by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
தமிழக செய்திகள்
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் 82 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்படுள்ளது.
கடந்த வியாக்கிழமை கொச்சியில் இருந்து தமிழகம் வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னையில் 8 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ரூ.82 லட்சம் பணம், ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கம், 1000 சிங்கப்பூர் டாலர் மற்றும் 10 கிலோ கஞ்சா பரிமுதல் செய்யப்பட்டது. 6 என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை பர்மா பசாரில் கடை வைத்துள்ள மொஹமத் இலியாஸ் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இவரை கொச்சிக்கு அழைத்து சென்று விசாரணை செய்ய உள்ளனர். சென்னை காவல்துறையின் ஆயுதப் படையில் உள்ள 50 காவலர்கள் இந்த சோதனையில் என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் இருந்தனர். காலையில் தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணி வரை நீண்டது.
டிசம்பர் 2022ம் ஆண்டு, திருச்சியில் உள்ள இலங்கை நிவாரண முகாமை சேர்ந்த 9 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். பாகிஸ்தானை சேர்ந்த ஹஜ் சலீம் என்ற போதை பொருள் விற்பனை செய்பவருக்கும் இவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு கொண்டவரக்ள் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
துபாய் தீ விபத்து" ; முதல்வர் முக.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
துபாயில் ஏற்பட்ட விபத்து முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
ஐக்கிய அமீரகம் நாட்டில் துபாயில் பழமையான பகுதி பிரிஜ்முரார். இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 4வது தளத்தில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில், இந்தியவர்கள் உள்பட 16 பேர் பலியாகினர். அவர்களின் 2 பேர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள ராமராஜ புரத்தைச் சேர்ந்த குடு சாலிய கூண்டு(49), இமாம் காசில் அப்துல் காதர்.
இந்த நிலலையில், துபாயில் ஏற்பட்ட விபத்து முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் முக, ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘’துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு.இமாம் காசீம், த/பெ.அப்துல் காதர் (வயது 43) மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த திரு.குடு (எ) முகமது ரபிக், த/பெ.சலியாகுண்டு (வயது 49) ஆகிய இருவரும் 15.4.2023 அன்று அவர்கள்தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
விரைவில் தமிழ்நாட்டிற்கு உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டுவருவதற்கு இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்களை இப்பணியில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாகத்’’ தெரிவித்துள்ளார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும்
இன்றைய சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சமூக நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் திமுகவைச் சேர்ந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "பெரம்பலூர் நகர், வி.களத்தூர், அகரம் சீகூரில் தனிக் காவல் நிலையம் அமைத்து தர வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்திற்கு இரண்டு தனி கோட்டாட்சியர்களை நியமிக்க வேண்டும்", என கோரிக்கை வைத்து பேசினார்.
தொடர்ந்து, கடந்த ஆண்டு மே (5.5.2022) மாதம் நடைபெற்ற பேரவையில் எனது கன்னி பேச்சில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிக்கு "காலம் கனிந்து விட்டது அதற்கு நமது முதலமைச்சர் மனம் கனிய வேண்டும்" என பேசியதை நினைவு கூர்ந்தார்.
மேலும், “இன்று பலரும் வாழ்த்தும் வண்ணமாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி பதவி ஏற்று பலரும் பாராட்டத்தக்க வகையில் செயலாற்றி வருகிறார். இன்னும் சொல்லப்போனால் அவர் பாணியில் நின்று விளையாடி ஃபோர் (4), சிக்ஸர் (6) என கலக்குகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உன்னதமான உழைப்பு, பொதுமக்களிடம் அவரது கனிவான அணுகுமுறை, செயலாற்றும் பாங்கு ஓரிரு துறைகளோடு நின்று விடக்கூடாது.
அதையும் தாண்டி நமது நம்பர் 1 முதலமைச்சரின் தலைமையின் கீழ் அனைத்து துறைகளிலும் அவரது உழைப்பு, சீரிய சிந்தனை, மகளிர் உயர்வு குறித்த தொலைநோக்கு திட்டம் ஆகியவை குறித்த பணிகளை முதலமைச்சரின் துணை நின்று மேற்கொள்ள வேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்”, என பேசினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்ற பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரனின் மறைமுகமான இந்த பேச்சு திமுக எம்.எல்.ஏக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் ஸ்டாலின் கைதாகும் வாய்ப்பு இருப்பதால், அடுத்த முதல்வரை இப்பொழுதே தயார்படுத்திவிட்டனர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
'தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது' - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக’அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். |
சென்னை, பெரம்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’’அ.தி.மு.க. நிர்வாகி இளங்கோவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. கஞ்சா விற்பனை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த அ.தி.மு.க நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தரவேண்டும். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தமிழகத்தில் போதை பொருள் விற்பனையைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் உறுதியாக மெகா கூட்டணி அமையும். 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும்’' என அவர் குற்றம் சாட்டினார்.
கடந்த சில வாரங்களுக்கு அ.தி.மு.க, பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளர், இளங்கோவன் சமுக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
இதற்கு இரங்கல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, ’’அ.தி.மு.க. பெரம்பூர் தெற்கு பகுதி கழக செயலாளர், இளங்கோ, சமுக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். பிரதான எதிர்கட்சியில் முக்கிய பங்காற்ற கூடிய நிர்வாகிக்கே பாதுகாப்பில்லாத சூழ்நிலை நம் மாநிலத்தில் நிலவவுது பெரும் கண்டனத்துக்குரியது.
நகராட்சி தினசரி சந்தையில் பழைய கடைகள் அகற்றம் சட்டம் ஒழுங்கு அறவே இல்லாத நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டு இருப்பது வெட்ககேடு. இளங்கோவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த நாசகார செயலை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்து உள்ளார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
சித்த மருத்துவமனை மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர் ரவி
சென்னை: சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. மசோதா தொடர்பாக கவர்னர், இரண்டு முறை விளக்கம் கேட்டார்.
இரண்டாவது முறையாக அளிக்கப்பட்ட விளக்கத்தையும் ஏற்காமல், மீண்டும் விளக்கம் கேட்டு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பிவிட்டதாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டசபையில் கூறியுள்ளார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி-கிலோ ரூ.4 என விற்பனை
அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ ரூ.4க்கு விற்பனையாகிறது. முருங்கை பயிரிட்டுள்ள விவசாயிகள் கடும் விரக்தியில் உள்ளனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் ஈசநத்தம், ஆலமரத்துப்பட்டி, சாந்தப்பாடி, கோயிலூர், நாகம் பள்ளி, வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிடப்படுகிறது. இப்பகுதி முருங்கை காய் திரட்சியாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதால் தமிழகத்து மாவட்டத்தில் மட்டுமல்லாமல், கேரளா மற்றும் பெங்களூரு, பூனே, மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களிலும் அரவக்குறிச்சி பகுதி முருங்கை காயிக்கு தனி மெளசு உள்ளது.ஆகையால் அரவக்குறிச்சி, மலைக்கோயிலூர், ஈசாத்தம், இந்திரா நகர், பள்ளபட்டி பழனி சாலை உள்ளிட்ட மொத்த கொள்முதல் மையங்களிலிருந்து, முருங்கை மொத்த வியாபாரிகள் வாங்கி மற்ற இடங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.
இந்நிலையில் கடந்த மாதங்களில் முருங்கை மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கியது. தற்போது இம்மாதம் இறுதியில் சீசனுக்காக அறுவடை செய்ய அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை தோட்டங்களில் அதிக அளவில் முருங்கைகாய் காய்த்து தொங்குகிறது.தற்போது விவசாயிகள் முருங்காய் அறுவடை செய்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்ய கொண்டு வருகின்றனர். ஆனால் நேற்று ஈசநத்தம் முருங்கை சந்தையில் கிலோ ரூ 4க்கு விற்பனையாகிறது.
சென்ற மாதங்களில் முருங்கை கிலோ ரூ 80 வரை இருந்தது. தற்போது நேற்று கிலோ ரூ.4 க்கு மேல் விற்பனையாகவில்லை. இதனால் அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ ரூ.4க்கு விற்பனையாகிறது. முருங்கை பயிரிட்டுள்ள விவசாயிகள் கடும் விரக்தியில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெற வேண்டும்
காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பனையபுரத்தில் காலிமதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் போன்றவை கண்மாய், விவசாய நிலங்களில் வீசப்படுவதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பனையபுரத்தில் 2 மதுக்கடைகளை அகற்றக் கோரியும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உயநீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் தொடங்கி 6 மாதம் ஆகியும் சோதனை முறை எனக் கூறுவது ஏன் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை மலைப்பகுதிகளில் மட்டுமே அமல்படுத்தினால் போதுமா? என்று வினவிய நீதிமன்றம், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டங்களை தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியது.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது. மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் பனையபுரத்தில் 2 மதுக்கடைகளை அகற்றக் கோரிய வழக்கை ஜூன் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 1 மாணவி பாலியல் வன்கொடுமை: மதபோதகர் மற்றும் உறவினர் கைது
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக போதகர் மற்றும் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவருக்கு 31 வயதுடைய அவரது மாமன் மகனுடன் திருமணம் செய்துவைக்க திட்டமிட்டுள்ளதாக குழந்தை உதவி மையத்திற்குக் கடந்த 12 ஆம் தேதி தகவல் வந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்ரு மாணவியை மீட்டு அறக்கட்டளையில் தங்கவைத்தனர். மாணவியிடம் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரித்ததில், ‘’மாணவியின் பெற்றோர் கோனேரியாளையம் பெந்தோகோஸ்தே சபை மதபோதகர் வேலாயுதம் ஸ்டீபன்(35) என்பவரின் வீட்டில் தங்கியிருந்தபோது, மதபோதகர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், இதை அப்பாவிடம் கூறியதற்கு யாரிடம் கூறவேண்டாம் என்று கூறியதாகவும், அதன்பின்னர், கடந்த 8 ஆம் தேதி மாமா மகன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், இதையடுத்து, அவருக்கு திருமணம் செய்துவைக்க வீட்டில் முடிவெடுத்துள்ளதாக’’ தெரியவந்தது.
தற்போது. போக்சோ சட்டத்தின் கீழ் வேலாயுதம் ஸ்டீபன் , மாணவியின் தந்தை மாமா மகன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி: அலுவலகத்தில் புகுந்து வி.ஏ.ஓ கொலை; மணல் கொள்ளையர்கள் கொடூரம்
தூத்துக்குடியில் அரசு அலுவலகத்திற்குள் புகுந்து வி.ஏ.ஓ வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் 55 வயதான லூர்துபிரான்சிஸ். இவரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து வெட்டியுள்ளனர். படுகாயமுற்ற லூர்து பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வெட்டிக்கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல் கடத்தல் பற்றி காவல்துறையினரிடம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. அந்த மணல் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொருவரை தேடி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி சார்ந்த படிப்புகள்; தமிழக பொறியியல் கல்லூரிகளில் விரைவில் அறிமுகம்
முதன்முறையாக தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் முழு அளவிலான 5ஜி தொழில்நுட்பப் படிப்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
5G சேவை இந்தியாவில் அக்டோபர் 2022 இல் தொடங்கப்பட்டது. மேலும் சில நிறுவனங்கள், கிடைக்கக்கூடிய ஆதாரங்களுடன் இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் சேவைகளை வழங்கி வருகின்றன. விரிவான 5G சேவை வழங்குவதற்கு, கைபேசி உற்பத்தியாளர்கள் மென்பொருளை மேம்படுத்த வேண்டும். இந்த சூழலில், தொழில்நுட்பத்தை உருவாக்க ஆயிரக்கணக்கான மென்பொருள் வல்லுனர்கள் தேவைப்படும்.
இந்தநிலையில், முதன்முறையாக தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் முழு அளவிலான 5ஜி தொழில்நுட்பப் படிப்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
ரேடியோ நெட்வொர்க்குகள், கிளவுட் தொழில்நுட்பம் மற்றும் நெறிமுறை மேம்பாடு மற்றும் சோதனை உள்ளிட்ட 5G நெட்வொர்க் தொழில்நுட்பத்தின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டைப் புரிந்துகொள்வதற்கான நடைமுறை அணுகுமுறைக்காக இந்தப் படிப்புகள் வடிவமைக்கப்படும்.
தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் (DOTE) மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “5G என்பது ஒரு தனித் தொழில்நுட்பம், பாடத் திட்டத்தை விரைவாக தயாரித்து வரும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) விரைவில் 5G தொழில்நுட்பத்தில் பல்வேறு முழு நேரப் படிப்பை அறிமுகப்படுத்தவுள்ளது, இதன்மூலம் தொழில்துறையின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். முதற்கட்டமாக, கல்லூரிகளில் 5ஜி மொபைல் ஆப்களை உருவாக்கப் பயன்படும் பயன்பாட்டு ஆய்வகங்களை அமைத்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்,” என்று கூறினார்.
மேலும், தற்போது, சில தனியார் நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சார்ந்த பகுதி நேர படிப்புகளை வழங்குகின்றன. முழு நேர படிப்புகளை அறிமுகப்படுத்தினால், பொறியியல் மாணவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும். சமீபத்தில், திறன் மேம்பாட்டுப் பிரிவு, தொலைத்தொடர்புத் துறை (DoT) மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயன்பாட்டு ஆய்வகங்களை நிறுவுதல் ஆகியவற்றுடன் இணைந்து ஆசிரியர்களுக்கான ஆன்லைன் அமர்வையும் AICTE ஏற்பாடு செய்தது. கொள்கை ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் பயிற்சிக்கான தேசிய தொலைத்தொடர்பு நிறுவனம் (NTIPRIT), DoT இன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு பிரிவு வல்லுநர்கள் நாட்டில் 5G தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் குறித்த தங்கள் அனுபவங்களையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொண்டனர்,” என்றும் அவர் கூறினார்.
”5ஜி பாடநெறி மற்றும் பயன்பாட்டு ஆய்வகங்களை நிறுவுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இதேபோன்ற வெபினார் ஏற்பாடு செய்யப்படும். சில நகரங்களில் 5G நெட்வொர்க்குகள் வணிக ரீதியாகக் கிடைப்பதால், புதிய பாடப்பிரிவுகளின் அறிமுகம் மாணவர்கள் அதில் பயிற்சி பெறுவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை கிடைக்கச் செய்யும். 5G தொழில்நுட்பத்தில் இளங்கலை படிப்புகள் தொழில்துறை தேவைகள் தொடர்பான பாடத் திட்டங்களைக் கொண்டிருக்கும். அதேநேரம் முதுநிலை படிப்புகள் சந்தையில் கிடைக்கும் ஓப்பன் சோர்ஸ் கருவிகளைப் பயன்படுத்தி 5G நெட்வொர்க்குகளை மாணவர்கள் நிறுவக்கூடிய வகையில் மேம்பட்டதாக இருக்கும்,” என்றும் அந்த அதிகாரி கூறினார்.
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்