ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடையில் செய்யக் கூடாத விஷயங்கள்

Go down

கோடையில் செய்யக் கூடாத விஷயங்கள்  Empty கோடையில் செய்யக் கூடாத விஷயங்கள்

Post by சிவா Sun Apr 16, 2023 9:18 pm

கோடையில் செய்யக் கூடாத விஷயங்கள்  Y91Jl4V

கோடை காலம் தொடங்கிவிட்டது. சித்திரை பிறக்கும் முன்பே வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. ஏப்ரல் முதல் ஜூலை வரை கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மால் தப்பிக்கவே முடியாது.

ஒரு பக்கம் வியர்வையின் பாதிப்பு… மறுபக்கம் வெயிலினால் ஏற்படும் சரும பாதிப்பு என இந்த கோடை காலத்தில் நாம் பல இன்னல்களை சமாளிக்க வேண்டும்.

அதே சமயம் நம்முடைய உடலிலும் வியர்வை அதிகம் வெளியேறுவதால், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

அதில் மிகவும் முக்கியமானது இந்த எட்டு விஷயங்களை நாம் கண்டிப்பாக செய்யக்கூடாது. அது என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

1. கோடை காலத்தில் வெளியே வெயிலில் செல்லும் போது சன் ஸ்க்ரீன் போடாமல் அல்லது பாதுகாப்பான ஆடைகளை அணியாமல் சென்றுவிடாதீர்கள். இல்லாவிட்டால், அது சருமத்தை மோசமாக பாதித்து, சரும நிறத்தை கருமையாக்கிவிடும்.

2. கோடையில் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது உடல் வறட்சியை இன்னும் அதிகரித்து வெப்ப வாதத்தின் அபாயத்தை அதிகரித்துவிடும்.

3. அடர் நிறங்களில் ஆடைகள் அல்லது மிகவும் இறுக்கமான ஆடைகளை கோடை காலத்தில் அணியாதீர்கள். இல்லாவிட்டால், அந்த ஆடைகள் வெப்பத்தை தக்கவைத்து, உடல் சூடு பிரச்சனையை அதிகரித்துவிடும்.

4. கோடை காலத்தில் எங்கு வெளியே சென்றாலும் நீர் கொண்டு செல்ல மறந்துவிடாதீர்கள். மற்ற காலங்களை விட கோடையில் அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் வறட்சியால் அவதிப்பட நேரிடும். தேவைப்பட்டால் பழச்சாறுகளும் எடுத்துக் கொள்ளலாம்

5. வயிறு நிறைய மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால், அது உடல் வெப்பத்தை அதிகரிப்பதோடு, உடலில் மந்தத்தை அதிகரிக்கும்.

6. வெளியே வெயிலில் செல்லும் போது தொப்பி, சன் ஸ்க்ரீன் கண்ணாடி போன்றவற்றை அணிய தவறக்கூடாது.

7. வெயிலில் அதிகம் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். அவசியம் இருந்தால் மட்டும் தான் வெளியே செல்ல வேண்டும். சூரியக்கதிர்கள் சருமத்தில் அதிகளவில் படுமானால், அது சரும புற்றுநோயின் அபாயத்தை அதிகரித்துவிடும்.

8. வெயில் அதிகமாக உள்ளது என்று வீட்டின் ஜன்னல்களை அடைத்துக் கொண்டு இருப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், அதுவே வீட்டினுள் வெப்பத்தை அதிகரிக்கும். காற்றோட்டமாக இருக்கும் வீடுகளில் வசிப்பது சிறந்தது.

குங்குமம் தோழி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடையில் செய்யக் கூடாத விஷயங்கள்  Empty Re: கோடையில் செய்யக் கூடாத விஷயங்கள்

Post by சிவா Sun Apr 16, 2023 9:57 pm

ஏன் வேண்டும் எண்ணெய் குளியல்!


கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே, பலருக்கும் அவ்வப்போது உடல் உஷ்ணமாகி பாடாய்ப்படுத்தும். இந்த உடல் உஷ்ணத்திலிருந்து விடுபட, வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியமாகும். மேலும், எண்ணெய் குளியல் தரும் பலன்களை பார்ப்போம்:சருமத்தில் எண்ணெய்ப் பசை இருந்தால்தான் சூரியனிலிருந்து வரும் வைட்டமின் டி சத்தை உடல் கிரகிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதிலும், எண்ணெயை உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்யும்போது நிணநீர் சுரப்பிகள் சுறுசுறுப்பாகச் செயல்படும். மன அழுத்தம் குறையும். நீர்க்கடுப்பைப் போக்கும். உடலினுள் இருக்கும் உஷ்ணமானது வெளியேறிவிடும்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என மூன்று எண்ணெய்களையும் சமமாகக் கலந்து உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து சிறிது நேரம் ஊறவிட்டு, சீயக்காயுடன் பாசிப்பருப்பு சேர்த்து அரைத்த நலங்கு மாவைத் தேய்த்து குளித்தால் உடல் குளுமையாகும்.எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் நமது உடல், உள்ளம் மட்டும் சுத்தமாவதில்லை. நம் உடலை சமமான உஷ்ணநிலையில் வைக்கிறது. மனதில் உற்சாகம் பிறக்கச் செய்கிறது. எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று வெளியில் அதிகம் அலையக் கூடாது. உடலின் வெளிப்புறம் உஷ்ணம் இருப்பதால், மேலும் சூடு சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும்.

பல தலைமுறைகளாக வாரத்திற்கு இருமுறை அல்லது ஒருமுறையோ எண்ணெய் தேய்த்து குளித்து வந்ததால்தான் நம் முன்னோர்கள் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ்ந்தார்கள். ஆனால் தற்போது வருடத்திற்கு ஒருமுறை தீபாவளிக்கு மட்டுமே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம். இந்தநிலை மாறி வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்வது மிகவும் நல்லது.

நாம் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு அறிவியல் ரீதியாகவும் பல தொடர்பு இருக்கின்றது. உடல் சூடு, உடல் வலி, தசைவலி, சோர்வுக்கு உடனடி நிவாரணம் ஆகியவற்றை தரக்கூடியது எண்ணெய் குளியல். மேலும், எண்ணெயை தேய்த்து அந்த உடலோடு வெயிலில் நின்றால் சூரியனில் இருக்கும் செரோடோனின் ஹார்மோன் எளிதில் நமக்கு கிடைக்கும். இதனால், நமது உடல் புத்துணர்வு அடைந்து சுறுசுறுப்பாகிவிடும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum