ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாந்தி - Vomiting

Go down

வாந்தி - Vomiting Empty வாந்தி - Vomiting

Post by சிவா Sun Apr 09, 2023 11:48 pm

வாந்தி - Vomiting VQY0dUr

நம் வாழ்நாளில் அனைவரும் அடிக்கடி சந்திக்கும் ஒரு உபாதை வாந்தியாகும். இந்த #வாந்தி பொதுவாக ஒரு அறிகுறியாக மட்டுமே இருந்தாலும் பல நேரங்களில் நோயாகவும் உருவாகலாம். பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும், குழந்தைகளுக்கு சளி அதிகமாக பிடித்திருந்தாலும், பலருக்கு உண்ட உணவு செரிக்காவிட்டாலும், சிலருக்கு அதிகமாக சாப்பிடுவதாலும் அல்லது சிலருக்கு சாப்பிடாமலே இருப்பதாலும், காரமான உணவுகளை உட்கொண்டு வந்தாலும், தரமற்ற கெட்டுப்போன உணவுகளை உண்பதாலும் வாந்தி ஏற்படலாம்.

சில சமயங்களில் துர்நாற்றங்களை நுகர்வதாலும், சிலருக்கு பெரிய நோய்கள் இருக்கும்போதும், புற்றுநோய் போன்ற நோய்களாலும் அதற்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளாலும் கூட வாந்தி வரலாம். ஏன், ஒரு சிலருக்கு ஒவ்வாமையால் கூட வாந்தி ஏற்படலாம்.

வேறு சிலருக்கு வயிற்று வலி கூட வாந்தி ஏற்பட ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் மன அழுத்தம், பித்தப்பை நோய்கள், மண்ணீரல் மற்றும் கல்லீரல் நோய்கள், மஞ்சள் காமாலை, அநேக நோய்த்தொற்றுகள், குடல் அடைப்பு, கல்லடைப்பு, அதிக மதுபானம், மூளையில் அடிபடுதல்/ கட்டி / பாதிப்பு போன்ற சந்தர்ப்பங்களில் கூட அடிக்கடி வாந்தி ஏற்படலாம். ஒரு சிலர் வாட்டம் சாட்டமாக இருப்பர். ஆனால், பயணம் செய்தாலே அவர்களுக்கு வாந்தி ஏற்படும். இதன் காரணமாகவே ‘இஞ்சி மரப்பா’ பேருந்து நிலையங்களில் விற்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

கர்ப்ப காலத்தில் உண்டாகும் வாந்தி…கர்ப்ப காலத்தில் ஒரு சிலருக்கு முதல் மூன்று மாதங்கள் வாந்தி, மயக்கம் போன்றவை உண்டாகும். சாப்பிடுவதில் ஆர்வம் இருக்காது. ஒரு சிலருக்கு இந்த அனுபவம் முதல் 5 மாதங்கள் வரைகூட இருக்கலாம். இது காலையில் மட்டும் இல்லாமல் முழுநேரமும் ஏற்பட்டு சத்து குறைபாடு ஏற்படலாம். இதற்கான சிகிச்சை பற்றி கர்ப்பகால நோய்கள் தலைப்பில் கூறியிருந்தேன்.

நோயா, அறிகுறியா?


வாந்தி என்பது ஒரு தனிப்பட்ட நோயாக பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் ஆயுர்வேத மருத்துவத்தில் வாந்தி என்பது ஒரு அறிகுறியாக மட்டும் பார்க்கப்படாமல் ஒரு தனித்த நோயாகவும் பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் வாந்தி ஒரு நோயாகவும் அல்லது பல நோய்களின் அறிகுறியாகவும் வரலாம். எதுவாக இருந்தாலும் வாந்தி என்பது ஒரு சாதாரண அறிகுறியிலிருந்து ஒரு அபாய அறிகுறியாகவும் இருக்க வாய்ப்புகள் அதிகம். அத்தகைய சமயங்களில் அடிக்கடி வரும் வாந்திகளை நாம் ஒரு அபாய எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு அதற்கு காரணம் என்னவென்று அறிந்து அதற்கு தக்க சிகிச்சையை தக்க நேரத்தில் செய்து கொள்வது முக்கியமாகும்.

மேலும் ஆயுர்வேதத்தின் பஞ்சகர்மா முறைப்படி வாந்தி, ஒரு சுத்திகரிப்பு முறையாகவும் பார்க்கப்படுகிறது. சமகால அறிவியல், நம் உடலுக்கு சேராத, தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை உட்கொள்ளும் போது நமது மூளை தன்னிச்சையாக செயல்பட்டு அப்பொருட்களை வெளியேற்றவே வாந்தியை உருவாக்குகிறது என்று கூறுகிறது. இதையே ஒரு மருத்துவ சுத்திகரிப்பு முறையாக ஆயுர்வேத மருத்துவம் 3000 வருடங்களுக்கு முன்னரே உணர்ந்து வாந்தியை ஒரு மருத்துவ முறையாக கருதி பஞ்சகர்மா உடல் சுத்தி முறைகளில் வாந்தி எடுக்கச் செய்வதை ஒரு முக்கியமான சுத்திகரிப்பு முறையாகவும் அதற்கு தக்க கோட்பாடுகளையும் மருந்துகளையும் கூறியுள்ளது.

இந்த காரணங்களில் தொடர்பு இல்லாமல் அடிக்கடி வாந்தி எடுப்பது சிலருக்கு வழக்கமாக இருக்கும். இதற்கு சுழற்சி (recurrent) வாந்தி என்று சமகால மருத்துவம் கூறுகிறது. இந்த நிலை 10 நாட்கள் வரை இருக்கலாம். இது பொதுவாக குமட்டலுடன் சேர்ந்தே வருகிறது. இது முக்கியமாக குழந்தை பருவத்தில் அடிக்கடி வருவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம்.

குமட்டல்…


பல நேரங்களில் வாந்திக்கு முன் குமட்டல் ஏற்படும். குமட்டல் என்பது வயிற்றில் ஏற்படும் ஒரு அசௌகரியம். இது வாந்தி எடுக்கும் உணர்வையும், பின் வாந்தியையும் ஏற்படுத்துகிறது. குமட்டலின் அறிகுறிகளாக வாயில் எச்சில் ஊறுவது, வயிற்றை புரட்டி போடுவது, புளித்த ஏப்பம் போன்றவை பொதுவாக வரும்.

வாந்தியின் விளைவுகள்…


பெரும்பாலும் வயிற்றில் ஏதேனும் நச்சுப் பொருள்கள் இருந்தால் அதை வெளியேற்ற ஒரு முறை அல்லது இருமுறை வாந்தி வருவது இயல்பு. ஆனால் ஒரு நாளில் ஐந்து அல்லது ஆறு முறைக்கு மேல் வந்தால் அது நம் உடலுக்கு தீங்கை விளைவிக்க கூடும். இதனால் உடலில் உள்ள நீர் சத்து குறைந்து, உடல் உலர்ந்து, ரத்த அழுத்தம் குறைந்து, தலைசுற்றல் மற்றும் மயக்கம் கூட ஏற்பட வாய்ப்புண்டு. குறிப்பாக, குழந்தைகள் சில முறை வாந்தி எடுத்தாலே சோர்வடைந்துவிடுவார்கள். இது ஆபத்து.

வாந்தி திரவம் எவ்வாறு இருக்கும்?


*ரத்தக் கோடுகள் அல்லது ரத்தம் தோய்ந்த வாந்தி பொதுவாக உணவுக்குழாய் அல்லது வயிற்றில் ரத்த கசிவை அல்லது கீரலைக் குறிக்கும்.

*சில வாந்திகள் காபியை ஒத்திருக்கும். வயிற்றில் உள்ள அமிலங்களும் ரத்தமும் சேர்ந்து இவ்வாறு இருக்கும்.

*மஞ்சள் வாந்தி பித்தத்தின் இருப்பைக் குறிக்கிறது, இது பொதுவாக உணவுக்குப் பிறகு நடக்கும்.

*குடல் அடைப்பு மற்றும் குடல் செயல்பாடுகளில் பிரச்சனை உள்ளவர்கள், ஓரளவு செரிமானம் செய்யப்பட்ட உணவு அல்லது மிகவும் அரிதாக, மலத்தைக்கூட வாந்தியாக எடுக்கலாம்.

வாந்தியுடன் ஏற்படும் பொதுவான மற்ற அறிகுறிகள்…


*குமட்டல்
*வயிற்று வலி, வயிற்றுப்போக்கு
*லேசான தலைவலி, தலைசுற்றல் (வெர்டிகோ)
*காய்ச்சல்
*விரைவான இதய துடிப்பு, அதிக வியர்வை
*வறண்ட வாய், நெஞ்சு வலி
*மயக்கம், குழப்பம்
*அதிக தூக்கம்

மன அழுத்தத்தால் ஏற்படும் வாந்தி…


இன்றைய காலக்கட்டத்தில் பள்ளி படிக்கும் பிஞ்சு குழந்தைகள் கூட மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். ஒரு குழப்பமான மனநிலையில் இருந்து மீள்வதற்குள், அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து சுமையாக இறங்கும்போது, ‘ஸ்ட்ரெஸ்’ என்கிற மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது. இப்படி மன அழுத்தம் அடுத்தடுத்து அழுத்தும் போது உடல் சார்ந்த பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன. மன அழுத்தம் அதிகரிக்கும் போது வாந்தி, மலச்சிக்கல், குமட்டல் போன்ற பிரச்சனைகளும் வரலாம்.

உடற்பயிற்சி, தியானம், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல் போன்றவற்றை மேற்கொண்டு மன அழுத்தத்தினால் உருவாகக்கூடிய குமட்டல் மற்றும் வாந்தியை தடுக்கலாம்.

பயணத்தினால் வரும் வாந்தி…


உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒருவருக்கு பயணம் செய்யும் பொழுது, பயணம் ஒவ்வாத உடல்நலக் குறைவு ஏற்பட்டு பாதிக்கப்படுகிறார்கள். ஆட்டம், குலுக்கல் நிறைந்த பயணங்கள் சிலரை மிகவும் பாதிக்கும். இப்பாதிப்பு கப்பல், ஊர்திகள், விமானப் பயணங்களிலும் ஏற்படும். இவ்வாறு பயணங்கள் மட்டும் அல்லாது இராட்டினம் போன்ற கேளிக்கை விளையாட்டிலும், வேகமாக பயணிக்கும் திரைப்படக் காட்சிகளைக் காண்பதிலும் கூடப் பயணப்பிணி உடல்நலக் குறைவு ஏற்படுவதுண்டு. இதில் முக்கியமாக அவர்களுக்கு வரும் அறிகுறி வாந்தி.

மூளைக்குக் குழப்பம் தரும் இயக்கம் நின்று போனாலும், அல்லது நாம் அதைத் தவிர்க்கும் பொழுதும் பயணப்பிணி நிலைமை பெரும்பாலும் மாறிவிடும். மேலும் இதை தவிர்க்க, பயணிக்கும் பொழுது தொடுவானத்தில் பார்வையை நிலை நிறுத்தவும், அல்லது பயணம் செல்வதற்கு எதிர்திசையை நோக்கி அமர்ந்து பயணிப்பதையும் தவிர்க்கலாம். பிரயாணம் செய்யுமுன் உணவு அருந்துவதையும் அல்லது மிகவும் லகுவான உணவை மூன்று மணி நேரம் முன்னரே எடுத்துக்கொள்வதையும் பின்பற்றலாம். மேலும் பயணங்களில் இஞ்சியை மெல்லுவது இப்பிரச்சனையை கட்டுப்படுத்தும். பேருந்து நிலையங்களில் இன்றளவிலும் ‘இஞ்சி மரப்பா’ விற்கப்படும் காரணமும் இதனால்தான்.

சிகிச்சை முறைகள்…


*வாந்தியை நிறுத்துவதற்கு முதலில் நாம் வாந்திக்கான காரணங்களை தவிர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக மக்கள் கூட்டம் நிரம்பிய மற்றும் இறுக்கமான இடங்களில் இருப்பது, அல்லது அடைத்த சூழ்நிலைகள் குமட்டல் மற்றும் வாந்தியை அதிகரிக்கலாம். எனவே, சில நிமிடங்களுக்கு அறையை விட்டு வெளியேறி புதிய காற்றை பல முறை சுவாசிப்பது வாந்தியை குறைக்கும்.

*நாம் வீட்டிலேயே செய்யக்கூடிய ஏலக்காய் தண்ணீர், சோம்பு நீர், எலுமிச்சை சாறு, இஞ்சி நீர் மற்றும் கிராம்பு துண்டை வாயில் போட்டு சப்புவது போன்ற முறைகள் மூலம் நாம் வாந்தியை குறைக்கலாம்.

*ஆயுர்வேதத்தின்படி வாந்திக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் செரிமானக்குறைவு ஒரு காரணமாக இருப்பதால் உண்ணாவிரதம் மட்டுமே ஒரு சிறந்த சிகிச்சையாக இருக்கும். பின்னர் செரிக்க எளிமையான உணவுவை சிறிது சிறிதாக எடுத்துக்கொள்ள மெதுவாக செரிமானமாகி வாந்தி நின்று விடும்.

*திராட்சாதி கசாயம், திராக்ஷாதி சூரணம், பாலசத்தூர்பத்ரிக சூரணம், திரிக்கடு சூரணம், இங்வாஷ்டக சூரணம், வில்வாதி லேகியம், சிவ குடிகா, மயூரா பிச்ச பஸ்மம், பிரபல பஸ்மம் போன்ற மருந்துகளை தகுதி வாய்ந்த ஆயுர்வேத பட்டதாரி மருத்துவரை அணுகி நோய் காரணத்தை முழுமையாக அறிந்துகொண்டு அவரின் அறிவுரையின் அடிப்படையில் பயன்படுத்த நல்ல பலன் காணலாம்.

*மேலும் சர்பிகுடம், கல்யாணக க்ருதம், ஜீவணீய க்ருதம், த்ரயுஷ்ன க்ருதம் ஆகிய ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்ளலாம். இது வாந்தியை கட்டுப்படுத்த உதவும்.

வாந்தியை தடுப்பது எப்படி?


*பசித்து புசி என்கிற பழமொழியின் வழியில் பசி எடுத்த பின்னரே உணவு உட்கொள்வது அவசியம்.

*உணவு செரிமானத்தில் பிரச்சனை இருந்தால் உண்ணாவிரதம் இருந்து அடிக்கடி வெந்நீர் பருகி, பசி வந்த பிறகு சூப்புகளில் ஆரம்பித்து பின்னர் மெதுவாக உணவுகள் பக்கம் போவது நல்லது.

*உணவு அருந்தும் போது உணவில் கவனம் செலுத்தி நன்கு மென்று பின் உணவை விழுங்குவது சாலச்சிறந்தது.

*வறுத்த மற்றும் காரமான உணவுகளை தவிர்ப்பது அவசியம்.

*சாப்பிடாமல் வெறும் வயிற்றில் நீண்ட நேரம் இருக்க வேண்டாம்.

*உணவு சாப்பிட்ட பிறகு குறுநடையோ அல்லது லேசான சில உடற்பயிற்சிகளோ செய்யலாம்.

நன்றி குங்குமம் தோழி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

கண்ணன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum