புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_m10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10 
37 Posts - 51%
heezulia
துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_m10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_m10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_m10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_m10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_m10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_m10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_m10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_m10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10 
17 Posts - 2%
prajai
துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_m10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_m10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10 
9 Posts - 1%
jairam
துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_m10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_m10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_m10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_m10துணை வரும் நிழல் - சிறுகதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணை வரும் நிழல் - சிறுகதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 11, 2023 6:38 pm

யாழினி சிகிச்சை அறையிலிருந்து வரும் தன் அப்பாவிடம் “போலாமா?” எனக் கேட்டாள். மூர்த்தி பதிலேதும் சொல்லவில்லை. நிதானமாய் நடந்து வந்தவரின் தோள்களைத் தாங்கிப் பிடித்தபடி மருத்துவமனையின் வெளியே வந்தாள். வாசலில் காரருகே காத்திருந்த பிரபு வேகமாய் வந்து அவரைத் தாங்கலாக அழைத்துச் சென்று காரின் பின்னருக்கையில் அமர்த்தினான். மூர்த்தி கண்மூடி சாய்ந்துகொண்டார்.

முன்பு டாக்ஸியில் வந்து போய்க் கொண்டிருந்தாள். செலவுகள் பிதுங்கிய வேளையில், பிரபுவே இவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முன்வந்தான். சேலத்திலிருக்கும் அவன், ஈரோட்டுக்கும் கோவைக்குமாய் அவளுக்காக வந்து போகிறான்.

பிரபு வீடுவரை விட்டுவிட்டுக் கிளம்பிவிட்டான். படுக்கையில் மெதுவாக மூர்த்தியைப் படுக்க வைத்தாள் யாழினி. பயித்தம்பருப்புக் கஞ்சியை யாழினியின் அம்மா லட்சுமி கொண்டு வந்தாள். மூர்த்தி வேண்டாமென்று அரற்றியும், அவரைத் தன் மடியில் கிடத்தி, “கொஞ்சம் குடிங்க... வயிறு எரியும். லோ பிபி ஆயிடும்பா” என லட்சுமி குழந்தைக்குப் புகட்டுவதுபோல் அளித்தாள். தினமும் நடப்பதுதான்... குடி, நோய், வாதையின் கூத்து.

யாழினி பள்ளி கிளம்ப ஆயத்தமானாள். “அம்மா... பாத்துப்பேல்ல. நான் கிளம்பறேன்... அவசரம்னா கால் பண்ணு” என்றாள். லட்சுமி மூர்த்திக்கு உணவளிப்பதிலேயே மூழ்கியிருந்தாள். இவள் வீட்டை வெறுமனே சாத்திவிட்டு வெளியே வந்தாள். பள்ளி செல்லும் மனநிலை இல்லைதான். ஆனால் போய்த்தான் ஆகவேண்டும். விரித்த கம்பளம்போல் மஞ்சளேயென வெயில் ஊரைப் போர்த்தியிருந்தது. பன்னீர்செல்வம் பார்க் அருகே எங்கும் மனிதர் கூட்டம். கால் வைக்கும் இடங்களில்கூட கடைகள் பரந்திருந்தன. வண்டியை காலூன்றியபடியேதான் செலுத்தவேண்டியதிருந்தது. பெரிய மாரியம்மன் கோயிலைத் தாண்டியதும் காற்று மெதுவாய் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது.

யாழினிக்கு வெளியுலகில் மனம் லயிக்கவில்லை. வழியறிந்த கிடைகள் தாமே கூடடைவதுபோல் அவளுடைய வண்டி அதுவாகவே போய்க்கொண்டிருந்தது. அவளுடைய சிந்தனை முழுக்க அப்பாவைப் பற்றியே இருந்தது. நல்லவேளை சரியான சமயத்தில் ஈரோட்டுக்கு மாற்றல் கிடைத்தது. இல்லையெனில் அம்மா ஒண்டியாய்த் திண்டாடியிருப்பாள். “அதெப்படி மெட்ராஸ்ல இருந்து ஈரோட்டுக்கு ட்ரான்ஸ்பர் கிடைக்கும்?” என இனியன் கேட்டுக் கொண்டேதான் இருந்தான்.

அவன் யூகம் சரிதான். மூர்த்தியின் நலம் அடிக்கடி குன்றிப்போனவுடன், இனியனுக்குத் தெரியாமல் யாழினி ஈரோட்டிற்கு மாற்றல் கேட்டு விண்ணப்பித்தாள். இவ்வளவு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. அவனுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் சற்றும் பிடிக்கவில்லை. ஆனாலும் சுளையாய்க் கிடைக்கும் சம்பளத்திற்காக வழியனுப்பி வைத்தார்கள்.

தற்போதைய வீட்டுச் செலவுகளுக்கு அவள் சம்பளத்திலிருந்துதான் பணம் போகிறது. இன்னும் இனியனுக்குத் தெரியாது. “உங்கப்பா குடிச்சுட்டு குடலைக் கெடுத்துட்டு திமிருக்குன்னு அலைவாரு. நாம செலவு செய்யணுமா?” என முதல்முறை பணம் தந்தபோது கேட்டான்.

“அதெப்படி உங்க சம்பாத்தியம் உங்க பணம்; என் சம்பாத்தியம் மட்டும் நம்ம பணம்?” எனக் கேட்டதற்கு இரு நாள்கள் பேசாமல் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டான். இந்தப் படிப்பு, ஆசிரியர் வேலை எல்லாம் அப்பாவினால்தானே வந்தது. அவருக்குப் பணம் தரக்கூடாதாம். நல்லவேளை, சம்பாதிக்கிறோம். இல்லையெனில் நிலைமையை நினைக்கவே பயங்கரமாயிருந்தது. என்ன செய்திருப்பாள் அம்மா?

யாழினி பிறந்தபோது வந்த குடிப்பழக்கம். முப்பது வருடங்களாயிற்று. தொடர் புகைப்பழக்கம் வேறு. ஆனாலும் அறுபது வயது வரை சிறு தலைவலி, காய்ச்சலென்றுகூட படுத்ததில்லை. நெடுஞ்சாலைத்துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர். ஓய்வுக்குப் பின் மூர்த்தியின் மனதிற்குள் என்னென்னவோ கவலைகள். ஐந்து வயதிலேயே தன் அம்மாவை இழந்த வலியா? யாழினிக்கு செய்த திருமணமா? வயோதிகமா? நேற்றிருந்த அதிகாரப்பணி இன்றில்லை என்பதா? எதுவென்றே சொல்ல மாட்டார். குடித்தால் வாசற்படியிலமர்ந்து பழைய சிவாஜி பாடல்களைப் பாட ஆரம்பிப்பார். பின் தன்னிலை மறந்து அழ ஆரம்பித்துவிடுவார். லட்சுமிதான் வலுக்கட்டாயமாக அவரை வீட்டிற்குள்ளே இழுப்பாள். மறுநாள் இதைப்பற்றிக் கேட்டால் அப்படியொன்று நடக்கவேயில்லையென மறுப்பார்.

சென்னையிலிருந்த யாழினிக்கு லட்சுமி போன் செய்து அழுவாள்.

“ உங்கப்பாவ என்னன்னு கேளுடி. இப்பல்லாம் பகல்லேயும் குடிச்சிட்டு வர்றார். வண்டி சாவிய ஒளிச்சு வச்சா, ஆட்டோ வரவச்சுப் போறார். வீட்டைப் பூட்டி வச்சா கத்தி கலாட்டா பண்ணுறார். அக்கம்பக்கம்லாம் அசிங்கமா நினைக்க மாட்டாங்களா?”

இவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எத்தனையோ அறிவுரைகள் வழங்கியாயிற்று. அமைதியே உருக்கொண்டிருந்தவர் கேவலம் குடிக்காகத் தாண்டவமிட்டார். ஒரு நாள் திடீரென மயங்கி விழுந்தபோது அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தார்கள். நாடி குறைந்து அபாயகர நிலையிலிருந்தவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. சுற்றம் சூழ பிழைக்க மாட்டார் எனப்பட்டவர் இரு நாள்களில் ஜம்மென எழுந்துகொண்டார். எல்லாப் பரிசோதனைகளும் இயல்பு நிலையில் இருந்தன.

இனிக் குடிக்கக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் வீட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். ஒருமுறை மரணம் தொட்டதும் அவருக்கு எங்கிருந்தோ தைரியம் வந்துவிட்டது. முன்பைவிட அதிகம் குடிக்க ஆரம்பித்தார். மறுபடியும் அதே மயக்கம், அதே சிகிச்சை.

எதற்கும் இருக்கட்டுமென கோவையில் தீவிரப் பரிசோதனைகள் செய்தபோது, கல்லீரலிலிருந்து ரத்தம் கசிவது தெரிந்தது. கசியும் ரத்தத்தை நிறுத்த ஒரு ஊசியின் விலை இருபதாயிரம். அதையும் போட்டு சரி செய்த பின் வீட்டுக்கு வந்ததால் மீண்டும் குடி, மீண்டும் ரத்தக் கசிவு, மீண்டும் ஊசி, மீண்டும் செலவு எல்லாமே மீண்டும் மீண்டும் மீண்டும்... ஒரே இடத்திலேயே சுழன்றுகொண்டிருந்தது வாழ்வு.

வயிறு வீங்கிப் புடைக்க ஆரம்பித்தது. சிரோஸிஸ் என்றார்கள். வயிற்றில் தேங்கும் திரவத்தை வெளியேற்ற பதினைந்து நாள்களுக்கொருமுறை கோவை செல்ல வேண்டும். மூர்த்தியின் உயிரைத் தக்கவைக்க நிலங்களை விற்றார்கள். நகைகள் அடமானத்திற்குப் போயின. மூர்த்தியின் பென்ஷன்மீதுகூட லோன் வாங்கியாயிற்று. அப்படி இப்படியென சமாளித்துக்கொண்டிருந்த தன் அம்மாவை மேலும் தவிக்க வைக்காமல், யாழினி மாற்றல் வாங்கி சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு வந்தாள்.

மூர்த்தியைக் கோவை மருத்துவமனையில் சேர்த்தபோதுதான், பல வருடங்களுக்குப் பிறகு பிரபுவைப் பார்த்தாள். நலம் விசாரிக்க வந்தவன் மூர்த்தியைப் பாராமல் மருத்துவமனையின் வரவேற்பறையிலேயே நின்றுகொண்டான்.

“அப்பாவை மேலே வந்து பாரு பிரபு” என யாழினி கேட்டதற்கு “வேணாம்... அவர் என்ன பாத்தா கில்ட்டியா ஃபீல் பண்னுவாரோ இல்ல கோபப்படுவாரோ. இந்த நிலைமைல எதுக்கு அவர வருத்தப்பட வைக்கணும்?”

“நீ அவரை ஃபர்ஸ்ட் டைம்  மீட் பண்ண வந்தப்போ அவர் உன் முகத்தை ஏறெடுத்துக்கூட பார்க்கலை தெரியுமா? அப்போ அவருக்கு கோபம்லாம் எம்மேலதான். அவர் லவ்வுங்கற வார்த்தைக்கே எதிரி. அப்றம்தான் பையனோட ஊரு, பேரெல்லாம், வா. அதெல்லாம் எதும் நினைக்க மாட்டாரு” எனச் சொன்னபிறகே அவ்வப்போது வந்து போய் க்கொண்டிருக்கிறான்.

பள்ளி வந்தடைந்தபோது யாழினிக்கு மூச்சு இறுக்கிப்பிடித்தது. காலையில் மருத்துவர் “அவர் நாள்களை எண்ணுகிறார்” எனச் சொன்னதை எப்படி தன் அம்மாவிடம் சொல்லப் போகிறோம்? அப்பா இப்படி வலியால் வதைபடுவதைக் காட்டிலும் மரணம் மேல் எனப் பலமுறை நினைத்திருக்கிறாள். ஆனாலும் மருத்துவர் அறிவித்தபின் அவளுக்குள் ஏதோ ஒன்று உடைந்தது.

பள்ளியில் பாடம், மாணவர்கள் எனச் சுழன்றதால் யாழினியின் மனது சற்று தேவலா மென்றது. மாலையில் வீட்டிற்குள் நுழைந்ததும் அப்பாவின் அறைக்குச் சென்று பார்த்தாள். மெல்லிய விளக்கெரிய அமைதியாகப் படுத்திருந்தார். இவள் சத்தமிடாமல் வெளிவரும்போது, “அம்மா” என அழைத்தார். பிறகு ஜன்னலைப் பார்த்தார்.

ஜன்னல் கதவைத் திறந்து வைக்கச் சொல்கிறார். வாடகை வீட்டிற்குக் குடிவந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ரயில்வே காலனி அருகே இருந்த சொந்த வீடு அடமானத்தில் இருக்கிறது. வட்டி கட்ட அதனை வாடகைக்கு விட்டுவிட்டு, இந்தச் சிறிய வீட்டிற்கு வந்துவிட்டார்கள்.

இது புறாக்கூடு போலிருந்தாலும் இதுவே போதுமானதுதான். ஆனால் அது முப்பது வருடங்கள் புழங்கிய வீடு. மூர்த்தியின் சிறுதுளியில் பெருவெள்ளமான வீடு. பொட்டளவுகூட விரிசல் கிடையாது. ஒருமுறை சிட் அவுட்டின் கைப்பிடிச் சுவரை மாற்றிக் கட்ட இடிக்கும்போது எளிதில் உடைபடவில்லை. இடிக்க வந்த கூலியாட்கள் “யாருங்க இஞ்சினியர்?” என வியந்து கேட்டபோது, மூர்த்தி “இஞ்சினியர்லாம் ஏது? மேஸ்திரி வச்சுதான் கட்டினேன். நேரங்காலம் பாக்காம, நானே வந்து தண்ணி விடுவேன். சிமெண்ட்லாம் இறுகி கருங்கல் மாதிரி ஆயிடுச்சு” எனப் பெருமை பொங்கச் சொன்னார். அந்த வீட்டை அவ்வளவு எளிதாக விட்டு வந்திருக்க மாட்டார். மனதிற்குள் அழுது கொண்டுதானிருப்பார் என யாழினிக்குத் தெரியும்.

அரசு வேலை, கைகொள்ளா பென்ஷன், பிக்கல் பிடுங்கலில்லை. ஆனாலும் வெட்கக்கேடு. பென்ஷன், வீடு, நகை எல்லாமே அடமானம். ஆஹா அற்புதம், எங்கேனும் நடக்குமா? வேதனையாகச் சிரித்தாள் யாழினி.

“அம்மா வெள்ளிக்கிழம மத்தியானம் சென்னை கிளம்பறேன். சனிக்கிழமை பேங்க் வேலை இருக்கு. முடிச்சுட்டு சண்டே வந்துடறேன்” என்று அம்மாவிடம் சொன்னாள். அவள் வழக்கமாய்ப் போவதுதான். வாராவாரம் சென்றவள் இப்போது இரு வாரத்திற்கு ஒருமுறை செல்கிறாள்.

சொன்னதுபோலவே வெள்ளியன்று கிளம்பினாள். ரயிலின் ஜன்னலோரத்தில் யாழினி அமர்ந்திருந்தாள். நல்ல உச்சி வெயில். அவள் மனம் முழுக்கத் தவிப்பிருந்தது. அப்பா உயிருடன் இருக்கும்போதே வீட்டை மீட்டுவிட வேண்டும். பத்து லட்சம் கட்டினால் மீட்டு விடலாம். அவளுடைய சேமிப்பில் தேறும். ஆனால் சிக்கல் என்னவெனில் இனியனுடன் கூட்டுக் கணக்கில் பணமிருந்தது. அவனுக்குத் தெரியாமல் பணம் எடுக்க இயலாது.

சென்னையில் இருக்கும்போது, அலைபேசியில் இரு நிமிடம் சேர்ந்தாற்போல் தன் அம்மாவிடம் பேசினாலே இனியன் அம்மா ஆரம்பித்துவிடுவார். “புருஷன் வீட்ல தெரியாத பங்காளி செத்தாகூட ஒரு வருஷம் விலக்கு இருக்கு, இதே நம்ம பொறந்த வீட்ல அம்மா அப்பாவே போனாலும் மூணு நாள்தான் தீட்டு. அவ்ளோதான் பந்தம்” என பிறந்த வீட்டின் பிணைப்பை அறுப்பதுபோல் அடிக்கடி சொல்லும்பொழுது, இந்தக் காதிரண்டும் கேட்காமலிருந்தால் எத்தனை ஆனந்தமாக இருக்கும் என நினைத்திருக்கிறாள். போதாதற்கு மூர்த்தியின் குடிப்பழக்கம் தெரிந்த நாளிலிருந்து, அவர் பெயரைச் சொன்னாலே அருவருப்பாய் ஏதோ பூச்சியைப் பார்ப்பது போலதான் முகத்தை வைத்துக்கொள்கிறாள்.

எல்லாம் தெரிந்துதான் ஊருக்குக் கிளம்பினாள்.

ரயில் அடுத்த ஒரு மணி நேரத்தில் சேலம் வந்தடைந்தது. ஒன்றிரண்டு பேர் இறங்க எழுந்தார்கள். நடைபாதையில் பிரபு முன்னதாகவே காத்துக்கொண்டிருந்தான். கையில் தண்ணீர் பாட்டிலும், வாழைப்பழங்களும் இருந்தன. யாழினியைப் பார்த்ததும் வெளியிலிருந்தே ஜன்னல் வழியாக இரண்டையும் கொடுத்தான். அவனுக்கும் ஜன்னலுக்கும் குறுக்கே “வெள்ரீக்கா” எனக் கூவியபடி ஒரு கூடைக்காரப்பெண் அவனைப் பொருட்படுத்தாமல் சென்றாள். வெள்ளரிக்காய் வேண்டுமா என சைகையில் பிரபு கேட்டான். இவள் வேண்டாமெனத் தலையாட்டினாள்.

யாழினி பாட்டிலைத் திறந்து மடமடவென நீரைக் குடித்தாள். அவளிடமும் தண்ணீர் பாட்டில் இருந்தது.

“எப்ப திரும்பி வர்ற?”

“ஞாயித்துக்கிழமை. நாளைக்கு அரை நாள் பேங்க் இருக்கும்ல, அதான் போய் வேலைய முடிச்சுட்டு வரலாம்னு.”

“உன் வீட்டுக்காரர்ட்ட சொல்லியாச்சா?”

“சொல்லிட்டேன். ஆனா உண்மைய வேற மாதிரி சொன்னேன். ஒத்துக்கிட்டார்” எனச் சிரித்தாள்.

“என்ன சொன்ன?”

“இந்த வீடு எங்கப்பாவுக்கு அப்புறம் எனக்குதான். மெயின் ஏரியா. இடமே கோடிக்கு வரும். அப்பாக்கு இப்பவே அந்த வீட்டை எனக்கு எழுதித் தரணும்னு ஆசை. அதோட மீட்டாமப் போயிட்டோம்னா வீடும் கைவிட்டுப் போயிடும். அதனால வீட்டை மீட்டு எம்பேர்ல எழுத ஏற்பாடு பண்ணப்போறேன்னு சொன்னேன். அப்றம் யோசிச்சுட்டு சரின்னுட்டார்.”

பிரபு ஜன்னல் கம்பிகளின் நீலப் பூச்சை கை நகத்தால் சுரண்டினான். யாழினியின் கண்கள் அவனுடைய விரல்களுக்குத் தாவின. அவனுக்கு நீள விரல்கள். முன்னெப்போதோ, இருவரும் கைகோத்துப் பேசுகையில் அவனது உள்ளங்கையிலேயே அவளது மொத்தக் கையும் அடங்கிவிடும். தனிச்சையாக தன் உள்ளங்கையைத் தடவிக்கொண்டாள்.

“ஏன், உண்மைய சொல்லலாம்ல?” அவளுடைய நினைவுகளைக் கலைத்தான்.

“வீட்ட மீட்க பணம் வேணும்னு சொன்னேன்னு வச்சுக்கோயேன், அவங்க அம்மாவோ அக்காவோ எங்கப்பாக்கு கால் பண்ணி, `உங்க பொண்ண வச்சு எம்பையன்ட்ட பணத்தைக் கறக்கப் பாக்கறீங்களா’ன்னு கேப்பாங்க. அவங்களுக்கு அப்பா எந்த நிலையில இருந்தாலும் அக்கறையில்லை. ஆனா எனக்கு இருக்கு பிரபு.” சில நொடிகள் ஆழ்ந்து மூச்சுவிட்டாள்.

“இப்போதைக்கு எனக்கு சண்டை போடவும் தெம்பு இல்லை . எல்லாம் சுமுகமா முடியட்டும். அப்றம் பாத்துக்கலாம். எதைப் பாக்குறது சொல்லு? ஒரு பக்கம் ஸ்கூல், ஒரு பக்கம் கடன், இன்னொரு பக்கம் அப்பா, இதெல்லாம் போதாதுன்னு இனியன் வீட்ல ஒரு பக்கம்... எல்லாத்துக்கும் முட்டிட்டு நின்னா நமக்குதான் மண்டை வீங்குது” சிரித்தாள்.

“உறவுகள் தொடர்கதை! உணர்வுகள் சிறுகதை” என்ற, பார்வையற்றவரின் வசீகரக் குரல் ஒன்று பெட்டிக்குள் கேட்டதும் திரும்பிப் பார்த்தாள். யாழினியின் கண்களில் தானாகவே ஈரம் படர்ந்தது. அவருக்குக் காசைக் கொடுத்துவிட்டு, கண்ணிமைகளைத் துடைத்துக்கொண்டாள்.

பிரபு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அவளாகவே மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள். “டெனன்ட்கிட்ட அப்பாவோட நிலைமைய சொன்னேன். கடைசி காலத்துல அப்பா இந்த வீட்ல இருக்கணும்னு சொன்னதும் வீட்டை காலி பண்ணுறதா சொல்லிட்டாங்க.”

“ஏன் எல்லாத்துக்கும் அவசரப்படற. அவங்களும் போயிட்டா இன்ட்ரஸ்ட் எப்படிக் கட்டுவே? அப்றம் பெரிய தலைவலி ஆயிடும்.”

“இல்ல பிரபு, முடிவோடதா போறேன். பணமில்லாம திரும்ப மாட்டேன். அது நான் சம்பாதிச்ச பணம். எனக்கு எடுக்க உரிமை இல்லைன்னா ரிடிகுலஸ்” எரிச்சலோடு சொன்னாள்.

“புரிஞ்சுது.”

“இதுவரைக்கும் இவரு அவங்க வீட்ல இருக்கறவங்களுக்குச் செய்யறப்போ கேள்வி கேட்ருக்கேனா? அவரும் அப்படித்தானே என் விஷயத்துல இருக்கணும்?” கோபத்திலும் ஆதங்கத்திலும் முகம் சிவந்தது.

“ சரி, பொறுமையா டீல் பண்ணு. தரலைன்னா சொல்லு, அதான் நான் லோன் போட்டுத் தர்றேன்னு சொன்னேன்ல. நீதான் வேண்டாங்கிற.”

“எல்லாமே நீ பண்ணுறதுக்கு உன்னையா நான் கல்யாணம் பண்ணியிருக்கேன்?” சட்டென வெளிப்பட்ட வார்த்தைக்கு அவசரமாய் தன்னைக் கடிந்துகொண்டாள்.

பிரபு முகம் மாறியது. ரயில் பெட்டிக்குள் இருப்பவர்கள் தன்னை கவனிக்கிறார்களா எனப் பார்த்தாள்.

ரயில் சங்கு ஊதியது. நடைபாதையில் நின்றிருந்தவர்கள் அவசரமாய் ஏறத் தொடங்கினார்கள். வழியனுப்ப வந்தவர்கள் ரயிலிலிருந்து இறங்கினார்கள். மெதுவாய் வண்டி நகரத்தொடங்கியதும், அவன் கையசைத்து “பத்திரம்” என்றான். வெயிலில் அவனுடைய நெற்றி மினுமினுத்தது.

அப்போதுதான் யாழினிக்கு, இவ்வளவு நேரம் அவனை வெயிலில் நிற்க வைத்துப் பேசினோமோ என்று உறைத்தது. அவசரமாய் மன்னிப்புக் குறுஞ்செய்தி அனுப்பினாள். அவனிடமிருந்து சிரிப்பு பதிலாக வந்தது.

சென்னை வீட்டை அடைந்தபோது இனியன் மட்டும்தான் இருந்தான். அவனுடைய அம்மா இனியனின் அக்கா வீட்டிற்குச் சென்றிருக்கிறார். ஒவ்வொருமுறையும் நடப்பதுதான். அவரை யாழினியே தேடிச் சென்று அங்கு போய் பார்க்க வேண்டும். அது பரவாயில்லை. வந்தபின் இனியன் பணத்திற்கு ஏதேனும் மறுப்பு சொல்வானோ என பயந்தாள். மாறாக அவன் உற்சாகமாய் ஒத்துக்கொண்டது யாழினிக்கு நிம்மதியைத் தந்தது.

மறுநாள் வங்கிக்குச் சென்று பணத்தை யாழினியின் சம்பளக் கணக்கில் மாற்றிக்கொண்டார்கள். அவள் மாமியாரைச் சென்று பார்த்துவிட்டு, வீட்டில் சமைத்து உண்டு மறுநாள் கிளம்பும்வரை எல்லாமே இயந்திரத்தனமாய் நடந்தன. ஒருபோதும் அனுசரணை, பரிவு, தோள் தராத, ஏன், இரக்கம் காட்டாத அன்பு என்று உண்டா? அப்படியொன்றைதான் இனியன் அன்பென்கிறான் காதல் என்கிறான். அந்தக் காதல் அவளிடம் கண்ணாமூச்சிதான் காட்டுகிறது. கையில் அகப்பட்டதேயில்லை. எங்கு குறை, எதைச் சரி செய்யவேண்டும் எனத் திக்குத் தெரியாமல் ஐந்து வருட மணவாழ்க்கையில் திண்டாடினாள்.

“போனதும் முத வேலையா ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணுற வழியப் பாரு. உங்கொப்பாக்கு அப்படியாச்சு, நொப்படியாச்சுன்னு கதைலாம் சொல்லிட்டு இருக்காத. உனக்காகத்தான் வேலைலாம் விட்டுட்டு பேங்க் வந்தேன்” என அவள் ரயில் ஏறும் வரை சொல்லிக்கொண்டேயிருந்தான்.

ரயிலில் அமர்ந்ததும் அசதியில் உறங்கிப்போனாள். மழை பெய்த ஓரிடத்தில் விழித்துக்கொண்டாள். சோவெனப் பெய்து, சடாரென நின்று, மீண்டும் தபதபவெனப் பெய்யத் தொடங்கியது. தன்னியல்பைத் தொலைத்த மழை! ஏனைய பயணிகள் மழையையே பார்த்தபடி வந்தார்கள். அவரவருக்கென நினைவுகள். ரயில் சேலத்தில் நின்றபோது ஜன்னலுக்கு வெளியே பிரபுவை மனம் தேடியது. மெல்ல இருட்டியிருந்தது.

இரவில் யாழினி வீடு வந்து சேர்ந்ததும், மூர்த்தி தானே எழுந்து நடக்க ஆரம்பித்ததாக லட்சுமி மகிழ்ச்சியாகச் சொன்னாள். “போதும்! இப்படி நடமாடற அளவுக்கு இருந்தாவே போதும். உங்கப்பாவை நானே பாத்துக்குவேன். பாவம் மனுஷன். வீட்ல ஒரு நிமிஷம் தங்காம அங்க இங்கன்னு போயிட்டு இருந்தவரு” எனப் புலம்பினாள்.

படுக்கையில் சாய்ந்தமர்ந்திருந்த தன் அப்பாவை சென்று பார்த்தாள். பல நாள்கள் கழித்து உற்று நேருக்கு நேராய்ப் பார்த்தாள். இரும்பு போலிருந்த மனிதரைப் புழுப்போல் மாற்றியிருந்தது குடி. கன்னம் ஒடுங்கி, கண்கள் மட்டும் பிதுங்கித் தெரிந்தன. உள்ளே என்னென்னமோ வதைக்கிறது என யாழினியால் புரிந்துகொள்ள முடிந்தது. வாதையின் வீச்சில் குரல் உடைந்து பிசிறிட்டது. மூச்சின் ஒலி ஓங்கியிருந்தது. ஆனால் லட்சுமி புரிந்து கொள்ளாமல் ‘முன்னேறிக் கொண்டு வருகிறார்’ என்கிறாள்.

குடியை நீக்கிவிட்டுப் பார்த்தால் மூர்த்தியிடம் எந்தக் குறையும் சொல்லமுடியாது. அத்தகையவர் அவள் காதலுக்கு எதிர்ப்பு சொல்வாரென அவள் நினைத்தே பார்க்கவில்லை. எவர் தூற்றினாலும மறுவார்த்தை பேசாமல் வந்து விடுவார். ஏதோ ஒரு மனஸ் தாபத்தில் அவருடைய உடன்பிறந்த அக்கா, “உன் பொண்ணு எவனையோ இழுத்துட்டுப் போவா, இது நடக்கத்தான் போகுது, பாத்துட்டே இரு” என்று சாபம் இட்டி ருக்கிறார். அந்தச் சாபம் மட்டும் பலித்திடக் கூடாதென்பதில் தீவிரம் காட்டினார். அப்போது யாழினி தோற்றுப்போனாள்.

“ஆடும் வரைக்கும் ஆடி யிருப்போம் தங்கமே ஞானத் தங்கமே! ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞானத்தங்கமே” என எங்கோ பாடல் ஒலித்தது. எழுந்து சென்று வெளிக்கதவைச் சாத்தி னாள். இப்போது கேட் கவில்லை. அகச் சூழலுக்கேற்றாற்போல் புறத்தில் இப்படிப் பாடல்களோ, தத்துவார்த்த பிரசங்கங்களோ கேட்பது அவளுக்குப் பல முறை நிகழ்ந்தேறியிருக்கிறது. அவளுக்கு இன்னொரு நிகழ்வும் நினைவுக்கு வந்தது

அவளுக்குத் திருமணம் முடிந்த அன்று மண்டபத்திலிருந்து தனிப்பேருந்தில் கணவன் வீட்டாரோடு புகுந்த வீட்டிற்குப் புறப்பட்டாள்.

“நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டுவிட்டு அரளிப் பூச்சூடி அழுதபடி போற புள்ள” என்ற பாடல் அருகிலிருந்த ஒரு பேக்கரி ஸ்பீக்கரில் ஒலித்தபோது, அவளை மீறி அழுகை பீறிட்டு வந்தது. பிறந்த வீட்டையெண்ணி அழுகிறாளென உள்ளிருந்தவர்கள் நினைத்துக்கொண்டார்கள். சற்று தூரம் கடந்ததும் அப்பாடலின் பல்லவியைக் கேட்கக் காதைக் கூர்தீட்டினாள். “ராசாத்தி... என் உசுரு என்னுதில்ல” என ஒரு பிரிவின் ஓலம் சன்னமாகக் கேட்டபடியே இருந்தது. இன்னுமிருக்கிறது.

மறுநாள் காலையிலிருந்தே எப்போது பத்திரப்பதிவு என இனியன் கேட்கத் தொடங்கிவிட்டான். எரிச்சலில் அவனுடைய அழைப்பை நிராகரிக்கத் தொடங்கினாள். அடுத்தடுத்த நாள்களில் வங்கியின் லோன் பணத்தை அடைப்பதற்கான எல்லா வழிமுறைகளையும் செய்தாள். அந்த வார இறுதியில் மீண்டும் அவள் அப்பாவைக் கோவைக்கு அழைத்துச் செல்ல வேண்டியதிருந்தது. டாக்ஸியில்தான் அழைத்துச் சென்றாள். வழக்கமாகச் செல்லும் மருத்துவமனைதான். அங்கு வரும் ஏனையோர் குடி எனும் மாயச் சுழலில் சிக்கிக் கசடானவர்கள். தேங்காய் உடைபடுவதுபோல் ஒவ்வொரு உயிரும் அடுத்தடுத்து இறந்ததை அவள் கண்ணெதிரே பார்த்திருக்கிறாள். வயது முப்பத்தைந்திற்குள்தான் தொட்டிருப்பார்கள். ஆனால் குடும்பத்திற்கு ஏகக் கடனை விட்டுச் சென்றிருப்பார்கள்.

வயிற்றிலிருந்த திரவத்தை வெளியேற்றியதும் மூர்த்திக்கு கொஞ்சம் ஆசுவாசமாகியிருந்தது. வீட்டிலிருந்தே கஞ்சி செய்து கொண்டு வந்திருந்தாள். வெளி உணவு சாப்பிட்டால் உடனே தொற்று ஏற்பட்டுவிடும். கொஞ்சம் தெம்பாகப் பேசினார். மீண்டும் ஈரோட்டுக்குக் கிளம்பினார்கள். சில மணி நேரத்தில் ஈரோட்டை அடைந்த வண்டி, தற்சமயம் குடியிருந்த இடத்தைத் தாண்டி ரயில்வே காலனி நோக்கிச் சென்றது.

மூர்த்தி கண்மூடிப் படுத்திருந்தார். வண்டி நின்றதும் மூர்த்தியை எழுப்பினாள்.  அவருடைய சொந்த வீடருகே வண்டி நின்று கொண்டிருந்தது. எழுந்தவர் புரியாமல் யாழினியைப் பார்த்தார்.

“என்ன பாக்கறீங்க. உங்களுக்கு சர்ப்ரைஸ்பா... வீட்டை மீட்டுட்டோம். இனிமே இங்கதான் இருப்போம்” என்றாள். லட்சுமி அவரைக் கண்டதும் உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் விட்டாள். “இந்தக் கழுத நம்மகிட்டகூட சொல்லாம என்ன பண்ணியிருக்கா பாத்தீங்களா? எனக்கே இப்பதாங்க தெரியும். நீங்க கிளம்பினதும் வீட்டை காலி பண்ண பிரபுவும் ஆளுங்களும் வந்து நிக்கறாங்க. இவளுக்கு போன் பண்ணிக் கேட்டா, சிரிச்சுட்டு உண்மைய சொல்றா” என மகிழ்வில் திணறினாள்.

அவரை இருவரும் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு உள்ளே வந்தார்கள். மூர்த்திக்கு சில்லென்ற மார்பிள் தரையில் பாதம் பட்டவுடன் மகிழ்ச்சியில் கைகால்கள் நடுங்கின.

அவரைப் படுக்கையறையில் சாய்ந்து படுக்க வைத்தாள்.

“எப்படிம்மா?” என வலுவிழந்த குரலில் கேட்டார்.

“என்னோட சேவிங் பணம்தாம்பா... முன்னாடியே சொல்லியிருப்பேன். ஆனா உங்கள சந்தோஷத்துல திக்குமுக்காட வைக்கணும்னு நினைச்சேன். அதான் இந்த சர்ப்ரைஸ். நாம ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப வீடு காலி பண்ணி இங்க செட் பண்ண பிரபு ஹெல்ப் செஞ்சிட்டுப் போனான்” எனச் சொன்னதும், அவளுடைய கைகளை நடுங்கியபடி பிடித்தார். கண்களிலிருந்து கண்ணீர் வந்துகொண்டே இருந்தது. உதட்டில் சிரிப்பும் தவழ்ந்தது.

அவருடைய வலி தாண்டி மின்னல் கீற்றுப் போல் ஒரு மகிழ்ச்சியை யாழினி பார்த்தாள். இது போதுமென்றிருந்தது. யாழினி ஜன்னல் கதவைத் திறந்து வைத்தாள். எட்டு மணி ரயிலோசை தூரத்தில் கேட்டது. மழை ஈரத்தில் ஊறிய மரங்களின் வாசனை மெல்ல வீட்டிற்குள் நுழைந்து வீடெங்கிலும் அமைதியைப் பரத்திக்கொண்டிருந்தது. இந்தக் கணத்தில் எவரோ, எங்கோ தனக்கே தனக்காய் ஒரு பாடல் தந்தால் தேவலாமென்றிருந்தது யாழினிக்கு.

விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக