Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
4 posters
Page 9 of 18
Page 9 of 18 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 18
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
First topic message reminder :
வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.
எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.
அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.
மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்
வியர்வை நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?
வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.
எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.
அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.
மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்
T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
மரவள்ளிக்கிழங்கு
இந்தியாவில் ஒரு பிரதான உணவாக #மரவள்ளிக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை வேகவைத்து சாப்பிட சுவையாக இருக்கும். இதில் உள்ள பல நன்மைகள் நம் உடலுக்கு வல்லமைக் கொடுக்கக்கூடியது.
* மரவள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது.
* மரவள்ளிக்கிழங்கு மாவில் தோசை, அடை, உப்புமா போன்ற எல்லா வகை சிற்றுண்டிகளும், இனிப்பு கார வகைகளும் செய்யலாம்.
* அதிக அளவில் மாவுச்சத்து மிக்க மரவள்ளிக்கிழங்கு, உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு, உடலுக்கு ஆற்றலைத் தரும்.
* கரு சுமக்கும் தாய்மார்கள் சிலருக்கு, கருவில் உண்டாகும் மழலைகளின் ஊனம் தவிர்க்க, மரவள்ளிக்கிழங்கு மருந்தாகிறது.
* பாதிப்புடைய நடுத்தர வயதினர், வாரமிருமுறை மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்டுவர, எலும்புகளின் உறுதி அதிகரிக்கும்.
* ஞாபக மறதி வியாதியை குணப்படுத்தும். உடலில் நீரின் அளவை சரியாக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும்.
* ரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை கரைக்கிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
சக்கரவள்ளி கிழங்கு
நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் சக்கரவள்ளி கிழங்கில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் உள்ள வைட்டமின் பி-6 என்ற வைட்டமின் இதய நோயை சரி செய்கிறது என்றும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் தேவையற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது என்றும் கூறப்படுகிறது.
மேலும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க சக்கர வள்ளிக்கிழங்கு உதவுகிறது என்றும் வலுவான எலும்புகள் வலுவான இதயம் ஆகியவற்றுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
தைராய்டு சுரப்பி, பற்கள், எலும்புகள், நரம்புகள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை காக்கவும் சக்கரவள்ளி கிழங்கில் உள்ள வைட்டமின் டி உதவுகிறது. சக்கரவள்ளி கிழங்கை வேகவைத்த அல்லது சிப்ஸ் செய்து சாப்பிடலாம் அதில் உள்ள சத்துக்கள் முழுவதும் உடலுக்கு கிடைக்கும்.
#சக்கரவள்ளி_கிழங்கு
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
விட்டமின் ஈ - உணவுகள்
கண் பார்வையை ஆரோக்கியம், தசை வளர்ச்சி உள்ளிட்ட பல உடல் ஆரோக்கியத்திற்கு விட்டமின் ஈ சத்து அவசியமானது. விட்டமின் ஈ சத்தை அள்ளி வழங்கும் உணவுகள் பற்றி அறிவோம்
#விட்டமின்_ஈ சத்து நிறைந்த பழ வகைகளில் முக்கியமானது கிவி பழம்.
வேர்க்கடலையில் உள்ள விட்டமின் ஈ சத்து உடலை உறுதிப்படுத்துகிறது.
சூரியகாந்தி எண்ணெய்யிலும் விட்டமின் ஈ உள்ளதால் அளவாக உணவில் பயன்படுத்தலாம்.
சூரியகாந்தி பூ விதைகளை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் விட்டமின் ஈ சத்தை அதிகரிக்கலாம்.
மாம்பழத்தில் விட்டமின் ஈ சத்து உள்ளதால் மாம்பழம் சாப்பிடுவது நல்லது.
மீன் வகைகளில் நிறைந்துள்ள விட்டமின் ஈ சத்து மற்றும் பிற சத்துக்கள் கண் பார்வையை வலுப்படுத்துகின்றன.
#Vitamin-E
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
பச்சரிசியை விட புழுங்கல் அரிசி நல்லதா?
நெல்லை நேரடியாக வெயிலில் உலர்த்தி ஆலையில் அரைத்து அதன் உமியை நீக்கினால் அது #பச்சரிசி என்பதும், நெல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் வேகவைத்து வெயிலில் உலர்த்தி பின்னர் உமியை நீக்குவதால் கிடைப்பது புழுங்கல் அரிசி என்பதும் தெரிந்ததே.
நெல்லை வேக வைக்கும் போது அதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்கள் அரிசிக்குள் திணிக்கப்படுவதால் புழுங்கல் அரிசி, பச்சரிசியை விட அதிகம் ஊட்டச்சத்து உள்ளதாக கருதப்படுகிறது.
மேலும் #புழுங்கல்_அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என்றும் வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.
எனவே நீரிழிவு நோயாளிகள் உள்பட அனைவருக்கும் பச்சரிசியை விட புழுங்கல் அரிசி சிறந்தது என்று கூறப்படுகிறது
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
கொத்தவரங்காய்
சிறிதாக விரல் போல நீண்டிருக்கும் #கொத்தரவரங்காய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. கொத்தவரங்காயை ஜூஸாக குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அறிந்து கொள்வோம்
கொத்தவரங்காயில் விட்டமின் ஏ, சி, கால்சியம், புரதம், இரும்புச்சத்து, போலேட் நிறைவாக உள்ளது.
கொத்தவரங்காயில் கிளைசிமிக்ஸ் இண்டெக்ஸ் மிகக் குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.
கொத்தவரங்காய் விதைகளில் உள்ள நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கொத்தவரங்காய் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.
கொத்தவரங்காய் சாப்பிடுவதால் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
கொத்தவரங்காயில் உள்ள போலேட் மற்றும் இரும்புச்சத்து கர்ப்பிணி பெண்களுக்கு அவசியமான சத்துக்களாகும்.
#Kothavarangai
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
தெளிவான கண் பார்வை வேண்டுமா?
கண் பார்வை ஆரோக்கியம் என்பது எல்லாருக்கும் அவசியமான ஒன்று. கண்பார்வையை ஆரோக்கியமாக வைக்க சில எளிய வழிகளை இங்கே காணலாம்.
நல்ல கண் பார்வை பெற தினசரி 7 – 8 மணி நேரம் நன்றாக தூங்குவது அவசியம். இதனால் கண்கள் நல்ல ஓய்வை பெறுவது ஆரோக்கியமாக இருக்கும்.
மொபைல், கணினி உள்ளிட்ட டிஜிட்டல் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் டிஜிட்டல் திரை வெளிச்சத்தை பார்ப்பது கண் விழித்திரைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
தினமும் இருவேளை உள்ளங்கைகளால் கண்களை மூடிக் கொண்டு சில நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.
கண் பார்வையை மேம்படுத்தும் மீன், கேரட், பப்பாளி போன்ற உணவுகளை அவ்வபோது எடுத்துக் கொள்ள வேண்டும்.
கண்ணை கூசும் வெயில் வெளியே சென்றால் கூலிங் க்ளாஸ் போன்றவற்றை அணிந்து கொள்ள வேண்டும்.
இரவு நேரங்களில் முக்கியமாக நள்ளிரவு நேரங்களில் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
தினசரி இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது உடல் சூட்டை குறைப்பதுடன், கண் நரம்புகள் சிறப்பாக செயல்பட உதவும்.
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
வாதநாராயணன் கீரை
முடக்குவாத நோய்களை தீர்க்க கை வைத்தியத்தில் வாத நாராயணன் கீரையை அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. வாதநாராயணன் இலைகள், கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. ஆதிநாராயணன், வாதரசு, வாதமடக்கி போன்ற பெயர்களாலும் இது குறிப்பிடப்படுகின்றது. தமிழகமெங்கும், கிராமங்களில், வேலிகளில், சாலையோரங்களில் வளர்க்கப்படுகின்றது. ரயில் நிலையங்களின் பாதையோரங்களிலும் இவை பரவலாகக் காணப்படும். இதன் இலை, பட்டை ஆகியவை மருத்துவப் பயன் மிகுந்தவை.
#வாதநாராயணன் இலையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், வாதவலி, வீக்கம், கட்டிகள் குணமாகும். வாரம் இரண்டு முறை பயன்படுத்தலாம். மேலும், இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி, வீக்கம், கட்டிகள் மேல் பற்றிட குணமாகும். கை, கால் குடைச்சல், வலி குணமாக வாதநாராயணன் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, தினமும் காலையில் மட்டும் குடித்துவர வேண்டும்.
வாத நோய்களைக் குணமாக்குவதோடு பித்த நீரை அதிகரிக்கும் நாடி நடையைப் பலப்படுத்தும் உடல் வெப்பத்தை அதிகரிக்கும். மேலும், வீக்கத்தைக் கரைக்கும். அதிகமாக உட்கொண்டால் கழிச்சலுண்டாக்கும்.
ருமட்டாய்டு ஆர்த்தரைட்டீஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு காலை நேரத்தில் வலியுடன் மூட்டுகளில் இளஞ்சூடு இருக்கும். இவர்கள் வாத நாராயண இலையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவந்தால் நோய் தீவிரமும் வலியும் குறைவதை உணரலாம்.காலை வேளையில் எழுந்ததும் வாதநாராயணன் இலையை கடுகு எண்ணெயுடன் கலந்து மைய அரைத்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் வீக்கம், இளஞ்சூடு உணர்வு தணியும்.
வாத நாராயண இலையை நீரில் ஊற வைத்து அந்த நீரை மூட்டுகள் இருக்கும் இடங்களில் பொறுமையாக ஊற்றி வந்தால் குடைச்சல் குறையும். மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு தக்க நிவாரணி வாதநாராயணன் கீரை. இந்த வாதநாராயணன் கீரைக் குழம்பை செய்து சாப்பிட்டு வந்தால், பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக அமையும்.மழைக்காலம், வெயில்காலம் என்று எல்லா நேரங்களிலும் சாப்பிடலாம். நரம்புகளை பலப்படுத்தும். கை, கால் முடக்கத்தை போக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். மூட்டு வலிக்கு சிறந்த வலி நிவாரணி, மலக்கட்டை நீக்கி, குடலை சுத்தப்படுத்தும்.
#வாதநாராயணன்_கீரை
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
குடற்புழுக்களை நீக்கும் உணவுகள்
வயிற்றில் குடல் பகுதியில் உருவாகும் புழுக்கள் உடல் நலனுக்கு கேடு விளைவிப்பவை. ஆனால் இவற்றை ஆரோக்கியமான இயற்கை உணவுகளை கொண்டு நீக்க முடியும். அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.
கற்பூரவள்ளி எண்ணெயை எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்து வர #குடற்புழு நீங்கும்.
கிராம்பு இரண்டை தினசரி மென்று தின்று வர குடற்புழுக்களை அழிக்கும்.
தினமும் காலை வெறும் வயிற்றில் பச்சை கேரட்டை கடித்து சாப்பிட்டு வர குடற்புழு நீங்கும்.
ஒரு கப் புதினா சாற்றுடன், எலுமிச்சை சாறு கறுப்பு உப்பு கலந்து சாப்பிட்டு வர குடற்புழு பிரச்சினை நீங்கும்.
வெதுவெதுப்பான பாலுடன் ஆமணக்கு எண்ணெய் 2 ஸ்பூன் கலந்து குடித்தால் குடற்புழுக்கள் மலத்தில் வெளியேறிவிடும்.
தினசரி ஒரு பல் பூண்டை மென்று சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் #குடற்புழுக்கள் அழியும்.
எலுமிச்சை விதைகளை பொடியாக்கி நீருடன் கலந்து பருக குடற்புழு நீங்கும்.
#Tapeworm #hookworm #pinworm
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
பச்சை ஆப்பிள், சிவப்பு ஆப்பிள் எதை சாப்பிடலாம்?
உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குவதி ஆப்பிள் முக்கியமானது. தற்போது சந்தைகளில் #சிவப்பு_ஆப்பிள் #பச்சை_ஆப்பிள் கிடைக்கும் நிலையில் எதை யார் சாப்பிடலாம் என அறிவோம்.
பச்சை, சிவப்பு இரண்டு ஆப்பிள்களிலும் புரதம், விட்டமின், தாதுக்கள் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.
சிவப்பு ஆப்பிளை விட பச்சை ஆப்பிளில் சர்க்கரை குறைவு என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை ஆப்பிள் சிறந்தது.
ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உடலில் அதிகரிக்க சிவப்பு ஆப்பிள்கள் சிறப்பானவை.
பச்சை ஆப்பிளில் உள்ள ஃப்ளாவனாய்டுகள் நுரையீரலை பலப்படுத்தி ஆஸ்துமா அபாயத்தை குறைக்கிறது.
பச்சை, சிவப்பு இரண்டு ஆப்பிள்களுமே செரிமான சக்தியை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சினைகளை தீர்க்கிறது.
பச்சை ஆப்பிளில் சிவப்பு ஆப்பிளை விட கால்சியம் சத்து கூடுதலாக இருப்பதால் எலும்பிற்கு வலு அளிக்கிறது.
உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு புளிப்பு சுவை கொண்ட பச்சை #ஆப்பிள் சிறந்தது.
Page 9 of 18 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 18
Similar topics
» சில மருத்துவ குறிப்புகள்-
» மருத்துவ குறிப்புகள்
» சில மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்
» சில மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்
Page 9 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum