாற்றப்படுகிறது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், உள்துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திரபாபு, காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) கி. சங்கர், விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி. பழனி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர. ராகுல் நாத், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் டாக்டர் என். கண்ணன், விழுப்புரம் சரகம் காவல்துறை துணைத் தலைவர்பி. பகலவன், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் நா. ஸ்ரீநாதா, அரசு உயர் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 15, 2023 8:05 pm

கள்ளச் சாராய மரணம்: எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள் மீது நடவடிக்கை


விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த மீனவ கிராமமான செட்டியார் குப்பத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கள்ளச் சாராயம் குடித்தனர். அவர்களில் 3 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில், மற்ற 20 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதே போல, செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டம், பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க தவறிய, மேல்மருவத்தூர் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவிஆய்வாளர் ரமேஷ் ஆகிய 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.

இதைத் தொடர்து, கள்ளச் சாராயம் மரணம் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். செங்கல்பட்டு எஸ்.பி. பிரதீப் பணியிட மாற்றம் செய்து முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், விழுப்புரம் மதுவிலக்கு டி.எஸ்.பி பழனி, செங்கல்பட்டு டி.எஸ்.பி துரைபாண்டி இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 15, 2023 8:07 pm

ஸ்டாலின் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்: இ.பி.எஸ்



விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பல பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது போல செங்கல்பட்டில் 5 பேர் சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக இ.பி.எஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

” விழுப்புரம் மரக்காணம் அருகே சாரயம் குடித்து 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது. இதுபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேர் சாராயம் பருகி உயிரிழந்துள்ளனர். இது மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று நான் முன்பே அறிக்கை மூலம் எச்சரித்திருந்தேன்.

மேலும் சில பத்திரிகைகளிலும் கள்ளச் சாராயம் தொடர்பான செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை இந்த அரசு கண்டுக்கொள்ளவில்லை. ஒரு பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆழ்கின்ற காரணத்தால், இப்படிபட்ட கொடுமைகளை மக்கள் சந்திக்க வேண்டியதாக உள்ளது. கள்ளச்சாரயம் பெருகி உள்ளது என்று சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது நான் பேசியிருந்தேன். இதையெல்லாம் அரசு கவனித்து நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

கள்ளாச்சாரயம் விற்பனை நடைபெறுகிறது என்ற செய்திகள் பத்திரிக்கையில் வெளிவந்தன. இதற்கு பொறுப்பு ஏற்று முதல்வர் ஸ்டாலின் பதவியை தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும். ஸ்டாலின் ஆட்சி செய்யத்தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருகிறது. இதுபோல கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு டி.ஜி.பி 2.0 என்று அறிவித்தார். பிறகு, 3.0 மற்றும் 4.0 என்று அறிவித்தார். ’ஓ’ போடுவதைதான் அவர்கள் வழக்காமாக வைத்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. அவர்களால் போதை பொருட்களை தடை செய்ய முடியவில்லை. காவல்துறைக்கு சுதந்திரமாக செயல்பட அனுமதி கிடையாது. தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். நாளை காலை மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்க உள்ளேன். அம்மா ஆட்சி இருக்குவரை குறிப்பிட்ட நேரம் வரைக்கும்தான் மதுக் கடைகள் திறக்கப்படும். ஆனால் ஸ்டாலின் ஆட்சியில் 24 மணி நேரமும் பார் திறக்கப்படுகிறது. திமுக அரசுக்கு வருமானம்தான் தேவை.

500 மதுக்கடைகளை மூடுவதாக கூறிவிட்டு, 1000 மதுக்கடைகளை திறக்கிறார்கள். சிறிய கடைகளாக திறக்கிறார்கள். மேலும் தானியங்கி மூலம் மது விற்பனை செய்யலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது திமுக அரசு. திருமண மண்டபத்திலும் கூட குடிக்கலாம் என்ற உத்தரவை அரசு கொண்டுவந்துள்ளது. ஒரு மகிழ்ச்சியான நாளில்கூட குடிக்கலாம் என்று கூறுகிறார்கள் “ என்று அவர் கூறினார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 15, 2023 8:40 pm

"திமுக ஆட்சிக்கு கள்ளச்சாராய பலிகளே சாட்சி": அண்ணாமலை


சென்னை: திமுக அரசின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு கள்ளச்சாராய பலிகளே சாட்சி என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: மது விலக்கு அமைச்சகத்தின் கொள்கை அறிக்கை படி, கடந்த 14 ஆண்டுகளில் கள்ளச்சாராய பலிகள் ஏற்படவில்லை. மீண்டும் திமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்திருப்பது ஆட்சியாளர்களின் திறமையின்மையை காட்டுகிறது.

கள்ளச்சாராய விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் தொடர் கண்காணிப்பை உறுதிப்படுத்த வேண்டும். திமுக அரசின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு கள்ளச்சாராய பலிகளே சாட்சி. தமிழக அரசு தூக்கத்திலிருந்து விழித்து, கள்ளச் சாராய விற்பனையை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 16, 2023 8:06 pm

கள்ளச்சாராய உயிரிழப்பு: ‘2 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’ - அண்ணாமலை



#கள்ளச்சாராயம் விற்பனைக்கு துணை போகும் 2 அமைச்சர்களை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகத்தில் கள்ளச் சாராயத்துக்கு 19 உயிர்கள் பலியாகி உள்ளன. 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், கள்ளச் சாராயத்துக்கு பலியானவர்களை குடும்பத்தினருக்கு கூடத் தெரியப்படுத்தாமல், காவல் துறையே அடக்கம் செய்த அவலமும் நிகழ்ந்திருக்கிறது.

இந்த சம்பவம் நடந்து முடிந்த பிறகு தமிழகத்தில் 1558 கள்ளச் சாராய வியாபாரிகளை கைது செய்தும், பல ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வளவு கள்ளச் சாராய வியாபாரிகள் இருப்பது தெரிந்தும், கள்ளச் சாராயம் விற்பவர்கள் யார்? விற்பனை எங்கே நடக்கிறது? என, தெரிந்திருந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அனுமதித்துவிட்டு தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்வது வெட்கக் கேடு.

யாரை ஏமாற்ற தமிழக அரசு முயற்சிக்கிறது? மரக்காணம் கள்ளச்சாராயம் விவகாரத்தில் மரூர் ராஜா என்ற சாராய வியாபாரியின் பெயர் வெளியாகியுள்ளது. தி.மு.க-வை சேர்ந்த இவர், திண்டிவனம் 20வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா என்பவருடைய கணவர் ஆவார்.

அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு மிக நெருக்கமான மரூர் ராஜா பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டாலும், அமைச்சரின் செல்வாக்கால் பெரிய அளவில் நடவடிக்கை இல்லாமல் சாராய விற்பனையை தொடர்ந்து வந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் காரில் சாராயம் கடத்திய வழக்கில் மரூர் ராஜா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் அமைச்சரின் நெருக்கத்தால் சிறையில் இருந்தபடியே சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது.

சமூக வலைதளங்களில் தி.மு.க-வை விமர்சித்தால் குண்டாஸ் நடவடிக்கை எடுக்கும் தி.மு.க அரசு பல வழக்குகள் நிலுவையில் இருந்தும் மரூர் ராஜா மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்காமல் இருக்க என்ன காரணம்?

அமைச்சர் செஞ்சி மஸ்தானுடனான நெருக்கமா? ஒரு சாராய வியாபாரியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பாதுகாத்துக் கொண்டு இருக்கிறாரா?

இத்தனை நாட்களாக நடந்து வரும் கள்ளச் சாராய விற்பனை குறித்த தகவல் அரசுக்கும் காவல் துறைக்கும், தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. கள்ளச் சாராய விற்பனையை தடுத்து நிறுத்துவது, மதுவிலக்கு துறையின் முக்கியப் பொறுப்பு.

ஆனால் அந்த துறைக்கு பொறுப்பான சாராய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தெரியாமல் இவ்வளவு அதிகமாக கள்ளச் சாராய விற்பனை நடந்து இருக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கள்ளச்சாராய விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் லஞ்சம் வாங்கிய வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வருவதாக இருந்ததால் நேற்று சம்பவம் நடந்த இடத்துக்கே வரவில்லை.

ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே செந்தில் பாலாஜி தமிழக அமைச்சர் பதவியில் தொடரும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் இருவரும் கள்ளச் சாராய விற்பனை குறித்து தெரிந்து இருந்தும் குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்டுள்ளார்கள்.

மேலும் தங்களது அமைச்சர் பதவிக்கான பொறுப்புகளில் இருந்து தவறி உள்ளனர். ஏற்கனவே டாஸ்மாக்கின் மூலம் சகோதரிகளின் தாலியை பறிப்பது போதாது என்று, கள்ளச் சாராய விற்பனைக்கு துணை செல்லும் இவர்கள் இருவரையும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

தமிழக அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் தாய்மார்களின் கண்ணீரை வெறும் இழப்பீடு கொடுத்து சரி செய்துவிடலாம் என்று முதல்வர் நினைத்தால், அது மிகவும் தவறானப் போக்காகும்.

எனவே மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால், தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதற்கு பா.ஜ.க தயங்காது என்று எச்சரிக்கிறேன்’ என, கூறியுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 16, 2023 8:07 pm

கள்ளச்சாராய மரணங்கள்: அமைச்சரை முற்றுகையிட்ட செங்கல்பட்டு மக்கள்



கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைச்சரை முற்றுகையிட்டு சரமாரி புகார் அளித்ததால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில் 5 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலு 4 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருபவர்களை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டு அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார். இதனைத்தொடர்ந்து, அமைச்சர் வெளியே வந்த பொழுது, கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிவரும், சங்கர் என்பவரின் உறவினர்கள் சிலர் அமைச்சரை முற்றுகையிட்டு கேள்வி கணைகளால் துளைத்து எடுத்தனர்.

இருளர்கள் என்றால் இளிட்சவாயா எனக் கேட்ட அவர்கள், ஏழைக்கு முறையாக சிகிச்சை பெறுவதில்லை என குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

தொடர்ந்து முறையாக சிகிச்சை அளிக்காமல் பதிலும் சொல்லாமல் மருத்துவர்கள் அலைகழித்து வருவதாகவும், எங்களிடம் அவர் உடலைக்கொடுத்து அனுப்பி விடுங்கள் என கடுமையான வார்த்தைகளால் அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவிற்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து எடுத்து கூறினார். இதனால் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 16, 2023 8:11 pm

சாராய பலிக்கு ரூ.10 லட்சம்; ஸ்ரீரங்கம் விபத்தில் பலியான மாணவர்களுக்கு நிவாரணம் எங்

கே?

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 14ஐ தொட்டது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் போலி மது குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக அரசின் மெத்தனத்தாலும், போலீஸாரின் அலட்சியத்தாலும் இதுவரை 19 பேர் போலி மதுவினால் ஓரிரு நாட்களில் இறந்துள்ளனர் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

அதேநேரம் திருச்சியில் பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் கொள்ளிடம் ஆற்றில் எந்தவித முன்னறிவிப்புமின்றி சுமார் 1903 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 4 மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். ஒரு மாணவன் மட்டும் உயிரோடு திரும்பி வந்தான்.

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியான வேத பாடசாலை மாணவர்களுக்கு நிவாரண தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

இதுகுறித்து திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளர் வக்கீல் கிஷோர்குமார் தெரிவிக்கையில், திருச்சி, ஸ்ரீரங்கம், கொள்ளிட கரையில் நேற்று முன்தினம் (மே 14) காலை குளிக்க சென்ற விஷ்ணுபிரசாத், ஹரிபிரசாத், அபிராம் என்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். இவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேற்படி மூன்று மாணவர்களும் ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியை சார்ந்த பத்ரிநாராயணன் என்பவரது வீட்டில் தங்கி குருகுல முறைப்படி வேதபாடம் கற்று வந்துள்ளார்கள்.

பலியான மூன்று மாணவர்களின் குடும்பத்தினருக்கும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென தமிழக முதல்வரை மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம் என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக செயற்பாட்டாளர், ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் மோகன்ராம் தெரிவிக்கையில்; கள்ளசராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுக்கும் தமிழக அரசும், தமிழக முதல்வரும் திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் திருச்சி பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் எவ்வித அறிவிப்பும் இன்றி தண்ணீர் திறந்து விட்டதால், மாணவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு பிரேதமாக மீட்க்கப்பட்டுள்ளனர்.

திருவரம்பூர் கூட்டு குடிநீர் திட்ட வேலை தொடர்பாக இடையூறு ஏற்படும் என கருதி காவிரி நதியில் வர வேண்டிய நீரை கொள்ளிடத்துக்கு எவ்வித முன் அறிவிப்பும் இன்றி தற்காலிகமாக திருப்பி விடப்பட்டதில் வெள்ளம் பெருகி விபத்து நடந்துள்ளது.

யாத்ரீ நிவாஸ் அருகே நடந்த இந்த விபத்தில் முன் எச்சரிக்கைச் செய்தி பலகையோ, கொள்ளிடத்தில் நீரின் வேகம் அதிகறித்துள்ளது என்பது குறித்த ஒலி பதிவையோ ஏன் செய்யவில்லை?

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 19 பேர் கள்ளச் சாராயம் குடித்து இறந்து போயினர். இதில் மருத்துவ அவசர சிகிச்சைக்கு சிலர் புதுச்சேரி வரை எடுத்துச் செல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில் உடனே 7 போலீஸ் இன்ஸ்பெக்டர், உதவி இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழக முதலமைச்சர், டி.ஜி.பி உடனுக்குடன் செயல்பட்டனர்.

ஏழை மக்கள் டாஸ்மாக்கில் விற்கும் சரக்கினை வாங்க காசு இல்லாததால் மலிவு விலையில் கள்ளச் சந்தையில் விற்கப்படும் போலி சரக்கினை நாடுக்கின்றனர்.

இந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்றுக்கொண்டதால் தானே களத்தில் இறங்கி பார்வையிட்டு நிவாரணத்தையும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடைக்கு போகாமல் கள்ளத்தனமாக கிடைக்கும் சாராயத்தை குடித்து இறந்தால் நம் வீடாவது நன்றாக இருக்கும் என்ற நினைப்பில் பலரும் கள்ளச்சாராயத்தை தேடி அலையும் துர்பாக்கியத்தை அரசு ஏற்படுத்தியிருப்பது வேதனையளிக்கின்றது.

அதேநேரம் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கும் தமிழக அரசு, திருச்சி மாவட்ட அதிகாரிகளின் அலட்சிய நடவடிக்கையால் உயிரிழந்துள்ள வேத பாட சாலை மாணவர்கள் சம்பவத்தில் எந்த நிவாரணமும் அளிக்க முன்வராதது ஏன்?

இந்த சம்பவத்திற்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் பொறுப்பேற்று உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நிதி அறிவிக்காமல் பாரபட்சம் காட்டுவது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

அதேநேரம் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்; இந்த விபத்து தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் முதற்கட்ட தகவல் நேற்று முன்தினமே தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது. முதல்வர் அலுவலகத்தில் இருந்தும் இதுகுறித்து விபரம் கேட்டறிந்தனர்.

இதனிடையே மாணவர்கள் ஒவ்வொருவரின் உடலும் நேற்று முன் தினம், நேற்று என மீட்க்கப்பட்டதால் அரசுக்கு முழு விபரத்தையும், 3 மாணவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று மருத்துவமனையில் இருந்து கிடைக்கப்பெற்றதும் அதையும் சேர்த்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் அனுப்பப்படும். இதன் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என்றார்.

அதேநேரம், திருச்சியில் 2 அமைச்சர்கள் இருந்தும் 3 மாணவர்கள் ஆற்று நீரில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவத்திற்கு எந்தவித இரங்கலையோ, நேரில் சந்தித்து பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலையோ சொல்லாதது சோதனையிலும் வேதனை என்கின்றனர் உள்ளூர்பிரமுகர்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 16, 2023 8:12 pm

மரக்காணம், சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; மெத்தனால் – டி.ஜி.பி



விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சாராயம் குடித்ததால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக, டி.ஜி.பி சைலேந்திர பாபு வெளியிட்ட அறிக்கையில், மரக்காணம், சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கள்ளச் சாராயம் குடித்தனர். அவர்களில் 3 பெண்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டம், பெருங்கரணை கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். கள்ளச் சாராயம் குடித்ததால் ஏற்பட்ட மரணங்கள் நாட்டையே உலுக்கியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், மரக்காணம், சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார் குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட பெருக்கரணை கிராமம் மற்றும் பேரம்பாக்கம் கிராமங்களில் கைப்பற்றப்பட்ட சாராயம் தடய ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வறிக்கையில், இது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல என்பதும் ஆலைகளிகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற விஷச் சாராயம் என்பது தெரியவந்தது.

இந்த மெத்தனால் என்ற விஷச் சாராயம் ஓதியூரைச் சேர்ந்த சாராய வியபாரி அமரன் என்பவர் விற்பனை செய்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்ததில் அவர் முத்து என்பவரிடம் இருந்து வாங்கியுள்ளதாகவும் முத்து பாண்டிச்சேரி ஏழுமலை என்பவரிடம் இருந்து வாங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அது போல, சித்தாமூர், பெருக்கரணை மற்றும் பேரம்பாக்கத்தில் விஷச் சாராய விற்பனை செய்த ‘அமாவாசை’ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மது அருந்தியதால் அவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இவர் ஓதியூர் வேலு, அவர் தம்பி சந்திரன் என்பவரிடமிருந்து வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார். வேலு என்பவர் பனையூர் ராஜேஷ் என்பவரிடமிருந்து வாங்கியதாகக் கூறியுள்ளார். இவர் மேற்படி விஷச் சாராயத்தை விளம்பூர் விஜி என்பவரிடமிருந்து வாங்கியதாகத் தெரிவித்தார். விளம்பூர் விஜி, விஷச்சாராயத்தை பாண்டிச்சேரி ஏழுமலையிடமிருந்து வாங்கியுள்ளார். ஆக சித்தாமூரில் விற்கப்பட்ட விஷச் சாராயமும் மரக்காணத்தில் விற்கப்பட்ட விஷச் சாராயமும் ஓரிடத்திலிருந்து வந்தது என புலனாகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் 1,40,649 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,39,697 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 37,217 லிட்டர் விஷச் சாராயம் கைப்பற்றப்பட்டு 2,957 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் இதுவரையிலும் 55,474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55,173 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, இதுவரையிலும் 2,55,078 லிட்டர் கள்ளச் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. கள்ளச் சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட 69 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 1,077 மோட்டார் வாகனங்கள் இந்த ஆண்டு மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், கள்ளச் சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சுவது பெருமளவு தடுக்கப்பட்டதாலும் அண்டை மாநிலங்களுக்கு கள்ளச் சாராயம் கடத்தப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்படுவதாலும் சாராயம் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில், தொழிற்சாலையிலிருந்து விஷச் சாராயத்தை திருடி சிலர் விற்றுள்ளனர். அதனால், இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. எந்தத் தொழிற்சாலையில் இருந்து மெத்தனால் என்ற விஷச் சாராயம் வந்தது. அதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்று புலன் விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 18, 2023 9:06 pm

திருப்பத்தூர்: ஒரேநாளில் 13 சாராய வியாபாரிகள் கைது - 210 லிட்டர் சிக்கியது எப்படி?



திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காவல் உட்கோட்டத்தில் சாராயம் மற்றும் அரசு மதுபானங்களை கள்ளச் சந்தையில் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் வாணியம்பாடி திருமாஞ்சோலை பகுதியில் சாராயம் விற்ற ஜெயசீலன் (42), பிரபு தேவா (30) மற்றும் நியூடவுன் பகுதியில் சாராயம் விற்ற சரவணன் (29) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 52 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேப்போல் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராயம் மற்றும் அரசு மதுபானங்களை விற்ற பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன், தசரதன், சி.வி பட்டறை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி, புருஷோத்தம குப்பம் பகுதியை சேர்ந்த முனியம்மா, மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் கைது செய்து செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 25 மதுபாட்டில்கள், 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேப்போல வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாராயம் விற்பனை செய்து வந்த அனுமுத்து ராணி, பெருமாள், உஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 100 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேப்போல் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட பெத்தூர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 9 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வாறாக வாணியம்பாடி காவல் உட்கோட்டப் பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் சாராயம் விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 25 மதுபாட்டில் மற்றும் 210 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகள் வாணியம்பாடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக