by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
No user |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
Page 5 of 18 • 1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 18
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
வியர்வை நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?
வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.
எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.
அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.
மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்
T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
இளநரையை போக்கும் எளிய வழிகள்
*இஞ்சி சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெயை தலையில் தேய்த்து வர முடி செழித்து வளரும்.
*அவுரி இலை அல்லது அவுரி பொடியை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வர இளநரை வருவதை தடுக்கலாம்.
*நெல்லிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, தேங்காய் எண்ணெயில் கருப்பாக மாறும் வரை வதக்கி எடுத்து வைத்துக் கொண்டு தலைமுடிக்கு மசாஜ் செய்து வர இளநரை மற்றும் முடி உதிர்தல் தடுக்கப்படும்.
*இளநரை முடி உதிர்தல் மற்றும் வழுக்கைக்கு வெங்காயச் சாறு பெரிதும் உதவுகிறது.
*கருமையான மற்றும் பளபளப்பான முடியை பெற தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவி மசாஜ் செய்துவர விரைவில் இளநரை மாறும்.
*வேகவைத்த கொய்யா இலை தண்ணீரை தலையில் தடவி மசாஜ் செய்து வர இளநரையை தடுக்கலாம்.
*முசுமுசுக்கை இலையின் சாறு மற்றும் நல்லெண்ணெயை சம அளவு சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு, வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மாறும்.
*அன்றாடம் உண்ணும் உணவில் கறிவேப்பிலையை சேர்த்து வந்தால் இளநரை மறையும். இளநரையை மாற்றும் சக்தி பசுவெண்ணெய்க்கு உண்டு. அதனால் இதனுடன் கறிவேப்பிலைப் பொடியை சேர்த்து சாப்பிட இளநரை மறையும்.
*தண்ணீரில் உலர்ந்த நெல்லிக்காயை இரவு ஊறவைத்து, அந்தத்தண்ணீரை தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மாறும். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை அரைத்து, காய்ச்சி தினமும் தேய்த்து வர இளநரை மறையும்.
*கறிவேப்பிலையை நன்றாக அரைத்து தினமும் வெறும் வயிற்றில் ஒரு கவளம் சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் இளநரையைப் போக்கலாம்.
*நரைமுடி கருப்பாக மாற முளைக்கீரை உதவும். எனவே முளைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடலாம்.
*செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து, அதனை தலையில் தடவி, அரை மணிநேரம் ஊற வைத்து குளித்து வந்தால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும், இதனை வாரத்துக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
குறிச்சொற்கள் #நரைமுடி #இளநரை |
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
எந்தெந்த பழங்களை தோலுடன் சாப்பிடலாம்
பழங்களில் சில பழங்கள் தோலுடன் சாப்பிடும் வகையிலும் சில பழங்கள் தோலை எடுத்து விட்டு சாப்பிடும் வகையிலும் இருக்கும் என்பது தெரிந்ததே. மாம்பழம் சப்போட்டா திராட்சை கொய்யா ஆப்பிள் ஆகிய பழங்கள் தோலுடன் சாப்பிடுவது நல்லது
அதேபோல் பழங்களை பிழிந்து வடிகட்டி சாற்றை மட்டும் குடிக்கும்போது அதில் உள்ள நார்ச்சத்து விலக்கப்படும் என்றும் எனவே பொதுவாக பழங்களை ஜூஸ் போட்டு குடிக்காமல் பழமாக சாப்பிடுவது மிகவும் நல்லது என்றும் கூறப்படுகிறது.
பழங்களில் உள்ள முக்கிய சத்துக்கள் இதய நோயாளிகளுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் தேவைப்படுகிறது என்பதால் பழமாகவே சாப்பிட வேண்டும் என்றும் குறிப்பாக ஆப்பிள் பழத்தை தோலுடன் சாப்பிட்டால் தான் முழு அளவு சத்துக்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
கொய்யா பழத்தின் தோலில் சருமத்திற்கு நல்லது செய்யும் வைட்டமின்கள் இருப்பதால் கண்டிப்பாக தோலுடன் தான் சாப்பிட வேண்டும் என்றும் அதேபோல் சப்போட்டா பழங்களின் தோல், காயங்களை ஆற்றும் குணம் உள்ள வேதிப்பொருட்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாழைப்பழத் தோலில் கால்சியம் அமிலம் ஆகியவை இருந்தாலும் வாழைப்பழத்தை யாரும் தோளுடன் சாப்பிடுவதில்லை. ஆனால் வாழைப்பழத்தை தோளோடு சாப்பிட்டால் மூட்டு வலி கட்டுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
திராட்சை பழத்தை தோலுடன் சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் முழுவதுமாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
பூண்டு யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் பூண்டு மருத்துவ குணம் மிக்கது. அதேசமயம் பூண்டை சிலர் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். யாரெல்லாம் பூண்டு சேர்க்கக்கூடாது என பார்க்கலாம்.
பூண்டு சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு வெகுவாக குறையும் என்பதால் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் கார உணவுகள், பூண்டு சேர்த்த உணவுகள் தவிர்ப்பது நல்லது
பூண்டில் உள்ள அலிசின் கல்லீரல் நச்சை அதிகரிக்கும். இதனால் கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்
பூண்டில் உள்ள சல்பர் காரணமாக அதிகமாக சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படலாம்.
பச்சை பூண்டை சாப்பிடுவதால் சிலருக்கு தலைவலி ஏற்பட்டும் வாய்ப்பு உள்ளது.
அதிகம் பூண்டு சாப்பிடுவது நெஞ்சு எரிச்சல், செரிமான கோளாறை ஏற்படுத்தலாம்.
அலர்ஜி உள்ளவர்கள் பூண்டு சாப்பிடுவதால் தோல் அரிப்பு, தடிப்பு உண்டாகும் வாய்ப்பு உள்ளது.
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
தைராய்டு
#தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் உணவு வகைகள் எடுத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். கோடை காலங்களில் சரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதுகுறித்து காண்போம்..
தைராய்டு உள்ளவர்கள் பொதுவாக ஓவனில் சமைக்கப்பட்ட உணவுகள், பீட்சா போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
பரங்கிக்காய் விதையில் உள்ள ஜிங்க் சத்து தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு முக்கியமான சத்தாகும்.
கருவேப்பிலையில் உள்ள காப்பர் சத்து தைராக்சின் உற்பத்தியை ஊக்குவிப்பதால் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தண்டுக் கீரையில் உள்ள செலினியம் சத்து டி4-ஐ டி3 ஆக மாற்றுவதால் தண்டுக் கீரை எடுப்பது நல்லது.
கோடை காலத்தில் குளிர்ச்சி அளிக்கும் சப்ஜா விதைகளை எடுத்துக் கொள்வதால் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.
புளிக்காத தயிர் சாப்பிடுவதன் மூலம் அயோடின் சத்தயும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறலாம்.
பாசிப்பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் தைராய்டு பிரச்சினைகளை குறைக்கும் நல்ல உணவுகளாகும்
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
முதுகு வலி
கால்சியம் குறைபாடு காரணமாக முதுகு வலி வருவதால் கால்சியம் அதிகம் உள்ள பால் பொருட்களை சாப்பிட வேண்டும். குறிப்பாக பால் தயிர் வெண்ணை பாலாடை கட்டி போன்ற பொருட்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல் தினை, உளுந்தம் பருப்பு பீன்ஸ் எள் போன்றவற்றை சாப்பிட்டால் புரதச்சத்து இரும்பு சத்து ஆகியவை கிடைக்கும். மேலும் அன்னாசி, திராட்சை ப்ளூபெர்ரி போன்ற பழங்களை சாப்பிட்டால் #முதுகுவலி வருவது தவிர்க்கப்படும்.
மேலும் இஞ்சி துளசி இலவங்கப்பட்டை ஆகியவற்றையும் மஞ்சள் போன்றவையும் சாப்பிட்டால் முதுகு வலி குறையும். வைட்டமின் சி மற்றும் பி12 நிறைந்த காய்கறிகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக கத்திரிக்காய் முருங்கைக்காய் ஆகியவற்றை சாப்பிட்டால் முதுகு வலி குறையும்..
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
பல பயனுள்ள மருத்துவ குறிப்புகள்.
நன்றி சிவா.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
பெருஞ்சீரகம்
அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் நல்ல மருத்துவ குணம் வாய்ந்தது #பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பு. அதன் அளவில்லா பயன்களை குறித்து அறிவோம்
பெருஞ்சீரக தண்ணீரை குடிப்பதால் உடலில் ஹார்மோன் சமநிலை ஏற்படுகிறது.
கோடை காலத்தில் ஏற்படும் செரிமான கோளாறு பெருஞ்சீரக தண்ணீர் குடித்தால் குணமாகும்.
பெருஞ்சீரகத்தை மென்று தண்ணீர் குடித்தால் வாயு தொல்லை பிரச்சினைகள் தீரும்.
பெருஞ்சீரகத்தில் உள்ள ஆண்டிபிராஸ்மோட்டிக் மாதவிடாய் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கிறது.
பெருஞ்சீரகத்தில் உள்ள விட்டமின் சி உடலில் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகிறது.
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் பெருஞ்சீரகம் மென்று வாய் கொப்பளிக்க துர்நாற்றம் நீங்கும்.
பெருஞ்சீரகத்தில் உள்ள அனெத்தோல் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
மாரடைப்பு பரம்பரை வியாதியா?
ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தால் அவரது வாரிசுகளுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் #மாரடைப்பு அதே போல் வாரிசுகளுக்கு 30% வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
குடும்பத்தில் உள்ள பெற்றோருக்கு மாரடைப்பு வந்தால் அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு 30 சதவீதம் மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் வாழ்க்கை முறையை சரியாக கட்டமைத்துக் கொண்டால் மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆரோக்கியமான உணவுகள், சரியான உடற்பயிற்சி ஆகியவை எடுத்துக்கொண்டு மது புகை ஆகியவற்றை தவிர்த்து வந்தால் மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் அவ்வப்போது உடல் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்ற சாதனங்களை பயன்படுத்தி மாரடைப்பு வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த வாழ்க்கை முறையை கடைப்பிடித்து மகிழ்ச்சியாக இருந்தால் மாரடைப்பு நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுவதுண்டு
Page 5 of 18 • 1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 18
» மருத்துவ குறிப்புகள்
» சில மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்