ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Today at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Today at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Today at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Today at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Today at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Today at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Today at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Today at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Today at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:57 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» இதுதான் பக்தியோகம்…
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:57 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 8:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 7:56 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Aug 17, 2024 5:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 4:54 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Sat Aug 17, 2024 4:35 pm

Top posting users this week
ayyasamy ram
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்

4 posters

Page 16 of 18 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18  Next

Go down

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Empty மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்

Post by சிவா Sun May 07, 2023 1:06 am

First topic message reminder :

வியர்வை நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?


வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.

எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.

அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.

மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Empty Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்

Post by சிவா Tue Sep 26, 2023 11:55 pm

கத்தரிக்காய்


காய்கறிகளில் வித்தியாசமான நிறம் கொண்டதும் சத்துமிக்கதுமாக கத்தரிக்காய் உள்ளது. கத்தரிக்காய் சிலருக்கு ஒவ்வாமையாக இருந்தாலும் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அதுகுறித்து பார்ப்போம்.

கத்தரிக்காயை வேகவைத்து தேனுடன் கலந்து மாலையில் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வருவதோடு, தூக்கமின்மைக்கும் நல்ல மருந்தாகும்.

#கத்தரிக்காய் சூப், சாதத்துடன் பூண்டு கலந்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை குறையும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கத்தரிக்காயில் செய்யப்பட்ட பொருளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

கத்தரிக்காய் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது மற்றும் இதய பிரச்சனைகளைத் தடுக்கிறது.

கத்தரிக்காயை வறுத்து தோல் நீக்கி சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரைப்பை பிரச்சனை, அமிலத்தன்மை, சளி போன்ற பிரச்சனைகள் குறையும்.

கத்தரிக்காய் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் களிம்புகள் மற்றும் டிங்க்சர்கள் மூல நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன.

கத்தரிக்காய் கறி மூலம் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.


மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Empty Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்

Post by சிவா Tue Sep 26, 2023 11:56 pm

உடல் அசுத்தங்களை வெளியேற்ற


உடல் உள்பகுதிகளில் சேரும் கழிவுகளை வெளியேற்றுவது உடல் ஆரோக்கியமாக இருக்க அவசியமானது. உடல் நச்சுக்களை வெளியேற்றும் ஆயுர்வேத பொருட்கள் குறித்து காண்போம்.

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் கலந்த கலவையான திரிபலா சூரணம் நச்சுகளை வெளியேற்றும் சிறந்த மருந்து.

திப்பிலியை பொடியாக செய்து தேநீரில் கலந்து குடிப்பதால் ரத்தம் சுத்தம் அடையும்.

இயற்கையாக கிடைக்கும் தேனில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் உள்ளது. இது பாக்டீரியாவுக்கு எதிரான செயல்திறன் கொண்டது.

முருங்கை கீரை பவுடரை சூப் செய்தோ, உணவில் கலந்தோ சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்

நோய் எதிர்ப்பு திறன் கொண்ட மஞ்சளை உணவில் எடுத்துக் கொள்வதால் கல்லீரல் சுத்தமடையும்.

ஆயுர்வேத பொருளான அஸ்வகந்தா ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் செரிமான சக்தியை அதிகரிக்கும்.

தேங்காய் எண்ணெய் கொண்டு வாய் கொப்பளிப்பதால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து வாய் சுத்தமாகும்.


மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Empty Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்

Post by சிவா Tue Sep 26, 2023 11:57 pm

சீந்தில்


ஆயுர்வேதத்தில் #சீந்தில் தாவரத்திற்கு தனி இடம் உண்டு. ஆயுர்வேத சாஸ்திரம் அதன் பலன்களை அற்புதம் என்கிறது. அவை என்னவென்று தெரிந்து கொள்வோம்.

சீந்திலில் உள்ள சிறப்பு குணங்கள் பெண்களுக்கு வயதான சருமம், புள்ளிகள், பருக்கள் மற்றும் முகத்தில் உள்ள சுருக்கங்களைத் தடுக்கும்.
சீந்திலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது, இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும்.

உடலின் செல்கள் சேதமடைவதைத் தடுக்கவும், நோய்களைத் தவிர்க்கவும் சீந்தில் கொடி நன்றாக வேலை செய்கிறது.

அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சீந்தில் இலை சாறு குடித்தால் செரிமான பிரச்சினைகள் குறையும்

சீந்தில் பொடியை வெல்லத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரண பிரச்சனை நீங்கும்.

சீந்தில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் டைப் 2 நீரிழிவு நோயைக் குறைக்க உதவுகிறது.

இருமல், சளி, டான்சில்ஸ் போன்ற சுவாச பிரச்சனைகளை குறைக்கும் தன்மை சீந்திலுக்கு உள்ளது.

மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள் இதைப் பயன்படுத்தி பயன் பெறலாம்.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் சீந்தில் தாவரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது.


மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Empty Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்

Post by சிவா Tue Sep 26, 2023 11:58 pm

மங்குஸ்தான்


பலரும் கேள்விபடாத பழங்களில் ஒன்றான மங்குஸ்தான் பழம் பல்வேறு ஊட்டச்சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டது. மங்குஸ்தான் பழத்தின் மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம்.

மங்குஸ்தான் பழத்தில் உள்ள விட்டமின் சி சத்தானது உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருகிறது.

ஒல்லியாக இருப்பவர்கள், எடை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு மங்குஸ்தான் பழம் சிறந்த தீர்வு

மங்குஸ்தான் பழத்தில் உள்ள ஒமேகா அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மங்குஸ்தான் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் வயிற்று பிரச்சினைகளை குறைக்கும். செரிமான சக்தியை அதிகரிக்கும்.

மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினைகளில் நல்ல தீர்வு கிடைக்கும்.

மங்குஸ்தான் பழ ஜூஸ் அடிக்கடி சாப்பிட்டு வர உஷ்ணத்தால் ஏற்படும் மூல பிரச்சினைகள் தீரும்.

மங்குஸ்தான் பழம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.

#மங்குஸ்தான் #மங்குஸ்தீன்


மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Empty Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்

Post by சிவா Tue Sep 26, 2023 11:59 pm

புளி


அறுசுவைகளில் முக்கியமானது புளிப்பு சுவை. இந்திய உணவு வகைகளில் புளிப்பு சுவைக்காக பயன்படுத்தப்படும் பொருள் புளி. இந்த புளியில் பல மருத்துவ நன்மைகளும் அடங்கியுள்ளது.

அன்றாட உணவில் புளியை சேர்த்துக்கொண்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

#புளி உடல் எடையை குறைத்து, சீராக பராமரிக்க உதவும் என்பது நம்மில் பலர் அறிந்திராத உண்மை.

புளியில் நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்புச்சத்து குறைவாகவும் இருக்கும்.

தினமும் புளியை உணவில் சேர்த்துக்கொள்வதால், வயிற்று உபாதைகள் சீராகி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

புளி தேவையற்ற கழிவுகளை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்றி, ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

புளியை உணவில் சேர்த்துக்கொள்வது இன்சுலின் அளவைக் குறைத்து ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

புளி உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும், தூக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

புளியில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.


மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Empty Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்

Post by சிவா Wed Sep 27, 2023 12:02 am

விட்டமின் கே


சருமத்தை பாதுகாக்க அவசியமான சத்துக்களில் விட்டமின் கே முக்கியமான ஒன்று. விட்டமின் கே நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்திருக்க முடியும்.

வைட்டமின் கே காயங்கள் மற்றும் காயங்களை விரைவாக குணப்படுத்த உதவும்

இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுவதால், இது உங்கள் சருமத்தை நீண்டகால சேதத்திலிருந்து பாதுகாக்கும்.

இந்த வைட்டமின் சருமத்தின் வீக்கம் மற்றும் சிவத்தல் ஆகியவற்றைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

இது வறண்ட சருமம் மற்றும் கருவளையங்களைத் தடுக்கவும் உதவும்.

வைட்டமின் கே தோலின் வயதான தோற்றத்தை குறைக்க உதவும்

ப்ரக்கோலி, பசலைக் கீரை உள்ளிட்ட உணவுகளில் விட்டமின் கே அதிகம் உள்ளது.

தினசரி பால் பொருட்கள் சரியான அளவு எடுத்துக் கொள்வதன் மூலம் விட்டமின் கே சத்து கிடைக்கும்.


மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Empty Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்

Post by சிவா Wed Sep 27, 2023 12:02 am

சருமத்தை பளபளப்பாக்கும் உணவுகள்


உடலை பொலிவாகவும், பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் வைத்திருக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் உணவில் சில பொருட்கள் மூலமாகவே பொலிவான சருமத்தை பெற முடியும். அதுகுறித்து காண்போம்.

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது சருமத்திற்கு நல்லது.

பழச்சாறுகளை அதிகம் குடித்து வந்தால், சருமம் பொலிவடையும்.

ஊறவைத்த பாதாமை அதிகாலையில் உட்கொள்வது சரும வறட்சியைத் தடுக்கும்.

தேனை தொடர்ந்து உட்கொள்வது சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயால் தோலை முழுவதும் மசாஜ் செய்யவும்.

கற்றாழையை வாரத்திற்கு இரண்டு முறை சருமத்தில் தடவினால் பலன் கிடைக்கும்.

எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து சருமத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

பப்பாளி, வாழைப்பழம், கொய்யா, ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடுவது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.

இளநீர் அடிக்கடி குடிப்பதால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாது.

வைட்டமின் சி உள்ள எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் போன்ற புளிப்பு பழங்களை உட்கொள்வது சருமத்தைப் பாதுகாக்கும்.


மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Empty Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்

Post by T.N.Balasubramanian Wed Sep 27, 2023 6:11 pm

நல்ல தகவல்கள்..

இளம்வயது ஆண் பெண்களுக்கு உதவும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Empty Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்

Post by சிவா Wed Sep 27, 2023 7:33 pm

சிறுநீரகத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்


நமது உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. பின்வரும் குறிப்புகள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அவை என்னவென்று தெரிந்து கொள்வோம்.

எலுமிச்சை நீரில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

சிவப்பு திராட்சையில் வைட்டமின் பி6 மற்றும் ஏ உள்ளன, இவை சிறுநீரகத்தை சுத்தமாக வைத்திருக்கும்.

கொத்தமல்லி சிறுநீரகத்திற்கு மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது, கொத்தமல்லி தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம்.

சிறுநீரகத்தை சுத்தப்படுத்த சிவப்பு குடைமிளகாய் சிறந்த உணவு.

சிறுநீரகம் போன்று காணப்படும் ராஜ்மா சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

பேரீச்சம்பழத்தை நாள் முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் நீங்கும்.


மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Empty Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்

Post by சிவா Sat Sep 30, 2023 11:56 pm

அறுகம்புல்


#அறுகம்புல் எல்லாவித மண் வளத்திலும் வளரும். குறுகலான நீண்ட இலைகளையும், நேராய் வளரும் தண்டுகளையும் உடைய தன்னிச்சையாய் வயல், வரப்புகள், வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகையாகும். அறுகம்புல் தோல் நோய்களை குணப்படுத்தக்கூடியது, கண் எரிச்சலை சரி செய்யும் தன்மை கொண்டது, வயிற்றுப் போக்கை நிறுத்தக்கூடியது, புண்களை ஆற்றவல்லது. வயல்வெளி, புல்வெளியில் வளரக்கூடிய அறுகம்புல்லில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இதன் மீது நடப்பதால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது.

நரம்பு நாளங்களை தூண்டக்கூடியது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. அறுகம்புல்லை பயன்படுத்தி தோல் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம்.அறுகம்புல் சாறு தினமும் குடிப்பதால் பல நன்மைகளைப் பெறலாம். அது ஒரு மூலிகையாகத் திகழ்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் அறுகம்புல் சாறை குடித்துவர வேண்டும். குடித்த இரண்டு மணி நேரம் கழித்து மற்ற உணவு வகைகளை சாப்பிடலாம். சாறை குடிப்பதனால் கீழ்க்கண்ட நன்மைகள் பெற்று நலமுடன் வாழலாம்.

* எப்போதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது.

* ரத்த சோகை நீங்கி, ரத்தம் அதிகரிக்கும். வயிற்றுப்புண் குணமாகும்.

* ரத்த அழுத்த நோய் கட்டுப்படும்.

* நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

* சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாகும்.

* நரம்புத்தளர்ச்சி நோய், தோல் வியாதி ஆகியவை நீங்கும்.

* மலச்சிக்கல் நீங்கும்.

* புற்றுநோய்க்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

* பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.

* பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகளுக்கு மிகச்சிறந்தது.

* மூட்டுவலி நீங்குவதோடு, பருமனான உடல் இளைக்கவும் உதவுகிறது.தினமும் அறுகம்புல் சாறு குடிப்போம், நோய்களை வருமுன் காப்போம்.


மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 16 Empty Re: மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 16 of 18 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum