ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்

2 posters

Go down

பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Empty பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்

Post by சிவா Tue Apr 11, 2023 10:18 pm

பாகிஸ்தானில் தமிழ் இந்துக்கள்: பங்குனி உத்திரத்தை கொண்டாடும் சில நூறு குடும்பங்கள் - யார் இவர்கள்?



பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  D8357e10

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் வசிக்கும் தமிழ் இந்துக்களின் ஒரு சிறிய சமூகம் சமீபத்தில் பங்குனி உத்திரத்தை மத ஆர்வத்துடன் கொண்டாடியது.

கராச்சியின் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள மதராசி பாராவில் சில நூறு தமிழ் குடும்பங்கள் வசிப்பதாக சமூக மதிப்பீடுகள் காட்டுகின்றன. இங்கு தென்னிந்தியாவில் உள்ள மதராஸிலிருந்து (இப்போது சென்னை) இடம்பெயர்ந்த இந்துக்களின் மக்கள்தொகை அதிகமாக உள்ளது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கராச்சி பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தால் உருவாக்கப்பட்ட போது இவர்கள் இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து பாகிஸ்தானுக்கு வந்தனர்.

பிரிவினைக்குப் பிறகு, 50 முதல் 60 குடும்பங்கள் சிறந்த பொருளாதார வாய்ப்புகளை நம்பி இங்கு குடியேறின. இந்த குடும்பங்கள் நகரத்தில் உள்ள மூன்று முக்கிய குடியிருப்பு பகுதிகளான மதராசி பாரா, டிரி ரோடு மற்றும் கோரங்கி ஆகியவற்றில் பிணைப்புடன் வாழ்கின்றன.

இங்கு தமிழ் சமூகம் 1964இல் மாரியம்மன் கோவிலைக் கட்டியது. இது அவர்களின் முக்கிய மக்கள் கூடும் சபையாக விளங்குகிறது. ஹனுமன் கோவில் என்று அழைக்கப்படும் மற்றொரு பெரிய கோவிலும் இங்கு கட்டப்பட்டு வருகிறது.

55 வயதான தமிழரான மரியம் ஸ்வாமி, தமது சமூகத்திலும், அவரைச் சுற்றியுள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியிலும் தனது இறை பணிகளுக்காக நன்கு மதிக்கப்படுகிறார்.

இவரது வீட்டிற்கு எதிரே தான் ஹனுமன் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

எல்லா மத விழாக்களுக்கும் இங்கு வாழும் சமூகத்தினர் தங்களுக்குள்ளாகவே நிதி வசூலிப்பதாகவும், இந்தக் கோவிலைக் கட்டவும் மக்கள் நன்கொடை கொடுத்ததாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார்.

மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சமூகம்


கராச்சியில் உள்ள தமிழ் இந்துக்கள் தென்னிந்தியாவின் மத மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் புனிதமான பண்டிகைகளின் போது இறைச்சியைத் தவிர்த்து, நோன்பிருந்து வெறும் கால்களில் யாத்திரை செல்வது, பங்குனி உத்திரத்தின் போது அழகு செய்வது போன்ற சடங்குகளைச் செய்கிறார்கள்.

இந்த பண்டிகையை தவிர பொங்கல், தை போசம் மற்றும் மாரியம்மன் திருவிழா போன்ற பிற மத விழாக்களையும் பக்தி சிரத்தையுடன் கொண்டாடுகின்றனர்.

பங்குனி உத்திரம் அன்று விரதம் இருந்து வாழை இலையில் சாப்பாடு பரிமாறப்பட்டதாகவும் தன்னை போன்றோருக்கு புதிய அனுபவம் என்கிறார் இளம் பக்தையான ஈஷா ரமேஷ்.

"இந்த நிகழ்வுக்காக இரண்டு மாதங்களாக மீன், இறைச்சி சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்," என்கிறார் அவர்.

எண்பதுகளில் இருக்கும் சீதா என்ற மூதாட்டி, சமூகத்தில் உள்ள மற்ற பெண்களுக்கு சமைத்து உதவி செய்யும் போது, புழுங்கல் அரிசி, பருப்பு போன்றவற்றை கலவையின்றி சமைப்பதாக சீதா என்னிடம் கூறினார்.

மத நல்லிணக்கம் போற்றும் மதராஸி பாரா


மதராசி பாராவை சுற்றிலும் பல முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றன. நீங்கள் அந்த இடத்தை உன்னிப்பாகக் கவனித்தால், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் சமய நல்லிணக்கத்துடன் இருப்பதை காணலாம்.

அருகே உள்ள மசூதியில் தொழுகைக்கான நேரம் வந்தபோது, மாரியம்மன் கோவிலின் காளிதாஸ் அங்குள்ள பக்தர்களிடம் அம்மன் முழக்கத்தையும் கோவில் மணி அடிப்பதையும் நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.

சிறிது நேரம் கழித்து, பங்குனி உத்திரம் ஊர்வலம் நடந்து கொண்டிருந்தபோது, வழிநெடுகிலும் நின்று கொண்டிருந்த முஸ்லிம்கள், அவர்களைப் பிரமிப்புடன் பார்த்து மரியாதையுடன் வழிவிட்டனர்.

மதராசி பாராவில் வசிக்கும் வயதான பெண்மணியான காமாட்சி கந்தசாமி, "நாங்கள் ஒற்றுமையாக வாழ்கிறோம், முஸ்லிம் சமூகத்தால் எங்களுக்கு எந்த பிரச்னையும் வந்ததில்லை" என்றார்.

ஊர்வலத்திற்குப் பிறகு பல இந்து பக்தர்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர். ஆனாலும் மரியம் சுவாமி உண்ணாவிரத்தை முடிக்காமல் மற்றவர்களுக்கு சேவை செய்தார். அது பற்றி கேட்டபோது, மாலையில் முஸ்லிம்களுடன் சேர்ந்து நோன்பு துறப்பேன் என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.

"எனக்கு ஐம்பத்து ஐந்து வயது. ஒவ்வோர் வருடமும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பேன். மாதம் முழுவதும் விரதம் இருப்பேன். என் மகன், மருமகள் அனைவரும் நோன்பு துறந்தார்கள். அல்லாஹு அக்பர், இறைவன் அருளுடன் மாலையில் நோன்பு துறப்பேன். இது இங்குள்ள அனைவருக்கும் தெரியும்," என்கிறார் மரியம் சுவாமி.

2017ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையான 207.68 மில்லியனில் 1.73 சதவீதம் பேர் இந்துக்கள்.

கராச்சியில் தமிழ் இந்துக்கள், ஒரு மத சிறுபான்மையினரின் துணைக்குழுவாக இருப்பதால், தங்கள் சொந்த வளமான கலாசார பாரம்பரியத்தின் மீது ஒரு பிடியை வைத்திருக்கிறார்கள். அத்துடன் பிரதான பாகிஸ்தானிய கலாசாரத்துடனும் அவர்கள் கலந்திருக்கிறார்கள்.

கராச்சியின் இந்த பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். ஆனால் பலர் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் உருது மொழி பேசும் புலம்பெயர்ந்த சமூகங்களுடன் ஒருங்கிணைந்துள்ளனர்.

இங்குள்ள சமூகத்தில் உள்ள பெரியவர்களுக்கு தமிழ் மொழி மீது பிடிப்பு உள்ளது. ஆனால் இளைய தலைமுறையினர் தங்கள் தாய்மொழியில் சில வாக்கியங்களை பேச முடியாமல் வார்த்தைகளை தேடுகிறார்கள். இவர்களில் பலரால் தமிழில் அனைத்து பாடல்களையும் பாட முடிகிறது. ஆனால், அவர்களில் பெரும்பாலானோரால் தமிழ் மொழியை எழுத்துக் கூட்டிப் படிக்க முடியவில்லை.

பிபிசி தமிழ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Empty Re: பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்

Post by Dr.S.Soundarapandian Wed Aug 16, 2023 9:29 am

“மதராசி பாராவை சுற்றிலும் பல முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றன. நீங்கள் அந்த இடத்தை உன்னிப்பாகக் கவனித்தால், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் சமய நல்லிணக்கத்துடன் இருப்பதை காணலாம்.” - சூப்பர் ! முன்மாதிரி!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
» பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்தவர் அமைச்சரானார்
» கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி!
» அப்துல் கலாம் இறந்த பின்னும் உயிர்ப்புடன் இருக்கும் அவரின் டிவிட்டர் பக்கம்!!
» 3 வது நாளாக அகதிகளாக வருகை: கேரளாவில் இருந்து 170 தமிழ் குடும்பங்கள் விரட்டியடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum