புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகப்பேறு முதல் மெனோபாஸ் வரை... பெண்ணுடல் ஆரோக்கியம் தொடர்பான கேள்விகள், மருத்துவ விளக்கங்கள்! Poll_c10மகப்பேறு முதல் மெனோபாஸ் வரை... பெண்ணுடல் ஆரோக்கியம் தொடர்பான கேள்விகள், மருத்துவ விளக்கங்கள்! Poll_m10மகப்பேறு முதல் மெனோபாஸ் வரை... பெண்ணுடல் ஆரோக்கியம் தொடர்பான கேள்விகள், மருத்துவ விளக்கங்கள்! Poll_c10 
63 Posts - 40%
heezulia

48 Posts - 31%
Dr.S.Soundarapandian

31 Posts - 20%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகப்பேறு முதல் மெனோபாஸ் வரை... பெண்ணுடல் ஆரோக்கியம் தொடர்பான கேள்விகள், மருத்துவ விளக்கங்கள்! Poll_c10மகப்பேறு முதல் மெனோபாஸ் வரை... பெண்ணுடல் ஆரோக்கியம் தொடர்பான கேள்விகள், மருத்துவ விளக்கங்கள்! Poll_m10மகப்பேறு முதல் மெனோபாஸ் வரை... பெண்ணுடல் ஆரோக்கியம் தொடர்பான கேள்விகள், மருத்துவ விளக்கங்கள்! Poll_c10 
314 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Barushree

2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகப்பேறு முதல் மெனோபாஸ் வரை... பெண்ணுடல் ஆரோக்கியம் தொடர்பான கேள்விகள், மருத்துவ விளக்கங்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 23, 2023 11:43 pm

மகப்பேறு முதல் மெனோபாஸ் வரை... பெண்ணுடல் ஆரோக்கியம் தொடர்பான கேள்விகள், மருத்துவ விளக்கங்கள்! EbZd3w0

இந்த வைரஸ் உடலுறவின் மூலம் பரவக்கூடியது. உடலுறவு சமயத்தில் பிரசவ பாதையின் மூலம் ஆண்களிடம் இருந்து பெண்களிடம் பரவும். கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் இந்த வைரஸ் ஏற்படுத்தும் நோய்த்தொற்று சில பெண்களுக்கு புற்றுநோயாக மாறும்.

பிரசவம்

முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அடுத்த பிரசவமும் சிசேரியன்தான் நிகழுமா?

முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அடுத்த பிரசவமும் சிசேரியன்தான் நிகழ வேண்டும் என்பதில் எந்தக் கட்டாயமும் கிடையாது. முதல் குழந்தை எந்தக் காரணத்துக்காக சிசேரியன் மூலம் பிரசவிக்கப்பட்டது என்பதைப் பொறுத்து அடுத்த குழந்தை எப்படிப் பிறக்கும் என்பதைக் கூற முடியும். கர்ப்பப்பை சாதாரணமாக இல்லாமல் இருப்பது, அதாவது பிளவுபட்ட கர்ப்பப்பை, இரட்டை கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய் சிறியதாக இருத்தல் போன்ற சூழ்நிலைகளில் சிசேரியன் மூலம்தான் குழந்தை வெளியே எடுக்கப்படும். இதுதவிர, தாய்க்கு இதயநோய் பாதிப்புகள் இருந்தாலோ, தாயின் உயரம் 140 செ.மீ-க்குக் குறைவாக இருந்தாலோ சிசேரியன் முறையே பரிந்துரைக்கப்படும்.

இப்படி இல்லாமல் குழந்தையின் பொசிஷன் காரணமாக, நீர்ச்சத்து குறைவாக இருப்பது, முதல் பிரசவ நேரத்தில் நீரிழிவு அல்லது ரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் சிசேரியன் செய்யப்பட்டு இருக்கலாம். அப்படி இருக்கும்போது இரண்டாவது பிரசவ சமயத்தில் ஏதுவான சூழல் இருந்தால் சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்யலாம்.

பிரசவத்தின்போது முதுகில் போடப்படும் தடுப்பூசியால் ஆயுள் முழுவதும் முதுகுவலி இருக்கும் என்று சொல்கிறார்களே... அது உண்மையா?

உண்மையில்லை. பிரசவ நேரத்தில் முதுகுத் தண்டுவடத்தில் போடப்படும் ஊசியின் பெயர் Spinal anaesthesia. முதுகுப்பகுதியில் சிறிய ஊசி மூலம் மருந்தைச் செலுத்தி இடுப்புக்குக் கீழே உள்ள உடல் பகுதிகளை மரத்துப்போகச் செய்வதற்கு இந்த ஊசி பயன்படுகிறது. முழு உடலையும் மரத்துப்போக வைக்கும் General anaesthesia-வைவிட இந்த Spinal anaesthesia தான் பிரசவ நேரத்தில் உபயோகப்படுத்த ஏதுவானது. குழந்தையின் ஆரோக்கியத்துக்கும் இந்த வகையில் மயக்க மருந்து செலுத்துவதுதான் நல்லது. முழு உடலையும் மரத்துப்போக வைக்க ஊசி செலுத்தினால் அந்த மயக்க மருந்தின் தாக்கம் சிறிதளவு குழந்தையின் உடலில் இருக்கலாம். ஆனால், தண்டுவடத்தில் ஊசி போடும்போது மயக்க மருந்தின் தாக்கம் குழந்தையிடம் இருக்காது.

பிரசவத்துக்குப் பிறகு தாய் எழுந்து நடமாடுவது, பழைய நிலைக்குத் திரும்புவது அனைத்தும் தண்டுவடத்தில் ஊசி செலுத்தினால் கொஞ்சம் எளிதாக இருக்கும். முழு உடலுக்கும் மயக்க மருந்து செலுத்தினால் அது‌ கொஞ்சம் கடினமாக மாறலாம். தண்டுவடத்தில் ஊசி செலுத்தப்பட்டாலும் பிரசவத்துக்குப் பின்பு பெண்கள் சரியான முறையில் உடற்பயிற்சி செய்யும்போது, தசைகள் பழைய நிலைக்குத் திரும்பும். அதன்மூலம் முதுகுவலியைக் குறைக்கலாம்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?

இந்தியாவில் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் புற்றுநோய்களுள் இதுவும் ஒன்று. இந்தப் புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது Human Papilloma Virus என்று அழைக்கப்படும் ஒருவகை வைரஸ் ஆகும். இந்த வைரஸ் உடலுறவின் மூலம் பரவக்கூடியது. உடலுறவு சமயத்தில் பிரசவ பாதையின் மூலம் ஆண்களிடம் இருந்து பெண்களிடம் பரவும். கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் இந்த வைரஸ் ஏற்படுத்தும் நோய்த்தொற்று சில பெண்களுக்கு புற்றுநோயாக மாறும்.

இதை ஆரம்ப நிலையில் கண்டறிய `pap smear test' செய்துகொள்ள வேண்டும். ஆனால் கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய்க்கு சில அறிகுறிகள் உண்டு.

* வெள்ளைப்படுதல்.

* வெள்ளைப்படும்போது கலங்கலாகக் கெட்ட வாடையும் சேர்ந்து இருப்பது போல் இருக்கும்.

* உடலுறவின்போது உதிரப்போக்கு ஏற்படுவது.

* மாதவிடாய் இல்லாதபோதும் உதிரப்போக்கு ஏற்படுவது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?

கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயைத் தடுப்பதற்கு HPV தடுப்பூசி தற்போது உள்ளது. இதை பத்து வயது முதல் செலுத்தலாம். இரண்டு தவணைகளில் செலுத்தப்படும் இந்த ஊசியை பெண்களுடன் சேர்த்து ஆண் குழந்தைகளும் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த வைரஸ் ஆண்களிடம் இருந்துதான் பெண்களுக்குப் பரவும் வாய்ப்புள்ளது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் வருமா?

கண்டிப்பாக வரும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருக்கும் பெண்களுக்கு எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். உடலும் எப்போதும் அசதியாக இருப்பது போல் உணருவார்கள். உடலில் புற்றுநோய் இருந்தால் கர்ப்ப காலத்தில் பல சிக்கல்களை உண்டாக்கும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய கர்ப்பப்பை வாயிலிருந்து தசையை எடுத்து சோதனை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யப்படும்போது கர்ப்பப்பை வாய் அளவு சிறிதாகிவிடும். இது எடை குறைவான குழந்தை பிறப்பது, பிரசவ காலத்துக்கு மிகவும் முன்பாக குழந்தை பிறப்பது போன்ற பிரச்னைகளை உண்டாக்கும்.

கர்ப்பகால நீரிழிவு

கர்ப்ப காலத்தின்போது வரும் நீரிழிவு, மகப்பேறுக்குப் பின்பும் தொடர வாய்ப்பு உண்டா?

கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய நீரிழிவு நோயை Gestational Diabetes என்று கூறுவோம். இது பிரசவம் முடிந்த பின்பும் தொடர்வதற்கான வாய்ப்பு மிக அதிகம். ஒரு பெண்ணுக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு ஏற்பட்டால் பிரசவத்துக்குப் பின்பும் சர்க்கரை அளவை கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆறு வாரங்கள் வரை கட்டாயம் கண்காணித்து உரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். இதுதவிர, பல ஆண்டுகள் கழித்துகூட நீரிழிவு‌ நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு `Gestational Diabetes’ ஏற்பட்ட பெண்களுக்கு, சாதாரண பெண்களைவிட அதிகம்.

கர்ப்ப கால சர்க்கரை நோய் குழந்தைகளையும் பாதிக்குமா?

சர்க்கரை நோய் இருக்கும் தாய்மார்களின் குழந்தைகள் அளவில் பெரியதாக இருப்பார்கள். குறை மாதத்தில் குழந்தை பிறக்கவும் வாய்ப்பு உண்டு. நுரையீரலின் வளர்ச்சி கொஞ்சம் குறைவாக இருக்கும். இதனால் சுவாசம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம். குழந்தை பிறந்த பின் குழந்தையின் உடலில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும் (Hypoglycemia). தாய்க்கு சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்தால் குழந்தை வயிற்றில் இருக்கும்போது இறந்துகூட‌ போகலாம். கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் உள்ள தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் உடல் பருமன் பிரச்னை, சர்க்கரை நோய்க்கு உள்ளாகலாம்.

ரிஸ்க் நிறைந்த கர்ப்பம்

நஞ்சுக்கொடி இறக்கம் ஏற்பட்டால் பிரசவத்தில் சிக்கல் வருமா?

நஞ்சுக்கொடி இறக்கம் ஏற்படுவதன் மூலம் பிரசவம் சிக்கலாக மாற வாய்ப்புள்ளது. நஞ்சுக்கொடி பொதுவாக கர்ப்பப்பையின் மேற்புறத்தில் பொருந்தி இருக்கும்‌. அப்படியில்லாமல் கர்ப்பப்பை வாய்ப்பகுதியில், பிரசவப் பாதையில் நஞ்சுக்கொடி இருக்கும்போது அது பல சிக்கல்களை உண்டாக்கும். நஞ்சுக்கொடி கீழாக இருக்கும்போது தாய்க்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு ரத்தச்சோகையை உண்டாக்கலாம்.

இது பிரசவத்தை சிக்கலானதாக மாற்றும். கர்ப்ப காலத்தில் மூன்று மாதங்களில் தொடங்கி ஏழு மாதங்கள் வரை நஞ்சுக்கொடி கீழே இருப்பதால் உதிரப்போக்கு இருக்கலாம். குறை மாதத்தில் குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது. நிறை மாதம் வரையிலும் நஞ்சுக்கொடி கீழாகவே இருந்தால் சிசேரியன் மூலம்தான் பிரசவிக்க முடியும். ஆனால் அந்தச் சூழ்நிலையிலும்கூட ரத்தப்போக்கு அதிகமாக இருக்கலாம். இது தாயின் உயிருக்குக்கூட ஆபத்தாக முடியலாம். எனவே, இதுபோல் இருப்பவர்கள் ஐ.சி.யு, ரத்த வங்கி, குழந்தைகான NCU கேர் போன்ற அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனையில் பிரசவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

35 வயதுக்கு மேல் கருத்தரிப்பதில் சிக்கல்கள் இருக்கும் என்று சொல்கிறார்களே... அது உண்மையா?

உண்மைதான். பெண் குழந்தை பிறக்கும்போதே அந்தக் குழந்தை இரு சினைப்பைகளுடன் பிறக்கும். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்றதுபோல குறிப்பிட்ட அளவு கருமுட்டைகள் சினைப்பையில் பிறக்கும்போதே இருக்கும். இந்த அளவு ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறும். பெண் பருவமடைந்த பின்பு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நேரத்தில் உதிரப்போக்குடன் கருமுட்டையும் வெளியேறத் தொடங்கும். 45 வயது ஆகும்போது மெனோபாஸ் ஏற்பட்டு கருமுட்டை வெளிவருவது நின்று போகாலாம். ஒரு பெண் 35 வயதில் குழந்தை பெற நினைத்தால் அந்த நேரத்தில் ஏற்கெனவே‌ நிறைய கருமுட்டைகள் தீர்ந்து இருக்கும். இது கருத்தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம்.

மெனோபாஸ்

மெனோபாஸ் ஏற்பட்டால் அதன்பின் எப்போதும் சிலர் உடல் சோர்வாக இருக்கிறது என்று சொல்கிறார்களே... காரணம் என்ன?

மெனோபாஸ் ஏற்பட்ட பின் பெண்களின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் நடக்கும். இந்த மாற்றங்கள் எலும்பின் வலுவைக் குறைக்கும். இதனால் கால்வலி, மூட்டுவலி போன்றவை ஏற்படலாம். இந்த நேரத்தில் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின்களைச் சேர்த்துக் கொள்ளும்போது உடல் சோர்வைக் குறைக்க முடியும்.

எந்த வயதில் மெனோபாஸ் வருவதை இயல்பாக எடுத்துக் கொள்ளலாம்?

45 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் மெனோபாஸ் ஏற்படுவது இயல்பானது. ஆனால் 40 வயதுக்கும் குறைவாக ஒரு பெண்ணுக்கு மெனோபாஸ் ஏற்படும்போது அது ப்ரீமெச்சூர் மெனோபாஸ் (Premature Menopause) என்று அழைக்கப்படுகிறது.

பிசிஓடி மற்றும் மனநிலையில் தடுமாற்றங்கள் (PCOD +Moodswigs)

`மூட்ஸ்விங்ஸ்’ ஏற்படும் நேரத்தில் சாக்லேட் மற்றும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் ஹார்மோன் மாற்றம் நிகழுமா?

மூட்ஸ்விங்ஸ் என்பது மாதவிடாய் ஏற்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். மாதவிடாய் நிகழ்வதற்கு ஒரு பத்து நாள்கள் அல்லது ஒரு வாரத்துக்கு முன்பு பெண்களின் உடலில் நிறைய ஹார்மோன் மாற்றங்கள் நடக்கும். இது மூட்ஸ்விங்ஸை உண்டாக்கும். கோபம் வருவது, எரிச்சல் அடைவது, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் வரலாம்.

இதுபோன்ற நேரத்தில் சர்க்கரை அதிகம் உள்ள சாக்லேட், ஐஸ்க்ரீம் போன்ற பொருள்களை உட்கொண்டால் அது ஹார்மோன் அளவுகளை இன்னும் பாதித்து மூட்ஸ்விங்ஸை அதிகப்படுத்தலாம். எனவே, அதுபோன்ற உணவுகளைத் தவிர்த்துவிட்டு அதிக வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

பிசிஓடி பிரச்னையின் ஆரம்பகால அறிகுறிகள் என்ன?

பிசிஓடி பிரச்னையின் ஆரம்பகால அறிகுறி முறையற்ற மாதவிடாய் ஆகும். ஒரு பெண்ணுக்கு சாதாரணமாக 25 - 30 நாள்களில் வரும் மாதவிடாய், முறையற்று இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது மாத்திரை சாப்பிட்டால்தான் மாதவிடாய் வருவது என்று இருப்பது முக்கிய அறிகுறி ஆகும்.

இது தவிர பிசிஓடி பிரச்னை இருக்கும் பெண்களுக்கு தேவையற்ற முடி வளர்ச்சி இருக்கும். பிசிஓடி பாதிப்பு உள்ள பெண்களின் உடலில் ஆன்ட்ரோஜென் என்ற ஹார்மோன் தேவையான அளவைவிட அதிகமாக இருக்கும். இந்த ஹார்மோன், மீசை வளர்வது, தாடைக்குக் கீழ் முடி வளர்வது, கழுத்துப் பகுதியில் முடி வளர்வது போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். பிசிஓடி உள்ள பெண்களின் இரண்டு சினைப்பைகளும்‌ சாதாரண அளவைவிட சற்று வீங்கியது போல பெரிதாக இருக்கும். இதை ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் கண்டறிய முடியும்.

வயது கடந்த கர்ப்பம்

எந்த வயதில் பிரக்னென்சி பிளான் செய்வது சரியாக இருக்கும்?

25 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் ஒருவர் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடலாம். அந்தக் காலகட்டம் சரியானதாக இருக்கும்.

கால தாமதமாக கருத்தரித்தால் நார்மல் டெலிவரி செய்ய வாய்ப்பு குறைவு என்பது உண்மையா?

ஓரளவு உண்மை. ஏனென்றால் 35 வயதுக்கு மேல் ஒரு பெண்ணுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. இது பிரசவத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும். இதுதவிர, பெண்களுக்கு வயதாகும்போது பிரசவப் பாதையில் உள்ள தசைகள் வலுவிழந்து விடும். இதுபோன்ற காரணங்களால் சுகப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைந்துபோகும்.

இது தவிர பெண்களுக்கு வயதாகும்போது இடுப்பு எலும்பு மற்றும் அதைச் சுற்றி உள்ள தசைகளின் நெகிழ்வுத்தன்மை (Flexiblity) குறைந்துவிடும். இது போன்ற காரணங்களால் சுகப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைந்து போகும். பிரசவத்துக்கு முன்பும் பின்பும் கற்றுத் தரப்படும் உடற்பயிற்சிகள் இதைத் தவிர்க்க உதவும்.

ஐவிஎஃப் (IVF)

செயற்கை கருத்தரிப்பு மூலம் கருத்தரித்தால் குழந்தையின் உடல் எடை குறைவாக இருக்குமா? குழந்தையின் ஆரோக்கியத்தில் ஏதும் சிக்கல் இருக்குமா?

இது உண்மைதான். செயற்கை கருத்தரிப்பு மூலம் உருவாக்கப்படும் குழந்தைகள் நிறைய நேரங்களில் பிரசவ காலத்துக்குச் சற்று முன்பே சிசேரியன் மூலம் வெளியே எடுக்கப்படுவார்கள். சாதாரணமாக உருவாக்கும் குழந்தைகளை விட அவர்கள் எடை குறைவாக இருப்பதற்கான காரணம் இதுதான்.

செயற்கை கருத்தரிப்பு மூலம் கருத்தரிப்பவர்களுக்கு பெரும்பாலும் இரட்டைக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

செயற்கை கருத்தரிப்பு முறையில் மருந்துகளைச் செலுத்தி அதிக அளவில் கருமுட்டைகளை வெளியேற்ற சினைப்பை தூண்டப்படும். அதிக அளவில் முட்டைகள் வெளியாகும்போது இரட்டைக் குழந்தைகள் உண்டாவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 23, 2023 11:45 pm

முறைதவறிய பீரியட்ஸ், உடல்பருமன், பிசிஓடி பாதிப்பை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியுமா?

முறையற்ற மாதவிலக்கு சுழற்சி, அதிக அளவில் பருக்கள், முடி உதிர்வு, உடல் பருமன் ஆகியவை பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.

பெண் குழந்தைகளைப் பிறவியிலேயே இந்தப் பிரச்னை பாதிக்கலாம். அவர்கள் பூப்பெய்தும் வயதில்கூட இதை உறுதிப்படுத்த முடியாது. பிசிஓடி பாதிப்பில்லாத நிலையிலும் சில பெண்களுக்கே அந்தப் பருவத்தில் மாதவிடாய் முறைதவறி வருவதுண்டு.

20 வயதுக்கு மேலும் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் முறைதவறி வந்தால் பிசிஓடி இருக்கிறதா என டெஸ்ட் செய்து பார்க்க வேண்டியது அவசியம்.

எந்த வயதில் பூப்பெய்தினார்கள், எத்தனை நாள்களுக்கொரு முறை மாதவிடாய் வருகிறது என்கிற தகவல்களைக் கேட்டறிய வேண்டும். கழுத்துக்குப் பின்பகுதியிலும் முழங்கைகளிலும் கருமை இருக்கிறதா எனப் பார்ப்பார்கள் மருத்துவர்கள். அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்தால் சினைப்பைகளில் கொப்புளங்கள் இருப்பதைப் பார்க்கலாம்.

ஹர்மோன்களின் அளவுகளை அறியும் ரத்தப் பரிசோதனைகளும் பரிந்துரைக்கப்படும். இது மாதவிலக்கான இரண்டாவது அல்லது மூன்றாவது நாளில் செய்யப்படும்.

அல்ட்ரா சவுண்டில் பிசிஓடி இருப்பது, உடல்ரீதியான அறிகுறிகள் இருப்பது, ரத்தப் பரிசோதனையில் அசாதாரணம் என இந்த மூன்றில் இரண்டு இருந்தால் அதை `பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம்' என்கிறோம்.

பிசிஓடிக்கான சிகிச்சை என்பது முறையற்ற மாதவிலக்கு, பருக்கள், குழந்தையின்மை என பிரச்னையைப் பொறுத்து முடிவு செய்யப்படும்.

எடை அதிகரிக்க அதிகரிக்க, ஹார்மோன் தொந்தரவுகள் தீவிரமாகும். அதனால் சினைப்பைகளின் செயல்திறன் பாதிக்கப்படும். சினைப்பை நீர்க்கட்டி உள்ளவர்களுக்கு மிக எளிதில் எடை அதிகரிக்கும்.

ஆனால், அதே வேகத்தில் குறைக்க முடியாது. எனவே, உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வீட்டுவேலைகளைச் செய்வது, சாக்லேட், இனிப்பு போன்ற அதிக கலோரி உணவுகளைத் தவிர்ப்பது என தீவிர முயற்சிகளில் இறங்க வேண்டும்.

பிசிஓடி இருந்தால் கர்ப்பம் தரிப்பதிலும் சிக்கல்கள் இருக்கும். குழந்தையின்மைக்கான பிரத்யேக சிகிச்சையிலும் எடைக் குறைப்புதான் பிரதானமாக இருக்கும். பிறகு, கருமுட்டை உருவாக மாத்திரைகள் தரப்படும். அவை உதவாத பட்சத்தில் ஊசிகள் போட வேண்டியிருக்கும்.

அதிலும் முட்டை வளர்ச்சி இல்லாவிட்டால் லேப்ராஸ்கோப்பி செய்ய வேண்டும். கடைசித் தீர்வாக ஐ.வி.எஃப் சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

எனவே, உங்கள் மகளுக்கு மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவசியமான பரிசோதனைகளைச் செய்து, பிசிஓடியை உறுதி செய்யுங்கள். மாதவிலக்கு சுழற்சி முறை தவறுவதையும், உடல் பருமனையும் மட்டும் வைத்து நாமாக முடிவுக்கு வர முடியாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 23, 2023 11:48 pm

அதிக ப்ளீடிங் இல்லை... பீரியட்ஸ் நாள்களில் அதிக வலி... தீர்வு என்ன?

பெண் குழந்தைகள் வயதுக்கு வந்து, முதல் இரண்டு வருடங்களுக்கு பீரியட்ஸ் முறை தவறி வந்தால் பிரச்னையில்லை. அதிக ப்ளீடிங் ஆகி, அவர்கள் ரத்தச்சோகையால் பாதிக்கப் படுவதுதான் ஆபத்து. அதற்குதான் உடனடி மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் தேவை. மற்றபடி இர்ரெகுலர் பீரியட்ஸுக்கு எந்தச் சிகிச்சையும் தேவைப்படுவதில்லை.

பூப்பெய்திய இரண்டு வருடங்களில் அவர்களது கர்ப்பப்பை பக்குவமடைந்துவிடும் என்பதால், மெள்ள மெள்ள பீரியட்ஸ் சுழற்சி முறைப்படும். ஆனால், சமீப காலங்களில் பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ளிட்ட வளர்சிதை மாற்ற பிரச்னைகளை அதிகம் பார்க்கிறோம்.

இப்படிப்பட்ட பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, பீரியட்ஸ் சுழற்சி முறையாக இருக்காது. பூப்பெய்தியதில் இருந்தே இவர்களுக்கு 45 நாள்களுக்கொரு முறையோ, 60 நாள்களுக்கொரு முறையோ தான் பீரியட்ஸ் வரும். அதுதான் அவர்களது பீரியட்ஸ் சுழற்சி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாத்திரைகள் கொடுத்தால் பீரியட்ஸ் ரெகுலராக வரும். ஆனால், மாத்திரைகள் தற்காலிகத் தீர்வுதான். ஹார்மோன் மாத்திரைகளான அவற்றைக் கொடுப்பதை நிறுத்திவிட்டால் மீண்டும் பீரியட்ஸ் சுழற்சிமுறை தவறும்.

உங்கள் மகள் விஷயத்தில், முதலில் அவரது உடல் எடை பார்க்கப்பட வேண்டும். வலி இருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதால் அவருக்கு வேறு ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா என்றும் டெஸ்ட் செய்ய வேண்டும். மருத்துவரை அணுகினால் அவர் ஸ்கேன் செய்யப் பரிந்துரைப்பார். அதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பது உறுதியானால், திருமணமாகி, குழந்தை பெற்றதும் அந்த வலி தானாகச் சரியாகிவிடும்.

சிலருக்கு கர்ப்பப்பை வாய் டைட்டாக இருக்கலாம். ப்ளீடிங் அதைத் தாண்டி வரும்போது வலி இருக்கலாம். பிரசவத்துக்குப் பிறகு இந்தப் பிரச்னை சரியாவதால், வலியும் குறையும் என்பதால்தான் அப்படிச் சொல்லப்படுகிறது.

ப்ளீடிங் குறைவாக இருப்பது குறித்துக் கவலை கொள்ளத் தேவையில்லை. எப்போதுமே அவருக்கு அப்படித்தான் இருக்கிறது என்றால் அதுதான் அவருக்கான பீரியட்ஸ் முறையாக இருக்கும்.

ஒருநாளைக்கு நான்கைந்து நாப்கின் மாற்றினால்தான் நார்மல் ப்ளீடிங் என்றெல்லாம் அர்த்தமில்லை. கர்ப்பப்பையின் உள் லேயர் உதிர்ந்து வெளியே வரும். அத்துடன் இன்னும் சிறிது ரத்தமும் வரும். அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். உங்கள் மகள் ஒருநாளைக்கு ஒரு நாப்கின்தான் உபயோகிக்கிறார் என்றாலும் அதுவும் பீரியட்ஸாகவே கணக்கெடுக்கப்படும்.

வலியால் துடிப்பதால் அவரை மருத்துவரிடம் அழைத்துச்சென்று ஸ்கேன் எடுத்துப் பார்த்து எண்டோமெட்ரியாசிஸ், பிசிஓடி பிரச்னைகள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துவிடுங்கள். பிரச்னைகள் இல்லாதபட்சத்தில் உணவுப்பழக்கம், வாழ்வியல் முறைகளில் சின்னச் சின்ன மாற்றங்களைப் பின்பற்றினாலே போதுமானதாக இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 23, 2023 11:49 pm

பீரியட்ஸ் இல்லாதபோது ஏற்படும் ப்ளீடிங் சாதாரணமானதா?

``பீரியட்ஸ் அல்லாத நாள்களில் ஏற்படும் ப்ளீடிங்கை நாம் `இன்டர் மென்ஸ்ட்டுரல் ப்ளீடிங்' (intermenstrual bleeding) என்று சொல்கிறோம். இதற்கு காரணமான விஷயங்கள் பெரும்பாலும் பிரச்னையற்றவையாகவே இருக்கும். அரிதாகச் சில நேரங்களில் அவை பிரச்னைக்குரிய காரணங்களாகவும் இருக்கலாம். காரணத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன் உங்கள் பீரியட்ஸ் சுழற்சியின் தன்மையை மருத்துவரிடம் சொல்ல வேண்டும்.

கர்ப்பப்பையிலோ, கர்ப்பப்பையின் வாயான செர்விக்ஸ் பகுதியிலோ ஏதேனும் வளர்ச்சி இருக்கலாம். கர்ப்பப்பையிலிருந்து வெளியே துருத்திக்கொண்டிருக்கும் பாலிப் எனப்படும் பகுதியாலும் ப்ளீடிங் ஏற்படலாம். அபார்ஷன் காரணமாகவும், வெஜைனா பகுதியின் வறட்சியின் காரணமாகவும், ஹார்மோன் பிரச்னைகளின் காரணமாகவும் கூட பீரியட்ஸ் அல்லாத நாள்களில் ப்ளீடிங் ஏற்படலாம்.

மிக அரிதாக கர்ப்பப்பையில் அல்லது அதன் உள் பகுதியான எண்டோமெட்ரியம் பகுதியில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் இப்படி ப்ளீடிங் ஏற்படலாம். பாலியல் நோய்த்தொற்றும் இதற்கொரு காரணம். திடீரென எடை ஏறினாலோ, குறைந்தாலோகூட ப்ளீடிங் ஏற்படக்கூடும்.

இப்படி ஏற்படும் ப்ளீடிங் சாதாரணமானதா, அசாதாரணமானதா, சிகிச்சை தேவைப்படுகிற பிரச்னையா என்பதை மருத்துவப் பரிசோதனையில்தான் தெரிந்துகொள்ள முடியும். அதிக ரத்தப் போக்கு, தாம்பத்திய உறவுக்குப் பிறகு ப்ளீடிங், ப்ளீடிங்குடன் காய்ச்சல், திடீரென எடை கூடுவது, குறைவது போன்ற அறிகுறிகளும் இருந்தால், காலம் தாழ்த்தாமல் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்."

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 23, 2023 11:50 pm

மாத்திரை சாப்பிட்டால் மட்டுமே வரும் பீரியட்ஸ்; தீர்வு என்ன?

லைஃப்ஸ்டைல் எனப்படும் வாழ்வியல் மாற்றம்தான் இதற்கான மிகச் சிறந்த தீர்வு. நீங்கள் தினமும் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம்வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிலும் அடிவயிற்றுப் பகுதித் தசைகளுக்கு வேலைகொடுக்கும்படியான பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அதாவது தொப்பைக்குக் கீழுள்ள கொழுப்பைக் குறைக்கும் பயிற்சிகளைச் செய்ய வேண்டியது அவசியம்.

கார்டியோ பயிற்சிகளும் செய்யலாம். வயிறு, இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் உள்ள கொழுப்பைக் குறைக்க வேண்டியது மிக மிக அவசியம்.

அடுத்து உங்கள் உணவுப்பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். புரோட்டீன் அதிகமாகவும் கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். அசைவம் சாப்பிடுகிறவர்கள் என்றால் மீன் சாப்பிடலாம். எப்போதாவது சிக்கன் சாப்பிடலாம். மட்டன் தவிர்க்கப்பட வேண்டும்.

சைவ உணவுக்காரர்கள் பருப்பு வகைகள், சோயா போன்றவற்றைச் சாப்பிடலாம். அரிசி உணவுகளைக் குறைக்க வேண்டும். உருளைக்கிழங்கு போன்ற பூமிக்கடியில் விளையும் காய்கறிகளைக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

உணவும் உடற்பயிற்சியும் முறைப்படுத்தப்பட்டாலே உங்கள் பீரியட்ஸ் சுழற்சி முறைப்படும். இவற்றின் மூலம் உங்கள் பிரச்னை சரியாகும்வரை இதற்கிடையில் மருத்துவரை அணுகி 45 நாள்கள் முதல் 2 மாதங்களுக்கொரு முறை பீரியட்ஸ் வரவழைக்க மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல 6 மாதங்கள்வரை எல்லாம் பீரியட்ஸ் வராமல் இருக்கக் கூடாது. அது பிற்காலத்தில் வேறு பிரச்னைகளுக்கு காரணமாகலாம்."

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக