புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அட்சய திருதியை Poll_c10அட்சய திருதியை Poll_m10அட்சய திருதியை Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
அட்சய திருதியை Poll_c10அட்சய திருதியை Poll_m10அட்சய திருதியை Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
அட்சய திருதியை Poll_c10அட்சய திருதியை Poll_m10அட்சய திருதியை Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அட்சய திருதியை Poll_c10அட்சய திருதியை Poll_m10அட்சய திருதியை Poll_c10 
4 Posts - 3%
Kavithas
அட்சய திருதியை Poll_c10அட்சய திருதியை Poll_m10அட்சய திருதியை Poll_c10 
1 Post - 1%
bala_t
அட்சய திருதியை Poll_c10அட்சய திருதியை Poll_m10அட்சய திருதியை Poll_c10 
1 Post - 1%
prajai
அட்சய திருதியை Poll_c10அட்சய திருதியை Poll_m10அட்சய திருதியை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அட்சய திருதியை Poll_c10அட்சய திருதியை Poll_m10அட்சய திருதியை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட்சய திருதியை Poll_c10அட்சய திருதியை Poll_m10அட்சய திருதியை Poll_c10 
293 Posts - 42%
heezulia
அட்சய திருதியை Poll_c10அட்சய திருதியை Poll_m10அட்சய திருதியை Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அட்சய திருதியை Poll_c10அட்சய திருதியை Poll_m10அட்சய திருதியை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அட்சய திருதியை Poll_c10அட்சய திருதியை Poll_m10அட்சய திருதியை Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அட்சய திருதியை Poll_c10அட்சய திருதியை Poll_m10அட்சய திருதியை Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
அட்சய திருதியை Poll_c10அட்சய திருதியை Poll_m10அட்சய திருதியை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அட்சய திருதியை Poll_c10அட்சய திருதியை Poll_m10அட்சய திருதியை Poll_c10 
6 Posts - 1%
prajai
அட்சய திருதியை Poll_c10அட்சய திருதியை Poll_m10அட்சய திருதியை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அட்சய திருதியை Poll_c10அட்சய திருதியை Poll_m10அட்சய திருதியை Poll_c10 
4 Posts - 1%
manikavi
அட்சய திருதியை Poll_c10அட்சய திருதியை Poll_m10அட்சய திருதியை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட்சய திருதியை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 18, 2023 9:16 pm

அட்சய திருதியை RKvdekN

அட்சய திருதியை நாளில் நாம் செய்ய வேண்டியது என்ன?


அட்சய திருதியை அன்று அவல் நிவேதனம் செய்து கண்ணனைப் பிரார்த்தித்தால் இல்லத்தில் செல்வ வளம் பெருகும்.

அமுதசுரபி என்ற அதிசயப் பாத்திரத்தை மணிமேகலை பெற்றது ஓர் அட்சய திருதியை நன்னாளில் தான்.

அட்சய திருதியை என்பது ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் கொண்டாடப்படுகிறது.

அட்சயம் என்ற சொல்லுக்கு `குறைவற்றது` என்று பொருள். அட்சய திருதியை நாளில் எந்த நற்செயல் செய்தாலும் அது குறைவற்றுப் பெருகும் என்பது நம் ஆன்மிக நம்பிக்கை.

கோயில்களுக்குச் செல்வது, ஜபதபங்கள் செய்வது போன்ற புண்ணியச் செயல்களுக்கெல்லாம் அன்று வழக்கத்தை விடப் பல மடங்கு பலன் கிட்டும்.

ஆனால் அட்சய திருதியை என்றாலே கடைக்குப் போய் ஏதேனும் சிறிய அளவிலாவது தங்கம் வாங்க வேண்டும் என்பதாக சமீப காலத்தில் அதன் பொருள் குறுகிப் போய்விட்டது.

மண்ணாசை, பொன்னாசை, பாலியல் ஆசை ஆகிய மூன்றையும் துறக்க வேண்டும் என்றே நம் ஆன்மிகம் உரத்துச் சொல்கிறது.

காமினி, காஞ்சனம் இரண்டு ஆசைகளையும் விட்டுவிடுங்கள் என அறைகூவுகிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர். இதில் காமினி என்ற சொல் பாலியல் வேட்கையைக் குறிக்கிறது. காஞ்சனம் என்றால் தங்கம்.

பொன்னாசையைத் துறக்க வேண்டும் என்று சொல்லும் ஆன்மிகம், பொன்னை வாங்குவதற்கென்று ஒரு நாளைப் பரிந்துரைக்குமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அட்சய திருதியை அன்று வழக்கமாக உள்ளதை விட அதிகமாக இறைச் சிந்தனையில் ஈடுபட வேண்டும்.

அட்சய திருதியை போலவே கிரகண காலத்திலும் எது செய்தாலும் அது வளரும் என நம்பப்படுகிறது. விவேகானந்தர் ஓய்வே இல்லாமல் உழைத்துக் கொண்டிருந்தார். எதிர்காலத்திலாவது சற்றேனும் ஓய்வு கிட்டும் வகையில் தன் வாழ்க்கை அமைய வேண்டும் என ஏங்கிய அவர், அதன்பொருட்டு ஒரு கிரகண காலத்தன்று சற்றுநேரம் உறங்கினார் என்கிறது அவர் வரலாற்றில் வரும் ஒரு குறிப்பு.

அட்சய திருதியை நாளின் பெருமையைப் புராணங்கள் பல விதங்களில் புலப்படுத்துகின்றன. விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஓர் அவதாரமான பரசுராமரின் பிறந்தநாள் அட்சய திருதியை தான்.

மகாபாரதத்தில் துச்சாதனன் பாஞ்சாலியைத் துகிலுரியும் கட்டம். பஞ்ச பாண்டவர்களும் பீஷ்மர் உள்ளிட்ட சான்றோர்களும் வேறு வழியின்றி அமைதி காக்கிறார்கள். அடுத்த கணம் தனது மானம் போய்விடும் என்ற இக்கட்டான நிலை. திரவுளபதி காலமும் சூழலும் கணவர்களும் தன்னைக் கைவிட்டதை எண்ணிக் கண்ணீர் வடிக்கிறாள்.

மனித உதவி கிட்டாத நிலையில் தெய்வ உதவியை நாட முடிவெடுக்கிறாள். கைகள் இரண்டையும் மேலே உயர்த்தி, `கண்ணா, நீ அடியவர்களை உரிய நேரத்தில் காக்கும் கடவுள் என்பது உண்மைதானே? கஜேந்திரனின் காலை முதலை கவ்வியபோது நீதானே சக்கரத்தால் முதலையை வதம் செய்து யானையைக் காப்பாற்றினாய்? இப்போது என் மானம் போகாமல் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பல்லவா? `என்றெல்லாம் கண்ணனது அருளின் பெருமைகளைச் சொல்லிக் கதறுகிறாள்.

எங்கோ துவாரகையில் இருக்கும் கண்ணனுக்கு அஸ்தினாபுரத்தில் தன் பக்தை எழுப்பிய தீனக்குரல் கேட்கிறது. புன்முறுவலோடு கையை உயர்த்துகிறான் பரந்தாமன்.

அடுத்த கணமே துச்சாதனன் இழுக்க இழுக்க, திரவுபதியின் சேலை கிடுகிடுவென வளரத் தொடங்குகிறது. சேலை வளர்ந்த அற்புத நிகழ்ச்சியை பாரதியாரின் பாஞ்சாலி சபதம் மிக அழகாகச் சித்திரிக்கிறது.

`பொய்யர்தம் துயரினைப் போல் - நல்ல

புண்ணிய வாணர்தம் புகழினைப் போல்

தையலர் கருணையைப் போல் - கடல்

சலசலத் தெறிந்திடும் அலைகளைப் போல்

பெண்ணொளி வாழ்த்திடுவார் - அந்தப்

பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல்போல்

கண்ணபிரான் அருளால் - தம்பி

கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்

வண்ணப் பொற் சேலைகளாம் - அவை

வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே..'

என எழுதிச் செல்கிறார் பாரதியார்.

பாஞ்சாலிக்கு அவள் கட்டியிருந்த சேலையை வளரச் செய்து குறைவில்லாமல் துணியை அருளி அவள் மானத்தைக் கண்ணன் காத்தது ஓர் அட்சய திருதியை நாளில்தான்.

எனவே இந்த நன்னாளில் செய்யும் செயல்கள் திரவுபதியின் சேலை வளர்ந்ததுபோல் வளரும் என்பது நம்பிக்கை. இந்நாளில் வஸ்திரதானம் செய்வது சிறப்பு.

கண்ணன் சேலை தந்த நிகழ்வை ஒரு விடுகதையாகச் சொல்கிறது நம் நாட்டுப்புறத் தமிழ்.

`அத்தினத்துக்கும் ஓட்டைக் கைக்கும் ஆயிரம் காதம், ஆனாலும் நடக்குது சேலை வியாபாரம்!'

என்பது அந்த விடுகதை.

அத்தினம் என்றால் அஸ்தினாபுரி. `ஓட்டை'க் கை என்றால் `துவார' கை. அஸ்தினாபுரியிலிருந்த பாஞ்சாலி, பக்தியை விலையாக அளித்து, துவாரகையிலிருந்த கண்ணனிடமிருந்து ஏராளமான சேலைகளைப் பெற்றுகொண்ட வியாபாரம்தான் அந்த நிகழ்ச்சி என்கிறது இந்த விடுகதை!

சூதாட்டத்தில் நாட்டை இழந்த பஞ்சபாண்டவர்கள் துரியோதனன் விதித்த நிபந்தனையின்படி வனவாசம் மேற்கொண்டார்கள். நாட்டைத் துறந்து பாஞ்சாலியோடு வனம் நோக்கி நடந்தார்கள்.

கானக எல்லையை அடைந்தவுடன் அவர்கள் வயிற்றுப் பசியை உணர்ந்தார்கள். துன்பம் வரும்போதெல்லாம் அவர்களைக் காக்கும் கண்ணன் உணவோடு அவர்கள் முன் தோன்றி அவர்களின் பசியைத் தீர்த்து வைத்தான். வனவாசத்தில் அவர்கள் வயிற்றுப் பசி போக்கும் வழியையும் எடுத்துச் சொன்னான்.

சூரிய பகவானை உபாசனை செய்து வற்றாமல் உணவளிக்கும் அட்சய பாத்திரத்தை வேண்டிப் பெற்றுக் கொள்ளுமாறு சொன்னான்.

சூரிய உபாசனைக்கான மந்திரத்தையும் பாண்டவர்களுக்கும் பாஞ்சாலிக்கும் அவனே உபதேசித்தான்.

அந்த மந்திரத்தை உச்சரித்து உபாசனை செய்தார்கள் பாண்டவர்கள். சூரியதேவன் அவர்கள் முன் தோன்றி அவர்கள் வேண்டியபடி அட்சய பாத்திரத்தை அருளினான்.

வனவாச காலத்தில், அள்ள அள்ளக் குறையாமல் அன்னம் தரும் அட்சய பாத்திரத்தால் வந்த விருந்தினர்க்கெல்லாம் அமுது படைத்து மகிழ்ந்தாள் பாஞ்சாலி என்கிறது மகாபாரதம்.

அட்சய பாத்திரத்தை சூரியனிடம் தர்மபுத்திரர் பெற்றது ஓர் அட்சய திருதியை நன்னாளில்தான். எனவே அட்சய திருதியை அன்று அன்னதானம் செய்வது சிறப்பு. அன்று செய்யும் அன்னதானத்தின் புண்ணிய பலன் பல மடங்கு கிட்டும்.

இருபத்தேழு குழந்தைகளைப் பெற்று வறுமையில் வாடிய குசேலர் ஒரு பிடி அவலுடன் கண்ணனை தரிசிக்கச் சென்றாரே?

கூச்சத்தோடு மாமன்னன் கண்ணனிடம் அந்த அவலைக் கொடுக்க அவர் தயங்கியபோது கண்ணனே அவரிடமிருந்து அதைப் பறித்து உண்டான் அல்லவா?

அப்போது கண்ணன் கருணையால் குசேலரின் இல்லத்தில் செல்வ வளம் பலமடங்கு பெருகியதை பாகவதம் சொல்கிறது. அப்படிக் குசேலர் கண்ணனுக்கு பக்தியுடன் அவலைக் கொடுத்த நாளும் கண்ணன் அவருக்குச் செல்வத்தை அருளிய நாளும் அட்சய திருதியை நன்னாள்தான்.

அட்சய திருதியை அன்று அவல் நிவேதனம் செய்து கண்ணனைப் பிரார்த்தித்தால் இல்லத்தில் செல்வ வளம் பெருகும்.

பகீரதன் தன் முன்னோர்கள் முக்தி அடைவதற்காக வானுலகில் இருந்த கங்கை நதியை மண்ணுலகிற்குக் கொண்டுவர வேண்டி பலகாலம் தவம் செய்தான். அந்தத் தவத்திற்கு இரங்கி கங்கை பூமிக்கு வந்தாள்.

அவளின் வேகத்தை மண்ணுலகம் தாங்காது என்பதால் அதை மட்டுப்படுத்த வேண்டி பரமசிவன் கங்கையைத் தன் ஜடாமகுடத்தில் தாங்கினார். பின்னர் பூமியில் வேகம் குறைந்து செல்ல அனுமதித்தார். கங்கை அடக்கத்தோடு பூமியில் ஓடலானாள்.

கங்கையை சிவபெருமான் தன் ஜடாமகுடத்தில் அடக்கிய நிகழ்வை மையமாக்கி காளமேகப் புலவர் ஓர் அழகிய வெண்பா இயற்றியுள்ளார். `குடத்திலே கங்கையடங்கும்' எனக் கொடுக்கப்பட்ட ஈற்றடிக்கு அவர் எழுதிய வெண்பா அது.

`விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்

மண்ணுக் கடங்காமல் வந்தாலும் - பெண்ணை

இடத்திலே கொண்ட இறைவனின் ஜடாம

குடத்திலே கங்கையடங் கும்!`

பகீரதப் பிரயத்தனத்தால் கங்கை நதி பூமிக்கு வந்த நாள் அட்சய திருதியை நாள்தான்.

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் அதன் தலைவியான மணிமேகலை மணிபல்லவம் என்னும் தீவிற்குச் செல்கிறாள். அங்கே உள்ள பொய்கைக்கரையில் நிற்கிறாள்.

அன்று வைகாசி மாதத்துப் பவுர்ணமியான புத்த பூர்ணிமை. ஒவ்வொரு புத்த பூர்ணிமை அன்றும் அந்தப் பொய்கையிலிருந்து அமுதசுரபி என்னும் பாத்திரம் வெளிப்பட்டுத் தோன்றும்.

அன்றும் அது தோன்றுகிறது. பொய்கையின் அலைகளிலே மிதந்து கரையை நோக்கி வருகிறது அந்த விந்தையான பாத்திரம்.

தன்னை நோக்கித் தவழ்ந்து வந்த அந்தத் திருவோட்டைத் தலைவணங்கிக் கையில் எடுத்துக் கொள்கிறாள் மணிமேகலை.

அள்ள அள்ளக்குறையாத உணவைத் தரும் அட்சய பாத்திரம் அது என்பதை அறிந்துகொள்கிறாள். அதன்மூலம் எண்ணற்ற ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கி வந்தாள் அவள் என்கிறது மணிமேகலையின் கதை.

அமுதசுரபி என்ற அதிசயப் பாத்திரத்தை மணிமேகலை பெற்றது ஓர் அட்சய திருதியை நன்னாளில் தான்.

ஆக #அட்சய_திருதியை நாளைத் தங்கம் வாங்கி நாம் சேமிப்பதற்கு உரிய நாளாகக் குறுக்க வேண்டிய அவசியமில்லை.

அது பாஞ்சாலியின் நினைவாக ஏழைகளுக்கு வஸ்திர தானம் செய்யும் நாள். மணிமேகலையின் நினைவாக ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் அளிக்கும் நாள். குசேலரின் நினைவாக கண்ணனை அவல் நிவேதனம் செய்து பூஜித்து வறுமையில் வாடுவோருக்குப் பொருளுதவி செய்யும் நாள். பகீரதனின் நினைவாக கங்கா மாதாவை வழிபட்டு நம் பாவங்களைத் தொலைக்கும் நாள்.

இத்தகைய எண்ணற்ற சிறப்புகள் உள்ள நாளில் அதிகமாக மந்திர ஜபம் செய்தும் இறைச் சிந்தனையில் ஈடுபட்டும் நம் மனத்தை மாசில்லாததாக ஆக்கிக் கொள்வோம். ஆன்மிகத்தின் தலையாய நோக்கம் என்பது மனத்தை மாசில்லாததாக ஆக்குவது தானே?

திருப்பூர் கிருஷ்ணன்,


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 18, 2023 9:17 pm


அட்சய திருதியை பற்றி 60 தகவல்கள்


1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது.

2. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.

3. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

4. அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.

5. அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.

6. அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.

7. அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.

8. சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

9. பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.

10. அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.

11. ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும்.

12. அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.

13. வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள்.

14. அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.

15. ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும்.

16. வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள்.

17. ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது.

18. பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.

19. அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள்.

20. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.

21. அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

22. அட்சய திருதியை நாளில் தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

23. அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு `பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.

24. ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.

25. அரிதான வேலையை சந்திப்பதை `அலப்ய யோகம்‘ என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.

26. அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு `அட்சதை’ என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்ஞறும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு `அட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.

27. அட்சய திருதியை தினத்தை சமணர்கள் “அட்சய தீஜ்’’ என்றழைக்கிறார்கள்.

28. ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.

29. அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைபிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.

30. மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.

31. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.

32. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது.

33. மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.

34. கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

35. தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

36. அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

37. வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.

38. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.

39. ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.

40. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.

41. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.

42. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை’’ நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.

43. அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.

44. அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.

45. அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.

46. அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.

47. அட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதி-பரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.

48. அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.

49. கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள்.

50. அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

51. அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.

52. அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை `தர்மகடம்‘ எனப்போற்றுவர்.

53. அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.

54. அட்சய திருதியை நாளில் `வசந்த் மாதவாய நம’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முக்கியமான ஒன்று… தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில் இறங்குவது சாஸ் திரத்துக்கு உடன் பாடில்லை.

55. அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.

56. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.

57. புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும்.

58. ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.

59. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.

60. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 19, 2023 5:00 pm

வருடங்கள் 60

அக்ஷய திருதியை குறிப்புகள் 60.

அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மேலும் மேலும் 
தங்கம் வாங்கும் சந்தர்பம் அமையும், என்று கூறுவது, நகைக்கடைக்காரர்கள் 
கிளப்பிவிட்ட கதை. அவனுக்குத்தான் வியாபாரம் ஆகும்.
நமக்கு பணம் செலவாகும். 18 கேரட் நகை 22 கேரட் என ஏமாற்றப்படுவோம்.

வெண்மையான பொருட்கள் வாங்கலாம்.
அரிசி சமைத்து தயிருடன் கலந்து எல்லோருக்கும் கொடுக்கலாம்.
முடியாதவர்கள் சிறிதளவு உப்பு வாங்கலாம்.

முடிந்த அளவு தானம் செய்யலாம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 21, 2023 10:45 pm

அக்ஷய திருதியை தேதி, பூஜை செய்ய- தங்கம் வாங்க உகந்த நேரம்


அக்ஷய திருதியை இந்துகளின் பண்டிகையில் மிக முக்கிய நாளாக உள்ளது. அக்ஷய திருதியில் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது வழக்காக உள்ளது. அந்த வகையில் இந்தாண்டு அக்ஷய திருதி எப்போது வருகிறது, பூஜை செய்ய, தங்கம் வாங்க உகந்த நேரம் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

“பொதுவாகவே பண்டிகை, வழிபாடுகள் திருதியை கணக்கில் வைத்து தான் செய்வார்கள். அந்த வகையில் அட்சய திருதியை ஏப்ரல் 22 (சனிக்கிழமை) காலை 7 மணி 49 நிமிடம் முதல் ஏப்ரல் 23 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி 47 நிமிடம் வரை உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் வழிபாடு செய்யலாம். அக்ஷய திருதிய பொருட்கள் வாங்கலாம். தானம் கொடுக்கலாம். சுப காரியங்கள் தொடங்கலாம். குறிப்பாக ஏப்ரல் 22-ம் தேதி முழு அட்சய திருதி உள்ளதால் அந்த நாளில் விரதம் இருப்பது, வழிபாடு, பூஜை செய்தல், தங்கம், உள்ளிட்டவைகள் வாங்கலாம்.

23-ம் தேதி திருதியை உடன் வாஸ்து நாள் என்பதால் அன்றைய தினம் வீடு சம்பந்தமான வேலைகள் செய்யலாம். திருதி நேரத்தில் சுப காரியங்களை தொடங்கி செய்யுங்கள். 22-ம் தேதி முழு திருதியாக இருக்கிற காரணத்தால் அந்த நாளில் விரதம், வழிபாடு, தானம் செய்யலாம், தங்கம் வாங்கலாம். பொதுவாகவே திருதியை திதி, செல்வம் பெருக்குவதாகும்”.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 22, 2023 1:04 pm

அட்சய திருதியை அன்று தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டுமா? இதையும் வாங்கலாம்!



வெள்ளை நிறப் பொருள்கள் அல்லது மஞ்சள் நிறப் பொருள்கள் வாங்குவது நலம் என்று சாஸ்திரம் கூறுகிறது. வெள்ளை நிறம் என்றால் பிளாட்டினம் வாங்கி அணிய வேண்டும், மஞ்சள் நிறம் என்றால் தங்கத்தை வாங்கி அணிய வேண்டும் என்பதெல்லாம் ச‌ரியானத‌ல்ல.

பொதுவாக தானியங்களில்தான் லட்சுமி நிறைந்திருக்கிறாள். அதனால்தான் திருமணம் முடிந்த பெண்கள் முதன் முதலாக மாப்பிள்ளை வீட்டிற்கு வரும்போது பொன்னி அரிசி போட்டு அதன் மீது காமாட்சி விளக்கு ஏற்றி அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு உள்ளே வரச்சொல்வார்கள்.

அட்சய திருதியை அன்று பச்சரிசி வாங்குவது நல்லது. மஞ்சள் துணியில், சிறிது அரிசி எடுத்துக் கட்டி பீரோவிலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி டப்பாவிலும் போட்டு வைத்தால் என்றும் குறைவில்லாத உணவு கிடைக்கும்.

அதற்கடுத்து மஞ்சள், இதில் தான் எல்லா மகிமையும் உள்ளது. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம், மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம். இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு அதை வீட்டில் வாங்கி வைக்கலாம்.

இதுமட்டுமன்று, அன்றைக்கு தானம் செய்தால் நல்லது. தானம் என்றால் அன்னதானம், வஸ்திர தானம் (துணி தானம்) கொடுங்கள். அதாவது அடுத்தவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருள்களைக் கொடுக்க வேண்டும். காசாகக் கொடுக்கக்கூடாது. அவர்களுடைய தேவை என்னவோ அதைப் பூர்த்தி செய்யக்கூடிய பொருள்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

தங்கம் என்பது லட்சுமியின் ஒரு அம்சம். தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டும் என்பதில்லை, வெள்ளியும் வாங்கலாம். பச்சரிசி, மஞ்சள், வெள்ளி போன்ற பொருள்களெல்லாம் வாங்கி வைக்கும் போது நிச்சயம் லட்சுமி கடாட்சம் வீட்டில் உண்டாகும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக