Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
4 posters
Page 8 of 18
Page 8 of 18 • 1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 18
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
First topic message reminder :
வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.
எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.
அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.
மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்
வியர்வை நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?
வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.
எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.
அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.
மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்
T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
கர்ப்பிணிகள் மேக்கப் போட்டால் கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு
மேக்கப் போடுவது என்பது பெண்களுக்கே உரிய ஒரு கலை என்றாலும் #கர்ப்பிணிகள் மேக்கப் போடுவதில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேக்கப் பொருட்களில் உள்ள ரசாயன கலவைகள் வயிற்றில் இருக்கும் கருவை பாதிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் எனவே மருத்துவரிடம் ஆலோசனை செய்து மேக்கப் போட்டுக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக செயற்கை நிறங்கள் மற்றும் அமிலம் கொண்ட மேக்கப் பொருட்களை தவிர்ப்பது நல்லது என்றும் செயற்கையான கெமிக்கலில் இருக்கும் சில பொருள்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நெயில் பாலிஷ் போன்ற ரசாயன கலவையை பயன்படுத்தினால் நாம் சாப்பிடும் போது அதில் உள்ள ரசாயன கலவை வயிற்றில் செல்ல வாய்ப்பு இருக்கிறது. அப்போது கர்ப்பமாக இருக்கும் பெண்களின் கருவில் உள்ள குழந்தைக்கு இது பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் பெரும்பாலும் மேக்கப் போடுவதை தவிர்ப்பது நல்லது என்றே கூறப்படுகிறது
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
மாம்பழத்தோடு இதையெல்லாம் சேர்த்து சாப்பிடக் கூடாது.
சம்மர் சீசனில் பெரும்பாலும் பலர் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் மாம்பழம் சாப்பிடும்போது உடன் சிலவற்றை சாப்பிடுவது உடல்நல பாதிப்பை ஏற்படுத்தலாம். அதுகுறித்து காண்போம்.
மாம்பழமும் பாகற்காயும் எதிரெதிர் சுவை கொண்டவை என்பதால் ஒரே சமயத்தில் இரண்டையும் சாப்பிடக் கூடாது.
மாம்பழம் சாப்பிட்டு உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. 15 நிமிடங்கள் கழித்து குடிப்பது நல்லது
மாம்பழம் சூடு என்றால், தயிர் குளிர்ச்சியானது. எனவே இரண்டையும் ஒன்றாக சாப்பிடக் கூடாது.
மாம்பழம் சாப்பிட்ட பிறகு கார்பனேற்ற குளிர்பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
காரமான உணவுகளுடன் இனிப்பான மாம்பழத்தை சேர்த்து சாப்பிடுவது செரிமான பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும்.
சாலட் தயாரிக்கும்போது மாம்பழம், தர்பூசணியை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
வேப்பிலை வைத்தியம்
பசுமையான ஒரு மர வகைதான் வேம்பு. இது உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த மருத்துவத்தன்மை கொண்ட தாவர இனம். வேப்பமரம் ஆயுர்வேதத்தில் இயற்கையின் மருந்தகமாக அறியப்படுகிறது. வேப்பமரத்தில் மிகவும் நன்மை பயக்கும் ரசாயன மூலக்கூறுகள் நிறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வேப்பமரத்தின் பட்டை முதல் வேப்ப இலைகள், பூ, பழம், விதை மற்றும் வேர் வரை அனைத்துப் பகுதிகளும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதில் பயன்படுத்தப்படுகின்றன.
தினமும் வேப்பிலையை உட்கொண்டால், அது உடலிலுள்ள புற்றுநோய் செல்களின் எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் வைத்திருக்க உதவுகிறது. மூலிகை இலைகளில் மிகவும் சக்திவாய்ந்த ‘வேம்பு’ கருவேம்பு, மலைவேம்பு, சர்க்கரை வேம்பு என மூன்று வகையானது. இதன் பூ, காய், பழம், ஈர்க்கு, எண்ணெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, பிசின் அனைத்தும் மிகுந்த மருத்துவப் பயன் கொண்டவை. மேலும் இந்த மரத்திலிருந்து வீசும் காற்றும் மருத்துவ தன்மை உடையது. |
* வேப்பிலையையும், ஓமத்தையும் சம அளவு எடுத்து அரைத்து நெற்றிப் பொட்டில் பற்று போட்டால் மூக்கில் ரத்தம் வடிவது நின்று விடும்.
* வேப்பம் பூவை கஷாயமாக்கி அருந்த அஜீரணக் கோளாறு நீங்கி, நல்ல பசி ஏற்படும்.
* வேப்பம் பூவையும், எண்ணெயையும் சேர்த்து அரைத்து கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் எவ்வளவு கொடிய கட்டிகளானாலும் உடைந்து குணமாகும்.
* தோலில் வரும் எந்த நோயானாலும் வேப்பெண்ணெய் தடவி வர குணமாகும்.
* வேப்பெண்ணெயை ஆசன வாயில் தடவி வர ஆசனவாய் வெடிப்பு மறைந்து விடும்.
* வேப்பங் கொழுந்தை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அந்நீரை தினமும் முகம் கழுவிவர முகப்பரு நீங்கும்.
* வேப்பம் பூவை வதக்கி துவையலாக்கி சாப்பிட பித்தம் குணமாகும்.
* வேப்பிலையையும், மஞ்சளையும் சேர்த்து அரைத்து பித்தவெடிப்பு, நகச்சுற்றுக்கு போட நல்ல பலன் கிடைக்கும்.
* வேப்பிலையை நன்கு அரைத்து சாறு எடுத்துக் கொண்டு, இதனுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து உறங்க செல்லும் முன் அரை டம்ளர் அளவு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
* வேப்பம் பூவையும், மிளகையும் நெய்யில் வறுத்து பொடி செய்து சூடான உணவுடன் உண்ண நாவுக்கு ருசியும், நல்ல பசியும் உண்டாகும்.
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
இலந்தை பழம்
#இலந்தை பழம் சாப்பிட மட்டுமே உகந்தது என நினைக்கிறோம் ஆனால் அதன் மரம் இலை பூ பழம் எல்லாமே சுவையோடு கூடிய பயன்தரவல்லது. உடல் உஷ்ணத்தை நீக்கவல்ல மருத்துவ குணம் அதிகம் கொண்டது.
உடல் உஷ்ணத்தாலோ அல்லது வேறு உபாதைகளால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் இலந்தை மரத்தின் கொழுந்து இலையை மூன்று கைப்பிடி அளவு எடுத்துநீாில் சுத்தம் செய்து அந்த கொழுந்துடன் சிறிய வெங்காயம், மற்றும் சீரகத்தை கலந்து பாத்திரத்தில் போட்டு இரண்டு டம்ளா் தண்ணீா் விட்டுஅரை டம்ளராக நன்கு சுண்ட காய்ச்சி மூன்று வேளை சாப்பிட்டுவர வயிற்றுப் போக்கு குணமாகும்.
கை கால் மற்றும் உடலில் வெட்டுக்காயம் பட்டால் இலந்தை இலையுடன் மஞ்சள் பொடி சோ்த்து அரைத்து புண்களின் மீது தடவி வர புண்கள் ஆறிவிடும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலந்தை பொடியை நன்கு தண்ணீா் விட்டு பிசைந்து சிறிய சிறிய அடைகளாக தட்டி வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொண்டு தேவையான எலந்தை அடையை கரைத்து நாட்டு சா்க்கரை கலந்து பச்சடி யாக செய்து காரக்குழம்பு சாதத்துடன் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம் நல்ல சுவை மட்டுமல்ல பித்த நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
கடுமையயான வெயில் காலங்களில் சிலருக்கு எாிச்சல் ஏற்படும் அதற்கு தீா்வு இலந்தை பூவை அம்மியில் தண்ணீா் விட்டு அரைத்து உடம்பில் தேய்த்து வர எாிச்சல் அடங்கும்.
புளிப்பான இலந்தைப் பழத்தை சாப்பிடக் கூடாது இனிப்பான பழத்தை மட்டுமே சாப்பிடவேண்டும்.
இலந்தை பழத்தில் ஏ விட்டமின் சத்து உள்ளது அதோடு கால்சியம் சத்தும் நிறைந்தது.
எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க வல்லது பற்களும்உறுதியாகும் இலந்தை பழம் சாப்பிட்டு வர மாா்பு வலி யை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது
இலந்தைப் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல அதே நேரம் பழத்தை சாப்பிட்டதும் உடனே தண்ணீா் குடிக்கக் கூடாது. |
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
குறிஞ்சாக்கீரை
நம்மில் பலரும் #குறிஞ்சாக்கீரை பற்றிக் கேள்விப்பட்டிருக்கவே மாட்டோம், பார்த்திருக்கவும் மாட்டோம், ஆனால் இதன் மருத்துவப் பயன்கள் அளப்பரியது.
சர்க்கரை நோயாளிகளுக்கு இக்கீரை ஒரு வரப்பிரசாதம். இன்சுலீன் ஊசி போட்டுக் கொள்பவர்கள் கூட தொடர்ச்சியாக இக்கீரை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு குறைவதைக் காணலாம்.
சர்க்கரை நோயாளிகள் பலருக்கும் ஏதாவது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கும், இக்கீரை கசப்பு சுவை உடையது என்பதால் இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இனிப்பு சுவையின் மீது நாட்டம் போய் விடும்
சிறு குறிஞ்சான், பெரும் குறிஞ்சான் என இக்கீரை இரு வகைப்படும்.இரண்டுமே மருத்துவக் குணங்கள் உடையவைதான். இது பார்ப்பதற்கு வெற்றிலை போல தோற்றம் கொண்டிருக்கும், வேலிகளில் தானாகவே விளையக் கூடியவை.
ப்ரீ (PRE DIABETES) டையபடிக் என சொல்லபப்டும் ஆரம்ப நிலை சர்க்கரை நோயாளிகள் இக்கீரை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வரவே வராது. ஃபாஸ்ட்டிங் பிளட் சுகர் லெவர் (Fasting blood sugar level)அதாவது காலை வெறும் வயிற்றில் ரத்தம் எடுத்து சோதனை செய்யும்போது அதன் அளவு 100 முதல் 124 வரை இருந்தால் அது ப்ரீ டயபடிக் என சொல்லப்படும், இவர்களுக்கு மூன்று வருடங்கள் முதல் ஏழு வருடங்களுக்குள் சர்க்கரை நோய் வர வாய்ப்பு இருக்கிறது என அர்த்தம். இவர்கள் இக்கீரை சாப்பிடுவது மிகவம் நல்லது.
நேரடியாக இக்கீரை சாப்பிட பிடிக்காதவர்கள் தண்ணீரில் கீரையைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து ஆறிய பின் சூப் போல குடிக்கலாம் இது குடல் புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது.
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
கடுக்காய்
கடுக்காயில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி1, பி2, சி, டி, ஈ, கே, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், தயாமின், பாஸ்பரஸ், தாமிரம், மாங்கனீஸ், செலினியம், அயோடின், குரோமியம், நிக்கல், கோபால்ட், வெனடியம், போரான், புளோரின், குளோரின் மற்றும் சோடியம், குளோரைடு ஆகியன அடங்கியுள்ளன.
#கடுக்காய் இருதயக் கோளாறுகளின் அபாயத்தைக் குறைக்கிறது. கடுக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதயம் தொடர்பான பல்வேறு நோய்களைத் தடுக்கலாம்.
கடுக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை மேம்படும். இது கண்புரை, கிளௌகோமா போன்றவற்றை குணப்படுத்துகிறது.
2 கிராம் கடுக்காய்ப் பொடியை வெது வெதுப்பான தண்ணீருடன் மாலையில் அருந்தி வந்தால், மஞ்சள் காமாலை நோய் நீங்கும்.
கடுக்காய், மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
கடுக்காய்ப் பொடியைக்கொண்டு பல் துலக்கினால், ஈறு வலி குணப்படுவதோடு ஈறில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்; பல்லும் உறுதியாகும்.
கடுக்காய் அனைத்து வகையான சுவாச பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது. ஆஸ்துமா, ஜலதோஷம், இருமல் மற்றும் காய்ச்சல், மூச்சுக்குழாய் அலர்ஜி போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது.
கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள புண்களை ஆற்றிடும் வல்லமை பெற்றது.
கடுக்காய் அதிக அளவு புரதம் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது, இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுவதோடு, முடி உதிர்வையும் தடுக்க உதவுகிறது.
கடுக்காய் பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத, பித்த, கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.
கடுக்காய்ப் பொடியை சம அளவு நெய்யில் வறுத்து, இந்து உப்புடன் கலந்து 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், அல்சர் குணமாகும்.
கடுக்காயில் உள்ள ஆக்சிஜனேற்ற தன்மை மனிதனின் நினைவுத்திறன், கவனம், அமைதி, விழிப்புணர்வு ஆகியவற்றை அதிகரிக்கின்றது. மூளையின் பதற்றத்தை குறைக்கிறது.
கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
கருப்பு கொண்டைக்கடலை
கருப்பு கொண்டை கடலையில் அதிக அளவு இரும்பு சத்து இருப்பதால் அதை சாப்பிடுபவர்களுக்கு எந்த நோயும் அண்டாது என்று கூறப்படுகிறது.
கருப்பு கொண்டை கடலை கர்ப்பிணிகளுக்கு அவசியமான ஒன்று என்றும் இதில் உள்ள வேதிப்பொருள் குழந்தை வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறப்படுகிறது.
வெள்ளை கொண்ட கடலையை விட கருப்பு கொண்டை கடலையில் நார்ச்சத்து அதிகம் என்பதும் அதேபோல் சர்க்கரை அளவு குறைவு என்பது குறிப்பிடப்பட்டது.
சர்க்கரை நோயாளிகள் இதை தொடர்ச்சியாக சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும். மேலும் கருப்பு கொண்டைக்கடலை ரத்த சோகையை தடுக்க உதவுகிறது என்றும் இதில் உள்ள இரும்பு சத்து சோடியம் உள்ளிட்ட கனிமச்சத்துக்கள் செரிமான கோளாறுகளை தீர்க்க உதவும் என்றும் கூறப்படுகிறது.
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
மஞ்சள்
மருத்துவ குணம் நிறைந்ததாக மஞ்சள் அறியப்பட்டாலும் கூட சில பிரச்சினை உள்ளவர்கள் மஞ்சளை உணவில் சேர்ப்பது நல்லதல்ல. அது குறித்து தெரிந்து கொள்வோம்.
மஞ்சளில் மருத்துவ குணங்கள் நிறைந்திருந்தாலும் உணவில் 3 கிராம் அளவுக்குள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
பித்தப்பை பிரச்சினை உள்ளவர்கள் மஞ்சள் அதிகளவு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
மஞ்சளில் உள்ள குர்குமின் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் கோளாறு உள்ளவர்கள் #மஞ்சள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் மஞ்சள் உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தலாம்.
உணவு தவிர்த்த பிற ஆரோக்கிய, முக அழகு செயல்பாடுகளுக்கு மஞ்சளை தாராளமாக பயன்படுத்தலாம்.
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
பப்பாளி
மருத்துவ குணங்கள் நிறைந்த, பலரும் விரும்பிச் சாப்பிடும் பழங்களில் ஒன்று, #பப்பாளி
* பப்பாளிப் பழத்தில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது. இதில் உள்ள வைட்டமின், 'ஈ' குடல் பகுதியில் கேன்சர் வராமல் தடுக்கிறது
* பப்பாளிப் பழத்தை தினமும் சாப்பிட்டு வர, பித்த சம்பந்தமான நோய்கள் விலகும்
* இப்பழத்தை தவறாமல் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால், மாலச்சிக்கல் அறவே நீங்கி விடும்
* பப்பாளிப் பழத்தை தேனில் தொட்டு சாப்பிட்டு வர, தாய்ப்பால் தாராளமாக சுரக்கும்
* குழந்தைகளுக்கு அடிக்கடி பப்பாளிப்பழம் கொடுத்து வந்தால், அவர்கள் அழகும், ஆரோக்கியமும், புத்திக் கூர்மையும் கொண்டவர்களாக வளர்வர்
* பப்பாளிப் பாலை வெங்காயச் சாறுடன் கலந்து தடவ, வேர்க்குருவுக்கு விடை கொடுத்து விடலாம்
* பழுத்த பப்பாளிப் பழத்துண்டு ஒன்றை எடுத்து முகம், கழுத்து, பாதப் பகுதிகளில் தேய்த்து, பயத்த மாவு அல்லது கடலை மாவு கொண்டு தேய்த்துக் கழுவி வர, வறண்ட தோலும் மினுமினுக்கும்
* சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள், பப்பாளிப் பழத்தை தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், விரைவில் குணம் அடையலாம்
* அல்சர் தொல்லை உள்ளவர்கள், பப்பாளிப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் பிரச்னை தீரும்
* இரண்டு, மூன்று பப்பாளிப் பழத் துண்டுகளை தினசரி சாப்பிட்டு வர, நினைவாற்றல் மேம்படும்
* மாலைக்கண் நோயின் அறிகுறி தென்படும்போதே, பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வந்தால், அக்குறையைத் தடுக்கலாம்
* நான்கு நாட்கள் தொடர்ந்து பப்பாளிப் பழத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் பல் வலி, பல்லில் ரத்தம் வடிதல், பல் ஈறுகளில் வரும் நோய் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்
* பப்பாளியில் உள்ள, 'பேராக்ஸ் நேஸ்' என்ற தாதுப்பொருள், உடலின் தேவையற்ற கொழுப்பைக் குறைக்க உதவும்
* பப்பாளிப் பழத்தைக் கூழாக்கி, வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், கரும்புள்ளிகள் மற்றும் சொர சொரப்புத் தன்மை மாறி, முகம் பளபளப்பாக மாறி விடும்.
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
கொய்யா இலை
கொய்யா இலை சாறு உலகின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய மருத்துவத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்த இலைகள் வைட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் க்வெர்செடின் போன்ற ஃபிளாவனாய்டுகளின் சக்தியாக இருக்கின்றன.
கொய்யா இலை டீ எப்படி தயாரிப்பது?
நான்கு பெரிய கொய்யா இலைகளைக் கழுவவும் (ஒருவருக்கு பரிமாற).
ஒரு கடாயில் ஒரு கப் தண்ணீரை சூடாக்கி அதில் கொய்யா இலைகளை சேர்க்கவும். ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். இலைகளை வடிகட்டி அரை எலுமிச்சை பழத்தை தண்ணீரில் பிழியவும்.
சுவைக்கு ஏற்ப சிறிது தேன் சேர்க்கவும். நன்றாக கலக்கவும். ஆரோக்கியமான கொய்யா இலை தேநீர் ரெடி.
பலன்கள்
கொய்யா இலைச் சாறு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மேம்படுத்தும் மற்றும் நீண்ட கால ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு உதவுவதுடன், இன்சுலின் எதிர்ப்பை நிர்வகிக்கும் பண்புகளும் இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
உணவுக்குப் பிறகு கொய்யா இலை தேநீர் அருந்துவது, குளுக்கோஸ் உறிஞ்சுதலைத் தணிப்பதன் மூலம் ரத்தச் சர்க்கரைக் கூர்மையைக் குறைக்கிறது.
செரிமானத்தின் போது கார்போஹைட்ரேட்டுகளை குளுக்கோஸாக மாற்றும் பல நொதிகளையும் கொய்யா இலைகள் தடுக்கின்றன, இது டைப்-2 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Page 8 of 18 • 1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 18
Similar topics
» சில மருத்துவ குறிப்புகள்-
» மருத்துவ குறிப்புகள்
» சில மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்
» சில மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்
Page 8 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum