ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.

3 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  Empty நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.

Post by சிவா Sat Apr 22, 2023 2:18 pm

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  YmKjb69

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்


சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு சரியான காரணம் இல்லாமல் இருந்தாலும், உடல் பருமன் மற்றும் உடல் பயிற்சி இன்மை இதனால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. நமது உடல் ஆரோக்கியத்தை சரி செய்து கொள்வது மிகவும் முக்கியம் என்ற அறிகுறியை சர்க்கரை நோய் தருகிறது.

இந்நிலையில் பொதுவாக சுகர் நோயிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள நாம் செய்யும் முக்கிய தவறுகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது. இந்நிலையில் நாம் அதிக இனிப்பான உணவை சாப்பிடும்போது, அது நேரடியாக ரத்த சர்க்கரையை அதிகரிக்கும். மேலும் இது இன்சுலினை செயல்படவிடாமல் தடுக்கிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படும்.

அதிகமான கார்போஹைட்ரேட் அல்லது அரோக்கியம் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை தேர்வு செய்வது. மைதா பிரட், பேக்கரி உணவுகள், பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ். இந்நிலையில் இந்த உணவுகள் ரத்த குளுக்கோஸ் அளவை அதிகப்படுத்தும்.

நார்சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பது. நார்சத்து உடலில் உள்ள கொழுப்பை கரைக்கவும், அதிகம் பசிக்காமல் பார்த்துக்கொள்ளும். இந்நிலையில் நார்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் சர்க்கரை நோய் ஏற்பட காரணமாக இருக்கலாம்.

காலை உணவை தவிர்ப்பது, சிலர் சரியாக பசிக்கவில்லை என்று நாம் காலை உணவை தவிர்க்க கூடாது. காலை உணவுதான் அன்றைய நாளின் சர்க்கரை அளவை சீராக தொடங்க உதவும். காலை உணவை நாம் தவிர்க்கும்போது இன்சுலின் செயல்பாடை பாதிக்கலாம். இதனால் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, அது கொலஸ்ட்ரால் ஆக மாறலாம். இதனால் இதயம் மற்றும் ரத்த குழாய்களை பாதிக்கும் நோய் ஏற்படும். மேலும் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.

குறிச்சொற்கள் #நீரிழிவு #சர்க்கரை_நோய் #diabetic #diabetes


Last edited by சிவா on Sat Aug 05, 2023 8:35 pm; edited 2 times in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  Empty Re: நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.

Post by சிவா Sat Apr 22, 2023 2:19 pm

காயம் ஆறவே ஆறாதா?


சர்க்கரை நோயாளிகளுக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது புண் ஏற்பட்டாலோ ஆறவே ஆறாது என்று கூறப்படுவது ஓரளவு உண்மைதான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

ஒரு சிலருக்கு வருட கணக்கில் கட்டை விரலில் காயம் ஏற்பட்டால் ஆறாமல் இருக்கும், பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு காயம் அல்லது புண் ஏற்பட்டால் ஆறாமல் இருப்பதற்கு சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது ஒரு காரணம்

குறிப்பாக கால் கட்டை விரலில் காயம் ஏற்பட்டால் அதை கவனிக்காமல் விட்டால் அறுவை சிகிச்சை மூலம் கால் விரலை துண்டிக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். எனவே சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் அவ்வாறு இருந்தால் கால் கட்டைவிரல் உட்பட உடலில் எந்த பகுதியில் காயம் ஏற்பட்டாலும் உடனடியாக ஆறிவிடும்.

ரத்தத்தின் சர்க்கரை அளவை இயற்கையாக சரி செய்ய முடியவில்லை என்றால் இன்சுலின் போட்டு குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  Empty Re: நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.

Post by சிவா Sat Apr 22, 2023 2:20 pm

வாழைப்பழம் சாப்பிடலாமா?


பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைப்பழங்களை சாப்பிடக்கூடாது என்று கூறுவது உண்டு. ஆனால் அதே நேரத்தில் பச்சை வாழைப்பழம் செவ்வாழை நேந்திரம் ஆகிய பழங்களை குறைந்த அளவு சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமும் ஒரு வாழைப்பழம் என்ற வகையில் பச்சை வாழைப்பழம் செவ்வாழை ஆகிவற்றை சாப்பிடலாம் என்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் பூவம் பழம், ரஸ்தாலி நாட்டு வாழைப்பழங்களை சாப்பிட்டால் அதில் இனிப்பு அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் பிரச்சினை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் அதனை தவிர்ப்பது நல்லது. ஆனால் அதே நேரத்தில் வாழைப்பழத்தில் வைட்டமின் சி பொட்டாசியம் நார்ச்சத்து ஆகியவை இருப்பதால் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் வாழைப்பழங்களை தாராளமாக சாப்பிடலாம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  Empty Re: நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.

Post by சிவா Sat Apr 22, 2023 2:20 pm

ரத்த தானம் செய்யலாமா?


சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்த தானம் செய்யலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும் நிலையில் இது குறித்து தற்போது பார்ப்போம்.

சர்க்கரை நோயாளிகள் ரத்ததானம் போன்ற செயலை தாராளமாக செய்யலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் சில குறிப்புகளை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தாலோ அல்லது சிறுநீரக பாதிப்பு மற்றும் இருதய பாதிப்பு இருந்தாலும் அவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது. மேலும் சர்க்கரை பாதிப்புக்கு இன்சுலின் செலுத்தி கொள்பவர்கள் உடல் எடை 45 கிலோவுக்கும் குறைவானவர்கள் ரத்ததானம் செய்ய வேண்டாம்.

அதேபோல் ஹீமோகுளோபின் 12.5 கிராமுக்கு குறைவாக இருப்பவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மலேரியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர்களும் ரத்த தானம் செய்ய வேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  Empty Re: நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.

Post by சிவா Sat Apr 22, 2023 2:21 pm

பேரிச்சம்பழம் சாப்பிடலாமா?


நீரிழிவு நோயாளிகளுக்கு பல்வேறு உணவு கட்டுப்பாடுகள் இருந்து வரும் நிலையில் நீரிழிவு நோயாளிகள் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கு எழுவதுண்டு.

பேரீச்சை பழத்தில் சர்க்கரை சத்து இருந்தாலும் நார்ச்சத்து அதிகமாக இருக்கும் என்பதால் பேரிச்சம் பழத்தை நீரிழிவு நோயாளிகள் ஒரு குறிப்பிட்ட அளவு சாப்பிடலாம்.

தினமும் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம் பழங்களை சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் அதில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் அதிக அளவு சாப்பிடக்கூடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்

நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக நார்ச்சத்து தேவை என்பதால் தினமும் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும் என கூறப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  Empty Re: நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.

Post by சிவா Sat Apr 22, 2023 2:22 pm

எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாமா?


சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல உணவு கட்டுப்பாடுகள் இருக்கும் என்பதும் குறிப்பாக ஒரு சில பழங்கள் மற்றும் பழச்சாறுகள் சாப்பிடக்கூடாது என்றும் கூறப்படுவது உண்டு. அந்த வகையில் எலுமிச்சை சாறு என்பது கோடை நேரத்தில் மிகவும் உடலுக்கு குளிர்ச்சியை தரும் என்றாலும் சர்க்கரை நோயாளிகள் இதனை குடிக்கலாமா என்றால் எலுமிச்சை சாறில் உப்பு சேர்த்து குடிக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எலுமிச்சை பழத்தில் சர்க்கரையை குறைக்கும் தன்மை உள்ளது என்பதால் எலுமிச்சை பல சாறு அல்லது உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் எலுமிச்சம் பழச்சாறில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் எலுமிச்சம் பழத்தில் உள்ள அமிலத்தன்மை பற்களின் எனாமலை அரித்து விடும் என்பதால் எலுமிச்சை சாற்றை பறித்து உடன் வாய் கொப்பளிக்க வேண்டும் என்றும் அதேபோல் சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை சாறு குடிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  Empty Re: நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.

Post by சிவா Sat Apr 22, 2023 2:23 pm

மைதாவை தொடவே கூடாது..!


மைதா என்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்றும் மைதாவை சர்க்கரை நோயாளிகள் தொடவே கூடாது என்றும் கூறப்படுகிறது. மைதாவை தொடர்ந்து அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வந்துவிடும் என்று கூறப்படுகிறது. உடல் நலத்துக்கு தீங்கான உணவுகளில் ஒன்று மைதா என்றும் கோதுமையில் இருக்கும் சத்துக்களில் சிறிதளவு கூட மைதாவில் இல்லை என்றும் கூறப்படுகிறது. கோதுமையில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ஒரு வகை உணவுப் பொருள்தான் மைதா என்றும் இதில் ரசாயன பொருள்களை பயன்படுத்தி வெள்ளையாக மாற்றுவதால் இது உடல் நலத்திற்கு தீங்கானது என்றும் கூறப்படுகிறது.

மேலும் இதை சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரித்து விடும் என்றும் உடம்பில் கொழுப்பு அதிகரித்து இதய கோளாறு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

கோதுமை அளவுக்கு மைதாவில் நார்ச்சத்து இல்லை என்பதால் மலச்சிக்கல் ஏற்படும் என்றும் இதில் வேதிப்பொருட்கள் இருப்பதால் செரிமான கோளாறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  Empty Re: நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.

Post by சிவா Sat Apr 22, 2023 2:23 pm

என்னென்ன பழங்களை சாப்பிடலாம்?


சர்க்கரை நோயாளிகள் பழங்களைச் சாப்பிடுவதில் கவனத்துடன் இருக்க வேண்டும். பழங்கள் உடலுக்கு நன்மை செய்தாலும், சர்க்கரை நோயாளிகள் உள்ளவர்களுக்கு அது எதிர்மறையாகி விடும்.

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பப்பாளி, கொய்யா, நாவல் பழம், கிவி பழம், செர்ரிபழம், பீச்பழம், பெர்ரிபழம்,அத்திப்பழம் வெண்ணை பழம், சாத்துக்குடி போன்ற பழங்களை சாப்பிடலாம்.

மா, பலா, வாழை போன்ற சர்க்கரை அதிகம் உள்ள பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டாம். இருப்பினும் மருத்துவரின் அறிவுறுத்தலோடு கொஞ்சமாக இந்த பழங்களை சாப்பிடலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  Empty Re: நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.

Post by சிவா Sat Apr 22, 2023 2:24 pm

வாழைத்தண்டு சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை குறையுமா?


வாழைத்தண்டு சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் கரையும் என்றும் அறுவை சிகிச்சை இல்லாமலேயே வாழைத்தண்டு மூலம் சிறுநீரக கற்களை கரைத்து விடலாம் என்றும் கூறப்படுவதுண்டு.

இந்த நிலையில் வாழைத்தண்டு தொடர்ச்சியாக சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும் என கூறப்படுகிறது. சிறுநீரக பாதையில் தொற்று உள்ளவர்கள் மட்டுமின்றி ரத்தத்தில் உள்ள சர்க்கரை உயர்வையும் தடுக்கும் சக்தி வாழைத்தண்டுக்கு ஒன்று என்று கூறப்படுகிறது.

வாழைத்தண்டை சட்னி செய்து இட்லி அல்லது தோசையுடன் சாப்பிட்டால் மிகவும் உடலுக்கு நல்லது என்றும் சுவையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வாழைத்தண்டு உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்றும் குறைந்தது வாரத்துக்கு ஒரு முறையாவது வாழைத்தண்டை உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  Empty Re: நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.

Post by சிவா Sat Apr 22, 2023 2:25 pm

உலர்ந்த பழங்களை சாப்பிடலாமா?


உலர்ந்த பழங்கள் மற்றும் பிரஷ் ஆன பழங்கள் என பழங்களை எந்த வடிவத்தில் சாப்பிட்டாலும் நல்லது என முன்னோர்கள் கூறி இருக்கும் நிலையில் சர்க்கரை நோயாளிகள் உலர்ந்த பழங்களை சாப்பிடலாமா என்பது குறித்து பலருக்கு சந்தேகம் இருக்கும்.

இந்த நிலையில் பிரஷ் பழங்களை ஒப்பிடும்போது உலர்ந்த பழங்களில் அதிக சர்க்கரை இருக்கும் என்றும் உலர்ந்த பழங்களில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்க்கப்படுவதால் உடலில் சர்க்கரை அளவை குறைக்க விரும்புபவர்கள் உலர்ந்த படங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

உலர்ந்த பழங்களை விட பிரஷ் பழங்கள் ஊட்டச்சத்து அதிகமாக இருக்கும் என்றும் அனைத்து ஊட்டச்சத்துகளும் செயற்கையாக இல்லாமல் இயற்கையாக அப்படியே இருப்பதால் அந்த பழங்களில் சத்து காணப்படும் என்றும் உலர்ந்த பழங்களை பொறுத்தவரை நீர் சத்து பிரித்து எடுக்கப்படுவதால் அதில் ஊட்டச்சத்துக்கள் குறைய வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

எனவே சர்க்கரை நோயாளிகளாக இருந்தாலும் சரி சாதாரணமானவர்களாக இருந்தாலும் சரி உலர்ந்த பழங்களை ஒப்பிடும்போது பிரஷ் பழங்களை சாப்பிடுவதே சிறந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  Empty Re: நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum