ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதமாற்றத்தை ஊக்குவிக்கும்!: மத்திய அரசை வலியுறுத்தும் சட்டசபை தீர்மானத்துக்கு எதிர்ப்பு

Go down

மதமாற்றத்தை ஊக்குவிக்கும்!: மத்திய அரசை வலியுறுத்தும் சட்டசபை தீர்மானத்துக்கு எதிர்ப்பு Empty மதமாற்றத்தை ஊக்குவிக்கும்!: மத்திய அரசை வலியுறுத்தும் சட்டசபை தீர்மானத்துக்கு எதிர்ப்பு

Post by சிவா Fri Apr 21, 2023 9:31 pm


மதமாற்றத்தை ஊக்குவிக்கும்!: மத்திய அரசை வலியுறுத்தும் சட்டசபை தீர்மானத்துக்கு எதிர்ப்பு Tamil_10

சென்னை: கிறிஸ்துவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம், சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. 'இது தமிழகத்தில் மத மாற்றத்தை ஊக்குவிக்கும்' என, ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சட்டசபையில் நேற்று முதல்வர் ஸ்டாலின், 'அரசியலமைப்பு சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை, கிறிஸ்துவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூக நீதியின் பயன்களை பெற, அரசமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு, மத்திய அரசை ஒருமனதாக வலியுறுத்துகிறோம்' என்ற அரசின் தனி தீர்மானத்தை கொண்டு வந்தார்.

சலுகை


பின், அவர் பேசியதாவது:தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு இணையாக, கிறிஸ்துவ ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு தவிர, மற்ற அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.மத்திய அரசால் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து கல்வி உதவித் தொகைகளும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன், இட ஒதுக்கீட்டையும் வழங்குவதே சரியானதாக முறையானதாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க., - ரவி, காங்கிரஸ் - பிரின்ஸ், பா.ம.க., - ஜி.கே.மணி, வி.சி., - சிந்தனைச்செல்வன், ம.தி.மு.க., - சதன் திருமலைக்குமார், மார்க்சிஸ்ட் - சின்னதுரை, இந்திய கம்யூனிஸ்ட் - ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தீர்மானத்தை ஆதரித்து பேசினர்.

பா.ஜ., வெளிநடப்பு


பா.ஜ., சார்பில் பேசிய வானதி, இந்த தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து, நயினார் நாகேந்திரன், காந்தி, சரஸ்வதி உள்ளிட்டோரும் வெளிநடப்பு செய்தனர்.

பின், இந்த தீர்மானம், குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டது.

பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்


கிறிஸ்துவ மதத்தில் தீண்டாமை கொடுமை இருப்பதை, அரசு ஒப்புக் கொள்வது போலவும், மதமாற்றத்தை ஆதரிப்பது போலவும், இந்த தீர்மானம் இருக்கிறது. இப்பிரச்னை குறித்து ஆராய ஆணையம் ஒன்றை, மத்திய அரசு அமைத்துள்ளது. இது தொடர்பான வழக்கும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.அப்படியிருக்கும்போது, இப்படியொரு தீர்மானம் கொண்டு வருவது ஏன்?

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார்


சமூக நீதி, திராவிட மாடல் என்று பேசி, தினமும் இந்திய சட்டத்தால் இயலாத விஷயத்தை, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் நடந்து விடும் என்று, பொய் பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் முதல்வர் ஸ்டாலின், தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை திசை மாற்றம் செய்வதற்கு முயற்சிக்கிறார்.ஹிந்து பட்டியலின சமூகத்தில் இருந்து, கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கு, ஹிந்து சமூகத்தினர் பெறக்கூடிய சலுகைகளை அனுபவிக்க ஏற்புடைய சட்ட திருத்தத்தை, இந்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை கண்டிக்கிறோம்.இது, மறைமுகமாக கிறிஸ்துவ மதத்திற்கு மாறுங்கள் என்று மதமாற்றத்திற்கு அரசே உதவுவதாக அறிகிறோம்.

'பட்டியலின சமூகத்தில் இருந்து கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பின்பும், நாங்கள் ஆயர்களாக, பேராயர்களாக வர முடிவதில்லை. சர்ச்சுகளில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது' என, கிறிஸ்துவ மத பிரமுகர் மேத்யூ போன்றவர்கள் எழுப்பிய ஓலக்குரல், சமூக நீதி பேசக்கூடிய ஸ்டாலின் அரசின் காதில் விழவில்லையா?ஹிந்து கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று சட்டம் இயற்றிய அரசு, கிறிஸ்துவ தேவாலயங்களில், திருச்சபைகளில் பட்டியலின மக்களுக்கு உரிய பங்கு, பதவிகளில் சமமான உரிமை இல்லை என்ற விஷயத்தில் தலையிடாமல், மதம் மாறியவர்களுக்கு சலுகை பற்றி பேசுவது, ஓட்டுக்கான அரசியல் நாடகம்.

ஒட்டுமொத்த ஹிந்து பட்டியலின மக்கள், தங்களுக்கான உரிமைகளை பாதுகாக்க ஓரணியில் திரண்டு, தமிழக அரசு இயற்றிய தீர்மானத்தை எதிர்க்க வேண்டும்; நீதிமன்றங்களிலும் போராட வேண்டும்.

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்:


கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பட்டியல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகை வழங்க, சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை கண்டிக்கிறோம். இட ஒதுக்கீடு குறித்து தெளிவான கண்ணோட்டத்தை, அம்பேத்கர் தந்துள்ளார். முதல்வரின் இந்த நடவடிக்கை, அம்பேத்கரின் உயர் சிந்தனைக்கு செய்யும் துரோகம். தி.மு.க., அரசு பதவியேற்றதில் இருந்து, அப்பட்டமாக கிறிஸ்துவ, இஸ்லாமியர் ஊதுகுழலாக செயல்படுகிறது; ஹிந்துக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது. கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள், மக்களின் வரி பணத்தில் நடத்தப்படுகின்றன. ஆனாலும், மாநில அரசின் இட ஒதுக்கீடுகளை அமல்படுத்துவதில்லை. இதற்கு முதல்வர், மசோதா கொண்டு வருவாரா? மதம் மாறிய கிறிஸ்துவர்களுக்கு, தமிழக அரசு கொண்டு வரும் மசோதாவை முறியடிக்க, ஹிந்து முன்னணி தயங்காது.

தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை


கிறிஸ்துவ, இஸ்லாமிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற வழக்கு, 20 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தனி தீர்மானம், மதங்களுக்கு இடையே பிளவை உருவாக்கவே வழிவகை செய்யும். ஜாதிகளே இல்லை என்று சொல்கிற மதங்களில், ஓட்டுக்காக ஜாதி இட ஒதுக்கீடு கேட்டு, மக்களை துாண்டி விடும் தி.மு.க., அரசின் மதவாத போக்கை, பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது. இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மதங்களில் ஜாதிய பிளவுகள் உள்ளது என்றும், தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது என்றும், முதல்வர் ஸ்டாலின் கூறுகிறாரா? அப்படி உறுதி செய்வாரேயானால், இதுவரை ஹிந்து மதத்தை மட்டும் குறிவைத்து தாக்கியதற்கு, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

பாலகிருஷ்ணன் ஆணையம் விசாரணை


கிறிஸ்துவராக மதம் மாறிய பட்டியலின மக்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும் என, கிறிஸ்துவ மத அமைப்புகள், நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கு, பா.ஜ., உட்பட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து, வரலாற்று ரீதியாக பட்டியலினத்தைச் சேர்ந்த, மதம் மாறியவர்களுக்கு, அதற்கான அந்தஸ்து வழங்குவது குறித்து, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில், 2022 அக்டோபரில் ஆணையம் அமைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஆணையத்தில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவீந்தர் குமார் ஜெயின், பல்கலை மானியக் குழு உறுப்பினர் பேராசிரியர் சுஷ்மா யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆணையம், அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. அதன் பின்னரே, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க முடியும்.

இப்படிப்பட்ட நிலையில், கண் துடைப்பாக தமிழக அரசு ஒரு தீர்மானத்தை இயற்றி இருப்பது, வேறு பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகத்தான் என, விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

'யாரை ஏமாற்றுவதற்காக கண்துடைப்பு தீர்மானம்?


'

'மத்திய அரசு ஆணையம் அமைத்து, ஆறு மாதங்களுக்கு பின், அதே நோக்கத்திற்காக ஒரு கண்துடைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது யாரை ஏமாற்ற?' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பிஉள்ளார். அவரது அறிக்கை: தி.மு.க., ஆட்சியில், பட்டியல் சமூக சகோதர, சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கிறிஸ்துவ மதத்தை தழுவிய பட்டியல் பிரிவினருக்கும், இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி, சட்டசபையில் தி.மு.க., தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தமிழக பா.ஜ., தரப்பில், தி.மு.க.,வினர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதில் இருந்து தப்பிக்க பயன்படுத்தும் உத்தியாக தான் இது தெரிகிறது. இது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தபோது, ஹிந்துக்கள் மட்டுமே பட்டியல் பிரிவாக கருதப்பட்டனர். கடந்த 2022 அக்டோபரில், முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் கிறிஸ்துவம், இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளவர்களை, பட்டியல் சமூகத்தில் சேர்ப்பதால், தற்போதுள்ள பட்டியலினத்தோர் மத்தியில் ஏற்படும் தாக்கங்களை கண்டறிய, மத்திய அரசால் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் பரிந்துரைகளை சமர்ப்பிக்க, இரு ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனின் நலனையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படுவதை, முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும். மத்திய அரசு ஆணையம் அமைத்து, ஆறு மாதங்களுக்கு பின், அதே நோக்கத்திற்காக ஒரு கண்துடைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, யாரை ஏமாற்ற? தி.மு.க.,வினரால் பட்டியல் சமூக சகோதர, சகோதரிகளின் வாழ்வாதரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு பாதுகாப்பதே, அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவி.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» கேரள அரசை வலியுறுத்தும் தீர்மானம் ஜெ., தாக்கல் - தமிழக சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று கூடியது
» மத்திய அரசை ஈழத் தமிழர் எதிர்ப்பு நிலையை கைவிட வேண்டும்-பாஜக
» இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க இந்திய அரசை வலியுறுத்தும் ஒரு மிஸ் கால்...
» தமிழக சட்டசபை மாற்றத்துக்கு வைகோ எதிர்ப்பு
» மத்திய அரசை திணற வைத்த சிறுமி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum