புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_m10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10 
56 Posts - 73%
heezulia
உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_m10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_m10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_m10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_m10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10 
221 Posts - 75%
heezulia
உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_m10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_m10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_m10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10 
8 Posts - 3%
prajai
உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_m10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_m10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_m10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10 
3 Posts - 1%
Barushree
உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_m10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_m10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_m10உலகத் தொழிலாளர் தினம் - May 1 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத் தொழிலாளர் தினம் - May 1


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 01, 2023 1:56 am

உலகத் தொழிலாளர் தினம் - May 1 DJGT8He

இன்று உலக தொழிலாளர் தினம் எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் உத்தியோகப்பூர்வமாக கொண்டாடப்படுகிறது. உத்தியோகப்பூர்வமற்ற முறையிலும் பல நாடுகளில் இத் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்தை நினைவு கூறும் தினமாகவும் கௌரவப்படுத்தும் தினமாகவும் காணப்படும் உலக தொழிலாளர் தினமானது, தொழிலாளர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் அநீதிகளுக்கு எதிராக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் இணைந்து நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தை அடுத்து ஆரம்பமானது.

18ஆம் நூற்றாண்டில் இறுதியில் ஆ18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதற்கு எதிரான குரல்கள் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் தொடங்கின. இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட சாசன இயக்கம் (Chartists) 6 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் 10 மணி நேர வேலை என்ற கோரிக்கை பிரதானமானதாக முன்வைக்கப்பட்டது.

1830 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் தினமும் 15 மணி நேரம் உழைத்து வந்தனர். இதனை எதிர்த்து அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1834 இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற வாசகத்தை முன்வைத்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால், இது தோல்வியில் முடிந்தது. அவுஸ்திரேலியா விலுள்ள மெல் போர்னில் கட்டிடத் தொழிலாளர்கள் 1856 இல் முதன்முதலாக 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்தனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர்.

1896 ஏப்ரலில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறுபிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளர்களின் நிலைமை குறித்து விரிவாக ஆராய்ந்தார். மேலும், ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டம் அரசியல் போராட்டமாக எழுச்சி கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது எனலாம்.

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து, அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் 1886, மே 1 ஆம் நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இந்த இயக்கமே மே தினம் தோன்றக் காரணமாக இருந்தது எனலாம்.
1889 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் சோசலிசத் தொழிலாளர்களின் சர்வதேசத் தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது. 18 நாடுகளிலிருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேரப் போராட் டத்தை முன்னெடுத்துச் செல்வது என்று முடிவு செய்தனர்.

1890 மே 1 ஆம் நாள், அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டது. இந்த அறைகூவலே, மே முதல் நாள் சர்வதேச தொழிலாளர் தினமாக – மே தினமாக வருவதற்குக் காரணமாக அமைந்தது. அடுத்த ஆண்டிலிருந்து உலக நாடுகள் பலவற்றில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.

தொழிலாளரை நினைவுகூறும் தினமாகவும் கௌரவிக்கும் தினமாகவும் மே முதலாம் திகதி பார்க்கப்பட்டாலும் இலங்கை போன்ற நாடுகளில் தற்போது அரசியல்வாதிகள் தமது பெயரை நிலைநாட்டிக்கொள்வதற்காக பயன்படுத்து ஒரு மேடையாகவே மாறி வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

வருடத்தில் ஏனைய நாட்களில் கவனிக்கப்படாத விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் போன்றோரை மே தினத்தில் மட்டும் விசேடமாக அழைக்கப்பட்டு ஒரு நேர உணவு, குடிநீர், ஒரு தொப்பி போன்றவற்றை வழங்கி வாய் கிழிய பேசும் அரசியல்வாதிகளுக்கு ஏனைய நாட்களில் அத்தொழிலாளர்கள் பற்றிய ஞாபகம் ஏன் வருவதில்லை என்பது கேள்விக்குறிதான்.

எது எவ்வாறிருப்பினும் தொழிலாளர் தினமான இன்று உலகில் வாழும் அனைத்து தொழிலாளர்களும் சுபீட்சத்துடன் வாழவேண்டும் என்பதே அனைவரினது விருப்பமாகும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 01, 2023 1:59 am

உலகம் முழுவதும் நாளை (மே 1) தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தொழிலாளர்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக):

"உடலினை இயந்திரமாக்கி, உழைப்பினை உரமாக்கி, உலகத்தை இயங்க வைக்கும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். தொழிலாளர்கள் வருடத்தில் ஒருநாள் மட்டுமே நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல. வருடம் முழுவதும் நினைத்துப் பாராட்டப்பட வேண்டியவர்கள். உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கம் தங்களின் உரிமைக்காகவும், நலனிற்காகவும் பல நூற்றாண்டுகளாகப் போராடி அடிமை விலங்கினை உடைத்தெறிந்து தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த திருநாள் மே தின நாளாகும்" என்று கூறியுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன் (சிபிஎம்):

"அனைத்து வகையான சுரண்டலுக்கும் முடிவு கட்ட, சமத்துவச் சமூகத்தை உருவாக்கிட மே தினத்தில் உறுதியேற்போம். சர்வதேசப் பாட்டாளி வர்க்க ஒற்றுமைப்பாட்டை வளர்த்தெடுப்போம். தொழிலாளர்கள் உரிமையைப் பாதுகாக்க தொய்வின்றி போராடுவோம். மாநில உரிமைகளை, கூட்டாட்சியைப் பாதுகாப்போம், இந்தியாவில் பன்முக பண்பாட்டை உறுதிசெய்வோம். பரந்துப்பட்ட உழைக்கும் மக்கள் ஒற்றுமையைக் கட்டி வளர்ப்போம். நூறாண்டுகளுக்கு முன்பு சிங்காரவேலர் உயர்த்திப்பிடித்த மே தின கொடியை கம்பீரமாகப் பிடித்துக் களமாடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

முத்தரசன் (சிபிஐ):

"தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 2023 ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளை. தமிழக தொழிலாளி வர்க்கமும், ஜனநாயக சக்திகளும் எடுத்துக் கூறி களம் இறங்கின. ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகள் திருத்த சட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. அதனை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துவோம். வகுப்புவாத, மதவெறி பாஜக தலைமையிலான ஒன்றிய அரசை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றவும் நாட்டையும், மக்களையும் பாதுகாக்கவும் மே தின நாளில் சூளுரை ஏற்று, களப்பணி தொடர்வோம்" என்று கூறியுள்ளார்.

வைகோ (மதிமுக):

"மே1 உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் புனிதமான நாள். இந்தியாவின் தொழிலாளர்கள் அனைவரும் மே தினத்தைக் கொண்டாடி நம் ஆதரவை உலகமெங்கும் இருக்கும் தொழிலாளர்களுக்கு உணர்த்த வேண்டும். அதேபோல, உலகமெங்குமுள்ள துன்பப்படும் தொழிலாளர்களுக்கு பலமாக இன்னும் சில ஆண்டுகளில் மாறும் அளவுக்கு ஒரு பெருங்கூட்டமாக உருவாவதற்கான அடிக்கல்லை இன்று பதியுங்கள். அது அவர்களை நாம் எல்லாரும் ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்று உணர வைக்க வேண்டும்” என்று சிந்தனை சிற்பி சிங்காரவேலனார், 1923, மே 1 பொதுக்கூட்டத்தில் முழங்கினார். தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாக்கவும், ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மே தினத்தில் உறுதி ஏற்போம்" என்று தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்):

"பொருளாதார தேக்க நிலையினால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, உற்பத்தி குறைந்து, வேலை வாய்ப்பு இழந்த தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மாதந்தோறும் நிவாரண தொகை வழங்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. ஆனால், நிவாரணத் தொகை வழங்காமல் வாழ்வாதாரம் இழந்த நிலையில் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்கிற வகையில் நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன் (தமாக):

"தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உரக்கம் என்ற ரீதியில் வேலை செய்தால் தான் அவர்களின் வேலையும் சுமூகமாக முடியும், அவர்களின் உடலுக்கும் நல்லது. அப்போது தான் தொழிலாளர்களின் அடுத்த நாள் வேலையானது சோர்வின்றி நல்ல முறையில் தொடரும்.எனவே மத்திய மாநில அரசாக இருந்தாலும் சரி, தனியார் நிறுவனமாக இருந்தாலும் சரி தொழிலாளர்களின் வேலை நேரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் உடல்நலனுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் (அமமுக):

"உலகளாவிய பொருளாதாரம், பெருநிறுவனங்களின் பணி சூழலில் 8 மணி நேர வேலை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட உரிமைகள் தொழிலாளர்களுக்கு தடையின்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதுதான் தொழிலாளர்களுக்கான உண்மையான மே தின கொண்டாட்டமாகும். உழைப்பவரே உலகில் உயர்ந்தவர் என்பதை உரக்கச் சொல்லி உலகை இயக்கிவரும் தொழிலாளர்களுக்கு நாம் என்றும் துணை நிற்போம் என மே தினத்தில் உறுதி ஏற்போம்" என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன் (மநீம):

"காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்' என்றார் பாவேந்தர். நமது அன்றாட வாழ்க்கைக்குப் பின்னால் நாமறியாத பல்லாயிரம் பாட்டாளிக் கரங்கள் உள்ளன என்பதை உணர்வதும், அவர்களின் உழைப்பைப் போற்றுவதும், உரிமைகளை உறுதி செய்வதும் நம்முடைய பொறுப்பு. உழைப்பால்தான் இந்த உலகம் உயர்ந்திருக்கிறது. உழைப்பாளிகளும் உயர்த்தப்பட வேண்டும். தொழிலாளர் சமுதாயத் தோழர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது இதயப்பூர்வமான மே தின வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 01, 2023 2:03 am

மே தினம் - இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் கொண்டாடப்பட்டது எப்படி? இதில் சிங்காரவேலர் பங்கு என்ன?



உலகத் தொழிலாளர் தினம் - May 1 _124376201_malayapuram_singaravelu_chettiar_2006_stamp_of_india

மே 1 என்றால், தொழிலாளர் தினம் என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால், மே தினம் கொண்டாடுவதில் இந்தியாவுக்கே முன்னோடி சென்னைதான் என்பது எல்லோருக்கும் தெரியாது இல்லையா? அதுவும் ஓர் இடத்தில் அல்ல, சென்னையில் மட்டுமே இரண்டு இடங்களில் ஒரே நாளில் நடந்த மே தின நிகழ்வுகள்தான் இந்தியாவின் முதல் மே தினக் கொண்டாட்டம்.

எங்கு நடந்தது? நடத்தியது யார்?

மே தினம் உருவான கதை


முதலில் மே தினம் உருவான கதையை சுருக்கமாகப் பார்த்து விடுவோம். நாளொன்றுக்கு 15 முதல் 18 மணி நேரம் வரை உழைக்க வேண்டிய கட்டாயத்தால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சமயம் அது. இதை எதிர்த்து அவ்வப்போது வேலை நிறுத்தங்களும் போராட்டங்களும் நடக்கும். குறிப்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற சாசன இயக்கம் இதில் பிரபலமானது. அதேபோல, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தில்தான் முதல்முறையாக 8 மணி நேர வேலை என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வரிசையில் 1886ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த தொழிலாளர் போராட்டமும் ஹேமார்க்கெட் படுகொலை சம்பவமும் தொழிலாளர் போராட்டங்களின் மைல் கற்கள்.

1889ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி அன்று பாரிசில் நடந்த சர்வதேச தொழிலாளர் நாடாளுமன்ற கூட்டத்தில், 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், 1890ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி அன்று உலகளாவிய தொழிலாளர்கள் நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலின் விளைவாகத்தான் ஆண்டுதோறும் மே 1 தொழிலாளர் நாள் கொண்டாடப்படுகிறது. (மே தினம். அறிஞர் அண்ணா,1975)

அப்படியென்றால் இந்தியாவில் எப்போதிருந்து மே தினத்தை கொண்டாடத் தொடங்கினர் என்பதுதான் அடுத்த கேள்வி.

இந்தியாவின் முதல் தொழிலாளர் யூனியன்:


"ஒருங்கிணைந்த தொழிலாளர் கூட்டமைப்பு என்று வந்துவிட்டால் மெட்ராஸ் மாகாணத்தின் பங்கு மிகப்பெரியது. காரணம், 1918ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி மெட்ராஸ் மாகாணத்தில் தொடங்கப்பட்ட 'மெட்ராஸ் லேபர் யூனியன்'தான் இந்தியாவின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர் கூட்டமைப்பு," என்கிறது டி.வீரராகவன் எழுதிய 'மேக்கிங் ஆஃப் மெட்ராஸ் ஒர்கிங் கிளாஸ்' என்ற ஆய்வு நூல்.

இதிலிருந்து தொடங்குவோமானால், தொழிலாளர்களின் உரிமையை ஒருங்கிணைந்து கேட்கும் முறை 1918ல் இருந்தே இந்தியாவில் உருவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த 6 மாதங்களுக்குள் பல்வேறு ஆலைகளிலும் தொழிலாளர் அமைப்புகள் உருவாகத் தொடங்கின. இதில் திருவிக, நடேச முதலியார் (நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவர்), சர்க்கரைச் செட்டியார் உள்ளிட்ட மெட்ராஸ் மாகாணத்தின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பலரும் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துணை புரிந்தனர்.

நாளுக்கு நாள் அதிகரித்த தொழிலாளர் பிரச்னைகளும், அவர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், அரசியல் ரீதியாகவே இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற எண்ணம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் பல்வேறு தொழிலாளர் அமைப்புகளில் இடம் வகித்தவருமான சுப்ரமணிய ஐயருக்கு எழுந்தது. இதே எண்ணம் பரவலாக தலைவர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்த நிலையில், 1922ஆம் ஆண்டு ஜூலை மாதம் மெட்ராஸ் அலுமினிய தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். இதை வழி நடத்தியவர் சிங்காரவேலர் என்ற கம்யூனிச சிந்தனை கொண்ட காங்கிரஸ்வாதி. இதற்கு முன்னதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் அருகே கடற்கரையில் அடிக்கடி தொழிலாளர்கள் கூட்டத்தை நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார் சிங்காரவேலர். இதன் விளைவாக, 1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிங்காரவேலரின் திருவான்மியூர் இல்லத்தில் பிரிட்டிஷ் இந்திய காவல்துறை சோதனை நடத்தியது.

காங்கிரஸ் கட்சியின் பிரதான தலைவர்களில் ஒருவராக இருந்தபோதும், கம்யூனிச சிந்தனைகளில் பேரார்வம் கொண்டிருந்த சிங்காரவேலர்தான் இந்தியாவின் பொதுவுடைமை இயக்க வளர்ச்சியில் மெட்ராஸ் மாகாணத்தில் பெரும்பங்கு வகித்தவர் என்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாமலர்.

இந்தச் சூழ்நிலையில், அதே ஆண்டு செப்டம்பரில் நடந்த, காங்கிரஸ் மாநாட்டில், காங்கிரஸ் கட்சி இனி தொழிலாளர் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பேசினார் சிங்காரவேலர். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ட்ராம்வே ஊழியர்கள், அடிசன் ப்ரெஸ் ஊழியர்கள் என பல துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்தனர். இது காங்கிரசுக்கு பிரச்னையின் தீவிரத்தை உணர்த்தியது. இந்த முறை , "கூடுதல் கவனம் எடுத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை காங்கிரஸ் கவனிக்க வேண்டும்" என்று கூடுதல் அழுத்தம் தந்தார் சிங்காரவேலர்.

இதன் விளைவாக, கயாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சிங்காரவேலர், சுவாமி தீனாநாத், சி.எஃப். ஆண்ட்ரூஸ், எஸ்.என்.ஹால்டர், டாக்டர் டி.டி.சத்யா, ஜே.எம்.சென் குப்தா ஆகிய 6 பேர் கொண்ட AITUC என்ற தொழிலாளர்களுக்கான குழுவை ஏற்படுத்தியது காங்கிரஸ். நாடெங்கும் உள்ள தொழிலாளர் சங்கங்கள் மற்றும் குழுக்களுடன் தொடர்பு கொண்டு விவசாய மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்களை ஒருங்கிணைப்பது இந்த குழுவின் பிரதான பணி. ஆனால், இங்குதான் காங்கிரஸ் ஒன்றை கவனிக்க மறந்தது.

புதிய கட்சி


சிங்காரவேலரைப் பொறுத்தவரை, தொழிலாளர்களின் பொருளாதார கோரிக்கைகள் மட்டும் அவரது குறிக்கோள் அல்ல. அவரது கனவு தொழிலாளர்களின் சுயாட்சி. இதை நிறைவேற்றும் பொருட்டு, உழைக்கும் வர்க்கத்துக்கான தனது இத்தனையாண்டு கால போராட்டத்தில், தான் கண்டெடுத்த தொழிலாளர் நலன் சார்ந்து சிந்திக்கும் ஒத்த கருத்துள்ள காங்கிரஸ் தலைவர்களையெல்லாம் இணைக்கத்தொடங்கினார். அதுவரையில், சுதந்திரப் போராட்டத்தில் தொழிலாளர் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஒரு தலைவராக மட்டுமே பார்க்கப்பட்ட சிங்காரவேலர் தற்போது தனித்துவமிக்க தலைவராக பார்க்கப்பட்டார். காரணம், இந்தியாவில் முதல் முறையாக மே தினத்தை தான் அனுசரித்து அந்த தேதியில் ஒரு புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் கூறினார்.

இந்தியாவின் முதல் மே தினம்


1923ஆம் ஆண்டுதான் இந்தியாவில் முதல்முறையாக மே தினம் கொண்டாட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் சிங்காரவேலர். அதற்கு முன்னதாகவே 1923ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி, AITUC குழு உறுப்பினர் சுவாமி தீனந்த்துக்கு தந்தி ஒன்றை அனுப்பினார். " உலகம் முழுக்க தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடி வரும் நிலையில், இந்தியாவிலும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டும் " என்று வலியுறுத்தினார். இதன் தொடர்ச்சியாகவே சென்னையில் மே தினம் கொண்டாட முடிவு செய்தார்.

இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் தலைதூக்கத் தொடங்கிய சமயத்தில் அதன் நிறுவனத்தலைவர்களில் ஒருவராக இருந்த சிங்காரவேலர்தான் இந்த மே தினக் கூட்டத்துக்கான மூளையாக செயல்பட்டார் என்கிறது 'சிங்காரவேலர் - தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்' என்ற ஆய்வு நூல்.

வழக்கத்துக்கு மாறாக பெரும் கூட்டம் அன்று கடற்கரையில் கூடியிருந்தது. தொழிலாளர்கள் விவாசாயிகள் என பலரும் கூடியிருந்தனர். கூட்டத்துக்கு தலைமை தாங்கினார் ஒரு தமிழர். ஆம், தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமைவாதி என்று அழைக்கப்ப்படும் சிங்காரவேலர் இந்த கூட்டத்தின் நடு நாயகமாக நின்று கொண்டிருந்தார்.

முதல்முறையாக மே தினத்தை கொண்டாடுவதற்காகவும், அந்த கொண்டாட்டத்தின்போது, தொழிலாளர் அரசு அமையவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடவும் அந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கயா காங்கிரஸ் மாநாட்டில் சந்தித்த கம்யூனிச சிந்தனை கொண்ட தலைவர்களின் ஈர்ப்பாலும், தொழிலாளர் நலன் மீது கொண்டிருந்த அக்கறையாலும் செங்கொடி ஏற்றி அந்த விழாவை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் சிங்காரவேலர். திட்டமிட்டபடி வட சென்னைக்கு இன்றைய சென்னை மெரினா கடற்கரையிலும், தென் சென்னைக்கு திருவான்மியூர் கடற்கரையிலும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சென்னை உயர் நீதிமன்றம் அருகிலுள்ள (இன்றைய மெரினா) கடற்கரை கூட்டத்தில் சிங்காரவேலர் தலைமையேற்று விழாவை நடத்தினார். லேபர் கிசான் கட்சி என்ற புதிய கட்சி தொடங்கியதாக அறிவிப்பை வெளியிட்டு, தங்கள் கட்சியின் கொள்கை விளக்க அறிக்கையையும் வெளியிட்டார். மேலும் காங்கிரஸ் கட்சியின் கிளை அமைப்பாகவே லேபர் கிசான் கட்சி செயல்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அதே சமயம், திருவான்மியூர் கூட்டத்தில், லேபர் கிசான் கட்சியின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டிருந்த எம்.பி.எஸ்.வேலாயுதம் தலைமையில், சுப்ரமணிய சிவா உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றி இந்தியாவின் முதல் மே தினம் கொண்டாடப்பட்டது.

இதனை அப்போதைய 'தி இந்து' ஆங்கில நாளிதழ் செய்தியாக வெளியிட்டது. 99 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த மே தினம்தான் இந்தியாவில் செங்கொடி ஏற்றப்பட்ட முதல் மே தினமும் ஆகும்.

இதன் பிறகு, இந்த மேதினம் கொண்டாடப்பட்டது, இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் (பம்பாய், பஞ்சாப், வங்காளம்) தந்தி செய்தி இவ்வாறு அனுப்பப்பட்டது.

உலகத் தொழிலாளர் தினம் - May 1 _124369153_whatsappimage2022-04-29at11.35.05am

மே தினம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது தொடர்பாக, கல்கத்தாவுக்கு தந்தி ஒன்றும் அனுப்பப்பட்டது. அந்த தந்தியில், 'சென்னையில் மே தினத்தில் லேபர் கிசான் கட்சி தொடங்கப்பட்டது. தோழர் சிங்காரவேலு தலைமையில். மே தினத்தை விடுமுறையாக அறிவிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. கட்சியின் அகிம்சை வழிமுறை குறித்து தலைவர் விளக்கினார். பொருளாதார நிவாரணம் கோரப்பட்டது. தொழிலாளர் விடுதலைக்கு உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமை தேவை என வலியுறுத்தப்பட்டது' என்று தகவல் இடம் பெற்றிருந்ததாக 1923ஆம் ஆண்டு மே 2-ம் தேதி வெளியான 'தி இந்து' நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 01, 2023 2:04 am

என்ன பேசினார் சிங்காரவேலர்?


உலகத் தொழிலாளர் தினம் - May 1 _124375706_d628794c-d7a7-4ee6-b00d-9aa0ccf1e025

"மே1 உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் புனிதமான நாள். இந்தியாவின் தொழிலாளர்கள் அனைவரும் மே தினத்தைக் கொண்டாடி நம் ஆதரவை உலகெங்கும் இருக்கும் தொழிலாளர்களுக்கு உணர்த்த வேண்டும். அதேபோல, உலகெங்குமுள்ள துன்பப்படும் தொழிலாளர்களுக்கு பலமாக இன்னும் சில ஆண்டுகளில் மாறும் அளவுக்கு ஒரு பெருங்கூட்டமாக உருவாவதற்கான அடிக் கல்லை இன்று பதியுங்கள். அது அவர்களை நாம் எல்லோரும் ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்று உணர வைக்க வேண்டும். மெட்ராஸ் மெயில் பத்திரிகையில், சான்றளிக்கப்பட்ட தொழிலாளர்கள் மட்டுமே இந்த மே தினத்தை கொண்டாடுகிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், லேபர் கிசான் கட்சி ஒவ்வொரு கடைக்கோடி சாதராண தொழிலாளிகளுக்காகவும் நிற்க வேண்டும் என்றே எண்ணம் கொண்டுள்ளது."

இதைத் தொடர்ந்து கட்சியின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து விளக்கிப் பேசினார் சிங்காரவேலர். பின்னர் கட்சியின் திட்ட அறிக்கையை தொழிலாளர்கள் முன்னிலையில் வாசித்தார். இப்படித்தான் நடந்தது இந்தியாவின் முதல் மே தினம்.

இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த தொழிலாளர் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட நாள், இந்தியாவின் முதல் மே தினம், இந்தியாவின் முதல் முறையாக செங்கொடி பயன்படுத்தப்பட்ட நிகழ்வு ஆகிய மூன்று முக்கியத்துவத்தை 1923ஆம் ஆண்டு மே 1-ம் தேதி கொண்டிருந்தது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 01, 2023 4:58 pm

உலக தொழிலாளர்கள் தினம்.

எல்லோருக்கும் லீவு.

மருந்து வாங்கப் போனேன்.மருந்து கடைகள் லீவு .

கொரியர் செய்யலாம்னு போனால் அங்கும் லீவு.

வீட்டில் மனைவிக்கு லீவு கிடையாது.

மனைவியின் கட்டளைகள் நிறைவேற்றும் கணவன்மார்களுக்கு லீவு கிடையாது.

அய்யகோ -------இதற்கு பெயர் என்ன ?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக