புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதின்ம பருவம் - உடல் மனம் உணர்வு நலக் குறிப்புகள்
Page 1 of 1 •
ஒரு குழந்தையின் வளர்ச்சியில் #பதின்பருவம் (Teenage) மிக முக்கியமானது. 13-லிருந்து 19 வயதுவரையிலான காலமே பதின்பருவம். இந்த வயதில் ஆண், பெண் இருபாலரிடமும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல மாற்றங்கள் நிகழும். பதின்பருவத்தைக் கண்ணாடிமேல் நடப்பதுபோல மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். அந்தச் சமயத்தில் பிள்ளைகள்மீது பெற்றோர் அதிக கவனம் செலுத்தி வழிநடத்தாவிட்டால், அவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படக்கூடும். பதின்பருவத்தில் உடல்நலம் (Physical Health),மனநலம் (Mental Health),உணர்வுநலம் (Emotional Health), நடத்தைநலம் (Behavioral Health) ஆகிய நான்கையும் ஆரோக்கியமாகவைத்திருக்க வேண்டியது அவசியம்.
பதின்பருவத்தினர் உடல், மனநலனை ஆரோக்கியமாகவைத்திருக்க, பெற்றோர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார் மருத்துவரும் பெற்றோருக்கும் பதின்பருவத்தினருக்குமான ஆலோசகருமான ஷர்மிளா.
உடல்நலம் (Physical Health):
பதின்பருவத்தில் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய அவர்களைப் பழக்க வேண்டும். தூங்கும்போதுதான் உடல் இயங்குமுறை (Body Mechanism) நிர்மாணிக்கப்படும் என்பதால், ஒரு நாளைக்கு 9 மணி நேரத் தூக்கம் பதின்பருவத்தில் அவசியம். போதுமான தூக்கம் இல்லையெனில், உடல் வளர்ச்சி பாதிக்கப்படலாம். இரவு 9:30 மணிக்குத் தூங்கி, காலை 6:30 மணிக்கு எழுவதற்குப் பழக்கப்படுத்துங்கள்.இந்தப் பருவத்திலிருப்பவர்கள் துரித உணவு, நொறுக்குத்தீனி போன்றவற்றை அதிகம் விரும்பி உட்கொள்வார்கள் என்பதால், எடை அதிகரித்து, உடல் பருமன் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சில குழந்தைகள் தங்களை ஒல்லியாகக் காட்டிக்கொள்ள உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்வார்கள். இத்தகைய விஷயங்கள் ஆரோக்கியத்துக்குப் புறம்பானவை என்பதைப் பெற்றோர் எடுத்துக்கூறி, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகளை அதிகம் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளைப்போல பதின்பருவத்தினருக்கும் சில தடுப்பூசிகளை அவசியம் போட வேண்டும். எனவே, அது குறித்த விழிப்புணர்வும் பெற்றோருக்கு அவசியம். அம்மைநோய் வராமல் தடுக்கும் `வேரிசெல்லா’ (Varicella) தடுப்பூசி குழந்தைப் பருவத்தில் போடப்படும். அப்படிப் போடத் தவறியிருந்தால், பதின்பருவத்தில் ஒரு முறை போட்டுக்கொள்ள வேண்டும். அதேபோல ஆறு வயதுக்கு முன்னரே மற்றோர் அம்மைத் தடுப்பூசியான `எம்எம்ஆர்’ (MMR) போடப்பட வேண்டும். அப்படிப் போடவில்லையென்றால், பதின்பருவத்தில் ஒரு முறை போட்டுக்கொள்ளலாம்.
ஒன்பது வயது முதல் 15 வயதுக்குள் `ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ (Human Papilloma Virus) தடுப்பூசியை ஒரு மாத இடைவெளியில் இரு முறை போட வேண்டும். இது கர்ப்பப்பைவாய் புற்றுநோய் (Cervical Cancer) வராமல் தடுக்க உதவும். 10 மற்றும் 16 வயதில் தொண்டை அடைப்பான் (Diphtheria), ரணஜன்னி (Tetanus), கக்குவான் இருமல் (Pertussis) ஆகிய நோய்களைத் தடுக்க `பூஸ்ட்ரிக்ஸ் டிடிபி’ (Boostrix DTaP) எனும் தடுப்பூசி போட வேண்டும்.
அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்க, ஆண்டுக்கு ஒரு முறை `ஃப்ளூ’ (Flu) காய்ச்சலுக்கான தடுப்பூசியைப் போட வேண்டும். உலக அளவில் பாக்டீரியாவின் தன்மை அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பதால், ஆண்டுக்கொருமுறை போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். அதேபோல `டைபாய்டு(Typhoid) காய்ச்சலுக்கான தடுப்பூசியையும் போட வேண்டும். தடுப்பூசிகள் போடுவதற்கு முன்னர் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.
• மனநலம் (Mental Health):
பதின்பருவத்தில் ஆண், பெண் குழந்தைகளின் உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படும் என்பதால், மனநலத்திலும் கவனம் செலுத்த வேண்டும். எதிர்ப்பாலினம்மீதான ஈர்ப்பு பதின்பருவத்தில்தான் தோன்றும். பாலியல் கிளர்ச்சிக்கும் உள்ளாவார்கள். எதிர்காலம் குறித்த சிந்தனைகளும் மேலெழும். இவை அனைத்தையும் பகுத்துப் பார்த்துப் புரிந்துகொள்ள முடியாத வயது என்பதால், மன அழுத்தத்தில் சிக்கிக்கொள்வார்கள். இந்தநிலையைப் புரிந்துகொண்டு மன அழுத்தம் தரும் சூழல்களைத் தவிர்க்க, பெற்றோர் ஆலோசனை வழங்க வேண்டும். நண்பர்களுடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல், ஆரோக்கியமான நட்பு வட்டத்தை உருவாக்கவும் பெற்றோர் அவர்களுக்கு உதவலாம். அதேபோல, பதின்பருவக் குழந்தைகளுக்கு முன்பாக பெற்றோர் சண்டையிட்டுக்கொள்வதைத் தவிர்க்க வேண்டியதும் முக்கியம். இதுவும் அவர்களின் மனநிலையை பாதிக்கும்.• உணர்வு நலம் (Emotional Health):
பதின்பருவத்தினர் உணர்ச்சிகளை அதிகமாக வெளிக்காட்டுவார்கள். பெரியவர்களின் பக்குவம் அவர்களிடம் இருக்காது என்பதால், உணர்வுகளைக் கையாளத் தெரியாமல் தவிப்பார்கள். உணர்வுநலம் பாதிக்கப்பட்டால் பதற்றம், மனச்சோர்வு, உணவு உட்கொள்வதில் ஆர்வம் குறைவது, எதிலும் ஈடுபாடின்றி இருப்பது போன்ற நிலைகள் ஏற்படலாம். இவை அனைத்துமே மனநோய் வருவதற்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தெரிந்தால், தாமதிக்காமல் மனநல ஆலோசகரை அணுக வேண்டும்.• `தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு அவசியம்’ என்பதைப் பதின்பருவத்தினருக்குச் சொல்லித்தர வேண்டியது பெற்றோரின் கடமை. `உன்னை ஒருவர் காயப்படுத்தினால் எப்படித் துன்பப்படுவாயோ, அதேபோலத்தான் நீ காயப்படுத்தும்போது மற்றவரும் துன்பப்படுவார்’ என்பதை எடுத்துக்கூறி நல்வழிப்படுத்த வேண்டும். உணர்வுகளைக் கையாளத் தெரியாமல், பெற்றோரிடமும் பகிர்ந்துகொள்ளாமல், மனதுக்குள்ளேயே போட்டுப் புதைத்துக்கொள்வதால் தீர்வு ஏற்படாது. மாறாக, பிரச்னைகளின் தீவிரம் அதிகரித்து, மனநிலையை பாதிக்கும். `பெற்றோரிடம் தெரிவிக்க முடியாத பிரச்னைகளை ஆசிரியரிடமோ, பள்ளி ஆலோசகரிடமோ தெரியப்படுத்தலாம்’ என்று அறிவுறுத்த வேண்டும். தன் பிரச்னைக்கு, தன் வயதையொத்த நண்பர்களிடம் ஆலோசனை கேட்பதால் தீர்வு கிடைக்காது என்ற நிதர்சனத்தையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
நடத்தை நலம் (Behavioral Health):
ஒருவர் வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமென்றால், நன்னடத்தை மிகவும் முக்கியம். பள்ளி, கல்லூரி, அலுவலகம், குடும்ப வாழ்க்கை என எல்லாவற்றிலும் நன்னடத்தை முக்கியப் பங்காற்றுவதால், அது குறித்த முக்கியத்துவத்தைப் பதின்பருவத்தினருக்கு உணர்த்த வேண்டியது பெற்றோரின் கடமை. புகை, மது மற்றும் பிற போதைப் பழக்கங்களிலிருந்து விலகியிருக்க வேண்டியதன் அவசியத்தையும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும் பதின்பருவத்தினருக்கு விளக்கிச் சொல்ல வேண்டும்.• இந்தப் பருவத்தில் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படுவது, சண்டையிடுவது அதிகம் நடக்கும் என்பதால், அவற்றால் ஏற்படும் பின்விளைவுகளை எடுத்துக்கூற வேண்டும். மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பான வேகத்தில் செல்ல, சாலைவிதிகளைக் கடைப்பிடிக்க, விபத்து ஏற்படுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வலியுறுத்த வேண்டும். விபத்து ஏற்பட்டால் ஏற்படும் இழப்புகள் என்னென்ன என்பதை விளக்கி, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
• பதின்பருவத்தினர் மத்தியில் பரவலாகக் காணப்படும் பிரச்னை, `சாப்பிடுவதில் குறைபாடு’ (Eating Disorder). இதில் இரண்டு வகை உண்டு. தன்னை ஒல்லியாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், வேளா வேளைக்கு உணவைச் சாப்பிடாமல் தவிர்ப்பார்கள். இதனால் உடல் எடை குறைந்து, மெலிந்து காணப்படுவார்கள். சிலர், தமக்குப் பிடித்த விளையாட்டு வீரர்கள், நடிகர்கள்போலத் தாங்களும் இருக்க வேண்டும் என்பதற்காக முறையற்ற உணவுமுறைகளைப் பின்பற்றுவார்கள். இதனால் உடல் பருமன் ஏற்படும். மன அழுத்தத்திலிருந்து தப்பிப்பதற்காகச் சிலர் அதிகமாக உணவு உட்கொள்வார்கள். இவை அனைத்துமே இவ்வகைக் குறைபாட்டைச் சேர்ந்தவைதாம்.
• பதின்பருவத்தினரில் சிலர் மரபணு பிரச்னையாலும் உணவு உட்கொள்வதில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். சாப்பிடுவதைத் தவிர்ப்பது, வழக்கத்துக்கு மாறாக அதிகம் சாப்பிடுவது, தன்னைப் பற்றியே அதிகம் நினைத்து குறைபட்டுக்கொள்வது ஆகியவை சாப்பிடுவதில் குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கலாம். தாமதிக்காமல் மனநல ஆலோசகர் அல்லது மருத்துவரை அணுக வேண்டும்.
தடுப்பது எப்படி?
குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மிகக் குறைவாகச் சாப்பிடுவது அல்லது அளவுக்கு அதிகமாக உண்பது இரண்டையுமே தவிர்க்க பதின்பருவத்தினரைப் பழக்க வேண்டும். இவற்றால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து அவர்களிடம் விவாதிக்கலாம். அவர்கள் விரும்பும் பிரபலங்களின் உடல்நலன் சார்ந்த நல்ல விஷயங்களை எடுத்துச்சொல்லி, அவற்றைக் கடைப்பிடிக்கச் சொல்லலாம். `ஒவ்வொருவரின் உடலமைப்பும் வெவ்வேறானது. அவரவர் உடலமைப்புக்கு ஏற்ற அளவிலேயே எடையும் உயரமும் இருக்கும்’ என்பதைப் பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.உடல் பரிகாசம் (Body Shaming):
தம் தோற்றம் குறித்து பதின்பருவத்தினர் அதிகமாக யோசிப்பார்கள். யாராவது அவர்களின் நிறம், உயரம், தோற்றம் குறித்து விமர்சித்தால், மனதளவில் நொறுங்கிப்போவார்கள். இதுதான் ‘உடல் பரிகாசம்’ (Body Shaming). இதை நேர்மறையாக அணுக பெற்றோர் அவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். வெளிப்புறத் தோற்றத்துக்கும் ஒரு மனிதனின் குணநலன்களுக்கும் தொடர்பில்லை என்பதை உணர்த்த வேண்டும். ‘பிறரின் தோற்றத்தை விமர்சிக்கக் கூடாது’ என்பதையும் அழுத்தமாகப் பதியவைக்க வேண்டும்.• பதின்பருவத்திலிருப்பவர்களிடம் ‘நீ ஒல்லியா இருக்கே...’, ‘நீ ரொம்ப குண்டா இருக்கே...’ என்றெல்லாம் பெற்றோரே விமர்சிக்கக் கூடாது. இது அவர்களது தன்னம்பிக்கையைக் குறைத்துவிடும். மாறாக, பிள்ளைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதுபோலப் பேசினால், நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். தங்களின் உடலமைப்பு குறித்து யோசிப்பதைத் தவிர்த்துவிட்டு, படிப்பின் மீது கவனம் குவிப்பார்கள். பிறரின் உடலமைப்பைக் கேலி செய்யாமலிருக்கவும், தங்கள் உடல் தொடர்பான தெளிவையும் பெறுவார்கள்.
பாலியல் புரிந்துணர்வு:
இந்த வயதில்தான் பாலியல் குறித்து அறிந்துகொள்வதில் ஆர்வம்காட்டுவார்கள். பாலியல் குறித்த தகவல்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. எனவே, தவறான பாதைக்குச் செல்லும் விபரீதமும் ஏற்படலாம். ஆகவே, அவர்களுக்குப் பாலியல் புரிந்துணர்வை ஏற்படுத்துவது முக்கியம். பாலியல் வேறுபாடு, கருத்தரித்தல், குழந்தைப்பேறு, பாதுகாப்பான பாலியல் உறவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் அவசியம்.• சமூகத்தில் நடைபெறும் `மீ டூ’ (#MeToo) விவகாரம், தன்பாலின ஈர்ப்பு, இருபாலின உறவு குறித்தெல்லாம் நிறைய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அவை குறித்த ஆரோக்கிய விவாதங்களை பெற்றோர் முன்னெடுக்கும்போது, பதின்பருவத்தினரின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும். பாலியல் தொடர்பான விஷயங்களை பெற்றோரிடம் அச்சமின்றிப் பேசிப் பழகாவிட்டால், அவர்களுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்களைக்கூட பெற்றோரிடம் சொல்லத் தயங்குவார்கள். எனவே, பாலியல் குறித்து பேசுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு.
• பாலியல் தொடர்பான விஷயங்களைப் பற்றிப் பேசும்போது குடும்ப மதிப்பு (Family Values) பற்றிய தெளிவையும் அளிக்க வேண்டும். ‘இந்த விஷயங்களுக்கெல்லாம் நம் குடும்பத்தில் அனுமதி உண்டு. இந்த விஷயங்களை அனுமதிக்க மாட்டோம்’ என்று அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். உதாரணமாக, படிக்கும் வயதிலேயே காதலில் சிக்கி, அதனால் வாழ்க்கை திசைமாறிப் போனவர்களைப் பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். இதனால் பாலியல் புரிந்துணர்வும், குடும்ப அமைப்பின் முக்கியத்துவமும் அவர்களுக்குப் புரியும்.
• `உடலே கோயில்... உள்ளமே தெய்வம்... அதைப் பராமரிக்க வேண்டியது உன் கடமை’ என்று கூறுங்கள். எதையும் அறிவுரையாகச் சொல்லாதீர்கள். மகிழ்ச்சியான விவாதமாக மாற்றி, அவர்களுக்குப் புரியவையுங்கள். இவற்றையெல்லாம் தாண்டியும் அவர்களுக்குப் பிரச்னைகள் இருப்பது தெரிந்தால், மனநல ஆலோசகரை அணுகுங்கள்.
• பதின்பருவத்தினர் பெரும்பான்மையான நேரத்தைச் சமூக வலைதளங்களில்தாம் செலவிடுகின்றனர். இந்த வயதிலிருப்போரை தவறான பாதையில் அழைத்துச் செல்லவே, போலிக் கணக்குகளில் பலர் வலம்வருகிறார்கள். 50 வயதுள்ளவர், தன்னை 15 வயதுக்காரராகக் காட்டிக்கொள்வதும் நடக்கிறது. இவர்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம் என்பதால், இணையத்தை எப்படிப் பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லித்தர வேண்டியது அவசியம்.
• தங்களின் தனிப்பட்ட விவரங்கள் எவற்றையும் இணையத்தில் பகிரக் கூடாது என்று பெற்றோர் வலியுறுத்த வேண்டும். பெயர், வீட்டு முகவரி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு சார்ந்த விவரங்கள் போன்ற எதையும் பெற்றோர் அனுமதியில்லாமல் இணையத்தில் பகிரக் கூடாது என்று எச்சரியுங்கள். இணையத்தில் கிடைக்கும் நட்பை நம்பி, நேரில் போய்ப் பார்ப்பதை அறவே தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். இதனால் தேவையற்ற பிரச்னைகளில் குழந்தைகள் சிக்கிக்கொள்ளாமல் தடுக்க முடியும்.
• `இன்டர்நெட் பிரைவசி’ என்பது ஒரு மாயை. இணையத்தில் எதைச் செய்தாலும், அதைப் பொது வெளியிலுள்ளவர்களால் பார்க்கவும் கண்காணிக்கவும் முடியும் என்பதை பதின் பருவத்தினருக்கு உணர்த்த வேண்டும். குழந்தைகள் இணையதளத்தைப் பயன்படுத்தும் உபகரணங்களில் பிரைவசி செட்டிங்ஸை சரியாகக் கையாளுங்கள். அறிமுகமில்லாத நபரிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தால், அதைத் திறந்து பார்க்காமலிருக்கச் சொல்லுங்கள். இணையதள விதிகளைப் பின்பற்றச் செய்யுங்கள்.
• பதின்பருவத்தினரை வளர்ப்பது ஒரு கலை. அதைப் பெற்றோர் கற்றுக்கொள்வதில் தவறில்லை. குழந்தைகள் வளர வளர, பெற்றோரிடமிருந்து தள்ளிச் சென்றுவிடுகிறார்கள். பதின்பருவத்தை நெருங்கியதும், அந்த இடைவெளி இன்னும் அதிகமாகிவிடும். இந்த வயதிலுள்ளவர்களின் மீது அதிகாரம் செலுத்தக் கூடாது. அதேபோல அதிகமாகத் திட்டுவதையும் தவிர்க்க வேண்டும். மாறாக, பொறுமையாக அணுகும்போது பெற்றோர் - பதின் பருவப் பிள்ளைகள் இடையேயான உறவு பலப்படும். `உன்மேல் அன்பாக இருக்கிறேன்’ என்பதை அவர்களுக்கு உணர்த்திக்கொண்டே இருங்கள். அவர்களிடமிருக்கும் சின்னச் சின்ன நல்ல விஷயங்களைக்கூட மனம்திறந்து பாராட்டுங்கள். அந்த வயதுக் குழந்தைகள் உங்களிடம் எதையாவது கூற வந்தால், காது கொடுத்துக் கேளுங்கள். அவர்கள் விரும்புவது உங்கள் அரவணைப்பைத்தான்!.
• இந்த வயதிலிருக்கும் பெண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர், அவர்களிடம் இந்த 10 கேள்விகளை முன்வைக்க வேண்டும்.
(1) இன்றைய நாள் எப்படியிருந்தது?
(2) உன் கனவு என்ன?
(3) உன்னை எது சந்தோஷப்படுத்தும்?
(4) உன் விருப்பமான உணவு எது, பிடிக்காத உணவு எது?
(5) என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறாய்?
(6) எந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும்?
(7) சிறு வயதிலிருந்தே உனக்குப் பிடிக்கும் ஒரு விஷயம் எது?
(8) உன்னை எந்த விஷயம் சிரிக்க வைக்கும்... உன் நண்பர்களில் யாரெல்லாம் உன்னைச் சிரிக்கவைப்பார்கள்?
(9) உன்னை எது கோபப்படுத்தும்?
(10) உன்னை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்று உனக்குத் தெரியுமா?
இவற்றுக்கான பதில்களிலிருந்தே நீங்கள் காட்டுவது அன்பா, கண்டிப்பா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
• பதின்பருவ ஆண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர் அவர்களிடம் இந்த 10 கேள்விகளை முன்வைக்க வேண்டும்.
(1) உன் வாழ்க்கையில் சிறந்த நாள் எது... ஏன்?
(2) உன் வாழ்க்கையில் மோசமான நாள் எது?
(3) எங்கள் இருவரிடமும் (அப்பா, அம்மா) உனக்குப் பிடித்த விஷயம் எது?
(4) உன் சகோதரி, சகோதரனிடம் உனக்குப் பிடித்த, பிடிக்காத விஷயம் எது?
(5) நம் குடும்பத்தில் எது உனக்கு மிகவும் பிடிக்கும்?
(6) நம் வீட்டில் உனக்குப் பிடிக்காத விஷயம் எது?
(7) உன்னை எந்த விஷயம் கோபமடையச் செய்யும்?
(8) உனக்கு எந்தப் படம் பிடிக்கும்... ஏன்?
(9) உன்னை அழவைப்பது எது?
(10) உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்று உனக்குத் தெரியுமா?
இந்தக் கேள்விகளுக்கு அவர்கள் தரும் பதில்களிலிருந்தே நீங்கள் எந்தளவுக்கு அவர்களுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளலாம்.
• பெற்றோர்-பதின்பருவக் குழந்தைகள் இடையே உறவு பலப்பட 10 பழக்கங்கள்:
(1) காலையில் யோகா உள்ளிட்ட ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை இருவருமே சேர்ந்து செய்யுங்கள்.
(2) தன் படுக்கை விரிப்பு, போர்வையை மடித்துவைக்கப் பழக்குங்கள். இது சுய ஒழுக்கத்தை கற்றுத்தரும்.
(3) உரிய நேரத்தில் உறங்கச் சொல்லுங்கள்.
(4) அன்றைய தினம் என்ன சமைக்கலாம்... அதற்காக என்னென்ன காய்கறிகளை வாங்கலாம் என்று குழந்தைகளுடன் சேர்ந்து திட்டமிடுங்கள்.
(5) எதையாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.
(6) தியானம் செய்யச் சொல்லுங்கள்.
(7) மனதிலுள்ளதை ஒரு பேப்பரில் எழுதச் சொல்லுங்கள். இதன் மூலம் அவர்கள் மனதிலிருக்கும் பாரம் குறைந்துவிடும்.
(8) எதையும் ‘நாளைக்குப் பார்க்கலாம்’ என்று தள்ளிப்போடுவதைத் தவிர்த்துவிட்டு, ‘அன்றே செய்ய வேண்டும்’ என்பதை வலியுறுத்துங்கள்.
(9) பெற்றோரும் குழந்தைகளும் வேலைகளுக்கு இடையே சற்று ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டும்.
(10) தினசரி ஒரு பேப்பரில் அன்று நடந்த நல்ல விஷயங்கள் இரண்டை எழுதச் சொல்லுங்கள். இவற்றைக் கடைப்பிடித்தால் உங்கள் உறவு பலப்படும்.
• வீட்டில் எல்லோரின் பார்வையும் படும்படியான இடத்தில் ஒரு ஜாடியை வையுங்கள். அதன்மீது ‘பாசிட்டிவ் பேரன்ட் டீன் ஜார்’ (Positive Parent Teen Jar) என்று எழுதி, ஒட்டுங்கள். அதனருகே வண்ண பேப்பர்களையும் ஒரு பேனாவையும் வைத்துவிடுங்கள். ஒவ்வொரு நாளும் பதின்பருவப் பிள்ளைகள் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைக் கேள்விப்பட்டாலோ, படித்தாலோ, பார்த்தாலோ அல்லது அவர்களே நல்ல காரியம் ஒன்றைச் செய்திருந்தாலோ அதை எழுதி, அதில் போடச் சொல்லுங்கள். குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு பேப்பரிலாவது எழுதிப்போட வேண்டும் என்பதை வலியுறுத்துங்கள். தொடர்ந்து இதைச் செய்தால், எதிர்மறைச் சிந்தனைகள் அகன்று, நேர்மறைச் சிந்தனைகள் அதிகரிக்கும். பெற்றோருடனும் நெருக்கமான உறவு வளரும்.
• பெற்றோரும் ஒரு ஜாடியைவைத்து அதில் அவர்களும் நல்ல விஷயங்களை எழுதிப்போட வேண்டும். பெற்றோரின் ஜாடியிலுள்ள பேப்பர்கள் ஒரு நிறத்திலும், பதின்பருவ மகன் அல்லது மகளின் ஜாடியிலுள்ள பேப்பர்கள் இன்னொரு நிறத்திலும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். தொடர்ச்சியாக இருவரும் பேப்பரை ஜாடியில் நிரப்பிக்கொண்டு வரும்போது இருவருக்குமான நேர்மறைச் சிந்தனைகள் அதிகரிப்பதோடு, குடும்பத்திலும் சந்தோஷம் நீடித்து நிற்கும்.
• பதின்பருவத்தினர் தற்கொலை விதிகம் அதிகரித்து வருகிறது. மன அழுத்தம், பதற்றம், குடும்பத்தில் யாரேனும் தற்கொலை செய்திருத்தல், போதைப் பழக்கம், பாலியல் வன்முறைக்கு ஆளாதல், சமூகத்தில் நிராகரிக்கப்படுதல், நெருங்கிய உறவினர் உயிரிழத்தல், பெற்றோர் விவகாரத்து, தனிமையுணர்வு போன்றவை பதின்பருவத் தற்கொலைகளுக்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன.
• சமூக வலைதளங்களில் இறப்பு குறித்து அடிக்கடி பேசிக்கொண்டே இருத்தல், உடல் எடை, தூக்கம், தோற்றம் ஆகியவற்றில் மிகப்பெரிய வித்தியாசம் காணப்படுவது, நம்பிக்கையிழந்து பேசுதல், தனியாக இருப்பது, இணையதளத்தில் தற்கொலைத் தகவல்களைத் தேடுதல், படிப்பில் சரிவு, `தலைவலி’ என்று அடிக்கடி சொல்லுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், பெற்றோர் உடனே விழித்துக்கொள்ள வேண்டும்.
• அது போன்ற நேரங்களில் குழந்தைகளைத் தனியாகவிடக் கூடாது. மருந்து, மாத்திரைகள், கத்தி போன்ற கூர்மையான கருவிகள் போன்றவை அவர்கள் அருகில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கண்டிப்பாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும். போதைப் பழக்கம் இருந்தால், அதைக் கைவிடுவதற்கான சிகிச்சை எடுக்க வேண்டும். இது போன்ற சமயங்களில் பெற்றோரின் ஆதரவு மட்டுமே பிள்ளைகளை மீட்டெடுக்கும்.
விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1