புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_m10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10 
32 Posts - 42%
heezulia
தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_m10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10 
32 Posts - 42%
prajai
தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_m10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_m10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_m10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_m10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_m10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_m10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_m10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10 
1 Post - 1%
jothi64
தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_m10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_m10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10 
398 Posts - 49%
heezulia
தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_m10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_m10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_m10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_m10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10 
26 Posts - 3%
prajai
தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_m10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_m10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_m10தாயிற் சிறந்த கோயிலுமில்லை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயிற் சிறந்த கோயிலுமில்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 14, 2023 4:28 pm

தாயிற் சிறந்த கோயிலுமில்லை Image

தாயினை விட சிறந்த கோவிலும் இல்லை என்கின்றார் ஒளவையார், கோவில் என்பது புனிதமானது வாழும் வகைகளை வரங்களை தருவது ஆன்மீக வாழ்வில் மட்டுமல்ல லவுகீக வாழ்விலும் அன்று மக்களை புயல் மழையில் இருந்து அதுதான் காத்தது.

நியாயங்களும் தீர்ப்புகளும் ஆலயத்தில்தான் வழங்கபட்டன‌

அப்படிபட்ட ஆலயங்களை விட தாய் சிறப்பானவள் என்கின்றார் ஒளவையார், ஆலய கருவறை போல தாயின் கர்ப்பத்தில் இருந்து வந்த நாம் தாயால் வளர்க்கபட்டு அவளால் உருவாக்கபட்டு இந்த உலகில் காரியங்களை செய்ய பணிக்கப்பட்டோம்.

அருள் உருவாகும் இடம் கோவில் என்றால் உயிர் உருவாகி வருமிடம் தாய் என்பதாலும் தெய்வம் பக்தனை காப்பது போல அயராது காப்பவள் தாய் என்பதாலும் இப்படி பெரும் இடம் கொடுத்து போதித்தார் ஒளவையார்.

இன்று அன்னையர் தினம்

உலகெல்லாம் அன்னையர் தினம் கொண்டாடுகின்றார்களாம், அதனை கண்டுவிட்டு தமிழர்களும் முகநூலில் உருகி கொண்டிருக்கின்றார்கள்
தாய்க்கு பாரதமும், இந்துமதமும் கொடுத்த உயர்வான இடத்தை விட யார் கொடுத்துவிட முடியும்?

சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று உண்டு

"நானோடக்ஷனம் தானாம் ந
திதிட்ரவாடசி சாம‌
ந காயாத்திரிய பர மந்ரா
ந மதுர்தெய்வதம் பரம்"

அதாவது தானியமும் தண்ணீரும் கொடுப்பதை விட கொடை இல்லை, துவாதிசியினை விட நல்ல நாள் இல்லை, காயத்திரியினை விட மேலான மந்திரம் இல்லை, தாயினை விட சிறந்த தெய்வம் இல்லை.

ஆம் "தாயிற் சிறந்த கோவிலும் இல்லை" என்றார் இந்துஞானி ஒளவையார்.

நிலம், ஆறு என சகலத்திற்கும் தாய் பெயர் இட்டு மகிழ்ந்த சமூகம் இது, தாயினை அது பெரும் இடத்தில் வைத்திருந்தது..

இது மத‌ அமைப்பும், தாய்க்கு கொடுத்த இடம் அலாதியானது, ராமாயணமும், மகாபாரதமும் அதனைத்தான் சொல்கின்றன. ராமனும், பாண்டவர்களும் அப்படி தாயினை தொழுதிருக்கின்றார்கள், தாயிடம் செய்த சத்தியத்திற்காக உயிரையே விட்டிருக்கின்றான் கர்ணன்..

சிற்றன்னையின் கோரிக்கைக்காக காடு புகுந்தான் ராமன், கண்ணனுக்கும் யோசதைக்குமான பந்தம் பாரதம் முழுக்க கிடக்கின்றது.

அதே பாரதம் ஒரு அன்னை எப்படி இருக்க கூடாது என காந்தாரியினையும் காட்டிற்று.

பரசுராமரிடமும் அது தாய்பாசமே தவத்தின் உச்சம் என்பதை காட்டிற்று.

இந்துமதம் அன்னையின் அருமையினை அவ்வளவு போதித்தது, "மாதா, பிதா, குரு, தெய்வம்" வரிசையில் அன்னையினை முதல் இடத்தில் வைத்தது.

தாய் தந்தையினை தோளில் சுமந்தவன் பெரும் முனிவரை விட வலிமையானவன் எனபதை ஸ்வரன் பாத்திரத்தில் காட்டிற்று.

அன்னையினை பணிபவன் பக்தி தன்னைவிட பெரிதென அகத்தியர் வாயாலே அது சொல்ல வைத்தது.

பாண்டுரங்கன் கதை முதல் பல கதைகளில் அன்னையின் பக்தி தவஞானிகளை விட சிறந்தது என சொல்லவைத்தது.

காரைக்கால் அம்மையாரை சிவனுக்கே தாய் என்றது, சிவனும் அவரை "தாயே" என அழைத்தார். ஆம் சிவனுக்கும் ஒரு பெண் தாயாக முடியும் என சொன்னது இந்துமதம்.

நாயன்மார்களின் சம்பந்தரை வளர்த்த இசைஞானியாரையும் அவர் தியாகத்தின் பலனால் அது "நாயன்மார்" என பெரும் இடம் கொடுத்தது.

இந்து புராணங்கள், இதிகாசங்கள், அதன் அடையாள வரலாறுகள் என எங்கு திரும்பினாலும் அன்னையின் பெருமையினை அது சொல்லிகொண்டே இருந்ததை கவனிக்கலாம்.

தாயின் பெருமையினை அவ்வளவு தெளிவாக சொன்ன அம்மதம், லோகமாதா என பெரும் சக்தியினை தாய்வடிவில்தான் கண்டது.

அக்கால இந்து சமூகம் தாயின் பெருமையினை சொல்ல பல ஏற்பாடுகளை செய்திருந்தது.

அக்காலத்தில் கண்விழித்த உடன் ஒருவன் தாயின் கால்களில் விழுந்து வணங்குவது இந்திய குடும்பங்களின் பழக்கவழக்கங்களில் ஒன்று. தாய் என்பவளை அந்த ஸ்தானத்தில் வைத்திருந்தது நமது பாரம்பரியம்.

இன்றும் தமிழகத்தில் மனைவியினை தவிர எல்லா பெண்களையும் அம்மா அல்லது தாயே என அழைப்பதுதான் பண்பாடு.

எல்லா பாசத்தினையும் வெறுத்து துறவியான பட்டினத்தார் கூட, தாய்பாசத்தில் உருகி அழியா பாடல்களை கொடுத்திருப்பதை கவனித்திருக்க முடியும்
கிராமங்களில் வயது குறைந்த சிறுமிகளையும் “தாயீ” என அன்போடு அழைப்பதுதான் நமது சிறப்பு.

இப்படியாக நம்மிடம் அன்னை பற்றி ஏதும் இல்லாதது போலவும், வெள்ளையன் மே 14ம் தேதி கொண்டாட சொன்ன பிறகுதான் நாம் மறக்காமல் அந்த நாளில் அன்னையினை நினைவு கூறவேண்டும் என்பதும் நகைப்புகுரியது.

இதற்கெல்லாம் பெரும் காரணம், கல்வியில் நமது பண்டைய நாகரீகங்களை தாங்கிய, பாரம்பரியங்களை தாங்கிய கல்வியினை கற்பிக்காதது.

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என ஒரு இந்து குழந்தை படித்திருக்குமானால் அது மே 14ல் மட்டும்ற்கு வியந்து நிற்காது, தமிழகம் இப்படி கொண்டாடாது.

ஒளவையும், இதர தமிழ் இந்து ஞானிகளையும் சமஸ்கிருத ஸ்லோகங்களையும் கற்றிருக்குமானால் இந்நாளை ஏளனமாக அது கடந்து செல்லும்
பண்டைய ஓலைசுவடிகள் மறைந்து நமக்கு அச்சிக்கு வந்தது மிக சொற்பமே, அவற்றையும் நாம் தொலைத்துகொண்டிருக்கின்றோம்.

அன்னையினை வணங்கினால் எல்லா ஆசீர்வாதமும் கிடைக்கும் என என்பதில் சந்தேகமே இல்லை.

இன்றும் பாருங்கள், தமிழக அரசியல் மற்றும் சகல துறைகளில் உச்சம் பெற்றிருக்கும் பலரினை பாருங்கள், கடவுளை வணங்கி இருக்கமாட்டார்கள், ஆனால் தாயினை வணங்குபவர்களாக இருப்பார்கள்.

தாயினை வணங்குபவனுக்கு எல்லாம் கைகூடும் என்பதற்கு வீரசிவாஜி பெரும் உதாரணம் , இன்னும் யார் யாரெல்லாமோ உண்டு.

இந்திய வரலாற்றில் தாய்நாட்டை நேசித்து நல்ல குழந்தைகளை தந்ததாய்களும், நாட்டை தன் குழந்தை போல் காத்து நின்ற எல்லா அன்னைகளும் வணங்கதக்கவர்கள்.

அவ்வரிசையில் பெரியநாயகி தேவி முதல் பலர் வருவார்கள், அப்பக்கா, சென்னம்மா, ராணி வேலுநாச்சியார், மொகலாயரை வீழ்த்தி அடித்த தாராபாய் என பலர் வருவார்கள்.

ஜீஜாபாய் அதில் தனித்து நிற்கின்றாள்.

நம் தலைமுறையில் தேசியகொடி அமைத்த காமா முதல் நேதாஜியோடு துப்பாக்கி தூக்கிய பெண்கள் வரை எத்தனையோ பேர் வருவார்கள்.

சர்ச்சைகள் இருந்தாலும் நாட்டிற்காக பல சவால்களை எடுத்த இந்திராவும் நினைவு.கூறதக்கவர்

இன்று இந்தியாவினை தலைநிமிர செய்திருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இங்கு தாயாக வாழ்த்தவேண்டியவர்

காமராஜரை நாட்டுக்கு தந்த சிவகாமி அம்மையார் போல மோடியினை தந்த அந்த தியாகி ஹீரா பென்னும் வணங்கதக்கவர்

ஒரு தலைவன் தன் நாட்டின் கலாச்சாரத்தை தான் சார்ந்த மதத்தின் பெருமைகளை உலகுக்கு சொல்பவனாக இருத்தல் வேண்டும்

அவ்வகையில் மோடி மிக சிறந்த தலைவர், அன்னையினை வணங்கி நம் கலாச்சாரத்தை உலகுக்கு ஓங்கி சொன்ன பெரும் தலைவர்

அந்த மாமனிதன் வழியில் தாய்மார்களை எல்லாம் வணங்கி, அதுவும் நாட்டுபற்றும் கலாச்சார இந்து அபிமானமும் கொண்ட ஜீஜாபாயின் சாயல் கொண்ட அன்னையினர் அனைவரையும் வணங்கி வாழ்த்துகின்றோம்

நாட்டிற்கு தேவையான நல்ல குழந்தைகளை சிவகாமி அம்மையார் போல, ஹிரா அம்மையார் போல அவர்கள் கொடுக்கட்டும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக