புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:31 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காசநோய் Tuberculosis Poll_c10காசநோய் Tuberculosis Poll_m10காசநோய் Tuberculosis Poll_c10 
47 Posts - 46%
ayyasamy ram
காசநோய் Tuberculosis Poll_c10காசநோய் Tuberculosis Poll_m10காசநோய் Tuberculosis Poll_c10 
39 Posts - 38%
mohamed nizamudeen
காசநோய் Tuberculosis Poll_c10காசநோய் Tuberculosis Poll_m10காசநோய் Tuberculosis Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
காசநோய் Tuberculosis Poll_c10காசநோய் Tuberculosis Poll_m10காசநோய் Tuberculosis Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
காசநோய் Tuberculosis Poll_c10காசநோய் Tuberculosis Poll_m10காசநோய் Tuberculosis Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
காசநோய் Tuberculosis Poll_c10காசநோய் Tuberculosis Poll_m10காசநோய் Tuberculosis Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
காசநோய் Tuberculosis Poll_c10காசநோய் Tuberculosis Poll_m10காசநோய் Tuberculosis Poll_c10 
2 Posts - 2%
prajai
காசநோய் Tuberculosis Poll_c10காசநோய் Tuberculosis Poll_m10காசநோய் Tuberculosis Poll_c10 
2 Posts - 2%
Manimegala
காசநோய் Tuberculosis Poll_c10காசநோய் Tuberculosis Poll_m10காசநோய் Tuberculosis Poll_c10 
2 Posts - 2%
Saravananj
காசநோய் Tuberculosis Poll_c10காசநோய் Tuberculosis Poll_m10காசநோய் Tuberculosis Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசநோய் Tuberculosis Poll_c10காசநோய் Tuberculosis Poll_m10காசநோய் Tuberculosis Poll_c10 
403 Posts - 48%
heezulia
காசநோய் Tuberculosis Poll_c10காசநோய் Tuberculosis Poll_m10காசநோய் Tuberculosis Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
காசநோய் Tuberculosis Poll_c10காசநோய் Tuberculosis Poll_m10காசநோய் Tuberculosis Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
காசநோய் Tuberculosis Poll_c10காசநோய் Tuberculosis Poll_m10காசநோய் Tuberculosis Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
காசநோய் Tuberculosis Poll_c10காசநோய் Tuberculosis Poll_m10காசநோய் Tuberculosis Poll_c10 
28 Posts - 3%
prajai
காசநோய் Tuberculosis Poll_c10காசநோய் Tuberculosis Poll_m10காசநோய் Tuberculosis Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காசநோய் Tuberculosis Poll_c10காசநோய் Tuberculosis Poll_m10காசநோய் Tuberculosis Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காசநோய் Tuberculosis Poll_c10காசநோய் Tuberculosis Poll_m10காசநோய் Tuberculosis Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காசநோய் Tuberculosis Poll_c10காசநோய் Tuberculosis Poll_m10காசநோய் Tuberculosis Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
காசநோய் Tuberculosis Poll_c10காசநோய் Tuberculosis Poll_m10காசநோய் Tuberculosis Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசநோய் Tuberculosis


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 17, 2023 12:43 am

காசநோய் Tuberculosis NbogL2o

காசநோய், மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியா மூலம் பரவுகிறது. மக்கள்தொகை அதிகமுள்ள வளரும் நாடுகளில் இந்நோயின் பாதிப்பு அதிகம் உள்ளது.

வரும் 2025-ம் ஆண்டுக்குள், இந்தியாவில் காசநோயை ஒழிப்பதே தேசிய அளவிலான நம் குறிக்கோளாக இருக்கிறது. அதன்படி, இந்த ஆண்டு மத்திய சுகாதாரத் துறை, ‘'Yes! We can end TB!'’ எனும் கருப்பொருளைக் கையில் எடுத்துள்ளது. உலக காசநோய் அறிக்கை (2022) யின் புள்ளி விவரங்களின்படி, உலகில் உள்ள காசநோயாளிகளில் 28% பேர் இந்தியாவில் இருப்பது தெரிகிறது.

அம்மை நோய் வந்தாலோ, பால் மருக்கள் தோன்றினாலோ அதை தெய்வக் குற்றமாகக் கருதி, கடவுளுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது இன்றைக்கும் வழக்கமாக இருக்கிறது. உலகெங்கிலும், இது போன்ற நம்பிக்கைகள் இருப்பதாக வரலாறு சொல்கிறது. ஏறத்தாழ 9,000 ஆண்டுகளாக மனித இனத்தை ஆட்டிப்படைத்து, பேரழிவை ஏற்படுத்திய நோய்களில் ஒன்றான காசநோய், `முன் ஜென்மத்தில் செய்த பாவங்களின் பலன்’, `கண்ணுக்குப் புலப்படாத கொடிய உயிரினங்களால் ஏற்படுவது’, `முன்னோரின் தீய ஆவி, குடும்பத்தில் பரவுகிறது’ என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டது. இவற்றை கிரேக்க, ரோமானிய, எகிப்திய, ஐரோப்பிய நாடுகளில் இருந்தவர்கள் நம்பவும் செய்தார்கள்.

`தைசிஸ்’ (Phthisis), `டேப்ஸ்’ (Tabes), `வெள்ளை பிளேக்’ (White Plague), `நுகர்வு நோய்கள்’ (Consumption Diseases) என வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டது ‘டியூபர்குளோசிஸ்’ (Tuberculosis - TB) என்ற காசநோய்.அது ஏற்படுத்திய இறப்பு விகிதம் காரணமாக, `இறப்பு நோய்களின் தலைவன்’ என்று சொல்லப்பட்டது. பிறகு, `காசநோய், நாம் செய்யும் பாவத்தால் ஏற்படுவதல்ல; காற்றில் பரவும் பாக்டீரியாவால் ஏற்படுவது’ என்று டாக்டர் ராபர்ட் காக் (Robert Koch) என்ற ஜெர்மானிய மருத்துவ விஞ்ஞானி நிரூபித்தார். அதற்குப் பிறகுதான் மேலை நாட்டினரின் நம்பிக்கைகள் மாறத் தொடங்கின.

`மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்’(Mycobacterium Tuberculosis) என்ற பாக்டீரியாதான் காசநோய்க்குக் காரணம் என்பதை உறுதிசெய்த ராபர்ட் காக், `காக்’ஸ் பாஸ்டுலேட்ஸ்’ (Koch’s Postulates) என்ற நோய் அனுமானங்களை, 1882-ம் ஆண்டு, மார்ச் மாதம் 24-ம் தேதி உலகுக்கு வழங்கிய அந்த நாளைத்தான் `உலக காசநோய் விழிப்புஉணர்வு தினம்’ என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதை அனைத்து நாடுகளும் கடைப்பிடித்துவருகின்றன. மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் பாக்டீரியா, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்கக் கண்டத்தில், மாடுகளின் இனத்தில் தோன்றியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

`பேசில்லஸ்’ (Bacillus) வகையைச் சேர்ந்த இந்த பாக்டீரியா, மிகவும் மெதுவாக வளரும் தன்மைகொண்டவை. எளிதில் அழிக்க முடியாதவை; வெப்பம், குளிர், காற்று, அமிலத் தன்மை, கார்ப்புத் தன்மை என அனைத்தையும் தாங்கும் ஆற்றல்மிக்கவை. காசநோயை நாம், ‘எலும்புருக்கி நோய்’ என்கிறோம். ``காசநோய் ஒவ்வோர் ஆண்டும், ஒவ்வொரு வீடாக, ஒவ்வொரு நாடாக, மெதுவாக, அமைதியாக உலகை ஆக்கிரமித்து, வெற்றிகொண்டுவிட்டது’’ என்று கூறும் டாக்டர் ஃப்ராங்க் ரியான், “காசநோய்க் கிருமி்கள் போர் மற்றும் பஞ்சத்தின்போது தம் வலிமையான கரங்களுடன் இன்னும் அழுந்தப் பற்றி, மானிட இனத்தை அழித்துவருகின்றன” என்று தனது `டியூபர்குளோசிஸ்: தி கிரேட்டஸ்ட் ஸ்டோரி’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

‘ஓபன் டி.பி’ என்ற நுரையீரல் காசநோய், பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து 25 பேருக்கு காற்றின் மூலமே பரவிவிடுமாம். இருமல், தும்மல் மற்றும் எச்சில் மூலமாக இந்த நுண்கிருமிகள் பரவுகின்றன என்றாலும், இருமல்தான் நோய் பரவ முக்கியக் காரணம்.

நோயாளி ஒவ்வொருமுறை இருமும்போதும், அவரது சளியிலிருந்து ஏறத்தாழ 5,000 என்ற எண்ணிக்கையில் மைக்கோபாக்டீரியம் கிருமிகள் வெளியேறும். பெண்களைவிட ஆண்களை அதிகமாக பாதிக்கும் இந்த நோய்க்கு வயது ஒரு பொருட்டில்லை. ஆனாலும், வளர்ந்த நாடுகளில் வயதானவர்களைத்தான் இது அதிகம் பாதிக்கிறது. வளரும் நாடுகளிலோ வறுமையினால் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக, குழந்தைகளையும் பதின்பருவத்தினரையும் அதிகம் பாதிப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு நாளும் 28,500 பேர் காசநோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுவதாகவும், அவர்களில் 4,700 பேர் தினந்தோறும் உயிரிழப்பதாகவும் கூறும் உலக சுகாதார நிறுவனம், `அவர்களில் இரண்டரை லட்சம் பேர் குழந்தைகள்’ என்கிறது. அதோடு, `இந்தியா, இந்தோனேஷியா, சீனா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அவற்றில் முன்னணியில் இருக்கின்றன’ என்றும் கூறுகிறது.

`உலக காசநோயாளிகளில் ஐந்தில் ஒருவர் இந்தியர்’ என்ற புள்ளிவிவரத்தை இந்திய நோய்க் கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்திருக்கிறது. நோயுற்ற ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒரு வருடத்தில் 10-15 பேருக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்துவதால், ஒவ்வோர் ஆண்டும் 3,70,000 பேரை, அதாவது மூன்று நிமிடங்களுக்கு ஒருவரை, காசநோய் அமைதியாக உயிர்ப்பலி வாங்குகிறது.

காற்றோட்டம் இல்லாத வீடுகள், மக்கள் நெருக்கமுள்ள இடங்கள், சுரங்கங்கள், பஞ்சாலைகள், சிமென்ட் ஆலைகள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களிலெல்லாம் இந்தக் கிருமிகள் அதிகம் பரவும். அதேபோல் ஹெச்.ஐ.வி தொற்று, சர்க்கரைநோய், ஆஸ்துமா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும் தொடர்ந்து ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்பவர்களுக்கும் வயோதிகம், புற்றுநோய், கீமோதெரபி போன்ற காரணங்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதும் இந்த நோய்த் தாக்குதல் எளிதாக ஏற்படுகிறது.

நுரையீரலையோ, பிற உறுப்புகளையோ தாக்கும் காசநோயின் அறிகுறிகளும், அந்தந்த உறுப்பைப் பொறுத்தே மாறுபடும். இரண்டு வாரங்களுக்கு மேலாகச் சளியுடன்கூடிய இருமல், மாலைநேரக் காய்ச்சல், இரவில் வியர்வை, உடல் சோர்வு, பசியின்மை, நாளுக்கு நாள் அதிகரிக்கும் இருமல், ரத்தச்சோகை, மூச்சுத்திணறல், ரத்தம் கலந்த சளி, திடீர் எடை குறைவு, மார்புவலி ஆகியவை காசநோயின் முக்கிய அறிகுறிகள்.

இந்த அறிகுறிகள் உள்ளவர்களுக்கு, முதல் கட்டமாக சளியில் `ஏ.எஃப்.பி’ (AFB) என்ற மைக்கோபாக்டீரியம் இருக்கிறதா எனப் பரிசோதனை செய்யப்படும். இரண்டு அல்லது மூன்று முறை இந்த சளிப்பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும் ரத்தப் பரிசோதனைகள், எக்ஸ்ரே, `மேன்ட்டோ’ (Mantoux) என்ற சருமப் பரிசோதனை, தேவைப்பட்டால் டி.பி-பி.சி.ஆர், (TB-PCR), சிடி ஸ்கேன் (CT Scan) ஆகிய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். காசநோய் கண்டறியப்பட்டால், முழுமையான சிகிச்சையை உடனடியாக மேற்கொண்டால் நோயை முற்றிலும் குணப்படுத்திவிடலாம்.

தொடக்கநிலை காசநோயாக இருந்தால், நோயாளியின் உடல் எடைக்குத் தகுந்த அளவில் `ஐஎன்ஹெச்’ (INH), `ரிஃபாம்பிசின்’ (Rifampicin), `பைராஸினமைடு’ (Pyrazinamide), `எத்தம்பியூடால்’ (Ethambutol) ஆகிய மருந்துகள் பரிந்துரைக்கப்படும். இரண்டு மாதங்கள் தீவிர சிகிச்சையும், நான்கு மாதங்கள் தொடர் சிகிச்சையும் என ஆறு மாத கால சிகிச்சையும் வழங்கப்படும். ஏற்கெனவே காசநோய்க்கான சிகிச்சை பெற்றவர் என்றால், முதல் மூன்று அல்லது நான்கு மாதங்கள் தீவிரச் சிகிச்சையும், மீதி மாதங்கள் தொடர் சிகிச்சையும் என ஒன்பது மாத கால சிகிச்சை வழங்கப்படும்.

காசநோயைத் தடுக்கும் முயற்சியாக அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் `டாட்ஸ்’ (DOTS) என்ற குறுகியகால கூட்டு மருந்து சிகிச்சை முறை 1993-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது. பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை நோயாளி தொடர்ச்சியாக உட்கொள்வதை உறுதிசெய்வதே இந்த `டாட்ஸ்’ முறை. பிறந்த குழந்தைக்கு பி.சி.ஜி என்ற தடுப்பூசியும், குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால், மற்ற அனைவருக்குமான பரிசோதனைகளும் நோய் வரும் முன்னரே கட்டுக்குள்வைத்திருக்க உதவுகின்றன.

காசநோய் பெரும்பாலும் 15 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களையும், உழைக்கும் வர்க்கத்தினரையுமே தாக்குகிறது. கல்வி இழப்பு, வேலை இழப்பு, பொருளாதாரச் சீர்கேடு என நாட்டின் மிகப் பெரிய சமூகப் பிரச்னையாகவும் இது உருவெடுத்திருக்கிறது. இந்த நோயால் ஏற்படும் உயிரிழப்புகளோடு, இது சமூகத்தில் ஏற்படுத்தும் களங்கத்தால் தற்கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

காசநோய் (TB - Tuberculosis) என்பது நுரையீரலை பாதிக்கக்கூடிய பாக்டீரியா கிருமிகளால் ஏற்படக்கூடிய ஓர் எண்டெமிக் (Endemic) நோய்த்தொற்று. அதாவது எல்லா பருவத்திலும் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் நோய்க்கு எண்டெமிக் எனப்படும். தொற்று நோய்களில் மரணத்தை ஏற்படுத்தக்கூடியவற்றில் உலகளவில் முதலிடத்தில் இருப்பது 'காசநோய்'. ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் உள்ளனர். மற்ற நாடுகளில் காசநோய்த் தொற்று இருந்தாலும், இந்தியாவில் இதன் தாக்கமும், பரவலும் அதிகமாக உள்ளது. அதற்கு அதிக மக்கள் தொகையும், சுகாதாரமில்லாத இடங்களும் முக்கியக் காரணங்களாக உள்ளன.

கொரோனாவை போலவே காசநோயும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடிய நோய். காசநோய் உள்ள ஒருவர் தும்மும்போதும் இருமும்போதும் மற்றும் வேகமாகப் பேசும்போதும் வெளிப்படும் எச்சில் நீர்த்திவலைகள் மூலமாகக் காற்றில் பரவும் நோய்க்கிருமிகள் காற்றிலேயே சுற்றிக்கொண்டிருக்கும். நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்த, பலவீனமான ஒருவர் அந்தக் காற்றை சுவாசிக்கும்போது அவரின் நுரையீரலுக்குள் செல்லும் கிருமி அவருக்கும் காசநோய் தொற்றை ஏற்படுத்துகிறது.

காசநோய் பரவுவது எப்படி?


எளிதில் பரவக்கூடியதும், அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதுமான காசநோய் குறித்த விழிப்புணர்வு, பொதுமக்கள் அனைவருக்கும் அவசியம். காசநோய் பரவக் காரணம் என்ன, அதன் அறிகுறிகள் என்னென்ன, தீர்வுகள் மற்றும் காசநோய் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, திருச்சி, காவேரி மருத்துவமனையின் பொது மருத்துவர் பார்த்திபனிடம் பேசினோம்...

காசநோய், மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியா மூலம் பரவுகிறது. மக்கள்தொகை அதிகமுள்ள வளரும் நாடுகளில் இந்நோயின் பாதிப்பு அதிகம் உள்ளது. காசநோய் பாதிப்புடைய ஒருவருக்கு இருமல், தும்மல் ஏற்படும்போது அவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பாக்டீரியா பரவும் வாய்ப்புகள் அதிகம்.

காசநோய் எளிதாகப் பரவ வாய்ப்புள்ளவர்கள்


* வயதானவர்கள்

* குழந்தைகள்

* மருத்துவத்துறைப் பணியாளர்கள், மாணவர்கள்

* ஹெச்.ஐ. வி (HIV) பாதிப்புடையவர்கள்

* டயாலிசிஸ் (Dialysis) நிரந்தரமாக மேற்கொள்ளும் நோயாளிகள்

* உறுப்பு தானம் பெற்ற நோயாளிகள் (Organ transplant recipients)

* நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் (Immune suppressive drugs)

* போதை மருந்துகள் உட்கொள்பவர்கள் (Illicit drugs)

* வீடற்றவர்கள் (homeless people)

* கைதிகள் (prisoners)

* எடை குறைவாக உள்ளவர்கள் (underweight)

* நீரிழிவு நோய் உள்ளவர்கள் (diabeter)

* சிலிகோசிஸ் (Silicosis), நியூமோகோனியோஸிஸ் ( Pneumoniosis) உள்ளவர்கள்.

இருவகை காசநோய் பாதிப்புகள்


காசநோய் நுரையீரலில் ஏற்படுத்தும் பாதிப்பை பல்மோனரி டியூபர்குளோசிஸ் (Pulmonary tuberculosis) என்று குறிப்பிடுகிறோம். மற்ற உறுப்புகளில் உண்டாக்கும் பாதிப்பை எக்ஸ்ட்ரா பல்மோனரி டியூபர் குளோசிஸ் (extra pulmonary tuberculosis) என்று குறிப்பிடுகிறோம்.

இது மூளை (TB Meningitis), spinal cord (TB spine) முதுகுத்தண்டு, நெறிக்கட்டிகள் (TB Lymphodenitis), குடல் (Intestinal tuberculosis), சருமம் (skin TB) என உடலில் பெரும்பாலான உறுப்புகளை பாதிக்கலாம்.

அறிகுறிகள் என்னென்ன:


* காய்ச்சல்

* நாள்பட்ட இருமல் (இரண்டு வாரங்களுக்கு மேல்)

* சளியில் ரத்தம்

* பசியின்மை, உடல் எடை குறைதல்

* இரவு நேரங்களில் அதிகம் வியர்த்தல்

இத்தகைய அறிகுறி உள்ளவர்கள், உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகி, தகுந்த ஆலோசனை பெற வேண்டும். சளி பரிசோதனை ( Sputum), எக்ஸ்ரே (chest X-ray) முதலான பரிசோதனைகள் மூலம் காசநோய் உறுதி செய்யப்பட்டால், காலம் தாழ்த்தாமல் உடனடியாக அதற்கான சிகிச்சையைத் தொடங்க வேண்டும். அவ்வாறு சிகிச்சை பெறவில்லையெனில் தேவையற்ற நெடுங்கால உடல் பாதிப்புகள் (complications) உண்டாக நேரிடும்.

Latent TB:


TB பாக்டீரியாவின் தொற்று (Infected person) ஏற்பட்ட அனைவரும், காசநோயினால் (Active TB) பாதிக்கப்படுவதில்லை. இதற்கு முக்கிய காரணம் நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் (immune system. இத்தகைய பாதிப்பை (inactive TB), லேடன்ட் டிபி (latent TB) என்று குறிப்பிடுகிறோம்.

இதுவே பின்னாளில் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி (immunity) குறையும்போது காசநோய் அறிகுறிகளாக வெளிப்பட வாய்ப்புள்ளது (Active disease). நம்முடைய அரசு, இத்தகைய பாதிப்புகளைக் கட்டுப்படுத்த (TB preventive treatment) காசநோய் தடுப்பு சிகிச்சையை வழங்குகிறது.

பொதுவான பாதிப்புகள்


பெரும்பாலானவர்களுக்கு தொடக்கத்தில் வாந்தி, குமட்டல், வயிற்று உபாதைகள் போன்ற சாதாரண பிரச்னைகள் உண்டாகலாம். அவற்றை தகுந்த மருந்துகள் மூலம் குணப்படுத்திவிடலாம். வெகு சிலருக்கு கல்லீரல் பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்றவை உண்டாகும். அவற்றையும் நாம் மருத்துவரை அணுகி சரி செய்து விடலாம். பொதுவாக இத்தகைய பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் வைட்டமின் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

காசநோய் பரவலைத் தடுக்கும் முறைகள்


* தனிமனித சுகாதாரம் (personal hygiene)

* தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் (BCG vaccination)

* பெரும்பாலும் கூட்ட நெரிசலைத் தவிர்த்தல் (avoid overcrowded areas)

* இருமல், தும்மல் ஏற்படும் போது கைகள் அல்லது கைகுட்டையைப் பயன்படுத்தி வாய் மற்றும் மூக்குப் பகுதிகளை மூடிக்கொள்ளுதல் (cough etiquette)

* சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல்(social distance)

* பொது இடங்களில் சளி மற்றும் எச்சில் துப்புவதைத் தவிர்த்தல் (avoid splitting in public places)

* நோய் பாதிப்பு உள்ளவர்கள் பொதுஇடங்களுக்குச் செல்லும்போது கட்டாயம் மாஸ்க் (mask) அணிய வேண்டும்.

இத்தகைய அடிப்படை சுகாதார நடவடிக்கைகளால் காசநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.

காசநோய் உள்ளவர்களின் கவனத்துக்கு...


காசநோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் சிகிச்சையை நிறுத்தக்கூடாது. மருத்துவரின் ஆலோசனையுடன் காசநோய்க்கான மருந்து, மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள்.

காசநோய் உள்ளவர்களுக்கு முதல் எதிரி புகைப்பழக்கமும் மதுப்பழக்கமும்தான். ஒருவேளை இந்தப் பழக்கங்கள் இருந்தால் உடனே கைவிடுங்கள். இல்லையெனில் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

வெளியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் மாஸ்க் அணிந்து போதிய முன்னெச்சரிக்கையுடன் செல்லுங்கள்.

சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். புரதச் சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். உடலும் சுற்றுப்புறமும் தூய்மையாக இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள்.

குறிச்சொற்கள் #காசநோய் #Tuberculosis


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக