ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைவான் - சீனா விவகாரம்

Go down

தைவான் - சீனா விவகாரம் Empty தைவான் - சீனா விவகாரம்

Post by சிவா Sun Apr 09, 2023 10:39 pm

தைவான் - சீனா விவகாரம் China-taiwan

தைவானை சுற்றி வளைக்கும் சீனா


தைவான் அரசாங்கத்தைக் கடுமையாக எச்சரிக்கும் விதமாக, தைவானை சுற்றி வளைக்கும் மூன்று நாள் ஒத்திகையை சீன ராணுவம் தொடங்கியுள்ளது.

சீனாவின் எதிர்ப்பையும் மீறி தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவுக்கு பயணித்ததும் அந்தப் பயணத்தின்போது அந்நாட்டு சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்ததும் சீனாவை ஆத்திரமடையச் செய்துள்ளது.

இந்தச் சந்திப்பால் கோபமடைந்த சீனா, தைவான் அதிபர் சாய் இங்-வென் அமெரிக்காவுக்குப் பயணம் செய்து திரும்பிய சில மணி நேரங்களிலேயே எல்லையில் போர் ஒத்திகைகளைத் தொடங்கியுள்ளது.

தைவான் பாதுகாப்பு அமைச்சகம், 42 சீன ராணுவ விமானங்கள் மற்றும் 8 கப்பல்கள் தைவான் ஜலசந்தி இடைநிலைக் கோட்டைக் கடந்ததாகத் தெரிவித்தது.

இந்தக் கோடு #சீனா மற்றும் தைவான் பிரதேசங்களுக்கு இடையேயான அதிகாரப்பூர்வமற்ற பிளவுக்கோடு.

இந்த ராணுவப் பயிற்சிகள் "தைவான் தீவைச் சுற்றி ரோந்து மற்றும் முன்னேற்றங்களை ஒரே நேரத்தில் ஒழுங்கமைக்கும், சுற்றிவளைப்பு மற்றும் தடுப்புத் தோரணையை வடிவமைக்கும்" என்று சீன அரசு ஊடகம் கூறியது.

"நீண்ட தூர ராக்கெட் பீரங்கிகள், கடற்படை அழிப்பான்கள், ஏவுகணை படகுகள், விமானப்படை போர் விமானங்கள், ஜாமர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் கருவிகள்" அனைத்தும் சீனாவின் ராணுவத்தால் நிறுத்தப்பட்டுள்ளன.

தைவான் அதன் சொந்த அரசமைப்பு மற்றும் தலைவர்களுடன் தன்னை இறையாண்மை கொண்ட நாடாகக் கருதுகிறது. ஆனால் சீனா, தைவானை தன்னிடம் இருந்து பிரிந்த ஒரு மாகாணமாகப் பார்க்கிறது.

அதுமட்டுமன்றி தேவை ஏற்பட்டால் பலவந்தமாக தைவான் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என சீனா அடிக்கடி கூறி வருகிறது.

தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது. தைவானுடனான "மறு இணைவு" "நிறைவேற்றப்பட வேண்டும்" என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியுள்ளார்.

தைவானை சுற்றி சீனா அடிக்கடி பயிற்சிகளை மேற்கொண்டாலும், தைவானின் அதிபர் சாய், புதன்கிழமை அமெரிக்க அவையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்ததற்குப் பதிலளிக்கும் விதமாகவே, தற்போதைய சுற்றிவளைப்பு கருதப்படுகிறது.

#தைவான், சீனாவிடமிருந்து "தொடர்ச்சியான சர்வாதிகார விரிவாக்க அச்சுறுத்தலை" எதிர்கொள்வதால், தனது அரசாங்கம் #அமெரிக்கா மற்றும் பிற ஜனநாயக நாடுகளுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று அதிபர் சாய் இங் வென் சனிக்கிழமை தெரிவித்தார்.

அந்நாட்டின் வெளியுறவுக் குழுத் தலைவர் மைக்கேல் மெக்கால் தலைமையில், தைபேயில் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவுடனான சந்திப்பில் அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

தைவானுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருவதாக மெக்கால் கூறினார். அது, "போருக்காக அல்ல, அமைதிக்காக" என்றும் அவர் கூறினார்.

தைவானை சுற்றி சீனாவின் இந்த மூன்று நாள் ராணுவ ஒத்திகை நடவடிக்கை - "யுனைடெட் ஷார்ப் ஸ்வார்ட்" என்று அழைக்கப்படுகிறது. திங்கள்கிழமை வரை இது நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்டில், கெவின் மெக்கார்த்திக்கு முன்பு அமெரிக்க சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி தைபேக்கு பயணம் மேற்கொண்டார். அந்த நேரத்தில், சீன ராணுவம் தைவானை சுற்றி கிட்டத்தட்ட ஒரு வாரம் போர் பயிற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், "தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதை யாராலும் சீனாவிடமிருந்து பிரிக்க முடியாது. சீனாவின் இறையாண்மை, பிராந்திய உரிமை எப்போதும் துண்டாடப்பட முடியாத ஒன்று. தைவானின் எதிர்காலம் அதன் தாய் மண்ணுடன் இணைவதில்தான் இருக்கிறது" என்றார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தைவான் - சீனா விவகாரம் Empty Re: தைவான் - சீனா விவகாரம்

Post by சிவா Sun Apr 09, 2023 10:43 pm

இரண்டாவது நாளாக தைவானைச் சுற்றி இன்று காலையில் சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டது. இதன் காரணமாகத் தைவானில் பதற்றம் நிலவிவருகிறது.

எங்கள் தாய்மண்ணைக் காக்கப் போராடுகிறோம்


தொடர்ந்து இரண்டாவது நாளாக தைவானைச் சுற்றி இன்று காலையில் சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டது. இதன் காரணமாகத் தைவானில் பதற்றம் நிலவிவருகிறது. இந்த நிலையில், `தைவான் எங்கள் தாய்மண், அதனைக் காக்க நாங்கள் போராடுவோம்' என தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து தைவான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், ``தைவான் எங்களின் தாய்மண். இந்த மண்ணின் ஒவ்வொரு கதைகளும் எங்களின் நினைவுகளில் பதிந்திருக்கின்றன. எங்களின் தாய்மண்ணையும், வீட்டையும் காக்க முழுமனதுடன் போராடுகிறோம்" என வீடியோவுடன் ட்வீட் செய்திருக்கிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தைவான் - சீனா விவகாரம் Empty Re: தைவான் - சீனா விவகாரம்

Post by சிவா Tue Apr 11, 2023 1:52 am

போர் விமானங்கள்-கப்பல்களை அனுப்பி தைவான் கடல்பகுதியில் சீனா 3- வது நாளாக பயிற்சி


சீனாவில் ஏற்பட்ட உள்நாட்டு போரை தொடர்ந்து கடந்த 1946- ஆம் ஆண்டு தைவான் தனி நாடாக பிரிந்தது. இருந்தபோதிலும் தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதனால் தைவானுடன் எந்த நாடும் நேரடி தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என சீனா மிரட்டல் விடுத்து உள்ளது.

ஆனால் இதைபற்றி எல்லாம் கவலைப்படாமல் சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் அதிபர் ட்சாய் இங்வென் சமீபத்தில் அமெரிக்கா சென்றார். அப்போது அவர் அமெரிக்க பிரதிநிதிகளின் சபை சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்து பேசினார்.

இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று முன் தினம் தைவானை நோக்கி சீனா தனது போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பியது. 71 போர் விமானங்கள் தைவான் எல்லையில் வட்டமடித்து பறந்தன.

இதேபோல 8 போர் கப்பல்களும் தைவான் எல்லையில் நிறுத்தப்பட்டு போர் பயிற்சியினை மேற் கொண்டுள்ளது. இன்று 3-வது நாளாக 70 போர் விமானங்கள் தைவான் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இதில் 8 ஜே.16 ரக ஜெட் விமானங்கள், 4 ஜே.1 விமானங்கள். 8 சூ-30 போர் விமானங்களும் அடங்கும். 11 போர் விமானங்களும் தைவானை நோக்கி அனுப்பப்பட்டு உள்ளன. தைவானின் முக்கிய இலக்குகளை சீனா சுற்றி வளைத்து உள்ளதால் போர் மேகம் சூழ்ந்துள்ளது.

தைவான் ஜலசந்தி கடற் பகுதியில் தொடர்ந்து 3- வது நாளாக சீனா ராணுவ பயிற்சி நடத்தி வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றமாக உள்ளது. எந்த நேரமும் போர் மூழலாம் என்ற அபாய சூழ்நிலையும் அங்கு உருவாகி இருக்கிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தைவான் - சீனா விவகாரம் Empty Re: தைவான் - சீனா விவகாரம்

Post by சிவா Tue Apr 18, 2023 5:13 am

தைவான் அருகே அமெரிக்க கப்பல் சீனா எதிர்ப்பு


தைபே: தைவானை தன் நாட்டின் ஒரு பகுதியாக, நம் அண்டை நாடான சீனா உரிமை கோரி வருகிறது. அதே நேரத்தில், தைவான் தன்னாட்சி கேட்டு வருகிறது.

இந்நிலையில், தைவான் அதிபர் டிசாய் இங்வென், சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று அந்த நாட்டின் மக்கள் பிரதிநிதி சபை சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்து பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தைவான் அருகே சீனா பெரும் போர் ஒத்திகையில் ஈடுபட்டது. இதனால் கடந்த ஒரு வாரமாக அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.

சீனாவின் போர்ப்பயிற்சி முடிந்த நிலையில், தைவான் அருகே, கடல் பகுதி வழியாக, அமெரிக்க கடற்படையின், யு.எஸ்.எஸ்., மிலியஸ் போர்க் கப்பல் கடந்து சென்றது. இது வழக்கமான பயணம் என, அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால் இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தைவான் - சீனா விவகாரம் Empty Re: தைவான் - சீனா விவகாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum