புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_m10புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_m10புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 02, 2023 2:14 am

புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Gi-tags-of-tamilnadu

புவிசார் குறியீடு என்றால் என்ன

ஓரிடத்தில் விளையக்கூடிய பொருட்கள் அல்லது தயாரிக்கக்கூடிய பொருட்களின் தரம் அந்த இடத்தின் காலநிலை, நிலம், நீர் இதனுடைய தன்மை போன்றவற்றை வைத்தே புவிசார் குறியீடு நிர்ணயிக்கப்படுகின்றது.

அது மட்டுமல்லாது ஒரு பொருளினது இடத்தின் பாரம்பரியத்தை உலகுக்கே தெரிவிக்கவும், அடுத்த தலைமுறைக்குப் பத்திரமாய் கொடுக்கவும் என நினைத்து புவிசார் குறியீடு பாதுகாப்புச் சட்டம் என்பதனை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய அரசு 1999ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு மற்றும் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது. அந்தச் சட்டத்தை 2003ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள்.

இச்சட்டத்தின்படி ஒவ்வொரு ஊருக்கும் அவ்வூரின் சிறப்பான விடயத்திற்கு புவிசார் குறியீடு வாங்கிக் கொள்ளலாம் என கூறப்பட்டது. இது மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சுக்களோடு அறிவுசார் சொத்துரிமைத்துறை ஆகியவை இணைந்து புவிசார் குறியீடு வழங்குகின்றது.

அதன் அடிப்படையில் 2003ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை சுமார் 3200க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் மத்திய அரசினால் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 32ற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

புவிசார் குறியீடு என்றால் என்ன

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பான வடிவங்கள் இருக்கும் அவ்வாறான சிறப்பான பொருட்களை அங்கிகாரம் செய்வதற்கும், கௌரவிக்கும் வகையிலும் கொடுக்கப்படுவது தான் புவிசார் குறியீடு ஆகும்.

புவிசார் குறியீடு கிடைப்பதன் பலன்கள்

ஒரு பொருளுக்கும் புவிசார் குறியீடு கிடைக்கும் எனில் அந்த ஊர் மக்களை தவிர வேறு ஊர் மக்கள் அந்தப் பெயரை பயன்படுத்தி அப்பொருளை தயாரிக்க முடியாது.

உதாரணத்திற்கு ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா ஸ்ரீ வில்லிபுத்தூர் மக்கள்தான் இதனைத் தயாரிக்க முடியும். அதைத்தவிர வேறு ஊர்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை தயாரித்து விற்க முடியாது.

இதன் மூலம் போலிகள் தயாரிப்பது தடுக்கப்படுவது மட்டுமன்றி அந்த ஊர் தொழிலாளர்களுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கும். இதன் மூலம் அப்பொருளை வாங்குவதற்கு அந்த ஊரைத் தேடி மக்கள் வருவார்கள்.

அதுமட்டுமன்றி அப்பொருளின் ஏற்றுமதியும் அதிகரிக்கும். இதனால் உற்பத்தி பெருகும். அப் பொருளுக்கும், அவ்வூர் மக்களுக்குமான வரலாற்றுப் பிணைப்பு மாறாமல் பாதுகாக்கப்படும்.

பொருட்களுக்கு சட்டபூர்வமான பாதுகாப்பும் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் சட்டப் பாதுகாப்பும் புவிசார்க் குறியீட்டினால் கிடைக்கப்படுவது மேலும் பயனுள்ளதாகின்றது.

தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்

சேலம் சுங்கடி

காஞ்சிப்பட்டு

பவானி ஜமக்காளம்

மதுரை சுங்குடி சேலை

கோயமுத்தூர் ஈரமாவு அரவைப்பொறி

தஞ்சாவூர் ஓவியம்

தஞ்சாவூர் ஓவியத்தட்டு

சுவாமிமலை வெண்கலப் படிமங்கள்

நாச்சியார் கோயில் விளக்கு

ஆரணிப் பட்டு

கோவை கோரா பருத்திப் புடவை

சேலத்துப் பட்டு

கிழக்கிந்திய தோல் தொழிற்சாலை

தலையாட்டி பொம்மை

ஈத்தாமொழி நெட்டை தென்னை

யூகலிப்டசு தைலம்

யூகலிப்டசு இலச்சினை (விண்ணப்ப எண் 116வுடன் இணைக்கப்பட்டது)

விருப்பாச்சி வாழை

சிறுமலை மலை வாழைப்பழம்

தோடா பூந்தையல்

பத்தமடைபாய்

நாச்சியார் கோயில் விளக்கு

செட்டிநாடு கொட்டான்

தஞ்சாவூர் வீணை

ஈரோடு மஞ்சள்

மதுரை மல்லி

திருவில்லிபுத்தூர் பால்கோவா

மகாபலிபுரம் கற்சிற்பம்

தஞ்சாவூர் தட்டு (இலட்சினை)

சுவாமிமலை வெண்கலச் சிலை

கோயில் நகை - நாகர்கோயில் (இலச்சினை)

பழநி பஞ்சாமிர்தம்

சீரக சம்பா அரிசி

பத்தமடை பாய்

பழநி பஞ்சாமிர்தம்

கொடைக்கானல் மலைப்பூண்டு

சீரக சம்பா

பத்தமடை பாய்

கோவில்பட்டி கடலை மிட்டாய்

அரும்பாவூர் மர வேலைப்பாடுகள்

நரசிங்கம்பேட்டை நாகசுரம்

வேலூர் முள்ளு கத்தரிக்காய்

ராமநாதபுரம் குண்டு மிளகாய்

தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு

கன்னியாகுமரி கிராம்பு

மணப்பாறை முறுக்கு

மார்த்தாண்டம் தேன்

மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு

ஆத்தூர் வெற்றிலை

கம்பம் பன்னீர் திராட்சை

சோழவந்தான் வெற்றிலை

நகமம் காட்டன் சேலை

மயிலாடி கல் சிற்பம்

சேலம் ஜவ்வரிசி

மானாமதுரை மண்பாண்டம்

ஊட்டி வர்க்கி

குறிச்சொற்கள் #புவிசார்_குறியீடு #Geographical_indication

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 02, 2023 11:09 am

புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் 3838410834 புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 308
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Mon Apr 03, 2023 6:28 pm

புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் 103459460 புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் 1571444738

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 03, 2023 7:18 pm

நல்ல பதிவு.

ஆத்தூர் வெற்றிலையா? 

கும்பகோணம் வெற்றிலை /ராஜாஜி வறுவல் சீவல் /வெண்ணை கலந்த 

வாசனை சுண்ணாம்பு பிரியர்களை கண்டுளேன்.

படுக்கைக்கு அருகில் செல்லப்பெட்டியில் இவை இருக்க அதன் முகத்தில்தான் காலையில் கண்விழிப்பேன் 

என்று தம்பட்டம் அடித்த நண்பர்கள் உண்டு. இப்போதெல்லாம் குட்கா /பீடா  கலாச்சாரம் 

நல்ல பதிவு.ருசித்தேன்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 08, 2023 2:49 pm

புவிசார் குறியீடு: இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு - தொழில்களுக்கு பயன் என்ன?

* உணவு பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள்,இயற்கை பொருட்கள் என ஐந்து வகையான உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியானவை

* 1999 ஆம் ஆண்டு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம், 1999) உருவாக்கப்பட்டு, 2002ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.

* வட்டாரப் பகுதிகளில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு, அதற்கான சட்ட பாதுகாப்பு வழங்குவதே இந்த புவிசார் குறியீட்டுச் சட்டத்தின் நோக்கம்.

* வணிக சின்னம் (ட்ரேட் மார்க்), காப்புரிமை (பேடெண்ட்) மற்றும் புவிசார் குறியீடு (Geographical indication) ஆகிய மூன்று விஷயங்களும் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் வருகின்றன.இதில் புவிசார் குறீட்டை தவிர மற்ற இரண்டுமே தனி நபர்களுக்கான உரிமையை நிர்ணயிப்பதாக விளங்குகின்றன.

* புவிசார் குறியீடு மட்டுமே குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் பொதுவான உரிமையாக விளங்குகிறது.

”இந்தியாவுடைய வளர்ச்சியில் கிராம பொருளாதாரங்களின் வளர்ச்சி பெரும்பங்கு வகிக்கின்றன. இதனால் கிராமங்களில் உற்பத்தியாகக் கூடிய தனித்துவமான பொருட்களின் சிறப்புகளை நாம் மேம்படுத்தி காட்டுவது மிகவும் அவசியமாகிறது.எனவே புவிசார் குறியீடு என்பது ஒரு அங்கீகாரம் மட்டுமல்ல, அது நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு திறவுகோல்”.

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிலபரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்திய அரசாங்கம் புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கிறது. அந்த வகையில் தற்போது அதிகமான பொருட்களுக்கு புவிசார் குறியீடுகளை பெற்றிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.

ஏற்கனவே மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் சுங்குடிச் சேலை, பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 45 பொருட்கள் புவிசார் குறியீடுகளை பெற்றிருந்தன. இந்த நிலையில் மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், நகமம் காட்டன், மயிலாடி கற்சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி, கம்பம் பன்னீர் திராட்சை, ஆத்தூர் வெற்றிலை, சோழவந்தான் வெற்றிலை உள்ளிட்ட மேலும் 11 பொருட்களுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளன. இதனால் தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருட்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

அதிகமான புவிசார் குறியீடுகளை பெற்றிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு அடுத்ததாக கர்நாடக மாநிலம் இரண்டாவது இடத்திலும், உத்தரபிரதேச மாநிலம் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

புவிசார் குறியீடு பெறுவதனால் கிடைக்கக்கூடிய சிறப்புகள் என்ன, இதனால் கிராம பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 08, 2023 2:50 pm

புவிசார் குறியீடு என்றால் என்ன?

”உணவு பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள்,இயற்கை பொருட்கள் என ஐந்து வகையான உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியானவை.

இப்படி கிராமப்புற பகுதிகள், மாநகரப் பகுதிகள் , சிற்றூர்கள் என இந்தியாவின் ஒவ்வொரு உள்ளூர் அல்லது வட்டாரப் பகுதிகளில் உருவாகக் கூடிய தனித்துவமான பொருட்களின் தரத்தை நம்பிக்கைக்குரிய முறையில் உறுதிப்படுத்தி, அதனை உலகளவில் எடுத்துச் செல்வதற்கு இந்த புவிசார் குறியீட்டு அங்கீகாரம் உதவுகிறது”என்கிறார் உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி கழகத் தலைவருமான சஞ்சய் காந்தி.

தமிழகத்தை பொறுத்தவரை காஞ்சிபுரம் பட்டுதான் முதன்முதலில் புவிசார் குறியீட்டை பெற்றது. அதற்கான முயற்சியை முன்னெடுத்து, சாத்தியமாக்கி காட்டியவர் இந்த சஞ்சய் காந்தி. புவிசார் குறியீடு பெறுவதன் முக்கியத்துவம் குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் சில தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

“1999 ஆம் ஆண்டு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம், 1999) உருவாக்கப்பட்டு, 2002ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. வட்டாரப் பகுதிகளில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு, அதற்கான சட்ட பாதுகாப்பு வழங்குவதே இந்த புவிசார் குறியீட்டுச் சட்டத்தின் நோக்கம்.

வணிக சின்னம் (ட்ரேட் மார்க்), காப்புரிமை (பேடெண்ட்) மற்றும் புவிசார் குறியீடு (Geographical indication) ஆகிய மூன்று விஷயங்களும் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் வருகின்றன. இதில் புவிசார் குறீட்டை தவிர மற்ற இரண்டுமே தனி நபர்களுக்கான உரிமை நிர்ணயிப்பதாக விளங்குகின்றன.

ஆனால் புவிசார் குறியீடு மட்டுமே குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் பொதுவான உரிமையாக விளங்குகிறது. உதாரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு வாங்க முடிந்தது, ஆனால் அதுவே திருநெல்வேலி இருட்டு கடை அல்வாவிற்கு நம்மால் புவிசார் குறியீடு வாங்க முடியாது” என்று கூறுகிறார் சஞ்சய் காந்தி.

”உள்ளூர் உற்பத்தியாளர்களின் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டுமென்பதற்காகவே,கடந்த 20 ஆண்டுகளாக நம் தமிழகத்தின் தனித்துவமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தருவதில் தீவிரமாக இயங்கி வருகிறேன். இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் கிடைத்துள்ளன. அதில் 37 பொருட்களுக்கு என்னுடைய தனிபட்ட முயற்சியினால் மட்டுமே புவிசார் குறியீடுகள் கிடைத்துள்ளன.

இதுதவிர நம்முடைய தமிழக அரசும் பல வேளாண் மற்றும் இயற்கை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது ” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 08, 2023 2:51 pm

அங்கீகாரம் பெறுவது எப்படி?

”புவிசார் குறியீடு பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்காக நாம் நிறைய ஆதாரங்களையும், ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

முதலில் குறிப்பிட்ட பொருளுக்கான விவரக்குறிப்பு, விளக்கம், பொருளின் ஆரம்பம் முதல் இறுதி வரை நடைபெறும் உற்பத்தி முறை, தனித்துவம், பொருளுக்கான சிறப்பு தன்மை, சிறப்பு மூலபொருட்கள், வேளாண் அல்லது இயற்கை பொருட்களாக இருந்தால் அது உற்பத்தியாகக் கூடிய காலநிலை விவரங்கள், மனிதர்கள் தயாரிக்கக்கூடிய கைவினைப் பொருட்களாக இருந்தால் அவர்களுடைய தனித்துவமான திறன், எந்த பகுதியில் உற்பத்தியாகிறது போன்ற அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய முறையான ஆவணங்களை நாம் சமர்பிக்க வேண்டும்.

மிக முக்கியமாக அந்த பொருட்களுக்கு இருக்கும் வரலாற்று சிறப்புகளை நிரூபிக்கும் வகையிலான ஆவணங்களை நாம் அளிக்க வேண்டும். பாரம்பரியமாகவே அந்த பொருட்கள் சிறப்பு தன்மை வாய்ந்ததாக விளங்கி வருகிறது என்பதை குறிப்பிட வேண்டும். உதாரணமாக மதுரை மல்லிக்காக புவிசார் குறியீட்டை விண்ணப்பிக்கும்போது சங்க இலக்கியத்தில் இருந்த ஒரு பாடலை ஆதாரமாக சமர்ப்பித்தோம்.

மணப்பாறை முறுக்கு நூறாண்டுகளுக்கும் மேலாக தயாரிக்கப்பட்டு வருகிறது. எனவே அதனுடைய விண்ணப்பத்தின்போது மணப்பாறை முறுக்கு முதன்முதலில் யாரால், எப்போது தயாரிக்கப்பட்டது என்பது போன்ற பூர்விக ஆவணங்களை சமர்ப்பித்தோம்.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு சில மாதங்களில், மத்திய அரசின் குழுவால் பொருட்களினுடைய உற்பத்தி முறைகள் குறித்து மேலும் சில கேள்விகள் கேட்கப்படும். அதற்கான பதிலை நாம் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

அதன்பிறகு 7பேருக்கு குறையாத நபர்களால் ஒரு குழு அமைக்கப்படும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சம்பந்தப்பட்ட துறையில் இயங்கி வருபவர்கள் இந்த குழுவில் இருப்பார்கள். அவர்களின் முன்னிலையில் நாம் நம்முடைய பொருட்கள் குறித்த சிறப்பு தன்மையை நேரில் விளக்க வேண்டும்.

நம்முடைய பதில்கள் அவர்களுக்கு திருப்தி அளித்து அனைவரும் ஒப்புக்கொண்டால், சில மாதங்களில் நம்முடைய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்குவது குறித்த தகவல் மத்திய அரசு நாளிதழில் வெளியிடப்படும். ஒரு மாதத்திற்கு பின் பொதுமக்களின் கருத்துகளையும் கேட்ட பிறகு, அதிகாரப்பூர்வமாக புவிசார் குறியீடு வழங்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகும்” என்று கூறுகிறார் சஞ்சய் காந்தி.

”இத்தனை பெரிய செயல்முறைகள் இருப்பதால்தான், ஒரு சில பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவது தாமதமடைகிறது. மணப்பாறை முறுக்கிற்கு பத்தாண்டுகளுக்கு முன்பாகவே விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு சமீபத்தில்தான் புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது” எனவும் அவர் விவரிக்கிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 08, 2023 2:52 pm

புவிசார் குறியீடு ஏன் அவசியம்?

“இந்தியாவுடைய வளர்ச்சிக்கு கிராம பொருளாதாரங்களின் வளர்ச்சி மிகவும் முக்கியம். குறிப்பாக கிராமங்களில் உற்பத்தியாகக் கூடிய தனித்துவமான பொருட்களின் சிறப்புகளை நாம் மேம்படுத்தி காட்டுவது மிகவும் அவசியமாகிறது. இது கிராமங்களின் வளர்ச்சியை உயர்த்துவதோடு மக்களுக்கான வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. எனவே புவிசார் குறியீடு என்பது ஒரு அங்கீகாரம் மட்டுமல்ல, அது நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு திறவுகோல்” என்கிறார் சஞ்சய் காந்தி.

அவர் தொடர்ந்து பேசும்போது, “நம்முடைய தனித்துவமான உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவது மிகவும் அவசியம். ஏனென்றால், புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பிக்கப்படும் படிவத்தில், அந்த குறிப்பிட்ட பொருட்கள் எந்த ஊர் அல்லது வட்டாரம் அல்லது மாவட்டத்தில் உற்பத்தியாகிறது என்பது குறித்து குறிப்பிடப்படும்.

எனவே புவிசார் குறியீடு பெற்ற பிறகு எந்த வட்டாரப் பகுதியை குறிப்பிட்டு விண்ணப்பிக்கப்பட்டதோ, அந்த குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் மட்டும்தான் அந்த பொருள் சம்பந்தப்பட்ட உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் விற்பனைகளில் ஈடுபட முடியும்.

குறிப்பாக சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்ற ஊர்களில் தயாரிக்கப்பட்டு வந்தாலும்,புவிசார் குறியீடு பெற்ற சிறப்புதன்மையை பயன்படுத்தி அவர்களால் வியாபாரம் செய்ய முடியாது. உதாரணமாக சேலத்தில் தயாரிக்கும் முறுக்கை மணப்பாறை முறுக்கு என்று கூறி சந்தைப்படுத்த முடியாது, விழுப்புரத்தில் விளையும் மல்லிகை பூக்களை மதுரை மல்லி என்று கூறி ஏற்றுமதி செய்ய முடியாது.

இதன் மூலம் ஒவ்வொரு உள்ளூர் உற்பத்தி பொருட்களின் எண்ணிக்கைகளும் உயர்கின்றன, இதனால் உள்ளூர் உற்பத்தியாளர்களின் வியாபாரம் பெருகி அவர்களின் பொருளாதார சூழல் மேம்படுகிறது.

காஞ்சிபுரம் பட்டு என்றால் முன்பு எங்கு வேண்டுமானாலும் சென்று மக்கள் வாங்கி கொண்டிருந்தனர். ஆனால் புவிசார் குறியீடு பெற்ற பிறகு, பட்டு வாங்குவதற்காகவே காஞ்சிபுரம் செல்லும் குடும்பங்களை இன்று நம்மால் காணமுடிகிறது. அதேபோல் கோவில்பட்டி மிட்டாய் என்று பெயரிட்டு அனைத்து ஊர்களிலும் உற்பத்தி செய்துகொண்டிருந்தார்கள்.

தற்போது புவிசார் குறியீடு பெற்ற பிறகு அப்படி விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகிறது. இதன்மூலம் கோவில்பட்டியில் கடலைமிட்டாய் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு பலன் கிடைக்கிறது” என்று சஞ்சய் காந்தி விவரிக்கிறார். இதேபோல் ஒவ்வொரு பகுதியின் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் வெவ்வேறு வகைகளில் பயன்கள் கிடைக்கின்றன.

இன்று தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரும்பாலான கைவினை மற்றும் கைத்தறி பொருட்களுக்கு புவிசார் குறியீடு வாங்கிவிட்டோம். ஆனால் இன்னும் தனித்துவமான வேளாண் மற்றும் இயற்கை பொருட்கள் பெரும் எண்ணிக்கையில் மீதம் இருக்கின்றன. இனி அவற்றுக்கு புவிசார் குறியீடு வாங்கும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும் ” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக