புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_m1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c10 
60 Posts - 40%
heezulia
12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_m1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_m1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_m1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_m1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_m1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_m1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_m1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c10 
311 Posts - 50%
heezulia
12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_m1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c10 
191 Posts - 31%
Dr.S.Soundarapandian
12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_m1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_m1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_m1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c10 
21 Posts - 3%
prajai
12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_m1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_m1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_m1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_m1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_m1012 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 21, 2023 11:04 pm


தொழிலாளர்களின் பணி நேரத்தை எட்டு மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக உயர்த்தப்படுவது தொடர்பான சட்ட மசோதா திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி, 2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச் ) சட்ட முடிவு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் போது சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், மமக, விசிக, பாஜக, மதிமுக, பாமக உள்பட பெரும்பாலான எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

8 மணி நேரம் வேலை நீர்த்துப்போக செய்யும் மசோதா


அப்போது பேசிய பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள், எட்டு மணி நேர வேலை என்பதை நீர்த்துப் போகச் செய்கிற 2023ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம் முன்வடிவை திரும்ப பெறுவதோடு, தேர்வு குழுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய சிபிஎம் சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி,"12 மணி நேரம் வேலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எட்டு மணி நேரம் வேலை என்பதை நீர்த்துப்போக செய்யும் சட்ட மசோதாவை எதிர்கிறோம்" என்றார். இதே போல, இந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சிந்தனைச் செல்வன் வலியுறுத்தினார். மசோதாவை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று சிபிஐ உறுப்பினர் தளி இராமச்சந்திரன் வலியுறுத்தினார்.

நிறுவனங்களுக்கு மட்டும்தான் பயன்


காங்கிரஸ் சார்பாக பேசிய செல்வப் பெருந்தகை, "இந்த சட்ட மசோதா தொழில் நிறுவனங்கள் மட்டுமே பயனடையும், தொழிலாளர்கள் பயனடைய மாட்டார்கள்" என்று தெரிவித்தார். பாஜக சார்பாக பேசிய நயினார் நாகேந்திரன், இந்த மசோதாவை மறு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து பேசிய வேல்முருகன், தனியார் முதலாளிகளை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் இது என்று குறிப்பிட்டார்.

தேர்வு குழுவுக்கு அனுப்ப கோரிக்கை


தொழிலாளர்களின் உரிமை எல்லாம் பறிக்கின்ற இந்த சட்டம் முன் வடிவு ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டது, தமிழக அரசு இதனை திரும்ப பெற வேண்டும், தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா வலியுறுத்தினார். தொழிற்சாலைகளை பாதுகாப்போடு, தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்பதால், இந்த சட்டத்தை தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

அமைச்சர்கள் விளக்கம்


இதற்கு பதில் விளக்கம் அளித்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், "இந்த சட்டத்தால் எல்லோருக்கும் பாதிப்பு இல்லை. தற்போது உள்ள நடைமுறைகள் தொடர்ந்து இருக்கும். வாரத்திற்கு வேலை நாட்களான 48 மணி நேரத்தை நான்கு நாட்களில் முடித்த பிறகு மூன்று நாட்கள் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். விடுமுறை நாட்களில் பணிபுரிய விரும்பும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த சட்ட திருத்தமானது அனைவருக்கும் கொண்டுவரப்படவில்லை. விருப்பப்படும் தொழிலாளர்களுக்கு ஆய்வு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்றார்.

முதல் முறையாக வெளிநடப்பு


அதிமுக பேரவையில் இல்லாத நிலையிலும், திமுக தவிர மீதமுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் 2023ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து சிபிஎம், சிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். திமுக ஆட்சியமைந்த பிறகு கூட்டணிக் கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது இதுவே முதன்முறையாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 22, 2023 10:12 pm

12 மணி நேர வேலை - 'அதிமுக கொண்டு வந்த போது எதிர்த்ததை திமுக இப்போது செய்யலாமா?'



புதிய சட்டத்திருத்தம் கூறுவது என்ன?


இந்தச் சட்டத்தின் பெயர் 2023ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் என்பதாகும்.

இந்தச் சட்டத்தைப் பொருத்தவரை, மத்திய அரசின் 1948ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலைகள் சட்டத்தை அடிப்படையாக வைத்தே இயற்றப்பட்டிருக்கிறது. இது, 1948ஆம் ஆண்டு சட்டத்தின் 65வது விதிக்குக் கீழே புதிய விதி ஒன்றைச் சேர்க்கிறது. இந்த விதி 65 - ஏ என்று அழைக்கப்படும். இது சிறப்பு நேர்வுகளில் விலக்களிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது.

அதன்படி, 1948ஆம் ஆண்டு சட்டத்தின் 51, 52, 54, 56, 59ஆம் பிரிவுகளின் விதிகள் சிலவற்றில் இருந்தோ, அல்லது அனைத்திலும் இருந்தோ விலக்களிக்க இந்தச் சட்டத்திருத்தம் வழிவகுக்கிறது.

இப்போது மேலே சொன்ன பிரிவுகள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம். பிரிவு 51 தொழிலாளர்களின் வேலை நேரத்தை வரையறுக்கிறது. எந்த ஒரு பணியாளரும் எந்த ஒரு வாரத்திலும் 48 மணி நேரத்திற்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக்கூடாது. 52வது பிரிவு வார விடுமுறையை வரையறுக்கிறது. ஒவ்வொரு ஊழியருக்கும் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை அளிப்பதை இது வலியுறுத்துகிறது.

54வது பிரிவானது, எந்த ஒரு ஊழியரும் ஒரு நாளில் 9 மணி நேரத்திற்கு மேல் பணியாற்ற அனுமதிக்கப்படக்கூடாது என்கிறது. 56வது பிரிவானது, இடைவெளி நேரம் எல்லாவற்றையும் சேர்த்தாலும்கூட, ஒரு நாளில் பத்தரை மணி நேரத்திற்கு மேல் வேலை நேரம் இருக்கக்கூடாது என்கிறது. 59வது பிரிவானது, ஒரு தொழிலாளர் ஒரு நாளில் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் வேலை பார்த்தால், அவருக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரட்டிப்புச் சம்பளம் தர வேண்டும் என்கிறது.

மேலே சொன்ன ஐந்து பிரிவுகளும் தொழிலாளர்களின் வேலை நேரம் குறித்த பிரிவுகளாகும். இந்த விதிகளில் இருந்து தொழிற்சாலைகளுக்கு விளக்களிக்க மாநிலஅரசு அனுமதிக்க மேலே சொன்ன சட்டத் திருத்தம் வழிவகுக்கிறது.

அமைச்சர்கள் சொல்வது என்ன?


இந்த மசோதாவுக்கு தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. இதையடுத்து சட்டமன்றக் கூட்டம் முடிவடைந்ததும் பேரவை வளாகத்திலேயே தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசனும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

தொழிலாளர்கள் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்வது என்ற தற்போதைய நிலையே நீடிக்கும் என்பதால், வேலை நாட்கள் குறையும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் கூறினார்.

"திருத்தி அமைக்கப்பட்டுள்ள 65-ஏ பிரிவின் படி, நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகள் தொழிலாளர்கள் நலன் பாதிக்காத வகையில், அவர்களின் ஒப்புதலுடன் மட்டுமே இதை நடைமுறைப்படுத்த முடியும். ஒரு வாரத்தில் 48 மணி நேரம் வேலை நேரம்தான் வேலை பார்க்க முடியும். அதில் மாற்றம் ஏதும் இல்லை. எந்த தொழிற்சாலை விரும்புகிறதோ, அந்த தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே இந்த சட்டம் பொருந்தும்" என்றார்.

இதற்குப் பிறகு பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருகின்ற நிறுவனங்கள் பணி நேரத்தில் ஒரு நெகிழ்வுத் தன்மையை எதிர்பார்ப்பதாகக் கூறினார். "தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் வேலை நேரத்தில் நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இந்த நெகிழ்வுத்தன்மையின் மூலமாக புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தாது. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தும். மின்னணுவியல் துறை, தோல் பொருட்கள் இல்லாமல் காலணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், மின்னணுவியல் தொகுப்புத் தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள் போன்றவற்றில் பணியாற்றுபவர்கள், அவர்கள் வேலை பார்க்கும் சூழலுக்கு ஏற்ற வகையில் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம்" என்றார் தங்கம் தென்னரசு.

மேலும், இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் ஒரு வாரத்திற்கான ஒட்டுமொத்த வேலை நேரம் என்பது மாறாது என்றும் இந்த மசோதாவின்படி வேலை செய்பவர்கள், 4 நாட்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு, மீதமுள்ள 3 நாட்கள் ஓய்வெடுக்கலாம் என்றும் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார். இந்த மசோதா எந்தெந்தத் தொழிற்சாலைகளுக்குப் பொருந்தும் என்பது குறித்த விதிகள் வகுக்கப்பட்டு, வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். அது தவிர, ஒரு தொழிலாளர் 12 மணி நேரம் வேலை செய்கிறார் என்றால், அதற்கேற்ற வசதிகள் இருக்கிறதா என்பதையெல்லாம் பார்த்துத்தான் இந்த அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சட்டத்திருத்தத்திற்கு நிலவும் கடும் எதிர்ப்பு


இந்த சட்டத் திருத்தத்திற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றன. இது உழைப்புச் சுரண்டலை ஊக்கப்படும் என கடுமையாக விமர்சித்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி. "சம்பளத்துக்காக அதிக நேரம் உழைப்பது என்ற மனோ நிலையை உருவாக்குவது மனித உரிமைக்கும், நலனுக்கும் எதிரானது. வருவாய் என்பதைவிட மனித உழைப்பு, மனித நேயம், குடும்ப நலன் என்பனவற்றைக் கவனிக்க வேண்டாமா? விரும்பியோர் 12 மணிநேரம் உழைக்கலாம் என்று கூறுவது, ஒருவகை உழைப்புச் சுரண்டல்தான்" என அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இடதுசாரிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்கும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள அறிக்கையில், "2020ம் ஆண்டு அப்போதைய அ.தி.மு.க. அரசு வேலைநேரத்தை அதிகரிக்க முயற்சித்தபோது அதை தி.மு.க கடுமையாக எதிர்த்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் எட்டு மணி நேர வேலை நேரத்தை பன்னிரெண்டு மணி நேரமாக உயர்த்தியதற்கு தி.மு.கவின் சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

நிலைமை இப்படி இருக்கையில், நெகிழ்வுத் தன்மை என்பது தொழிலாளியை ஒட்டச் சுரண்டவும், முதலாளிகளுக்கு உறிஞ்சி கொடுக்கவுமே வழிவகுக்கும். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் வேலை நேரம் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும். தொழிலாளர் நலனுக்கு முரணாகவும் சட்ட நியாயங்களுக்கு புறம்பாகவும் இந்த சட்டத் திருத்தம் இருக்கிறது. வேலை நேரம் குறித்த எந்த சட்டத்திற்கும் மதிப்பளிக்க வேண்டியதில்லை என்பதற்கான ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்திருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு பதிலாக சட்டங்களே தேவையில்லை என்பதற்காக சட்டம் இயற்றுவதாகும். தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த மசோதாவை கைவிடுவதாக அறிவிக்க வேண்டும்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது.

12 மணி நேர வேலை என்ன பாதிப்புகளை ஏற்படுத்தலாம்?


இப்போதே தொழிலாளர்களின் நிலை மிக மோசமாக இருக்கும்போது, 12 மணி நேரம் வேலை பார்க்க அனுமதித்தால், அது இன்னும் நிலைமையை மோசமாக்கும் என்கிறார் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சங்கத்தைச் சேர்ந்த கீதா ராமகிருஷ்ணன்.

"இது ஒரு மிக மோசமான சட்டத்திருத்தம். ஏற்கனவே தமிழ்நாட்டில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலைபார்க்க வைக்கப்படுகிறார்கள். திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலைகளிலும் பின்னலாடைத் தொழிற்சாலைகளிலும் 12 முதல் 14 மணி நேரம் வேலை பார்க்கிறார்கள். இந்த நிலையில் இப்படி ஒரு சட்டம் வந்துவிட்டால் என்ன ஆகும்?" எனக் கேள்வி எழுப்புகிறார் கீதா.

"ஐரோப்பிய நாடுகளில் 8 மணி நேர வேலைக்குப் பதிலாக ஆறு மணி நேர வேலை என்பதை அமல்படுத்த வேண்டும்; அப்போதுதான் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என விவாதித்துவருகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்" என்கிறார் கீதா.

4 நாட்கள் 12 மணி நேரம் வேலை பார்த்துவிட்டு, 3 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறினாலும், அப்படி நடக்க எந்தத் தொழிற்சாலையும் அனுமதிக்காது. மேலும் இது குறித்துப் போராட யூனியன்கள் வலுவாக இல்லாத நிலையில், தொழிலாளர் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்கிறார் அவர்.

மத்திய அரசு முதலில் இதுபோல சட்டத்தைத் திருத்தியபோது இந்தியாவில் உள்ள பல்வேறு யூனியன்கள் இதனை எதிர்த்ததால், மாநிலங்களின் பொறுப்பில் இதனை விட்டுவிட்டது. 2020ஆம் ஆண்டு மே மாதம் உத்தரப்பிரதேசத்தில் இதுபோல சட்டம் திருத்தப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து பொது நல வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், அங்கு அம்மாநில அரசே அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றது.

கடந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் இதேபோல தொழிலாளர் நலச் சட்டம் திருத்தப்பட்டது. அப்போது இரண்டு செல்போன் தயாரிக்கும் நிறுவனங்களுக்காகவே இந்தச் சட்டம் திருத்தப்பட்டதாக அம்மாநில அரசு வெளிப்படையாகச் சொன்னது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை, எந்தத் தொழிற்சாலைக்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது என்பது சொல்லப்படாவிட்டாலும், எந்தெந்தத் தொழில்துறைகளுக்காக இது கொண்டுவரப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

"ஆனால், இதுபோல ஒரு திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு முன்பாக, யூனியன்களுடன் பேச வேண்டாமா? யூனியன்களுடன் தொழிலாளர்களுடன் எதுவும் பேசாமல், தொழிற்சாலைகள் சொல்கின்றன என்பதற்காக எப்படி இப்படி ஒரு திருத்தத்தைக் கொண்டுவருகிறார்கள்?" எனக் கேள்வியெழுப்புகிறார் கீதா.

ஆனால், இது பல புதிய சிக்கல்களைக் கொண்டுவரும் என்கிறார் மன நல மருத்துவரான சிவபாலன். "கொரோனா பரவலுக்குப் பிறகு மனநல பாதிப்பு வெகுவாக அதிகரித்திருக்கிறது. முக்கிய காரணம், வீட்டிலிருந்து வேலை பார்ப்பதுதான். வீட்டில் இருந்து வேலை பார்த்தால் நல்லதுதானே என பலர் கருதுகிறார்கள். ஆனால், வீட்டில் இருந்து வேலை பார்க்கும்போது நேரம் காலம் இல்லாமல் வேலை பார்க்கிறார்கள். காலை 9 மணிக்கு வேலையை ஆரம்பித்தால் இரவு 10 -11 மணிவரைகூட வேலை நீள்கிறது. இது மிகப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் மனநல பிரச்சனைகளோடு வரும் ஐ.டி. பணியாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதற்கு காரணம் வேலைக்கும் தன் சொந்த வாழ்க்கைக்கும் இடையில் ஒரு சமநிலையை எட்ட முடியாததுதான்.

இப்போது ஐடி நிறுவனங்களில், பெரிய தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்கள் முதல் தலைமுறையாக இம்மாதிரி நிறுவனங்களில் பணியில் சேர்கிறார்கள். அவர்களுக்கு நிறைய பொருளாதார கனவுகள் இருக்கின்றன. இதனால், அதிக நேரம் வேலை பார்க்க ஒப்புக்கொள்கிறார்கள். முடிவில் அது பல பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்கிறது. கணவன் - மனைவிக்கு இடையில் பிரச்சனை வருகிறது. குழந்தைகளை சரியாக வளர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. வேலை நேரத்தை அரசு ஒழுங்குபடுத்த வேண்டிய காலம் உருவாகிவரும் நிலையில், இப்படி வேலை நேரத்தை அதிகரிப்பது உற்பத்தியை, வேலைத் திறனைக் கடுமையாக பாதிக்கும்" என்கிறார் சிவபாலன்.

பெண்களுக்கு சுமை அதிகரிக்கும்


வேலை நேரம் அதிகரிப்பதில் பெண்களுக்குத் தான் சுமை அதிகம் ஏற்படும் என்கிறார் சிவபாலன். ஏனென்றால், அவர்கள் அலுவலக வேலையையும் பார்த்துக்கொண்டு வீட்டு வேலையையும் பார்க்க வேண்டியிருக்கும். இது நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்கிறார் அவர்.

ஆனால், பல தொழில்துறைகளில் வேலை நேரத்தை அதிகரித்து, விடுமுறைகளையும் அதிகரித்துத் தரும் போக்கு உலகம் முழுவதுமே பரவிவருகிறது. நான்கு நாட்கள் வேலை பார்த்தால், மீதமுள்ள மூன்று நாட்கள் தொழிற்சாலை இயங்காமல் இருப்பதன் மூலம் மின்சாரத்தைச் சேமிக்க முடியும்; 6 நாட்கள் வீட்டிலிருந்து பயணம் செய்து தொழிற்சாலைக்கு வருவதற்குப் பதிலாக, நான்கு நாட்கள் வந்தால் போதும் என்பதால் வாகன பயன்பாடு குறைந்து சூழல் மேம்படும் என்பது போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன.

குறிப்பாக, பல வளர்ந்துவரும் நாடுகளில் முதலீடு செய்யவரும் மின்னணு நிறுவனங்கள், காலணி நிறுவனங்கள் முதலீட்டிற்கான முன் நிபந்தனையாகவே இதனை வைக்கின்றன. அம்மாதிரி ஒரு நிபந்தனை சார்ந்த ஒரு நடவடிக்கையாகவே தற்போது தமிழ்நாடு அரசு தனது தொழிலாளர் நலச் சட்டத்தைத் திருத்தியிருக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 22, 2023 10:16 pm

12 மணி நேர வேலை அமலுக்கு வந்தால் பெண்களின் பணியிட பங்கேற்பு குறையுமா? - ஓர் அலசல்



32 வயதான செல்வி ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

தமிழ்நாடு அரசு, தனியார் நிறுவனங்களில் தினமும் 12 மணிநேர வேலை செய்வதற்கான சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளதால், தனது வேலை நேரமும் அதிகரிக்குமோ என்ற அச்ச உணர்வில் இருப்பதாக கூறுகிறார்.

''வீட்டில் இருந்து ஆலைக்கு வந்து சேருவதற்கு 1.5 மணி நேரம் ஆகும் என்பதால், காலை 7 மணிக்கு கிளம்புவேன். என் குழந்தைகள் தூக்கத்தில் இருந்து எழும்போது வீட்டில் இருந்து கிளம்புவேன். 12 மணி நேர வேலை என்ற திருத்தம் அமல்படுத்தப்பட்டால், அவர்கள் விழிக்கும் முன்பே நான் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும்.

மீண்டும் அவர்கள் உறங்கிய பின்னர்தான் நான் வீட்டுக்கு செல்ல முடியும்,'' என்று வேதனையுடன் பேசுகிறார் செல்வி.

தினமும் போரூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் வேலைக்குச் சென்று வரும் செல்வி, 12 மணிநேர வேலை என்ற முடிவை தனது பணியிடத்தில் செயல்படுத்தினால், வேலைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டிவரும் என்கிறார்.

ஒரு வாரத்தில்,நான்கு நாட்கள் 12 மணிநேரம் வேலை, மூன்று நாட்கள் ஓய்வு என்ற முறையில் ஆலை செயல்பட்டால் குடும்பத்துடன் செலவிடும் நேரம் மிகவும் குறைந்து விடும் என்கிறார் செல்வி.

''தற்போது காலை 8:30மணிக்கு வேலை தொடங்கி 4:30மணிக்கு வேலை முடித்து மாலை ஆறு மணிக்கு நான் வீடு திரும்புகிறேன். 12 மணி வேலை என்றால் நான் வீடு திரும்ப இரவு 10 மணி ஆகிவிடும்.

என்னால் என் இரண்டு குழந்தைகளை கவனிக்கமுடியாது. கடுமையான வேலை செய்துவிட்டு வந்து வீட்டில் எந்த வேலையும் செய்யமுடியாது. ஐந்து லட்சம் கடன் இருப்பதால்தான் பலசிக்கல்கலுக்கு மத்தியில் இந்த வேலைக்குப் போகிறேன்.

ஆனால் 12 மணி வேலை எங்களைப் போன்ற ஏழ்மை நிறைந்த குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு ஒரு சாபம்தான். வீட்டு வேலைகள், குழந்தைகளை கவனிப்பது என எந்த வேலையையும் சரியாக செய்யமுடியாது,'' என்கிறார் செல்வி.

மூன்று நாட்கள் ஓய்வு பற்றி கேட்டபோது, ''வாரத்தில் ஐந்து நாட்களுக்கு என் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று விடுவார்கள். இந்த மூன்று நாள் விடுப்பு என்பதை உண்மையாக எல்லா நிறுவனங்களிலும் செயல்படுத்துவார்களா என்று நம்பமுடியாது.

அதனால், குடும்பத்துடன் செலவிடும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும். உடல் நலன் மோசமாகும்,''என்கிறார் செல்வி.

மாதவிடாய் காலங்களில் 12 மணிநேரம் தொடர்ந்து வேலைசெய்வதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்கிறார் செல்வி. ''பணியிடங்களில் மாதத்தில் ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை என்ற ஒன்றை அரசாங்கம் கொண்டுவந்தால் எத்தனை பெண்களின் வலி குறையும் தெரியுமா? தொடர்ந்து 12 மணிநேரம் நாங்கள் வேலை செய்தால், நடைப்பிணமாகதான் வாழவேண்டியிருக்கும்,''என்கிறார் அவர்.

வறுமை காரணமாக ஓய்வைத் தள்ளிப்போடும் பெண்


22 வயதான சியாமளா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)அதீதமான மூட்டு வலி மற்றும் கால்வலிக்கு சிகிச்சை எடுத்துவருகிறார்.

காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை செய்துவரும் சியாமளா, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். குடும்ப வறுமை காரணமாக பணிச்சுமைக்கு மத்தியில் வேலைசெய்துவருகிறார்.

தற்போது தமிழ்நாடு அரசாங்கம் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் தினமும் 12 மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கும் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளதால், அது செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில், தன்னைப் போன்ற ஆயிரக்கணக்காக பெண்களின் உடல் மற்றும் மனநிலை மிகவும் மோசமானதாகிவிடும் என்று வருந்துகிறார்.

''எட்டு மணிநேர வேலை என்று இருக்கும்போதே அதிக பணிச்சுமையில் தவிக்கிறோம். தற்போது அரசாங்கமே 12 மணிநேர வேலையை உறுதி செய்துள்ளது என்பதால், எங்களின் உடல்நிலை இளவயதிலேயே மோசமாகிவிடும்.

நாங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து நாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்குப் பயணம் செய்து வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகும். விடுதியில் உள்ள உணவும் தரமானதாக இல்லை. ஓய்வு எடுக்கும் நேரமும் குறையும் என்பதால், இளவயதில் எங்களுக்கு உடல்சோர்வு மற்றும் மனச்சோர்வு ஏற்படும்,''என்கிறார் சியாமளா.

தனக்கு ஏற்பட்டுள்ள கால்வலி பற்றி பேசும்போது, ''காலில் ரத்த ஓட்டம் சரியாக இல்லை என்பதால், கீழ் பாதம் கருப்பு நிறமாகிவிட்டது. சிகிச்சைக்குச் சென்றபோது, ஓய்வு கட்டாயம் தேவை என்று மருத்துவர் சொன்னாலும், இந்த வேலையில் எனக்கு கிடைக்கும் ரூ.15,000 சம்பளத்திற்காக நான் ஓய்வு எடுக்கவில்லை.

ஆனால் எட்டு மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தினால், இந்த நிலைமை இன்னும் மோசமாகும். ஒரு வாரத்தில் 48 மணிநேரம் வேலை ஆனால் நான்கு நாட்களில் அந்த 48 மணிநேரத்திற்கான வேலையை வாங்கிக்கொள்கிறோம் என்கிறார்கள்.

எங்களை போன்ற ஏழை தொழிலாளர்களின் உடல்நலனை பற்றிய அக்கறை யாருக்கும் இல்லை. இயந்திரங்களுடன் வேலை செய்யும் இயந்திரமாகிவிடுவோம் நாங்கள்,''என்கிறார் சியாமளா.

சியாமளா பணிபுரியும் ஆலையில் , சுமார் 10,000 மேற்பட்ட பெண்கள் வேலைசெய்வதாகவும், தொழிற்சங்கம் அமைக்கமுடியாது என்றும் கூறுகிறார். ''தொழிலாளர் நலக் குழு என்ற குழு இருந்தாலும், அதில் நிறுவனத்திற்குச் சாதகமான நபர்கள்தான் அந்த குழுவில் இருக்கிறார்கள். அதனால், 12 மணி நேர வேலை ஆபத்தானது.

குறைந்தபட்சம் ஓவர் டைம் வேலை பார்த்தால், அதற்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும். ஆனால், 12 மணிநேரம் வேலை என்றால் அதிக நேரம் வேலைவாங்குவார்கள், ஆனால் அதிக சம்பளம் தரமாட்டார்கள். மூன்று நாட்கள் விடுப்பு தருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. தற்போது வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு, அவ்வப்போது, அவரச வேலை என்று விடுப்பு நாளில் பாதி நாளில் வேலை செய்யவைப்பார்கள். அதனால் மூன்று நாள் விடுப்பு கிடைக்காது.எங்கள் பிரச்சனைக்கு தீர்வு இருக்காது,''என்கிறார் சியாமளா.

கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாகும் பெண்கள்


செல்வி மற்றும் சியாமளா போன்ற பெண்களின் நிலை குறித்து அரசாங்கம் யோசிக்கவேண்டும் என்றும் 12 மணி நேர வேலை என்பது தொழிற்சாலைகளின் லாபத்திற்காக மட்டும் பயன்படும் என்றும் தொழிலாளர்களின் தினசரி வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்கிறார் பெண்ணிய செயற்பாட்டாளர் ரேணுகா.

''பணிபுரியும் இடங்களில் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும், அவர்களுக்கான வசதிகளை தரவேண்டும் என்ற உலக அளவில் விவாதிக்கப்பட்டுவருகிறது.

ஆனால் தமிழ்நாடு அரசாங்கம் தற்போது 12 மணிநேர வேலை நேரத்தை கொண்டுவருவதால், பணியிடங்களில் இருந்து கொத்துக்கொத்தாக பெண் பணியாளர்களை இழக்கப்போகிறோம். ஆலைகளில் இளம் பெண்கள் பலர் கொத்தடிமையாக வேலை செய்யப்போகிறார்கள். பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் திட்டங்களை கொண்டுவந்ததாக சொல்லும் தமிழ்நாடு அரசு, தற்போது மிகவும் பிற்போக்குத்தனமான முடிவை எடுத்துள்ளது,'' என்று விமர்சிக்கிறார் ரேணுகா.

மேலும், மூன்று நாட்கள் விடுப்பு இருப்பதால், ஒரு சில பெண்கள் மற்றொரு வேலைக்கு செல்ல பெண்கள் முயற்சிப்பார்கள் என்றும் சொல்கிறார் ரேணுகா. ''மூன்று நாட்கள் வீட்டில் இருப்பதற்கு பதிலாக ஏற்கனவே செய்யும் வேலையுடன் மற்றொரு வேலைக்கு செல்லலாம் என்ற யோசனை வந்துவிடும். ஏற்கனவே பொருளாதாரச் சுமையை தாள முடியாத நடுத்தரக்குடும்பங்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், ஓய்வின்றி மேலும் ஒரு வேலைக்கு செல்வார்கள்,''என்கிறார்.

மீண்டும் வரும் சுமங்கலி திட்டம்


தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள வேலைநேரம் தொடர்பான சட்டத்திருத்தம் குறித்து, திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செயல்படும் மகளிர் ஆய்வுத்துறையின் தலைவரான பேராசிரியர் மணிமேகலையிடம் பேசினோம்.

கூடுதலான நேரம் ஆலைகளில் பெண்கள் வேலையில் இருப்பது என்பது அவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படுத்தும் என்கிறார்.

''12 மணிநேரம் வெளியில் பார்த்துவிட்டு, வீட்டு வேலைகளை கவனிக்காமல் இருக்கவேண்டாம் என்று கூறி பல நடுத்தரக்குடும்பங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதை தடுப்பார்கள்.

வறுமைகோட்டிற்கு கீழ்வாழும் குடும்பங்களில் உள்ள பெண்கள், கட்டாயம் வருமானம் ஈட்டவேண்டும் என்ற நிலையில் இருப்பதால், மேலும் மோசமான உழைப்புச் சுரண்டலுக்கு பழக்கப்படுத்தபடுவார்கள். அதோடு, பெண்கள் வேலைக்கு சென்று திரும்பும் நேரத்தில் அவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழும் என்பதால், பல வித புதிய சிக்கல்களை அவர்களை சந்திப்பார்கள்,''என்கிறார் மணிமேகலை.

மேலும், தமிழ்நாட்டில் பல ஆண்டுகள் போராடி தடைசெய்யப்பட்ட சுமங்கலித்திட்டம் புதிய முறையில் உருவெடுக்க இந்த சட்டத்திருத்தம் வழிவகுக்கும் என்கிறார் அவர்.

''வறுமையான குடும்பத்தில் உள்ள பெண்கள் பணியாற்றும் ஆலைகளில் 12 மணிநேரம் என்பதை ஏற்றுக்கொண்டு செயல்பட்டால், அது மீண்டும் சுமங்கலித் திட்டம் போன்ற நடைமுறையை பரவலாக்கும். பெண்களின் பங்கேற்பை உறுதிசெய்ய வளர்ந்த நாடுகளில் தினசரி வேலை நேரத்தை ஆறு மணிநேரமாக மாற்றமுடியுமா என்று யோசித்துவருகிறார்கள். நாம் பின்னோக்கி செல்லும் முடிவை எடுத்திருக்கிறோம். பெண்களின் முன்னேற்றத்தை இது தடை செய்யும்,''என்கிறார் அவர்.

நெகிழ்வுத்தன்மையை எதிர்பார்க்கும் தொழிற்சாலைகள்


காஞ்சிபுரம் மாவட்டம் சிஐடியு தலைவர் கண்ணன் பேசும்போது, இந்த சட்டத்திருத்தம் பணியாளர்களை கொத்தடிமைகளாக மாற்றும் என்கிறார். பல பெருநிறுவனங்கள் பணியாளர்களின் நலனில் அக்கறை காட்டுவதில்லை என்றும் தற்போது அரசங்காமே 12 மணி நேர வேலை என விதிகளை தளர்த்தினால், தொழிலாளர்களின் நிலை இன்னும் மோசமாகிவிடும் என்கிறார் கண்ணன்.

''காஞ்சிபுரத்தில் எட்டு மணி நேர வேலையில் உள்ள பல ஊழியர்கள், உண்மையில் 10 மணி நேரம் வேலை செய்கிறார்கள். குறிப்பாக செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனங்களில் பெரும்பாலும் பெண்கள்தான் வேலைசெய்கிறார்கள். அவர்களின் பிரச்சனைகளை பற்றிப் பேசுவதற்குக்கூட பலநேரம் அவர்கள் முன்வருவதில்லை. அதனால், தொழிற்சாலைகளின் லாபத்தை மட்டும் பார்க்காமல், தொழிலாளர்கள், குறிப்பாகப் பெண் தொழிலாளர்களின் நிலையைப் பற்றியும் அரசாங்கம் யோசிக்கவேண்டும்,''என்கிறார் கண்ணன்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் கொண்டுவந்தபோது, திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க., வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இருந்தபோதும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டத்திருத்தம் குறித்து பேசிய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் தொழிலாளர்கள் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்வது என்ற தற்போதைய நிலையே நீடிக்கும் என்றார்.

"திருத்தி அமைக்கப்பட்டுள்ள 65-ஏ பிரிவின் படி, நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகள் தொழிலாளர்கள் நலன் பாதிக்காத வகையில், அவர்களின் ஒப்புதலுடன் மட்டுமே இதை நடைமுறைப்படுத்த முடியும். ஒரு வாரத்தில் 48 மணி நேரம் வேலை நேரம்தான் வேலை பார்க்க முடியும். அதில் மாற்றம் ஏதும் இல்லை. எந்த தொழிற்சாலை விரும்புகிறதோ, அந்த தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே இந்த சட்டம் பொருந்தும்" என்றார்.

சட்டத்திருத்தம் குறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருகின்ற நிறுவனங்கள் பணி நேரத்தில் ஒரு நெகிழ்வுத் தன்மையை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

"தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் வேலை நேரத்தில் நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இந்த நெகிழ்வுத்தன்மையின் மூலமாக புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தாது.

குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தும். மின்னணுவியல் துறை, தோல் பொருட்கள் இல்லாமல் காலணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், மின்னணுவியல் தொகுப்புத் தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள் போன்றவற்றில் பணியாற்றுபவர்கள், அவர்கள் வேலை பார்க்கும் சூழலுக்கு ஏற்ற வகையில் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம்" என்றார் தங்கம் தென்னரசு.

பிபிசி தமிழ்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 22, 2023 10:17 pm

"12 மணி நேர வேலை சமூகத்தை பின்னோக்கி அழைத்து செல்லும்" - எதிர்க்கும் தொழிற்சங்கங்கள்



“தொழிலாளர் விரோத நடவடிக்கையின் உச்சமாக, தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் மூன்று வருடங்களுக்கு இடைநீக்கம் (சஸ்பென்ட்) செய்யப்படுகின்றன” என்று உத்தர பிரதேச அரசும், “8 மணி நேர வேலை 12 மணி நேரமாக உயர்த்தப்படுகிறது” என்று மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆளும் அரசுகளும் அறிவித்திருக்கின்றன.

ஏழை தொழிலாளர்களை எப்படி வேண்டுமானாலும் சுரண்டலாம், ஏமாற்றலாம். அவர்கள் உரிமைகளை யார் வேண்டுமானாலும் விருப்பம் போல் பறித்துக் கொள்ளலாம்” என்ற ஆபத்தான உள்நோக்கத்தை இந்த மாநிலங்களின் செயல்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.

தொழிலாளர்கள் அனுபவித்து வரும் உரிமைகள், ஏதோ பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் போல், குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து பெற்றவை அல்ல; 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி சிகாகோ நகரில் தொழிலாளர்கள் பேரணி நடத்தி - ரத்தம் சிந்தி - உயிரைத் தியாகம் செய்து பெற்ற உரிமை!``

2020ஆம் ஆண்டில் குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை ஆண்ட பா.ஜ.க. அரசுகள், 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தி உத்தரவிட்டதற்கு எதிராக தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும் அப்போதைய எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்வைத்த விமர்சனம்தான் மேலே உள்ள வார்த்தைகள்.

"பா.ஜ.க. அரசின் “மக்கள் விரோத”, “தொழிலாளர் விரோத" நடவடிக்கைகளை - அப்படியே “காப்பி” அடித்துவரும் அ.தி.மு.க. அரசு - தமிழகத்தில் அதுமாதிரி எந்த ஒரு தொழிலாளர் விரோத முடிவினையும் எடுக்க, கனவில் கூட எண்ணிப் பார்த்திடக் கூடாது" என்று அப்போது எதிர்க்கட்சித் தலைவராக கடுமையாக எச்சரித்தார் மு.க.ஸ்டாலின்.

தற்போது ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும் போது, அவரது தலைமையிலான அரசே அப்படியொரு சட்டத்திருத்த மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.

இந்த சட்டத்திருத்தம் குறித்து விளக்கம் அளித்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், "தற்போது நடைமுறையில் உள்ள வாராந்திர, தினசரி வேலை நேரம், வரம்புமுறைகள், ஓய்வு, இடைவேளை, ஓவர் டைம், பணிக்கால சம்பளம், வாராந்திர விடுமுறை போன்றவை எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

திருத்தி அமைக்கப்பட்டுள்ள 65-ஏ பிரிவின் படி, நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகள் தொழிலாளர் நலன் பாதிக்காத வகையில் தொழிலாளர்களின் ஒப்புதலுடன் மட்டுமே புதிய திருத்தத்தை நடைமுறைப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் வாரத்துக்கு 48 மணி நேரம் வேலை என்பது அப்படியே தொடரும்" என்று தெரிவித்திருந்தார்.

நிறுவனங்கள் எதிர்பார்க்கும் நெகிழ்வுத்தன்மை எது?


"தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் வேலை நேரத்தில் நெகிழ்வுத்தன்மையை எதிர்பார்க்கின்றன. இந்த நெகிழ்வுத்தன்மையின் மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

குறிப்பாக, பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக உருவாகக் கூடிய ஒரு வாய்ப்பு இருக்கிறது. இன்றைக்கு இருக்கும் மாறுபட்ட வேலை சூழலில் இந்த நெகிழ்வுத்தன்மை அவசியமான ஒன்றாக இருக்கிறது" என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர், "அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தாது. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தும். மின்னணுவியல், தோல் பொருட்கள் இல்லாமல் காலணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், மின்னணுவியல் தொகுப்புத் தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள் போன்றவற்றில் பணியாற்றுபவர்கள், அவர்கள் வேலை பார்க்கும் சூழலுக்கு ஏற்ற வகையில் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம்" என்றும் அவர் தெரிவித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 22, 2023 10:18 pm

ஸ்டாலின் அறிக்கையை அவரே படித்துப் பார்க்க வேண்டும்


தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `8 மணி நேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என்பதை நூறாண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் தங்களது உரிமையாக கடைப்பிடித்து வருகிறார்கள்.

2020ஆம் ஆண்டில் மத்திய அரசு தொழிலாளர் வேலை சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. வாரத்தில் 4 நாட்கள் குறைந்தபட்சம் 48 மணி நேர வேலை, 3 நாட்கள் விடுமுறை என்பது அந்தச் சட்டத்தின் ஷரத்து.

அப்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் இந்தச் சட்டத்தை எதிர்த்து வக்கணை பேசினார். பாஜக ஆளும் மாநிலங்களைப் போல் மத்திய அரசுக்கு தலையாட்டாமல் தமிழகத்தில் இந்தச் சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக அரசுக்கு கெடு விதித்தார்.

அன்று மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை இன்று அவரே படித்துப் பார்க்க வேண்டும். தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தொழிலாளர் விரோத சட்டத்தை உடனடியாக திமுக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், தமிழக தொழிலாளர்களின் நலனைக் காக்க அதிமுக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளூம்` என்று குறிப்பிட்டுள்ளார்.

12 மணி நேர வேலையின் ஆரம்பப் புள்ளி எது?


கடந்த 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவியதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்றவை மூடப்பட்டன. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றதால் தொழில் நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்தன.

இந்நிலையில், 2020 மே மாதம் 6ம் தேதி தொழில் நிறுவனங்களுடன் அப்போதைய மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் பேச்சுவார்த்தை நடத்தினார். தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் 12 கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தனர்.

கொரோனா பொது முடக்க காலத்தை பணி நீக்கமாக கருதும் வகையில் தொழில் தகராறுகள் சட்டத்தில் விதிகளை தளர்த்த வேண்டும்.
தொழில் துறை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் பணப்புழக்க நெருக்கடி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை சிஎஸ் ஆர் (கார்ப்பரேட் சமூக பொறுப்பு) நிதியின் கிழ் செலவீனங்களின் கீழ் ஈடு செய்ய வழி வகை செய்ய வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியம், போனஸ் மற்றும் சட்டப்பூர்வ நிலுவைத் தொகைகள் போன்ற விதிகளை தவிர்த்து தொழிலாளர் சட்டங்களை அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும்.

தொழில்நிறுவன பிரதிநிதிகள் மத்திய அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளில், வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும் என்பதும் இடம்பெற்றிருந்தது.

அதற்கு முன்பாகவே ஒருசில மாநிலங்கள் 12 மணி நேரம் வேலை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தன. கொரோனா பொது முடக்கம் விலக்கிக்கொள்ளப் பட்ட பின்னர், பொருளாதார செயல்பாடுகளை முன்னெடுக்கவும் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கவும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது.

அதன்படி, தொழிலாளர்கள் தினமும் 12 மணி நேரம் என வாரத்திற்கு அதிகப்பட்சமாக 72 மணி நேரம் (6 நாட்கள்) வேலை செய்யும் வகையில் திருத்தம் மேற்கொள்ள திட்டமிட்டது. மத்திய அரசு எவ்வித திருத்தமும் செய்வதற்கு முன்பே, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், இமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்கள் வேலை செய்யும் நேரத்தை நீடிப்பது தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட்டன. உத்தரப் பிரதேசமும் 12 மணி நேரம் வேலை தொடர்பாக 2020 மே மாதத்தில் அறிவிப்பு வெளியிட்டது, எனினும் உடனடியாக இந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுகொண்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 22, 2023 10:19 pm

புதிய தொழிலாளர் விதிகள் 2022


இந்திய அரசின் புதிய தொழிலாளர் சட்ட விதிகளை கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தவுள்ளதாக பரவலாக பேசப்பட்டது. எனினும், பலத்த எதிர்ப்புகள் காரணமாகவும், பல மாநிலங்கள் அதற்கு தேவையான விதிகளை வகுக்காமலும் உள்ளதால் இந்த விதிகள் தற்போதுவரை அமல்படுத்தப்படாமல் உள்ளன. புதிய தொழிலாளர் விதிகள் 2022ல் நான்கு பிரிவுகளின் கீழ் 29 சட்ட விதிமுறைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த 29 சட்ட விதிகளில் ஊதிய பிரிவின் கீழ் 4 சட்ட விதிமுறைகளும், சமூக பாதுகாப்பின் கீழ் 9 சட்ட விதிமுறைகளும், பணிப் பாதுகாப்பு, உடல்நலம், பணிச்சூழல் ஆகிய பிரிவுகளின் கீழ் 13 சட்ட விதிமுறைகளும் உள்ளன. தொழில் உறவுகள் பிரிவின்கீழ் மற்ற மூன்று சட்ட விதிமுறைகளும் உள்ளன. புதிய விதியின்படி, ஊழியர்களின் 50% வருமானம் அடிப்படை சம்பளமாக காட்டப்பட வேண்டும். இதன்மூலம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பி.எஃப்) ஊழியர்களின் பங்கு அதிகரிக்கும்.

இதனால், தனியார் துறையில் பணிபுரிபவர்களின் 'டேக் ஹோம்' வருமானம் குறையும் என, தொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால், இந்த மாற்றத்தால் அவர்களின் ஓய்வுக்குப் பின்னர் கிடைக்கும் பி.எஃப் மற்றும் பணிக் கொடை தொகை உயர்ந்து அவர்கள் மதிப்பான வாழ்க்கையை வாழ உதவும் என அரசு கூறுகிறது.

அதன்படி, வாரத்திற்கு 48 மணி நேரம் என்ற வேலைநேரத்தில் மாற்றம் கிடையாது. அந்த வேலை நேரத்தை வாரத்திற்கு 4 நாட்கள், 5 நாட்கள், 6 நாட்கள் என பிரித்து வழங்கலாம். அதற்கேற்ப, தொழிலாளர்களுக்கு வார விடுமுறை கிடைக்கும். அதாவது தினசரி 12 மணி நேரம் வீதம் வேலை செய்தால் வாரத்திற்கு 3 நாட்கள் வாரவிடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்ட விதிகள் கூறுகின்றன.

12 மணி நேர வேலை என்ற தொழில் நிறுவனங்களின் முன்மொழிவை மத்திய அரசு பிரதிபலித்த போது கடுமையாக எதிர்த்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதனை செயல்படுத்த முனைவதா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில், "2020ம் ஆண்டு அப்போதைய அ.தி.மு.க. அரசு வேலைநேரத்தை அதிகரிக்க முயற்சித்தபோது அதை தி.மு.க கடுமையாக எதிர்த்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் எட்டு மணி நேர வேலை நேரத்தை பன்னிரெண்டு மணி நேரமாக உயர்த்தியதற்கு தி.மு.கவின் சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

நிலைமை இப்படி இருக்கையில், நெகிழ்வுத் தன்மை என்பது தொழிலாளியை ஒட்டச் சுரண்டவும், முதலாளிகளுக்கு உறிஞ்சி கொடுக்கவுமே வழிவகுக்கும். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் வேலை நேரம் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும். தொழிலாளர் நலனுக்கு முரணாகவும் சட்ட நியாயங்களுக்கு புறம்பாகவும் இந்த சட்டத் திருத்தம் இருக்கிறது.

வேலை நேரம் குறித்த எந்த சட்டத்திற்கும் மதிப்பளிக்க வேண்டியதில்லை என்பதற்கான ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்திருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு பதிலாக சட்டங்களே தேவையில்லை என்பதற்காக சட்டம் இயற்றுவதாகும். தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த மசோதாவை கைவிடுவதாக அறிவிக்க வேண்டும்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது.

கருணாநிதி விருப்பத்திற்கு எதிராகவே திமுக செயல்படலாமா?


திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதி தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக குறைக்க விரும்பியதாகம் தற்போதைய திமுக அவரது விருப்பதற்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டுகிறார் சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "8 மணி நேரம் வரை வேலை வாங்கலாம் என்பதுதான் தொழிற்சாலைகளுக்கான சட்டம். தேவைப்பட்டால் அதிகப்பட்சமாக கூடுதலாக 1 மணி நேரம் சேர்த்து 9 மணி நேரம் வேலை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், வாரத்திற்கு 48 மணி நேரம் என்ற கணக்கை தாண்டக் கூடாது," என்கிறார்.

"8 மணி நேரத்துக்கு வேலை வாங்க அனுமதிக்கும்போதே ஒருசில இடங்களில் 12 மணி நேரம் வாங்கப்படுகின்றன. அப்படி இருக்கும்போது 12 மணி நேரத்துக்கு வேலை வாங்க அனுமதித்தால் என்ன ஆகும்.

12 மணி நேரம் தொடர்ச்சியாக வேலை செய்தால் தொழிலாளியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மன அழுத்தத்திற்கு உள்ளாவர். இதனால், அவரது நலம் மட்டுமல்லாது குடும்பத்தின் நலமும் பாதிக்கப்படும். மேற்கு உலக நாடுகள் வாரத்துக்கு 48 நேரம் என்பதை 36, 35 என்று குறைத்து வருகின்றனர்.

இந்தியாவில் கூட திமுக தலைவராக இருந்த கருணாநிதி உட்பட பலர் வேலை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளனர். அவரது மே தின முழக்கத்தில் இந்த கோரிக்கை இருக்கும். 20 ஆண்டுகளாக இந்த கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. 8 என்பதை 6 ஆக குறைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அதனை அதிகரிப்பது எப்படி சரியாகும்?

முதலாளிகள், முதலாளிகள் சங்கங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த சட்டத்தை கொண்டு வருவதாக கூறுகிறார்கள். இந்த சட்டத்திருத்தத்தால் யாருக்கு பாதிப்பு ஏற்படுமோ அந்த தொழிலாளர்கள், தொழில் சங்கங்களிடம் கருத்து கேட்க வேண்டாமா? தமிழ்நாட்டில் மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் உள்ளது. தொழிற்சங்கங்கள், முதலாளி சங்கங்கள், அதிகாரிகள் என முத்தரப்பு குழு இதில் இடம்பெற்றுள்ளது. இந்த குழுவில் கூட சட்டத்திருத்தம் குறித்து அரசு விவாதிக்கவில்லை. அரசு செய்துள்ள திருத்தம் என்பது பின்னோக்கி இழுத்துச் செல்லக்கூடியது. உடனடியாக சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் வலுவான போராட்டங்களை முன்னெடுப்போம்," என்கிறார் சவுந்திரராசன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 22, 2023 10:23 pm



``திமுக அரசு செய்யும்‌ அனைத்து செயல்களுக்கும்‌ தலையாட்டும்‌ அதன்‌ கூட்டணிக்‌ கட்சிகளே, இந்த சட்டத்தை எதிர்ப்பது, இந்த அரசின்‌ தொழிலாளர்‌ விரோதப்‌ போக்கை வெளிச்சம்‌ போட்டுக்‌ காட்டுகிறது." - இபிஎஸ்

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று, எதிர்க்கட்சிகள், தி.மு.க-வின் கூட்டணிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலை மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அரசு இந்த மசோதாவை திரும்பபெற வேண்டும் என எதிர்க்கட்சிகளும், ஆளும் கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், `அரசு இந்த மசோதாவை திரும்பபெறாவிட்டால் தொழிலாளர்களின் நலனைக்‌ காக்க அ.தி.மு.க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும்‌' என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தனி மனித வாழ்க்கையிலும்‌, அரசியலிலும்‌ இரட்டை வேடம்‌ போடுவதையே வாடிக்கையாகக்‌ கொண்ட இன்றைய ஆட்சியாளர்கள்‌, தமிழக தொழிலாளர்களின்‌ வயிற்றில்‌ அடிக்கும்‌ வேலையை கனகச்சிதமாக செய்திருக்கின்றனர். 8 மணி நேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம்‌ என்பதை நூறாண்டுகளுக்கும்‌ மேலாக தொழிலாளர்கள்‌ தங்களது அடிப்படை உரிமையாக கடைபிடித்து வருகிறார்கள்‌. கடந்த 2020-ம்‌ ஆண்டில்‌ மத்திய அரசு தொழிலாளர்‌ வேலை சட்டத்தில்‌ ஒரு திருத்தம்‌ கொண்டு வந்தது.

வாரத்தில்‌ 4 நாள்கள்‌ குறைந்தபட்சம்‌ 48 மணி நேர வேலை, 3 நாள்கள்‌ விடுமுறை என்பது அந்தச்‌ சட்டத்தின்‌ சரத்து. தகவல்‌ தொழில்நுட்ப துறைகளிலெல்லாம்‌ 8 மணி நேரத்திற்கு மேல்‌ வேலை வாங்குவதாலும்‌, உரிய சம்பளம்‌ தராமல்‌ இருப்பதாலும்‌ பணியாளர்களின்‌ உரிமையை நிலைநாட்ட இந்தச்‌ சட்டம்‌ கொண்டு வருவதாகவும்‌ தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநில அரசும்‌ அவர்களின்‌ விருப்பத்திற்கேற்ப இந்தச்‌ சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம்‌ என்றும்‌ தெரிவித்திருந்தது.

12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா Vikatan%2F2023-04%2Fdb5bc616-e18d-4e0c-9786-3e1d0df6c8dc%2F74e6b345_3171_49e1_b713_c1facd1afc35

அப்போது, எதிர்க்கட்சித்‌ தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ அவர்கள்‌ இந்தச்‌ சட்டத்தை எதிர்த்து வக்கணையாகப் பேசினார்‌. பா.ஜ.க ஆளும்‌ மாநிலங்களைப்‌ போல்‌ மத்திய அரசுக்கு தலையாட்டாமல்‌ தமிழகத்தில்‌ இந்தச்‌ சட்டத்தை நிராகரிக்க வேண்டும்‌ என்று, என் தலைமையிலான அம்மாவின்‌ அரசுக்கு கெடு விதித்தார்‌. அன்று ஸ்டாலின்‌ வெளியிட்ட அறிக்கையை இன்று அவரே படித்துப்‌ பார்க்க வேண்டும்‌.

தமிழக மக்களின்‌ நலனுக்காகவும்‌, தமிழக மக்களின்‌ தேவையை பூர்த்தி செய்யவும்‌, அம்மாவின்‌ அரசால்‌ மத்திய அரசுக்கு கடிதங்கள்‌ எழுதப்படும்‌ போதெல்லாம்‌ எங்களைப்‌ பார்த்து கேலி பேசிய அப்போதைய எதிர்க்கட்சித்‌ தலைவர்‌, தற்போதைய விடியா அரசின்‌ முதலமைச்சர்‌, கொத்தடிமையாக மாறி 21.4.2023 அன்று தமிழக தொழிலாளர்களின்‌ வயிற்றில்‌ அடிக்கும்‌ விதமாக, 12 மணி நேர கட்டாய வேலை திருத்தச்‌ சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில்‌ ஒருதலைபட்சமாக நிறைவேற்றியதை அ.தி.மு.க சார்பில்‌ வன்மையாகக்‌ கண்டிக்கிறேன்‌.

விடியா தி.மு.க அரசு செய்யும்‌ அனைத்து செயல்களுக்கும்‌ தலையாட்டும்‌ அதன்‌ கூட்டணிக்‌ கட்சிகளே, இந்த சட்டத்தை எதிர்த்துப்‌ பேரவையில்‌ இருந்து வெளிநடப்பு செய்திருப்பது, இந்த அரசின்‌ தொழிலாளர்‌ விரோதப்‌ போக்கை வெளிச்சம்‌ போட்டுக்‌ காட்டுகிறது. நீட் பிரச்னையா? மத்திய அரசை கைகாட்டுவது... பெட்ரோல்‌, டீசல்‌ விலை உயர்வா? தன்பொறுப்பை தட்டிக்‌ கழித்து மத்திய அரசை கைகாட்டுவது... என்று நிரந்தர அடிமை சாசனம்‌ எழுதிக்‌ கொடுத்துள்ள இந்த விடியா தி.மு.க அரசுக்கு, அ.தி.மு.க பற்றியோ, பத்தாண்டு கால தன்னலமற்ற எங்களின்‌ மக்கள்‌ சேவையைப்‌ பற்றியோ குறை கூற எந்த அருகதையும்‌ கிடையாது.

அம்மாவின்‌ அரசு ஆட்சிப்‌ பொறுப்பில்‌ இருக்கும்போது, தமிழக மக்களுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும்‌ அனுமதித்ததில்லை. ஒரு பொய்யை திரும்பத்‌ திரும்பச்‌ சொல்லி, அதை உண்மையாக்கிவிடலாம்‌ என்ற கோயபல்ஸ்‌ தத்துவத்தைக்‌ கடைபிடிக்கும்‌ இந்த விடியா அரசின்‌ முதலமைச்சர்‌ தன்னிலை உணர்ந்து மக்கள்‌ விரோதச்‌ செயல்பாடுகளை கைவிட வேண்டும்‌ என்று வலியுறுத்துகிறேன்‌. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தொழிலாளர்‌ விரோத சட்டத்தை உடனடியாக இந்த அரசு திரும்பப்‌ பெற வேண்டும்‌. இல்லையெனில்‌, தமிழக தொழிலாளர்களின் நலனைக்‌ காக்க அ.தி.மு.க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும்‌ என்று எச்சரிக்கிறேன்‌" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 23, 2023 2:41 pm

12 மணி நேரம் வேலை சட்டம் வாபஸ் ஆகுமா? திங்கள் கிழமை அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை



தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக, இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் பேசுகையில், “வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்; இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5-வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது; அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை; விரும்பக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்படும்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், 12 மணி நேர வேலை சட்ட திருத்தம் தொடர்பாக வருகிற 24ஆம் தேதி தொழிற்சங்கங்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 23, 2023 4:10 pm

இந்த 12 மணி நேர வேலை விவகாரம் பற்றி தமிழக ஊடகங்கள் பேசாது, இதர மாகாண ஊடகமும் பாஜகவும் பேசாது ஆனால் புன்னகைக்கும்

தமிழக ஊடகங்களும் இணையதளங்களும் இதனை பற்றி எதுவுமே விளக்கமாக சொல்லாததால் நாம் சொல்வது அவசியமாகின்றது

நம்மை பின்பற்றி வருபவர்களுக்கு தெரியும் ஓரிரு ஆண்டுக்கு முன்பாகவே நாம் இதுபற்றி சொல்லியிருந்தோம்

டிரம்பர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்திலே இந்த விவகாரம் தொடங்கிற்று. சீனாவுக்கு எதிரான பெரிய முடக்கங்களை அவர் அறிவிக்க சீனாவில் தொழில் செய்யும் அமெரிக்க கம்பெனிகள் அந்நாட்டை விட்டு வெளியேறின அது இன்றும் தொடர்கின்றது

குறைந்த சம்பளம், ஏகபட்ட மனிதவளம், நீர் வளம், நிலவளம் என சீனாவினை விட அடுத்த தேர்வு எக்காலமும் இந்தியாதான்

ஆனால் இந்தியாவின் மிகபெரிய பலவீனம் தொழிலாளர் நல சட்டங்கள்

எதற்கெடுத்தாலும் யூனியன், வேலை நிறுத்தம், போராட்டம் என இந்தியாவில் கம்யூனிஸ்டுகளும் தொழிற்சங்கங்களும் செய்துவைத்திருக்கும் இம்சை பெரிது

பல்லாயிரம் கோடி முதலீடு செய்யும் பெரும் நிறுவணங்கள் நிச்சயம் மனித நேயம், மக்கள் நலம், கம்யூனிசம், சமத்துவம் காக்க வராது எல்லாமே வியாபாரம், போட்ட பணத்தை எடுக்க வேண்டும்

என்னதான் கம்யூனிச நாடு தொழிலாளர் நல நாடு என பெயர் இருந்தாலும் சீனாவின் கட்டுபாடுகள் அதிகம் குறைந்தது 14 மணிநேரம் வேலைவாங்கும் நாடு அது, போராட்டம் தொழிற்சங்கம் யூனியன் அதன் தலைவர் என்பதெல்லாம் அங்கு சாத்தியமில்லை

காலத்துக்கும் மாறாத அரசாங்கம் , மாறாத கொள்கைகள்

இதெல்லாம் சேர்ந்துதான் சீனாவை வளர்த்தன, இன்னொன்று சீனரோ ஜப்பானியரோ கொரியரோ சுறு சுறுப்பாக வேலை செய்வதில் வல்லவர்கள் , அவை வளர்ந்ததில் இந்த உழைப்புத்தான் முக்கியம்

இந்த உலகில் இன்று முன்னணியில் இருக்கும் ஒவ்வொரு நாட்டின் பின்னாலும் அம்மக்களின் அசுர உழைப்பு உண்டு சில எண்ணெய் வள‌ நாடுகளை தவிர‌

இப்படி இந்தியாவில் சில தொழிலாள நல சட்டங்கள் சிக்கலாக இருப்பதால் தொழிலாளர் நல சட்டங்களை தளர்த்தினால் நாங்கள் முதலீடு செய்ய தயார் என பன்னாட்டு நிறுவணங்கள் அறிவித்தன‌

இந்தியாவின் மோடி அரசு இதனை வரவேற்றது அதனை தன் கொள்கையாக்கிற்று, ஆனால் சிக்கல் நிறைந்த இந்தியாவில் மாகாண அரசுகளின் அதிகாரம் ஒரு விஷயம் என்பதால் எந்த மாநிலம் தொழில்களை ஈர்க்க விரும்புகின்றதோ அவர்கள் தொழிலாளர் நல சட்டத்தை திருத்தலாம் என ஆலோசனை சொன்னது

தமிழக அரசு மோடியின் குரலுக்குத்தான் செவிசாய்த்தது

மோடி கடந்த எட்டாம் தேதி சென்னையில் தமிழக அரசு பற்றி பேசும் போதே பல சந்தேகங்கள் எழுந்தன அதன் பொருள் இப்பொழுதுதான் புரிகின்றது

இது நிச்சயம் திமுக சவால் எடுக்க கூடிய நேரம், எங்கள் மாகாணத்தில் 8 மணிநேரம் அல்லது 6 மணிநேர வேலைதான் என மத்திய அரசோடு சவால் எடுக்கும் அரசியல் கோணமுள்ள நேரம்

ஆனால் மாநிலம் உருப்பட சிந்திக்கின்றார்கள் அல்லது வரும் மிகபெரிய முதலீட்டில் கொஞ்சம் அடிக்கலாம் என கணக்கிடுகின்றார்கள்

இந்த சட்டம் வழமை போல் கேரளத்தில் இல்லை இன்னும் பல மாநிலங்களில் இல்லை அவை உருப்படாது

திமுக கம்யூனிச சாயல் கொண்ட கட்சி என்றாலும் அதன் ஒரே கொள்கை பணம் , அதனால்தான் இதெல்லாம் சாத்தியம்

ஆக திமுக அரசு மாகாணத்துக்கும் தேசத்துக்கும் தனக்கும் நல்லது என இந்த தொழிலாளர் சட்டத்தை திருத்துகின்றது, நாட்டுக்கு நல்லது என மோடியும் புன்னகைக்கின்றார்

இன்னொரு வகையில் மோடியிடம் திமுக சரணடைந்ததும் தெரிகின்றது

ஆக பழனிச்சாமி செய்தால் அடிமைதனம் திமுக செய்தால் மாகாண நலம் என்பார்கள்

சரி, இந்த விவகாரத்தில் தமிழ்கா கம்யூனிஸ்டுகள் குதிக்க தொடங்கிவிட்டார்கள் அல்லவா? அவர்கள் அப்படித்தான்

சீனா பாதிக்கபடுவதை விரும்பமாட்டார்கள், தங்கள் எஜமான் வாழ சொந்தநாடு நாசமாகட்டும் என வழமை போல விரும்புவார்கள், அப்படியே சீனாவில் எத்தனைமணிநேர வேலை அம்மக்கள் எப்படியெல்லாம் உழைக்கின்றார்கள், ஏன் அங்கெல்லாம் தொழிற்சங்கம் போராட்டமெல்லாம் இல்லை என்பதை மட்டும் பேசவே மாட்டார்கள்

சீன கம்யூனிஸ்டுகள் சீன விசுவாசிகள், இந்திய தமிழக கம்யூனிஸ்டுகளும் அதே விசுவாசத்துடன் இருப்பதுதான் சரியல்ல.

#பிரம்ம_ரிஷியார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 24, 2023 10:14 am

12 மணி நேர வேலை மசோதா; யாரும் எதிர்பாராத முடிவை முதல்வர் எடுப்பார்; அமைச்சர் சேகர் பாபு



12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக முதலமைச்சர் நல்ல முடிவெடுப்பார் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன், தி.மு.க கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, 12 மணி நேர வேலை மசோதா குறித்து முதல் அமைச்சரின் வழிகாட்டுதலின்படி நாளைய தினம் (ஏப்ரல் 24) பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் த.மோ.அன்பரசன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அந்த கூட்டத்தில் சுமுகமாக பேசி நல்ல முடிவுகள் எடுக்கப்படும். இந்தப் பிரச்சனை தொடர்பாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முதலமைச்சர் பிரச்சனையை தீர்ப்பார். யாரும் எதிர்பாராத முடிவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுப்பார், என்று கூறினார்.

இதற்கிடையில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் மே 12 ஆம் தேதி வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக