ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரைப் புத்தாண்டு - தமிழகம் முழுதும் கொண்டாட்டம்

Go down

சித்திரைப் புத்தாண்டு - தமிழகம் முழுதும் கொண்டாட்டம் Empty சித்திரைப் புத்தாண்டு - தமிழகம் முழுதும் கொண்டாட்டம்

Post by சிவா Fri Apr 14, 2023 8:44 pm

சித்திரைப் புத்தாண்டு - தமிழகம் முழுதும் கொண்டாட்டம் Tamil_News_large_3293347.jpg?w=640&dpr=1

சித்திரை திருநாளாம் தமிழ் புத்தாண்டை வரவேற்று கொண்டாட, தமிழக மக்கள் தயாராகி வருகின்றனர். கோவில்களில் சிறப்பு வழிபாட்டுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பண்டிகைகள், திருவிழாக்கள் இல்லாத மாதங்களே இல்லை. ஆண்டின் துவக்கமான சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகவும், சித்திரை திருவிழாவாகவும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அறுசுவை விருந்து



வேப்பம்பூ ரசம், மாங்காய் பச்சடி, பானகம், நீர் மோர், பருப்பு வடை, பாயசம் என, இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, உப்பு, காரம், புளிப்பு என அறுசுவை உணவு வகைகளை சமைத்து, நண்பர்கள், உறவினர்களுடன் விருந்துண்டு மகிழ்வதும், குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று வழிபடுவதும் தமிழர்களின் வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டும் தமிழ் புத்தாண்டான சித்திரையை வரவேற்று கொண்டாட, தமிழக மக்கள் தயாராக உள்ளனர். வேப்பிலை, மாவிலை, தென்னை ஓலை தோரணங்களுடன் வீடுகளை அலங்கரிப்பது, அறுசுவை விருந்து, கோவில்களில் வழிபாடு ஆகியவற்றுக்கும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

கடந்த 2008-ல் தி.மு.க., ஆட்சியின்போது, அன்றைய முதல்வர் கருணாநிதி, தை முதல் நாளை, தமிழ் புத்தாண்டாக மாற்றினார்.

'மறைமலை அடிகள், திரு.வி.க., கி.ஆ.பெ.விஸ்வநாதம், சோமசுந்தர பாரதி உள்ளிட்ட, 500 தமிழறிஞர்கள் ஒன்று கூடி, தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என அறிவித்தனர். சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்பதற்கு, எந்த ஆதாரமும் இல்லை' என்று, அதற்கு கருணாநிதி விளக்கம் அளித்தார்.

மறைமலை அடிகள் தலைமையில் நடந்த தமிழறிஞர்கள் மாநாட்டில், தமிழ் புத்தாண்டு தொடர்பான விவாதம் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. தை தான் புத்தாண்டு என தீர்மானித்திருந்தால், அதை கொண்டாடியிருப்பர். ஆனால், அவர்கள் தை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடவில்லை.

சட்ட மசோதா



கருணாநிதி முதல்வரான பின்னரே, அந்த பேச்சு எழுந்திருப்பதாக, அப்போது தமிழறிஞர்கள், கல்வெட்டியல் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டினர்.

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 2011 ஆகஸ்டில், சித்திரை முதல் நாள் மீண்டும் தமிழ் புத்தாண்டாக மாற்றப்பட்டது.

அப்போது, சட்டசபையில் பேசிய அன்றைய முதல்வர் ஜெயலலிதா, 'சுய விளம்பரத்துக்காகவே தமிழ் புத்தாண்டை கருணாநிதி மாற்றினார். ஆண்டாண்டு காலமாக, சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், கருணாநிதி சட்டம் கொண்டு வந்தார்' என்றார்.

கடந்த 2021-ல் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தை முதல் நாளை மீண்டும் தமிழ் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என, தி.மு.க., ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இப்போதும், அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஆனால், அதற்கான சட்ட மசோதா கொண்டு வரப்பட்டால், கவர்னர் ஒப்புதல் அளிக்க வாய்ப்பே இல்லை என்பதால், தி.மு.க., தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

வாழ்த்து



தமிழ் புத்தாண்டை மாற்ற தி.மு.க., அரசு முயற்சித்தாலும், முதல்வர் வாழ்த்து கூறாவிட்டாலும், சித்திரை முதல் நாளையே புத்தாண்டாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அந்த அளவுக்கு தமிழர்களின் உணர்வில், வாழ்வில் சித்திரை தமிழ் புத்தாண்டு இரண்டற கலந்து விட்டது.

தமிழகம் மட்டுமல்லாது கேரளா, அசாம், மேற்கு வங்கம், மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும்; இலங்கை, நேபாளம், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளிலும், சித்திரையே புத்தாண்டு தினமாக உள்ளன.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum