ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
heezulia
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
mohamed nizamudeen
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரியாமருதீஸ்வரர்

Go down

பரியாமருதீஸ்வரர் Empty பரியாமருதீஸ்வரர்

Post by சிவா Mon Apr 24, 2023 8:17 pm


பரியாமருதீஸ்வரர் DAtRoK6

நந்திக்கு நெய்; சிவனுக்கு மூலிகைச்சாறு... நினைத்ததை நிறைவேற்றும் அபிஷேக வழிபாடுகள்!


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையில், சுமார் 18 கி.மீ தூரத்தில் உள்ளது பரியா மருதுபட்டி. விசேஷமான மருத விநாயகர், வேண்டுதலை நிறைவேற்றும் நெய் நந்தி, ஈசனுக்கு மூலிகைச்சாறு அபிஷேகம், நோய்களைத் தீர்க்கும் அதிசய தீர்த்தம் ஆகிய சிறப்புகளுடன் திகழும் ஊர் இது.

கிராமத்தின் தொடக்கத்திலேயே அமைந்துள்ளது அருள்மிகு #பரியாமருதீஸ்வரர் ஆலயம். வாழ்வில் அவசியம் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய இவ்வூர் ஆலயத்தின் சிறப்புகள் ஒவ்வொன் றையும் தெரிந்துகொள்வோம்.

மருத விநாயகர்: முதலில் தரிசிக்கவேண்டிய தெய்வம் இவர்தான். வெளிப் பிராகாரத்தில், மருத மரத்தடியில் அருள் புரிகிறார் இந்த விநாயகர். இவரின் உருவம், வழக்கமாக நாம் பார்க்கும் உருவம்போன்று இல்லாமல் வித்தியாசமாக உள்ளது. இந்த மருத கணபதியும் கோயிலுக்குள் இருக்கும் கன்னிமூல கணபதியும் வாதாபி காலத்து விக்கிரகங்களாம்.

மருத மரம்தான் தல விருட்சம்; மருத்துவக் குணம் வாய்ந்தது என்கிறார்கள் பக்தர்கள். இந்த ஆலயத்தை எழுப்பும்போது, மண்ட பத்தின் சுற்றுச்சுவர் எழுப்பும் பணிக்காக இந்த மரத்தை வெட்ட முயற்சி செய்தனர். அப்போது மரத்திலிருந்து ரத்தம்போன்ற நீர் வடிந்ததால், வெட்டும் முயற்சி கைவிடப் பட்டது. பின்னர் தானாகவே அந்த மரம் முறிந்து விழுந்து, கோயில் சுவர் கட்டுவதற்கு உதவியது. இது இறைவனின் திருவிளையாடலே என்கிறார்கள் பக்தர்கள். அதன் பின்னர் மருத மரம் தானாக வளர்ந்ததாம்.

ஒரு முறை, இந்த மரத்தில் சிவ ரூபமே பிரத்யட்சமாகத் தோன்றியதைப் பேரதிசயமாக பக்தர்கள் சிலாகித்துச் சொல்கிறார்கள். இந்த மரத்திலிருந்து தானாகவே உதிரும் மருதம் பட்டையைப் பொடி செய்து நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடலில் ஆறாத புண், வயிற்று வலி போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கை. இங்கு சர்ப்பம் வந்து வழிபட்டதால், ராகு - கேது தோஷம் நிவர்த்தி ஆகும். இங்கே வழிபட்டு, நிவர்த்தி ஆனவர்கள், ராகு கேது உருவங்களை வைத்து வழிபடுகிறார்கள்.

நான்கு யுகம் கண்ட சிவலிங்கம்: மூலவர் ஈசன் சுயம்பு மூர்த்தி; நான்கு யுகங்கள் கடந்து நிற்பவர். ஒவ்வொரு யுகத்திலும் இவருக்கு ஒவ்வொரு திருப்பெயராம். கிருத யுகத்தில் செல்ல நயினார், திரேதா யுகத்தில் நல்ல நாயனார், துவாபர யுகத்தில் பரம்தலை ஆண்டவர் ஆகிய பெயர்களோடு திகழ்ந்த இறைவனுக்கு, இந்தக் கலியுகத்தில் பறியா மருந்தீஸ்வரர் என்ற திருப்பெயர்.

‘பறியா மருந்து ஈஸ்வரர்’ என்றால், பறியாத மருந்தான ஈஸ்வரர் என்று பொருள். பறித்துப் பயன்படுத்தும் மருந்து - மூலிகைகள். பறிக்க அவசியம் இன்றி, தரிசித்தாலே நம் உடற் பிணியையும் மனப் பிணியையும் நீக்கும் அருமருந்து இந்த ஈசன். ஆகவே பறியா மருந்தீஸ்வரர் என்று பெரியோர்கள் இவரைப் போற்றுவர். ஸ்தல மரமான மருத மரத்தைக் கருத்தில் கொண்டு `பரியா மருதீஸ்வரர்' என்ற பெயர் தற்போது வழக்கத்தில் உள்ளது என்கிறார்கள் பக்தர்கள்.

இந்த ஈசனின் மேல் வடிவம் மற்ற சிவலிங்கங்களைப் போல உருளை வடிவமாக இல்லாமல், சதுர வடிவமாகத் திகழ்கிறது. இதற்குக் கீழே தோண்டத் தோண்ட பெரிய, அகன்ற மலை மாதிரி போய்க்கொண்டே இருந்ததாம். ஆக, அதன் முனைதான் மேலே தெரியும் லிங்கம் என்கிறார்கள்.

திருபுவனத்தில் அவதரித்த சரபேஸ்வரரின் கோபம் தணிந்த திருத்தலமாகவும் இதைச் சொல் கிறார்கள். மூலிகைகள் நிறைந்திருந்த வனமாக இருந்தபடியால், இன்றும் சிவராத்திரியின் போது, மூன்றாம் கால பூஜையில் மூலவருக்கு 108 மூலிகைச் சாறு அபிஷேகம் செய்யப்படுகிறது.

இந்தத் திருக்கோயிலில் இரண்டு அம்பாள்களை தரிசிக்கலாம். சுத்த பிரும்மமாகப் பரஞ்சோதி அம்பாளும் பர பிரும்மமாகப் பார்வதி அம்பாளும் இந்தக் கோயிலில் அருள்பாலிப்பது அதிசிறப்பு.

வேடர் உருவில் கண்ணபிரான்: பாரதப் போருக்குப் பிறகு கண்ணபிரான் வணங்கிய சிவன் என்பதற்குச் சான்றாக, கண்ணபிரான் இங்கே வேடர் உருவத்தில் சங்கு சக்ரபாணியாக, வலது கையில் புஷ்பத்தை ஏந்தி பூஜிக்கும் கோலத்துடன் இருக்கிறார்.

மகாபாரதப் போரில் காயமடைந்த பாண் டவர்கள், இந்தத் தலத்தின் மண்ணை அள்ளிக் காயங்களின் மேல் பூச, உடனே காயங்கள் ஆறிய தாகச் சில குறிப்புகள் திருவண்ணாமலையில் உள்ள ஏடுகளில் இருந்தன என்றும் தகவல்கள் உண்டு.

அதிசய நெய் நந்தி: இங்குள்ள நெய் நந்தீஸ்வரரும் வரப்பிரசாதியானவர். இவரிடம் வேண்டிக் கொண்டு, நெய் வாங்கி அபிஷேகம் செய்தால் எண்ணியது நடைபெறும் என்று நம்பிக்கை. எப்போதும் நந்திமீது நெய் மூடியே இருந்தாலும், அதை ஈ, எறும்பு எதுவும் அண்டுவதில்லை என்பது ஆச்சர்யம்!

சர்வானந்தத் தீர்த்தம்: கோயிலுக்கு மிக அருகிலேயே உள்ளது சர்வானந்தத் தீர்த்தம். கிருஷ்ணரே உருவாக்கிய தீர்த்தமாம். உடலில் கட்டிகள் அல்லது தோல் வியாதிகள் இருந்தால், மருதீஸ்வரரை வேண்டிக்கொண்டு, வெல்லம் வாங்கி வந்து இந்தக் குளத்தில் கரைத்தால், உடலில் தோன்றிய கட்டிகள் விரைவில் மறைந்து விடும் என்கிறார்கள்.

மேலும், சுற்றுவட்டாரப் பகுதியில் தாய்மையுற்ற பெண்களுக்கு, ‘தீர்த்தம் அருந்துதல்’ என்ற மங்கல நிகழ்ச்சி நடக்கும்போது, இந்த சர்வானந்தத் தீர்த்தத்தைத்தான் குடத்தில் எடுத்து, சுவாமியிடம் வைத்து, அபிஷேகம், அர்ச்சனை செய்து எடுத்துச் செல்கிறார்கள். இந்தத் தீர்த்தத்தை அந்தப் பெண்கள் அருந்தினால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum