ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல...

2 posters

Go down

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Empty ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல...

Post by Abumubeen Mon Jan 25, 2010 3:22 pm

என்னுடைய மகள் 9 ஆம் வகுப்பு படிக்கிறாள்.​ காலையில் சுறுசுறுப்பாக எழுந்து எனக்கு உதவிகள் செய்ய வேண்டிய அவள்,​​ அப்படி இல்லாமல் சோம்பலுடன் படுத்தேயிருக்கிறாள்.​ கேட்டால் களைப்பாக இருக்கிறது என்கிறாள்.​ அவள் ஏன் அப்படி இருக்கிறாள் என்றே புரியவில்லை.​ அவளுடைய சோம்பலும் களைப்பும் மாற வழி என்ன?

பார்வதி,​​ தேவகோட்டை.



உங்களுடைய மகளுக்கு உடலில் சக்தி இருக்கிறது.​ ஆனால் வேலை செய்வதில் மனம் ஈடுபடவில்லை.​ அதாவது உடலால் செய்யும் வேலைகளில் வெறுப்பும்,​​ சுகமாக இருப்பதில் விருப்பமும் அவளுக்கு இருப்பதால்,​​ சோம்பல் உடலில் அதிகம் இருக்கிறது.​ ஆனால் அவளிடம் கேட்டால் களைப்பாக இருக்கிறது என்கிறாள்.​

களைப்பு என்பது ஒரு காரியத்தில் மனது ஈடுபாடு கொள்ளாமலிருப்பதும்,​​ அப்படி மனது அக்காரியத்தைச் செய்ய நினைத்தாலும்,​​ உடல் அதற்கு சம்மதிக்காமலிருப்பதாகும்.​ அம்மா அழைக்கிறாளே,​​ காரியங்களைச் செய்ய வேண்டுமே என்று மனம் நினைத்தாலும் உடல் பல காரணங்களால் செய்ய மறுப்பதும் களைப்பாகும்.​ அதனால் சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல.

மனிதர்களுக்கு மூன்றுவித காரணங்களால் உண்டாகலாம்.​

அவை
1.​ வியாதியினால்
2.​ ஆகாரக் குறைவினால் ,​​ உண்ட உணவைச் சரிவர உடல் உபயோகப்படுத்தாததால்
3.மனோ வியாதியால்.​


உங்களுடைய மகளுக்கு ரத்தப் பரிசோதனையில் சோகை நோய் உள்ளதா என்ற பரிசோதனையைச் செய்தீர்களா?​ ரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரை உபாதை உள்ளதா என்பதைக் கவனித்தீர்களா?​ மாதவிடாய் சரியாக ஏற்படுகிறதா?​ ஏனென்றால் இவற்றில் உடல் சக்தி குறைந்து களைப்பு ஏற்படுவது உண்டு.​ அவளுடைய வயதிற்கே உரிய மனப்போராட்டங்கள் என்ன?​ என்று அவளுடன் அமர்ந்து அம்மாவாகிய நீங்கள்தான் பேச முடியும்.​ அப்பாவிடம் கூற பெண் குழந்தைகள் கூச்சப்படும் என்பதால்,​​ இந்த விஷயத்தில் உங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது.​ அந்தந்த வியாதிகளைக் குணப்படுத்துவதால் களைப்பு நீங்கி விடும்.

போதுமான அளவு அவள் உணவை விரும்பிச் சாப்பிடுகிறாளா?​ படிப்பில் செலுத்தும் கவனம்,​​ உணவிலும் இருக்க வேண்டும்.​ அவள் உண்ணும் ஆகாரம்,​​ காய்கறி,​​ மாமிசம்,​​ அரிசி,​​ கோதுமை என்று எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் ஜீரண உறுப்புகள் என்ற ரசாயன சாலையில் உடலுக்குத் தேவையானால் பொருள்களாகப் பிரிக்கப்பட்டு,​​ தாது பரிணாமம் செய்யும் கல்லீரல் முதலிய ரசாயன சாலைகளில் ரசாயன மாற்றங்களை அடைந்து அந்தந்த அவயவங்களுக்குத் தகுந்த மாதிரி மாற்றப்பட்டு ரத்தத்தின் மூலமாகச் செலுத்தப்படுகிறது.​ சர்க்கரைச் சத்தின் மூலப் பொருளாகிய க்ளைகோஜின்,​​ தசை நார்கள் உழைக்கும் போது,​​ சர்க்கரையாக மாற்றப்பட்டு உபயோகப்படுத்தப்படுகிறது.​ அதன் கழிவானது,​​ ரத்தத்தில் சேர்ந்து வெளியே தள்ளப்படுகிறது.​ இவற்றை மாற்றுவதில் நமது மூச்சுக் காற்றாகிய பிராண வாயு மிகவும் உபயோகமாகிறது.

களைப்பு ஏற்படாதிருக்க மூச்சுப் பயிற்சி மிகவும் அவசியம்.​ மனிதர்களுடைய மூளை உடலின் எடையில் 2 சதவிகிதம் தானிருக்கிறது.​ ஆனாலும் அதற்கு 14 சதவீதம் ரத்தம் தேவைப்படுகிறது.​ 23 சதவிகிதம் பிராண வாயுவை உபயோகப்படுத்துகிறது.​ மற்ற அவயவங்களைவிட சர்க்கரைச் சத்தையும் அதிகமாக உபயோகிக்கிறது.​

ஆக மூளைக்குப் போதுமான ரத்தமோ,​​ பிராணவாயுவோ அல்லது சர்க்கரைச் சத்தோ இல்லாவிட்டால் மூளை தனது வேலையைச் சரிவரச் செய்ய முடியாமல் போகிறது.​ நரம்புகளினால் இயக்கப்படுகிற பல சுரப்பிக் கிரந்திகளும் வேலை செய்யாமல் போகிறது.​ அப்போது களைப்பு ஏற்படுகிறது.​ அதனால் பள்ளிகளில் யோகாசனப் பயிற்சியை நன்கு கற்றறிந்த வல்லுனர்களை நியமித்து மாணவ மாணவியருக்கு மூச்சுப் பயிற்சியைக் கற்றுத் தருவது காலத்தின் கட்டாயமாகும்.

பள்ளியில் ஏற்படும் சில விரும்பத்தகாத சம்பவங்களினால் உங்களுடைய மகளுக்கு பயம்,​​ சோகம் போன்றவை ஏற்படுகிறதா?​ ஏனென்றால் அவற்றின் மூலம் நம் உடலிலுள்ள பல கிரந்திகள் அதிகமாக இயங்கி சாரமற்றதாகவோ அல்லது இயங்காமலேயோ போய்விடும்பட்சத்தில்,​​ போதுமான சத்துக்கள் ரத்தத்தில் குறைந்து போய்விடுகிறது.​ அப்போதும் களைப்பு ஏற்படுகிறது.

தாதுக்களின் மிக உயர்ந்த சத்தான ஓஜஸ் எனும் தாது இதயத்தை இருப்பிடமாகக் கொண்டு,​​ உடலெங்கும் பரவி உயிர்நிலைத்திருக்க உதவுகிறது.​ இந்த ஓஜோ தாது,​​ பசி,​​ கோபம்,​​ அதிக சிந்தனை,​​ துயரம்,​​ சாகசம் போன்றவற்றால் குறைவடையும்.​ அப்போது வேலைகளில் உற்சாகம் உண்டாகாது.​ எப்போதும் களைத்தே உடல் காணப்படும்.​ அதனால் களைப்பு ஏற்படாமலிருக்க நல்ல உணவும்,​​ மன நிம்மதியும் இருக்க வேண்டும்.

உங்களுடைய மகள் சுறுசுறுப்பாக காலையில் எழ,​​ அவள் இரவு உணவிற்குப் பிறகு,​​ கற்றாழையை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்தாகிய "குமார்யாஸவம்' எனும் மருந்தை சுமார் 25-30 மி.லி.​ சாப்பிடச் சொல்லவும்.​ தொடர்ந்து சாப்பிடலாம்.​ பெண் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்ல மருந்தாகும்.
​ ​
avatar
Abumubeen
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 15/03/2009

Back to top Go down

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Empty Re: ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல...

Post by யுவா Mon Jan 25, 2010 3:47 pm

இதை அருந்த வயது வரம்பு உண்டா? என்ன? என்ன?




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் - கை வைத்திய முறைகள்
» ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை!
» ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கரைந்து போகும் சிறுநீரகக் கற்கள்!
» ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரைப்பை மந்தத்தை விரட்டும் கடுகு!
» ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum